Friday, May 1, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 04

இனியொரு... by இனியொரு...
02/16/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
55
Home பிரதான பதிவுகள் | Principle posts

புளொட் தலைமைத்துவத்தின் அராஜகப் போக்குகளுக்கு எதிராக அவ்வியக்கத்திலிருந்த பலர் செயற்பட முனைந்த வேளைஇ நீங்கள் தொடர்ந்தும் புளொட் அமைப்பில் இணைந்தே இருந்தீர்கள். இதற்கான அரசியல் நியாயங்கள் என்ன?

விஜய் – இலங்கை

UmaMaheswaranநண்பரே, உட்கட்சி போராட்டம் என்பது இயக்கத்தின் தவறான போக்குகளுக்கு எதிராக உள்ளிருந்து போராட்டம் நடாத்துவதே அன்றி , தவறுகளைக் கண்டு ஒதுங்கிச் விலகிச் சென்று வெளியிலிருந்து துண்டுப்பிரசுரங்கள் வெளியிடுவதல்ல என்றே நினைக்கின்றேன். உள்ளிருந்து நடத்தப்படும் உட்கட்சிப்போராட்டம் தோல்வி நிலையை அடையின் ; அப்போது இயக்கத்தைவிட்டு வெளியேறி மக்கள் மத்தியில் தவறுகளையும், தவறுக்குரிய இயக்கத்தையும் அம்பலப்படுத்துவதோடு, மக்களின் துணையோடு இயக்கத்திற்கு எதிரான போராட்டத்தை நடாத்தவேண்டும். இது இரண்டாம் கட்டம்.

அதே நேரம் ஒரு இயக்கத்தின் அனைத்து தவறான போக்குகளுக்கும் மூலமாகவும், துணையாகவும் இருந்துவிட்டு தங்களின் அதிகாரங்கள் செல்லுபடி அற்றதாக மாறும் தருணத்தில், இயக்கத்தைவிட்டு விலகிகச் சென்று இயக்கத்தின் அனைத்துத் தவறுகளையும் , தங்களைத் தவிர்ந்த ஏனைய ஒரு குறிப்பிட்ட நபர்களின் மீது சுமத்துவது உட்கட்சிப்போராட்டம் அல்ல. இது கடைந்தெடுத்த அயோக்கியத் தனம்.

நண்பரே, நாம் இவ் விடயம் பற்றி வெளிப்படையாகப் பேசுவோம்.

“புளொட் தலைமைத்துவத்தின் அராஜகப் போக்குகளுக்கு எதிராக அவ்வியக்கத்திலிருந்த பலர் செயற்பட முனைந்த வேளை” என்று நீங்கள் குறிப்பிடுவது நேசன், கண்ணாடிச் சந்திரன் இவர்களைக்கொண்ட தீப்பொறி குழுவினர் என நான் நினைக்கின்றேன்.

புளொட்டின் தவறுகளுக்கு எதிராக வெளியேறியவர்களாக காட்டிக் கொண்ட ‘’தீப்பொறி’’ குழுவில் இருந்த தோழர்கள் புளொட்டினுள் தாங்கள் நடாத்திய உட்கட்சிப் போராட்டம்தான் என்ன? ஒவ்வொரு காலகட்டதிலும் புளொட்டின் எல்லாத் PLOTEதவறுகளிலும் எல்லோருக்கும் பங்கு உண்டு – இவர்களுக்கும்கூட. தளத்தில் அதிகார மையம் இவர்கள் கையில் இருந்தபோது இவர்கள் என்ன செய்தார்கள்? இவர்களின் அதிகார துஸ்பிரயோகங்களும், நடத்தைகளும் தவறுகளின் வளர்ச்சியாய் ‘’பெருவீக்கம்’’ அடைந்ததையும் நாம் அறிவோம். உண்மையில் உட்கட்சிப்போராட்டத்தை நடாத்துவதற்கு எவ்வித தார்மீகமும் இவர்களுக்கு கிடையாது நண்பரே. இவர்கள் நேர்மையானவர்களாக இருந்திருப்பின் இவர்களின் பின்னால் பலபேர் வெளியேறி இருப்பார்கள். ஆனால் குறிப்பிட்ட நபர்களைவிட இவர்களின் பின்னால் யாருமே செல்லவில்லை.

அத்தோடு மக்களுக்கு பொறுப்பு கூறவேண்டிய கடமைப்பாடும் அவர்களுக்கு இருக்கவில்லை. எங்களுக்கு கடமைப்பாடும், பொறுப்புணாச்சியும் இருந்தது. குறிப்பாக எனக்கு அது அறமாகவும் -கடமையாகவும் இருந்தது. வடகிழக்கில் என் கால்பதியாக் கிராமங்கள் மிகக் குறைவென்றே கூறுவேன். ஒவ்வொரு கிராம மக்களிடமும், தோழர்களிடமும் புளொட்டைப் பற்றிய நம்பிக்கைகளையும், மதிப்பீடுகளையும் நான் விதைத்துள்ளேன். நூற்றுக்கணக்கான தோழர்கள் பின்தளம் சென்றார்கள். என் கிராமத்திலிருந்து மாத்திரம் சுமார் 90 பேர் பின்தளப் பயிற்சிக்காக சென்றார்கள். இவர்கள் எல்லோருக்கும் பொறுப்புச் சொல்லவேண்டிய தார்மீகக் கடமை எனக்கு இருந்தது. தவறுகளைக் கண்டு இயக்கத்தைவிட்டு ஓதுங்கவோ, ஓடவோ என்னால் முடியாது. புளொட்டின் உட்கட்சிப்போராட்டத்திற்கு ஊடாக மாற்றங்களை கொண்டுவரமுடியுமென நம்பினேன். இதனாலேயே தளத்திலிருந்த அனைத்து தோழர்களோடும் சேர்ந்து உட்கட்சிப்போராட்டத்தை தள மாநாட்டை நடாத்தினோம்.

1986 பெப்ரவரி மாதம் கந்தரோடையில் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக மாநாடு நடைபெற்றது. வடகிழக்கிலிருந்து முக்கியமான அனைத்து தோழர்களும் கலந்துகொண்டார்கள். விவாதங்களும், உரையாடல்களும் மிக ஆரோக்கியமாக நடந்தன. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு புரட்சிகர அரசியல் ஸ்தாபனத்திற்குரிய அமைப்பு வடிவத்தைப் பெறுவதற்கான அடிப்படையை உருவாக்குவதில் மாநாடு வெற்றிபெற்றது என்றே கூறவேண்டும். தனிநபர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக, அராஐகத்திற்கு எதிராக மாநாடு மிகக் கடுமையான கண்டனங்களையும், அதற்கெதிரான செயல் திட்டங்களையும் வகுத்தது. உண்மையிலேயே தோழர்கள் மீதும், மக்கள் மீதும், விடுதலை மீதும் நம்பிக்கை வைத்திருந்தால் தீப்பொறி குழுவினர் இந்த மாநாட்டில் பங்குபற்றியிருப்பார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் அதுவல்லவே. அதிகாரப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியே அவர்களை விலக வைத்தது. வேறொன்றும்மல்ல.

இயக்கங்களால் பல வங்கிகள் கொள்ளையடிக்கப்படன. ஆனால் நீங்கள் எல்லோரும் கற்றன் நசினல் வங்கி கொள்ளையை மாத்திரம் கதைப்பதற்கு காரணம் என்ன? இந்தக் கொள்ளைக்கும் றயாகரனுக்கும் என்ன தொடர்பு ?.

குமார்

rayakaranஇலங்கையில் நடைபெற்ற வங்கிக் கொள்ளைகளில் மிகப் பெரிய பெறுமதியுடைய வங்கிக் கொள்ளை ஹற்றன் நஷனல் வங்கிக் கொள்ளையாகும். அன்றைய நிலையில் சுமார் இருபது கோடி பெறுமதியான நகைகளும் , பணமும் கொண்டதாக இது இருந்தது. இதில் 75 வீதமானவை தங்க நகைகள் ஆகும். இக் கொள்ளையைச் செய்தது மிகச் சிறிய இயக்கமான என்.எல்.எப் .ரி ஆகும். இக் கொள்ளையின் பின் இவ் இயக்கம் பல்வேறுகாரணங்களால் இயங்க முடியாமல் போயிற்று. இதனால் இவ் நகைகளும் பணமும் என்னவாயிற்று என்ற கேள்வி பலரிடமும் இருந்தது.அது இன்றுவரை தொடர்கிறது. இதனாலேயே இவ் வங்கிக் கொள்ளை பற்றிய உரையாடல்- கேள்விகள்- சந்தேகங்கள் பலராலும் எழுப்பப்படுகிறது.

இனி இரயாகரனுக்கும் இவ் வங்கிக் கொள்ளைக்குமான தொடர்பு பற்றி பார்ப்போம்.

