பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கையை 35ஆக குறைக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்ததை அடுத்து தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் புதிய வேட்பாளர்கள் உற்சாகம் இழந்திருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலைமையில் கடந்த மாகாண சபைத் தேர்தலில் பல கோடி ரூபா பணத்தை செலவிட்ட துமிந்த சில்வா மற்றும் திலங்க சுமதிபால போன்றவர்கள் கூட இம்முறை பணத்தைச் செலவிட முன்வரவில்லையென்பது தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல கோடி ரூபா செலவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மாத்திரம் பெறுவது போதிய பலனளிப்பதாக அமையாது என பல புதிய வேட்பாளர்கள் கருதுகின்றனர்.
இந்தத் தகவல்களின் அடிப்படையில், இம்முறை பொதுத் தேர்தலுக்கு அதிகளவில் பணத்தைச் செலவிட்டு வருபவர் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச எனத் தெரியவந்துள்ளது.
விமல் வீரவங்ச இதுவரை 100 மில்லியன் ரூபா பணத்தை கொழும்பு மாவட்ட ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்காக செலவிட்டுள்ளார்.
“கடந்த மாகாண சபைத் தேர்தலில் பல கோடி ரூபா பணத்தை செலவிட்ட துமிந்த சில்வா மற்றும் திலங்க சுமதிபால போன்றவர்கள் கூட இம்முறை பணத்தைச் செலவிட முன்வரவில்லையென்பது தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.”
அதுசரி பல கோடி ரூபா செலவிட்டு அமைச்சர் பதவியை பெற்றாலும் எப்படி அப்பணத்தை திருப்பி எடுப்பார்கள்? இவர்களின் வருடாந்த ஊதியம் எவ்வளவு? இதை யாராவது கேட்கிறார்களா? மக்களின் வரிப்பணம் தானே பின் கதவால் அபிவிருத்தி என்ற பெயரிலிலும், ஒப்பந்தங்கள் மூலமாகவும் இவர்களிடம் போகிறது.
.
விமல் வீரவங்ச இதுவரை 100 மில்லியன் ரூபா பணத்தை கொழும்பு மாவட்ட ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்காக செலவிட்டுள்ளார் என்றால் இப்பணம் எங்கிருத்து வந்தது? இதை எப்படித் திரும்ப எடுக்கப்போகிறார்கள்?
சமதர்மம், பாட்டாளிகளின் குரல், சோஷலிசம் பேசியவர்களே இப்படியென்றால்??? அப்ப டக்கிளசு மாமாவும் வடக்கு வசனத்தின் பின் வசந்தமாக இருப்போரோ?
இதே நேரம் நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மூன்று பிரதான அரசியல் கட்சிகளும் இனவாதத்தைப் பரப்பி வருகின்றன என்றும் இதனால் சிறுபான்மை இன மக்கள் ஓரங்கட்டப்படுவதுடன் தமது உரிமைகளுக்காக மீண்டும் போராட வேண்டிய அபாய நிலை உருவாகப் போகின்றது கூறி வரும் இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன அவர்களும் (https://inioru.com/?p=11002) தமிழ்த் தேசியக் கூட்டணியிலிருந்து பிரிந்திருக்கும் சிவாஜிலிங்கம் குழுவான தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு என்ற தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்புடன் இணைந்து “மாற்று” என்ற கோதாவில் போட்டியிடவிருக்கும் நிலையில் இவர்களும் எப்படியும் பாராளுமன்ற கதிரைகளை அலங்கரிக்க முயல்கிறார்களே என்று தோன்றுகின்ற நிலையில் தமிழ்ப் பகுதிகளில் போட்டியிடும் “புதிய-ஜனநாயக கட்சி” இப் பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுவது வெறுமனே பாராளுமன்றப் பதவிகளை மட்டும் இலக்காகக் கொண்ட ஒரு விடயமல்ல என்றும் அதற்குமப்பால் இதுவரை தமிழ்த் தேசியத்தின் பேரால் முன்னெடுக்கப்பட்டு வந்த பழைமைவாத பிற்போக்கு ஆதிக்க அரசியலுக்குப் பதிலான மாற்று அரசியல் கலாச்சாரத்தை மக்கள் மத்தியில் கட்டியெழுப்பி முன் செல்வதற்கேயாகும் என்றும் கூறும் வேளையில் மக்கள் எந்த மாற்றுக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
