இலங்கைக்கு முஸ்லிம்கள் அரேபிய நாடுகளில் இருந்து வந்தார்கள்.இலங்கை முஸ்லிம்கள் எங்கே இருந்து வந்தார்கள்…?தமிழ் தாயின் கருவறையில் இருந்துதானே.
தந்தை அரேபியராக இருந்தால்கூட தாய் திராவிட தமிழ்தானே.அதனால்தானே இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி என்று வாழ்கின்றோம்.
இங்கிருக்கின்ற முஸ்லிம்கள் இந்துவாக இருந்து இஸ்லாமானவர்கள் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.அதனால்தானே இந்துக்களின் கலாச்சாரம் பண்பாடு அரிதாக இலங்கை முஸ்லிம்களுக்குள் இன்னும் இருக்கிறது.
ஒரு தாய் வயிற்றில் பிறந்த தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இனியும் வேற்றுமை வேண்டாமே.இரு இனங்களும் அவரவர் தனித்துவத்தை உணர்ந்து கசப்புணர்வுகளை மறந்து இணைந்து செயற்படுவதே இருவருக்கும் வெற்றியை தேடித்தரும்.இல்லாவிட்டால் இருஇனங்களும் நாசமாவதை யாராலும் தடுக்க முடியாது.
இருவருமே தவறு செய்திருக்கிறோம் அந்த தவறுகளை மீண்டும் மீண்டும் பேசிக்கொள்வதால் எமது இருப்பு கேள்விக்குறியாகிறது.இது பழி தீர்க்கும் தருணமல்ல பிரிந்தவர்கள் சேர்வதற்கான சந்தர்ப்பம்.கடந்தகால விடயங்களில் அனைவருமே பாடம் கற்றிருப்போம்.
நீ என்னை மன்னிக்கவில்லை
நான் உன்னை மன்னிக்கமாட்டேன்” என்றால் கவலைகள் தொடரும்.
ஒரு கை ஓசை எழுப்பாது என்பதை உணர்வோம் அன்றுதான் இருவருமே மகிழ்வோம்.
ஒரு விழி அழும்போது
ஒரு விழி சிரிப்பதில்லை….
நீ அழும்போது நான் சிரித்தேன்
நான் அழும்போது நீ சிரிக்கிறாய்
மீண்டும் நீ அழும்போது நான் சிரிப்பேன்
நான் அழும்போது நீ சிரிப்பாய் ….
இது தொடர்கதையாக போனால் நாம் இருவருமே அழுது கொண்டே இருப்போம் அவர்கள் சிரித்துக்கொண்டே இருப்பார்கள்…..!
நான் செய்தது தவறு என்பதையும்
நீயும் தவறு செய்திருக்கிறாய் என்பதையும்
நானும் நீயும் உணராதவரை
நமக்கு சந்தோசம் என்பது சாத்தியமில்லை.
இளைஞர்களே… முகநூலில் வீண்வாதங்களில் ஈடுபட்டு குரோதங்களை வளர்த்துகொள்ளாமல் ஒற்றுமைக்கான பாலமாக செயற்படுவோம் வாருங்கள்.
Late. King Vijayan’s & his 700 buddies wifes’ came from where
..?
They came from Madurai… from Sangath Thamil valarththa Pandiya kingdom…
So, Muslim’s & Sinhalese’s mothers are TAMILS…
We all are brothers… & sisters. .. All are one family. .. Under one roof the BEAUTIFUL ISLAND OF SRI LANKA. ..!
Within a family brothers & sisters fight each other… but we have settle within us… within our family… If we burn our home who will built it for us…?
முஸ்லீம்களும் தமிழர்களும் சகோதரர்கள் . இதை சமீபத்தில் தமிழ்நாட்டு இஸ்லாமியத் தலைவர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் சிங்களவர்கள் சகோதரர்கள் அல்லர் . அவர்கள் வேற்று இன ஆரியர்கள். மத்திய ஐரோப்பிய இனத்தவர்கள்.
Nope. There are no Arian race as such. Singhalese are more Tamils than Tamils in Sorrylanka. See the “M” Group study.
Vijayan’s and his 700 buddies came from Kalinga , which is modern Orisa and Bengal.
This is first time I hears that Vijayan and his friends came from Sangkam vaLarththa Mathirai ?????
Friend read it again…
I said their wives… came from Sangam Vallarta Madurai…
Wives are Dravidians… Husbands are Aryans…
So, the generation…?
Vijayan & his 700 buddies came from now called Bengal (Vankai) but history books say they were from now called Orisa. I accept they are Aryans.
