உங்களுடைய பாரம்பரிய வழமையான பாணியில் வடிவமைக்கப்பட்ட தாராளமான வசைகளோடு கூடிய உங்கள் கீழ்நிலை அரசியலை பிரகடனப்படுத்தும் இனியொரு தொடர்பாகவும் என்னைப்பற்றியும் எழுதிய கட்டுரையை (!!!) படித்து இன்புற்றேன். நன்றி.
அரசியல் அனாதையாக்கப்பட்ட பொறாமையும் வஞ்சகமும் வாக்கப்பெற்ற யாழ்ப்பாண மேட்டுக்குடி வேளாள ஆதிக்க உணர்வுபெற்ற ஒருமனிதனின் வழமையான வசைமொழிகளோடு உங்களது எழுத்துக்கள் அமையப்பெற்றிருப்பது உங்களுடைய பிற்போக்கான அரசியலை காட்டி நிற்கிறது.
நாம் என்னதான் முற்போக்கு என்றும் மார்க்சியம் என்றும் உச்சாடனம் செய்தாலும் எம்முள் உறங்கிக் கிடக்கும் ஆண் ஆதிக்க மேலாண்மை மொழிப்பிர யோகம் எம் அரசியலை அம்பலப்படுத்திவிடும். வார்த்தைகளும் சொல்லாடல்களும் வெறும் பரிவர்த்தனைக்கான கருவியல்ல. ஒவ்வொரு சொற்களுக்கும் அந்த மனிதனின் அரசியல் சார்ந்த பின்புலங்களை காட்டிவிடும். உங்களுடைய ஒவ்வொரு எழுத்துக்களும். உங்களுடைய ஆணாதிக்க பிற்போக்குவாதத்தை தோலுரித்து காட்டிவிடுகிக்றது.
ஆரோக்கியமான அரசியல் விவாதத்தை எவ்வாறு கொண்டு நாடத்துவது என்பது பற்றியும் ஒரு விமர்சனத்தை அரசியல் சார்ந்து எவ்வாறு முன்வைப்பது என்பது பற்றியும் ஒரு இடதுசாரிக்குரிய குறைந்த பட்ச தெளிவுகூட இன்றி நீங்கள் காணப்படுகின்றீர்கள்.
முதலில் ஆதார பூர்வமாண குற்றச்சாட்டுக்களை ஆரோக்கியமான அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ளும் அரசியல் மனப் பக்குவத்தை நீங்கள் எப்போதுதான் வந்தடைவீர்களோ தெரியவில்லை.
நண்பர் இராயகரன் உங்களுடைய புகலிட வாழ்வு 25வருடங்களுக்கு மேலாகிவட்டது என நினைக்கிறேன். இத்தனை வருடங்களுக்குள் நீங்கள் அரசியல் கட்டுரை என நினைத்து எழுதிய சக மனிதர்கள் சக நண்பர்கள் மீதான கொடூர வார்த்தை பிரயோகங்கள் நிறைந்த அந்த வசைபாடல்களை எண்ணிப்பாருங்கள்.
சமீபத்தில் இராஜோஸ்வரி பாலசுப்பரமணியம் தொடர்பாக நீங்கள் பொழிந்த வசைமொழியான மகிந்தாவுக்கு “முந்தானை விரித்தவள்” என்ற சொற்றொடர் உங்களுடைய அரசியல் முகத்தை வெளிக்காட்டுவதற்கு சிறு உதாரணம். இராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் அரசியல் குறித்து இனியொருவிலும் கூட பல தடவை எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் வசைபாடும் உங்களுடைய “தெருச் சண்டிதன” அரசியல் கலாச்சார வரைமுறைகளுக்கு உட்படாமல் அவரின் அரசியல் பின்புலத்தை சித்தாந்தரீதியில் அம்பலப்படுத்தும் செயன்முறையையே நாம் மேற்கொண்டிருந்தோம்.
மார்க்சியம் எங்களுக்கு ஆரோக்கியமான விமர்சன ஆய வுமுறைமையை கற்றுத் தந்துள்ளதே தவிர உங்களைப்போல் மிகக் கேவலமான பெண்களை கொச்சைப்படுத்தும் ஆணாதிக்க வக்கிர மன நிலையை எங்களுக்கு கற்றுத்தரவில்லை. யோசித்துப்பாருங்கள் நீங்கள் எவ்வளவு கேவலமான நபராக இருக்கிறீர்கள். .
பொது வாழ்விலும் அரசியலிலும் செயல்படுகிற ஒரு பெண்னையே அவரது அரசியல் மாறுபாட்டுக்காக இவ்வாறான மொழி கொண்டு தூற்றும் நீங்கள் எங்களை எப்படி விட்டு வைப்பீர்கள். கடந்த காலங்களில் உங்களின் வசை மொழிக்கு யார்தான் தப்பினார்கள். தோழர் கைலாசபதி தொடக்கம் தோழர் சிவசேகரம் வரை எத்தனை தோழர்களை கொச்சைப்படுத்தி எழுதினீர்கள்.எண்ணிப்பாருங்கள்.
ரயாகரன் , நீங்கள் அசுர வேகத்தில் அத்தனை மனிதர்களையும் அருவருக்கும் வார்த்தைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தும் வேகத்தில் கார்ல் மார்க்ஸ் பற்றியும் மார்க்சியம் பற்றியும் மறந்து போய்விட்டீர்கள் போலிருக்கிறது. முன்னொரு வேளையில் கார்ல் மார்க்ஸ் அவருடன் கருத்து முரண் கொண்ட ஒருவருக்குக் கடிதம் எழுதும்போது கடிதத்தில் கையாளப்பட்டுள்ள வார்த்தைகள் அவரைப் புண்படுத்தும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே அக்கடிதத்தை மறுபடி மறுபடி பல தடவைகள் வாசித்ததாக ஏங்கள்சிற்குக் கூறுகிறார்.
இவ்வாறான ஒரு கலாச்சாரப் பாரம்பரியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது தான் மார்க்சிய விமர்சன முறை. நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பது போல உங்களைத் தவிர யாராவது அரசியல், ஈழ அரசியல் குறித்துப் பேசினால் அவர்களை “மொள்ளை மாறிகளாகவும் முடிச்சவிக்கிகளாகவும்” சித்தரிப்பது மார்க்சியமல்ல “ரவுடித்தனம்”.
உங்களுக்கு இப்போது வயது 50 தாண்டிவிட்டது என நினைக்கிறேன்.
இந்த வயதிற்குள் எவ்வளவோ அரசியல் மனமுதிர்ச்சியை ஐனநாயக பண்புகளை நீங்கள் பெற்றிருக்கவேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தையே நீங்கள் உருவாக்கி கொள்ளவில்லை. பிரான்சில் உங்களுடைய நண்பர் தோழர்கள் நட்புவட்டத்தை எண்ணிப்பாருங்கள் வெறும் பூச்சியமே. இதற்கான அடிப்படைக்காரணம் என்ன. எப்போதாவது யோசித்துப்பார்த்தீர்களா? ஏன் உங்களால் ஒரு அரசியல் சார்ந்த நட்புவட்டத்தை உருவாக்கிக்கொள்ள முடியாமல் போனது ?
மனித உறவுகளுக்கும் அரசியல் உறவுகளுக்கும் அடிப்படையான அறம்சார்ந்த நேர்மை என்பது கொஞ்சமேனும் உங்களிடம் இல்லாமல் போனமைதான் இதற்கான காரணம் என நான் நினைக்கிறேன்.
இதையெல்லாம் நான் உங்களைப் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் கூறவில்லை . மாறாக நீங்கள் “சுயவிமர்சன” அடிப்படையில் ஒடுக்குமுறைகளிற்கு எதிரான போராட்டத்தில் ஆரோக்கியமான ஆக்கபூர்வமான பங்களிப்பை உங்களிடமிருந்து எதிர்பார்த்தே எழுதுகிறேன்.
பிரான்சில் இந்த பத்துவருட காலத்தினுள் நாங்கள் அரசியல் சமூக அசைவுக்கான சுமார் 80 கருத்தரங்குகளை நடாத்தியிருப்போம். பல்வேறு குறும்பட நிகழ்வுகளையும் புகைப்படக கண்காட்சிகளையும் சமூக அக்கறைசார்ந்து செய்திருக்கிறோம். இலங்கையிலிருந்து தோழர்கள் செந்திவேல் தனிகாசலம் போன்ற தோழர்களை பிரான்சுக்கு அழைத்து பல கூட்டங்களை நடாத்தியுள்ளோம். பிரான்ஸ் இடதுசாரி தோழர்களோடு சேர்ந்து பல அரசியல் செயல்பாடுகளை முன்னேடுக்கின்றோம். சமீபத்தில்கூட இலங்கை அரசையும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளையும் அரசோடு சேர்நது இயஙகும் ஆயுதக் குழுக்களையும் கண்டித்து மக்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான கண்டன ஊர்வலத்தைச் செய்தோம். இவ்வாறான நிகழ்வுகள் எவற்றிற்கும் நீங்கள் வருவதில்லை.(இலங்கையில் இன்றும் இடதுசாரிச் சிந்தனை முறையை முன்னிறுத்தும் தோழர் செந்தில்வேல் உரையாற்றிய கூட்டம் உட்பட).
ஆனால் எங்களுடைய இந்த ஒவ்வொரு செயல்பாட்டையும் கொச்சைத்தனமாக விமர்சித்தே வந்துள்ளீர்கள். உங்களால் மற்றவர்கள் செய்யும் சமூக அக்கறை கொண்ட எந்த நிகழ்வையும் வரவேற்கும் ஆதரிக்கும் மன பக்குவம் கொஞ்சம்கூட உங்களிடம் இருப்பதில்லை. வஞ்சகமும் காழ்ப்புணர்ச்சியுமே உங்களிடம் எங்கள் தொடர்பாக குடிகொண்டுள்ளது. ஏன் இந்த மன நிலை உங்களுக்கு?.
இராயாகரன் நீங்கள் என்னை நோக்கி என் போராட்ட வரலாற்றை கேள்வி கேட்பது மிக மிக வேடிக்கையாக உள்ளது. சில காலங்களுக்கு முன் பாரீசில் ஈழத்தில் எந்தவித போராட்ட செயற்பாடும் அக்கறையும் அற்றிருந்துவிட்டு பாரீஸ் வந்து இறங்கியவுடன் தீவிர புலியாகிவிட்ட ஒருவர் என்னை நோக்கி “நீயெல்லாம் நாட்டில் என்ன புடுங்கினீர்கள்” என்று கேட்ட அதே பாணியே உங்களிடமும் தொற்றியுள்ளது. இராயாகரன் உங்களை நோக்கி இதே கேள்வியை நான் வைக்கிறேன்.