நான் பிரான்ஸ் வந்ததன் பின்பே எனக்கு இரயாகரனுடனான தொடர்பு ஏற்பட்டது. இக் காலங்களில் இரயாகரன் பற்றியும், இவ் வங்கி கொள்ளையில் எடுக்கப்பட்ட நகைகள், பணங்கள் தொடர்பாக பல்வேறு செய்திகள் என்னை வந்தடைந்தன. இவற்றை இரயாகரனின் மிக நெருங்கிய உறவினர்களும், என்.எல்.எப் .ரி தோழர்களும், நண்பர்களுமே தெரிவித்தார்கள். இது பற்றி இரயாகரனிடம் வினவிய போது இவ் நகைகளுக்கும், பணத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் ; தன்மீது கொண்ட கோபத்தினால் இவ்வாறான வதந்திகள் வருவதாகவும் சொன்னார். அத்தோடு நகைகளும், பணமும் ஐயர் என்பவரிடம் (ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் எழுதிய கணேசையர்) பத்திரமாக இருப்பதாகவும், அவரே இவற்றிற்கு பொறுப்பென்றும் கூறினார். இக் காலங்களில் ஐயரோடு எனக்கு எவ்வித தொடர்பும் இருக்கவில்லை.

iyarஇதன் பின் காலப்போக்கில் இரயாகரனை நோக்கி இக் குற்றச்சாட்டுக்கள் ஆதார பூர்வமாக சிலபேரால் முன் வைக்கப்பட்டபோது ; இரயாகரன் வங்கிக் கொள்ளைப் பணத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் போராட்டத்திற்கு செலவு செய்ததாக எழுதினார். உண்மையில் இது எனக்கு அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் கொடுத்தது. இது உண்மைக்கு புறம்பான செய்தியென்று பல்கலைக்கழக போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமான மாணவர்களும் குறிப்பிட்டார்கள்.  இதன் பின் ஐயரோடு எனக்கு தொடர்பு ஏற்பட்டது. ஐயரிடம் இவ் வங்கி கொள்ளை நகைகள், பணங்கள் பற்றி விசாரித்தேன். தனக்கும் இவற்றிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை   என்றும் ; தீப்பொறி குழுவினருக்கு கொடுப்பதற்காக இரயாகரனிடமிருந்து ஒரு கோர்லிக்ஸ் போத்தல் அளவு கொண்ட நகைகளையே தான் பெற்றுக் கொண்டதாகவும், அவற்றை தீப்பொறி குழுவினருக்கு கொடுத்ததாகவும் கூறினார்.

ஐயரோடு எனக்கு நெருங்கிய உறவு  இல்லை. ஈழப்போராட்டத்தின் எனது பதிவுகள் ஊடாகவும், அவரோடு உரையாடியதிலிருந்தும் அவர் உண்மை சொல்பவராகவே நான் கருதுகின்றேன்.

அதே நேரம் வங்கிப்பணம், நகை தொடர்பாக வெளிவரும் செய்திகளை நாம் ஊதாசினம் செய்துவிட முடியாதும் உள்ளது. உதாரணமாக இரயாகரன் இவற்றை பிரான்ஸ், இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தன் நெருங்கிய சகாக்களின் மூலம் வர்த்தக முயற்சிகளில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், தோழர் செந்திவேல் அவர்களின் புதிய ஜனநாயக கட்சிக்கும், குமார் குணரத்தினத்தின் சமஉரிமை இயக்கத்திற்கும் சிறிய தொகைப் பணம் கொடுக்கப்பட்டதாக இரயாகரன் பக்கதிலிருந்து இப்போது சொல்லப்படுகிறது. இவ் கட்சிகளுக்குsenthilvel கொடுக்கப்பட்டது உண்மையாயின் இது மிகவும் வரவேற்கப் படவேண்டியதொன்று. மக்களின் பணம், நகை போன்ற சொத்துக்கள் தனிநபர்களின் வாழ்க்கைக்கு பயன்படுவதைவிட பொதுவிடயங்களுக்கு, மக்கள் நலன்களுக்கு பயன்படுவது நல்லதே. அப்படியாயின் இரயாகரன் வெளிப்படையாக இதனை மக்கள் மத்தியில் வைக்கவேண்டும்.

அப்சல் குருவின் மரணதண்டனையை எதிர்க்கும் பலர் ( நீங்கள் உட்பட) பேரறிவாளன், முருகன், நளினி மீது சுமத்தப்பட்ட மரணதண்டனையை ஏன் எதிர்ப்பதில்லை. அவர்கள் தமிழ் உணர்வாளர்கள் என்பதாலும் தமிழ்ஈழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்பதினாலுமா ?

உமாபதி

என் தொடர்பான உங்களின் அபிப்பிராயத்தை முன்வைத்தமைக்கு நன்றி நண்பரே. ஆனால் அது தவறானது . நளினி ,பேரறிவாளன், முருகன் போன்றவர்களின் மரணதண்டனையோடு, உலகத்திலுள்ள அனைத்து மரணதண்டனைகளுக்கு எதிராகவும் என் கருத்துக்களை தொடர்ச்சியாக நான் பதிவு செய்துவந்துள்ளேன். தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் பற்றிய என் விமர்சனங்களின் அடிப்படையை வைத்தே என் தொடர்பான இந்த அபிப்பிராயத்திற்கு நீங்கள் வருவதாக நான் நினைக்கின்றேன்.

afzal-guruநண்பரே, மரண தண்டனையை , மனித உரிமைகளோடு தொடர்புபடுத்தியே நான் பார்க்கின்றேன். ‘உயிர்வாழ்தல்’ என்பது மிகவும் அடிப்படையான மனித உரிமையாகும். மரணதண்டனை, ’’பழிக்குப் பழி’’ என்ற நீதிவழங்களின் ஓரங்கமாக இருப்பது மனித குலத்திற்கு அருவருப்பானதும் வேதனையானதுமாகும். சட்டமானது ஒருவரின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதத்தை வழங்கவேண்டுமேயன்றி, மாறாக எந்தச் சூழலிலும் உயிரைப்பறிப்பதற்கு துணை நிற்க முடியாது. இது மனித உரிமைகளுக்கு முரணாணது. இதனாலேயே அனைத்து மரண தண்டனைகளையும், படுகொலைகளையும் நான் எதிர்த்தும், கண்டித்தும் வந்துள்ளேன். இதன் அடிப்படையிலேயே புலிகள் பற்றிய என் விமர்சனங்களும், கருத்துக்களும் அமையப்பெறுகின்றன.

இன்று தமிழ் நாட்டில் நளினி ,பேரறிவாளன், முருகன் ஆகியோரின் மரணதண்டனைக்கு எதிராக குரல்கொடுக்கும் கோபாலசாமி ,நெடுமாறன், இராமதாஸ், திருமாவளவன், சீமான் போன்றவர்களின் மனித உணர்வுகளை நான் மதிக்கின்றேன். அதற்கு என் ஆதரவும் உண்டு. அதே நேரம் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட, மரணதண்டனை விதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொது மக்கள், பெண்கள், குழந்தைகள், புத்திஜீவிகள், படைப்பாளிகள், மனித உரிமைவாதிகள், இடதுசாரிகள் ,ஜனநாயக சக்திகள், ஊடகவியலாளர்கள் இவர்களைப்பற்றி இந்த மனிதர்கள் வாய் திறக்காமல் இருந்ததன்- இருப்பதன் காரணம் என்ன?

உண்மையிலேயே மரண தண்டனைக்கு எதிராக நேர்மையாக போராடுபவர்களாக, குரல் கொடுப்பவர்களாக இவர்கள் இருந்திருப்பார்களாயின் புலிகளின் மரணதண்டனைகளுக்கும், படுகொலைகளுக்கும் எதிராக இவர்கள் குரல்கொடுத்திருப்பார்கள். ஆனால் யதார்த்தம் அப்படியல்ல. இவர்கள் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளையும், மரணதண்டனைகளையும் சித்திரவதைகளையும், மனித உரிமை மீறல்களையும் மெளனமாக வரவேற்றவர்கள்- கொண்டாடியவர்கள். பல தருணங்களில் அவற்றிற்கு நியாயம் கற்பித்தவர்கள்.

இவர்கள் புலிகளைவிட ஆபத்தானவர்கள் -கொடியவர்கள். இவர்கள் நளினி, பேரறிவாளன் ,முருகன் போன்றவர்களின் மரணதண்டனையை எதிர்ப்பதற்கு எவ்வித தார்மீகமும் அற்ற பச்சை வியாபாரிகள். இதனை நீங்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். வெறுமனவே எங்களை குற்றம் சாட்டுவதனால் இந்த அயோக்கியர்கள் புனிதர்களாகிவிடப்போவதில்லை.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஆடு நனைவாதாக ஓநாய்கள் அழுகின்றன

ஆடு நனைவாதாக ஓநாய்கள் அழுகின்றன

Comments 55

  1. P.V.Sri Rangan says:
    13 years ago

    முக நூல் உரையாடலை,இங்கே அவசியம் கருதிப் பிரசுரஞ் செய்யும்படி இனியொரு ஆசிரியர் குழுவை வேண்டிக்கொள்கிறேன்!

    // Sriharan Sivasingarajah : >>பொய்யையும் புரட்டையும் புனைந்து எழுதுவதற்கு அசோக், சிறிரங்கன் உங்களெல்லோருக்கும் ஒரு அளவுகணக்கே கிடையாதோ? << //
    http://www.facebook.com/srirangan.vijayaratnam/posts/155344937955484?comment_id=398907&notif_t=share_comment

    Devakumar Swaminathan: // சிறிரங்கன், இரயாகரனின் முகத்தை மட்டுமல்ல இப்ப ஐயரின் முகத்தையும் கெடுக்கிறீர். 🙁 ….. பலர் தாங்கள் என்.எல்.எவ்.ரி யில் இருந்ததாக 'ஞாபகப் புத்தகம்' எழுதுகிறார்கள் (இது ஐயரைக் குறித்ததல்ல!). இப்படி இருக்கிறது உலகம். நான் அறிந்த வரையில் அவ்வியக்கததில் இருந்தவர்கள் யாரும் இப்பபழியைப் போட்டதாக அறியவில்லை! பி.கு: இரயா அமைப்பை விட்டு விலகிய பின்னும் அமைப்பு சிறிது காலம் இயங்கியது…. (நீர் நோண்டினாலும் எழுதமாடடேன். நீர் எதை எதிர்பதாகச் சொல்கிறீரோ அதையே செய்கிறீர் எனறு நினைக்கிறேன்) 🙁 🙁 சிறீரஙகன்! இது அழகல்ல என்று நினைக்கிறேன். யோசியும். பிறகு, உமது இஷ்டமும் சுதந்திரமும்….// http://www.facebook.com/devakumar.swaminathan/posts/490426910993149

    வாங்க,சிறிகரன்m Devakumar Swaminathan இது குறித்து நிறைய விவாதித்தாச்சு!அதுபோலவே,இரயாகரனும் தனக்கேற்பப் பதிலளித்திருக்கிறார்
    .
    என்றபோதும்,கற்றன் நஷனல் வங்கிக்குள் கொள்ளையடிக்கப்பட்ட யாழ்ப்பாண மக்களது பல கோடிகள் பெறுமதியான சொத்துக்கள்(நகையாபரணங்கள்-பணம் முதலியவை) குறித்துக் கேள்வி கேட்பது ஒவ்வொருவரதும் கடமை.

