Tuesday, April 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

“எழுதினேன், எழுதுகிறேன், எழுதிக் கொண்டேயிருப்பேன்”.-கருணாநிதி.

இனியொரு... by இனியொரு...
07/23/2010
in இன்றைய செய்திகள்
0 0
10
Home இன்றைய செய்திகள்

தனது கட்சி விருதை எடுத்து தானே கொடுத்து தானே பெற்றுக் கொள்வதும், தன்னைப் புகழ்ந்து தானே பேசிக் கொள்வதோடு அல்லக்கைகளை காடு கொடுத்து கூவச் சொல்வதும் கருணாநிக்கு கைவந்த கலை. நேற்று தன் பெயரால் அமைந்த கலைஞர் கட்டிடத்தை தானே திறந்து வைத்து தான் எவ்வளவு சிறப்பானவன் என்று ஒரு மணி நேரம் பேசிய கருணாநிதி அன்று மாலையே தன் மகள் கனிமொழி பெயரால் உருவான திரைப்பட பாடல் சிடியை வெளியிட்டு உதிர்த்த முத்துக்கள் இவை,

“இந்த “கனிமொழி” என்கின்ற பெயரில் எனக்கு எப்போதுமே பற்று, பாசம் உண்டு. நான் எழுதியுள்ள சிறுகதையானாலும், பெருங்கதையானாலும், அவற்றில் கதாநாயகியினுடைய பெயரோ அல்லது முக்கியமான ஒரு பெண் பாத்திரத்தினுடைய பெயரோ, “கனிமொழி” என்று இருக்கும். இப்படி பல பெண் பாத்திரங்களுக்கு “கனிமொழி” என்று பெயர் வைத்து, அதன்மூலமாக மகிழ்ந்த நான், உள்ளபடியே ஒரு “கனிமொழி” பிறந்திருக்கிறது என்ற செய்தி வந்தவுடன், நான் மருத்துவமனையிலே இருந்தவர்களுக்கு, என் மனைவிக்கு நான் சொல்லியனுப்பியது இப்போது அண்ணா சாலை; அதற்கு முன்பு “மவுண்ட் ரோடு” அங்கிருந்து பேசுகிறேன். “குழந்தைக்கு நான் ஏற்கெனவே சொன்னபடி, “கனிமொழி என்றுதான் பெயர்” என்று குறிப்பிட்டேன்.ஒருவேளை உலகத் தமிழ் மாநாட்டையொட்டி பிறந்த பெண் குழந்தை என்ற காரணத்தினாலோ, என்னவோ, அந்த “கனிமொழி” இன்றைக்கு உலகப் புகழ் பெறுகின்றவர்களிலே ஒருவராக விளங்கி வருகின்றார். பெற்றவர்களுக்கு அதனால் ஏற்பட்டிருக்கின்ற மகிழ்ச்சி கொஞ்ச நஞ்சமல்ல; உங்களுக்குத் தெரியும்.
கனிமொழி இன்றைக்கு இந்த விழாவிற்கு வந்திருக்க வேண்டும், வரவில்லை. அது, கனிமொழி பின்பற்றுகின்ற ஒரு இலக்கணம். தன்னைப் பாராட்டுகின்றவர்கள், தன்னைப் புகழ்கின்றவர்கள் அல்லது தன்னைப் பாராட்டுவதற்காக நடைபெறுகின்ற விழாக்கள் இவைகளில் கலந்து கொள்ளாமல் சமாளிப்பது, அவர்களுக்குப் போக்கு காட்டி வேறு இடத்திற்குச் சென்று விடுவது கனிமொழியினுடைய வாடிக்கை.
ஆனால், எனக்குள்ள சங்கடம் என்னை உட்கார வைத்துக்கொண்டே, நம்முடைய கலையுலக நண்பர்கள் பாராட்டுவதும், புகழ்வதும், போற்றுவதும் கூடுமானால் என்னைப்பற்றிய வாழ்த்துக்களை அச்சடித்துக் கொண்டே வந்து பாடுவதும் என்ற அளவிற்கு நிலைமை வளர்ந்திருக்கிறது. இதை நான் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிற அதே நேரத்தில், இந்தப் புகழையும், பெருமையும், பாராட்டுக்களையும் தாங்கிக் கொள்ள முடியாமல், தங்களுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பல பேர் தினம் தினம் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் உங்களுக்குத் தெரியும்.