மேலும் புதிய ஜனநாயக கட்சியினர், “எம்மைப் பொறுத்த வரையில் பாராளுமன்றப் பதவிகளைப் பெறுவதற்காக மட்டும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடமுடியாது. பாராளுமன்றப் பதவி அரசியலுக்கு அப்பால் மக்களை அரசியல்மயப்படுத்தி அந்த அரசியலின் ஊடாகத் தமது தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் புதிய மாற்று அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான ஒரு களமாக இத் தேர்தல் களத்தைப் பயன்படுத்துகின்றோம். இத்தகைய அரசியல் முன்னெடுப்பின் மூலம் எமக்குப் பாராளுமன்றப் பதவிகள் மக்களால் வழங்கப்பட்டால் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்களுக்கான போராட்டங்களையும் முன்னெடுப்போம். நாம் முன்வைக்கும் மாற்று அரசியல் என்பது வெறும் தமிழ்த் தேசியவாத முழக்கங்களையோ இனவாத, சாதிவாத, பிரதேசவாத குறுகிய கொள்கைகளையோ கொண்ட ஒன்றல்ல. இவற்றுக்குப் பதிலாக தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள், அரசாங்க தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களினதும் அடிப்படை வாழ்வுரிமைகளையும் வாழ்வாதாரங்களையும் உத்தரவாதப்படுத்தும் வகையிலான கொள்கைகளைக் கொண்ட மாற்று அரசியல் வேலைத்திட்டமாகவே இருக்கும். இவ் வேலைத்திட்டத்தில் இடதுசாரி ஜனநாயக முற்போக்கு தேசியவாத சக்திகள் ஐக்கியப்பட்டு முன்செல்வதை நாம் தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்”, (https://inioru.com/?p=11022) என்று கூறும் நிலையில் உணமையான ஜனநாயக முற்போக்கு கட்சிகளை இனம்கண்டு ஈழம் வாழ் மக்களிற்கு ஓர் உண்மையான, மக்கள் நலம் சார்ந்த maatrai வைத்து புதியதோர் மக்கள் eluchciyinoodaana அரசியல் செய்வார்களா?
ஒரு புறம் சிவாஜி.. மறுபுறம் பத்மினி… யாருக்கு ஒத்து இசைப்பது என்ற குழப்பத்தில் விஸ்வநாதன் -சாகரன்
இலங்கைத் தேர்தல் களம் துப்பாக்கி சூடற்ற ‘சூடு’ பிடித்துள்ளது. புலிகளினால் ‘கட்டி’ வைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நான்கு பிரதான பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கின்றது. தமிழ் அரசுக் கட்சி என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு (சம்மந்தர் குழு), அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு (கஜேந்திரன் குழு), தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு என்ற தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு (சிவாஜிலிங்கம் குழு), பொதுஜன ஐக்கிய முன்னணி(ஆதரவு) என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு (கிஷோர் குழு) என்பன அவையாகும். இன்னும் சிலர் பென்சனுடன் ஓய்வுபெற்று, ஒதுங்கியும் விட்டனர். வெளிநாடுகளில் வாழும் விஸ்வநாதனுக்கு தற்போது ஒரே குழப்பம். யாருடன் தான் தற்போது ஒத்து இசைப்பது என்று. டாலர்களை அனுப்பி அரசை எப்போதும் எதிர்த்துக் கொண்டு இருக்கச் சொல்வது. பாராளுமன்றத் தேர்தலில் யார் வெல்லப் போகின்றார்கள். இவர்களை வைத்து அரசியல் தீர்வை எட்டவிடாமல் எவ்வாறு தொடர்ந்தும் குழப்பம் விளைவிக்கலாம். இதன் மூலம் அவர் தான் வாழும் நாட்டின் விரும்பங்களை பூர்த்தி செய்ய முடியும். சரத் பொன்சேகாவால் முடியாமல் போனதை விசுவநாதன் மூலம் நடத்தி முடிக்க முயல்கின்றது மேற்குலகம்.