    இதுகுறித்துச் சம்பந்தப்பட்டவர்-குற்றஞ் சாட்டப்படுபவர் தன்னை நிரபராதியென நிரூபித்தால் இதன் "தர்க்கம்-குதர்க்கம்" அடிபட்டுப்போவது மட்டுமல்லக் கூடவே, அவர்-சம்பந்தப்பட்டவர்-குற்றஞ்சாட்டப்பட்டவர்,தன்மீது "பழி" சுமத்துபவர்களைக் குறித்துக் கோட்டுக்கே அழைக்க முடியும்.

    கற்றன் நஷனல் வங்கிக்கொள்ளைப் பண மோசடி, அதுள் சம்பந்தப்பட்ட இரயாகரனை அவமரியாதை செய்வதென்று இரயாகரன்கருதுமிடத்தில்-சந்தர்ப்பத்துள் (குற்றஞ்செய்யாத பட்சத்துள்) தனக்கேற்படும்"மான நஷ்ட்டவீடு" கோரமுடியும்.

    இதைச் செய்யும்படி, பல தடவைகள் இரயாகரனுக்குச் சொல்லியாச்சு!

    இப்போது,நீங்கள் வேறு… இதுள் நுழைவதால்,உங்கள் மூலமாகவும் இந்தக் கோரிக்கையை எறிகிறோம்.

    இரயாகரன் அதைச் செய்யவேண்டும்.

    கோட்டில் மான நஷ்ட்ட வழக்கை நம்மீது செய்வரென நம்புகிறேன்.அவர் ,அதைச் செய்வதே தன்னை நியாயப்படுத்தும் ஒரே வழி.அங்கே,அனைத்தையும் விசாரிப்பதில் தன்னை நியாயவாதியென அவர் ,உலகுக்குப் பிரகடனப்படுத்த முடியும்.
    இரயாகரன் ஒரு உத்தமமான புரட்சிகர மக்கள் போராளியானால் இதைச் செய்தே ஆகவேண்டும்.

    இதுள்,நான் எந்தக் கோட்டுக்கும் ஆஜராகிறேன்.

    ஸ்ரீரங்கன்
    16.02.2013

  2. மதன் says:
    13 years ago

    வங்கியில் கொள்ளையிட்ட பணம் பிழையான தொகை.

    NLFT கொள்ளையிட்ட பின்னர் மிகுதியாக இருந்த அரைவாசிக்கு மேலான லொக்கர்களை பாதுகாப்பான இடத்திற்கு வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டதும் அதனை EPRLF தோழர்களள் கடத்தி சென்றார்கள். அன்றைய செய்தித்தாள்களில் வந்த செய்தி இரண்டு கொள்ளையும் சேர்த்து ஜந்து கொடிகள் வரை இருக்கலாம் என்பதே. நீங்கள் எங்கிருந்து இருபது கோடிகளை அறிந்தீர்கள்

  3. ஓணான் says:
    13 years ago

    முதல் கொள்ளை திண்ணைவேலி  அண்ணளவாக 80 லட்சம்,கிளிநொச்சி 1 கோடியிலிருந்து 2 கோடி வரை,காத்தான்குடி 8 கோடியிலிருந்து 9 கோடி வரை  ( மிகப்பெரிய கொள்ளை) கற்றன் நைசினல் 5 கோடியிலிருந்து 6 கோடி வரை  நிக்கவரெட்டிய 1 கோடியிலிருந்து 2 கோடிவரை.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Throwing the baby out with the bathwater Of the original five none are alive. Three from Kalviyankadu and Two from Valvetituai. Sengunthar and Karaiyar.

  4. அசோக் says:
    13 years ago

    அன்றைய காலத்தில் கொள்ளையின் பெறுமதி 20 கோடி என்றே என.எல்.எப.ரி தோழர்களினால் சொல்லப்பட்டது. சமீபத்தில் முன்னாள் என்.எல்.எப்.ரி யைச் சேர்ந்த ரவிஅருணாசலம் எழுதும் தொடர் ஒன்றில் இவ் வங்கிக் கொள்ளையின் பெறுமதி 20 கோடிக்கு மேல் என குறிப்பிட்டுள்ளார். http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=11&contentid=c2f69042-02d8-410e-b622-8312b6a9ff02

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      N.L.F.T. that new to me. I was in USA from 1981 to 1995. I am dding VPOS – Dr. Velupillai Puvanesarajah and Others. Rest on Facebook.

  5. thevan says:
    13 years ago

    தோழர் செந்திவேல் அவர்களின் புதிய ஜனநாயக கட்சிக்கும், குமார் குணரத்தினத்தின் சமஉரிமை இயக்கத்திற்கும் சிறிய தொகைப் பணம் கொடுக்கப்பட்டதாக இரயாகரன் பக்கதிலிருந்து இப்போது சொல்லப்படுகிறது. இவ் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டது உண்மையாயின் இது மிகவும் வரவேற்கப் படவேண்டியதொன்று.//////

    சமஉரிமை இயக்கம் வரவேற்கப் படவேண்டியதொன்று என்று அசோக் அறிவித்துள்ளார். .

    .
    and from அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 02

    “””தாய்கட்சியான ஜேவிபியிலிருந்து அதிகாரப்போட்டியின் காரணமாகப் பிரிந்து, அதே அரசியலோடு தமிழ்மக்களைக் கவரும் வண்ணம் சில “தயாரிப்பு” களுடன் உருவானவர்கள்தான் இவர்கள். இவர்களின் அடிப்படை நோக்கமே பாரளுமன்ற கதிரைகளை கைப்பற்றுவதே அன்றி வேறொன்றும் இல்லை.”””

    “”என்னிடம் இவர்கள் பற்றி சில சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாதாகவுள்ளது”” என்றும் அசோக் அறிவித்துள்ளார்.

    .

    .

    குழப்பமாயிருக்கிறது அசோக்!.சமஉரிமை இயக்கம்(ச உ இ )வரவேற்கப் படவேண்டியதொன்று ஆனால் முன்னிலை சோஷலிச கட்சியை வரவேற்க முடியாது என்று கருதுகிறீரா ?

    .

    .அல்லது ச உ இ யும் மு சோ க யும் வரவேற்கப் படவேண்டியவை என்று கருதுகிறீரா ?

    .

    .உங்கள் பதிலை தொடர்ந்து சில கேள்விகள் பின்வரும் கருத்துகளிலும் கேட்கவுள்ளேன்.

    ”

    மக்களின் பணம், நகை போன்ற சொத்துக்கள் தனிநபர்களின் வாழ்க்கைக்கு பயன்படுவதைவிட பொதுவிடயங்களுக்கு, மக்கள் நலன்களுக்கு பயன்படுவது நல்லதே”.

    • rAgu says:
      13 years ago

      தேவன்,
      மக்களின் மிகப்பெரும் சொத்து சில தனி நபர்களின் கைகளில் ஜனநாயக வாதிகளை அழிக்கவும் சீர்குலைப்பு வேலைகளை செய்யவும் பயன்பட்டிருக்கிறது. இது பற்றி வாய் திறக்கக் கூட வக்கற்ற உங்களைப் போன்றவர்கள் அதனை மூடி மறைத்து வேறு விடயங்களில் கைவைக்கிறீர்கள். உங்களுக்கே தெரியும் இருந்தாலும் மக்களின் பணம் எதாவது ஒரு அரசியல் வேலைகளுக்குப் பயன்பட்டால் அது எதிர்கொள்ளப்படலாம். ஆனால் அதுவே சமூகவிரோதிகளின் கைகளில் முடங்கினால் ஆபது என்று.
      செந்தில் வேல் ஓடும், குமார் மாத்தையா ஒடும் முரண்பாடு இருக்கலாம் மக்கள் பணம் அங்கு பயன்படுத்தபடுகிரது என்று வந்தாலே ஒரு பெரிய விடயம். அந்த பணத்தை வைத்து ஜனநாயக வாதிகளை அழிப்பதை விட வெளிக்கு வந்தால் சுலபமாக எதிர்கொள்ளலாம்.
      நீவிர் அது பற்றியெல்லாம் கதைப்பதற்கு முன்வரமாட்டீர்கள். உங்களுக்கு புலம் பெயர் நாடுகளில் அரசியல் நடத்தி யாவாரம் செய்ய ரயாகரன் பொன்ற தாதாக்களுடன் ஒட்டிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. இவ்வாறான தாதாக்கள் தான் இன்று புலம் பெயர் நாடுகளில் நேசன் போன்ற பல அரச ஆதரவாளர்களின் பாதுகாவலர்கள். மொள்ளைமாரிகளும் முடிச்சவிக்களும் இன்று மக்களை பற்றி கதைக்கிறார்கள். நீங்கள் அவர்களோடு ஒட்ட்டிக்கொண்டால் தான் உங்களுக்கும் பாதுகாப்பு.
      உங்களுக்கு ரயாகரன் குழுவோடு தொடர்பிருந்தால் மக்கள் பணத்தின் கணக்கையும் ஒருபேப்பர் துண்டில் எழுதி இன்ட நெட்டில் போட சொல்லுங்கள்.
      பிறகு மிச்ச பிரச்சனைகளை கதைப்பம்.

      • thevan says:
        13 years ago

        rAgu!!!சமஉரிமை இயக்கம்(ச உ இ )வரவேற்கப் படவேண்டியதொன்று ஆனால் முன்னிலை சோஷலிச கட்சியை வரவேற்க முடியாது என்று கருதுகிறீரா ?

        .

