தமது பார்வையில் இலங்கை ஒரு கவலைக்குரிய நாடாகவே இருப்பதாக பிரிட்டன் கூறியுள்ளது.
அங்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு கடுமையான வன்செயல் மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரித்தானியாவின் வெளியுறவு அலுவலகம் அதில் இலங்கையை கவலை தருகின்ற நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் அங்கு மனித உரிமைகள் நிலவரங்களில் முன்னேற்றம் காணப்படுகின்ற போதிலும், நிலைமை இன்னமும் மிகவும் மோசமானதாகவே இருப்பதாக அந்த அறிக்கை கூறுகின்றது.
மோசமான மனித உரிமை நிலவரங்களை பலவீனமான பொலிஸ் மற்றும் நீதித்துறை மேலும் மோசமாக்கியது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
மனித உரிமை நிலவரங்களை கண்காணிப்பதற்காக செயற்படுகின்ற இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அரசியல் ரீதியாகவோ அல்லது நிதி ரீதியாகவோ சுதந்திரமானது அல்ல என்றும், குற்றஞ்செய்பவர்கள் தண்டிக்கப்படாமல் இருக்கும் கலாச்சாரத்தை கையாள அரசாங்கம் சில சாதகமான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்ற போதிலும், விடுதலைப்புலிகள் அமைப்பின் சந்தேக நபர்கள் விடயத்தில் பொலிஸார் மேற்கொள்ளும் முறைகேடுகளை களைய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
BBC.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று அரசாங்கம் சாதிக்க நினைப்பது என்ன?
நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதுதான் தம்முடைய இலக்கு எனவும், அதன் மூலமாக அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்குத் தான் திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு தடவை திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்.
சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் ஸ்ரே#ட் ரைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே இதனை மீண்டும் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, இனநெருக்கடியைத் தீர்ப்பதற்காக எவ்வாறான அணுகுமுறை தன்னிடம் உள்ளது என்பதையும் வெளிப்படுத்தியிருக்கின்றார். முக்கியமாக வடக்கு கிழக்கு இணைக்கப்படாது, மாகாண Œபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது என்பதை ஜனாதிபதி வலியுறுத்தியிருக்கின்றார்.
ஆக, இன நெருக்கடிக்கான நியாயமான ஒரு தீர்வைப் பொறுத்தவரையில், தற்போதைய ஆட்சியாளர்களிடமிருந்து எதனையும் எதிர்பார்க்க முடியாது என்பதைத்தான் ஜனாதிபதியின் இந்தப் பேட்டியும் உணர்த்தியிருக்கின்றது.
அப்படியானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரŒõங்கம் எதிர்பார்ப்பது எதற்காக என்ற கேள்வி எழலாம். அதேவேளையில், இனநெருக்கடி தொடர்பான அரŒõங்கத்தின் அணுகுமுறை எவ்வாறானதாக அமைந்திருக்கும் என்பதும் ஆராயப்பட வேண்டிய ஒரு விடயமாகவே இருக்கின்றது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் öŒ#திருந்த இந்திய வெளிவிவகாரச் öŒயலாளர் நிருபமா ராவைச் Œந்தித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்த கருத்து ஒன்று இவ்விடத்தில் கவனத்துகுரியதாக இருக்கின்றது. இனநெருக்கடிக்குத் தீர்வொன்றைக்காண வேண்டுமானால், அது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே முடியும் எனத் தெரிவித்த ஹக்கீம், சிங்கள மக்களுடைய ஏகோபித்த ஆதரவைக் கொண்ட ஒருவராக மகிந்த ராஜபக்ஷ இருப்பதுதான் இதற்குக் காரணம் எனவும் தன்னுடைய கருத்துக்கான நியாயத்தை விளக்கியிருக்கின்றார்.
