சுய நிர்ணயக் கோட்பாட்டை முன்வைத்த லெனின் பிறந்த நாள்

vladimir-leninமனிதகுல வரலாற்றின் அறிவியல் பூர்வமான தொகுப்பு முதலில் ஏங்கெல்சால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு எழுதப்பட்டது. காடுகளில் விலங்குகள் போன்று அலைந்த மனிதர்கள் நிரந்தரமாகக் குடியேறிய பின்னர் சொத்துக்களை சேகரிக்க ஆரம்பிக்கின்றனர். சொத்தை மனிதன் உடமையாக்கிக்கொள்கின்ற போது மனிதர்களிடையே பிளவுகள் தோன்றுகின்றன. அடிமகளாகவும் சிறிய பகுதி ஆள்பவர்களாகவும் மனித இனம் பிளவுபடுகின்றது. இவ்வாறு மனித குலத்தின் வரலாற்றை ஏங்கல்ஸ் எழுதினார்.

முதலாளித்துவக் காலகட்டத்தில் மக்கள் கூட்டங்களின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து முழுமையான ஆய்வை முன்வைத்தவர் லெனின். முதலாளித்துவக் கட்டத்திற்கு மட்டுமே உரித்தான மக்கள் கூட்டமான தேசிய இனங்களின் தோற்றம் குறித்து முதலில் உலகத்திற்குக் கூறியவர் லெனின். இதனடிப்படையில் இன்று இலங்கையில் அதிகமாகப் பேசப்படும் சுய நிர்ணயக் கோட்பாட்டை முதலில் முன்வைத்தவர் லெனின். இன்று லெனினை நிராகரித்து சுய நிர்ணைய உரிமை குறித்து உலகத்தில் பேசவியலாத நிலை உருவாகியுள்ளது.
இன்று உலகம் முழுவதில்ம் மக்களை அழிக்கும் ஏகாதிபத்தியம் குறித்து அறிவியல்பூர்வமாக முதலில் முன்வைத்தவர் லெனின், ரஷ்யப் புரட்சியைத் தலைமைதாங்கியவர்களுள் ஒருவரான லெனின் உலகின் தொழிலாளர்களதும் ஒடுக்கப்பட்ட மக்களதும் விடுதலைக்கும் வழங்கிய பங்களிப்பு காலத்தால் அழியாதது.

இன்று 22ம் திகதி ஏப்ரல் மாதம் லெனின்  பிறந்த நாள்.

‘தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அதை திருத்திக் கொள்வதற்கான பலனும் தான் வெற்றிக்கான வழி.’
-லெனின்.