        .அல்லது ச உ இ யும் மு சோ க யும் வரவேற்கப் படவேண்டியவை என்று கருதுகிறீரா ?

        .
        .

        .

        மக்களின் பணம் எதாவது ஒரு அரசியல் வேலைகளுக்கு ச உ இ தாலோ மு சோ க யாலோ பயன்பட்டால் வரவேற்கப் படவேண்டும் என்று கருதுகிறீரா ?
        . .
        .

        .
        “”அதுவே சமூகவிரோதிகளின் கைகளில் முடங்கினால் ஆபத்து “”.

        100% உடன்படுகிறேன்.
        .
        .

        .

        “மக்களின் பணம் எதாவது ஒரு அரசியல் வேலைகளுக்குப் பயன்பட்டால்”” எதாவது ஒரு அரசியல் எனபதில் எனக்கு உடன்பாடு இல்லை.இதுவே என் கேள்வி அசோக்கிடம்.புரிந்து கொள்ளுங்கள்..
        .

        .முத்திரைகளையும் பட்டங்களையும் சேமித்து வையுங்கள் உதவும் பின்பு.

    • Maran says:
      13 years ago

      இந்த சந்தர்பத்தில் ஐயர், தீப்பொறி இயக்கத்தினர், என்.எல்.எப்.ரி இன் உறுப்பினர்கள், பிரமகுமார், செந்தில்வேல் போன்றவர்கள் வாய் திறக்கவேண்டும். நீங்கள் எல்லாருமே மக்களுக்காக போராட வெளிக்கிட்டவர்கள் என்று சொல்வதில் அருத்தம் இருக்கும் என்றால் இதை இப்போது சொல்ல வேண்டும். இனியொரு தணிக்கை இல்லாமல் பிரசுரிக்க வேண்டும்.

  6. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    Joseph Stalin was also good in bank hold ups. Here it all started with the Peoples Bank. Thank God it is all over and we can move freely and be happy.

  7. thevan says:
    13 years ago

    மக்களின் மிகப்பெரும் சொத்து கொள்ளை அடிக்கப்பட்டது தவறா ? கொள்ளை அடிக்கப்பட்டது சரியாயின், மக்களின் மிகப்பெரும் சொத்து கொள்ளை அடிக்கப்பட்டது என்று ஏன் கவலைப்படுகிறீர் ragu!! .

    .
    , அதனை சரியோ பிழையோ எதாவது ஒரு அரசியல் வேலைகளுக்குப் பயன்படுத்தாதது மட்டும் தான் தவறா?

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      PLOTE. Nice name. Did Uma Maheswaran and that guy fought over a Urmila in December 1981. High Noon Pani bazaar in Chennai. I was at the TAC – Tactical Air Command – Head Quarters of the United States Air Force in Hampton, Virginia, USA, with Dr. Subramanya Iyar Hariharan. He is from Kondavil, Sri Lanka – Shri Lanka. There was indeed a soldier called Brian Seneviratne at Fort Eustis, Virginia, USA. 

  8. shathis says:
    13 years ago

    தோழர் அசோக் கற்றன் நாசனல் வங்கிப் பணம் குமார் கட்சிக்கும் செந்தில் கட்சிக்கும் கொடுப்பதை நல்லது என்கிறீர்கள். கொள்ளைப்பணத்தையும் தங்கத்தையும் தன்னுடைய சுயதேவைகளுக்காக பயன்படுத்திய ரயாகரன் அதில் சிறிய தொகைப்பணத்தை தன்னுடைய தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காகவும் தன்மீது உள்ள குற்றச் சாட்டை திசை திருப்புவதற்கும் இக் கட்சிகளுக்கு கொடுப்பதை எப்படி சரி என்று சொல்லமுடியும்? அத்தோடு ரயாகரனின் கொடுக்கல் என்பது தனிப்பட்ட கொள்ளைகாறன் தன்னிடமுள்ள பணத்தை இன்னொருவருக்கு கொடுப்பதற்கூடாக தப்பிக்கொள்வதற்கான தந்தரமே தவிர எந்த மக்கள் நலனும் இல்லை என்பதை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.அத்தோடு முன்னிலை சோசலிச கட்சியும் இக் கட்சியின் குட்டிக் கட்சியான சமஉரிமைக அமைப்பும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதையும் கவனியுங்கள்.

  9. Mano says:
    13 years ago

    தேவன்
    இலங்கையில் நடந்த பென்னாம் பெரிய வங்கிக் கொள்ளை,
    ரஜாகரன் தன்னிடம் காசு இருந்தாக சொல்கிறார்.
    அது எங்கே என்றால் வேறு வேறு தரவுகளை தருகிறார்.
    அசோக் முழு தரவையும் தாருங்கள் என்று கேக்கிறார்.
    உங்களுக்கு என்ன சிக்கல்?
    சரி இதையும் மீறி அசோக் தனிநபர் தாக்குதல் நடத்தினார் என்று நினைத்தால் மானனஸ்ட வழக்கு போடுவது யூரோபில் ஒன்றும் பெரிய வேலை இல்லை.

    • thevan says:
      13 years ago

      Mano!!மன்னிக்கவும் உங்கள் கேள்வியின் நோக்கம் எனக்கு புரியவில்லை. உங்கள் கேள்வியில் மக்கள் பணம் ,மக்கள் நலம் ,மக்கள் நலன் சார் அரசியல் ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை .தெளிவாக உங்கள் மக்கள் நலன் சார் அரசியல் கேள்வியை கேளுங்கள் ,முயற்ச்சி செய்கிறேன் நல்ல பதில் தர.

    • thevan says:
      13 years ago

      ரஜாகரன் கொள்ளைக்காரன் என்று சொல்லுங்கள்.மக்கள் நலன் சார்ந்து சிந்திப்போர் அதனோடு மட்டும் தான் நிற்கவேண்டும். ஆனால் அந்த கொள்ளைப்பணத்தை என்ன செய்யவேண்டும் என்று சொல்லுவதனூடு உங்கள் முகமூடியை நீங்களே கிழிக்கிறீர்கள் ..

    • thevan says:
      13 years ago

      Mano!!!நன்றி நீங்களும் என்னுடன் உடன்படுவதற்கு :ரகுவோ ,அசோக்கோ மக்களின் மிகப்பெரும் சொத்து கொள்ளை அடிக்கப்பட்டது, மக்களின் பணம், நகை போன்ற சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டது என்று கவலைப்பட தகுதியற்றவர்கள் என்று என்னுடன் உடன்படுவதற்கு.மீண்டும் நன்றி மனோ.

  10. yaro .oruththan says:
    13 years ago

     என்.எல்.எப்.ரி    இன் வங்கிக்கொள்ளை பணம் சம்பந்தமாக நான் முன்பொருமுறை என்.எல்.எப் .ரி தோழருன் உரையாடும் பொழுது அவர் சொன்னது,

    20 கோடி என்பது மிகைப்படுத்தப்பட்டதாக் இருக்கலாம் என்றும் 5கோடிக்கு குறைவாகத்தான் இருக்கும் எனத்தான் கருதுவதாகவும், தனக்குண்மையான தொகை தெரியாது எனவும் கூறினார்.

    கொள்ளை அடிக்கப்பட்ட தொகையில் பெரும்பகுதி தளத்திலேயே இருந்த்தாகவும், அதற்குப் பொறுப்பாக பின்னாளில் ரயாகரன் இருந்ததாகவும் கூறினார்.

    மிகச் சிறிய பகுதி இந்தியாவில் பயன்படுத்தப் பட்டதாகவும்( பத்திரிகை பிரசுரிப்பு, சில ஆயுதக் கொள்வனவு போன்றவை) இந்தியாவில் நிதிப்பொறுப்பாளராக அய்யர் இருந்ததாகவும் கூறினார்.

    என்.எல்.எப்.ரி  இல் பிளவு ஏற்பட்டபோது இயக்கநிதியில்,  பி. எல்.எப். ரி க்கு சமமான தொகை கொடுக்கப்படவில்லை. அந்தநகைகளுடன் விஸ்வானந்ததேவன் இந்தியாவுக்கு வரும் வழியில்தான் அவரும் அவருடன் வந்த தோழர்களும் கடலிலே மாயமான முறையிலே காணாமல் போனார்கள்.

    பின்பு லண்டனில் இருந்த  விஸ்வானந்ததேவனின் சிலநண்பர்களும்,பி.எல்.எப்.ரி இல் இருந்த இரண்டுதோழர்களும் தமது சொந்தப் பணத்தை பி.எல்.எப்.ரி யின்நிதித் தேவைகளுக்குசெலவு செய்தார்கள் என் அறிந்தேன்.

    தளத்திலே நிதிக்கு பொறுப்பாக இருந்த றயாகரன், புலிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர்களது தடுப்புக்காவலில் இருந்து தப்பிஓடி பல்கலைகழக மாணவர்களின் தலையீட்டின் பின் ஓரளவு சுதந்திரமாக திரியும் போது தன்னிடம் இருந்த அனைத்து நிதிமூல்தனங்களையும்,கணக்குவழக்குக் கொப்பிகளையும் புலிகள் பறித்துவிட்டதாக கூறியுள்ளார். பின்னர் செந்திவேல் அவர்களின் புதிய ஜனநாயக கட்சிக்கும், குமார் குணரத்தினத்தின் சமவுரிமை இயக்கத்திற்கும் சிறிய தொகைப் பணம் கொடுக்கப்பட்டதாக இரயாகரன் பக்கதிலிருந்து இப்போது சொல்லப்பட்டால் இந்தப் பணம் தற்போது எங்கிருந்து வந்தது?

