உலக தமிழராய்ச்சி நிறுவனம் 45 ஆண்டுகளாகச் செய ற்பட்டு வந்துள்ள ஒரு அமைப்பாகும். அதன் முதலாவது சர்வதேசத் தமிழராய்ச்சி மாநாடு 1966ம் ஆண்டு கோலாம்பூரில் நடந்தது. அதை நடத்துவதற்கு முன்னோடியாக இருந்தவர்களுள் இலங்கையரான தனிநாயகம் அடிகள் முக்கியமானவர். அந்த அமைப்பின் நோக்கம் தமிழ் மொழிக்குத் தொடர்பான பல்வேறு அம்சங்களிலும் ஆராய்வுகளை நடத்துவதும் அதன் எதிர்கால வளர்ச்சிக்கு வளஞ் சேர்ப்பதுமாகவே இருந்து வந்துள்ளது. அதன் மாநாடுகள் பின்னர் சென்னை (1968) பாரிஸ் (1970) யாழ்ப்பாணம் (1974) மதுரை (1981) கோலாம்பூர் (1987) மொறிஷஸ் (1989) தஞ்சாவூர் (1995) ஆகிய நகரங்களில் நடந்துள்ளன.
பின்னைய மாநாடுகளில் கனதியான ஆய்வுகளும் பயனுள்ள ஆலோசனைகளுமே மாநாடுகள் முன்வைக்கப்பட்டன என்று கூறுவது கடினம். ஏனென்றால் தமிழ் பற்றிய ஒரு உணர்ச்சி கலந்த பார்வையும் சில சமயம் ஒரு வெறித்தனமும் அதைவிட முக்கியமாகத் தமிழ் மொழி வெறியை அரசியலாக்குகிற போக்குக்களும் மாநாடுகளிற் குறுக்கிட்டுள்ளன. குறிப்பாகத் தமிழகத்தில் மாநாட்டைக் கட்சி அரசியல் நோக்கங்கட்காகப் பயன்படுத்துகிற முனைப்புக்கள் எப்போதுமே செயற்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சிகளின் மூலம் தமிழ் எவ்வளவு பயன்பெற்றது என்பது விவாதத்திற்கு உரியது என்றாலும் இம் மாநாடுகளின் மூலம் இயலுமான சந்திப்புக்கள் தமிழ் பற்றிய சர்வதேச அக்கறையை உயர்த்துவதிலும் தமிழ் மொழி ஆராய்வாளர்களிடையே தொடர்புகளை ஏற்படுத்துவதிலும் பெரும் பங்காற்றியுள்ளது. சோசலிச நாடுகளிலே பல கனதியான தமிழராய்ச்சியாளர்களும் அக்கறையுடைய தமிழ் ஆர்வாளர்களும் இருந்து வந்தனர் என்ற உண்மை கூடத் தமிழராய்ச்சி மாநாடுகள் மூலமே தமிழ்ப் பேசும் மக்களுக்குத் தெரிய வந்தது.
ஒவ்வொரு தமிழராய்ச்சி மாநாட்டையும் எந்த நாட்டில் எப்போது நடத்துவது என்பதைப் பற்றிய அடிப்படையான முடிவுகளை உலகத் தமிழராய்ச்சி மாநாட்டின் செயற் குழுவே எடுக்க வேண்டும். அதன் பின்பு அதன் செயற்படுத்தல் பற்றிய அலுவல்களை அந்த நாட்டுக்குரிய குழுவினர் முடிவு செய்ய வேண்டும். இம் முடிவுகளின் மீது பல்வேறு காரணங்களால் கடும் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. மாநாடுகள் அரசியல் நோக்கங்கட்காகப் பயன்படுத்தப்பட்டதன் விளைவான அனர்த்தங்களும் பின்னைக் கால முடிவுகளைப் பாதித்துள்ளன.
எனினும் தமிழ் மொழி அறிஞர்கள் இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் எனப்படு வோருக்கு இம் மாநாடுகள் முக்கியமான நிகழ்வுகளாகவே இருந்துள்ளன. எல்லாரும் பங்குபற்றாவிடினும், எல்லாருக்கும் தமது துறையும் அக்கறைகளும் சார்ந்த நிகழ்வுகளும் பங்களிப்புக்களும் பற்றி அறியும் ஆவல் இருந்தே வந்தது. குறிப்பாக நவீன தமிழ்த் தொழில்நுட்பத் தேவைகளும் செயற்பாடுகளும் தமிழராய்ச்சிக்கு முக்கியமான விடயங்களாகின்றன. எனினும் மாநாட்டை எப்போது எங்கே நடத்துவது என்பதில் உள்ளுர் அரசியல் காரணமாக நீண்ட விவாதங்களும் விரைவில் முடிவெடுக்க இல்லாதவாறான முட்டுக்கட்டைகளும் தவிர்க்க இயலாதனவாகிவிட்டன.
