ஈழப் போராட்டம் என்பது தமிழ் நாட்டின் சினிமா வியாபாரிகளின் மற்றொரு உணர்ச்சி மையமாகக் கருதப்படுகிறது. தமிழ் நாட்டின் ஆதிக்க சாதியினரின் ஒடுக்கு முறைக்கு ஜனநாயக முகத்தை வழங்குவதற்காக ஈழ மக்களின் அவலம் பயன்படுத்தப்படும் அதே வேளை தமிழக சினிமாவில் மக்களை உணர்ச்சியூட்டிக் கொள்ளையடிப்பதற்காகவும் பாசிச அரசினால் கொல்லப்படும் மக்களின் அவலம் பயன்படுத்தப்படுகின்றது.
பால் தக்கரே போன்ற இந்து அடிப்படைத மதவெறியார்களால் ஆட்கொள்ளப்பட்டதாக மும்பாயில் கூறிய ரஜனிகாந் இன் திரைப்படம் ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்படுவதன் சற்று முன்பாக மட்டும் அவருக்கு ஈழத் தமிழர்கள் மீது இரக்கம் பிறக்கும்.
சீமான், வை.கோ, நெடுமாறன், திருமாவளவன் போன்ற வாக்குப் பொறுக்கிகள் ஈழத் தமிழர்கள் அவலத்தை அரசியல் வியாபாரமாக்குவதைப் போன்று சினிமாவிலும் இந்த அவல வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கான விளம்பரச் சுவரொட்டி ஒன்றில் பிரபாகரனுடன் கமலஹாசன் கைகோர்த்துக்கொண்டு நிற்பதாக இன்று மதுரையில் வெளியிடப்பட்டடிருந்தது.
முஸ்லீம்கள் மீதான இந்து பாசிச ஒடுக்குமுறையைக் கலையாக்கிய கமலஹாசனுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு?
தமிழ் நாட்டின் சினிமாக் குப்பைகளைப் புறக்கணிப்பதன் ஊடாகவே அவமானகரமான வியாபாரிகளை வெளியேற்றுவதற்கான முதல் போராட்டத்தை ஆரம்பிக்க முடியும்.








ஒரு வழியாக விஸ்வரூபம் பிரச்னை முடிவுக்கு வந்தது. கமல்-தியேட்டர் உரிமையாளர்கள் இடையே சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து வருகிற ஜனவரி 25ம் தேதி விஸ்வரூபம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதாக கமல் அறிவித்துள்ளார்.
கமல் நடித்து, இயக்கி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். இப்படத்தில் கமல் உடன் ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ளனர். பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. எப்பவும் புதுமைகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் விரும்பும் கமல் இந்த படத்தில் தொழில்நுட்ப ரீதியாக ஆரோ 3டி சவுண்ட் உள்ளிட்ட பல புதுமைகளை புகுத்தியுள்ளார். மேலும் இப்படத்தை டி.டி.எச்.,இல் வெளியிடும் புதிய தொழில்யுக்தியை கையாண்டுள்ளார்.
தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு : கமலின் இந்த புதிய முயற்சிக்கு திரையுலகினர் ஆதரவு தெரிவித்தபோதும், தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். டி.டி.எச்.இல் படம் வெளியான தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், கமல் இந்த முயற்சியை கைவிடாவிட்டால் அவரது படங்களை புறக்கணிப்போம் என்று எதிர்ப்பு குரல் எழுப்பினர். இருந்தும் கமல் தனது டி.டி.எச். கொள்கையில் உறுதியாக இருந்தார். முன்னதாக படத்தை 11ம் தேதியும், டி.டி.எச்.இல் 10ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தார்.
சுமூக உடன்பாடு : இந்தசூழலில் கமலுடன் திரையரங்கு உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து கமல் நேற்று தனது ராஜ்கமல் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை அழைத்து பேசினார். அப்போது அவர் பேசும்போது, விஸ்வரூபம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருப்பதாகவும், இதுயாருடைய நிர்ப்பந்தத்தாலும் எடுக்கப்பட்ட முடிவு என்றும் கூறினார். அதேசமயம் டி.டி.எச்.இல் வெளியிடும் திட்டத்தை தான் ஒருபோதும் கைவிடப்போவது இல்லை என்று கூறினார். இதனிடையே தியேட்டரிலும், டி.டி.எச்-லும் ஒரே நாளில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகளும் நடந்து வந்தது.
ஜன.25-ல் ரிலீஸ் : இந்நிலையில் இன்று காலை விஸ்வரூபம் திரைப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் சுமார் 500 தியேட்டர்களில் விஸ்வரூபம் திரையிடப்படும் என்றும், டி.டி.எச்., முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள தியேட்டர் உரிமையாளர்களுக்கு தமது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்.
டி.டி.எச். ரிலீஸ் எப்போ…? கமல் இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் 500 தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆவதாக தெரிவித்துள்ளார். அதேசமயம் டி.டி.எச்.இல் எப்போது ரிலீஸ் என்பதை அவர் குறிப்பிடவில்லை.