22.12.2008.
உலகப்பொருளாதார நெருக் கடி ஏற்படுத்தியுள்ள அனுபவத்தின் வெளிச்சத்தில் நாடுகளும், சர்வ தேசப் பொருளாதார நிறுவனங் களும் தங்களின் கொள்கைகளை திருத்திக் கொள்ள முன்வரவேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற வரும் உலகமயமாக்கலை கடுமையாக விமர்சிப்பவருமான ஜோசப் ஸ்ட்டிக்லிட்ஸ் கூறினார்.
டில்லியில் இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயன்ஸ் சார்பில் நடை பெற்ற 10வது டி.டி.லக்-வாலா நினைவு நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றினார் ஸ்ட் டிக்லிட்ஸ்.
உலகமயமாக்கல் தோல்வியடையும் என்றும், சந்தையை ஆதாரமாகக் கொண்ட பொருளாதாரம் குறித்த வாதங்களைக் கைவிட அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். சந்தையாலோ அரசினாலோ தனித்து நின்று பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு விட முடியாது.
உலகமயமாக்கல் பல விஷயங் களிலும் எல்லையைத் தகர்த்துவிட்டது. கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்ற நாடுகளுக்கும் பரவுவது அதனால்தான்.
நெருக்கடி வரப்போகிறது என்று முன்கூட்டியே கணிக்கப்பட்டிருந்தது. அது பற்றி எச்சரிக்கை யும் செய்யப்பட்டிருந்தது. துர திருஷ்டவசமாக முக்கிய நாடுகளின் தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும், கொள்கை வடி வமைப்பவர்களும் அவற்றைப் புறக் கணித்துவிட்டனர். உலகமயமாக்கல் துவங்கியபின் ஏற்பட்ட முதலாவது பொருளாதாரத் தேக்கமாகும் இது.
இதற்குத் தீர்வுகாண உலகளாவிய முயற்சி தேவை. இந்தியாவும் சீனாவும் உலகமயப்பொருளா தாரக் கொள்கைகளுக்கு முற்றிலுமாக ஆட்படவில்லை என்பதால் தான் பொருளாதார நெருக்கடி இந்த நாடுகளில் நெருக்கடியை ஏற் படுத்தவில்லை. உலகப் பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றியமைக்க களத்தில் இறங்குவதில் இந்தியாவும்-சீனாவும் தயக்கம் காட்டக்கூடாது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க வேண்டும். அது கிடைத்தால் அனைத்து நாடுகளின் நலன்களுக்காக இந்தியாவும் சீனாவும் செயல்பட வேண்டும்.
தவறான பொருளாதாரக் கொள்கைகள், நிதி நிர்வாகம் ஆகியவற்றின் காரணமாகத்தான் அமெரிக்காவில் சீர்குலைவு ஏற்பட் டுள்ளது. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான பிரமை களை உருவாக்கியே அமெரிக்கப் பொருளாதாரம் தாக்குப்பிடித்து நிற்கிறது. இம்முறை வீடுகட்டுவது பற்றிய பிரமையாகும். அந்த பிரமை தகர்ந்துவிட்டது. பொருளாதார நெருக்கடியின் விளைவாக லட்சக் கணக்கான சாமானியர்கள் அமெரிக்காவில் வீடு இழப்பார் கள். அடுத்த ஆண்டு 10லட்சம் பேர் வீடு இழப்பார்கள் என்று கணக் கிடப்பட்டுள்ளது.
வங்கிகளும் நிதி நிறுவனங் களும் திவாலாவதால் பணி ஓய்வு காலச் சலுகைகளும் முதலீடு செய் யப்பட்ட பணமும் திரும்பக் கிடைக்குமா என்று லட்சக்கணக் கானோர் கலங்கிப் போய் உள்ளனர்.
இராக்கிற்கு எதிரான யுத்தத் திற்கு 70,000 கோடி டாலரை அமெரிக்கா செலவிட்டது. 50லட் சம் குழந்தைகளுக்கு உடல்நல இன்சூரன்சுக்கான திட்டத்தை புஷ் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி தோற் கடித்தார். அமெரிக்காவின் தேசியக்கடன் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 5.7டிரில்லியன் (ஒரு டிரில் லியன் 100 கோடி ஆகும்) டாலராக இருந்தது. இப்போது அது ஐந்து மடங்கு அதிகரித்துவிட்டது.
லாபத்தை தனியார்மயமாக்க வும், யுத்தத்தையும் பொருளாதார நெருக்கடிகளையும் தேசவுடமை யாக்கவும் செய்கிறார்கள். அமெரிக் காவில் அதிகமாக செலவிட வேண் டிய துறைகளுக்கு பணம் ஒதுக்கு வதில்லை. பணம் தேவையில்லா தவர்களுக்கு அதிகப்பணம் கிடைக்கிறது.
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண நிதிநிறுவனங்களுக்கு மட்டும் ரத்தம் செலுத்தப்படுகிறது. ஆனால், உண்மையில் நோயால் வாடுகின்றவன் ரத்தம் குன்றிச்சா கிறான். உலகளாவிய பொருளா தாரக் கட்டுப்பாடு, ஒருங்கிணைந்த பொருளாதார தலையீடு ஆகிய வற்றின் மூலமே இந்த நெருக்கடி யைச் சமாளிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
மக்களவை சபாநாயகர் சோம் நாத் சட்டர்ஜி முக்கிய விருந்தின ராகக் கலந்து கொண்டார்.
இந்தபொருளாதார நெருக்கடியால் யாருக்கு நன்மை ஏற்படும்?
நிச்சியம் பணம்படைத்தவர்களுக்கும் அவர் அதிகாரத்துக்கும்மல்ல.உலகமக்கள் இனியொரு
உலகயுத்தத்தை அனுமதிக்கப்போவதில்லை.ஏன்னெனில் மனிதகுலத்தையுமல்லாது ஒரு உயிர்இனத்தையும்
இந்த பூமியில் விட்டு வைக்கப்போவதில்லை. வறுமையும் பஞ்சமும் இவ்வளவுகாலமும் மூன்றாம்உலகநாடு
களுக்கே சொந்தமாக இருந்தது இப்பொழுது முதலாம்இரண்டாம் நாடுகளுக்கும் சொந்தமாகிவிட்டது.
இவர்கள் தமது சொந்த நாட்டுமுதலாளித்துவதிற்கு கணக்குதீர்காமல் இருக்கப்போவதில்லை.இனி ஆதாயத்திற்
கான உற்பத்தியைவிட்டு மனிதகுலத்திற்கு தேவையான உற்பத்தியே செய்ய நிர்ப்பந்திக்கும்.
ஆண்டாண்டகாலம் நிலத்துடன்கட்டிவைக்கப்பட்டிருந்த சாபக்கேடாய் இருக்கிற இந்தியாபோன்ற நாடுகளில்லிருக்கிய சாதிப்பிரச்சனை தீரும்.ஏன்னொனில் நிலத்தைசொந்தமாக்க உக்கிரமானபோராட்டத்தை
நடத்தி வெற்றியும்அடைவார்கள். முதலாளித்துவம் சவக்குளிக்கு அனுப்பிவைக்கப்படும்.
மனிதகுலம் புதியவீச்சுடன் புதியபுதியமாற்றத்தை நோக்கி நடைபயலும். இவையெல்லாம் தவிர்கமுடியாதவை.