குறிப்பு : இன்னமும் பாதுகாப்பற்ற சூழலிலேயே வாழும் ஐயர், தனது முழுமையான இயற்பெயரைத் தவிர்த்தே வருகிறார். தமிழ் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட வரலாற்றின் ஒரு பெரும் பகுதி ஐயரோடு பிணைந்திருக்கிறது. ஐயரை அறியாத போராட்ட முன்னோடிகளைக் காண்பது அரிது. ஆரம்ப காலங்களில் அமைப்பின் பணத்தேவைகளுக்காக கோவிலில் பிராமணர் தொழிலை மேற்கொண்டவர் என்பதால் இவர் தனக்குத் தானே சூட்டிக்கொண்ட பல்லவன் போன்ற புனை பெயர்கள் கூட நிலை பெறவில்லை. ஐயர் அவரின் “ஐயர்” அடையாளத்தைக் கிஞ்சித்தும் விரும்பாதவர். நாத்திகர். தவிர, இலங்கைச் சாதியமைப்பில் பிராமணர்கள் ஆதிக்க சாதியினர் அல்லர். தமிழ் நாட்டின் ஐயர் அடையாளத்திற்கும் இலங்கையில் அதன் பாவனைக்கும் மலையளவு வேற்றுமைகள் உள்ளன. -இனியொரு.
நானும் சற்குணமும் காட்டிலுள்ள குடிசையில் அமர்ந்திருக்க, பிரபாகரனும் குமரச்செல்வமும் மைக்கலைச் சற்றுத் தொலைவே கூட்டிச்செல்கிறார்கள். மைக்கலைக் கூட்டிச்சென்ற இரண்டு நிமிடத்திற்கு உள்ளாகவே துப்பாக்கி வெடிச் சத்தம் ஒன்று கேட்கிறது. நாம் அதிர்ந்து போகிறோம். மைக்கல் தான் பேசுவது எதையுமே கேட்கிறாரில்லை. அவர் இயக்கத்தை விட்டு வெளியே போகப்போவதாகச் அடம்பிடித்தார் அதனால் நான் சுட்டுக் கொன்றுவிட்டேன் என்கிறார்.
ஆம், அது நடந்துவிட்டது மட்டக்களப்பில் தமிழுணர்வுப் போராட்டங்களை நடத்திய மைக்கல் இப்போது எம் மத்தியில் இல்லை. வெறுமனே தூய இராணுவக் குழு ஒன்றையும் அதற்கான ஒழுங் முறைகளையும் உருவமைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இவற்றையெல்லாம் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கு எமக்குத் தெரிந்திருக்கவில்லை. உலகில் வெற்றி கொண்ட போராட்டங்களெல்லாம், மக்கள் அமைப்புக்க்களை உருவாக்குவதிலும்,கட்சியை உருவாக்குவதிலும், அவற்றிலிருந்து கெரில்லா இராணுவ அமைப்புக்களைக் கட்டியமைப்பது குறித்தும் தான் நாம் பின்னர் கேள்வியுற்றோம்.
இதற்கு மாறாக, இராணுவ அமைப்பைக் உருவாக்கிக் கொள்வதைப் பற்றிச் சிந்தித்த எமக்கு, நாமும் எமது போராளிகளும் மட்டுமே மக்கள்.அதிலிருந்து வெளியிலிருப்போரோ, விலகிச்செல்வோரோ, யாராகவும் இருக்கலாம்; எதிரியாகவோ, எதிரியின் நண்பனாகவோ, துரோகியாகவோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவ்வாறு தலைகீழாக ஆரம்பித்த எமது அரசியலை வழி நடத்தவோ, எம்மோடு விவாதிக்கவோ, அரசியல் குறித்துப் பேசவோ யாரும் இல்லை.
இதனால் இந்தக் கொலையெல்லாம் எமக்கு நியாயமாகத் தான் தெரிந்தன. எமது இரகசியங்களைத் தெரிந்து வைத்திருந்த மைக்கல் வழியாக இவையெல்லாம் வெளியே செல்லுமானால், நாம், நமது இருப்பிடங்கள் காட்டிக்கொடுக்கப்படும். நாம் கனவுகண்ட தமிழ் ஈழம் சிதைக்கப்படும். இவ்வாறு தான் நானும் பிரபாகரனும் ஏனையோரும் சிந்தித்திருந்தோம்.
என்ன செய்வது எமது ஆரம்ப அரசியல் தவறுகள் கொலைகளை அங்கீகரிக்கும் வரை எம்மை நகர்த்தி வந்திருக்கிறது என்பதை பிற்காலங்களில் சுயவிமரசன அடிப்படையில் பார்த்திருந்தாலும், அவ்வேளையில் எமக்கு அது நியாயமாகத் தான் தெரிந்தது.
சில நிமிடங்களின் முன்னர் எம்மோடு பேசிக்கொண்டிருந்த மைக்கல் இப்போது எம்மோடு இல்லை. இதயம் கனத்தது. தமிழீழக் கனவுக்காக இதையெல்லாம் தாங்கிக் கொண்டோம். பின்னர் சற்குணம், நான், பிரபாகரன், குமரச்செல்வம் ஆகிய நால்வரும் சேர்ந்து இரவிரவாக மைக்கலின் உடலைக் காட்டினுள் எரிக்கிறோம். கோரம் கவ்விய இரவு! ஓசைபடாத தமிழீழக் கனவு மட்டும் தான் எம்முள் ஒளிர்விட்டுக் கொண்டிருந்தது!!
நாம் உறங்கவில்லை. தம்பியும் குமரச்செல்வமும் புகையிரத்தில் ஏறி யாழ்ப்பாணம் திரும்புகின்றனர். நானும் சற்குணாவும் காட்டினுள் தொடர்ந்து தங்கியிருந்து இறுதியில் எரிந்து முடியும் வரை காத்திருந்துவிட்டு மதியப் புகையிரதத்தில் ஏறுகிறோம். யாழ்பாணம் நோக்கி எமது புகையிரதம் எமது நினைவலைகளோடே நகர்ந்துகொண்டிருந்தது. இந்தச் சம்பவம் எமது நான்குபேரையும் தவிர வேறு எவருக்குமே தெரிந்திருக்கவில்லை.
