டெல்லியில் உள்ள பிரதமர் வீடு அமைந்து இருக்கும் டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலை அருகே உள்ள அவுரங்கசீப் சாலையில் சிக்னலுக்காக நிறுத்தப்பட்டிருந்த இஸ்ரேல் தூதரக அதிகாரியின் இன்னோவா கார் திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் தூதரக அதிகாரி உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தூதரகத்துக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து தூதரக அலுவலகங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி தெரிவித்துள்ளார்.
இதேபோல் தூதரகங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதே போன்ற குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஜோர்ஜியாவிலும் நடைபெற்றுள்ளது. ஈரான் மீது அமரிக்க ஆதரவுடன் போர் தொடுக்க முற்படும் இஸ்ரேல் இஸ்லாமியப் பயங்கரவாதப் பூச்சாண்டி காட்டும் நோக்கில் தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








What I hate about this web site is not the news but the addendum where you make your unsubstantiated often fabricated comments. It is disgusting. Israelis aren’t saints and so are the Islamists.
சர்வதேச ஊடகங்களில், எப்போது ஈரானை இஸ்ரேல தாக்கும் என்ற விவாதம் அமோகமாக நடை பெறுகிறது. அப்படி தாக்குவதாயின்,
அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும். யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.புரிந்தால் சரி.