    இதில் இன்னோர் தகவல், தீப்பொறி குழுவினர் என்.எல்.எப்.ரி இன் பாதுகாப்பில் இந்தியாவில் தங்கி இருந்தபோது அவர்களுக்கு என்.எல்.எப்.ரி  பணம் கொடுத்து உதவியது.அப்போது இந்தியாவில் என்.எல்.எப்.ரி இன் நிதிக்குப் பொறுப்பாளராக இருந்த அய்யர் என்.எல்.எப்.ரி க்குத் தெரியாமல் என்.எல்.எப்.ரி இன்பணத்தில்  இருந்து மேலதிகமாகவும் தீப்பொறிக்குக் கொடுத்துள்ளார்.   இது பற்றி தெரியவந்த போது அய்யர் தான் வேறு ஒருவரிடம் கடன் வாங்கிக் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.தீப்பொறி குழுவினருக்கு உதவுவதற்கு அவர்களுடைய வீட்டுக்கு அனுப்பப்பட்ட என்.எல்.எப்.ரி இன் ஒரு தோழரை தமக்குள் உள்வாங்கவும் முயற்சி செய்ததாகவும் அறிந்தேன். பின்னாளில் அய்யர் தீப்பொறியில் இணைந்து கொண்டதும், என்.எல்.எப்.ரி நிதியைதூக்கி தீப்பொறிக்கு கொடுத்ததும் இந்த பின்னணியில் தான்.காந்தன் , கேசவன், கண்ணாடிச் சந்திரன் உட்பட்ட குழுவினர் என்.எல்.எப்.ரி உடன் முன்புறமாக உறவை வைத்துக்கொண்டு கொல்லைப் புறமாக அய்யருடன் தனிப்படட்ட உறவைப் பேணினர். இது தான் தீப்பொறியின் ஜனனாயகத்துக்கான போராட்டம்.

  11. அசோக் says:
    13 years ago

    .//
    மக்களின் மிகப்பெரும் சொத்து கொள்ளை அடிக்கப்பட்டது தவறா ? கொள்ளை அடிக்கப்பட்டது சரியாயின், மக்களின் மிகப்பெரும் சொத்து கொள்ளை அடிக்கப்பட்டது என்று ஏன் கவலைப்படுகிறீர் ragu!! .//தேவன். இப்போதுதான் நீங்கள் கொக்குவில் தேவன் என்பதை என்னால் அறிய முடிந்தது. நன்றி அன்பரே. கொக்குவில் முகுந்தன் விசுவாச கும்பலில் நீங்கள் முக்கியமானவரல்லவா. நீண்டகாலமாக உங்களை தேடிக் கொண்டிருந்தேன். ஞாபகம் உள்ளதா காரைநகர் சீநோர் மீன்பிடிக் கூட்டுத்தாபனம் புளொட்டால் கொள்ளயைடிக்கப்பட்டது?. இரயாகரனின் கொள்ளையை நீயாயப்படுத்துவதன் பின்னால் உள்ள மக்கள் விரோத கொள்ளைத்தன உங்கள் அரசியல் புரிகின்றது. காரைநகர் சீநோர் பற்றிக் கதைப்போமா?

    • thevan says:
      13 years ago

      thevan
      Posted on 01/26/2013 at 3:02 pm
      அசோக் யோகனிடம் கேள்வி part 01///:தவராசா, குமரன், சிவா – டென்மார்க்,பவன் சுவீஸ் எவ்வாறு உங்கள் கேள்விகளை அசோக் யோகனிற்கு அனுப்பினீர்கள்?என்னிடமும் சில கேள்விகள் உண்டு.எவ்வாறு அசோக் யோகனிடம் கேட்பது ?
      .

      .
      அசோக் யோகனிடமும் என் கேள்வி: எவ்வாறு / யார் மூலம் கேள்வி கேட்பது ?எந்த தலைப்புகளில்?எப்ப வரை கேட்கலாம்? .

      .
      சில தலைப்புக்கள் : தேசிய விடுதலை,சமூக விடுதலை:எவ்வாறு வெல்வது ?
      எமது சமூக அமைப்பு(அரை காலனிய அரை நிலப்பிரபுத்துவ …..) , எமது சமூக அமைப்பின் மற்றும் அதிலிருந்த/இருக்கும் தனி மனிதனின் சமூக ,பொருளாதார, அரசியல் தளங்களில் உள்ள பலம் மற்றும் பலவீனங்கள் எவை?,அந்த சமூகம் முகம் கொடுக்கும் முதன்மை எதிரி,அந்த தேசியம் முகம் கொடுக்கும் முதன்மை எதிரி,
      எவை?

  12. thevan says:
    13 years ago

    மன்னிக்கவும் அசோக்!! உங்களிடம்
    கேள்விகள் கேட்பவர்களிட்குரிய தகுதிகள் முன்நிபந்தனைகள் எவை?
    .

    .பின்வரும் கேள்விகளின் பதில்களை எதிர்பார்க்கிறேன்.
    குழப்பமாயிருக்கிறது அசோக்!.சமஉரிமை இயக்கம்(ச உ இ )வரவேற்கப் படவேண்டியதொன்று ஆனால் முன்னிலை சோஷலிச கட்சியை வரவேற்க முடியாது என்று கருதுகிறீரா ?

    .

    .அல்லது ச உ இ யும் மு சோ க யும் வரவேற்கப் படவேண்டியவை என்று கருதுகிறீரா ?

  13. அசோக் says:
    13 years ago

    பின்வரும் கேள்விகளின் பதில்களை எதிர்பார்க்கிறேன்.
    குழப்பமாயிருக்கிறது அசோக்!.சமஉரிமை இயக்கம்(ச உ இ )வரவேற்கப் படவேண்டியதொன்று ஆனால் முன்னிலை சோஷலிச கட்சியை வரவேற்க முடியாது என்று கருதுகிறீரா ?அல்லது ச உ இ யும் மு சோ க யும் வரவேற்கப் படவேண்டியவை என்று கருதுகிறீரா ?
    திருவாளர் தேவன் அவர்களே இக் கேள்விகளுக்கான பதிலை அடுத்தவார கேள்வி பதிலில் நிச்சயம் தருவேன். பொதுவெளியில் கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டி புறப்படின் சமூகவிரோதிகளின் கொள்ளைகாறர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவேண்டிய கடமை உண்டு என்பதை கவனத்தில் கொள்கின்றேன். .

  14. thevan says:
    13 years ago

    நன்றி அசோக் .இன்னுமொரு கேள்வி :மக்களின் பணம் எதாவது ஒரு அரசியல் வேலைகளுக்கு ச உ இ தாலோ மு சோ க யாலோ பயன்பட்டால் வரவேற்கப் படவேண்டும் என்று கருதுகிறீரா ?

  15. விஸ்வா says:
    13 years ago

    நல்ல நகைச்சுவைப் பகுதி இந்த தொடர் மூலம் கள்ளர்கள் எல்லாம் வெளியில் வரத் தொடங்கி விட்டார்கள்.
    இவர்கள் எல்லாம் பொய்களை அறிமாக்கிய ஈழ விடுதலை களவாணிகள்.இந்த லட்சணத்தில் புலிகளை விமர்சிக்க ஒருவனுக்கும் யோக்கியதை இல்லை.

    விஸ்வா

  16. BABU says:
    13 years ago

    அசோக் தோழர் காரைநகர் சீநோர் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தில் PLOT அமைப்பு கொள்ளை அடித்ததாக நீங்கள் இங்கு ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இக் கொள்ளை பற்றி அறியவிரும்புகிறேன். . எமது அமைப்பு செய்த பிழைகள் வெளியில் பகிரங்கமாக தெரியவேண்டும். இந்த வேண்டுகோளை என் கேள்வியாககக்கருதி உங்கள் கேள்வி பதிலில் சேர்த்துக்கொள்ளவும்.

  17. அலெக்ஸ் இரவி says:
    13 years ago

    எந்த வங்கியில்… எந்தக்காலங்களிலும்… இயக்ககங்களோ… தனிப்பட்டவர்களோ… யார் கொள்ளை அடித்தாலும்… அப்பணம்… நகைகள்… இயக்கதேவைக்கோ… தனிப்பட்டவர்களின் அபிலாசைகளுக்கோ… பயன்பட்டாலும்…. அங்கு கொள்ளை அடிக்கும் நகைகள் அப்பாவி மக்களுடையதே…!!!

    அக்காலங்களில் எமது நாட்டில் வங்கியில் நகைகள் வைப்பவர்கள் வசதியான பணக்காரர்கள் அல்ல… முக்கியமாக அக்காலத்தில் வங்கிகளில் நகைகளை பாதுகாப்பாக பாதுகாப்பு பெட்டிகளில் (locker) வைக்கும் பழக்கம் இல்லை… அத்துடன் நகைகளை வங்கிகளில் அடைவு வைத்து பணம் எடுக்கும் தேவையும் அவர்களுக்கு இல்லை…!!!

    ஆனால் எமது வங்கியில் நகைகள் அடைவு வைத்து பணம் எடுக்கும் தேவை முக்கியமாக விவசாயிகளுக்கும்…. அன்றாட வாழ்கையில் பண வசதி குறைந்தவர்களே கூடுதலானவர்களாவர்கள்…!!!

    முக்கியமாக வன்னி பிரதேசங்களில் நெற்பயிர்செய்கை செய்பவர்கள் நெல் விதைக்கும் போது… பின் உரம் இடுவது என்று அதை ஓர் மூலதனமாக செய்யும்போது அக்காலத்தில் அவர்களுக்கு வேறு வருவாய் இருக்க மாட்டாது…. (முக்கியமாக பெரும்போக மாரி காலத்தில்) அவர்கள் அக்காலத்தில் தமது நகைகளை வங்கிகளில் குறைந்த வட்டிக்கு அடைவு வைத்து செலவுகளுக்கு பணம் எடுப்பார்கள்… பின் அறுவடை முடிந்த பின் அவ் நகைகளை மீட்பார்கள்…!!!