இன நெருக்கடிக்கு நியாயமான ஒரு அரசியல் தீர்வைக்காண விரும்பினால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே அதனைச் öŒ#ய முடியும் என ஹக்கீம் அடித்துக்கூறியிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.
கடந்த காலங்களில் இனநெருக்கடிக்குத் தீர்வைக்காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் இனவாதக் கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாகவே கைவிடப்பட்டது. தற்போதைய நிலையில் இனவாதம் பேŒக்கூடிய கட்சிகள் அனைத்தும் மகிந்தவுடனேயே உள்ளன. அல்லது öŒயலிழந்துபோயுள்ளன. அத்துடன் சிங்கள மக்களுடைய ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்றுக்கொண்ட ஒருவராகவே மகிந்த இருக்கின்றார். இந்த நிலையில் மகிந்தவினால் முன்வைக்கப்படும் தீர்வு ஒன்றுக்கு எதிராக மக்களைத் திரட்டிக்கொண்டு வீதியில் இறங்கிப் போராடக்கூடியளவுக்குப் பலம்வா#ந்தவர்களாக சிங்களத் தலைவர்கள் யாரும் இல்லை.
ஜெனரல் Œரத் பொன்÷Œகா தடுத்துவைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக மக்களை அணிதிரட்டி பலம்வா#ந்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்கக்கூடிய நிலையிலேயே எதிர்க்கட்சிகள் இல்லை. இந்த நிலையில் அரசியல் தீர்வுக்கு எதிராக மக்களைத் திரட்டும் நிலையில் யாரும் இல்லை.
இதனால்தான் இனநெருக்கடிக்கு நியாயமான தீர்வு ஒன்றைக்கொடுக்க வேண்டுமாயின் அது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒருவரால் மட்டும்தான் முடியும் என்பதை ஹக்கீம் வெளிப்படுத்தியிருந்தார்.
இனநெருக்கடிக்கான தீர்வொன்றை முன்வைப்பதற்கான ஆதரவை சிங்கள மக்களிடமிருந்து ஜனாதிபதி பெற்றிருக்கின்றார் எனக் குறிப்பிடும் மற்றொரு தமிழ் அரசியல் தலைவர், ஜனாதிபதியினால் முன்வைக்கப்படும் எந்தவொரு அரசியல் தீர்வும் சிங்களப் பெரும்பான்மையின மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடுகின்றார். அதாவது, சிறுபான்மையினரின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய எந்தவொரு தீர்வையும் முன்வைக்கக்கூடிய Œக்தி அல்லது அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது. இது கடந்த கால அரசியல் தலைவர்கள் எவரிடமும் இல்லாத ஒன்று!
தன்னுடைய இரண்டாவது பதவிக் காலத்துக்கும் தெரிவு öŒ#யப்பட்டுள்ள நிலையில், இனநெருக்கடிக்கு நியாயமான தீர்வொன்றைக் கொண்டுவருவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்குக் கடினமான ஒன்றாக இருக்கப்போவதில்லை என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் உண்மையாக இருந்தாலும் கூட, இனநெருக்கடி தொடர்பாக ஜனாதிபதியின் உண்மையான அணுகுமுறை என்ன என்பதிலேயே இதற்கான பதில் தங்கியிருக்கின்றது.
இனநெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்பது உண்மைதான். ஆனால், நியாயமான தீர்வு ஒன்றை அரŒõங்கம் முன்வைத்தால் தமிழ், முஸ்லிம் கட்சிகள் மட்டுமன்றி ஐ.தே.க. கூட அதற்கு ஆதரவளிக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். இருந்தபோதிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதற்கு அரŒõங்கம் இலக்கு வைப்பது இனநெருக்கடிக்குத் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்காகவல்ல!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதை நோக்கமாகக்கொண்டே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற அரŒõங்கம் திட்டமிடுகின்றது. அல்லது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இரண்டு பதவிக்காலங்களுக்கு அதிகாரத்திலிருக்க முடியும் என்ற அரசியலமைப்பு விதிமுறையை மாற்றியமைத்து அதனை மேலும் ஒரு பதவிக்காலத்துக்கு அதிகாரத்திலிருப்பதற்கு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் öŒ#வதற்கு ஆளும் கட்சி முயற்சிக்கலாம்.