இலங்கை இனப்பிரச்சனை கூர்மையடைந்து ஆயுதப்போராட்ட வடிவம் கொண்ட 1983களில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள். நாங்கள் மக்களோடும் போராட்ட உணர்வுகளோடும் ஒன்றுகலந்து இலங்கை பேரினவாத அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த அந்தகாலகட்டத்தில் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் வேலை பார்த்து உங்கள் சொந்த வாழ்க்கையை கண்ணும்கருத்துமாக பார்த்துக்கொண்டீர்கள். அப்போதைய எங்கள் அனைவரதும் அரசியல் வழிமுறைகள் வேற்றுமைகளை தவறுகளையும் உள்ளடக்கியது என்பதற்கு அப்பால் சமூக உணர்வு படைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தையே தமது வாழ்வு முறையாக வரித்துக்கொண்டார்கள்.
இக்காலங்களில் நாங்கள் காடுகள் என்றும் மேடுகள் என்றும் அலைந்தோம். மக்களோடு இரண்டறக்கலந்தோம். மக்களை அரசியல் மயப்படுத்தினோம். எங்கள் கால்படாக் கிராமங்கள் வடக்கு கிழக்கில் இல்லையென்றே கூறமுடியும். அக்காலங்களில் உங்களுடைய போராட்ட உணர்வு எங்கு போயிருந்தது. வடக்கில் எத்தனையோ இடதுசாரி உணர்வு பெற்ற தோழர்களையும் சாதிய எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட தோழர்களையும் நாம் சந்தித்தோம். அவர்களோடு உறவுகளை வளர்த்தோம்.இன்றும் புலம்பெயர்ந்த சூழலில் அவ் அரசியல் இயக்க உறவுகளை தொடர்கின்றோம்.
இந்த தோழர்கள் ஒருவரையாவது உங்களது யாழ்ப்பாண வாழ்க்கையில் சந்தித்ததுண்டா?. அப்போதெல்லாம் உங்களின் வர்க்க குணாம்சம் என்னவாக இருந்தது.? எண்ணிப்பாருங்கள். அன்றைய உங்களுடைய அரசியல் உறவுகள்தான் என்ன?. அவ்வுறவுகளின் இன்றைய அரசியல் தொடர்ச்சி எங்கே?
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்காலையில் வேலை செய்த அறிமுகத்திற்கூடாக தோழர் விசுவானந்த தேவனை உங்களுக்கு தெரிந்திருந்தது.இதனால் என்.எல்.எப்.ரியில்உறுப்பினராகி இருந்தீர்கள். யாழ்ப்பாண கற்றன் நசனல் வங்கி என்.எல்.எப்.ரியினால் கொள்ளை இடப்பட்டபோது அதிலிருந்து பெறப்பட்ட நகைகள்இ பணம் என்பவற்றின் ஒரு பகுதியை மறைத்துவைப்பதற்கு தோழர் விசுவானந்த தேவன் உங்களை பயன்படுத்திக் கொண்டார். இது ஒன்றே ஈழப்போராட்ட வரலாற்றின் உங்களுடைய மாபெரும் பங்களிப்பு.
இராயாகரன் பகீரங்கமாக சவால் விடுகின்றேன் அக்காலங்களில் எத்தனையோ விடுதலை அமைப்புக்களும் தோழர்களும் யாழ்குடாநாடடில் இருந்தார்கள். அக் காலங்களில் உங்களைத் தெரிந்த ஒரு தோழரின் பெயரை சொல்லுங்கள் பார்ப்போம்.அந்தளவுக்குபோராட்டத்தோடு அந்நியப்பட்டு போயிருந்தீர்கள். (இதனால் எல்லாம் உங்கள் போராடும் உரிமை குறித்து நான் கேள்வியெழுப்பவில்லை ஆனால் அது குறித்த உங்கள் தொடச்சியான செயற்பாடுகள் குறித்து மறு மதிப்பீடு செய்துகொண்டு ஆக்கபூர்வமான உங்கள் பங்களிப்பையே கோருகிறேன்.)
இந்தநேரத்தில் உங்களிடம் ஒரு கேள்வியை என்னால் எழுப்பமுடியும். தோழர் விசுவானந்த தேவன் ஒப்படைத்த அந்தப் பணத்திற்கும் நகைக்கும் என்ன நடந்தது?. தோழர் விசுவானந்தனின் இறப்போடு இதனையும் சேர்த்து புதைத்துவிட்டீர்கள். இதுதான் உங்களின் அரசியல் நேர்மை.
1990களின் பிற்பாடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விஐதரன் போராட்டம் தோழர் நாவலன் தோழர் விமலேஸ்வரன் ஆகியோரின் வழிநடத்தலில் நடைபெறாமல் இருந்திருந்தால் உங்கள் பெயரே இன்று எவராலும் இனம்காண முடியாமல் போயிருக்கும். தோழர் நாவலன் , தோழர் விமலேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் விஐதரன் போராட்டக்குழு அமைக்கப்பட்டபோது பல மாணவ தோழர்களின் எதிர்ப்பக்கு மத்தியில் நாவலனின் முயற்ச்சியால் அக் குழுவில் சேர்க்கப்பட்டீர்கள்.அந்த வரலாற்றை இன்று என்ன மாதிரி திரிவுபடுத்தி போராட்டத்தை தாங்கள்தான் முன்னெடுத்தது போன்ற விளம்பர அரசியலை செய்கிறீர்கள்.இதல்லாம் உங்களுக்கு உங்கள் மொழியில் “விபச்சார அரசியலாக” தெரியவில்லையா. இந்தப் போராட்டத்தை முன்னின்று தலைமையேற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணர்வர்களில் பலர் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சுந்தரமூர்த்தி , சோதிலிங்கம் , அவ்வை,தவராஜா என்ற ஒரு நீண்ட பட்டியலையே என்னால் முன்வைக்க முடியும்.
புலிகளிடமிருந்து நீங்கள் தப்பித்த வேளையில் நீங்கள் தனிப்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக சமரிலிருந்து வெளியேற்றிய தோழர் நாவலன் வெகுஜன வேலை செய்த கிராமம் ஒன்றில் தான் தஞ்சமடைந்து அவரின் பாதுகாப்பிலேயே ஒரு மாதங்கள் தலைமறைவாக இருந்ததெல்லாம் நீங்கள் சொல்ல விரும்பாத உண்மைகள்.
இராயாகரன் இனி உங்களுக்கும் எனக்கும் ஏற்பட்ட உறவு பற்றி பார்ப்போம்.
ஈழப்போராட்டத்தில் ஏற்பட்ட தோல்விகளோடும் , வடுக்களோடும் , சொந்த இழப்புக்களோடும் பிரான்ஸ் வந்து இறங்கிய போது பரீஸ் வாழ்க்கை எனக்கு வெறுமையாகிப்போயிருந்தது. அந்த நேரத்தில் இலக்கிய , அரசியல் உறவுகளின் தொடர்பு எதுவுமற்றவனாக நான் இருந்தேன். பின் “ஓசை” மனோவின் தொடர்பினால் இலக்கிய உறவும் எழுதும் ஆர்வமும் ஏற்பட்டது. “ஓசை” சஞ்சிகையில் எழுதத் தொடங்கினேன். அதன் பின் உங்கள் தொடர்பு கிடைத்தது. உங்களைப்பற்றி எனக்கு விமர்சனம் இருந்தபோதிலும் சமர் என்ற பத்திரிகை ஒன்றை வெளியிடுகின்றவர் என்ற அடிப்படையில் உங்களோடு உறவுகளை பேணினேன்.
பிரான்சில் சோபாசக்தி ,சுகன் , ஞானம் போன்றவர்கள் பின்நவீனத்துவத்தை தோலில் சுமந்து திரிந்தகாலம் அது. அ.மாக்ஸ் இன்றுபோல் அன்றும் இவர்களை ஞானத் தந்தையாக வழிநடத்திக் கொண்டிருந்தார். இவர்களின் அரசியலுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட எண்ணி கலந்தாலோசித்து உங்கள் பெயரோடும் என் பெயரோடும் உங்களால் எழுதப் பட்டு வெளியிடப்பட்டது. வெளிவந்த பிற்பாடு அந்த துண்டுப்பிரசுரம் நாம் கலந்தாலோசித்த விடயங்களுக்கு மாறாக சோபாசக்தி சுகன் அ.மாக்ஸ் மீதான அரசியல் அற்ற வெறும் காழ்ப்புணாச்சி கொண்ட வசைவுகளாகவே இருந்தது. இதுவே எமது முரண்பாட்டின் தொடக்கப்புள்ளியாயிற்று. எனினும் உங்களின் உறவை பேணினேன்.
அதன் பின் ஒரு கட்டுரை(! ) ஒன்றில் பிரான்சில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சபாலிங்கம் அவர்களை உங்கள் வழமையான வசை மொழியால் திட்டி அக் கொலையை நியாயப்படுத்தியிருந்தீர்கள். இது உங்களுக்கும் எனக்குமான பலத்த முரண்பாட்டை ஏற்படுத்த நான் உங்கள் அரசியல் உறவுகளை துண்டித்துக்கொண்டேன்.
உங்களுக்கிருந்த ஒரே ஒரு அரசியல் உறவான என் உறவும் துண்டிக்கப்பட்டு அரசியல் அநாதையாக்கப்பட்டீர்கள்.
அதன் பின் நாங்கள் பல்வேறு தோழர்கள் நண்பர்கள் ஒன்று சேர்ந்து அரசியல் சமூக ரீதியில் செயல்பட தொடங்கினோம். அன்று தொடங்கியதுதான் எங்கள் மீதான இந்த காழ்ப்பபுணர்ச்சி அரசியல். அது இன்றும் தொடர்கிறது. யார்யாரையெல்லாம் நாங்கள் அரசியல் ரீதியில் முரண்படுகின்றோமோ அவர்கள் சார்பாக நின்று எங்களை வசைபாடுவதே உங்கள் பிழைப்பாகிவிட்டது.
இராயகரன் உங்கள் புகலிட வாழ்க்கையிலாவது நீங்கள் நேர்மையான அரசியல் செய்வீர்கள் என்று பார்த்தால் அதுவும் வீணாகிப்போகின்றது. நீங்கள் இதுவரை செய்த புகலிட “பம்மாத்து” அரசியலுக்கு பெரிய பட்டியலே இடமுடியும். ஒரு சில உதாரணங்கள்.
