பிரபாகரன் உயிர்வாழ்கிறார்? – சரத் பொன்சேகாவைப் தலைகீழக்கிய ஊடகங்கள்!

prabakaranசரத் பொன்சேகா, பிரபாகரன் உயிர் வாழ் கிறார் என எங்கும் சொல்லவில்லை. மே 16, 2009 இல் யுத்தம் முடிந்துவிட்டது என மகிந்த அறிவிக்கிறார் நிலத்தை முத்தமிடுகிறார் ஆனால் மே 19, 2009 பிரபாகரன் உயிர் இழந்தார்! எனச் சொல்லவருகிறார் சரத் பொன்சேகா!!. இதனை தமிழர் ஊடகங்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் எனச் சொல்லுகின்றனர்!!!.

உண்மையில் இந்தச் செய்தி போர்குற்றம் நிகழ்ந்து இருக்கின்றது என்பதையே சொல்லுகின்றது . போர்முடிந்த பின், மே 17,18,19 இல் பல விடுதலை புலிகள் கொல்லப் பட்டதாக இலங்கை அரசு கூறி இருந்தது . ஆகவே போர் முடிந்த பின் பலர் கொல்லப் பட்டனர் என்கின்ற செய்தியை சரத் பொன்சேகா சொல்கின்றார் . இந்த எளிய விடயத்தை கூட தமிழர் தரப்பால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது பெரும் அவலமே.

தனி மனித புரிதல் , ஒரு இனத்தின் கூட்டு புரிதல் என்பதில் எமது வெற்றி என்பது கேள்விக் குறியே. இப்படியாக இனத்தின் இயங்கியல் யதார்த்தங்களை புரிதல் என்பதிலும் தமிழ் மக்களும் அவர்களின் போராட்ட அரசியலும் இதுவரையில் மிகச் சரியான அறிவியல் சார் புரிதலை கொண்டிருக்கவில்லை என்பதே தமிழ்மக்களின் விடுதலை போராட்டத்தின் தோல்வியாகும் .

தமிழர்களின் கூட்டுப் புரிதல் என்பது மனச் சிதைவுகளுக்கு உட்பட்டது . அது அரசியல் வழி ஆயுத வழி புரட்சியாளர்களாலும் சரி செய்யப்படவில்லை . சிவில் சமூகம் மற்றும் அதன் மூத்த அறிவியல் சார்ந்த குழுமங்களும் இதனை சரி செய்யும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை என்பது தமிழ் இனத்தின் சாபக் கேடு .

தமிழ்  இனத்தின்  சாபக் கேடு – S.G. ராகவன்  (கனடா)

3 thoughts on “பிரபாகரன் உயிர்வாழ்கிறார்? – சரத் பொன்சேகாவைப் தலைகீழக்கிய ஊடகங்கள்!”

 1. அதாவது பெரும்பான்மையான தமிழ் மக்கள் நாட்டிலும் சாி புலத்திலும் சாி இன்னும் Homo sapiens நிலையை எட்டவில்லை என்பதே நமது இன்றய நிலைக்குக்காரணம். தமிழ் சினிமா கோமாளிகளைப்பற்றி இவா்களிடம் கேட்டீா்களானால் அக்கு வேறு ஆணிவேறாக விளங்கப்படுத்துவாா்கள்.

  1. 2009 2009 மே 16 அன்று மகிந்த வெளிநாட்டிலிருந்து வந்து மண்ணை முத்தமிட்டு யுத்தம் முடிந்ததாக அறிவிக்கிறார். ஆனால் 2009 மே 19 பிரபாகரன் உயிர் இழந்ததாக சொல்கிறாரா ? சொல்ல வருகிறாரா ?

   இப்போது உயிரோடு இருக்கும் Homo sapiens யாராவது இந்த கட்டுரையின் தெளிவின்மையை விளக்கினால் நல்லது.

 2. சரத் பொன்சேகா, பாராளுமன்றத்தில் போர் குற்றம் தொடர்பாக அண்மையில் ஆற்றிய உரையை விளங்கிக் கொள்ளாது தமிழ் தேசிய ஊடகங்கள்? பலவும் வெளியிட்ட செய்தியின் தலைப்பு :-

  பிரபாகரன் உயிர் வாழ்கிறார் – சரத் பொன்சேகா சொல்கிறார். ( எனத் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன.) இங்கு சரத் பொன்சேகா உரை தொடர்பில் தமிழ் தேசிய ஊடகங்கள் சரத் பொன்சேகாவின் செய்தியை தலை கீழாக்கியது தொடர்பிலேயே எனது விமர்சனம் அமைந்துள்ளது .

  பிரபாகரன் உயிர் வாழ்கிறாரா? இல்லையா என்பது தொடர்பில் மாவீரர் தின கொத்துரொட்டி வியாபாரம் செய்வோரையும் உண்டியல் குலுக்குவோரையும் கேட்டுப் பார்க்கவும்.

  கனடாவில் பல பிரபல்யமான அங்காடிகள் , கட்டிட நிர்மாண நிறுவனங்கள், மருந்தகங்கள், வைத்திய நிறுவனங்கள், கோவில்கள், புலிகளின் முகவர்களாக செயல் பட்ட கொள்ளையர்களால் தமது உடமையாக்கப் பட்டிருக்கிறது.

  இந்த கொள்ளையில் வைத்தியர்கள், பொறியியல் ஆளர்கள், ஊரில் மாடு (மனிதனை) மேய்த்தோர் மேயாதோர் என எவன் எல்லாம் எங்கள் தலைவன் சூரியதேவன் என உரக்க கூவிநானோ அவன் எல்லாம் இன்று புலிகளின் சொத்துக்கு வாரிசு. அவங்களுக்குதான் தெரியும் பிரபாகரன் இருக்கிறாரோ இல்லையோ என்று. சத்தியமா எனக்கு தெரியாது.

  கனடாவில் எனது காது பட புலிகளின் அங்காடி ஒன்றில் ( இப்போது அது புளுகு பூனைகளின் உடமை ) அக்கடையின் முதாலாளி அவர்களின் வாடிக்கையாளார் ஒருவர் பிரபாகரன் என்ன இருக்கிறாரோ? எனக் கேட்க! …… உப்பிடித்தானே இந்தியன் ஆமி நேரமும் கேட்னியள்…. பொறுங்கோ பாருங்கோ…. என்றவாறாக பதில் வந்தது. நீங்கள் செய்ய வேண்டியதை செய்தால் அவர் வர வேண்டிய நேரம் வருவார்…….

  அந்த கடையில் பிரபாகரனின் படம், ஒரு தமிழ் ஈழ வரைபடம் அதன் கீழ் உண்டியல். இன் நிலைமை முன்னாள் புலிகளின் பெரும்பாலான வணிக நிறுவனங்களிலும் காணப் படுகிறது. மிகப் பெரிய கட்டிட நிர்மாண நிறுவனம் தம்மை புலி நீக்கம் செய்து விட்டது முழுச் சொத்தும் குறிப்பிட்ட சிலரால் விழுங்கப் பட்டுவிட்டது. ஆக பிரபாகரன் வரும் வரை நாம் உண்டியலை நிரப்ப வேண்டியதுதான்.

Comments are closed.