உல கத் தமிழராய்ச்சி நிறுவனத் தலைமையகம் சென்னையில் அமைந்திருப்பதால் அதில் தமிழக அரசியற் குறுக்கீடுகள் தவிர்க்க இயலாதனவாகவே உள்ளமை விளங்கிக் கொள்ள வேண்டியதாகும். பல்வேறு காரணங்களால் 1995ல் நடந்த 8ஆம் மாநாட்டின் பின்பாக மாநாடு நடை பெறாமல் இழுபட்டு 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அப்போது தமிழ கத்தில் தேர்தல் நடக்கும் என்பதால் அதைச் சிறிது பிற் போட நேரிடலாம் என அறியப்பட்டது.
இந்தப் பின்னணியிலேயே கருணாநிதி தமிழ்ச் செம்மொழி மாநாட்டை அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடத்த முற்பட்டார். அதற்கான ஒத்துழைப்பை அவர் தந்திரமான காய் நகர்த்தல்களின் மூலம் மேற்கொண்டார். முன்பு சி.பி.எம். ஆதரவாளராகத் தோற்றங்காட்டிப் பின்பு தி.மு.க. தலைமை க்குத் தன்னை நெருக்கமாக்கிக் கொண்ட பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி மூலம் பேராசிரியர் சிவத்தம்பியிடம் அவரது உடன்பாடு பெறப்பட்டது.
தமிழ் ஆர்வலர்கள் நடுவே செல்வாக்கிழந்து போனவரான கருணாநிதி தனது தமிழார்வத்தின் நம்பகத் தன்மையை வலுப்படுத்தவும் தனது ஆட்சியின் கீழேயே தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிட்டியது என்பதை நினைவூட்டவு மான அரசியற் காரணங்கட்காகவே இக் காய் நகர்த்தல் நடைபெற்றது. உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் இம் மாநாட்டை அங்கீகரிப்பதாக அதன் குழுவிற் பெரும்பான்மை யோர் ஏற்பதாகக் கூறுவது தமிழராய்ச்சி நிறுவனம் தனது உரிமைகட்குப் புறம்பாகச் செயற்படுகிற ஒரு காரியமாகும். தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பணி தனக்குட்பட்ட அமைப்புக்கள் மூலம் மாநாடு நடத்துவதே ஒழியப் பிறர் நடத்தும் மாநாடுகட்கு அங்கீகாரம் வழங்குவதல்ல. எனினும் இங்கே கருணாநிதியின் நேர்மையீனம் சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும்.
எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமையில் இருந்த அ.தி.மு.க ஆட்சி கலைக்கப் பட்டதால் 1981ம் ஆண்டுத் தமிராய்ச்சி மாநாட்டை மதுமையில் திட்டமிட்ட நாளில் நடத்த இய லாது போயிற்று. இந்திரா காந்தி மூலம் எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கவிழ்ப்பித்த கருணாநிதியால் அடுத்து வந்த தமிழகச் சட்டசபைத் தேர்தலில் வெல்ல இயலவில்லை. பிற்போடப்பட்ட மாநாடு, 1981இல் மதுரையில் நடந்தபோது கருணாநிதி தலைமையில் தி.மு.க. அதைப் பகிஷ்கரித்தது. இதுவே தமிராய்ச்சி மாநாட்டின் முதலாவது அரசியற் பகிஷ்கரிப்பாகும்.
1992 முதல் 1996 வரை ஜெயலலிதா ஆட்சியிலிருந்த போது அவருடைய விடுதலைப் புலி எதிர்ப்பு வன்மம் புலம்பெயர்ந்த தமிழர் மீதான கடுமையாகவும் இலங்கைத் தமிழருக்கு எதிரான பகையுணர்வாயும் வெளிப்பட்டது.