In the meantime… Except our Arab fathers… & Burgers… Time to time we all SriLankans came from different parts of India…!
And India is the united… world ‘s largest democratic country…!
அதை நீங்கள்தான் சொல்கிறீர்கள் .
நீங்கள் சொல்லும் அந்த விஜயன் வழி வந்தவர்களும் , இலங்கை வாழ் முஸ்லிமகளும் அப்படி சொல்வதுமில்லை , ஒப்புக்கொள்வதுமில்லை..
That is correct
இந்த இணையத்தளத்தில்” தமிழ் முஸ்லீம்கள்” என்று பல தடைவைகள் பதியப்பட்டுள்ளது ஆனால் மேலே “முஸ்லீம் இனத்தவா்கள்” என்று குறிப்பிடப்படுகிறது. முதலில் இதற்கு விடையை கண்டபின்பே நாம் மேலே செல்லலாம்.
Muslim is the race…
Islam is the religion…
Tamil is the language…
If they born for Muslim fathers & Tamil mothers…
Tamil is their mother tounge…!
They must be Tamils…!
And if they converted Muslims like Christians…
Also they are Tamils…!
Like Hindus in Tamils…
Christians in Tamils…
Islamists in Tamils…!
In this juncture Srilankan Tamil speaking Islamists they have to clear/ define their identity…
For their own political survival, all the time they can’t play games…
If they don’t you are going to hang them ?
After the Govt change the name “Alukosu” I’m going to apply for that…
But I don’t have the citizenship… I don’t know they’ll hire foreigners or not…
If u know about this pls let me know…
And I’m waiting for dual citizenship… If u have any influence… Can you recommend me… Pls…
இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மை முஸ்லீம்கள் திராவிட முகச் சாயல் உடையவர்கள். எனது கணிப்பின்படி ஆரிய அல்லது பிராமணிய திணிப்பின் மூலம் தமிழர்களிடம் புகுந்த சாதீய வேறுபாடுகளும் கொடுமைகளும் பெருமளவான தமிழர்களை கூட்டமாக கிராமம் கிராமமாக இஸ்லாமிய மதத்தை தழுவ வைத்தது. வர்த்தக நோக்கமாக வந்த அராபியர்கள் மூலம் இஸ்லாமிய மதம் தமிழர் மத்தியில் பரவியிருக்க முடியும். சிறிய அளவில் சில அராபியர்கள் தமிழ் பெண்களை மணம் முடித்திருக்கலாம்.
தற்போது இலங்கையில் இருந்து பணிப் பெண்களாக அராபிய தேசம் செல்லும் பெண்கள் அராபியர்களின் கொடுமையால் கற்பம் தரித்து வருவதன் மூலம் இனக் கலப்பு ஏற்றபட்டு வருவதாக சொல்லலாம் அதுவும் சிறிய அளவிலானது. அவ்வாறு பிறக்கும் குழந்தைகளை அரபி கராம் குட்டி என முஸ்லிம் கிராமங்களில் கிண்டல் பண்ணும் நிலைமையும் உண்டு.
யாழ்பாணத்தில் இருந்து இடம்பெயர்விக்கப்பட்ட முஸ்லிம் நண்பர் ஒருவரின் தகப்பனாரை பாணந்துறை செரிக்கமுல்லையில் 1990 களின் பிற்கூற்றில் சந்திக்க நேர்ந்த போது, அவர் தங்களது இடப் பெயர்வு துயரத்தை இவ்வாறு கூறத்தொடங்கினார் .. தம்பி நாங்களும் தமிழர்தான் இவங்களுக்கு என்ன அநியாயம் செய்தனாங்கள். எங்களை இப்படி துரத்திப் போட்டாங்களே எனக் கூறினார். அத்துடன் தங்களது பேரனும் பேர்த்தியும் (பெற்றோரின் பெற்றோர்) சைவர்கள் என்றும் அவர்களே இஸ்லாம் மதத்துக்கு மாறியதாகவும் குறிப்பிட்டார். தங்களிடம் தற்போதும் குறிப்பு குறிக்கும் வழக்கம் இருப்பதாகவும் குறிப்பிட்டார் (குழந்தை பிறந்தவுடன் குறிப்பது). ஆக இலங்கையில் கிறீஸ்தவ மதம் பரவியது போன்றே இஸ்லாமும் தமிழர் மத்தியில் பரவி இருக்க முடியும் என நம்புகின்றேன்.