    இவர்களைப்போல் மற்றும் யாழில் நெற்பயிர் மட்டுமல்லாமல்… சிறு-பணப்பயிர்களான… மிளகாய்… வெங்காயம்… புகையிலை… போன்றவை விவசாயம் செய்பவர்களும்… குடும்பத்தில் ஒருவர் திடீரென சுகவீனமற்றாலும்… திருமணம்… போன்ற தேவைகளுக்கும்… மேலும் கையில் பணம் இல்லாத நிலையில் உடனடி தேவைகளுக்காக வங்கிகளில் நகைகளை அடைவு வைத்து பணம் எடுப்பவர்கள் கூடுதலாக நடுத்தர மக்களும் (middle-low income) அவர்களை விட பண வசதி குறைந்த மக்களுமே கூடுதலானவர்கள்…!!!

    இந்நிலையில்… இங்கு வங்கியில் கொள்ளையிட்ட பணம்… நகைகளை யார் யார் பங்கிட்டார்கள் என்று விவாதம்…???

    நான் அறிந்து ஓர் வங்கியில் கொள்ளையிட்ட நகைகளில் ஓர் பகுதி பெசண்ட் நகரில் உள்ள ஓர் இலங்கையை சேர்ந்த வர்த்தகரிடம் கொள்ளையில் ஈடுபட்ட முக்கியமானவர் மூலம் விற்க கொடுத்த இடம் சுத்துப்பட்டது என அறிந்தேன்… (1983 இன் முன்) அதே கொள்ளையின் ஓர் பகுதி வேளைச்செரியில் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் வீட்டில் பாதுக்கப்பிற்க்காக வைத்த இடத்தில மாயமாக மறந்தது…!!! (சம்பத்தப்பட்டவர் தற்போது மதம் மாறி மணம் முடித்து இலண்டனில் உள்ளார்)

    இவ் நகைக் கொள்ளைகளால் பாதிக்கப்பட்டது…. மக்களே…!!!

    அரசாங்கமோ… வங்கிகளோ அல்ல…!!!

    இதே போல் செங்கலடி வங்கி கொள்ளையிட்டவர்கள் அவ் நகையை உருக்கி பெரிய டாலருடன் கூடிய தங்கசங்கிலியை தாம் போட்டார்கள்…!!! (1983 முன்)

    தெற்கில் நடந்த ஓர் பாரிய வங்கிக் கொள்ளையில் கொள்ளைத் தலைவனாக சென்றவரின் மனைவி அதில் சந்தோஷமடைந்தார்…!!!

    சம்பத்தப்படவர்கள்… விடயங்கள் அறிந்தவர்கள் மேலும் விரும்பினால் தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை பதியுங்கள்…!!! என்னிடம் மேலும் கேட்காதீர்கள்… (சம்பந்தப்பட்ட சிலர் உயிருடன் இல்லை… எனக்கும் அறிந்தவர்கள்… நண்பர்கள்…)

    இன்று புலியின் வங்கிகளில் இருந்த நகைகள் வன்னி செல்வந்தர்களின் நகைகளா…??? இல்லை…!!!

    எங்கும் பாதிக்கபடுவது அப்பாவி மக்களே…!!!

    இங்கு வாசகர்கள் கூறுபவர்கள் எல்லோரும் வெளிநாட்டிலேயே உள்ளனர்…!!!

    கிட்லரின் காலத்தில் தவறு விட்டவர்கள் இன்றும் தண்டிக்கப்படுளிரார்கள்…. சம்பந்தப்பட்ட இவர்கள் தண்டிக்கப்படுவார்களா…???

    கொள்ளையடித்தவர்களும் தண்டிக்கப்படவேண்டும்…. அதில் சுகமடைந்தவர்களும் தண்டிக்கப்படவேண்டும்…!!!

  18. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    I can see lots of criminal activities are reported by many comentatators,……AND THEY ALL SEEMS TO BE VERY KEEN TO STOP IT. …………….here is a very usefull place to report it……………………………….I AM PLANNING TO DO IT. WHAT YOU THINK GUYS??? SHALL I DO IT OR NOT? .THOSE WHO AGREE PLEASE COMMENT BELOW ………………..Crimestoppers has come a long way in the 25 years we’ve been running. Read about the journey of Crimestoppers, the only UK charity helping to solve crimes, in this special edition of Connect, our national publication.
    Call Crimestoppers anonymously on 0800 555 111
    Or fill out our
    online form

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      When you are in Rome do what the Romans do. It survived for 500 years. They gave the world the first professional army. 

  19. jeevan says:
    13 years ago

    அலக்ஸ் இரவி

    செங்கலடி வங்கி கொள்ளையிட்டவர்கள் அவ் நகையை உருக்கி பெரிய டாலருடன் கூடிய தங்கசங்கிலியை தாம் போட்டார்கள்…!!! (1983 முன்) என்று பதியப்பட்டுள்ளது

    1983 முன் செங்கலடி பகுதியில் நடந்த பெரிய கொள்ளை சம்பவம் மூன்று .

    1. செங்கலடி கிராமிய வங்கி கொள்ளை 1978 காலப்பகுதியில் நடந்தது இதை செய்தவர் பரமதேவாவும் அவர் நண்பர்களும், இக்கொள்ளை போலீஸ் சாரல் பிடிக்கப்பட்டு பணமும் பிடிபட்டது .இதில் சம்பந்தப்பட்ட பரமதேவா , விஐயசுந்தரம், ரஞ்சன் , வாமதேவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனையும் பெற்றனர் .இவர்களில் ரஞ்சன் , விஐயசுந்தரம் தண்டனைக் காலம் முடிந்து வெளியேறினர். பரமதேவா , வாமதேவன் இருவரும் 1983 09.23 அன்று மட்டக்களப்பு சிறையில் இருந்து தப்பியவர்கள் 42 பேரில் இந்த இருவரும் இருந்தனர் .

    பின்பு பரமதேவா LTTEயில் இணைந்தார் , வாமதேவன் PLOTயில் இணைந்தார் .

    2. 1979 யில் வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயம் (தற்போது கிழக்கு பல்கலைகழகம் ) சம்பளப்பணம் கொள்ளை முயற்சி வெற்றிபெறவில்லை இதை ராஜ்மோகன் அவர் நண்பர்களும் செய்தனர் இதில் ஒருவர் பிடிபட்டார்

    3.1978 யில் நீர்பாசன திணைக்கள சம்பளப்பணம் ஜீப் வண்டியில் கொண்டு செல்லப்பட்டபோது குடும்பிமலையில் வைத்து கொள்ளை அடிக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதில் யார் சம்பந்தமோ தெரிய வில்லை

    இந்த மூன்று சம்பவங்களை தவிர பெரிய கொள்ளைச் சம்பவங்கள் எதுவும் செங்கலடி பகுதியில் 1983 முன் நடந்ததாக ஒரு பதிவும் இல்லை .

    அப்படியானால் நகையை உருக்கி பெரிய டாலருடன் கூடிய தங்கசங்கிலியை தாம் போட்டார்கள் என்று எந்தக் கொள்ளையை குறிப்பீடுகிறீர்கள்

    • அலெக்ஸ் இரவி says:
      13 years ago

      ஜீவன், தாங்கள் கனடாவில் இருக்கும் ஜீவன் என அறிகிறேன்.

      தாங்கள் கூறுவது போல “செங்கலடி கிராமிய வங்கி கொள்ளை 1978 காலப்பகுதியில் நடந்தது இதை செய்தவர் பரமதேவாவும் அவர் நண்பர்களும், இக்கொள்ளை போலீஸ் சாரல் பிடிக்கப்பட்டு பணமும் பிடிபட்டது .இதில் சம்பந்தப்பட்ட பரமதேவா , விஐயசுந்தரம், ரஞ்சன் , வாமதேவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனையும் பெற்றனர் .இவர்களில் ரஞ்சன் , விஐயசுந்தரம் தண்டனைக் காலம் முடிந்து வெளியேறினர். பரமதேவா , வாமதேவன் இருவரும் 1983 09.23 அன்று மட்டக்களப்பு சிறையில் இருந்து தப்பியவர்கள் 42 பேரில் இந்த இருவரும் இருந்தனர் . பின்பு பரமதேவா LTTEயில் இணைந்தார் , வாமதேவன் PLOTயில் இணைந்தார் ” உண்மை.

      பரமதேவாவின் நண்பர்கள் எல்லோரும் பிடிபடவில்லை. இவர்கள் கொள்ளையடித்து வயல் வெளியினூடாக ஓடியும்… ஓர் ஆற்றைக் கடந்தும் சென்று உள்ளனர். நன்றாக ஆற்றைக் கடந்து நீந்தி சென்றவர் இக்கொள்ளை பற்றி 1981இல் திருச்சியில் சந்தித்தபோது நேரடியாக எனக்கு கூறியிருந்தார். மேலும் இவர் இதைக் கூறும் முன் 79 இலில் யாழில் இருக்கும் போதே செங்கலடி வங்கி கொள்ளையிட்டவர்கள் அவ் நகையை உருக்கி பெரிய டாலருடன் கூடிய தங்கசங்கிலியை தாம் போட்டார்கள் என எனக்கு கூறியவரின் மிகவும் வேண்டிய உறவினர்… எனது மிக நெருக்கமானவர் மூலம் அறிந்தேன்.

      அதன் பின் மட்டக்களப்பு சிறையுடைப்பு நடக்க தனது கூட்டாளிகள் வருகிறார்கள் சேர்ந்து இயங்கலாம் என்று இருந்தார். பின் அதுவே அவருக்கு வினையாக முடிந்து அகால மரணமெய்தினார் என அறியப்பட்டது.

      யாரென்று ஊகியுங்கள்… மேற்கொண்டு இங்கு பகிர முடியாது. நேரில் தொடர்பு கொள்ளுங்கள்.

      • DaShrink says:
        13 years ago

        மொத்தத்துல கொள்ளைகாரங்க எல்லாம் கூடி பேசிக்கிறாங்க இங்க அதுவும் ஜாலியாக மேற்குநாட்டுல இருந்திண்டு, என்னா திமிரு இந்த பசங்களுக்கு.