அவருக்கு ஆதரவாகச் செயற்பட்ட சோ. ராமசாமி போன்ற பிற்போக்காளர்களும் அதற்குத் தூண்டுதலாக இருந்தனர்.
1995ம் ஆண்டு தமிழராய்ச்சி மாநாடு நடந்த போது தமிழ் நாடு அரசு இலங்கைத் தமிழ் அறிஞர்கட்கு அழைப்பு அனுப்ப மறுத்தது. தமிழக அரசின் அழைப்பில்லாமல் மாநாட்டிற் பங்குபற்றலாம் என்று தமிழகத்திற்குச் சென் றிருந்த இலங்கைத் தமிழர்கள் மாநாட்டிற் பங்குபற்றத் தடைவிதிக்கப்பட்டது. அவ்வாறு மாநாட்டிற் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டவர்களில் பேராசிரியர் சிவத்தம்பியும் ஒருவராவார். முற்றிலும் அரசியல் மயப் படுத்தப்பட்ட இந்த தமிழராய்ச்சி மாநாட்டிற்குத் தமிழகத்திற் சில கண்டனக் குரல்கள் எழுந்தாலும், தமிழறிஞர்கள் எனப்பட்டோரிற் பெரும்பாலோர் ஜெயலலிதாவின் மூர்க்கத்தனத்தை எதிர்த்து மாநாட்டைப் பகிஷ்கரிக்க முன்வர வில்லை.
இம்முறை நடக்கவுள்ள கருணாநிதியின் அரசியல் லாபத்திற்கான மாநாட்டிற்குப் பேராசிரியர் சிவத்தம்பியிடம் ஆதரவு கோரப்பட்ட போது பேராசிரியர் குழந்தைசாமியிடம் தனது ஒப்புதலைத் தெரிவித்ததையும் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் ஒப்புதல் வழங்காவிடின் மாநாட்டைச் செம்மொழி மாநாடாக நடத்தும்படியும் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. இராசேந்திரனுக்குச் சிவத்தம்பி ஒக்டோபர் 12 அன்று எழுதியுள்ளார். அதன் அடிப்படையிலேயே கருணாநிதி அவரை மாநாட்டுக் குழுவிலும் நியமித்துள்ளார்.
மாநாடு அறிவிக்கப்பட்ட பின்பு எழுந்த கடும் எதிர்ப்பின் பின்னணியில் 21ம் திகதி கலந்து கொள்வதில் தனது தயக்கத்தைத் தெரிவிக்கிற விதமாக ஒரு கடிதத்தை சிவத்தம்பி இராசேந்திரனுக்கு எழுதினார். சிவத்தம்பி கலந்து கொள்ளமாட்டார் என்ற விதமான கருத்துக்கள் பல ஊடகங்களில் வெளியான போது பேராசிரியர் சிவத்தம்பி அழைத்து வரப்படுவார் அல்லது (கருணாநிதிக்கு ராஜபக்ஷவிடம் உள்ள செல்வாக்கின் மூலம்) இழுத்து வரப்படுவார் என்று இந்திய மேலாதிக்க நிறுவனத்தின் ஏடான தினமணி எழுதியிருந்தது.
“தமிழர் பிரச்சினையில் முதல்வருக்கு உறுதியான நிலை ப்பாடு இல்லை ” என்று குறிப்பிட்டு அதன் விளைவாகவே மாநாட்டுக்கு எதிர்ப்புக் கிளப்பியிருப்பதாகச் சிவத்தம்பி கூறியது 1.11.2007 ஞாயிறு வீரகேசரியில் கொட்டை எழுத்துத் தலைப்புடன் வெளியாகியிருந்தது.
சிவத்தம்பி சொல்வது தவறு. கருணாநிதிக்கு மிக உறுதியான நிலைப்பாடு உண்டு. ஈழத் தமிழர் எக்கேடு கெட்டாலும் தமிழகத்தில் தனது குடும்ப ஆட்சியை நிலை நிறுத்த டில்லிக்கு உடன்பாடாகவே செயற்படுவது பற்றிக் கருணாநிதிக்கு ஒரு தடுமாற்றமும் இல்லை. தடுமாற்றமெல்லாம் சிவத்தம்பிக்குத்தான். தனக்கு உதவுகிறவர்களும் கருணாநிதியை அண்டிப் பிழைக்கிறவர்களுமான ஒரு தமி ழகப் பேராசிரியர் கூட்டத்தைப் பகைக்காமலும் தமிழ் மக்கள் மத்தியில் கருணாநிதியின் மீதான வெறுப்பு மாநாட்டு எதிர்ப்பாக விருத்தி பெற்றுள்ளதால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் தன்மீது வெறுப்பு ஏற்படாமலும் எப்படிக் காய் நகர்த்துவது என்றும் சிவத்தம்பி இப்போது கணக்குப் போடுகிறார்.