வங்காளிகள் அல்லது ஒரிசா பகுதியை சேர்ந்தவர்கள் பேசும் மொழி சம்ஸ்கிருத வழி தோன்றிய ஆரிய கலப்பு மொழி மட்டுமே. வங்காளிகளை பார்த்து யாரும் ஆரியர் எனக் கூறின் ஆரியரின் முகத் தோற்றத்தை அறியாதோர் மட்டுமே அவ்வாறு கூறுவர்.
ஒரிசாவின் பெரும்பாகமும், (ஆரிய குடியேறிகள் தவிர்த்து) வங்காளத்திலும் இருக்கும் மக்களும் திராவிட முகச் சாயல் உடையவர்கள். வங்காளிகள் தம்மை ஆரியர் என அழைப்பதாக தெரியவில்லை. UP, குயராத் போன்ற இடங்களில் இருந்து இன்றும் ஆரியர் ஒரிசாவில் குடி ஏறுகின்றனர். அது வேறு விடயம் ஒரிசாவின் பூர்வகுடிகள் ஆரியர் அல்ல என்பதே எனது வாதம்.
கனடாவில் scarborough இல் வங்காளிகள் பெருமளவில் தமிழ் மக்களின் அயலவர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் தமிழர்களின் கடைகளில் பொருட்கள் வாங்குவது வழமை, அப்போது அவர்களை தமிழர்கள் என நினைத்து எம்மவர் தமிழில் கதைப்பது உண்டு. அந்தளவுக்கு அவர்கள் தமிழர்களின் உருவ ஒற்றுமையை கொண்டிருப்பவர்கள். ஒரிசாவும் இதற்கு விதி விலக்கல்ல. ஒரிசாவில் பிற்படுத்தப் பட்ட மக்கள் அதிகமாக உள்ளனர் இவர்கள் திராவிட இனச் சாயலை உடையவர்கள். ஒரிசாவில் இருக்கும் அநேக ஆரியர் அண்மைக் காலத்தில் ஒரிசாவில் குடி ஏறியோர்களும் உண்டு. இந்திய வட மாநிலங்களில் இருக்கும் பிற்படுத்தப் பட்ட மக்கள் பெரும்பாலும் திராவிட முகச் சாயலையும் உடலமைப்பையும் கொண்டவர்கள். எனது வங்காளி நண்பர் சொல்வார் தாம் சமஸ்கிரித மொழி வந்த ஆரிய மொழி பேசும் திராவிடர்கள் என்று, ஆனால் இதனை பல வங்காளிகள் ஒத்து கொள்ள மாட்டார்கள் எனவும் சொல்வார்.
ஆம் அலெக்ஸ் ரவி இப்படி ஒவ்வொரு இனமும் தமது இனத்துவ அடையாளங்களை இறுக்கமாக பேணும் போது அடக்கி ஒடுக்கப் படும் நாம் மாத்திரம்?……………
ENDLF ராஜனை கேட்டால் ஒரிசா மக்களை பற்றிச் சொல்வார் அலெக்ஸ் ரவி விரும்பினால் கேட்டுப் பார்க்கலாம். வியயன் ஒரிசாவில் இருந்து வந்த ஆரியன் என்பது புனை கதைகளில் ஒன்றாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்பது உண்மை தான் அலெக்ஸ் ரவி அதுக்காக இனத்துவ அடையாளங்களை அடக்குமுறை சக்திகளிடம் பறிகொடுத்துவிட்டு “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என வேட்டியை தூக்கி கொண்டு …………. ஆட (தாண்டவ கூத்து ஓமோம் கூத்து) போக முடியாது. இன்று இன்னொரு சமூகம் ஒ எண்டவுடன் பெரும்பான்மை இனத்துடன் ஒண்டடியா…… ஒண்டுக்கிருக்க முண்டியடிக்கும் அரசியல் தலைமையை கொண்டியங்கும் போதே என்ன நடக்குது என்று பாத்தியளோ? உங்களை போல ஒரு மூளையும் அதுக்கு எதிரான புலிகளின் மூளையும் பலே பலே ….. அந்த மூளையள் (“அறிவு” ஓம் தமிழனின் அறிவு அதிலும் யாழ்ப்பாணத் தமிழனின் அறிவு அதிலும் jaffnaa campus இன் அறிவு…)ஒண்டுக்கு ஒண்டு முரண்பட்டு சிலவேளை சேர்ந்து வேலை செய்து எங்கட சனத்தை தெரிவிலை விட்டுடுட்டுது. இது உண்மையில்லை என யாரும் மறுக்க முடியாது. எல்லாம் நம்ம மூளை தான்…………….