நான் அவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. காரணம், அந்த ஏச்சுக்கும், பேச்சுக்கும் எனக்குக் கிடைக்கின்ற ஆறுதலான இடமாக, இப்போது கலையுலகம் இருக்கின்ற காரணத்தால் என்னுடைய கவலையை கலையுலகத்திலே இருக்கின்ற தம்பிமார்களையும், நண்பர்களையும், சகோதர சகோதரிகளைக் கண்டு நான் போக்கிக் கொள்கின்றேன்.1938 ம் ஆண்டு வாக்கில் நான் எழுத ஆரம்பித்தேன். இதுவரையிலே எழுதிக் கொண்டிருக்கின்றேன். இன்னும் என்னுடைய பேனாவிற்கு ஓய்வில்லை. எழுதிக் கொண்டேயிருக்கின்றேன். “எழுதினேன், எழுதுகிறேன், எழுதிக் கொண்டேயிருப்பேன்”.இந்த கலையுலகத்திற்கு என்னால் இயன்ற உதவிகளை, துணையை ஆற்றியிருக்கிறேன் என்பதை முன்னால் பேசியவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள். அதிலும் சிறப்பாக கலையுலகத்திலே எந்த நடிகரை இன்றைக்கு உருவாக்கியிருக்கிறோமோ, எந்த நடிகர்களையெல்லாம் இன்றைக்கு வாழ வைத்திருக்கிறோமோ, அதை விடப் பெரிய காரியமாக திரைப்படத் துறையிலே ஈடுபட்டிருக்கின்ற தொழிலாளர்களுக்கு ஏறத்தாழ நூறு ஏக்கர் நிலம் வழங்க வேண்டுமென்று வைத்த கோரிக்கையையேற்று, அந்தக் கோரிக்கையின்படி, அந்த நிலத்தை அவர்களுக்கு வழங்கி அங்கே அவர்கள் வீடு கட்ட அஸ்திவாரம் போடுகின்ற விழா வெகு விரைவிலே நடைபெறவிருக்கின்றது. அந்த விழாவிலே நான் கலந்து கொள்வதுதான் இந்த விழாவை விட எனக்குச் சிறப்பான விழா என்பதைத் தொழிலாளத் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.தம்பி நடிகர் விஜய் பேசும்போது குறிப்பிட்டார். நான் ஒரு குடும்பத் தலைவனாக இருந்து அகில இந்திய அளவில் பண்டித நேரு அவர்களின் குடும்பத்தைப் போல தமிழகத்தில் என்னுடைய குடும்பமும், நானும் அரசியலில், நாட்டு மக்களுக்கான தொண்டிலே ஈடுபட்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார். குடும்பமாக இருப்பது தான் தொல்லை.பல பேர் அந்த வாய்ப்பு இல்லாத காரணத்தால் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளாத காரணத்தால் எதற்கெடுத்தாலும், என்னைப் பற்றிப் பேச வேண்டுமென்றால் என்னைப் பற்றிச் சாட்டுகின்ற பெரிய குற்றச்சாட்டே, நான் ஒரு குடும்பஸ்தன் என்பது தான்.அவர்களுக்கு அது வாய்க்கவில்லை என்பது என்னுடைய தவறல்ல. ஆனால், இந்த நல்ல நேரத்தில் அதையெல்லாம் நினைவுபடுத்த வேண்டுமா என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரியாமல் இல்லை, புரிகிறது. ஆகவே அதை நிறுத்திக் கொண்டு வாழ்க “கனிமொழி” “வெற்றி பெறுக கனிமொழி” என்று குறிப்பிட்டு இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், இயக்குநர், கதாசிரியர் அத்தனை பேரும் இந்த வெற்றியிலே பங்கு பெற்று வாழ்வார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சீமான் பேசியதில் தவறில்லை அவரை விடுதலை செய்ய வேண்டும்- வைகோ.