தினமணி சொல்வது தவறு. சிவத்தம்பியை அழைக்கவும் வேண்டியதில்லை. இழுக்கவும் வேண்டியதில்லை. தானாகவே போய்ச் சேருவதற்கு அவர் வழி தேடிக் கொண் டிருக்கிறார். எதிலும் உறுதியான நிலைப்பாடு இல்லாதவர் கருணாநிதியல்ல, சிவத்தம்பி தான்.
இவை ஒரு புறமிருக்க, மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்ற விவாதம் தமிழகத்தில் களைகட்டியுள்ளது. இ.அ.தி.மு.கவும் ம.தி.மு.கவும் போவதில்லை என்றும் பா.ம.க வும் பாராளுமன்ற இடதுசாரிகளும் போவது என்றும் அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.
நடக்கப் போகிற மாநாடு தமிழ் பற்றிய மாநாடல்ல. தமிழக அரசியல் என்கிற மட்டரகமான கூத்தொன்றின் மேடையேற்றம் என்பதையே இந்த நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
குலோத்துங்க சோழனிடம் “உன்னை அறிந்தோ தமிழை ஒதினேன் ?” என்று காறி உழிழ்ந்த கம்பனைப் போல நெஞ்சுரத்துடன் இந்தக் கருணாநிதிச் சோழனிடமும் தமிழகத்தைச் சுரண்டிப் பிழைக்கும் ஏமாற்றுத் தலைமைகளிடமும் சொல்லக் கூடிய தழிழறிஞர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழக அரசியற் சகதியிலிருந்து தன்னை மீட்டெடுத்துத் தமிழ் பற்றிய கனதியான ஆய்வுகட்கும் தமிழரின் எதிர்கால வளர்ச்சிக்குரிய ஆக்கமான சிந்தனைகட்குமான களமாகத் தன்னை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இனியொரு..
பிந்திய செய்தி:
கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி, ஆய்வரங்கப் பணிகளை மேற்கொள்ள ஆய்வரங்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேரறிஞர் முனைவர் கா.சிவத்தம்பியும், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு தனி அலுவலர் கா.அலாவுதீன் வெளியிட்ட செய்தியில், கோவையில் 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நான்கு நாட்கள் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்திட தமிழ்நாடு அரசு முடிவு செய்து ஆணையிட்டுள்ளதை தொடர்ந்து ஆய்வரங்க பணிகளை மேற்கொள்ள ஆய்வரங்க அமைப்பு குழுவினை அமைத்து அரசு ஆணையிட்டுள்ளது.
தலைவராக பேராசிரியர் கா.சிவத்தம்பியும், துணைத் தலைவர்களாக அவ்வை.நடராசன், பொன்.கோதண்டராமனும், செயலராக மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழியும், ஒருங்கிணைப்பாளராக தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.ராசேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆய்வரங்க பணிகளை திட்டமிடவும், செயல்படுத்தவும், துணைத் தலைவர்களையும், துணைக்குழுக்களையும் அமைத்து கொள்ளவும் ஆய்வரங்க அமைப்பு குழுவுக்கு அனுமதியளித்தும் அரசு ஆணையிட்டுள்ளது. உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டினையொட்டி, அனைத்து ஆய்வரங்க பணிகளையும் இக்குழு மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
பிந்திய செய்தி:
கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி, ஆய்வரங்கப் பணிகளை மேற்கொள்ள ஆய்வரங்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேரறிஞர் முனைவர் கா.சிவத்தம்பியும், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு தனி அலுவலர் கா.அலாவுதீன் வெளியிட்ட செய்தியில், கோவையில் 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நான்கு நாட்கள் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்திட தமிழ்நாடு அரசு முடிவு செய்து ஆணையிட்டுள்ளதை தொடர்ந்து ஆய்வரங்க பணிகளை மேற்கொள்ள ஆய்வரங்க அமைப்பு குழுவினை அமைத்து அரசு ஆணையிட்டுள்ளது.