குழப்பங்கள் விளைவிக்கும் சிறந்த குழுவிற்கே டாலர் அனுப்ப வேண்டும் என்பதே விசுவநாதனின் விருப்பம். ஆனால் அது எந்தக் குழு என்ற இனம் காண்பதில் அவர் ரொம்பத்தான் குழம்பிப் போய் உள்ளார். ஒன்றா? இரண்டா? மொத்தம் நான்கு குழுக்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் குழப்பங்கள் விளைவிப்பதில் மகா நிபுணர்கள் என்பதை கடந்த காலங்களில் தமது செயற்பாடுகள் மூலம் நிரூபித்தவர்கள். அரசியல் தீர்வு ஏற்படாமல் குழப்பங்கள் தொடர்ந்தால்தானே தொடர்ந்தும் தமது உண்டியல் வேலைகளை வெளிநாடுகளில் செய்ய முடியும். நாடு செல்லும் எண்ணம் அற்ற இவர் நாடு செல்ல விரும்பும் புலம்பெயர் தமிழ் மக்களை பலிக்கடாவாக்க முடியும்.
இவற்றிற்கு மேலாக நீண்டகால நண்பன் ரணில் விக்கிரமசிங்க வேறு மண்ணெண்ணை மகேஸ்வரனின் துணைவி சகிதம் யாழிலும் ஏனைய தமிழ் பிரதேசங்களிலும் ஒருபுறம் போட்டியிடுகின்றனர். ரணில் – பிரபா உடன்படிக்கை மூலம் எஞ்சியிருந்த ஜனநாயக, முற்போக்கு, மாற்று அரசியல் அமைப்பு தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்களை கொன்ற குவிக்க அரசியல் அலுவலகம் அமைத்து பிஸ்டலுடன் காரியம் செய்ய கண்காணிப்பு குழுக்களை நோர்வே அனுசரணையுடன் அமைத்துக் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சி ரணிலை கைவிட முடியுமா? மறுபுறம் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் புலிகளின் தற்காலிக ‘தேசியத் தலைவர்’ ஆக வலம் வந்த பிரபாகரனின் நூல் கோவணத்தை உருவி அவரின் உடலில் (கறுப்பு) பட்டுக் கோவணத்தை கட்டிவிட்ட சரத்பொன்சேகாவும் களத்தில் தமிழ் பிரதேசம் எங்கும் வாக்கு கேட்டு நிற்கின்றார்.
விசுவநாதன் ‘ஒரு புறம் நாகம் மறுபுறம் வேடன்’ என்று பாட்டுக்கு இசையா அமைக்க முடியும். களத்தில் 4 + 2 பிரிவுகள் புலத்தில் பல பத்துப் பிரிவுகள். தனியொரு விசுவநாதன் என்ன செய்ய முடியும். என்ன பொட்டனா இருக்கின்றான் வெருட்டி காரியத்தை முடிக்க? அல்லது என்ன பிரபாகரனா இருக்கின்றான்? கொன்று விட்டு மாத்தையாவின் மனைவிக்கு வெள்ளைச் சேலை கொடுத்தனுப்பியது போல் செய்ய. எல்லாவற்றையும் தோண்டிப் புதைத்தல்லவா விட்டார்கள் முள்ளிவாய்காலில்..
இவ் கலாட்டாக்களுக்கு வெளியே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடாத்தி பின்பு இணையாமல் தவிர்த்தும், தள்ளியும் வைக்கப்பட்டு விட்டனர் சிலர். ஏன் இந்த குறுக்கோட்டம். நாற்காலிகளைப் பிடித்து மக்கள் சேவை செய்யத்தான் என்று விளக்கம் கூறுகின்றனர். ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்று சொல்லி இவர்களில் பலர் ‘தம்மக்கள்’ சேவையே மகேசன் சேவையென தம் மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியும், தங்கள் குடும்பங்களின் சுகபோகங்களை மட்டும் பெருக்கிக் கொண்டும் காலத்தை தள்ள முற்படுகின்றனர். எமது வரலாறு அப்படியானது. 60 வருடங்களாக நாம் கண்டுவரும் காட்சிகள் அவை.
காலத்துக்கு காலம் ‘50 இற்கு 50’இ ‘சமஷ்டி’இ ‘தனிநாடு’இ ‘மாவட்ட சபை’இ‘மாகாண சபை’ ‘தமிழ் தேசியம்’ ‘சுயநிர்ணய உரிமை’ என்று கோஷங்களை போட்டு தமிழ் மக்களை உசுப்பேத்தி ஏமாற்றி நாற்காலிகளைப் பிடித்ததுதான் மிச்சம். உருப்படியாக ஒன்றும் இவர்கள் சாதிக்கவில்லை. சாதிக்க முற்பட்டவர்களையும் இவர்கள் விட்டதில்லை. 1 ½ வருட வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையைத் தவிர. இந்த 60 வருடகாலம் பிற்போக்கு தமிழர் தலைமைகளால் ஒன்றையும் செய்ய முடியவில்லை.