இனநெருக்கடியைப் பொறுத்தவரையில் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுக்கொண்டவராக மகிந்த இருப்பதால் அவரால் எந்தவொரு தீர்வையும் நடைமுறைப்படுத்த முடியும் என ஹக்கீம் தெரிவித்திருந்தாலும், அதற்கு மறுபக்கம் ஒன்றும் உள்ளது. அதாவது இந்தப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்றைக் கொண்டுவருவதில் ஜனாதிபதிக்குள்ள விருப்பமே அது.
இனப்பிரச்சினைத் தீர்வு, ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பு என்பவற்றை பிரதானமாக முன்வைத்தே Œந்திரிகா குமாரதுங்கவும் அதிகாரத்துக்கு வந்தார். 1994 ஆம் ஆண்டுத் தேர்தலில் 62 வீதமான மக்களின் ஆதரவுடன் Œந்திரிகாவினால் அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடியதாக இருந்த போதிலும், தன்னுடைய 11 வருட ஆட்சிக் காலத்தில் அவரால் இந்த இரண்டில் எதனையுமே öŒ#ய முடியவில்லை. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை என்பது இதற்குக் காரணமாகத் தெரிவிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வின் ஆதரவைப் பெற்று அதனைச் öŒ#வதற்கான எந்தவொரு முயற்சியையும் Œந்திரிகா பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. ஆக, Œந்திரிகாவின் விருப்பமின்மையே இதற்கு உண்மையான காரணமாகக் கூறப்பட வேண்டும்.
தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரும் மகிந்த ராஜபக்ஷ இனநெருக்கடித் தீர்வில் எவ்வாறான அணுகுமுறையைக் கையாள்வார் என்ற கேள்வி எழுகின்றது.
தன்னுடைய முதலாவது பதவிக்காலத்தை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று இரண்டாவது பதவிக்காலத்தை உறுதிப்படுத்துவதிலேயே மகிந்த öŒலவிட்டார். போரில் வெற்றிபெற்றிருப்பதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் öŒல்வாக்குள்ள ஒருவராக வந்திருக்கும் மகிந்த ராஜபக்ஷ தமிழர்களுக்கு Œலுகைகளைக் கொடுத்து அந்தச் öŒல்வாக்கை இழந்துவிடத் தயாராக இல்லை என்பதைத்தான் அவருடைய அண்மைக்காலக் கருத்துக்களின் மூலமாக உணர முடிகின்றது.
இனநெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்காக என ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டுவிட்டது. ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இந்த அறிக்கை Œமர்ப்பிக்கப்பட்ட போதிலும் அது வெளியிடப்படவில்லை. எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய பேச்”க்களில் அதனை அடிப்படையாகக் கொள்வதற்கு அரŒõங்கம் முன்வருமா என்பது தெரியவில்லை.
தற்போதைய நிலையில் ஜனாதிபதி தெரிவித்திருக்கும் மூன்று விடயங்கள் எதிர்காலப் பேச்”க்கள் எவ்வாறானதாக இருக்கும் என்பதையும் இனநெருக்கடி தொடர்பில் அரசின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதையும் ஓரளவுக்கு உணர்த்துவதாக இருக்கின்றது.
ஒன்று ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியிடப்பட்ட மகிந்த சிந்தனை பகுதி 2 இல், 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலேயே தீர்வு அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண Œபைக்கு வழங்கப்போவதில்லை என்பதை அண்மைக்காலப் பேட்டிகளில் ஜனாதிபதி தெளிவாகத் தெரிவித்துவருகின்றார்.
