இலங்கையில் வெலிவேரியவில் போராடிய சிங்கள மக்களின் மீது இனக்கொலை அரசு தாக்குதல் நடத்தி ஒராண்டுகள் கடந்துவிட்டன. வெலிவேரியாவில் கையுறை தயாரிக்கும் ஹேலிஸ் என்ற நிறுவனத்தின் உற்பத்தியால் குடிநீர் மாசடைவதாகவும் சுத்தமான குடிநீர் வேண்டும் என்றும் போராடிய மக்கள் மீது இலங்கை அரசு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதில் பலர் காயமடைந்தனர். சிலர் கொல்லப்பட்டன. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பல்வேறு வியாபார நிறுவனங்களின் உரிமையாளர். பல்தேசியப் பெரு நிறுவனங்களின் முகவர்.
வியாபாரிகளின் நலனுக்கான இலங்கை அரச பாசிஸ்டுக்கள் தம்மிக்க பெரேரா போன்ற ப;ல்தேசிய மாபியாக்களை ஒட்டச் சுரண்டுவதற்கான வழிகளைத் திறந்து விடுகின்றன.
இலங்கையின் அதி உயர் பணக்காரரான தம்மிக பெரேரா ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பருமாவார். ராஜபக்ச அரசால் போக்குவரத்து அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது பெருமைக்காக இப்பதவியில் இணைந்து கொண்ட தம்மிக்க பெரேரா தொழிலாளர்கள் குறித்து எந்த நடவடிக்கையும் முன்னெடுப்பதில்லை. இதுவரைக்கும் தனது அமைச்சு குறித்த எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.
தம்மிக பெரேராவை நீக்க வேண்டும் என ரெயில்வே தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. ரெயில்வே ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு வழங்குவதாக உறுதியளித்த செயலாளர், இதுவரை தீர்வு நிறைவேற்றப்படவில்லை. தம்மிக்க பெரேராவின் சேவை அமைச்சுக்கு தேவையில்லை என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொழிற்சங்கத்தினர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர். போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஒருநாள் கூட ஊடகங்களுக்கு முன்னால் வருவதில்லை.
அமைச்சு சம்பந்தமான விடயங்களை குறித்து அறிய செயலாளரை தொடர்பு கொள்ளவும் முடிவதில்லை என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம, தனது செயலாளர் இலங்கையில் உள்ள மிகப் பெரிய கோடிஸ்வரன் எனவும் அது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறியிருந்தார்.
Now only I am hearing about this multi national mafia.