Comments 10

  1. naan says:
    16 years ago

    எப்பிடித்தான் இவனுக்கு மட்டும் இப்படி முடிகிறது ,, தயவுசெய்து எவராவது யாராவது உடனடியாக ஜெர்மனிக்கு சென்று ‘ஒப கவுசன் ‘ என்ற இடத்திலிருக்கும் ‘ஓட்டோபஸிடம் ‘ எப்ப சாவான் கரிவாயன் கறுமாநிதி என்பதை கேட்டு அறியத்தாருங்கள்,

  2. pala.manickam says:
    16 years ago

    உனக்கு வெக்கம் இல்லயா ? உன் குடும்பம் அழியும் வரை தமிழனுக்கு உரிமை இல்லை.இயற்கையே இவனை தண்டியும்.

    • THAMILMARAN says:
      16 years ago

      நல்லதை நினைத்தால் நல்லது நிகழ்கிறது .திட்டுவதை விட வாழ்த்துவதில்தான் வாழ்க்கை வளம் பெறூகிறது.முத்தையா முரளீதரன் நினைத்ததச் சாதித்தது அவரது வெற்றீயை நோக்கிய எண்ணமே.கலைஜரிடம் தவறூகள் இருக்கலாம் இத்தனை தூரம் அவர் வளர்ந்தது அவரது அறீவின் மேன்மையே இத்தனை வயதிலும் சுறூசுறூப்பாக இருப்பதும்,உழைப்பதும் எளீதன்றூ நினைக்கிறீர்களா?கலைஜர் எம்மைக் கட்டிப் போடும் தமிழ் நதி அது வற்றாது ஓடட்டும்.

  3. chittoor.S.Murugeshan says:
    16 years ago

    “எழுதினேன், எழுதுகிறேன், எழுதிக் கொண்டேயிருப்பேன்”.-கருணாநிதி
    எதுவரை இலங்கைல கடைசி தமிழன் சாகிறவரையா? தமிழகத்து கடைசி மீனவன் சாகிறவரையா?

  4. kmar says:
    16 years ago

    “எழுதினேன், எழுதுகிறேன், எழுதிக் கொண்டேயிருப்பேன்”.-கருணாநிதி தமிழ்நாட்டை பிள்ளைகளுக்கு, அதிகாரங்களை குடும்பத்துக்கு, கட்சியை தனது சொந்தப்பேருக்கு, கட்சியின் வருமானம் முழுவதும் மனைவிமார் பெயர்களுக்கு, ஆனால் தமிழருக்கு அவரது எழுத்துமட்டுமாம்,ஓ கே வா

  5. பு.மணி says:
    16 years ago

    கருணாநிதியின் சட்டவிரோத தயாரிப்பு கனிமொழி. கருணாநிதி உளறுவதுபோல கனிமொழி புகழ்ச்சியை விரும்பாத பண்பானவர் என்றால் கட்சியில் அடிபட்டு மிதிபட்டு சிறைபட்டவன் சித்திரவதை அனிபவித்தவன் பலர் பரிதாபமாய் இருக்க ராஜ்யசபா பதவியை விரும்பிக் கேட்டது ஏன்.கட்சியே தந்தாலும் ‘ம்ம குடும்பமே இப்படி கட்சியை ஆக்கிரமித்தால் எப்படி’ என்று பண்போடு மறுத்திருக்க வேண்டாமா?
    ராஜாவுக்கு பதவி கேட்டு போராடியபோது ‘தலைவர்கள் பேசுவது ஒன்று செய்வது ஒன்று இதேல்லாம் சகஜம் தானே’என்று கேடுகட்ட தனமாய் பேசியபோது இந்த பண்பு எங்கே போனது. மாபாய் பாண்டிய ராஜன்,அவரது மனைவி லாதா பாண்டிய ராஜன்.ஜெகத்கஸ்பர் இவர்களுடன் அம்மையாருக்கு என்ன தொடர்பு,சஸ்பெண்ட் செய்யப்பட்ட பூங்கோதையை மீண்டும் தமிழக அரசின் தொழில் நுட்ப அமைச்சராக்கியதன் மூலம் இவர்கள் அடைந்துவரும் ஆதாயமென்ன.கருணாநிதி இசைவேளாளர்களுக்காக வாழ்கிறாரென்றால் இந்த நாடார் கூட்டணி யாருக்கு என்ன செய்கிறது.கன்னியாகுமரி முதல் மகாபலிபுரம் சாலைவரை வளைத்துப் போட்டுருக்கும் நிலங்கள் எவ்வளவு. அரவிந்தன், மூலமும் பாண்டியராஜன்,லதா பண்டியராஜன் ,ஜெகத் ஆகியோர் மூலம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணம் ஏது?அது கதை எழுதி கோடீஸ்வரரான கருணாநிதி போல அம்மணி கவிதை எழுதி சம்பாதித் த்தா?
    ஜெகத்தின் திட்டப்படி கனிமொழியால் வழிமொழியப்பட்டுசிவகாசியில் வைகோவை தோற்கடிக்கும் நோக்கில் தேமுதிக வில் பாண்டிய ராஜனை சேர்த்து.சிவகாசியில் களமிறக்கி நூறு கோடிகள் செலவு செய்து நாடார் வாக்குகளை பிரித்து, வைகோவை தோற்கடித்த சாதனைக்காகத்தானே ஜெகத் மேல் பலரும் புகார் சொல்லியும் அவரை இன்னும் உறவாட விட்டுருக்கிறார் கருணாநிதி.நல்ல குடும்பம் நாளும் வாழ்க.பேச்சுதிறமையோ நிர்வாக திறமையோ தன்னம்பிக்கையோ சற்றும் இல்லாத கனிமொழி கருணாநிதிக்கு மகளாக பிறக்காமல் ஒரு ஏழை வீட்டில் பிறந்திருந்தால் அவர் என்னவாகியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கிறேன்.கண்டிப்பாக நெளிந்து வளையும் சுயபுத்தியில்லாத இவரை சரவணாஸ்டோரில் சேல்ஸ் கேர்லாக கூடசேர்க்க மாட்டார்கள்.ராஜாத்தி அம்மையாருக்கு இருக்கும் செல்ப் கான்பிடன்ட் கூட இவரிடம் இல்லை.கருணாநிதி கனிமொழியை புகழ்வதைபார்த்தால் கண்டிப்பாக கனிமொழியை மத்திய மந்திரியாக்க மாட்டார் போலத்தான் தெரிகிறது