சில காலங்களுக்முன் பிரான்சில் கறுப்பின இளைஞர்கள் மீது பொலீஸார் மேற்கொண்ட தாக்குதலினால் பெரும்போராட்டமே நடைபெற்றது.பல இடங்களில் வாகனங்கள் எரிக்கப்பட்டன நீங்கள் வசிக்கும் வீட்டருகில் இருந்த வாகனங்களும் எரியூட்டப்பட்டன. இதனால் ஏற்பட்ட நெருப்பு நீங்கள் குடியிருக்கும் கட்டிடத்தின் கீழ்பகுதி ஐன்னல்களை சேதப்படுத்திவிட்டது. உடனே நீங்கள் உங்கள் இணையத்தளத்தில் பிரான்சில் உங்களை புலிகள் வீடடை எரித்து கொலை செய்த முயற்ச்சித்ததாக ஒரு “பரபரப்பு” அறிக்கை ஒன்றை வெளியிடடு எம்மையெல்லாம் அதிர்ச்சி அடைய வைத்தீர்கள். இதுதான் இரயாகரன் உங்களின் பாசையில் “பம்மாத்து விபச்சார அரசியல்” என்பது.
சுமார் ஏழுவருடங்களுக்கு முன் என் நண்பர் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றார். உங்களுக்கு வந்ததே கோபம். ஈழப் போராட்டம் பற்றி கதைக்கும் ஒருவர் எப்படி ஏகாதிபத்திய பிரான்ஸ் நாட்டு உரிமை பெறமுடியும்? இவனெல்லாம் ஏகாதிபத்திய கைக்கூலி.
இவனுக்கெல்லாம் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தைப்பற்றி பேச என்ன அருகதை உண்டு என்று நீங்கள் உங்களது வழமையான வசைமொழி வாந்தியை நண்பர் மீது எடுத்து நண்பரை நாறடித்துவிட்டீர்கள். நண்பர் வெலவெலத்துப்போய் கொஞ்ச நாள் வீட்டக்குள்ளேயே முடங்கிப்போய்விட்டார்.! இது நடந்து சுமார் இரண்டு வருடங்களின் பின் நீங்கள் காதோடு காது வைத்தமாதிரி “பிரான்ஸ் ஏகாதிபத்திய” நாட்டின் சட்டதிட்டங்களை ஏற்று இந்த நாடடிற்கு விசுவாசமாக இருப்பதாக சத்தியப்பிரமானத்தோடு பிரான்ஸ் நாட்டின் “குடிமகனாகிக் “கொண்டீர்கள். இதுதான் இராயாகரன் நீங்கள்!
சென்ற மாதம் பரீசில் திருமறைக்காலமன்றம் என்ற அமைப்பு ஒரு நாடக விழாவை நடாத்தியது. நானும் எனது நண்பர்களும் சென்றிருந்தோம். நீங்களும் அங்கு வந்திருந்தீர்கள் அங்கு வைத்து எனக்கும் என் நண்பாகளுக்கும் ஒரு துண்டுப் பிரசுரத்தை தந்தீர்கள் . சில நாட்களின் பின் உங்கள் இணையத்தளத்தில் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. பரீசில் நடந்த விழாவில் நீங்களும் உங்கள் தோழர்களும் நூற்றுக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததாக.இச் செய்தியை படிக்கும் விபரம் புரியாத ஒருவர் இராயாகரனும் தோழர்களும் பிரான்சில் புரட்சி பண்ணுவதாக எண்ணிக் கொள்வார்கள். அவ்வாறான தோற்றப்பாட்டை உருவாக்கும் விதமாகவே அச் செய்தியை நீங்கள் வெளியிட்டிருந்தீர்கள். அதில் தந்திரமாக திருமறைக்காலமன்றம் நடாத்திய விழாவில் என்பதை தணிக்கை செய்து “விழா” என்றே குறிப்பிட்டீருந்தீர்கள். காரணம் திருமறைக்கலா மன்ற விழா என்றால் பலருக்கு உங்களின் இந்த விளம்பர பம்மாத்து அரசியல் அம்பலமாகிவிடும் என்று . தனியொருவராக வந்து எங்களுக்கு துண்டுப்பிரசுரம் தந்துவிட்டு நீங்கள் செய்யும் இந்த பம்மாத்து அரசியலை என்னவென்பது !
பகுதி இரண்டு:
வழமையாக கிளப்பும் வதந்திகளும் சேறடிப்புக்களும் கொண்ட தனிநபர் தாக்குதலாக இராயாகரனின் கட்டுரை (!) காணப்படுவதால் இதற்கு போய் பதிலளிக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதே என் தோழர்களின் அபிப்பிராயமாக இருந்தது. இராயாகரன் அரசியல் என நினைத்துக்கொண்டிருப்பது மற்றவர்கள் மீதான சேறடிப்பு , அவமானப்படுத்தல், வதந்திகளைப் பரப்புதல் என்பவைகளையே. இராயாகரன் ஆரோக்கியமான அரசியல் உணர்வுகளை இபார்வைகளை ,பண்புகளை , இனி எக்காலத்திலும் அவரால் கற்றுக்கொள்ள முடியாதென்பது தோழர்களின் இறுதி முடிவாக இருந்தது. இருந்தாலும் என் பதில்களை அளிக்கவேண்டிய தார்மீகக் கடமை எனக்கு இருப்பதாகவே நான் கருதகிறேன்.அந்த அடிப்படையிலேயே இந்த இரண்டாம் பகுதி அமைகிறது.
புளொட் அமைப்பின் அரசியல் ஆளுமை கொண்டிருந்த பெண்களை கொச்சைப்படுத்தும் இராயாகரனின் கீழ்தரமான மனோ நிலையை அவதானிக்கும்போது அருவருப்பாக இருக்கிறது. எந்தவித ஆதாரமும் அற்று புளொட் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் பாலியல் ரீதியில் அணுகப்பட்டார்கள் என்ற இராயாகரனின் அயோக்கித்தனமான தன் ஆதிக்க பாலியல் வக்கிரக மன நிலை கொண்ட கேவல அரசியலை இராயாகரன் தொடர்ச்சியாக செய்துவருகிறார். எந்தவித ஆதரமும் அற்ற முறையில் புளொட் அமைப்பில் அங்கம்வகித்த பெண்கள் அனைவர் மீதும் சேறு பூசும் இராயாகரனின் இந்த வக்கிர புத்தி அப் பெண்களின் வாழ்க்கையை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.
இங்கே இரயாகரனின் விமர்சன மனஅமைவு பற்றிச் சில விடயங்களைச் சொல்ல வேண்டும். இரயாகரன் தன்னைப் ‘பென்னாம்பெரிய’ மார்க்சியவாதி என பீற்றிக் கொள்வதால் இதனைச் சொல்ல வேண்டியிருக்கிறது. இராயகரனின் அரசியல் விமர்சனச் சொற்களைப் பாருங்கள். முந்தானை, விபச்சாரம், படுப்பது, விபச்சாரி, சேலை விரிப்பது – என்ன கேவலமான வார்த்தைகள் ! தனது அரசியல் எதிரிகளை, ஆண்கள் பெண்கள் என அனைவரையும் இரயாகரன் அணுகும் முறை இது. இராயகரன், எந்த மார்க்சிய விவாதங்களில் இந்தவிதமான பாலியல் நிந்தனைச் சொற்கள் சரமாரியாக வீசப்படுகிறது என்பதை, மார்க்சிய அல்லது எந்தத் தொகைநூலையாவது மேற்கோள் ஆதாரம் காட்டி எங்களுக்குச் சொல்வாரா ?
பிரான்ஸ் நாடு மனோவியல் பகுப்பாய்வுக்குப் பெயர்போன நாடு. சீமான் தீ போவாவின் ‘இரண்டாம் பாலினம்’ நூல் வெளியான நாடு. தயவுசெய்து இந்தச் சொற்பாவனைகளின் பின்னிருக்கும் இரயாகரனின் மனஅமைவை அவர் மனவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்திக்கொள்வது அவருக்கு நல்லது என்பது எனது பணிவான வேண்டுகோள்.
இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்களைப் பாலியல் பாவனைக்கு உட்படுத்தினார்கள் என எழுதுகிறார். இலங்கை அரசுக்கு அணுசரனையான அரசியல் கொண்ட பெண்களை மகிந்தாவுக்கு முந்தனை விரித்தார்கள் என எழுதுகிறார். இவர் அறமும் ஒழுக்கமும் நேர்மையும் பேசுகிறார். கொடுமையிலும் கொடுமை .
இராயாகரனின் குற்றச் சாட்டில் ஒன்று, சிவராமுக்கும் எனக்குமான உறவு பற்றியது. சிவராமுக்கும் எனக்குமான உறவு என்பது 1985ல் இலங்கையில் கூட்டப்பட்ட புளொட் தள மாகாநாட்டோடு துண்டிக்கப்ட்டிருந்தது. 1985ம் ஆண்டுக்கு பிற்பாடு 14வருடங்களின் பின் 1999ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பில் சிவராமை மீண்டும் சந்தித்தேன். நானும் எனது தோழர்களும் சிவராம் தொடர்பாக எம்முள் தேக்கி வைத்திருந்த விமர்சனங்களை குற்றச்சாட்டுக்களை சிவராம் முன் வைத்தோம்.இது ஒரு நீண்ட முரண்பாடு கொண்ட விவாதமாகவே இருந்தது. (இந்த சந்திப்பு பற்றி நீண்ட கட்டுரை ஒன்றை விரைவில் எழுத எண்ணியுள்ளேன்) சிவராம் இந்த வருகையின்போது உமாகாந்தனின் இல்லத்தில் தங்கினார்.
இதன் பின் 2005ம் ஆண்டு கொழும்பில் வைத்து சிவராம் படுகொலை செய்யப்படுவதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன் பரீசில் நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டிற்கு சிவராம் வந்திருந்தார். இவரின் இந்த வருகை காலத்தில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் புலிகளின் உடைவும் , கருணாவின் வெளியேற்றமும் நிகழ்ந்திருந்தன. இலங்கை அரசியலில் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன. சிவராம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் ,அப்போது இலங்கையிலிருந்து வந்தவர் என்பதாலும் இலங்கை அரசியல் நிலமைகளை , கிழக்கு பிரச்சனைகளை அறிந்து கொள்ள நானும் என் நண்பர்களும் சிவராம் ஒரு பத்திரிகையாளன் என்ற அடிப்படையில் சந்தத்தோம.
