தீர்வை முன்வைப்பதற்குப் பதிலாக ஐங்கரநேசனைக் காப்பாற்ற முயலும் சீ.வீ.விக்னேஸ்வரன்

cvwபுலம்பெயர் நாடுகளிலுள்ள மாபியக் குழுக்களின் துணையுடன் செயற்படும் வட மாகாண சபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சுன்னாகம் நீர் நஞ்சாக்கப்பட்டது தொடர்பான விவகராங்களுக்கும் தனக்கும் நேரடியான தொடர்பில்லை எனவும், வட மாகாண சபையே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை இந்திய மற்றும் மேற்கு நாடுகளில் உளவு நிறுவனங்களில் அடியாட்களாகச் செயற்படும் புலம்பெயர் நாடுகளிலுள்ள ‘தமிழ்த் தேசிய’ வியாபாரக் குழுக்களுடன் இணைந்து ஐங்கரநேசன் மற்றும் சீ.வி.விக்னேஸ்வரன் நடத்திய அழிப்பு நடவடிக்கையில் மல்லாகம் நீதிமன்றத்தின் பிடியில் சிக்கியுள்ள ஐங்கரநேசன் கடந்தவாரம் நீதிமன்றத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜூட்சன் இன் துணிகர நடவடிக்கை ஐங்கரநேசனை மீள முடியாத சட்டச் சிக்கல்களுக்குள் உள்ளாக்கியுள்ளது.

சுன்னாகம் நீரையும் நிலத்தையும் நஞ்சாக்கிய பல்தேசிய வர்த்தக நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் ஐ காப்பாற்றும் நோக்கத்துடன் போலி நிபுணர் குழுவை அமைத்து போலி அறிக்கை தயாரித்த ஐங்கரநேசன் மற்றும் சீ.வீ.விக்னேஸ்வரன் குழு இன்று தமது குற்றச்செயலிலிருந்து தப்பித்துக்கொள்ள வட மாகாணசபையைத் துணைக்கு அழைக்கிறது.

எதிர்வரும் 19ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் முடிவுகளில் சீ.வீ.விக்னேஸ்வரன் செல்வாக்குச் செலுத்தி ஐங்கரநேசனைக் காப்பாற்ற முயல்வதாக இனியொருவிற்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட மாகாண சபையின் அங்கீகாரம் பெறாமல் ஐங்கரநேசன் மற்றும் சீ.வீ.விக்னேஸ்வரன் கூட்டு நடவடிக்கை ஊடாக அமைக்கப்பட்ட போலி நிபுணர்குழு தொடர்பான பொறுப்பை முழு வட மாகாணசபையும் ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைப்பதன் பின்புலத்திலிலிருந்து ஐங்கரநேசனைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மக்களின் அடிப்படை வாழ்வாதரப் பிரச்சனைக்கு அடிப்படைத் தீர்வைக்கூட முன்வைக்க மறுக்கும் சீ.வீ.விக்னேஸ்வரன் கும்பல் தண்டனைக்குரிய குற்றவாளிகள்.