      • jeevan says:
        13 years ago

        அலெக்ஸ் இரவி, பதிலுக்கு நன்றி

        பரமதேவவும் , அவர் நண்பர்களும் கொள்ளையடித்த பணத்துடன் பிடிபட்டது. இது உண்மை.

        ஆற்றை கடந்து சென்றுள்ளனர் என்பது வேறு சம்பவம். பரமதேவவுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.

        அகால மரணம் என்றவுடன் ஊகித்து விட்டேன் . கழுகுகள் தானே

        • அலெக்ஸ் இரவி says:
          13 years ago

          Your guess ‘Eagle pendant’

          • jeevan says:
            13 years ago

            பரமதேவாவின் நண்பர்கள் எல்லோரும் பிடிபடவில்லை. இவர்கள் கொள்ளையடித்து வயல் வெளியினூடாக ஓடியும்… ஓர் ஆற்றைக் கடந்தும் சென்று உள்ளனர். நன்றாக ஆற்றைக் கடந்து நீந்தி சென்றவர் இக்கொள்ளை பற்றி 1981இல் திருச்சியில் சந்தித்தபோது நேரடியாக எனக்கு கூறியிருந்தார். மேலும் இவர் இதைக் கூறும் முன் 79 இலில் யாழில் இருக்கும் போதே செங்கலடி வங்கி கொள்ளையிட்டவர்கள் அவ் நகையை உருக்கி பெரிய டாலருடன் கூடிய தங்கசங்கிலியை தாம் போட்டார்கள் என எனக்கு கூறியவரின் மிகவும் வேண்டிய உறவினர்… எனது மிக நெருக்கமானவர் மூலம் அறிந்தேன்.

            இதற்கும் பரமதேவவுக்கும் சம்பந்தமில்லை கொள்ளை நடந்து சிறிது நேரத்தில் பணமும் பிடிபட்டு அவர்களும் பிடிபட்டனர்.

            உங்களுக்கு ஒரு விடயம் யாரோ சொல்லியிருக்கிறார்கள் அது என்னவென்றால் ஒரு கொள்ளை சம்பவம் 1977 இறுதிப்பகுதியில் பழுகாமம் கமநலத் திணைகளத்தில் அமைந்திருந்த இலங்கை வங்கி கிளை ஒரு குழுவினரால்

            கொள்ளையடிக்கப்பட்டது . இக்கொள்ளையில் சம்பந்தப்பட்ட யாரோ உங்களுக்கு சொல்லியிருக்கிறார் .ஆற்றை கடந்து நீந்திப் போன சம்பவம் அதுதான் அந்த காலகட்டத்தில் இது ஒரு பரபரப்பான சம்பவம் . இதில் யார் பங்கு கொண்டார்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன்

          • அலெக்ஸ் இரவி says:
            13 years ago

            You are correct Jeevan, that’ from Palikamam

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Late Vaithyanathan my teacher and later a professional friend once called Paramatheva a future leader. He was then Principal of what is now Hindu College, Batticaloa. It was called Government College and later Koddamunai Maha Vidyalayam. What a prophecy?

      • jeevan says:
        13 years ago

        http://www.tamilwin.com/show-RUmqzATbOcnq1.html

      • jeevan says:
        13 years ago

        பரமதேவா, 1975 ம் ஆண்டுகளில் அனைத்துத் தமிழ்மக்களாலும் அறியப்பட்ட பெயராகும். பல தமிழ் இளையோர்களை விடுதலை பயணத்தில் இணைய வைத்திருந்தன. 1972 ம் ஆண்டு சிங்கள அரசின் புதிய அரசியலமைப்பு சட்டங்களின் உருவாக்கத்தில் மே 22 குடியரசு நாளாக அறிவிக்கப்பட்டிருந்தன.

        மே 22 கரி நாளாக அறிவிக்கப்பட்டு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் அரசு அறிவித்திருந்த குடியரசு நாள் நிகழ்வுகளைப் புறக்கணித்து தமிழர் வாழ் நிலங்கள் எங்கும் எதிர்ப்பு முழக்கங்கள், எதிர்ப்பு பதாகைகள், கறுப்புக் கொடிகள் என்று சிங்கள அரசுக்கு புரியவைக்கும் நடவடிக்கைகளை தமிழ்மக்கள் மேற்கொண்டனர். இவற்றில் தமிழ் மாணவர்களின் பங்கு அளப்பரியதாக அமைந்திருந்தன.

        மாணவ பருவத்தில் பள்ளிக் கூடத்தில் பரமதேவா ஏற்படுத்திய புரட்சி, தமிழ், மாணவர்களை தட்டியெழுப்பியது மாத்திரமல்லாது,சிங்கள அரசு அச்சமடைய வைத்தது. மாணவனான பரமதேவாவின் உணர்வை முளையிலே கிள்ளியெறிய எண்ணியதின் விளைவில் ராஜன் செல்வநாயகத்தின் பங்கு அன்றிருந்தது. இதனால் பள்ளிக் கூடத்தினுள் கலகம் விளைவிக்கும் மாணவன் என்று பரமதேவாவை எந்தப் பள்ளிக் கூடத்திலும் படிக்கமுடியாதவாறு அதிபரை வைத்து வெளியேற்றினார்.

        ஆனால் நிலைமைமாறி மாவட்டமெங்கும் மாணவர்கள் புறக்கணிப்பின் மூலம் எதிர்ப்பை தெரிவித்தனர். இப் போராட்டம் மட்டக்களப்பு கல்வித் திணைக்கள அதிகாரிகளை அதிர வைத்தது. சந்திப்புக்கள், பேச்சு வார்த்தைகள் என்று அதிகாரிகள் செயல்பட்டு மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்ளும் முடிவை அறிவித்தபோது

        அதிபர் திரு. வைத்தியநாதன் அவர்கள் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார்.

        இம் முடிவு பரமதேவாவை சங்கடத்துக்குள்ளாக்கியது. ஏனென்றால் திறமைமிக்க அறிவியலாளரான திரு. வைத்தியநாதன் அவர்களின் இடமாற்றம் சக மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் என்பதால் தான் வெளியேறி வேறு பள்ளிக்கூடத்தில் பயில்வதற்கு பரமதேவா முடிவு எடுத்துச் செயல்பட்டார்.

        http://www.tamilwin.com/show-RUmqzATbOcnq1.html

  20. mahen masil says:
    13 years ago

    இனியொரு இருட்டடிப்பு செய்வது பற்றி கேள்விபட்டுருக்கிறேன் ஆனால் இன்று அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.நீங்கள் காப்பாற்ற முனைவது இயக்க ஜனநாயகம் பேசிக்கொண்டு கொலைகளுக்கு கட்டளையிட்டவர்களையும் அதனை செய்தவர்களையுமே. உங்கள் இணையத்திற்கு விளம்பரம் தேவையெனின் பல இயக்கங்களிலிருந்தும் பல கொலைகாரர்கள் உலாவுகிறார்கள். அவர்களை பிடித்து வந்து எழுதவிடுங்கள்.
    புளட்டிலிந்தவர்கள் மட்டும்தான் சுயவிமர்சனம் செய்யவேண்டுமென்ற கட்டாயமில்லைதானே! சிலர் தாங்கள் இயங்கியதையே வெளியில் சொல்ல வெக்கப்படுகின்றனர்.

    • இனியொரு.. says:
      13 years ago

      மகேன் மாசில்,
      நீங்கள் ஒரு தனிநபர் மீது அனாவசியமாக போலிக் கொலைக் குற்றம் சுமத்தி பின்னூட்டம் எழுதியதால் அது நீக்கப்பட்டது. அத்தகவல் தவறானது என்ற அடிப்படையில் மட்டுமன்றி போலிக் கொலைக் குற்றம் சுமத்தும் நடவடிக்கை சட்டவிரோதமானது என்பதாலும் தரவு தவறானது என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் நீக்கப்பட்டுள்ளது.

      எது எவ்வாறாயினும், தகவல் தொடர்புடையவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுளது. குறைந்தபட்சம் ஒருவார எல்லைக்குள் உங்களுக்கு பதிலளிப்பதாக உறுதிசெய்கிறோம்.உங்களது தகவல் தவறானது என இனியொரு சார்பில் பதில் தருகிறோம்.

      • MAHEN MASIL says:
        13 years ago

        நன்றி,நான் எனது பதிவை உறுதி செய்யும் பட்சத்தில் இனியொருவினூடே அவர் அம்பலப்படுத்தப்பட்டு , சட்டநடடிக்கைக்கும் ஆதரவளிக்க வேண்டும்.

  21. thevan says:
    13 years ago

    நீங்கள் ஒரு தனிநபர் மீது அனாவசியமாக போலிக் கொலைக் குற்றம் சுமத்தி பின்னூட்டம் எழுதியதால் அது நீக்கப்பட்டது. அத்தகவல் தவறானது என்ற அடிப்படையில் மட்டுமன்றி போலிக் கொலைக் குற்றம் சுமத்தும் நடவடிக்கை சட்டவிரோதமானது என்பதாலும் தரவு தவறானது என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் நீக்கப்பட்டுள்ளது.///இந்த விதி கொலைக்கு மட்டுமா? அல்லது கொள்ளைக்கும் பொருந்துமா இனிஒரு? .

    .அசோக்
    Posted on 02/18/2013 at 10:02 am
    தேவன். இப்போதுதான் நீங்கள் கொக்குவில் தேவன் என்பதை என்னால் அறிய முடிந்தது..

    .
    இந்த தரவு சரியானது என எவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டது இனிஒரு? நன்றி அன்பரே. கொக்குவில் முகுந்தன் விசுவாச கும்பலில் நீங்கள் முக்கியமானவரல்லவா. .

    .
    இந்த தரவு சரியானது என எவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டது இனிஒரு? . இரயாகரனின் கொள்ளையை நீயாயப்படுத்துவது;;இந்த தரவு சரியானது என எவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டது இனிஒரு? .

