Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அழிந்து போனது புலிகளோ வெற்றி கொண்டது அரசோ அல்ல! : இனியொரு

இனியொரு... by இனியொரு...
05/18/2009
in அரசியல்
0 0
7
Home அரசியல்
முள்ளி வாய்கால் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் வரலாறு காணாத மனிதப் படுகொலை ஒன்று நடைபெற்றிருக்கிறது. சிங்கள்ப் பேரினவாதம், அரச பாசிசம், பௌத்த அடிப்படைவாதம், இந்திய உளவுப்படை, சீன ஆயுதங்கள், அமரிக்க ஆதிக்கம் எல்லாம் ஒருங்கிணைந்து நந்திக் கடலை இரத்தக் கடலாக மாற்றிவிட்டிருக்கிறது. குழந்தகளின் பிணங்களையும், முதியோரின் மரண ஓலங்களையும் பிரபாகரனின் பிணத்திற்குள் மறைத்திருக்கிறன இந்த நாசகார சக்திகள். மனிதப் பிணங்களின் மேல் ஏறிநின்று பிரபாகரனின் பிணத்தைத் தேடுவதாக நாடகமாடிக்கொண்டிருக்கிறார்கள்.
தம்முடைய எதிர்காலம் இருண்டு போயிருப்பாதாகத் தெரியாத அப்பாவிச் சிங்கள மக்கள் இலங்கைத் தெருக்களிலே கூத்தாடிக்கொண்டிருக்கிறார்கள்.

பிரபாகரன் இறந்து போயிருக்கலாம், அல்லது இறந்து போனவரகச் சித்தரிக்கப்பட்டிருக்கலாம். இதுவரை எந்த சாட்சியும் இதற்கில்லை. ஆனால், மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொன்று போடப்படதற்கு சாட்சிகளாக இந்த அழிவைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லோரும் இன்னும் உயிரைக் காவிக்கொண்டு உலாவுகிறோம்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் செத்துப் போனாரா இல்லையா என்று பூசாண்டி காட்டிக்கொண்டே நாட்களை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கும் இலங்கை அரசு, செத்துப் போன அப்பாவிகளை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறது. சாட்சி இல்லாமலே மரணித்த மனிதர்களை மறைத்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசிற்குத் துணைபோகும் சர்வதேசமும்,அரசும், அரச ஆதரவுத் தமிழ்க் குழுக்களும் இறந்து போன மக்களைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை. தெற்காசியாவின் சன சந்தடியில்லாத ஒரு மூலையில் ஐம்பதாயிரம் அப்பாவிகள் சாட்சியின்றிக் கொன்று வீசப்பட்டனர் என்று என்றாவது ஒருநாள் ஒரு குழந்தை மனிதனாகிக் குரலெழுப்பும்.

இங்கு அழிந்து போனது புலிகளோ வெற்றி கொண்டது அரசோ அல்ல. மனிதம் அழிந்திருக்கிறது. மக்கள் தோற்று போயிருக்கிறார்கள்.

தமது சொந்த தேசத்தின் இன்னொரு மூலையில் பிணக்குவியல்கள் அனாதையாக எந்தத் தேசிய அடையாளமும் இழந்து சுத்தம் செய்யப்படுவதற்காக் காத்துக்கிடக்கும் போது, இந்த அப்பாவிகள் தாம் வெற்றி பெற்றுவிட்டதாக ஆனந்தக் கூத்தாடுகின்றனர்.

சர்வதேச நாசகார சக்திகள், இலங்கைப் பாசிச அரசுடன் இணைந்து, நன்கு திட்டமிடப்பட இராணுவ நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றி முடித்திருக்கின்றன. கொல்லப்பட்ட தமிழர்கள் இவர்களுக்கெல்லாம், போர்ப் பரிசோதனை கூடத்து விலங்குளாகவும், மகிந்த அரசின் பாசிசப் பசிக்கு விருந்தாகவும், தம்மை அர்ப்பணித்திருக்கிறார்கள்.

பௌத்த மதக் கொடியோடு அன்னிய தேசத்திலிருந்து இலங்கை வந்திறங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தான் வளர்த்தெடுத்த பாசிசத் தீயிற்கு எண்ணையூற்றியிருகிறார்.

தமனது உறவுகளின் தலைகளில் இரசாயனக் குண்டு விழும் போது அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்த பச்சைக் குழந்தைகளும், பட்டினி போடப்பட்டு சாகடிக்கப்பட தடை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகளும், இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களுக்காகக் கண்ணீர்வடிக்கும் தமிழக உறவுகளும், பேரின வாதத்தின் பிடியிலிருந்து தப்பியோடுவந்த தமிழ்ப் பேசும் மக்களும், தம்மை அறியாமலே அரசியற் தற்கொலை செய்து கொண்டிருக்கும் பெரும்பான்மைச் சிங்கள மக்களும் மகிந்த வளர்தெடுக்கும் பாசிசத்தை எங்காவது முட்புதருக்குள் என்றாவது ஒரு நாள் புதைத்து விடுவார்கள்.