இந்தக் காலகட்டத்தில் குட்டிமணி, தங்கத்துரை போன்றோர் இந்தியாவிலிருந்து திரும்பி வருகிறார்கள். அவர்களது தொடர்புகளும் எமக்கு மறுபடி கிடைக்கிறது.
அவர்கள், எமக்கு வெளியில் தாமே திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அவையெல்லாம் முழு வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில் அவர்களுடைய நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கோடு அவர்களில் இருவருக்கு துப்பாகி சுடக் கற்றுக் கொடுப்பது என்ற முடிபிற்கு வருகிறோம்.
இந்த முடிபின் அடிப்படையில் எமது புளியங்குளம் முகாமில் தங்கத்துரை மற்றும் ராசுப்பிள்ளை ஆகியோருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்குகிறோம். இவர்கள் புதிய புலிகள் அமைப்பில் இல்லாதிருந்தாலும், நட்புசக்தி என்ற அடிப்படையில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்கள் அப்போது ரெலோ TELO என்ற அமைப்பை உருவாக்கியிருக்காவிட்டாலும், தனியான ஒரு குழுவாகச் செயற்பட்டனர்.
பிரபாகரனோ அல்லது புதிய புலிகள் அமைப்பிலிருந்த எவருமோ அவரை எம்முடன் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் வேறுபட்டவர்களாக இருப்பதையே நாம் அனைவரும் விரும்பினோம்.தங்கத்துரை குட்டிமணி போன்றோர் பிரதானமாகக் கடத்தல் தொழிலையையும், வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பகுதி நேரமாகவுமே மேற்கொள்கின்றனர். இதனடிப்படையில் அவர்களை உள்வாங்காமல், நட்பு சக்தி என்ற அடிப்படையில் அவர்களுக்கு உதவிகளை வழங்கினோம்.
இவ்வேளையில் எமக்கு இன்னொரு பிரச்சனை எழுகிறது. மைக்கலைக் கொலைசெய்வதில் பங்காற்றிய குமரச்செல்வம் எம்முடனான தொடர்புகளைக் குறைத்துக் கொண்டமை எமக்கு அதிர்ப்தியையும் பய உணர்வையும் ஏற்படுத்துகிறது.
அவரைப் பலதடவை நாம் நேரடியாகவும், மற்றவர்களூடாகவும் அணுகிய வேளைகளிலெல்லாம், சுகவீனம், வேறு வேலைகள் போன்ற காரணங்களைக் கூறியனுப்பினார். சில மாதங்களில் தொடர்புகளை முற்றாகவே துண்டித்துக் கொள்கிறார். இதே வேளை இயக்கத்திற்குரிய இருபதாயிரம் ரூபா வரையிலான பணமும் அவரிடம் இருந்தது. அவற்றை எம்மிடம் ஒப்படைக்கவோ அதற்குரிய செலவீனங்களுக்குரிய காரணங்களை முன்வைக்கவோ அவர் முன்வரவில்லை.
நாம் விசாரித்த வரையில் அவர் மேடை நாடகக் கலைஞனாகவும் இருந்ததால் எமது பணத்தை வைத்து தனது நாடகத் தொழிலில் முதலிட்டு செலவாக்கியிருந்தார் எனத் தெரிந்து கொண்டோம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் குலம் கூட மைக்கல் கொலை செய்யப்பட்டதை அறிந்து கொள்கிறார். ஆக, நான் மற்றும் குலம் ஆகியோர் மைக்கலைப் போலவே குமரச்செல்வமும் தவறிழைத்திருக்கிறார் அவரும் கூடக் காட்டிக் கொடுப்பாளனாக மாறலாம் என்று பிரபாகரனிடம் சுட்டிக்காட்டுகிறோம்.
மைக்கல் சுடப்பட்டது சரியானால் குமரச்செல்வமும் சுடப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கையை முன்வைக்க, பிரபாகரன் வெவ்வேறு காரணங்களைச் சொல்கிறார். குமரச்செல்வம் பிரபாகரனின் நெருங்கிய நண்பரும் ஒரே ஊரைச் சேர்ந்தவரும் ஆவர். அவ்வேளைகளில் தனக்குப் பிறகு குமரச் செல்வத்தையே எல்லா விடயங்களிலும் முதன்மைப் படுத்துவார்.
இறுதியில், குமரச்செல்வத்தைப் பேசுவதற்கு அழைத்தால் அவர் வர மறுத்துவிடுவார், தவிர வல்வெட்டித்துறையில் வைத்து பொதுமக்கள் மத்தியில் சுட்டால் ஊரில் பிரச்சனையாகிவிடும் அதனால் வேறு சந்தர்ப்பங்கள் வரும் போது கொலை செய்துவிடலாம் என்கிறார். ஆனால் இறுதிவரை அவர் கொலை செய்யப்படவே இல்லை.
இப்போது மத்திய குழுவில் அவரும் இல்லை. உதயகுமார் தான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன் எனக் காரணம் காட்டித் தொடர்புகளைக் குறைத்துக் கொள்கிறார். பின்னதாக முற்றாக தொடர்பற்றுப் போகிறார். சில மாதங்களுக்கு உள்ளாகவே பட்டண்ணாவும் உடல் நிலை குன்றியிருந்த காரணத்தால் தொடர்புகளை நிறுத்திக் கொள்கிறார். இப்போது மத்திய குழுவில் நானும் தம்பி பிரபாகரனும் மட்டுமே எஞ்சியிருந்தோம். ராகவன் போன்றோர் இன்னும் மாணவர்களாகக் கல்வி கற்றுக்கொண்டிருந்த சூழலில் ஆதர்வாளர் மட்டத்திலேயே தொழிற்பட்டனர்.
எமது ஆரம்ப உறுப்பினர்களின் நிலையற்ற தன்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. புத்தூர் வங்கிக் கொள்ளைப் பணத்தில் தனது குடும்பச் செலவிற்கு என்று ஐந்தாயிரம் ரூபா பெற்றுக்கொண்ட ஜெயவேல் இப்போது நம்மை நோக்கி வருவதே இல்லை. அவர் ஒரு மீன் பிடித் தொழிலாளி தான். எம்மிடம் பணம் பெற்றுக்கொண்ட பின்னர், அதை வைத்து ஆடம்பரமாக செலவாடித் திரிவதாக நாம் தகவல் அறிந்திருந்தோம். இவர் பண்ணைக்கு வருவார் என வவுனியா புகையிரத நிலையத்தில் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த சம்பவத்தை முன்னமே கூறியுள்ளேன். இவையெல்லாவற்றையும் பிரபாகரன் மறுபடி நினைவுறுத்தி, அவரையும் கொலைசெய்ய வேண்டும் என்கிறார்.