    • thevan says:
      13 years ago

      தகவல் தொடர்புடையவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுளது///அசோக்கின் தேவன் ஆகிய என்பற்றிய தகவல், தொடர்புடைய தேவனாகிய எனக்கு ஏன் அனுப்பப்படவில்லை? .அசோக்கின் தேவன் ஆகிய என்பற்றிய தகவல் சரியானவை என இனியொரு எவ்வாறு உறுதிப்படுத்தியது?.

      .
      “இரயாகரனின் கொள்ளையை நீயாயப்படுத்துவதன் பின்னால் உள்ள மக்கள் விரோத (காரைநகர் சீநோர் கொள்ளைத்தன) உங்கள் அரசியல் புரிகின்றது””.

      .
      காரைநகர் சீநோர் கொள்ளையில் தேவனின் பங்கு
      பற்றிய தகவல் சரியானவை என இனியொரு எவ்வாறு உறுதிப்படுத்தியது?.

      .

    • ஓணான் says:
      13 years ago

      திரு.தேவன் அவர்களே…. அது வேற இனிஒரு,இது வேற இனயொரு அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை அதனால் இதற்க்கு நிர்வாகமும் பொறுப்புமில்லை.

  22. மனோகரன் says:
    13 years ago

    அந்தக்கால கட்டத்தில் பல்கலைக்கழகத்திலும், புலி இயக்க நபர்களிடத்திலும் ஒரு பேச்சு இருந்தது. என். எல்.எப்.டி அமைப்பினரின் விடுதலைக்காக பணம் பட்டுவாடா நடை பெற்றதாக. விடுதலைக்கு முன்னரும், விடுதலைக்கு பின்னருமாக இரு கட்டமாக நடை பெற்றதாக அறிய முடிந்தது. இப்போது தான் புரிகிறது அது இரயாகரனின் விடுதலைக்காக என்று. ஆனால் ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக பணம் கொடுப்பது தப்பா? ஏன் இதை பெரிது படுத்துகிறீர்கள்?

    • யாரோ. ஒருத்தன் says:
      13 years ago

      இது ஒரு புதுக்கதை. இதை உறுதிப்படுதிக்ககொள்வது ஒன்றும் கடினமானது அல்ல. அய்யரை,அல்லது தற்போது லண்டனில் வசித்து வரும் மாறனை, அல்லது கொழும்பில் வசிக்கும் இன்னொரு நபரை (பெயர் குறிப்பிடவில்லை.உங்களுக்கு ஊகிக்க முடியும் எனநம்புகின்றேன்.) கேட்டால் தெரிந்து கொள்ளலாம்.அப்படி ஒன்றும் நடைபெறவில்லைஎன. இவர்கள் மூவரும் அப்போது என். எல்.எப்.டி இல் முக்கியமானநபர்கள். வாய் திற்ப்பார்களா?

      • நாவலன் says:
        13 years ago

        எனக்குத் தெரிந்தவரை அப்படி எதுவும் நடைபெற்றதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இவை வெறும் அனுமானங்களே. என்.எல்.எப்.ரி இல் ரமணி என்பவர் புலிகளால் கொலை செய்யப்பட்டார். ரயாகரன் தப்பிவந்தார். வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியாது.

        • யாரோ. ஒருத்தன் says:
          13 years ago

          நாவலன்,
          வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியாது என சொல்கிறீர்கள்.

          அய்யர் அப்போது என்.எல்.எப்.ரி  இல் தான் இருந்தார். முன்னர் புலிகளில் இருந்த மாறன் என்.எல்.எப்.ரி  மத்திய குழுவில் இருந்தார்.நான்சொன்ன மற்றவரும் என்.எல்.எப்.ரி  மத்திய குழுவில் இருந்தார். ரமணியும் ரயாவும் மட்டும் தான் என்.எல்.எப்.ரி  யா?

  23. இனியொரு.. says:
    13 years ago

    மகேன் மாசில், தேவன்,
    மகேன் மாசில் முன்வைத்தது ஒருவர் மீதான சந்தேகமல்ல, நேரடியான கொலைகுற்றம். பொதுத் தளத்தில் இவ்வாறான குற்றச்சாட்டு சட்டவிரோதமானது.பல சட்டச் சிக்கல்களைக் கூட உருவாக்கும். ஆக, அது நீக்கப்பட்டது. தேவன் மீது சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.  அவரது முன்னைய அரசியல் குறித்த சந்தேகங்களும், கொள்ளை குறித்த சந்தேகங்களும். இவற்றைத் எதிர்ப்பதும் ஏற்றுக்கொள்வதும் தேவனைச் சார்ந்தது.
    இறுதியாக ரயாகரனின் வங்கி விவகாரம் அசோக் கண்டுபிடித்தவை அல்ல. ரயாகரனே அவரது இணையத்தில் பல தடவை கொள்ளைப்பணம் தன்னிடம் இருந்தது குறித்தும் அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் எழுதியுள்ளார்.

  24. thevan says:
    13 years ago

    வாழ்க இனியொரு,வாழ்க அசோக்கின் சந்தேகங்கள். இதையாவது இனிஒரு பதிவு செய்யுமா ?

  25. thevan says:
    13 years ago

    ரயாகரனின் வங்கி விவகாரம் //வன்மையாக கண்டிக்கிறேன் இதையாவது இனிஒரு பதிவு செய்யுமா ?

  26. thevan says:
    13 years ago

    thevan
    Posted on 01/01/2013 at 4:57 pm
    1.ஆக்கபூர்வமான விவாதத்திட்குரிய தளமாகவே இனிஒரு தொடர்ந்தும் இருக்க வேண்டும்.சமூகத்திற்கு தேவையான கருத்துக்கள், சிந்தனைகள்

    தாராளமாகவே மோதட்டும் இனிஒருவில்.

    .

    2.இந்த ரயாகரன் விவாதத்திற்குள் நுழைவது இங்கிதமில்லை,எனது நோக்கமுமல்ல.இருந்தும்:

    .

    “200 இற்கு மேற்பட்ட அவதூறுக் கட்டுரைகள் எதற்கும் நான் இதுவரை பதில் சொல்லவில்லை.அதற்கான தேவையும் ஏற்படவில்லை” ஆனால் “இப்போது கட்சி என்று இணைந்து மேற்கொள்கிறார்கள்” ஆகவே பதில்அளிக்க வேண்டும் ,அதற்கான தேவையும் இப்போது ஏற்பட்டுள்ளது என்கின்ற வாதம் எனக்கு தவறாக படுகிறது. “இப்போதும் கட்சி என்று இணைந்து மேற்கொள்ளாவிட்டால்”?, மக்களின் சொத்துக்குறித்தும் ஒரு போராட்டம் கொச்சைப்படுத்தப்படுவது குறித்தும் பேசாமல் இருந்திருப்பேன்” என்ற இன்றைய நிலைப்பாடு குறித்து ஏமாற்றமாக உள்ளது.
    .

    .
    ஒருவன், தனது ஊகங்கள் பொய்த்துப்போக வேண்டும் என்று மனதார விரும்பும் முதல் மனிதனாக இருக்க விரும்பும் ஒரு சாதாரண குடிமகன் தான் இந்த தேவன் .வாழ்க இனிஒரு ,வாழ்க அசோக்.

  27. Vinayagam says:
    13 years ago

    தமிழ் விடுதலை இயக்கங்கள் என அறியப்பட்டவை அனைத்தும்  த.வி.கூ வை ஆயுதங்களுடன் பிரதியிட்டவைதான். ஐயரின் பதிவிலேயே  அதை குறிப்பிட்டிருக்கின்றார்.
         அவ்வாறான இயக்கங்களில் புளட்டிற்கு இருந்த மேலதிக தகுதி அது வெள்ளாள இயக்கம் என்பதுதான். ஆரம்பங்களில் அதன் பிரதான ஆதரவுதளங்களாக சுழிபுரம்,கொக்குவில்,உடுவில் போன்ற பகுதிகளில் செயல்பட்டது ஒன்றும் தற்செயலானது அல்ல. சுழிபுரத்தை சேர்ந்த  பல பெரிய ஐயா(?) வின் தீவிர விசுவாசிகள் பலர் பனிப்புலத்தை சேரந்த பண்டாரிகள்  எனப்படும் குடிமைச்சாதியனருக்கு எதிரான வக்கிரமான சாதியவன்முறையில் ஈடுபட்ட முன்னைநாள் சாதியசண்டியரே.
    கொக்குவிலில் தங்கராசா என்ற பிரச்சாகரை கொண்டு மாக்சிச வகுப்புகளை நடத்திகொண்டு தங்களது வீடுகளில் மோசமான் சாதிய நடைமுறைகளை கடைப்பிடித்தோரே கொக்குவில் புளட் தோழர்கள்(?)
                     தங்கராசாவிடம் பொறுக்கிக்கொண்ட மாக்ஸிச வர்ர்த்தைகளை கொண்டு ஏதோ தர்க்கநியாயங்களின் அடிப்படையில்தான் எதனையும் அணுகுவ்து போன்றும், உயர்ந்த தளத்திலிருந்து அரசியல் விவாதங்களை நடத்துவது போலவும் பாவ்லா காட்டுவது  புளட்டுக்குள் காணப்பட்ட வெள்ளாள சாதியரசியலின்  பொதுப்பண்பு. துணைஇராணுப்ப்டையாக மாறிய  கும்பலும் கூட இன்றும் அதையேதான் செய்கின்றது.
    இரயாகரனுக்கும்,இவர்களும் சந்திக்கின்ற புள்ளியே இதுதான். இரயாவின்பெயரில் வெளிவருகின்ற கட்டுரைகளை அவர் எழுதுவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்.

  28. லோகன் says:
    13 years ago

    தோழர்தவம் எடுத்துசென்ற கொள்ளையடிக்கப்பட்ட ஓரு தெகுதி கடலில் தாண்டதாய் அன்றுதெரிவிக்கப்பட்டது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...