கிறீஸ் மனிதர்கள் என்ற சொல்லக்கூடியவர்களின் வன்முறைகளை தவிர வேறு எதுவும் இடம்பெறவிலலை என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது. வடக்கு கிழக்கில்; அபிவிருத்தியுடன் கூடிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் கூறுகிறது
எனினும் உண்மையில், வடக்குகிழக்கில் தமிழ் முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்
ஜனாதிபதி மறுத்தாலும் கூட வடக்குகிழக்கு மத்திய மலைநாடு என்ற இடங்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் கிறீஸ் பூதங்கள் என்ற சர்ச்சை தொடர்கிறது
இதன்காரணமாக பெண்களும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்
குறித்த நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினரே மேற்கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரி;ல் பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்
இந்தநிலையில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்களை நடத்துபவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவர் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார்
எனினும் எவ்வாறு ஜனாதிபதி அவசரகால சட்டம் நீக்கப்பட்டதாக கூறமுடியும் என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு கேள்வி எழுப்பியுள்ளது
வடக்குகிழக்கில் சிங்கள ஆண் இராணுவ வீரர்கள், தமிழ்பேசும் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகி;ன்றனர்
பெரும்பாலான இராணுவத்தினர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகி;ன்றனர்
எனினும் அரசாங்கம் வடக்குகிழக்கில் நல்லெண்ணத்தை கட்டியெழுப்புவதாக கூறிவருகிறது
உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் பொய்யான தகவலை வழங்கி வருகிறது
இன்னும் 8000 பேர் மாத்திரமே மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது
எனினும் உண்மை நிலவரப்படி 60 ஆயிரம் பேர் இன்னும் தற்காலிக கொட்டகைகளிலும் இடைதங்கல் முகாம்களிலும் வாழ்ந்து வருகின்றனர்
மெனிக் பாமில் 7 ஆயிரம் குடும்பங்கள் உள்ள நிலையி;ல் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு லட்சம் முஸ்லிம்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை
கைதுசெய்யப்பட்ட சரணடைந்த முன்னாள் போராளிகள் சமூகத்துடன் மீளிணைக்கப்படுவதாக கூறப்படுகிறது
எனினும் கண்கண்ட சாட்சியங்களின்படி கைதுசெய்யப்பட்ட சரணடைந்த பல போராளிகள் இன்னும் எங்கிருக்கிறார்கள் என்பது வெளிப்படுத்தப்படவில்லை
சமூகத்துடன் மீளிணைக்கப்படுவதாக கூறப்படும் முன்னாள் போராளிகள், மீண்டும் கைதுசெய்யப்படுகிறார்கள்
அவர்களுக்கு உரிய வாழ்வாதார வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை
அத்துடன் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கப்படுகிறது
இந்தநிலையில் சமாதான பேச்சுவார்த்தைகளை எடுத்தால், அதிகார பரவலாக்கல் மூலம் இனப்பிரச்ச்pனைக்கு தீர்வுக்காணப்போவதாக அரசாங்கம் கூறிவருகிறது
எனினும் அரசாங்கத்தினால் எவ்வித முன்னேற்றமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை
கடந்த மே மாதத்தில் இந்தியாவுடன் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் 13 வது அரசியல் அமைப்பின்கீ;ழ் தீர்வு முன்வைக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் கூறியது
தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் உரிய காத்திரமான விடயங்களை அரசாங்கம் முன்வைக்கவில்லை
இதன் காரணமாக அந்த பேச்சுவார்த்தை இடையில் கைவிடப்பட்டுள்ளது
இதற்கிடையில் ஜனாதிபதியின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, இலங்கையின் புலிகள் அழிக்கப்பட்டனர். எனவே அங்கு அதிகார பரவலாக்கம் எதுவும் அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம், நாடாளுமன்ற தெரிவுக்குழுவை இனப்பிரச்சினை தீர்வுக்காக பரிந்துரைத்துள்ளது
எனினும் அதில் ஆளும் கூட்டணியை சேர்ந்த அதிக கட்சி உறுப்பினர்களே அங்கம் வகிக்கின்றனர்
இதனை தவிர வடக்குகிழக்கு உட்பட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இராணுவ மயத்திட்டங்களை முன்னெடுத்து செல்வதிலேயே இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்டி நிற்பதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு குற்றம் சுமத்தியுள்ளது
இலங்கையின் அதிகாரங்கள் ஜனாதிபதி, அவரின் சகோதரர்கள் மற்றும் இராணுவத்தினரிடமே தற்போது உள்ளதாகவும் சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு குறிப்பிட்டுள்ளது
//வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு லட்சம் முஸ்லிம்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை
//
என்ன வடக்கில் ஒரு இலட்சம் முஸ்லீம்கள் இருந்தார்களா! எப்ப தொடக்கம் புத்தளம் வடக்கானது??? புத்தளத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்களா???