  6. ragan says:
    16 years ago

    அயர்லாந்து நாட்டு உயிரியல் பூங்காவிலுள்ள ஒரு ஓட்டொபஸ், தமிழ் நாடு தேர்தல் பற்றிய கணிப்பீட்டில், தி.மு.க.தோல்வியை தழுவி அ தி மு க வெற்றிபெறும் எனக்கூறியிருக்கிறதாம், ஆனால் விசாரித்த வரையில் வேறு ஒரு ஐரோப்பிய நாட்டிலும், ஒரு ஓட்டோபஸ் அதேதகவலை உறுதிப்படுத்தியிருப்பதாக சொல்லுகிறார்கள், என்ன கொடுமையென்றால் மஞ்சள்த்துண்டுபோய் பச்சைத்துண்டு ஐந்து வருடத்தை அலைக்கழிக்கப்போகிறது, அரசாங்கம் மாறப்போவது உறுதியானாலும் மக்களுக்கு ஏதாவது மாற்றம் நிகழுமா, விஜயகாந்த்தின் கட்சி வெல்லுமா என்ற ஆதங்கத்தில்த்தான் கணிப்பீடே நடந்ததாம் ஆட்டோபச்கள்
    அ தி மு க கொடிக்குள்ளே படுத்துவிட்டனவாம்,

    • thamilmaran says:
      16 years ago

      நெதர்லாண்டில் இருக்கும் ஆக்டோபஸ் கலைஜர் தான் அடுத்தும் முதலவ்ர் என் கிறதாம் கேள்விப்படேல்லேயோ.திமுக வண்டிக்குள் போன ஆக்டோபஸ் திரும்பவே இல்லையாம்.அங் கேயே படுத்துண்டதாம்.

    • xxx says:
      16 years ago

      தமிழ்மாறனும் அதே ஒக்டோபஸுடன் மஞ்சள் தூண்டுக்குள் போய் முடங்கிக் கிடக்கிறார் போல.

      • suntharam says:
        16 years ago

        நானும் ஓட்டோபஸ் கணித்த தமிழ்நாடுபற்றிய கணிப்புபற்றி இங்கு கேள்விப்பட்டதுண்டு (ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன)
        கருணாநிதி,/ஜெயலலிதா இரண்டும் ஒன்றுதான்.கொள்ளைக்கூட்டம்,ஆனால் இம்முறை ஜெயலலிதாவுக்கான நேரம்,

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...