இவ் வருகையின்போது சிவராம் மாகாநாட்டு பிரதிநிதகளுக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொட்டலில் அவர் தங்கியிருந்தார். ( சிவராம் என் வீட்டில் தங்குவதற்கு நான் என்ன இராயாகரன்போல் சொந்த வீடு வாங்கி “பிரான்ஸ் குடிமகனாகி” அரசின் அனைத்து சலுகைகளையும் உதவிகளையும் பெற்று புரட்சிபேசிக்கொண்டு சொகுசாகவா வாழ்கிறேன். இன்னும் இலங்கை “அரசியல் அகதியாக” வாடகை வீட்டில் சின்ன றூமில் பலநெருக்கடியில் மத்தியில் வாழ்கிறோம்.)
அடுத்த குற்றசாட்டு டக்கிளஸ் தேவானந்தாவை சந்திப்பதற்கு ஒரு இளைஞனை ஏமாற்றி சிறீலங்கா எம்பசிக்கு அழைத்துச் சென்றேனாம்! … இராயாகரனுக்கு வதந்தியை கிளப்புவதற்குக்கூட அறிவு போதவில்லை. பிரான்ஸ் தேசத்தில் ஓர் இளைஞனை ஏமாற்றி இலங்கை எம்பசிக்கு கூட்டிச் சென்றேனாம்!. என்னையா இராயாகரன் உங்கள் குற்றச்சாட்டு?
2006ம் ஆண்டு டக்கிளஸ் தேவானந்தா பிரான்ஸ் வந்திருந்தார். இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாகவும்இ ஈபிடிபி மீதான குற்றச்சாட்டுக்கள் பற்றியும் இவரோடு உரையாட விரும்பினோம். பிரான்சில் இருக்கும் ஈபிடிபி அமைப்பினரை தொடர்பு கொண்டு இதற்கு ஏற்பாடு செய்து தரும்படி கேட்டோம். அதன் அடிப்படையில் நாங்கள் சந்திப்பதற்கு ஒரு மண்டபத்தை ஒழுங்கு படுத்தியிருந்தோம். இந்த காலகட்டத்தில் பிரான்சில் புலிகளின் ஆதிக்கமும் அட்டகாசமும் மிகவும் அதிகரித்திருந்தது. இதனால் டக்கிளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு கருதி நாங்கள் ஒழுங்கு செய்த மண்டபத்தில் சந்திப்பை மேற்கொள்வதற்கு மறுத்துவிட்டனர்.
பின்னர் டக்கிளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு கருதி பிரான்சில் அமைந்திருக்கும் இலங்கை தூதுவராலயத்திற்கு அருகில் இருக்கும் மண்டபத்தை ஈபிடிபி யினர் ஒழுங்கு செய்திருந்தனர். அந்த மண்டபத்தில் சந்திப்பு நடைபெற்றது. காரசாரமான விவாதங்களோடும் கருத்துக்களோடும் உரையாடல் நடைபெற்றது. சுமார் 150 பேர் அளவில் நாங்கள் கலந்துகொண்டோம். பலத்த முரண்பாட்டோடு அச் சந்திப்பு முடிவடைந்தது.
இதைத்தான் இராயாகரன் அழகாய் வதந்தியாய் புனைந்துள்ளார். பாவம் இராயாகரன். நாங்கள் டக்கிளசை மாத்திரமல்ல ஆனந்தசங்கரி , சிறீதரன் , துரைரட்ணம் , பவான் , சந்திரசேகரன் , லயனல் போபெக்கே மற்றும் இலங்கை சிங்கள இடதுசாரிகளையும் ஜே.வீ.பீ யினரையும் பரீசில் சந்தித்து உரையாடி உள்ளோம். எங்கள் அரசியல் கருத்துக்களை விமர்சனங்களை எவ்வித சமரசமும் இன்றி மிக ஆணித்தரமாக இவர்கள் முன் வைத்துள்ளோம்.
இராயாகரனைப் பொறுத்தவரை பிரான்சில் எவர் நடத்தும் எச் சந்திப்புக்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் கூட்டங்களுக்கும் இராயாகரனை யாரும் அழைப்பதில்லை.இராயாகரனின் மொட்டைத்தனமான வதந்தி பரப்பும் சேறடிக்கும் தனிநபர் தாக்குதல்களே இதற்குக் காரணம். இதனால் இராயாகரன் அரசியல் உறவுகளில் தனிமைப்பட்டவராகவே தொடர்ந்து இருக்கிறார். ஆக்க பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடும் தோழர்கள் மீதான இராயாகரனின் சேறடிப்புக்கான உளவியல் காரணம் இதுதான். இதற்கு அசோக் ஆகிய நான் என்னதான் செய்யமுடியும்!
அடுத்த இராயாகரனின் கண்டுபிடிப்பு ஈஎன்டிஎல்எப் ராஜனுக்கும் எனக்கும் உறவு என்பது!
இந்த குற்றச்சாட்டுப் பற்றி கொஞ்சம் விரிவாக பேசலாம் என நினைக்கிறேன். புளொட்டில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக 1985ல் பெரும்பாண்மை மத்திய குழு உறுப்பினர்களும் தோழர்களும் புளொட்டைவிட்டு வெளியேறியிருந்தோம். இப் பிளவு மூன்று பகுதிகளாக அமைந்திருந்தது. ஒரு பகுதித் தோழர்கள் ராஜனோடும், இன்னொரு பகுதி தோழர்கள் எங்களோடும், மிகக் குறைந்த தோழர்கள் தோழர் காந்தனோடும் வெளியேறினர். காந்தனோடு வெளியேறிய தோழர்கள் தலைமறைவாகி தீப்பொறி என்ற பெயரில் பின்னர் இயங்கத் தொடங்கினர். எங்களோடு நூற்றுக்கணக்கான தோழாகள் வெளியேறியபடியால் தலைமறைவாகி அரசியல் இயக்கத்தை முன்னெடுப்பதென்பது சாத்தியம் இல்லாமல் போயிற்று. அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்ன என்பது பற்றிய குழப்பங்களும் நெருக்கடிகளும் எங்களுக்கு தோன்றின.
இக் காலகட்டத்தில் ஏனைய அமைப்புக்களினுள்ளும் முரண்பாடு தோன்றி தோழர்கள் வெளியேறிருந்தனர். இந்த இயக்கங்களின் ஜனநாயக இன்மையாலும் இஅராஐகத்தாலும் வெளியேறிய அனைத்து இயக்கத் தோழர்களையும் உள்ளடக்கி ஒரு கூட்டமைப்பை உருவாக்க எண்ணினோம். அதனடிப்படையில் ஈபிஆர்எல்எப் , ஈரோஸ் , என்எல்எப்ரி அமைப்புக்களிலிருந்து வெளியேறிய தோழர்களோடு ஈஎன்டிஎல்எப் என்ற” ஈழதேசிய ஜனநாயக முன்னணி “என்ற கூட்மைப்பை தொடங்கினோம்.
இதில் உருவாக்கப்ட்ட மத்திய குழுவில் ராஜனும் அங்கம் வகித்தார். பல்வேறு அமைப்புக்கள் சேர்ந்த தோழர்களைக் கொண்ட ஒரு முன்னணியை எவ்வாறு ஜனநாயக மத்தியத்தோடு கொண்டு நடாத்துவதென்பது பெரும் சிக்கலாகவே இருந்தது. பல்வேறு முரண்பாடுகள் உருவாகத் தொடங்கின. இறுதியில் இவை கூர்மையடைந்து நானும் எனது தோழர்களும் இவ் அமைப்பிலிருந்து 1987ல் வெளியேறினோம்.
அதன் பின் ஈஎன்டிஎல்எப் ராஜனின் கட்டுப்பாடடில் இயங்கத் தொடங்கியது. ராஜனோடு கொண்ட அரசியல் உறவுகளை நான் துண்டித்துக்கொண்டேன்.
நாங்கள் ஈஎன்டிஎல்எப் ன் மீது எங்கள் அரசியல் விமர்சனங்களை முன் வைப்பதோடு இனியொரு தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இலங்கை மீதான இந்திய விஸ்தரிப்பு மேலாதிக்கத்திற்கு எதிராக மிக காத்திரமான அரசியல் விமர்சனங்களையும் நாங்கள் தொடர்ச்சியாக முன் வைத்து வருகிறோம்.
கேணல் அபுதாகீரின் பங்களாதேசத்தின் மீது இந்தியா மேலாதிக்க அரசியலை அம்பலப்படுத்திய “வங்கம் தந்தபாடம்” என்ற புத்தகத்தை 1983ல் இலங்கையில் வெளியிட்டு இலங்கை மீதான இந்திய மேலாதிக்க அபாயத்தை எச்சரித்தவர்கள் நாங்கள்.
(இதெல்லாம் இராயாகரனுக்கு எங்கே தெரிந்திருக்கப்போகிறது. இராயாகரன் அவர்களுக்கு என் அன்பான வேண்டுகோள் அவர் முதலில் மாக்ச்சியத்தின் அடிப்படையை கற்கவேண்டும்.அதன் பின் ஈழப்போராட்டதின் வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும். )
அதன் பின் 1992ல் நான் பிரான்ஸ் வந்தடைந்தேன். இங்குவந்து பார்த்தபோது இங்கே எல்லா இயக்கங்களின் பிரதிநிதிகளும் இயங்கிக்கொண்டிருந்தனர். ஈஎன்டிஎல்எப்வும் இங்கே இயங்கிக்கொண்டிருந்தது. எல்லா இயங்கப் பிரதிநிதிகளும் முன்னர் எனக்கு தெரிந்தவர்கள் என்பதால் அவர்களோடு சாதாரண நட்புக்களை பேணிவந்தேன். அதே நேரம் அரசியல் ரீதியில் மிகவும் கறாரான பார்வைகளையும் , விமர்சனங்களையும் கொண்டிருந்தேன்.
சமீபத்தில் பிரான்சில் இருக்கும் எமது இடதுசாரி தோழர்களோடு மக்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் கண்டித்து கண்டன ஊர்வலத்தை நடாத்தினோம் இதில் இந்த இயக்கங்கள் தொடர்பான கடுமையான கண்டனத்தையும் விமர்சனத்தையும் வைத்திருந்தோம். . சமூக உறவற்று , அரசியல் உறவற்று , கொம்பூட்டர் முன்னால் குந்திக்கொண்டு “சேறடிப்பு புரட்சி” பண்ணும் இராயாகரனுக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகிறது?