ஒரு முஸ்லீம் இணையதன செய்தி சொல்கிறது. புத்தள முஸ்லீம்கள் திட்டமிட்டு வன்னியில் ரிசார்ட் பதியூதினால் குடியேற்றப்படுவதாக.
Tuesday, 13 September 2011அமைச்சர் றிஷாத் தனது நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டுமென சவால்
வன்னியில் உள்ள தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினராகி கைத்தொழில் அமைச்சராகியுள்ள றிஷாத் பதியுதீன் அண்மைக்கால நடவடிக்கைகள் எமக்குப் பெரிதும் கவலையளிப்பதாக அமைந்துள்ளது. தனது அரசியல் இருப்பிற்காக சமூகங்களுக்கிடையில் அமைச்சர் மோதலை உருவாக்க முயற்சிக்கின்றாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
மக்கள்தொகை அடிப்படையில் பெரும்பான்மையின சிங்கள மக்களால் 1970களில் பெருந்தோட்டப்பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பெருந்தோட்ட தமிழ்மக்கள் தங்களது உயிரைக் கையில்பிடித்துக்கொண்டு குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக வடக்கு-கிழக்கு பகுதிகளுக்கு வந்திருந்தனர். தங்களது கடின உழைப்பால் காடுகளை அழித்து தேயிலைத் தோட்டங்களாகவும் இறப்பர், தென்னந்தோப்புகளாகவும் மாற்றியதுடன், சந்தனம், கறுவா, மிளகு போன்ற வாசனை திரவியங்களின் மணங்கமிழ மலையகத்தை எழில்கொஞ்சும் பூமியாகவும் அந்நியச் செலவாணியை அள்ளித்தரும் சொர்க்கபூமியாகவும் மாற்றிய மக்கள், தங்களது உடமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு ஷொப்பிங் பேக்கில் (கேரிபேக்) கையில் கிடைத்ததை அள்ளிப்போட்டுக்கொண்டு தங்களுக்கு வடக்கு-கிழக்கே பாதுகாப்பானது என்ற எண்ணத்துடன் எம்மிடம் வந்து சேர்ந்தனர். அவ்வாறே வடக்கு-கிழக்கும் அவர்களை அன்புடன் அரவணைத்துக்கொண்டது.
வடக்கு-கிழக்கிற்கு வந்த மக்கள் வவுனியாவிலும் வன்னியின் ஏனைய பகுதிகளிலும் குடியேறினர். அவர்கள் குடியேறிய இடங்கள் அனைத்தும் பற்றைக்காடுகளாகவே இருந்தன. காடழித்து வளமாக்கி பலன் தருகையில் அதனைத் தட்டிப்பறிப்பதே தென்னிலங்கை பெரும்பான்மையினது வழக்கமாகவும் இருந்து வருகிறது. இப்பொழுது அந்தப்பணியை இஸ்லாமிய சகோதரர்களைத் தூண்டிவிட்டு அமைச்சர் மேற்கொள்ள முயற்சிக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
வவுனியா – மன்னார் வீதியில் வவுனியா தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட சோபாலபுளியங்குளத்தில் 1970ஆம் ஆண்டளவில் கையறுநிலையில் பெருந்தோட்டத் தமிழர்கள் குடியேறியுள்ளனர். தங்களது கையையும் உடல்வலிமையையும் மட்டுமே இயந்திரமாக்கி தங்களது கடின உழைப்பால் வன்னி நிலப்பரப்பிலும் தென்னந்தோட்டங்களையும் மா, பலா, தோடை போன்ற மரங்களையும் உருவாக்கி நெல்; மற்றும் உப உணவுப் பயிர்ச்செய்கையிலும் ஈடுபட்டு வந்தனர். மீண்டும் போர்ச்சூழல் இவர்களை வெளியேற்றியது.
காடழித்து குடியேறிய காலத்திலிருந்து தமது ஒவ்வொரு காணியிலும் தமது இருப்புக்கு அடையாளமாக சாட்சி சொல்லும்வகையில் வீரை, பாலை மரங்கள் சிலவற்றை அழிக்காமலே விட்டுவைத்துள்ளனர். ஏற்கனவே அயற்காணியில் இருந்த இஸ்லாமிய சகோதரர்களது வளவுகளில் ஒரு பிலாக்காய்ப் பிஞ்சோ விறகுச்சுள்ளியோ எடுக்காமல் அவர்களுக்கு விசுவாசமாய் இன்றுகூட இருந்து வருகின்றனர். இங்கு தொடர்ந்து வாழும் தமிழ் மக்களது குடும்பங்கள் பெருகிவிட்ட நிலையில் அதனைக் கருத்திற்கொள்ளாது இஸ்லாமிய சகோதரர்களது குடும்பங்கள் பெருகிவிட்டதைக் காரணம்காட்டி தமிழ் மக்களை அப்புறப்படுத்தி அந்தக்காணிகளை அபகரித்து இஸ்லாமிய சகோதரர்களைக் குடியேற்றும் முயற்சி மிகவும் கீழ்த்தரமான நடவடிக்கையாகும்.
