யாழ்.பல்கலையில் மலையக தமிழர்கள் தொடர்பான நூல் அறிமுக நிகழ்வு

mckமு.சி. கந்தையா எழுதிய சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் நூல் அறிமுக விழா எதிர்வரும் திங்கட்கிழமை(18) மாலை 3 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் அரசறிவியல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றிய தலைவர் செல்வி த.சஜிலா தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் வரவேற்புரையினை செல்வி சி.லக்ஸினி ஆற்றுவார். நூல் அறிமுக உரையினை அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கமும் நூல் ஆய்வுரையினை யாழ். பல்கலைக்கழகத் அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கே.ரி. கணேசலிங்கமும் ஆற்றவுள்ளனர்.

நிகழ்வில், நூல் அறிமுகத்தினைத் தொடர்ந்து முதற்பிரதியினை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் பெற்றுக்கொள்வார். அடுத்து நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கும் பேராசிரியர் வி.பி.சிவநாதன் உரையாற்றுவார்;.

கருத்துரைகளை மலையக சமூக ஆய்வு அபிவிருத்தி மையத்தினைச் சேர்ந்த வே. இந்திரச்செல்வன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் சிறப்புரையினை இன்றைய மலையகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும் என்ற தொனிப்பொருளில் அருட்தந்தை மா.சக்திவேலும் ஆற்றுவர். நன்றியுரையினை யாழ.; பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தின் செயலாளர் சி.விஜயராஜ் மேற்கொள்வார்.

சிறப்புப் பிரதிகளை அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், புத்திஜீவிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
வடக்கில் மலையக மக்களின் பிரச்சினைகளை பேசுபொருளாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந் நிகழ்வுகளுக்கு ஆர்வமுள்ள சகலரும் அன்புரிமையுடன் அழைக்கப்படுகின்றனர்.