இறுதியாக இராயாகரனுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்பகின்றேன். தொடர்ச்சியான இந்த சேறடிப்பு தனிமனித தாக்குதல் அரசியல் தற்கொலைக்கு உங்களை உள்ளாக்கிவிடும். தயவு செய்து கவனம் கொள்ளவும்.
சேறடிப்புக்கள் , அவதூறுகள் என்று இன்னோரன்ன அனைத்தையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் மீதான பற்றுடன் உங்கள் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன்.
ஒரு கதை சொல்கிறேன், மாதகல்லில் எனது வீட்டிற்கு அருகில் ஒரு பணக்காரரின் வீடு இருந்தது. அங்கு ஜிம்மி என்ற கடி நாய் இருந்தது. கதவில் கூட ஒரு பலகை இருக்கும்,* கடினாய் கவனம்* அம்மா எப்பவும் சொல்லுவா. அதோடை சீண்டாதே என்று. நானும் பார்த்திருக்கிறேன் அந்தப்பக்கம் யாருமே போவதில்லை. வீதியால் அமைதியாகப் போன ஒருவரை அது கடிக்க முற்பட்டது. அவர் காலால் உதைந்து கல்லால் அடித்துக் கலைத்து விட்டார். மறுநாள் அது செத்துப்போனது. எல்லாரும் அது தற்கொலை செய்து கொண்டது என்றே சொன்னார்கள்.
hi
that guy is thinking in a very crooked manner
that became a real pain……………………..to our people.
i think in his web site,there is hammer and sickle,
so you can understand,where his loyality lying
நன்றி தோழரே நன்றி. மிகவும் நிதானமாக பொதுவுடமைவாதிக்குரிய பண்புகளோடு எதிர்வினையை ஆற்றியுள்ளீர்கள்.
நிதி பெறும் தன்னார்வ நிறுவனம் தொடர்பான கேள்விக்கு ஏன் இரயாகரன் தனிநபர் உறவுகளை முன்னிலைப்படுத்த வேண்டும்? கலையரசன் தான் ஐஎன்எஸ்டி உறுப்பினர் இல்லை என ஆதாரபூர்வமாகப் பேசுவதற்கு என்ன தடை?
இதைவிட்டுவிட்டு நடைமுறை சார்ந்த அரசியல் விவாதத்தை மடைமாற்றி தனிநபர் விரோதகுரோதமாக இரயாகரன் முன்னெடுக்கிறார்.
இரயாகரனுக்கு, அசோக் யோகன் சொல்லுவதுபோல் தொடர்ச்சியான இந்தச் சேறடிப்பு, தனிமனிதத் தாக்குதல், அரசியல் தற்கொலைக்கு உங்களை உள்ளாக்கிவிடும் . வருமுன் காப்பது நன்று. எனது வேண்டுகோள்.
//இந்தநேரத்தில் உங்களிடம் ஒரு கேள்வியை என்னால் எழுப்பமுடியும். தோழர் விசுவானந்த தேவன் ஒப்படைத்த அந்தப் பணத்திற்கும் நகைக்கும் என்ன நடந்தது?. தோழர் விசுவானந்தனின் இறப்போடு இதனையும் சேர்த்து புதைத்துவிட்டீர்கள். இதுதான் உங்களின் அரசியல் நேர்மை.// அசோக்
ரயா முதலில் தன் நேர்மையை நிரூபித்துவிட்டு மற்றவர்களைப் பற்றி பேசட்டும்.
தோழர் இரயாகரன் ஒரு கேள்விச் செவியன் என்றே சொல்ல வேண்டும். அவர் எழுதுவதற்கு எந்தவித ஆதாரமும் அவருக்குத் தேவையில்லை. அவர் காதில் யாராவது ஒரு செய்தியை ஊதி விட்டால் அதற்கு காது மூக்கு செவி கண் போன்ற இன்ன பிற விசயங்களை அவர் தானாகவே தன் கற்பனை ஊடாக இணைத்துக் கொள்வார். இதுதான் இரயாகரன் பாணி. இதற்கு போய் நாம் அலட்டிக்கொள்ளக் கூடாது. அவர் எழுதுகின்ற விசயங்களை கவுண்டமணி செந்தில் கமடிகளாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.
புகலிடத்தில் தமிழ் மக்களின் பிரச்சனையை வைத்து வயிறு வளர்ப்பதில் பாசிசப் புலிகளையும் மிஞ்சிவிட்டார்கள் இவர்கள். இந்த பச்சோந்தி கூட்டப் பெயர் வழிகளில் ஒருவர் தான் இந்த இரயாகரன்.
மக்கள் மக்கள் என்று கூச்சலிடும் இரயாகரனுக்கு பக்கத்தில் ஒருவராவது உள்ளனரா என்பதை இரயாகரன் கூறட்டும் பார்ப்போம். இரயாகரன் ஒரு யூரோ பணத்தையாவது நாட்டில் வாழும் அந்த மக்களுக்காக செலவளித்துள்ளாரா சொல்லட்டும் பார்ப்பம். . இரயாகரன் யாரைப் பற்றியாவது தன் வாழ்க்கையில் இரண்டு நல்ல வார்த்தை எழுதியிருப்பாரா?
இறந்நதவர்களை கூட கழுகுக் குணம் கொண்டு கொத்தி தின்னும் குணம் இரயாகரனிடமிருந்து எப்போது விட்டுவிலகுமோ தெரியாது
இரயாகரன் இதுவரை காலமும் தாம் சம்பந்தப்பட்ட கற்றன் வங்கி பண மோசடி தொடர்பாய் சித்து விளையாட்டையே நமக்கு காட்டிவருகிறார்.
ரயா ஒருபக்கம் பலரை நம்பி ஏமாந்திருக்கிறார் என்பதும் உண்மை. பலர் ரயாவிற்குப் போன்செய்து ஏத்திவிடுவதாலும் அவர் எழுதுகிறார். துன்பத்தில் இன்பம் காணும் பல இடது சாரிகள் இவரை பிழையான பாதைக்கு திருப்பிவிடுகிறார்கள்.
சகோதரா றயா அவர்கட்கு!
மாறிவரும் ஒவ்வொரு சமூகத்திற்கும் எழுத்தும் அதன் ஆயுதமான பேனாவும் தான் அடிநாதமாக இருக்கின்றது..அதிலும் இனறு கணணி மயப்பட்ட உருண்டோடும் உலகில் இந்த இணையதளங்களின் பங்கு எவ்வளவு முன்னோக்கியுள்ளதென்பது யாவரும் அறிந்ததே.ஆனால் புலம் பெயர் சூழலில் எம்மவர்களின் கையில் இந்த இணையதளம் படும்பாட்டை பார்க்கும்போது ……..
அதுவும் மக்கள்புரட்சியென்றும்-சமூகவிடுதலையென்றும்-பெண்ணியமும் என்றும் நீங்கள் உங்கள் இணைய தளத்தில் கருத்தை வெளியிடுவது சிறப்பானதே.ஆனால் கிட்டத்தட்ட 15 வருடங்களாக உங்கள் ஆக்கங்களில் அடிக்கடி தனிநபர்களை படுமோசமாக கீழ்த்தரமாக விமர்சிப்பதை எல்லோரும் கவனித்து பலவிதத்தில் பலமுறையில் பலபேர் பலதளங்களினூடாக சுட்டிகாட்டியுள்ளனர். நான் கூடசில இடங்களில் அதாவது சமூக மாற்றத்திற்கான சிறப்பான எழுத்துக்களை எழுதும் நீங்கள் இப்படித் தனிநபர் தாக்குதல்களையோ-பிற அமைப்புக்கள் சார்பான தாக்குதல்களையோ மிக கீழ்த்தரமான கொச்சை எழுத்துக்களால் எழுதுவதானது உங்கள் கருத்தாளமான கருத்துக்களை அப்படியே அடிபட்டுச் செல்லவைக்கின்றதென நேரே சுட்டிகாட்டியுள்ளேன்.மேலும் உங்களைப்போன்றோர் தயவு செய்து ஆதாரமற்ற அல்லது கேள்விச் செவியன் போன்று சம்பவங்களை வெளிப்படுத்தாதீர்கள்.ஏனெனில் பெண்ணியம் பற்றியபார்வையுள்ளவராக எழுதும் நீங்கள் எந்தத் தளதத்திலுள்ள பெண்களையும் சாடும் போது பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்தப்படுவதை சகஜமாக்கிக்கொண்டீர்களா?