பிரபாகரன் எம்மிடம் சொல்கிறார்,கொலை செய்து பழக்கப்பட்டால் தான் மனத்தில் உரமேறும். அதை நீங்கள் தான் இப்போது நிறைவேற்ற வேண்டும் என்கிறார்.வழமை போலவே எமக்கும் அது நியாயமாகப் படுகிறது. ஆக, கொலை செய்யப்பட வேண்டும் என்ற முடிபுக்கு வருகிறோம்.
ஜெயவேலைக் கொலைசெய்வதற்கான பொறுப்பை சற்குணத்திடமும் என்னிடமும் தம்பி பிரபாகரன் ஒப்படைக்கிறார். ஆரம்பத்தில் நாம் தயங்கினாலும், பின்னர் பிரபாகரனின் தொடச்சியான வற்புறுத்தியதால் இணக்கம் தெரிவித்துக் கொள்கிறோம். பின்னதாக ஜெயவேலைச் சுட்டுக் கொலை செய்வதைவிட விஷம் கொடுத்துக் கொலைசெய்வதே சிறந்த வழியென்று பிரபாகரன் எமக்கு அறிவுறுத்துகிறார்.
அதற்கான விளக்கத்தை அவரே முன்வைக்கிறார். ஜெயவேல் கராத்தேயில் தேர்ச்சி பெற்றவர். நாங்களோ கொலைக்குப் புதியவர்கள்; அனுபவமற்றவர்கள். ஆக, நாம் கொலைசெய்ய முற்படும் போது அவர் எங்களை மீறி எம்மைத் திருப்பித் தாக்கிவிடுவார் என்பதே பிரபாகரனின் அந்த விளக்கமாக இருந்தது.
இது கூட எமக்கு நியாயமாகத் தான் தெரிகிறது. பின்னதாக ஜெயவேலைப் புளியங்குளத்திற்கு அழைக்கிறோம். கொழுத்தும் வெயிலில், நானும் சற்குணமும், குலமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நேரத்தை விரட்டியடித்துக் கொள்கிறோம். நேரம் நகர்கிறது. ஒரு புறத்தில் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றி முடித்துவிட வேண்டும் என்ற ஆதங்கம். மறுபுறத்தில் எம்மைத் தடுக்கும் மனிதாபிமானமும் பய உணர்வும். எமது நீண்ட மனப் போராட்டம் மூளையில் உட்கார்ந்து சோகமாய் குடைந்து கொண்டிருக்க ஜெயவேல் வருகிறார். நாம் எதிர்பார்த்திருந்தது போலவே அவர் நேரத்தைத் தவறவிடாமல் அங்கு வந்து சேர்கிறார்.
அன்றெல்லாம் பல்தேசியக் கம்பனிகளின் கோலாவும், பன்டாவுமா இருக்கும்? வெறும் சோடா தான். இலங்கையின் தேசிய உற்பத்தி! நாம் ஒவ்வொரு சோடாவையும் வாங்கிக் கொள்கிறோம். அதில் ஒன்று ஜெயவேல் அருந்துவதற்கானது. அது மட்டுமல்ல அது அவரின் உயிரையும் அருந்தப்போகும் பானம். ஆம் அதற்குள் நஞ்சைக் கலந்திருந்தோம். சில நிமிடங்களில் எமது கண்முன்னேயே ஜெயவேல் மரணிக்கப் போகிறார்.
ஜெயவேல் எம்மோடு உட்கார்ந்து கொண்டு நண்பர்கள் போல உரையாடுகிறோம். சோடாவை அவர் தனது வாய்க்கருகே கொண்டு போகிறார். நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம். சோடாவைச் சுவைத்த ஜெயவேல் அது கசக்கிறது என்றும் தனக்குக் அருந்த விருப்பமின்றி இருப்பதாகவும் கூறி அங்கேயே வைத்துவிட்டு சில மணி நேரங்களின் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார். ஜெயவேல் இறுதியில் தப்பிவிட்டார். ஒரு கொலை நிகழவில்லை. அவர் நின்று, நேர்கொண்ட பார்வையுடன் எம்மை விட்டு நகர்கிறார்.
இதே காலப் பகுதியில், சில இளைஞர்கள் இணைந்து உரும்பிராய் பெற்றோல் நிலைய நடராஜாவை கொலை செய்கின்றனர். இந்தக் கொலையை மேற்கொண்டவர்கள் உரும்பிராய் பாலா, தங்கா , பேபி சுப்பிரமணியம் ஆகியோர். நான் அறிந்தவரை பேபி சுப்பிரமணியம் இந்தச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் இதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்றே கூறப்பட்டது. தங்கராஜாவும், பாலாவும் இதில் நேரடியாக ஈடுபட்டனர் என்பது உண்மை.
இந்த நடராஜா என்பவரே சிவகுமாரனைக் காட்டிகொடுத்தார் என்பதே அவர் மீதான குற்றசாட்டு. இது தவிர அப்போது ஆட்சியிலிருந்த சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் கூட. கொலையைத் திட்டமிட்டு நிகழ்த்திய இந்த மூவரும் தன்னிச்சையாகவே இதை மேற்கொண்டனர். இவர்கள் எந்த நிறுவன மயப்பட்ட அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்ல எனினும் இவர்கள் மூவருமே தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள்.
உரும்பிராய் பாலா இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட விபரம் தெரியவர அவர் தேடப்படுகிறார்.சில மாதங்களின் பின்னர் இவ்வாறு தேடப்படும் சந்தர்ப்பத்திலேயே பாலா, பேபி சுப்பிரமணியம், தங்கா ஆகிய மூவரும் எம்மைப்பற்றி அறிந்து எம்மோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்தத் தொடர்புகளூடான உரையாடல்களின் பின்னர் அவர்களும் எம்மோடு இணைந்து இயங்க ஆரம்பிக்கின்றனர். இதே வேளையில் லண்டனிலிருந்து இலங்கை வந்திருந்த விச்சேஸ்வரன் என்ற விச்சு என்பவரும் எம்மோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கிறார்.
