சர்வதேச கப்பல்களுக்கு கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பை வழங்குவதற்கு இலங்கையை பயன்படுத்திக் கொள்ளப் போவதாக நெதர்லாந்து கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
கடற் கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
கப்பல் ஒன்றின் மூலம் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரேபிய கடற்பரப்பிலேயே அதிகளவு கடற்கொள்ளையர்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் ஒத்துழைப்புடன் கடற் கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை காத்திரமான முறையில் மேற்கொள்ள முடியும் என நெதர்லாந்து கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏகாதிபத்தியங்கள் இந்திய அரசின் துணையோடு நடத்திய மனிதப்படுகொலைகளின் பரிசோதனை வெற்றிபெற்று நான்கு ஆண்டுகளை அண்மிக்கும் நிலையில் இலங்கையின் இனப்படுகொலை இராணுவத்தை பயன்படுத்திக்கொள்வது குறித்து ஏகபோகங்கள் ஆலோசித்து வருகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைர்ப்பிலிருந்து புலம் பெயர் புலிசார் அமைப்புக்கள் வரை இந்த அரசுகள் ராஜபக்சவை தூக்கில் போட்டுவிடும் என மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
This is some bizzare news. Netherlands is developed European country with a free press.