அசோக் குறிப்பிட்டது போல் நானும் ராஜேஸ் பாலாவின் அரசியல் நடவடிக்கைகளிலோ அவாpன் செயற்பாட்டிலோ எள்ளளவும் உடன்பாடில்லை .ஆனால் வாயால் சொல்லவே கூச்சப்படும் கேவலமான சொற்பதங்களை உங்கள் எழுத்துப் பதிவுகளாக வெளியிடுவது. எந்தப் பெண்ணியத்தை மதிபபதாகும் என்பதை உணரவில்லையா?இப்படி கடந்த காலங்களில் பலவிடயங்களில் பெண்ணியம் பேசும் உங்கள் இப்படிப்பட்ட பார்வையுள்ள கட்டுரைகளால் பல பெண்கள் பலவிதத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.அதுவும் 1984முன்பகுதியிலிருந்து 1987வரை புளொட்டின் மகளிர் அமைப்பிற்கு பொறுப்பாக இருந்து புலிகளால் விரட்டப்படும் வரை தளத்திலும் பின் தளத்திலும் நான் செயற்பட்ட நிலையில் உங்களுக்கு ஒரு விடயத்தை திரும்பவும் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்
1983 பிற்பகுதியில் புளொட் உட்பட மற்றைய இயக்கங்களுக்கும் தம்மை தேசியவிடுதலைபோராட்டத்தில் இணைக்க ஆயிரமாயிரம் பெண்கள் ஆண்களுக்கு சமமாக சொத்து சொந்தங்களையும் நாட்டையும் கூட விட்டு புறப்பட்டு-உயிரையும் பணயம் வைத்துதான் செயற்பட்டார்கள்.இதில் எமது புளொட் மகளிர் எந்தக் காலத்திலும் எமது தமிழ் சமூகத்தின் மத்தியில் தான் தமது அனைத்து செயற்பாட்டையும் மேற்கொண்டோம் .வீட்டையே துறந்து புறப்பட்டு சமூகத்தின் பார்வைக்குள் 24மணத்தியாலமும் மக்கள் மத்தியில்தான் செயற்பட்டோம்.எனவே மகளிராகிய நாம் எவ்வளவு சமூகக்கட்டுப்பாடுகளோடு அந்தந்த மக்களோடு பழகியதை இன்றும் எம் மக்களும் எமது சக ஆண் போராளிகளும் மறந்திருக்க மாட்டார்கள்.எமது மகளீரமைப்பு என்றும் தனித்துவமாக அதாவது ஆண் போராளிகளை கூடியவரையில் சார்ந்து நிற்காமல் செயற்பட்டோம் ஏனெனில் அந்தந்த சமூகச்சூழலை மனதில் கொண்டு அந்தந்த சமூகத்தின் சொந்தப் பிள்ளைகளாவே செயற்பட்டோம்.உதாரணத்திற்கு சக ஆண் போராளிகளோடு காரணமின்றி வேலைத்திட்டங்களில் பங்குகொள்வதிலோ ஏன் துவிச்சக்கரவண்டிகளில் செல்வதிலோ கூட எல்லா மகளீரும் கவனமெடுத்தை நாம் குறிப்பிட வேண்டும் 25வருடங்களுக்கு முன்னால் இளம் போராளிகளான நாங்கள் எமது தமிழ் சமூகத்திற்குள் நின்றுதான் எமது தேசிய போராட்டத்தை முன்னெடுத்தோம் இப்படியாக போராட்டத்தில் பங்குபற்றியஎமது மகளிரும் சக ஆண்போராளிகளும் பிரான்ஸ் உட்பட பல நாடுகளிலும் இன்னும் உயிருடன் தான் வாழ்கின்றோம் .நாங்கள் பல சாட்சியங்களோடு வாழ்கின்றோம்.தயவு செய்து உங்களிடம் சாட்சியம் இருந்தால் பெண்ணியத்தை தொடர்ந்தும் கொச்சைப்படுத்தாமல் -ஒரு காலத்தில் தமது உயிரையே விடுதலைக்காக அர்ப்பணிக்கத் துணிந்த தோழமைக்காவது மதிப்புக் கொடுங்கள் இது அன்று புறப்பட்ட பெண்களுக்காக மட்டுமல்ல-இன்றுவரை சிறையில் அடைப்ட்டு வதைபடும் பெண் போராளிகளுக்காகவும் மட்டுமல்ல.எந்தப் பெண்களையும் யாருடைய பழிவாங்கும் எழுத்திற்கும் பயன்படுத்தாதீர்கள்.இதுவும் ஒருவகை பேனா முனையில் நடைபெறும் பெண்களைப் போகப் பொருளாகப் பயன்படுத்தும் ஒரு செயற்பாடே!..உங்கள் பாஷையில் சொல்வதானால் உங்களிடமே இருந்து அடிக்கடி புறப்படும் ஆணாதிக்க செயற்பாடே!
எனது கருத்தை ஆணவத்தோடு பார்க்காமல் ஆரோக்கியமாக பார்த்தால் ஒரு போராளியின் -பல பெண் போராளிகளின் ஆத்ஙகமும் ஆவேசமும் உங்கள் அடி மனதிலாவது ஒரு உறுத்தலைதராதா என நினைத்தே இதை தெரிவிக்கின்றேன்.
தன்னுடைய பகையாளிகளுடன் பகையைத்தீர்த்துக்கொள்ள இரயாகரனுக்கு துருப்பு சீட்டாய் .PLOTE இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் கிடைத்துள்ளார்கள். எந்த சாட்சியங்களை வைத்து ரயாகரன் இப்படி கதைக்கிறார்? வாய்க்கு வந்தமாதிரி ரயாகரன் .PLOTE பெண் போராளிகளின் வாழ்க்கையை கொச்சைப்படுத்துவதை அணைவரும் கண்டிக்கவேண்டும்
புளோட் சிவராம் மீத ரெயாகரன் புளொட் பெண்களை பாலியல் ரீதியில் அனுகினார் என்று வைக்கும் குற்றச்சாட்டைப்போன்று பல வதந்திகளை அவருடைய இணையத்தளத்தில் முன்னர் பல தடவை பரப்பியுள்ளார். புளொட் தலைவர் உமாமகேஸ்வரன் / கவிஞர் …… ….. . புளொட் பெண்களை பாலியல் ரீதியில் பயன்படுத்தியதாக எழுதியுள்ளார் என்.எல்.எப். ரி இயக்கத்தை சேர்ந்த லண்டனில் இருக்கும் …………… மீதும் கனடாவில் இருக்கும் ………… மீதும் நோர்வேயில் இருக்கும்……….. மீதும் பழிசுமத்தி இவர்கள் நாட்டில் பெண்களோடு பாலியல் உறவுகள் வைத்திருந்தார்கள் என்று தனது சமர் சஞ்சிகையில் கதைகட்டியவர் இந்த ரெயாகரன். ஆதாரம் தேவைப்பட்டவர்கள் பழைய சமர் சஞ்சிகைகளை பார்க்கவும் பாலியல் பழி சுமத்துவதில் ரெயாகரனுக்கு நிகர் இவரேதான்.
ரஜாகரன் ஒரு ………. அவரின் எளூத்துகளே அதற்கு உதாரணம் அவர் தனது தனிமனித காள்புனர்வை இப்படி வெளீப்படுத்தி தன்னை தானே அம்மனமாக்கி கொள்கிரார்(அவர் பாஸயில் சொல்லுகிறேன்) தமிழ் மொளீயை கேவலப்படுத்தி அரஙகம்நடத்தும் இவர் அதன் விளம்பரத்துக்காக என்ன வேண்டுமாணாலும் செய்வார்.
சேலை விரித்தாள் முந்தானை விரித்தாள் பாய்விரித்தாள் வேசைத்தனம் விபச்சாரம் படுப்பது. அப்பப்பா மாக்ஸ்சியவாதி இரயாகரனின் தமிழ் மொழி சொல் அகராதி புல்லரிக்கவைக்கிறது. மாக்ஸ்சியத்தை கேவலப்படுத்துவதற்கு இரயாகரன் ஒருவரே போதும். இந்த பாலியல் காலாச்சார காவலர் தமிழ்நாடு- ஈரான்- நாசி கால ஒழுக்கக் காவல்துறையைகூட மிஞ்சிவிட்டார். அவர்களது சீருடையையும் இவருக்கு மாட்டிவிட்டால் நாங்கள் இனி இரயாகரனின் நிறத்தைத் துல்லியமாகத் தெரிந்து கொள்வது சுலபமாக இருக்கும்!
அசோக் நான் ஒரு முன்னை நாள் plot அமைப்பின் பெண் உறுப்பினர்தான்.ஜென்னி அக்கா மாதிரி சொந்தப் பெயரில் எழுத எனக்கு துணிவில்லை.ஏனெனில் ரயாகரன் போன்றோரின் வெப்சைட்களில் மாட்டுப்பட்டு சீரழிய என்னைப்போன்றோருக்கு தைரியம் இல்லை.அந்த இளம் வயதில் இலங்கை அரசிற்கே எதிராக போராடப்பபுறப்பட்ட எமக்கு.இப்படியானோரின் சிந்தனையுள்ள வெப்சைட்டினை பற்றி பயம் உள்ளதென்றால் அந்த வெப்சைட்டின் தரத்தை உணர்வீர்கள்தானே.பொதுவில் நான் எல்லா வெப்சைட்டையும் ஓரளவு படிக்கும் பழக்கம் உள்ளதால் ரயாகரனின் வெப்சைட்டையும் சில வேளைகளில் பார்ப்பேன்.பொதுவாகவே தனது ஆக்கங்களில் பெண்கள் பற்றி தியரியாக மாக்சிய கருத்துக்களை ஒட்டி எழுதினாலும் நடைமுறை சார்ந்த கட்டுரைகள் எழுதும் போது ஒரு மஞசள் தரத்துப் பத்திரிகையின் தரத்துடனேயே எழுதுகின்றார்.இப்படியானவற்றை வாசிக்கும்போது மனம்நிறையவே மிக அழுத்தமாக இருக்கும்.அதிலும் இதற்கு முதலும் பலதடவை எமது இயக்கப் பெண்களைப்பற்றி கீழ்த்தரமாக குறிப்பிட்டுள்ளார்.இதனால் கடந்த காலத்தில் இயக்கங்களில் ஈடுபாடாக பெண்களைப்பற்றி இயக்கத்தில் நேரடியாக ஈடுபடாதவர்க்கு எப்படி பிழையான கருத்து விதைக்கப்படும் என்று ஏன் இவர் யோசிப்பதில்லை.என்னைப் போன்ற பெண்கள் இயக்கங்களை விட்டு ஒதுங்கவேண்டிய காலங்கள் வந்தபோது பின்னால் குடும்பம் கணவன் பிள்ளைகள் என புதிய சூழலுக்குள் வாழப்பழகிவிட்டோம்.இந்த வாழ்க்கையில் அதிகமாக எமது சமூக அமைப்பிற்குள்ள சராசரி ஆண்களைத்தான் திருமணம் செயதும் வாழ்கின்றோம்.இப்படியான இயக்கப் பெண்களை பற்றிய ரயாகரனின் கீழத்தரமான தகவல்களால் எத்தனை பெண்கள் தமது கணவர்மார்களால் சந்தேகப் பார்வைக்கு ஆளாகியுள்ளனரென்று உணரவில்லையா?எத்தனை குடும்பங்களில் பிரச்சனை என்று கேள்விப்படவில்லையா?இப்படியாக இவரைப் பொன்றோர் பொது வாழ்க்கைக்குப் புறப்பட்ட பெண்களை தொடர்ந்தும் கொச்சைப்படுத்துவதை இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பொறுத்துக் கொண்டிருக்க முடியும். ரயாகரன் உங்கள் வக்கிரப்புத்தியால் என்னைப் போன்ற பெண்கள் படும் மனஉளைச்சல்களைப் புரியாத நீங்கள் எப்படி மாக்சிசம் மக்கள் புரட்சியென்று எழுதித்தள்ளுகின்றீர்கள். ரயாகரன் ஜென்னி அக்கா உங்களை நேரில் சந்திப்பவராக இருக்கின்றார்போலும் (அவவின் இந்த கொமன்ஸ் மூலம் அறியும் போது) எனவே அவரிடமே கேட்டுப் பாருங்களேன்.இந்தியாவில் தஞ்சாவுர் மாவட்டத்திலுள்ள ஒரத்தராயன்குடிக்காடு என்ற கிராமத்தின் நடுவே முதல் முதலாக 1984ல.எமது மகளிரமைப்பு பெண்கள் ப்தது பேர் தொலைத்தொடர்பு பயிற்சியினை மேற்கொள்ளும் போது அந்தக் கிராமத்து தலைவரின் குடும்பத்தின் வீட்டினருடனேயே கிட்த்தட்ட ஆறு மாத காலம்இருந்து அந்த இடத்து கிராமத்து மக்களுடனேயே ஐக்கியமாக எமது பயிற்சிகளை மேற்கொண்டோம்.அங்கு இருந்த ஆறுமாதமும்கூடிய வரை அம்மக்களின் அனைத்து உபசரிப்புக்களுக்கும் நாம் தான் உரியவர்கள். எம்மில் ஒரு சிலர் இன்றும் அம் மக்களுடன் நேரடித் தொடர்புகளை பேணுகின்றோம்.அதற்குப்பிற்பட்ட ஏனைய ராணுவப்பயிற்சி காலங்களில் கூட அதே மாவட்டங்களில் பிறிதொரு இடங்களில் அந்தந்த கிராமத்தை அதன் பழக்கவழக்கங்களை அந்தந்த சமூகத்தின் ஐக்கியத்துடன்தான் போராட்டத்தை சவாலாக முன்னெடுத்தோம். எமது நாட்டிற்குசென்று மக்களின் சமூகத்தின் அங்கமாகத் தான் வாழ்ந்து போராடினோம். எமது மகளிர் அமைப்பு சமூக்ததிலிருந்து அந்நியப்பட்டிருந்ததில்லை.அந்தச் சமூகம் இன்னும் அங்கு மட்டுமல்ல இங்கும் தான் உள்ளனர்.எம்மைப்போன்ற மகளீரும் இங்கும் தான் பலர் உள்ளனர்.எனவே எம்மைப் பற்றி வதந்திகளை காலத்திற்கு காலம் உலாவ விட்டு தமிழரங்க தளத்தை மித்திரன் பத்திரிகை தரத்திற்கு தொடர்ந்தும் நிலைநிறுத்தாதீர்கள்.