இப்போது நாம் இருவரும் தான் எல்லா முடிபுகளையும் மேற்கொள்வோம். மறு புறத்தில் எமது வேலைப் பழு அதிகமாகிக் கொண்டு செல்கிறது. பண்ணைகளை விஸ்தரித்தல், இராணுவப் பயிற்சி, புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளல், பணத்தை ஒழுங்கு படுத்தல் என்ற பல்வேறு சுமைகள் எமது இருவர் பொறுப்பிலும் வந்து சேர்கிறது.
துரையப்பா கொலைச் சம்பவத்தில் திட்டமிடல் ஒழுங்குபடுத்தல்களுக்கு உதவிசெய்த நாகராஜாவும் பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார். பின்னர் அவர் கொழும்பில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் வேலை பார்த்துக் கொண்டே எம்மோடு தொடர்புகளைப் புதுப்பித்து இணைந்து கொள்கிறார். இதே வேளை பூந்தோட்டம் பண்ணையை உருவாக்குவதற்கான காணியைப் பெற்றுக்கொள்ள உதவிய கணேஸ் வாத்தி எம்மோடு தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்கிறார். இறுதியில் இந்த இருவரும் புதிய புலிகளில் இணைந்து கொள்கிறனர். இருப்பினும் இவர்கள் இருவரும் தமது உழைப்பிற்கான தொழிலைக் கைவிட்டாமலே பகுதி நேரமாக எம்மோடு உறுதியாகப் பங்காற்ற முன்வருகின்றனர்.
இரண்டு பேராகச் சுருங்கிப் போன மத்திய குழு தவிர, பண்ணையில்ருந்த உறுப்பினர்கள் முழு நேரமாக பண்ணையில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வேளையில் புதிய மத்திய குழு ஒன்றைத் தெரிவு செய்யும் முடிபிற்கு வருகிறோம்.
அந்த மத்திய குழுவில், பேபி சுப்பிரமணியம், நாகராஜா, கணேஸ் வாத்தி, தங்கா, விச்சு, நான், பிரபாகரன், , குலம், பின்னதாக இந்தியாவிலிருந்து வந்து திரும்பி வந்த பற்குணம் ஆகியோர் அங்கம் வகிக்கிறோம். இந்த மத்திய குழுவில் தான் புதிய புலிகள்(TNT) என்ற அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE) என்று ” உத்தியோக பூர்வமாக” பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. 1976 இறுதிப்பகுதிதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பமாகவும் அமைகிறது. இந்த மத்திய குழுத் தெரிவுக் கூட்டம் வவுனியா பூந்தோட்டம் பண்ணையில் தான் நடைபெறுகிறது. இங்கு கூடியிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை முன்மொழிகிறோம். நானும் கூடத் தான். எமது இயக்கத்தின் புதிய பெயரைத் தெரிவு செய்வதில் அனைத்து உறுப்பினர்களும் ஆர்வம் கொண்டு விவாதிக்கிறோம். வெவ்வேறு பெயர்கள் சொல்லப்பட்டு இறுதியாக பல்வேறு தெரிவுகளின் கூட்டாக “தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்” என்ற பெயர் உருவாகிறது.
மத்திய குழு உறுப்பினர்கள் குறித்த சிறு விபரக் குறிப்பு, இந்தியா சென்றிருந்த பற்குணத்தின் மீழ் வருகை, தமிழீழ விடுத்லைப் புலிகளின் ஆரம்பக் குறிப்புகள், சில தாக்குதல் சம்பங்கள் போன்றன பகுதி நான்கில் வரும்…
பின்னூட்டங்களுக்கான குறிப்பு:
தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பகால நிகழ்வுகள் குறித்த இந்தத் தொடரின் பிரதான நோக்கம் இதனை முழுமைப்படுத்தி ஆவண நூலுருவில் வெளிக்கொணருவதே. இதற்கான ஆரம்ப நிலை முயற்சி மட்டுமே இத்தொடர். இதனூடாக பரந்துபட்ட அனுபவத் தளம் ஒன்றை உருவாக்கிக் கொள்வதும், நுண்ணிய தகவல்களை உள்வாங்கிக் கொள்வதும் அவற்றினூடாக எனது நூலை முழுமைப்படுத்துவதுமே எனது நோக்கம். ஆக, ஏனைய வாசகர்களும் ஆர்வலர்களும், என்னோடிணைந்திருந்த சமகாலத்தவர்களும், தகவல்களை மேலும் நுண்ணியமானதாக்க அவர்களின் பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்.இப்போது எனது குறிப்புகள் அனைத்தும் எனது நினைவுகளின் அடிப்படையிலிருந்தே பதியப்படுகின்றது. போராட்டத்தின் அவலங்களின் நடுவே எனது முன்னைய எழுதப்பட்ட ஆவணம் தொலைந்து போனது துயர் மிக்க சம்பவமாகும்.
நூலுருவில் வெளியிடுவதற்கு முன்பதாக,
1. பத்திரிகைகள், துண்டுப்பிரசுரங்கள், புகைப்படங்கள் போன்ற ஆவணங்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
2. என்னோடான சமகாலத்தவர்களுடன் தொடர்புகளை வலுப்படுத்தி, திகதி வாரியான தகவல்களைத் திரட்டுகிறேன்.இந்த முயற்சிகளுக்கு எனது இணையத் தொடர் பங்களிப்பு வழங்கும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
திருநாவுக்கரசு என்பவர் வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதைச் சுட்டிக்காட்டிய வாசகருக்கு எனது நன்றிகள். காங்கேசந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், நான் குறிப்பிட்ட காலப்பகுதியில் காங்கேசந்துறையில் தேர்தலில் போட்டியிட்டு, பின்னதாகத் தோற்றுப் போனவர்.
தவிர, இன்று ஐரோப்பா சார் புலம் பெயர் இணையத் தளங்களிடையே நிகழும் குழுவாத கோஸ்டிச் சண்டைக்குள் வரலாற்றுப் பதிவுகள் அமிழ்ந்து போகாது, சமூக உணர்வுடன் அனைவரும் பங்களிக்க முன்வருவதனூடாக புதிய சிந்தனை முறையினை வளர்க்கலாம் என்பதே எனது கருத்து.