மீண்டும் ‘நிரந்தரத் தீர்வு’ ‘சுயநிர்ணய உரிமை’ ‘இந்திய வடிவிலான சமஷ்டி’ ‘மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்று தேர்தல் களம் இறங்கும் இவர்கள், தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையை ஒருமித்த கோஷத்தில் உறுதியாகச் சொல்லும் ஒரு புரிந்துணர்வுக்கு வரமுடியாதவர்களாக உள்ளனர். தேர்தலின் பின்பு அமையப் போகும் அரசு தமிழர் தரப்பை அழைத்து அரசியல் தீர்வுபற்றி பேச முற்பட்டால் என்ன அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைத்து பேசுதல் என்பதற்குரிய வரைதல் யாரிடமாவது உண்டா? என்றால் அதுவும் இல்லை.
சரி அரசு ஒரு தீர்வை முன்வைத்தால் ஒருவர் ஆதரிக்க, இன்னொருவர் எதிர்க்க, மற்றவர் நிராகரிக்க, அடுத்தவர் வெளியேற போங்கள் ஒரே கலாட்டாவாகத்தான் போகின்றது. ‘தமிழர் அரசியலில் இது சகஜம் அப்பா’ என்று தமிழ் பேசும் மக்களும் தமது அடுத்த தேர்தல் வரை வாளாதிருத்தல் இன்னும் தொடருமாயின் கிழவன் செல்வநாயகத்தின் ‘தெய்வ வாக்கியம்’ ‘தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்பதைத்தான் மீண்டும் துணைக்கு அழைத்தல் வேண்டும். எத்தனை தடவைதான் இப் தெய்வ வாக்கியத்தை நாமும் துணைக்க அழைக்க முடியும்.
தமிழ் பேசும் மக்களே சற்ற நில்லுங்கள், நிதானியுங்கள், யோசியுங்கள், ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்தீர்கள் என்பதை ஆராயுங்கள். அதற்கு முதல் 1948 இல் இருந்து 2005 ம் ஆண்டு தேர்தல்வரை யாருக்கு என்னத்தை நம்பி வாக்கு போட்டீர்கள் என்று சிந்தியுங்கள். என்னத்தைச் சொல்லி அவர்கள் உங்களிடம் வாக்கு கேட்டார்கள்? அதில் ஏதாவதையாவது நிறைவேற்ற உருப்படியாக, ஆக்கபூர்வமாக செயற்பட்டார்களா? சிங்களத் தலைமை விடவில்லை என்று மட்டும் சும்மா கத்திக் கொண்டு இருக்காதீர்கள். கிடைத்த சந்தர்பங்களை தமிழ் தலைமைகள் சரியாக பயன்படுத்தினார்களா? அல்லது சந்தர்பங்களை ஏற்படுத்தும் சாணக்கியத்தை பாவித்தார்களா? சர்வ தேசம் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தி இலங்கை அரசை அம்பலப்படுத்தினீர்களா? மாறாக தமிழ் மக்கள் எல்லோரும் ‘பயங்கரவாதிகள்’ என்ற முத்திரையை குத்த முயன்று நீங்கள் மட்டும் தோற்றுப் போனீர்கள்.