அரச பயங்கரவதிகள் பாவித்த மரண ஆயுதங்களு, எரிகுண்டுகளும், கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் போருக்குப் பின்னால் பரிமாறப்பட்ட கோடிக்கணக்கான வியாபர ஒப்பந்தங்களும் மௌனமாய் மறைக்கப்பட்டிருக்கின்றன.

மருத்துவ மனைகள் மீதும், மக்கள் குடியிருப்புக்கள் மீதும் எரிகுண்டுகளைப் போட்டு அழித்துவிட்டு, வெற்றிக் களியாட்டம் நடாத்தும் இலங்கை அர்சசிற்கு இந்திய அரசு வாழ்த்துச் செய்தி அனுப்பிவைத்திருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருகிறது. மனிததாபிமானம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும் கூக்குரலிடும் மேற்குலகம் கண்துடைபிற்காகச் சில அறிக்கைகளை விடுத்துச் சமாளித்திருக்கிறது.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை தன்னை இனிமேலும் நம்ப வேண்டாம் என்று உலகின் ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆணித்தரமாகச் சொல்லிவைத்திருக்கிறது.

இவைகளையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கோடிக்கணக்காவர்கள் சாட்சியாக வாழ்ந்து கொண்டிக்கிறார்கள். இனிமேல் இவர்கள் யார் மீதும் நம்பிக்கை வைக்கப்போவதில்லை. சமாதானம், ஜனநாயகம், மனித உரிமை என்ற அழகான வார்த்தைகளோடு ஊலா வந்த சர்வதேச நாசகர சக்திகளெல்லாம் தங்களை மக்களுகு இனம் காட்டிவிட்டன. இனியொரு போராட்டம் இவர்களின் போலி வார்த்தைகளையும், கபட நாடகங்களையும் மீறி உருவாகும் என்பதற்கான அடித்தளமே இவர்கள் அம்பலப் பட்டுப் போயிருப்பது தான்.

 

 

 

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

பொய்ப்பிரசாரம் செய்தால் பிரபாகரனின் கதிதான் : இலங்கை அரசு எச்சரிக்கை

Comments 7

  1. ANKAYATPIRIYAN says:
    17 years ago

    கானல் நீரை தண்ணீரென நினைத்து இலங்கை அரசு குடிக்க நினைக்கின்றது.நா வரட்சிதான் மிஞ்சப் போகின்றது.கிரிபத் சாப்பிட்டவர்களுக்கு அவரளவில் இலாபமே.

  2. Sarvachitthan says:
    17 years ago

    ஐ.நா சபை உண்மையில் ஆண்டிகள் மடந்தான். அதனால் ‘ஒப்புக்கு ஒப்பாரி’ வைக்கத் தெரிந்தளவுக்கு உருப்படியாக எதனையும் செய்யும் திராணி கிடையாது என்பதை மீண்டும் ஒரு தடவை நிரூபியத்திருக்கிறது அவ்வளவுதான்.
    உலகத் தமிழர்கள் இனியும் உறக்கத்தில் இருப்பார்களேயானால் அவர்கள் ‘தமிழர்கள்’ என்று சொல்லிக்கொள்வதை நிறுத்திக் கொள்வது தமிழுக்கு கெளரவம் தரும் !

  3. Sooriyan says:
    17 years ago

    ஒரு தீர்க்கமான பார்வை.
    இன வக்கிரமற்ற நோக்கு.

    கட்டுரையாளருக்கு நன்றி.

    தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றாகவே பலியாகிவிட்ட ஒரு யுத்தம் முடிவிற்கு வந்து விட்டதாக சிலர் கனவு காண்கிறார்கள.

    அவர்களின் கனவுகள் பொய்ப்படும்.

    மனித உரிமைகள் என்றும் ஜனநாயகமென்றும் அதுவென்றும் இதுவென்றும் பினாத்தியவர்கள் தங்கள் மாயைகளிலிருந்து விடுபடவேண்டிய காலம் வந்துவிட்டது.

    யார் செய்தது சரி. யார் செய்தது பிழை என்று நீதித் தீர்ப்புகள் வழங்கும் நேரம் தாண்டிவிட்டது.
    எல்லோரும் பிழை இழைத்திருக்கிறார்கள்.

    இபபோ சுயமுனைப்பை விடுத்து அப்பாவிச் சனங்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் எல்லோரும் ஈடுபடவேண்டும் என்பதுதான் வேண்டுதல்.