புன்னாலைக்கட்டுவனைச்சேர்ந்த ஐயர் கணேஸூ ஏங்கள் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் அர்ச்சகர் இதில் என்ன ரகசியம் உள்ளது?
இதை அய்யர் ஒரு பத்துவருசத்துக்கு முந்தி எழுதித்தொலைச்சிருக்கலாம். ஒரு பத்தாயிரம் சனமாவது தப்ப வாய்ப்பிருந்திருக்கும்.
எழுதித்தொலைச்சிருக்கலாம். அதோடே அய்யரும் தொலைஞ்சிருக்கலாம்.
ஐயர் இரண்டு சதாப்தற்திக்கு முன் எழுதியிருக்க வேண்டியதை இப்ப எழுதுகிறார். எனவே இதற்கு பாpகாரமாக உண்மையை பதிவுசெய்யவும்
“எங்கள் தலைவன் சூரியதேவனின் மைந்தன் கர்ணன்”
தலைவர் த்ன்னயும் தன் கொள்கைக்கும் குந்தகம் விளைவித்தவர்,எதிர்த்தவ்ர்கள் உலகத்தலைவரானாலும் சரி ஊர்த்தலைவரானாலும் சரி விட்டுவைக்கவிலலை என்பது உலகறிந்த உண்மை(டக்ளஸ் தப்பியிட்டான்) ஆயினும் தனது ஆரம்பகாலத்தில் அரசால் தேடப்பட்ட நிலையில், உண்ண உணவு கொடுத்த ஐயரையும் பாதுகாபபான் வீடு கொடுத்த் ராகவனையும் எதிர்த்து செயற்பட்ட வேளையிலும் செய்நன்றி மற்வாக்க்ர்ண்ணனாக மன்னித்தார். ஐயரே! அதனை ம்ற்வாதீர்!! செய்ய நினைத்தால் அந்தநேரத்தில் இலகுவாகச்செய்திருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியாத விடயமல்ல
ஐயரே, உம்மை,ராகவனையெல்லாம் போடுவத்ற்கு தள்பதிகள் துடித்தார்கள் “தலைவன்தான் தடுத்தான் அடக்கினான் ம்றவாதீர்
Pirabakaran is dead. All the thalapahtys gone. no more puli in eelam. not even dead puli.. (becuase amry destroying all maveerar mayanangal.
After 30 years of killings, what does thalaivar and his thalapthys have to show to the tamil people? Only maveerar thuyilum illangal. What a waste of our lives..
Thalavar pirbakaran than muthal thamil thurogi. Amry avar mandaiayi pillaka viddal, tamil people would have done it.
கண்ணன் , தண்ணீ போட்டா…பாறீல போய் பேசு , எலும்பு இல்லாத நாக்கு எண்டு ..எதுவும் பேசாதே…..காகம் தி ட் டி….மாடு சாகாது…மல்லாக்க கிடந்து.. நி எச்சி துப்புராய்……..நி மட்டும் இல்ல..இஙக பல பேர் அதைதான்.. சய்யினம்……ஒர் துரொகிக்கு பின்னால் இவ்ழொ பேர் நிக்கிரம்…எண்டால்….அவர் நிட்ஷியம் துரொகியாய் இருக்க மாட்டார்…விடுதலை வீரன் ஆய்தான் இருப்பார்…. நீ என்னடா..செத்துப் போன உன் பாட்டனெ….வந்து சொன்னலும்..இதுதான்டா உண்மை , வலியது வாழும்……எழியது வீழும்….தமிழர்கழ் நீங்கழ் எல்லாம் ஒண் டாய் இருந்து….வலியனவாய் ..இருக்க போரீங்கழா…….இல்லா…..?
தலைவனைப் போடுவதற்கு தமிழினமே தவித்தது. ஆனால் சிங்களவன் முந்திவிட்டான். தவறினால் வன்னி மக்களே தலைவனைத் தலையில் போட்டிருப்பார்கள்.
சாந்தன்……உன்னுடைய இந்த அற்புத அரிய கண்டு பிடிப்புக்கு….உணக்கு ………ஆஸ்கார் விருது…………செவாலியார் விருது……இந்தியாவின் பத்மசிறி விருது தருவாங்கள் இது எல்லாம் ஒரு பிழைப்பு…? நீ வன்னி மக்கள் எண் டு யாரை சொல்லுறாய் எண் டு எனக்கு தெரியும் வன்னி மக்கள் = சித்தார்த்தன் & ; சங்கரி , யாழ் மக்கள் = டக்கிளஸ் & சிறிதர் , கிழக்கு மக்கள்= கருணா & பிள்ளயான்…….. நாய்களுக்கு நடுக்கடல் போனாலும் நக்கு தண்ணி நக்கு தண்ணி தான்………………ராஜா சோழன் எங்கள் தலைவன்…..
//தலைவர் த்ன்னயும் தன் கொள்கைக்கும் குந்தகம் விளைவித்தவர்,எதிர்த்தவ்ர்கள் உலகத்தலைவரானாலும் சரி ஊர்த்தலைவரானாலும் சரி விட்டுவைக்கவிலலை//
முள்ளிவாய்க்கால் அப்பாவி மக்களையும் தான் அவர் விட்டு வைக்கவில்லை அப்பு!
ஐயர் மத்திய குழு உ|றுப்பினர். சாப்பாடு கொடுத்ததாகக் கொச்சைப்படுத்தும் உங்கள் கேவலமான மென்டாலிட்டி தான் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்தது. மக்களை அழித்தது. ஐயர் அவர்களே உங்கள் தியாகத்தை மதிக்கும் மக்களும் இருக்கிறார்கள். இதுவரை எழுதியவாறே உண்மையை எழுதுங்கள்.
ஐயரே உண்மயை எழுதும் தலைவனை மாசுபடுத்தாமல
ஏன் எல்லோரும் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்?உள்ளதை எழுதினால் துரோகிப் பட்டமா?காட்டிக் கொடுப்புகள் தொடரட்டும்.உடம்புக்கு நல்லது.
இங்கு தங்கராஜா என்பவர் ***** தங்கராஜா என்ற ****** சகோதரன் என்ற பதிவு இடம்பெறவேண்டும்.