தலைவராக பேராசிரியர் கா.சிவத்தம்பியும், துணைத் தலைவர்களாக அவ்வை.நடராசன், பொன்.கோதண்டராமனும், செயலராக மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழியும், ஒருங்கிணைப்பாளராக தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.ராசேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆய்வரங்க பணிகளை திட்டமிடவும், செயல்படுத்தவும், துணைத் தலைவர்களையும், துணைக்குழுக்களையும் அமைத்து கொள்ளவும் ஆய்வரங்க அமைப்பு குழுவுக்கு அனுமதியளித்தும் அரசு ஆணையிட்டுள்ளது. உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டினையொட்டி, அனைத்து ஆய்வரங்க பணிகளையும் இக்குழு மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தமிழ் மா நாடல்ல கருணா புகழ் பாட அரசையும் தமிழர்க்ளின் எச்சல் தண்மையையும் சுரண்டும் மா நாடு.
சமிபத்தில் கான்சிவரத்தில்நடைபெற்ற் அன்னாநுறாண்டுவிழா கருணானிதியின் புகழ் பாடும் விழாவாகநட்ந்து முடிந்த்து பலர் அறிவர். அதெபோல் கொவையில்நடைபெற் இருக்கும் தமிழ் செம்மொழி மகானாடும் கருணானிதிக்குதான்சிற்ப்பு செய்யபொகிற்து. இது தெரிந்த விசயமெ. இப்பொதெல்லாம் கருணானிதிக்கு புக்ழ்லாசை அதிகமகிப் போனது.சிவாவின் கட்டுரைக் கருத்துக்கள்நுற்றுக்குநூறு உண்மைதான்.
என் இனிய தமிழா! இந்த கருணாநிதி முதலில் தமிழனே அல்ல,நம் பாசத்தை பகடையாக்கும் முதிர் வயது முன்னோடி முட்டாள். இனியும் இவரை நம்பி ஏமாற வேணடாம்.நடக்கவுள்ள மாநாடு அவருடைய வருமான தொழில் மேம்பாடு திட்டம் உணர்வோம்.நம் சொந்தங்களின் உயிர் காப்போம்.
என்னப்பொருத்தவரஜில் ஈலத்தமிலனின் மிகபெரிஜ துரோகி கருனானிதிதான்……….
yaro oruvar thalamai thanga , KARUNANITHIYIN JAALRAKKALNA VAIRAMUTHU, VAALI, V.C.KULANDAISAMY, AND KANIMOZHI AND THE MINISTERS will praise him , profusely and will get proper PRIZES for them!!!No tangible work will get emenated, out of this waste SEMMARI TAMIL conference!!!
சிவத்தம்பிக்கு பல (அரசியல் ) முகங்கள் உண்டு. ஆரம்பம் முற்போக்கு அரசியல் இலக்கியம். அதன்பின் பீட்டர் கெனமன் விக்கிமசிங்க>அரசியல் இலக்கியம்! அதன்பின் புலிகளுக்கு பீஷ்மாச்சாரியாராக இருந்து ஆலோசனை! தற்போது பின்னடிகாலத்திற்கு என்ன செய்யலாம் என்றிருக்க>கிடைத்தே விட்டார் கலைஞர். இருவரும் அரசியலில் கலை இலக்கியத்தில் அண்ணன் தம்பிகளே! இதை வைத்தே இருவரும் தம் எதிர்காலத்தை ஓட்டிவிடுவார்கள்!
தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழின் உயர்வுக்கோ தமிழனின் உயர்வுக்கோ நடத்தப்படுவது அல்ல மாறாக முதல்வரின் புகழ் பாட நடத்தப்படுவதாகும்.
karunanidhi is Telugu man as vaiko. why nobody including ramadoss who has written a book to prove that karunanidhi is a Telugu are not telling this to the world. this is why the Tamils lack the fighting quality in Indian Tamil nadu
That chameleon Bastard Ramadoss is another Telugu person. TN should these Telugu traitors out.
சிவத்தம்பியின் சுயநலமுகம் வெளிவரத்தொடங்கிவிட்டது…
பொறுத்திருங்கள்….
