ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை இனப்படுகொலை தொடர்பான பிரச்சனையில் உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய இன்னசிட்டி பிரஸ் செய்தித் தளத்தின் ஆசிரியர் இப்போது ஐக்கிய நாடுகள் சபை அமர்வுகளிப் பங்கேற்பதற்கும் கேள்வி கேட்பதற்கும் முழுமையான தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். உலகின் மனித உரிமை மீறும் நாடுகளை வெறும் அதிகார வர்க்க நனலன்கள் சார்ந்து மட்டுமே அணுகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பிரிவினை ஆட்டிப்படைத்த மத்தியூ லீ இப்போது ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் பழி வாங்கப்படுகிறார்.
முள்ளிவாய்க்கால் மனிதப்பகடுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த்த வேளையில் இலங்கை அரசிற்கு எதிராக பன் கீ மூனிடமும், மனித உரிமைப் பேரவைப் அதிகாரிகளிடமும் ஆதாரபூர்வமான தகவல்கள் அடிப்படையில் கேள்வியெழுப்பிய மத்தியூ லீ இன்று நிறுவனத்திற்கு உட்செல்வதற்கு முற்றாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மத்தியூவிற்கு எதிரான இந்த நடவடிக்கை ஈழத் தமிழர்கள் போன்ற அனைத்து ஒடுக்கப்படும் மக்களுக்கும் எதிரானது தான்.
இவரது மீதான தடையை நீக்குமாறு ஐ.நாவின் பொது மக்கள் தகவல் தலைமை அதிகாரி அலிசன் சிமாலிற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்புமாறு மத்தியூ லீயின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
Head of Dept of Public Info: Alison.Smale@un.org