தென்னாசிய நாடுகளில் இலங்கைப் பத்திரிகையாளர்களே 2009 ஆம் ஆண்டில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தென்னாசிய ஊடக ஆணைக்குழு தெரி வித்துள்ளது.
தென்னாசிய சுதந்திர ஊடக அமைப்புடன் (“சவ்மா”) இணைந்து கடந்த செவ் வாய்க்கிழமை பாகிஸ்தானில் வெளியிட்டுள்ள தனது ஏழாவது ஊடக கண் காணிப்பு அறிக்கையிலேயே ஆணைக் குழு இதனைத் தெரிவித்துள்ளது. “இந்து’ பத்திரிகையாசிரியர் என்.ராமைத் தலைவராகக் கொண்ட தென்னாசிய ஊடக ஆணைக்குழு 2009ஆம் ஆண்டில் 12 பத்திரிகையாளர்கள் பிராந்தியத்தில் கொல்லப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளது.
சகல விதத்திலும் நோக்கும்போது இலங்கைப் பத்திரிகையாளர்களே 2009 ஆம் ஆண்டில் மிக மோசமான நெருக்கடி களை எதிர்கொண்டுள்ளனர். பாகிஸ்தானி லுள்ள அவர்களது சகாக்கள் எதிர்கொள் ளும் அவலங்களை விட அதிகமாக இலங்கைப் பத்திரிகையாளர்கள் எதிர்கொண்டுள்ளனர். உயிர் அச்சம் காரணமாகப் பல சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளனர். என ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரி வித்துள்ளது.
இலங்கையின் தலைசிறந்த நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளர்கள் லஸந்த விக்கிரமதுங்க பட்டப்பகலில் படு கொலை செய்யப்பட்டதும், கடத்தல் பாணி யில் என்.வித்தியாதரன் கைதுசெய்யப்பட்ட மையும், பயங்கரவாதக்குற்றச்சாட்டின் பெயரில் ஜே.எஸ். திஸநாயகத்திற்கு விதிக்கப்பட்ட 20 வருடச் சிறைத்தண்டனையும் ஊடக சுதந்திரம் மிகவும் கீழ் நிலைக்கு இலங்கையில் சென்றுவிட்டதைப் புலப்படுத்தியுள்ளன என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.