  4. சுகிர்தா says:
    17 years ago

    // இங்கு அழிந்து போனது புலிகளோ வெற்றி கொண்டது அரசோ அல்ல. மனிதம் அழிந்திருக்கிறது. மக்கள் தோற்று போயிருக்கிறார்கள்

    சமாதானம், ஜனநாயகம், மனித உரிமை என்ற அழகான வார்த்தைகளோடு ஊலா வந்த சர்வதேச நாசகர சக்திகளெல்லாம் தங்களை மக்களுகு இனம் காட்டிவிட்டன //

    உண்ம, நல்ல பார்வை.

  5. pasupathi says:
    17 years ago

    இனியொரு தோழர்களின் அரசியல் பார்வை நேர்மையாக வெளிப்பட்டுள்ளது. இங்கு தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை வைத்து பிழைப்பு நடத்துவதே அரசியல் கட்சிகளின் குழுக்களின் தொழிலாக அமைந்துவிட்டது. எனவே ஈழத்தமிழர்கள் இனிமேலும் தமிழக இந்திய அரசியல்வாதிகளின் பேச்சுக்களை நம்பி பலியாகாதீர்கள். ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை அழித்தொழித்தது சீறிலங்கா சிங்கள அரசல்ல. இந்திய வல்லாதிக்க அரசுதான் என்பதை ஈழத்தமிழர்கள் உணரவேண்டும். இந்திய வல்லாதிக்க அரசையும் அதை நம்பி அரசியல் பிழைப்பு நடத்துவோரையும் நீங்கள் இனம் கண்டு அவர்களுக்கெதிரான போராட்டத்தை நடாத்துவதற்கூடாகவே ஈழத்தமிழர்களாகிய நீங்கள் உங்கள் லட்சியத்தை சென்றடைய முடியும். இன்று உங்களின் பிரதான எதிரி வல்லாதிக்க இந்திய அரசுதான்.

  6. Kulanathan says:
    17 years ago

    சுருங்கக் கூறின் தற்போதைய ஈழப்போரை இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களும் சேர்ந்து இயக்குகிறது என்பதை புரிந்து கொள்ளாமல் சில அதிகாரிகள், காங்கிரசின் சோனியா முதலான தனிநபர்கள் நடத்துவதாக கற்பித்துக் கொண்டு ஒரு வகையான லாபி வேலை செய்தால் போர்நிறுத் தத்தை சாதித்து விடலாம் என குறுக்குப் பாதையில் சென்றார்கள். இந்தியாவின் தேர்தல் முடிவுகளை வைத்து தப்பலாம் என நம்புமளவுக்கு புலிகள் அரசியல் ரீதியில் பலவீனமாக இருந்தார்கள். தமிழகத்திலோ விருப்பு வெறுப்பின்றி உண்மையைப் பேசும் நண்பர்களை அவர்கள் பெற்றிருக்கவில்லை.

    மறுபுறம் புலிகளை அழிப்பதற்கான விரிவான திட்டமும், கால அட்டவணையும், ஆயுதங்களும் இந்தியாவால் சிங்கள அரசுக்கு தரப்பட்டன. அதன்படி தேர்தலுக்கு முன்பு வரை புலிகளை பெருமளவு ஒடுக்குவது, முடிந்த பின் தலைமையை அழிப்பது என்ற திட்டம் இலங்கை ராணுவத்தால் கச்சிதமாக நிறைவேற்றப்பட்டது. இந்தியாவின் இந்த மேலாதிக்கத்தை அறிந்தததினாலேயே மேலை நாடுகள் ஒப்புக்கு ஈழப்பிரச்சினை குறித்து பேசின. அதுவும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் நெடிய போராட்டத்தினால்தான் அந்த ஒப்புக்கு சப்பாணி அறிக்கைகளும் வந்தன. மற்றபடி இந்த கண்டனங்களை ராஜபக்ஷே எதிர்கொண்ட முறையிலிருந்தே அதன் பின்னணியையும் நம்பகத் தன்மையைபயும் புரிந்து கொள்ளலாம். ஆனால் மேலைநாடுகள் நிச்சயமாக தலையிடுமென புலிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் மலைபோல நம்பினார்கள். அந்த அளவுக்கு அவர்களது உலக அரசியல் கண்ணோட்டமும், ஏகாதிபத்திய கட்டமைப்பில் ஒரு தேசிய இனம் விடுதலை அடைவது எவ்வளவு சிக்கலானது என்பன போன்ற அரசியல் பார்வையெல்லாம் புலிகளிடமோ, அவர்களுக்கு நல்லெண்ணத் தூதர்களாக செயல்பட்ட தமிழக அரசியல் தலைவர்களிடமோ இல்லை

    http://www.vinavu.com/2009/05/19/eelam-war-is-not-over/

  7. luxman says:
    17 years ago

    ஆரம்பத்தில் அடிமை வாழ்வு பின்
    அரசியல் வாழ்வு முடியாத போது ஆயுத வாழ்வு
    அடுத்தது என்ன?
    இனியாவது எதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
    நாம் எல்வோரும்….
    அன்புடன் லக்ஸ்மன்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In