12/09/2009 உல்லக் அவர்களின் கருத்து எனக்கு உடன்பாடுதான்.. எம்.ஜி.ஆர் திமுக வை விட்டு வெளியேறிய போது அவர் கருணாநிதியால் மலையாளி என்று இகழப்பட்டபோது எம் ஜி ஆர் சொன்னது ” கலைஞர் அவர்களே நான் மலையாளிதான் நீங்கள் ஆந்திராவைச் சார்ந்தவரல்லவா உங்கள் பூர்வீகம் தெலுங்குனாடு தானே “
ஜி. யூ. போப்; கால்ட்வெல் இருவரும் ஆங்கிலேயர்.
வீரமாமுனிவர் (பெஸ்கி பாதிரியார்) இத்தலியர்.
தமிழுக்குத் தொண்டாற்றவில்லையா?
கருணாநிதி; எ.ம்.ஜி.ராமச்சந்திரன்; கோபாலசாமி எல்லாரும் தமிழரல்லாதார் என்பதாலா தமிழருக்குத் தவறு செய்கிறார்கள்?
சிதம்பரம் தமிழரில்லையா? காங்கிரஸ்காரர்கள் தமிழரல்லததோரா?
தி.மு.க.; அ.தி.மு.க.; ம.தி.மு.க. எல்லாமே மக்கள் விரோதக் கட்சிகள் தான். தமிழ் என்பது வசதியான ஒரு அடையாளம் மட்டுமே.
அரசியலை இன அடிப்படையில் கொச்சைப்படுத்தாதீர்கள்.
ஈ.வே.ரா. பெரியார் ‘சுத்தத் தமிழரா’? அவர் போலத் தமிழருக்குத் தொண்டாற்றியோர் எத்ததன பேர்?
கருநானிதி ஒரு தெலுங்கு. தமிழக ஓBC பட்டியலில் இடம் பெறுபவர்கள் பெரும்பாலோர் தெலுங்கு இந்தி பேசும் சாதிகள். தமிழக சாலை, கட்டிக மேம்பால பணிகளில் இடஒதுக்கீட்டு மூலம் பணிக்கு அமருவோர் பெரும்பாலும் பேர் பீகாரி, வட இந்திய இந்தி பேசும் பணியாளர்கள், தமிழர்கள் யாரும் இல்லை. இவர்களுக்கு ரேஷன் அட்டைகள் அள்ளி அள்ளி வழங்குபவர் நமது தெலுங்கு முதல்வர் கருநாநிதி.
கருநாநிதி தமிழ் பள்ளிகளை மூட செய்து இந்தி மொழியை திணிக்கும் CBஸே பள்ளிகளுக்கு நிலம் அள்ளி வழங்குகிறார்.
ராமதாஸ் இன்னொரு தெலுங்கு. தமிழ் இனத்தின் அடையாளமான தமிழகத்தை இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக பிரிக்க முயல்கிறார் தெலுங்கு ராமதாசு.
கருநாநிதி தமிழ் பள்ளிகளை மூட செய்து இந்தி மொழியை திணிக்கும் CBSE பள்ளிகளுக்கு நிலம் அள்ளி வழங்குகிறார்.
ராமதாஸ் இன்னொரு தெலுங்கு. தமிழ் இனத்தின் அடையாளமான தமிழகத்தை இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக பிரிக்க முயல்கிறார் தெலுங்கு ராமதாசு.
மாரியப்பா தலைவர் கருணானிதி தெலுங்கராய் இருக்கட்டும் ஆனால் உனக்கு இரண்டு ரூபாய்க்கு அரிசி தந்தவர் அதை நாயே மரக்கலாமா?தமிழ் கட்ருத்தந்தவர் அதை மருக்கலமா?லண்டனில் ஈழத்தமிழர் என் உன்னை அனுப்பி வைக்கிரவர் அதை மரக்கலமா?எங்கல் ஜி,ஜி.பொன்னம்பலமும் தேர்தலில் தோட்ரு போனதும் மாட்டுத்தமிழன் என்ருதன் சொன்னவர் அந்த இனம் தானே?
இந்த மாதிரி விலங்கின மொழியில் கருத்தாடல் தொடரலாமா?