ஏன் நிறைய காலம் பின்னோக்கி சென்று பார்பான். நடப்பு பாராளுமன்றக் காலகட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 22 எம்பிகளில் யாராவது ஒருவராவது தமது தொகுதிக்கு போய் இருக்கின்றார்களா?. அல்லது வருடத்திற்கு ஒரு எம்பிக்கு ஒதுக்கிய 1 கோடி ரூபாயில் எதாவது தமது தொகுதிக்காக செலவு செய்தார்களா? ஒரு பொதுசன மலசல கூடத்தை பொது இடங்களிலாவது கட்டினார்களா?. இலங்கை அரசு வழங்கிய இராஜதந்திர கடவுச்சீட்டில் வெளிநாட்டு உல்லாச சுற்றப் பயணங்களை மட்டும்தான் மேற்கொண்டனர். அங்கு தங்கள் உறவினர்களுடன் களிப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சில விமர்சனங்கள் இருந்தாலும் டக்ளஸ் தேவானந்தா என்ற ஒரு அமைச்சர் மாத்திரம் வடக்கில் நின்று தமது மக்களுக்கேனும் அவரால் முடிந்தவற்றை செய்தார். அதுவும் புலிகளின் பலத்த கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும். கூடவே கிழக்கில் இரா துரைரத்தினம் தனி ஒருவராக கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும் பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு சேவை செய்தார், செய்கின்றார். இவ்விடத்தில் பல விமர்சனங்கள் இருந்தாலும் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் சந்திரகாந்தனையும், அமைச்சர் முரளீதரனையும் நினைவு கூர்வதும் சாலப் பொருத்தமானதே. இவர்களால் முடியும் என்றால்; ஏன் அந்த 22 இனராலும் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. அவர்களுக்கு மக்களைப்பற்றி அக்கறை இல்லை என்பதே உண்மையான காரணம் ஆகும். தமது பதவி சுகங்களே இவர்களுக்கு முக்கியம். இவர்கள் மீண்டும் வாக்கு கேட்டு வருகின்றனர் நாற்காலிப் பதவிகளை பெற்று தங்களுக்காக மட்டும் வாழ்வதற்காக. இவர்களுக்கு ஒத்து இசைக்க புலம்பெயர் நாடுகளில் விசுவநாதன் இசை கோர்த்து கச்சேரிக்கு முஜ்தீபுக்கள் போடுகின்றார்.
இவர்களும், இவர்களின் மூதாதையரும் மக்களின் வாக்குகளால் தேர்தலில் வெற்றி பெற்றதும் தமது குடும்பம், தமது பிள்ளைகள், தனது நலன் என்று குறுகிய பிழைப்புவாதத்தை மட்டுமே தொடர்ந்தும் செய்தார்கள், செய்து வந்தார்கள். தங்கள் குடும்பங்களையும், உறவுகளையும் பாதுகாப்பாக வெளிநாடுகளில் வைத்துக் கொண்டு துப்பாக்கிப் போராட்டம் நடத்த தூண்டினார்கள். ஏழைக் குழந்தைகளை குண்டுகளை கட்டிக்கொண்டு வெடிக்க வைக்க உசுப்பேத்தி விட்டார்கள். முள்ளிவாய்காலில் மனிதக் கேடயங்களாக அப்பாவி மக்கள் மாட்டிக் கொண்ட போது போரை நிறுத்த புலிகளை வலியுறுத்தினார்களா? அல்லது மக்களை விடுவிக்க புலிகளையும் வற்புறுத்தினார்களா? இல்லவே இல்லையே மாறாக வெளிநாடுகளில் தங்கி சுகங்களை அனுபவித்துக் கொண்டு உசுப்பேத்தலை தொடர்ந்தும் செய்து கொண்டு இருந்தனர்.
இந்த கோஷ்டிகள் இன்று மீண்டும் பல குழுக்களாக சிதறி உங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர். இன்னுமா தமிழ் பேசும் மக்களே உறக்கத்தில் இருக்கின்றீர்கள்! விழித்தெழ மறுக்கின்றீர்கள்.. மிகுதியை உங்களிடம் விட்டு விடுகின்றோம். நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்ன செய்ய வேண்டும் என்று..!!!!
(சாகரன்) (பங்குனி 03, 2010)
நன்றி! – அதிரடி இணையம்.
கொழும்பில் தெரிகிற விளம்பரங்களில் இதுவரை அதிகம் தெரிகிறவர் போகொல்லாகம. துமிந்த சில்வா படங்கள் இல்லாத சுவர்கள் இல்லை. நல்ல பிள்ளைகள் யாரோ அவற்றை இடையிடை கிழித்துப் போடுகிறர்கள்.
வீரவன்ச இப்போது தான் தெரியத் தொடங்கியுள்ளார். மாகாண சபைத் தேர்தலுக்குப் பிறகு தன் தனிப்பட்ட நம்பகத் தன்மையை நிறுவும் தேவை அவருக்கு அதிகம்.
கொழும்பில் அதிக எண்ணிக்கையில் பொதுசன முன்னணி பிரபலங்கள் போட்டியிடுகின்றனர்.
செலவழிக்கத் தயக்கத்துக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
மகிந்த அமைச்சரவையைக் குறைப்பது பற்றிச் சொல்லலாம். அதைச் செய்வார் என்று எத்தனை பேர் நம்புவார்கள்?