விச்சுவேஸ்வரன் , உமாமகேஸ்வரன் இருவரும் பலஸ்தீன பயிற்சிக்கு புலிகளின் சார்பில் சென்றவர்கள். என்பதும் வி.பு.இயக்கம் தாபிக்கப்பட்ட பின்னர் தான் புலிகள் இயக்கத்தில் உமா சேர்ந்துகொண்டவர் என்பது இந்த பதிவின் மூலம் உறுதியாகியுள்ளது. ஏனெனில் புலிகள் இயக்கத்தின் முதல் தலைவர் உமா என்ற பிரச்சாரம் இதன் மூலம் அடிபட்டுப்போகிறது. விச்சு தற்போது கனடாவில் வாழ்கிறார்.
மதியாபரணம், லோகநாதன்(மாறன்), திசைவீரசிங்கம் தொடர்பான புதிய தமிழ் புலிகளின் பங்களிப்பு தொடர்பு பற்றி ஜயரிடம் கேட்டு பதியவும்.
கூடவே வரப்பிரகாசம் என்ற ஒருவரும் பு.த.புலிகள் இயக்கத்துடன் சம்பந்தப்பட்டதாக கேள்வி. அது பற்றியும் பதியவும்
ஐயரை அறியாத போராட்ட முன்னோடிகளைக் காண்பது அரிது!!!!!! இனியொரு.
இன்னமும்
பாதுகாப்பற்ற சூழலிலேயே வாழும் ஐயர், தனது முழுமையான இயற்பெயரைத் தவிர்த்தே வருகிறார். ????????
இனியொரு.
ஒண்ணுமே புரியெல்லை
.
இ
து ஒரு புறமிருக்க யான் இரண்டாம் பாகத்தில் எழுதிய கருத்தில் சில ஆரம்பகால உறுப்பினர்களின் விபரம் தெரிந்தும் பெயர்களை ,பொதுவான இருப்பிட விபரங்களை மட்டுமே குறிப்பிட்டேன். காரணம் அவர்களுக்கும் சபாலிங்கத்தின் நிலை வந்துவிடக்கூடாது என்பதுதான் .சபாலிங்கத்தை கூட இருந்தவர்கள் தான் காட்டிக்கொடுத்தவர்கள் .பத்மனாபாவிற்கு நடந்த அதே பாணியில் உண்டவீட்டிற்கே துரோகமிளைத்தவர்கள் தான் பிரான்ஸ்சில் இருந்த, இருக்கின்ற இந்த அறிஞர்களும் அவர் நண்பர்களும்.இவர்களிலொருவர் ஐயருக்கு உறவோ அது எனக்குத்தெரியாது. எனவே, குறிப்பாக இன்றைய சூழலில் எல்லோரும் அவதானமாகவும் மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்காமலும் எழுத முயற்ச்சிக்கவும்.யார் புலி,புளட்டின் உளவாளி யார் இலங்கை, இந்திய அரசின் உளவாளி,என்பது எவ்ருக்குமே தெரியாத ஓர் ஆபத்தான சூழ் னிலை இருப்பதை நாம் யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.ஐயர் அவர்கட்கு,முடிந்தவரைஅவதானமாக எழுத முயற்ச்சிக்கவும். நம்பநட நம்பிநடவாதே.ஆகா! என்னே முது மொழி .
The art of hollering lies is the exclusivity of certain politicians. In the past elections there were some outstanding examples. One such person was the late J.R. Jayewardene. Before he came to power in 1977 he said he would create a just and righteous society.
But on coming to power the country saw the opposite of the just and converse of righteousness coming to remain. When the very first Opposition meeting was held in Colombo Jayewardene’s goon squads arrived at the meeting armed with bicycle chains, clubs and knives and attacked the meeting. Several people were critically injured and SLFP trade union leader Alavi Mowlana hit with bicycle chains and was stabbed on the head. He was rushed to hospital and doctors fought to save his life. After being unconscious for a long time he recovered from the near fatal injuries to his head.
The next righteous action was seen at Belek Kade junction Galle Road, Ratmalana. A bomb was thrown at the Opposition meeting held there and a number of people were injured including the SLFP leader Madam Sirimavo Bandaranaike who suffered a minor injury on a toe. To help protect your privacy, Outlook prevented automatic download of this picture from the Internet.
Of course he also said every citizen would be given eight pounds of food grain per week when the UNP Government came to power. But the government did not give a single food grain to any citizen.
There were even more blatant lies by politicians at different times. In the 1965 election campaign, the vociferous politician Wijayananda Dahanayake went round the country telling the SLFP was going to make Sri Lanka a Chinese colony. He said there were Chinese everywhere. In fact there were so many Chinese in my hometown Galle there was a palace named China Garden now, he used to say.
The truth of course was that Galle’s China Garden, Cheena Koratuwa in Sinhala, was at least a Century old by 1965. By that time when Dahanayake said the country was teeming with Chinese people there wasn’t a single Chinese living in China Garden.
Even earlier than that in 1951 when Sir Oliver Goonetilleke was the Food Minister in the first UNP Cabinet of D. S. Senanayake he was reported saying as long as the UNP was in power a measure of rice would cost only 25 cents.
Premier D.S. Senanayake died a year later and his son Dudley Senanayake succeeded him. But within one year, the price of rice doubled to 50 cents a measure. The famous Hartal against jacking up the price of rice resulted in street protests with people coming out against the price increase. Among the protests eight people across the country were shot dead by the Police. Dudley Senanayake resigned.
Politicians of certain political parties arrange rumour campaigns during election times. Some of these people are paid a fee by the politicians. The rumour mongers get into trains or public transport buses and engage passengers in conversation. They slander politicians of opposing political parties.
Some three decades back this well dressed man got into a bus at a suburban town. He was telling a passenger in a loud voice that other passengers could hear that the then SLFP Minister T.B. Illangaratne owned a hotel in Switzerland. He said there was a portrait of Illangaratne in the lobby and underneath it was the legend, Prince T.B. Illangaratne of Sri Lanka!
Of course Illangaratne did not own any external assets or a hotel in Switzeralnd. Those of us who attended his funeral saw the normal middle class home he lived in during his retirement from politics. The old car that was parked in the garage of his home had not been used for many years. There was a telltale coat of dust on the car and the average old furniture that were not in their best state. We saw what a simple life he had been living on his pension. For he was one of the most honest politicians this country had seen.