கருணாநிதிக்கு சிவத்தம்பி, வ.செ.குழந்தைசாமி முதலான “தமிழறிஞர்கள்” வாழ்த்துச் செய்யுள் எழுதிக் கொண்டிருப்பதால் நேரம் கிடைக்கவில்லை போலும். அதனால்தான் தீப்பொறி ஆறுமுகத்திடம் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் தமிழ்மாஆஆ ரன் தன் பைந்தமிழ்ச் சொற்களால் சவட்டுகிறார். 1 ரூபாய்க்கு அரிசி கொடுத்தால் தமிழர்கள் எல்லாம் அம்மணமாக நிற்கலாம் என்கிறாரா கருணாநிதி தாசன். இவர்களால்தான் ஆட்சியாளர்கள் 1 ரூபாய்க்கு தமிழர்களுக்கு வாய்க்கரிசி போடுகிறார்கள்…….. அது யாராக இருந்தாலும்……………………………..
ஜெயலலிதா ஆட்சியில் தமிழர் அம்மணமாக்கப்பட்டு தமிழ் சாகக் கிடந்தது கன்னடனும் மலையாளீயும் தெலுங்கனும் தமிழனது தன்மானத்திற்கே விலை பேசினான் தமிழ் சினிமா ஆங்கிலமானது தமிழ் சிரைக்குச் சென்றது. கலைஜர் ஆட்சியில் தமிழ் செம்மொழியானது, ஏழைகளூக்கு தொலைக்காட்சி, விவசாயத்திற்கு நிலம்,தமிழ்ப் பெயரில் சினிமா என தமிழன் தலை நிமிர் முடிந்தது. சேரன்,சோழன்.பாண்டியன் என எமக்குள்லே அடி பட்டு அதிகாரம் இழந்து போன நாம் இன்னும் சேவகர்களாகவே இருக்கிறோம், நாம் தலை நிமிர வேண்டாமா? தமிழன் உயர வேண்டாமா?
/குலோத்துங்க சோழனிடம் “உன்னை அறிந்தோ தமிழை ஒதினேன் ?” என்று காறி உழிழ்ந்த கம்பனைப் போல நெஞ்சுரத்துடன் இந்தக் கருணாநிதிச் சோழனிடமும் தமிழகத்தைச் சுரண்டிப் பிழைக்கும் ஏமாற்றுத் தலைமைகளிடமும் சொல்லக் கூடிய தழிழறிஞர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்?/–Kulothunga also maintained friendly relations with the Khmer kingdom of Kampuchea (Kambhoja). The Khmer king sent a peculiar stone to the emperor in c. 1114 C.E.
The hold over Vengi was quite firm and Kalinga was under the Chola rule (for the conquest of which and the levying of tribute over Alipurdoar areas of Bengal, Kulothunga I claims in his inscriptions to have built two temples dedicated to Sun god, namely the Suryanaar Koils of Nagapattinam and Pudukkottai – the Cholas claimed in all their inscriptions to have descended from the Solar race i.e. from the Sun).
The Chidambara Rahasyam: Lord Shiva in his manifestation of formlessness is worshipped in Chidambaram. The Lord is said to continuously dance in a state of eternal bliss “Aananda thaandava”, with his consort Sakthi or energy called Sivagami. A curtain covers this space which when drawn reveals strands of golden ‘Vilva’ leaves hung to indicate the Lord’s presence. The curtain is dark on its exterior side (indicating ignorance) and bright red on the interior side (indicating wisdom and bliss).Kulothunga II had a comparatively peaceful reign. His reported persecution of Vaishnavism is disputed. Chidambaram Temple, a major Shiva shrine, also houses a separate temple to Lord Vishnu and is one of 108 Divya Desams (sacred temples of Lord Vishnu). Under Kulothunga II’s orders, an attempt was made to persuade the patrons of the Vishnu shrine to temporarily remove the idol of Vishnu for purpose of repairs and renovation, but this was opposed by the Vaishnava community. Kulothunga II got the idol forcibly shifted mainly so that the repair work could move forward without causing any damage to the Vishnu shrine. This opposition of Vaishnavas to the temporary closure of Lord Vishnu’s temple was interpreted in some quarters as persecution of Vaishnavites, because in Hinduism closure of a temple is frowned upon, and at least a small lamp has to be lit, without which the temple is not considered fit for worship.
The persecution of Vaishnavaies is denied or disputed by Saivaites, especially those with a guilty conscience. History, as always, is written by the winners. Saivaism was not a particularly tolerant religion. I doubt if it is even now.
Ramanuja and his followers had to flee Tamilnadu not for no reason. The long period of hopstility between Saivaites and Vaishnavites after a fairly accommodative coexistence if the late Pallava period has much to do with this persecution.
It will be helpful if diverse sources are examined in such matters.