அசோக்>
உங்கள் கட்டுரை> பண்பட்ட ஒருவராக நீங்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறீர்கள் என்பதை தெளிவு படுத்தியது. ரஜாகரனுக்குப் பதில் எழுத வேண்டும் என்பதில் நீங்கள் காட்டிய அக்கறையும்> பதில் வழங்கிய முறையும் மனதுக்குப் பிடித்திருக்கிறது.
ரஜாகரன் போன்றோர் தமது பழைய வழித்தடத்திலிருந்து திருந்தி வருவார்கள் எனக்கருத முடியாவிட்டாலும்> சரியான திசை வழி பயணிக்க நினைப்பவர்களுக்கு உங்கள் பதிலுரை முக்கியமானவை. ரஜாகரனுக்காக அல்லாவிட்டாலும் “ரஜாகரனிசம்” வளராமலிருக்க உங்கள் பதிலுரை வழிகாட்டும்.
1983 ஐ ஒரு தொடக்கப்புள்ளியாகக் கொண்டாலும் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக நாங்கள் பல “மனிசர்களை” – “மாமனிதர்களை” கண்டு விட்டோம். நிலைமைகள் எப்படியெல்லாம் மாறி விட்டன. அதைப் பற்றிப் பேசினால் நீண்ட காதையாகிவிடும்.
கால் நூற்றாண்டகளிற்குப் பின்பம் எங்கிருந்து தொடங்குவது என்பது இன்னமும் புரியாப் புதிராக இருக்கிறது.
மற்றது> வன்னி அகதிகள் பலரைச் சந்திக்க முடிந்தது. புலிகளின் அழிவு வேலைகளின் – புலிப் பாசிசத்தின் ஆழமான வடுக்களை அறிய முடிகிறது. “நாங்கள் ஆயுதம் து}க்க-து}க்கிய மனநோயளிகள் இல்லை” என்ற கருத்தை நாம் மீள் பரிசிலினை செய்ய வேண்டி வரலாம்.
விஜய்
நட்புடன் அசோக்குக்கு,
நீங்கள் உங்கள் கட்டுரையில் ”ஈபிஆர்எல்எப் , ஈரோஸ் , என்எல்எப்ரி அமைப்புக்களிலிருந்து வெளியேறிய தோழர்களோடு ஈஎன்டிஎல்எப் என்ற” ஈழதேசிய ஜனநாயக முன்னணி “என்ற கூட்மைப்பை தொடங்கினோம்.” என எழுதியுள்ளீர்கள்.
என்எல்எப்ரி அமைப்புக்களிலிருந்து வெளியேறி, உங்கள் அமைப்பில் இணைந்திருந்தவர்கள் யார் யாரென வெளிப்படுத்த முடியுமா. தயுவுசெய்து அதை ஆதாரப்படுத்தவும். சில தேவைகளுக்காக இவற்றைச் செய்வீர்களா.
நட்புடன்
ரூபன்
இவ் விதமான அம்பலப்படுத்தல்கட்கான அரசியல் தேவை என்ன?
என்.எல்.எவ்.ற்றி. முன்னாள் உறுப்பினர்கள் பற்றி ஒரு இணையத்தளத்தில் முன்னம் வந்த பொறுப்பற்ற பேர் கூறல்கள் யாருக்கும் நன்மை தரவில்லை.
அன்புடன் ரூபனுக்கு,
பொதுத்தளத்தில் என் குறிப்புக்கள் வந்துள்ளதால் அந்த என்எல்எப்ரி தோழர்களின் பெயர்களை அறியவிரும்பும் உங்களின் கோரிக்கை மிக மிக நியாயமானது. ஆனால் இத் தோழர்களின் பெயர்களை இப் பொது தளத்தில் வெளியிடுவதற்கு நான் தயக்கம் கொள்கின்றேன். இத் தோழர்கள் மீதும் நண்பர் இராயாகரன் அவர்கள் தன் வழமையான பாணியில் “சேறடிப்பு அரசியலை” மேற்கொள்ள முனையும் அபாயத்தை நான் ஏற்படுத்திவிட விரும்பவில்லை.
இத் தோழாகளின் பெயர்களை ஆரோக்கியமான ஒரு அரசியல் உணர்வோடு நீங்கள் தெரியவிரும்புவீர்களானால் நான் தந்துதவ தயாராக் உள்ளேன். பின்வரும் என் மின் அஞ்சலின ஊடாக என்னைத் தயவு செய்து தொடர்பு கொள்ளவும்.
ashokyogan@hotmail.com
வணக்கம்
இந்திய அரசியலின் சின்னத்தனத்தின் விளைவாகவே எம் தமிழர் கையில் ஆயுதம் கிடைத்தது என்பதை என்னவென்பீர்கள்?
அதையொட்டி…அசோக் அன்பர் ரூபன் என்பவர் கேட்கும் தரவுகள் பிறருக்கு பாதிப்பைத் தராத வகையில் இருக்கவேண்டும் என்பதை நினைவூட்டுகிறேன்.
இது பின்னூட்டத்திலிருந்து நீக்கப்பட்டாலும் நலம்.
இப்படி பெண்கள்மீது மிக கொடூரமாக
விமர்சனம் செய்யும்
ரயாகரனுக்கு
ஒரு போராளி பெண்ணாகிய நான் எனது கண்டனத்தை தெரிவித்து
கொள்கிறேன், இவர் ………………………… ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………… என எண்ண தோன்றுகிறது,
அசோக்குக்கும் இவருக்கும் உள்ள பிரச்சனைக்கு பெண்களை கேவலபடுத்துவது அவரது வீட்டு பெண்களையும் சேர்த்துதானே;
சாரு,
தோழர் அசோக் உங்களுடைய எதிர்வினையாற்ற்ல கண்ணியமாகவும் நிதானமாகவும் இருக்கிறது. இரயாகரனுக்கு தனிநபர் தாக்குதலே அவர் நம்பிக்கொண்டிருக்கும் அரசியலாகும். அவர் தொடர்ச்சியாக உங்கள் மீது தாக்குதலை தொடுப்பார். உங்களைப்போன்றவர்கள் இரயாகரனின் இந்த தனிநபர் தாக்குதல்களை கவனத்தில் எடுக்காது உதாசீனப்படுத்தி நிராகரித்தலே சரியானது. நீங்களும் பதில் அளித்து காலத்தை வீணாக்காதீர்கள். நீங்கள் அளித்த எதிர்வினைபோதுமானது. யாழ்பாணத்து நிலப்பிரபுத்துவ மானிய சாதிய சமூகத்தின் குறியீடு இரயாகரன். புலம்பெயர்ந்த நாட்டு முதலாளித்துவ சனநாயக பண்புகளைக்கூட இரயாகரன் கற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் இரயாகரன் அழைக்கும் தெரு சண்டித்தன வலைக்குள் விழாமல் பிரயோசனமான முயற்சிகளை முன்னெடுக்க பாருங்கள். குறிப்பாக உங்களுக்கும் சபாநாவலன் போன்றவர்களுக்கு போராட்ட அனுபவங்கள் உண்டு. அவற்றை எழுதி ஆவணப்படுத்தப்பாருங்கள். புலிகள் எமது போராட்ட வரலாறுகளை திரிவுபடுத்தி தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டார்கள். மறுபுறம் இரயாகரன் போன்றோர் தனிநபர்களாக வரலாற்றைத் திரித்து தங்களுக்கு போலி அடையாளங்களை ஏற்படுத்திக்கொள்ள பார்க்கிறார்கள். சபாநாவலன் போன்றவர்கள் தலைமையேற்று நடத்திய யாழ்பல்கலைக்கழக விசிதரன் போராட்டம் எப்படி இரயாகரனால் திரிவுபடுத்தப்பட்டடுள்ளது பார்த்தீர்களா. நீங்களேல்லாம் உயிரோடு இருக்கும்போதே வரலாறுகள் மறைக்கப்பட்டு திரிவுபடுத்தப்படும்போது பல ஆண்டுகளுக்கப்பிறகு உண்மையான வரலாற்றின் கதி அதோ கதிதான். எனவே உண்மையான வரலாறுகளை எழுதி ஆவணப்படுத்த முயற்சி பண்ணுங்கள்.இன்றைய தேவை இதுதான்.
