பெப்பிலியான முஸ்லிம் வர்த்தக ஸ்தாபனம் தாக்கப்பட்டது சிங்கள பௌத்த இனவாத, மதவாத சதிகாரர்களின் திட்டமிட்ட செயலாகும் என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச்செயலாளர் மொகமட் பைசால் தெரிவித்தார். பெப்பிலியான முஸ்லிம் வர்த்தக ஸ்தாபனம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம்களின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் மத வழிபாட்டு மார்க்கத்தையும், இஸ்லாமிய கலாசாரத்தையும் தடுத்து நிறுத்தவோ அல்லது திருத்தவோ யாரையும் அனுமதிக்க கூடாது. எமது மதத்தையும், கலாசாரத்தையும்
டெசோ மாநாட்டில் இலங்கையில் தனி ஈழம் கிடைக்க கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்து போர்க் கொடி உயர்த்தினால் நாங்களும் அவருடன் போராட தயாராக இருக்கிறோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். அப்பாவி மக்களின் வாக்குக்களைப் பொறுக்கி பதவியைக் கைப்பற்ற நினைக்கும் இந்தக் கட்சிகள் ஈழப் பிரச்சனையை தமது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மானிலச் செயலாளருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அறியத்தக்கதாக கருணாநிதி தமிழீழத்திற்கான தீர்மானத்தைக் கொண்டுவர முடியாது
நாய்க்குட்டி ஒன்றை தனது மனைவிக்காக கோதாபாய ராஜபக்ச சுவிஸ் நாட்ட்லிலிருந்து தருவிக்க முயன்றுள்ளார். அதற்காக பயணிகள் விமானம் ஒன்றை செலுத்துவதற்கு கோதாவின் நண்பரான பிரவீன் விஜய சிங்கவை அவர் நியமித்துள்ளார். அந்தக் குறித்த விமானத்தை அவர் செலுத்துவதற்கு தகுதியற்றவர் என்பதால் விமானச் சேவையில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து கோதாபயவை கேள்விகேட்ட பெரடிக்கா ஜோன்ஸ் என்ற இலங்கை ஊடகவியலாளரை கோதாபய ராஜபக்ச கெட்டவார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார். உரையடலின் நடுவே நீங்கள் என்னை மிரட்டுகிறீர்களா என அந்த ஊடகவியலாளர்
வவுனியா சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதிகள் மீதான இலங்கை பாதுகப்பு படையினரின் மூர்ககத்தனமான கூட்டு தாக்குதலை இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் வன்மையாக கண்டிக்கிறது. அரசாங்கத்தினால் பயங்கரவதிகளாக அழைக்கப்படும் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைத்து சித்திரைவதை செய்வதை விடுத்து எந்த வித நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்ய வேண்டுமென்று மீண்டும் அழுத்தம் திருத்தமாக கேந்திரம் கோருகிறது. இவ்வாறு இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் அழைப்பாளர்களான தோழர்கள் இ.தம்பையா, டபிள்யூ .வீ சோமரத்ன விடுத்துள்ள
பல அகதிகள் 25 வருடங்களுக்கு மேலாக அங்கே வாழ்கிறார்கள். அவர்களது குழந்தைகள் திருமணம் செய்துகொண்ட பின்னர் கூட அங்கே அகதி முகாம்களிலேயே வாழ்கிறார்கள்.
காட் ஒப்பந்தம் என்கிற அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டதை அடுத்து வந்த காட்ஸ் ஒப்பந்தத்தின்படி கல்வி, மருத்துவம், குடிநீர், உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட அனைத்து ’சேவை’த் துறைகளையும் தனியார்மயமாக்கி கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளைக்கு திறந்துவிடும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது இந்திய அரசு. இலவசமாக வழங்க வேண்டிய அடிப்படை கல்வியிலிருந்து உயர் கல்வி வரையிலான மொத்த கல்வித்துறையையும் தனியார் முதலாளிகளுக்கு திறந்துவிட்டு, கல்வி அளிக்கும் சேவையிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளில் ஒன்று தான் ’கட்டாய இலவச கல்வி உரிமைச்
கொழும்பு வந்த இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்டமுக்கியஸ்தர்களை மேனன் சந்திக்க உள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்குஆதரவளித்ததன் பின்னர் நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை என்பதனால் இந்த விஜயம்முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய அரசின் நலன்களை உறுதிப்படுத்தவே இந்தச் சந்திப்பு நிகழ்கிறது. இந்திய அரச ஆதரவுடன் வன்னிப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு மூன்று வருடங்களின் இந்திய
சனத்தொகை மற்றும் வீடுகள் தொடர்பான புதிய தகவல்களின்படி இலங்கையின் மொத்த சனத்தொகை இரண்டு கோடியே இரண்டு லட்சத்து 77 ஆயிரத்து 597 என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகை இரண்டு கோடியை தாண்டியிருப்பது இதுவே முதல் முறையாகும். 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த சனத்தொகையானது ஒருகோடியே 87 லட்சத்து 97 ஆயிரத்து 257 ஆக இருந்தது. 2012 மார்ச் 20 ஆம் நடத்தப்பட்ட புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் அறிக்கை நேற்று (26) ஜனாதிபதி
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், அந்த கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மூன்று பேர் கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் தானும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும் இதுகுறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் அரசியல் செயற்பாடுகளை புரிந்து கொள்ள முடியாததால், கட்சிக்குள் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன எனவும் தைலேஸ்வரராஜா
தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு தடுப்பு முகாமில் இருந்து தங்களை வெளியேற்றுமாறு அங்குள்ள முகாம் வாசிகள் கடந்த ஒருவார காலமாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எட்டு பேர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழம் பெற்றுக்கொடுப்போம் என்ற முழக்கத்தின் கீழ் அரசியல் இலாபம் ஈட்டும் தமிழ் நாட்டின் தமிழ் இனவாதக் கட்சிகள் முகாம்களில் வதைக்கப்படும் ஈழத் தமிழர்கள் குறித்துக் கண்டுகொள்வதில்லை. இன வெறுப்புணர்வைத் துண்டும் வகையில்