These days there is much talk about corruption by the Opposition politicians accusing President Mahinda Rajapaksa and his family of corruption. But an Opposition politician is yet to bring up any specific act of corruption. As usual political platforms will witness such liars in the future too. Perhaps people are now aware that there is this tribe that cannot be taken at their word.
மாவையின் சகோதரன் தங்கராஜா என்பதில் ஒளிவு மறைவு தேவையில்லை என நம்புகிறேன். தங்கராஜா ஜேர்மனியில் உள்ளார்.
கொண்டலடி வைரவர் கோயிலில் மதியாபரணத்துடன் பிரபாகரன் பரீட்சித்த குண்டு வெடித்து பிரபாவுக்கு கையில் காயமடைந்ததும் கரிகாலன் என்ற பெயர் வரக்காரணமென அறிந்திருக்கிறேன்.
.
காலில் தான் கறுப்பு அடையாளம் அதனால்தான் கரிகாலன் என்ற காரணப்பெயர் வரக்காரணம்.
அந்த வேளையில் மனோ மாஸ்டர் என்பவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவர் புலிகள் இயக்கத்தைக் கலைத்துவிட்டு பிரபாகரனும் இன்னும் சிலரும் குட்டிமணி மற்றும் தங்கத்துரை தலைமையிலான குழுவில் இணைந்து கொண்ட காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தைத் தலைமை தாங்கியவர் மனோமாஸ்டர். தமிழ் புதிய புலிகள் என்று இருந்த பெயரை தமிழீழ விடுதலைப் புலிகள் என்று மாற்றியவரும் இவர்தான். மார்க்சிய சிந்தனைகளில் தேடல் ஆர்வம் கொண்ட மனோ மாஸ்டர், பின்னதாக கம்யூனிச இயக்கத்தின் தலைமையிலேயே தேசிய விடுதலைப் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற கோட்பட்டின் அடிப்படையில் புலிகள் இயக்கத்தைக் கலைத்துவிட்டு, வேறு சிலரோடும் சேர்ந்து தத்துவார்த்த ஆய்வுகளில் ஈடுபட்டதோடு மக்களோடு மக்களாகக் கிராமங்களில் வாழ்ந்தார். 1983 வரை இவ்வாறான சிந்தனையைக் கொண்டிருந்த மனோமாஸ்டரை 83 ஜூலைக் கலவரங்களின் பின்னர் நான் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இது இனியொரு ஆசிரிய பீடத்தை சேர்ந்த சபா.நாவலன் வினவு இணையதளத்திற்கு கொடுத்த பதிவு. ஜயரின் பதிவில் மனோ மாஸ்ரருக்கும் புலிகள் இயக்கமாக புதிய பெயர் மாற்றம் செய்த காலத்தில் மனோ மாஸ்ரர் பற்றி குறிப்பிடவில்லையே நாவலன் பதில் தரவும். அல்லது ஜயரிடம் இனியொரு பதிவை பெறவும்.
Manomaster was killed in Thambasiddy (Point Pedro)..
..this -Praba never respected any life..he must be a PSYCHOPATHIC..
what a waste full years for Tamils..
Atleast there is a light at the end of the tunnel now..
India should have killed that animal(Praba) in 1987..he cunningly took cover in Premadas’s komanam
அழகான வசீகரமான மொழியில் ஐயர் கட்டுரை எழுதியிருக்கிறார். இது தான் பயமாக இருக்கிறது. வசீகரிப்பவர்கள் கடைசியில் பொய்யையும் பூசி மொழுகி திரித்து விடுவார்கள். இது வரைக்கும் சரி… இனிமேல் பார்ப்போம்… உண்மையை எழுதுகிறாரா இல்லை ….
அடுத்த பகுதி எப்போ வரும் என ஆவலைத் தூண்டும் படி எழுதியுள்ளீர்கள். உங்கள் துணிவிற்குப் பாராட்டுகள்.
/1. பத்திரிகைகள், துண்டுப்பிரசுரங்கள், புகைப்படங்கள் போன்ற ஆவணங்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
2. என்னோடான சமகாலத்தவர்களுடன் தொடர்புகளை வலுப்படுத்தி, திகதி வாரியான தகவல்களைத் திரட்டுகிறேன்./ஐயர்.
இதைத்தான் சபாலிங்கமும் செய்தவர். அவரிற்கு பல முக்கிய ஆவணங்கள்,இயக்கத்தில்நடந்த உண்மச்சம்பவங்கள் சாட்சியங்களுட பல நாடுகளிலிருந்தும் அனுப்பப்பட்டன.குறிப்பாக ஜேர்மனியிலிருந்து பல முக்கிய ஆதாரஙகள் அவரிற்கு கிடைத்ததாம்.ஆனால்,சபாலிங்கம் கொலைசெய்யப்பட்ட பின்னர் நண்பர்கள் போல் நடித்தவர்கள் நயவஞ்சகமாக அதனைத் தம்வசமாக்கிக்கொண்டு கொலைசெய்யப்பட்டதற்க்கான தமது தேவையை பூர்த்தி செய்து கொண்டனர்.அதன் பின்னர் மிகுதியிருந்த சில தகவல்களையும், தான் சேகரித்த ஆவணங்களையும் சேர்த்துத்தான் புஸ்பராஜா புத்தகம் எழுதினார்.
மத்திய குழு உறுப்பினர் பட்டண்ணாவுக்கு என்ன நடந்தது? விலகினாரா? அல்லது—?
ஏழுதுவதற்கு சான்றுகள் தேவை. புத்தகமாக வெளியிட்டு சரித்திரமாக்கப் போகிறீர்களா?
தமிழரின் வாழ்வியல் இப்போது வியாபாரமாக்கப்படுகிறது. அநேகமாநோர் இப்போது போராட்டத்தில் பிழைகளைக் கண்டுபிடித்து பிரபாகரன்தான் இதற்கெல்லாம் காரணம் என்று தாங்கள்தப்பிக் கொண்டு பழியை வேறோர் இடத்தில் சுமத்துகின்றனர்.