இவ்வாறே, மன்னார் மாவட்டத்தில் நானாட்டான், சன்னார் போன்ற கிராமங்களிலும் அங்கு பெரும்பான்மையாக வசித்துவரும் தமிழ் மக்களது காணிகளை இஸ்லாமிய சகோதரர்களுக்கு பலாத்காரமாக வழங்க முற்படுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களும் மன்னார் மறைமாவட்ட ஆயரும் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இஸ்லாமிய சகோதரர்கள் உண்மையை உணர்ந்து நீதியாகச் செயற்பட்டனர். வன்னியைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய சகோதரர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதையே விரும்புகின்றனர் என்பதே உண்மை நிலையாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இங்கு வாழும் மக்கள் அனைவரையும் ஒரே இனம் என்ற கண்ணோட்டத்துடனேயே பார்க்கின்றது.
வவுனியா மாவட்டத்தில் இஸ்லாமிய மக்களிடம் சரிந்துவரும் தனது செல்வாக்கை நிலைநாட்ட இத்தகைய காணி அபகரிப்பு நடவடிக்கையை முன்னிலைப்படுத்தி தனது அரசியல் இலாபத்தைத் தேட எண்ணும் அமைச்சரின் செயற்பாட்டை இஸ்லாமிய சகோதரர்களும் நன்கு இனங்கண்டுள்ளனர். தற்பொழுது இடம்பெயர்ந்து சென்று பிற மாவட்டங்களில் பெருகியிருக்கும் இஸ்லாமிய மக்களை வன்னி மாவட்டத்தில் குடியேற்றி வாக்குச் சேகரிக்கும் அமைச்சரின் இத்தகைய மூன்றாந்தரச் செயற்பாட்டை, தனது அரசியல் இருப்பைக் காப்பாற்றிக்கொள்ள எடுக்கும் குறுகிய நோக்கங்கொண்ட நடவடிக்கையை இஸ்லாமிய மக்களே வெறுக்கின்றனர்.
கடும் யுத்தத்தின் விளைவாக உறவுகளைப் பறிகொடுத்து சொத்துக்களை இழந்து பெரும் மனவுளைச்சலுக்கு உள்ளாகியிருக்கும் எமது மக்கள் தற்பொழுது தன்னிறைவான அமைதியான வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில் சமூகங்களுக்கிடையில் முறுகலைத் தோற்றுவிக்கும், சமூகத்திற்கு ஒவ்வாத அனைத்துச் செயற்பாடுகளையும் நிறுத்த அமைச்சர் முன்வருவாரா? அவ்வாறெனின், சோபாலபுளியங்குளத்தில் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் உடன் நிறுத்தி தனது நம்பகத்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்று சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
Posted by யாழ் முஸ்லிம்
http://yarlmuslim.blogspot.com/search?updated-max=2011-09-13T13%3A25%3A00%2B02%3A00&max-results=10
வட பகுதில் இப்படி என்றல் கிழக்கு பகுதில் என்னத்த சொல்ல பாருங்கள்
கிழக்கு ஈழா மாகாண மட்டகளப்பு Sellam Theatre மங்காத திரைப்படம் http://www.youtube.com/watch?v=9c9yWPZQcdIசமீபத்தில் உலகெங்கும் வெளியாகி பட்டைகிளப்பி கொண்டிருக்கும் மங்காத்தா படத்திற்கு மட்டக்களப்பிலும் மவுசு குறையவில்லை, அஜித் படத்திற்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்
தல போல வருமா
பயங்கரவாதம் அழிக்கப்பட்டு போர் முடிஞ்சுதாம். அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டு மக்களுக்கு சுதந்திரம் வழங்கியாச்சாம் .மீழ் குடியேற்ரம் மங்களகரமாய் முடிஞ்சுதாம். கிறிஸ்பூதத்தை ராணுவத்தாலையும் கண்டுபிடிக்க முடியல்லையாம். அதால தமிழ்பிரதேசத்திலிருந்து ராணுவம் வாபஸ் வாங்காதாம். யாருக்காவது ஏதாவது புரியுதா?