இதனைவிட பொதுத் தேர்தலில் தெரிவாகும் தமிழ்த் தலைமையுடன் பேŒப்போவதாகவும் அவர் தெரிவித்துவருகின்றார். ஆனால், புலிகள் கேட்டதை அவர்கள் கேட்கக்கூடாது என பேச்”க்களுக்கு இப்போதே ஒரு நிபந்தனையையும் வைக்கின்றார்.
தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதையும், மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு அரŒõங்கம் öŒயற்பட்டுவருவதாக குற்றச்Œõட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில், ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு தமிழ்த் தரப்பினருக்கு Œந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
ஆக, தமிழ்த் தலைமையைப் பலவீனப்படுத்துவதும், தான் நினைக்கும் அரைகுறையான ஒரு தீர்வை வழங்குவதும்தான் அரŒõங்கத்தின் திட்டம் என்பது தெரிகின்றது. பலவீனமான ஒரு தமிழ்த் தலைமை தன்னுடைய இந்த முயற்சிகளை நடைமுறைச் Œõத்தியமாக்க உதவும் என்பது அரசின் கணிப்பு. அதற்காகவும், ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றியமைத்து அதிகாரத்தில் தொடர்வதற்காகவும்தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரŒõங்கம் எதிர்பார்க்கின்றது எனக் கூறலாம்.
நன்றி! தினக்குரல்.
Sri Lanka has outright rebuffed shocking allegations that some 11,000 suspected rebel cadres allegedly being held ‘incommunicado’ by the government are at risk of being tortured and are subjected to enforced disappearance apart from various other forms of harassment.
The government’s denial comes as thousands of men and women with suspected LTTE links continue to be trapped in legal limbo with little freedom, all in the name of ‘rehabilitation’ sponsored by the Sri Lankan government. – The Sunday Leader
For in full: http://www.thesundayleader.lk/2010/02/07/trapped-in-legal-limbo/
தமது பார்வையில் இலங்கை ஒரு கவலைக்குரிய நாடாகவே இருப்பதாக கூறிய பிரிட்டன் இன்று இலங்கைக்ககான கடந்த கால ஆயுத விற்பனையிலும் கவலை கொள்வதாகத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
A report by the British House of Commons, released today, has concluded that that the review and subsequent revocation of nine extant licenses for exports to Sri Lanka is to be welcomed and regretted that arms were exported to Sri Lanka during ceasefire periods.
The report by a select committee of members of the House of Commons, available on the House of Commons website and to be released to the British Parliament today, notes that in evidence to the Committee in January 2010, the Minister of State for the UK Foreign Commonwealth Office (FCO) had said that the UK Government had been concerned about the Sri Lankan situation “for quite a long period of time”, and, as such have been “very cautious”.
The report says that although the evidence and information from Sri Lanka was “very patchy”, the Minister explained that the nine licenses revoked during July and August 2009, were a consequence of the review undertaken by the UK Government, and an example of lessons learnt following consideration of the conflict situation in Sri Lanka.
Mr David Hall, Deputy Head, Counter Proliferation Department, FCO, confirmed that the evidence of what has happened in the past was taken into account in the risk assessments that are made in the future, the report said.
Taking into consideration all the evidence at hand the report by the British House of Commons further concludes that the UK Government should take a longer term view about unstable countries, and further appraisal is required where the peace is fragile.
UK arms exports have ended up in places that Scrutiny of Arms Export Controls (2010) 7 were contrary to UK policy in the case of Israel, and in the case of Sri Lanka, arms were exported during ceasefire periods, which, in retrospect was regrettable, the report said. (Daily Mirror online)
கவலை கொள்பவர்கள் கவலை கொள்ளட்டும்; சந்தொஷப்படுபவர்கள் சந்தோஷப்படட்டும்; ஏன் இந்த ஆயுத விற்பனை?