இதேல்போல்தான் அற்புதனும் பழிசுமத்துவதிலேயே தமது எழுத்தைத் தொடங்கி ஆதரவுநிலை எடுத்தபோது …
கார்த்தி மரப்பது மக்கழ் இயல்பு .. அதை நினைவில் கொன்டு வருவது சமூக ஆர்வலரின் கடமை…..எத்தனையோ வீர வரலாரு எமக்கு இருக்கு ..என்ன பயன்..இன்னும் கருனா , டக்கிழன், சங்கரி, சிரிதர்,பிழ்ழயான் என்டு வந்து கொன்டு தானெ இருக்கிரார்கல்……
KARTHIK நானும் பலைய எமது தலைவரெய் பிலை கூறப்போகிரன். காரணம், எல்லாம் தெரிந்த தலைவருக்கு தானும் ,அவரெய் நம்பிய மக்களூம் அலிக்கப்பட போகிறார்கள் என்பதெய் அறிய வில்லை ஏன்??[அதுபோக தலைவரும் தனது மக்கலை அலித்தவர் தானெ.]
நன்றி.
தமிழரின் வாழ்வியல் இப்போது வியாபாரமாக்கப்படுகிறது. அநேகமாநோர் இப்போது போராட்டத்தில் பிழைகளைக் கண்டுபிடித்து பிரபாகரன்தான் இதற்கெல்லாம் காரணம் என்று தாங்கள்தப்பிக் கொண்டு பழியை வேறோர் இடத்தில் சுமத்துகின்றனர்.என கார்த்திக் சொல்வது உண்மை.
”
IF YOU DONT DO ANYTHING YOU WILL NEVER MAKE MISTAKES”
பலபேர் சொந்த முதுகில, ஊத்தையை வைச்சிக்கொன்டு தலைவர் பிரபாகரன் முதிகிலதான் எல்லாக் குப்பையும் என்டு பேசினம்…விபச்சாரம் செய்தார் என்டு ஒரு பென்னை யேசுனாதர் முன் கொன்டு வந்து ,அவழ் மீது கல் எரிய வேன்டும் என்டு சொல்லும் போது.யேசு நாதர் சொல்வார்..தப்பு செய்யாதவர்கழ் அவழ் மீது கல் எரியுங்கழ் என்டு…………தலைவர் மீது தப்பு சொல்லுபவர்கழ்..இதை முதலில் நினைவில் வைக்கவும்……………….ஜயர் சரியான நேரத்திலதான் எழுதுரார்…….பத்து வருசம் முதல் எழுதி இருத்தால் …..
பத்து வருசத்துக்கு முதல் ஐயர் இதை எழுதியிருந்தால், இப்போது ஐயரை பற்றி வேறு யாரும் எழுத வேண்டி வந்திருக்கும்.
//////பிரபாகரன் எம்மிடம் சொல்கிறார்,கொலை செய்து பழக்கப்பட்டால் தான் மனத்தில் உரமேறும். அதை நீங்கள் தான் இப்போது நிறைவேற்ற வேண்டும் என்கிறார்.வழமை போலவே எமக்கும் அது நியாயமாகப் படுகிறது. ஆக, கொலை செய்யப்பட வேண்டும் என்ற முடிபுக்கு வருகிறோம்./////
மிக முக்கியமான விசியம் என்று கருதுகிறேன். Brutalisation and hardanisation process பற்றிய துளி. ஒரு quote : “When you try to fight a monstor, you will beocme a monstor yourself”
“When you try to fight a monstor, you will beocme a monstor yourself” So what Rajapakshe did is correct 🙂
Play Audio Comment
ஐயர் அவர்களே!
முன்னால் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவின் கொலைக்கும் தமிழரசுகட்சி அமிர்தலிங்கத்திற்கும் உள்ள தொடர்புகள், அந்நேரம் அவரின் மகன் காண்டீபனிற்கும் இருந்த தொடர்பு, மற்றும் அந்நேரம் துப்பாக்கி வாங்க உதவி செய்த சங்கானைய சேர்ந்த சற்குணம் (தற்போது கனடாவில் காலமாகிவிட்டார்) அவர்களைப் பற்றியத்தையும் தாங்கள் அறிந்தததை இனி வரும் பதிவுகளில் குறிப்பிடுவீர்களா?
தங்களது இரண்டாம் முன்றாம் பாகத்தில் குறிப்பிட்டிருந்த மட்டக்களப்பை சேர்ந்த மைக்கல் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட பின்னரும் அவரின் தாயாருக்கு அவர் உயிருடன் இருந்து எழுதியமாதிரி கடிதமும், செலவிற்கு பணஉதவியும் சென்றுகொண்டிருந்தது உண்மையா? மற்றும் கிழக்கிலங்கையை சேர்ந்த கழுகுப்படையையும் அதனை சேர்ந்த இராஜ்மோகன் அண்ணரையும், தொடர்புகளையும் தங்கள் பதிவில் பதிவீர்களா?
பிற்குறிப்பு:
ஆரம்பத்திலிருந்து பிரபாகரனுடன் இருந்து, இந்தியாவில் இராசுபிள்ளையுடன் இருந்து பயிற்சியெடுத்து, பின் தனிக்குழுவாக 10 பேருடன் வெளிக்கிட்டு திருச்சி, சென்னையில் நடந்தவற்றை ஐயர் அவர்களின் ஈழப்போராடத்தின் பதிவில் பதிய இராகவன் அவர்கள் பகிர்ந்து உதவுவார்கள் என நம்புகிறேன்.
நன்றி – அலெக்ஸ் இரவிவர்மா
MISTRUST+UNHAPPY+FEAR+BETRAYEL+ILL-ADVICE+NON-CRITISM+LESS DIALOGUE+LESS COMMNS+CORRUPTION+FAVORITSM+DISCRIMINATION+POWERHUNGRY+INSTABILITY+MURDERS+ROBBERIES+CALLOUS MIND+PRESS+UNKIND+INHUMAN+FEAR+HATE+
NON- CONSCIENCE+SADNESS+FRUSTRATION= TOTAL DESTRUCTION=IGNORANCE= GREED+ANGER+JEALOUSY+REVENGE+SEX=AANAVAM+KANMAM+MAYAI
…….BELIEVERS OF ALMIGHTY GOD SURVIVED,WITNESSED,REALISED THE TRUTH!…………..MEIPPORUL KANPATHRIVU!
iyar puththakam eluthi mudiththuvittaaraa ??