கொழும்பில் உள்ள ஐநா கிளை அலுவலகத்துக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இத்தகவலை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக ஐநா வெளியிட்ட அறிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்துமாறு அதிபர் ராஜபட்ச கூறியிருந்த நிலையில், தங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறு ஐநா சபை நேற்று கூறியிருந்தது.
இந்நிலையில், ஐநா அலுவலகத்துக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், கண்காணிப்பு பணியில் கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.








அது தான் ஆலோசனை வழங்க குழு அமைக்கப்பட்ட போதே பார்த்தோமே?(லெமன் பப் பிஸ்கட் பக்கட்டுடன்)உண்ணா?!விரதம் இருந்து “சாதித்தார்களே???????????????