சர்வதேசச் சுற்றுச்சூழல் கிரிமினல் ஐங்கரநேசன் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம்!

ayangaranesanசுன்னாகத்தை மையமாகக்க்கொண்டு பல மைல் சுற்றுவட்டத்தை நாசப்படுத்துவதற்குத் துணை சென்ற வடமாகாண சபையின் விவசாய அமைச்சர் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதாகத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

விக்னேஸ்வரன் ஆதரவுக் குழுக்களால் அவுஸ்திலேயாவிற்கு அழைக்கப்பட்டிருக்கும் ஐங்கரநேசன், இரகசியச் சந்திப்புகளைத் தவிர, பொது கூட்டம் ஒன்றையும் அவுஸ்திரேலிய தமிழ் கொங்கிரசின் ஆனுசரணையுடன் நடத்தவுள்ளார். சுன்னாகம் பேரழிவை ஏறபடுத்திய பல்தேசிய வர்த்தக நிறுவனத்தைக் காப்பற்றிய ஐங்கரநேசனுக்கு மல்லாகம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

மல்லாகம் நீதிமன்றத்தின் கடந்த இரண்டு விசாரணைகளிலிருந்தும் தப்பித்துக்கொண்ட ஐங்கரநேசன் வெளி நாடுகளில் காலத்தைக் கடத்தி வருகின்றார்.

அதே வேளை மல்லாகம் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் நேற்று வெள்ளிக்கிளமை சட்டத்தரணிகள் ஊடாக மல்லாகம் நீதி மன்றத்தில் சரணடைந்துள்ளார்.

சுன்னாகம் அனல் மின்னிலையத்தில் நடத்தப்பட்ட அழிவு நடவடிக்கையின் பின்னர் பாரிய குற்றச் செயல்களை மேற்கொண்ட ஐங்கரநேசன் எம்.ரி.டி வோக்கஸ் என்ற பல்தேசிய வர்த்தக நிறுவனத்தின் இலாப வெறியினால் விலைக்கு வாங்கப்பட்டு போலி நிபுணர் குழு ஒன்றை ஏற்படுத்தி மக்களை அழிக்க முற்பட்டார். தேசிய நீர் வடிகாலமைப்புச் சபை வழங்கிய குடி நீரையும்  நிறுத்துவதற்கு புன்புலத்தில் சதி செய்தார்.

ஐங்கரநேசன் குழு தயாரித்த போலி நிபுணர் குழுவின் அடிக்கையின் பின்னரே மக்களுக்கு வழங்கப்பட்ட குடி நீர் நிறுத்தப்பட்டு அவர்கள் நச்சு நீரை அருந்தும் நிலைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சர்வதேச சுற்றுச்சூழல் கிரிமினல்களின் பட்டியலில் இணைக்கப்பட வேண்டிய ஐங்கரநேசன் இன்று அவுஸ்திரேலியாவில் சுதந்திரமாக உலாவருகிறார்.