கோப்ரட் ஊடகங்களின் பொய்கள் : பீ.பீ.சீ நடத்திய ஊடக நாடகம்

லிபியாவில் கடாபி அரசை வீழ்த்தியதை மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாடுவதாக பீ.பீ.சி செய்தி வெளியிட்டது. அந்த நாளில் அச் செய்தி பரலவலாக ஒளிபரப்பானது. லிபியாவின் பச்சை சதுக்கத்தில் அந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற்றதாக பீபீசி பொய் கூறியது. பீபீசியின் காணொளி சில கணங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டது வியப்பு என்னவென்றால் அக் கொண்டாட்டங்கள் இந்தியாவில் நடைபெற்றவை. இந்தியர்கள் இந்தியக் கொடியை அசைத்து நடத்தும் ஒரு நிகழ்வை லிபியாவிலிருந்து நேரடியாக ஒளிபரப்புவதாக பீபீசீ அன்றைய நாள் அதிகாலையிலேயே தனது பொய்யை ஆரம்பித்திருந்தது.