இந்த பூமியில் எத்தனை மனித ஜீவராசிகள் சுத்தமான நீர் பருக இல்லாமல்; ஒரு வேளை உணவு உண்ண இல்லாமல் (மூன்று வேளை வேண்டாம்); நிம்மதியாக துயில் கொள்ள முடியாமல் (உயிருக்கு அஞ்சி) வாழ்கிறார்கள். எல்லாம் இந்த ஆயுத-அரசியல் கலாச்சாரத்தாலாயே!
இவ் ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளை மானிடர்கட்கு பயனுள்ள பொருட்களுக்கான உற்பத்தி தொழிற்சாலைகளாக மாற்ற முடியாதா?
எல்லாம் அரசியல் கலந்த ஆயுதப் போட்டி; விளைவு மானிட அழிவு!
மானிட அழிவு என்ன? சகல ஜீவராசிகளும்…….இயற்கையும் அழிவு!
ஏன் இந்த “Global Warminig” என்று “WARN” பண்ண வேண்டும்?
ஏன் “Earth Day” என்று நினைவு படுத்த வேண்டும்?
எல்லாம் இந்த ஆயுதப் போட்டி; அரசாலும் போட்டி…… இன்று நவீன ஆயுத கலாச்சாரத்தில் முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் என்று நாம் அழிவுகளின் மத்தியில் பாடங்களைக் கற்றுக்கொண்டாலும், தொடர்ந்து நாடுகளிற்கிடையில் எத்தனை போர்? அமெரிக்க ஆதிக்க வியட்நாம் போரின் அழிவுகளை பின் இன்று தொடரும் ஈராக் போரின் அழிவுகளின் தொடரும் கட்டுப்படுத்த முடியாத அழிவுகள்….
உள்நாட்டு போர் எத்தனை? அதனால் இன்றும் நாடுகள் பிரிந்த நிலையில் ஆயுதப்போட்டியில் தொடரும் தென்-வட கொரிய போட்டி… எல்லாம் ஆயுத விற்பனைக்கான நிலையில்….
இந்த நிலையில் இந்த பிரிட்டிஷ்காரர் இலங்ககைக்கு ஆயுதம் விற்கும் போது என்னதிர்க்காக விற்றார்கள்? இலங்கையில் ஏற்கனவே நடக்கும் இரு இனங்களிர்க்கான உள்நாட்டுப்போரில் இலங்கை அரசாங்கம் தமிழர்க்கு ஆயுதங்களினால் சாமரம் வீசவா? அல்லது நிலம் உழுது விவசாய செய்யவா?
இவர்கள் இவ்வளவு காலம் ஈழத்தமிழரின் அடிப்படை உரிமைகளை கொடுக்க மறுத்து ஆயுதத்தால் அடக்கும்(இப்ப அடக்கி – அடக்கியென்ன அழித்து…. நிர்மூலமாக்கி) இலங்கைக்கு ஆயுத விற்பனை செய்யும் போது அதே இலங்கை அரசாங்கத்துடன் போரிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் “மந்தி உரையர்” இதே இலண்டனில் தானே இருந்தார்?
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவிற்கும் அதே இங்கிலாந்திலேயே நிதி திரட்டினார்களே?
அப்போ இந்த இங்கிலாந்துக்காரருக்கு ஏன் ஆயுதம் விற்கிறோம் என்று கவலை வரவில்லையா?
அது ஏன் இன்று மட்டும்?
இலங்கை தங்களிடம் இருந்து ஆயுதக் கொள்வனவை நிறுத்தியதையிட்டா?
அல்லது தற்போதைய இலங்கை அரசாங்கம் தங்களிற்கு கட்டுப்படவில்லைஎன்றா?
அல்லது தாங்களே முழுக் காரணமாக இருந்த மனித அழிவிற்கான போர் முடிவிற்கு வந்துவிட்டதென்றா?
எல்லாவற்றிக்கும் மனித நேயமும்; மனிதாமானமும் வேண்டும்!
– அலெக்ஸ் இரவி.