உங்கள் தோழன்
அசோக்கண்ணை இந்த ரயாகரன் உமாமகேஸ்வரனின்
………………………………………. அவரை விட்டு விட்டு ஏன் உங்களை போட்டு திட்டுகிறார். அதோடு இவர்
புளொட் அன்ரன் என்பவருக்கு பாரிசில் நிதி சேகரித்தாரே அந்த அன்ரன்
எங்கடை சந்ததியாரின் கொலையில் கூட ஒரு ஆள் என அப்போது பேசினார்களே, ………………………………………………………………………… …………………………………………………….. விபரத்தை வெளியிடும் படி அந்த ரயாகரனிடம் கேழுங்கோவன்;
அசோக் இரயாகரனின் அரசியலும் எழுத்தும் குறித்து சில அடிப்படையான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
1.இரயாகரனுடைய எழுத்துக்களில் பெண்களை அவமதிக்கும் வகையில் வரும் நிந்தனைச் சொற்கள் மார்க்சிய விமர்சனத்தின் பாற்பட்டதா என்பது.2.அரசியலில் மாறுபட்டுள்ளார்கள் என்பதற்காக பெண்கள் மீது அவ்வாறான வசைச் சொற்களைப் பாவிப்பது நியாயமும் மார்க்சிய விமர்சனமும் ஆகுமா என்பது.3.புலம் பெயர்ந்த நாடுகளில் குறைந்தபட்சம் பிரான்ஸிலேனும் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக நடத்தப்பட்ட எந்தப் போராட்டத்திலோ அல்லது கூட்டத்திலோ இதுவரை கலந்து கொண்டிராதது ஏன் என்பது. இறுதியாக நடைபெற்ற இலங்கையில் இடதுசாரிச் சிந்தனையை இன்றுவரை வலியுறுத்தும் செந்தில்வேல் பேசிய கூட்டத்திற்குக் கூட இரயாகரன் வரவில்லை என்பது. இந்தச் செந்தில்வேலின் ஆதரவாளரான சிவசேகரத்தின் நேர்காணல் இரயாகரனின் சகதோழர்களாயிருந்த ம.க.இ.கவின் புதிய ஜனநாயகத்தில் அண்மையில் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சிவசேகரமும் இரயாகரனின் வசைபாடலுக்குத் தப்பியிருக்கவில்லை என்பது ஒரு சிறு குறிப்பு.4.விஜிதரன் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்ட போது அதற்கெதிராக முன்னின்று போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் விமலேஸ்வரன், நாவலன், பிரசாத், ஒளவை, சுந்தரமூர்த்தி, சோதிலிங்கம், தவராஜா என்று பலர். இவர்களில் முன்னின்று செயற்பட்ட விமலேஸ்வரன் புலிகளால் படுகொலை செய்யப்பட்டான். நாவலன், பிரசாத் ஆகியோர் லண்டனில் உள்ளனர். ஓளவை, சோதிலிங்கம், தவராஜா ஆகியோர் இன்னமும் இலங்கையில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவர்கள் யாவரும் பல்வேறு அமைப்பக்களைச் சேர்ந்தவர்கள். உதாரணமாக சோதிலிங்கம் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐச் சேர்ந்தவர். விமலேஸ்வரன், பிரசாத் போன்றவர்கள் புளொட் ஐச் சேர்ந்தவர்கள். நூவலன் ரெலோவைச் சேர்ந்தவர். இப்படிப் பல்வேறு அமைப்பினரும் இணைந்து மேற்கொண்ட போராட்டத்தில் தானும் குந்தியிருந்துவிட்டு எப்படி தானே தான் மட்டுமே போராடியதான விம்பத்தை வளர்க்கிறார் இரயாகரன் என்பது. 5.விசுவானந்ததேவன் தந்த ஹற்றன் நஷனல் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணத்திற்கும் நகைக்கும் என்ன நடந்தது என்பது.
கேள்விகள் மிகத் தெளிவாக இருக்கின்றன. ஆனால் இரயாகரன் இவற்றுக்கு ஒரு போதும் பதிலளிக்கப் போவதில்லை. சுயவிமர்சனமும் செய்து கொள்ளப் போவதில்லை. அசோக்கினுடைய கட்டுரையைப் பார்த்தவுடன் நான் என் நண்பருக்குச் சொன்னது இது தான். இரயாகரன் இதற்குப் பதிலளிக்கப் போவதில்லை. மாறாக பதில் என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதும் இரயாகரன். அதற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இராது. இரயாகரன் அதனை எழுதி முடிக்கும் போது வாசகர்கள் இரயாகரன் மேல் எழுப்பப்பட்ட கேள்விகளை மறந்து விடுவார்கள். அவ்வளவு தான்.
உண்மையில் இரயாகரனிற்கு காழ்ப்பு அசோக்கின் பேரிலல்ல. அசோக் நடாத்தும் ‘இனியொரு’வின் பேரிலானது. அண்மைக்காலமாக இனியொரு தாங்கி வரும் விடயங்கள் பயனுடையதாகவும் பல்வகை வாசிப்பிற்குகந்ததாகவும் இருந்து வருகின்றது. மாறாக தமிழரங்கம் அதன் வாசகர்களை இழந்து வருகின்றது. இரயாகரன் பல்வேறு கலைப் பதிவுகளிலிருந்து எவ்வளவு தான் பிரதியெடுத்துப் போட்டாலும் அது கீழிறங்குவதைத் தடுக்க முடியவில்லை. இந்தக் கடுப்பில் இருந்த இரயாகரனுக்கு ம.க.இ.க தோழரை இனியொருவைச் சேர்ந்த நாவலன் நேர்கண்டது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதாகி விட்டது.
ஏற்கெனவே தமிழ்நாட்டு இடதுசாரிகள் தன்னை அங்கீகரித்திருப்பதாய் பீற்றிக் கொண்டிருந்த இரயாகரனுக்கு அண்மையில் நடந்த இரண்டு மூன்று சம்பவங்கள் அடி மேல் அடியாக விழுந்திருக்கின்றன.
அதில் முதலாவது ம.க.இ.கவின் ஆதரவு இணையத்தளமான வினவுஇல் இலங்கை வாசகி ஒருவர் எழுதிய கட்டுரை குறித்து இரயாகரனின் வசவுகளை வினவு மறுத்துரைத்திருக்கிறது. வரட்டுத் தனமான மார்க்சிய விமர்சனம் என அது சொல்லி விட்டிருந்தது.
இரண்டாவது காலச்சுவடு இதழில் வெளியான வன்னியில் இறுதிநேரத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக வெளிவந்த கட்டுரையை எந்த ஆதாரமுமில்லாமல் வெறும் ஊகங்களின் அடிப்படையில் காலச்சுவடே அதனை எழுதி வெளியிட்டுள்ளது. அதில் புதிதாக எதுவுமில்லை என்று எழுதிய விமர்சனமும் எந்த மார்க்சிய அடிப்படையிலானதும் அல்ல என்பதும் தன்னைத் தவிர அவற்றைப் பேச யாருக்கும் பாத்தியதை இல்லை என்ற தோரணையிலான இரயாவின் எழுத்தும் அம்பலப்பட்டுப் போனது.
இப்போது இறுதியாக நாவலன் வானொலியில் மகஇக தோழரை எடுத்த நேர்காணல்.
இந்த நிகழ்வுகள் யாவும் இரயாகரனை அங்கீகரித்ததாகச் சொல்லப்பட்ட மகஇகவினர் இரயாகரனிலிருந்து விலகி வருவதை கோடி காட்டி நிற்கின்றன. அவர்கள் தான் இரயாகரன் ‘மார்க்சியத்தைச்’ பேசுகிறார் என்பதற்காக எவ்வளவு காலத்திற்குச் சகித்துக் கொள்ள முடியும். அவர்களே சுட்டிக்காட்டியது போல பல தடவைகள் இரயாகரனுக்கு இரயாகரனின் வரட்டுத்தனம் பற்றி எடுத்துக்கூறியும் இரயா சுயவிமர்சனம் செய்து தன்னைத் திருத்தித் தகவமைத்துக்கொள்ளாவிடின் அவர்களால் தான் ஏது செய்ய முடியும் விலகிப் போவதைத் தவிர.
இந்த நிகழ்வுகள் தான் இரயாகரனின் காழ்ப்புக்களுக்குக் காரணம். இல்லாவிடின் அசோக் கலையரசன் தொடர்பாக இனியொருவில் எழுதியதற்கு கலையரசன் தனது இணையத்தில் பதிலளித்து விட்டார். அதற்குப் பிறகும் அதனைத் தூக்கி வைத்துக் கொண்டு அதனைச் சாட்டாக்கி இனியொரு மற்றும் அசோக்கின் மேல் பாய்ந்திருப்பாரா?
ஆக, அசோக் மேல் அவர் கொட்டியிருப்பது மார்க்சிச விமர்சனமல்ல. வேண்டுமானால் அதனை காழ்ப்பிசம் என்று அழைக்கலாம்.
ஆசிரியருக்கு,
தயவு செய்து திருத்திய இந்த வடிவத்தைப் பிரசுரிக்கவும்
அசோக் இரயாகரனின் அரசியலும் எழுத்தும் குறித்து சில அடிப்படையான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
1.இரயாகரனுடைய எழுத்துக்களில் பெண்களை அவமதிக்கும் வகையில் வரும் நிந்தனைச் சொற்கள் மார்க்சிய விமர்சனத்தின் பாற்பட்டதா என்பது.
2.அரசியலில் மாறுபட்டுள்ளார்கள் என்பதற்காக பெண்கள் மீது அவ்வாறான வசைச் சொற்களைப் பாவிப்பது நியாயமும் மார்க்சிய விமர்சனமும் ஆகுமா என்பது.
3.புலம் பெயர்ந்த நாடுகளில் குறைந்தபட்சம் பிரான்ஸிலேனும் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக நடத்தப்பட்ட எந்தப் போராட்டத்திலோ அல்லது கூட்டத்திலோ இதுவரை கலந்து கொண்டிராதது ஏன் என்பது. இறுதியாக நடைபெற்ற இலங்கையில் இடதுசாரிச் சிந்தனையை இன்றுவரை வலியுறுத்தும் செந்தில்வேல் பேசிய கூட்டத்திற்குக் கூட இரயாகரன் வரவில்லை என்பது. இந்தச் செந்தில்வேலின் ஆதரவாளரான சிவசேகரத்தின் நேர்காணல் இரயாகரனின் சகதோழர்களாயிருந்த ம.க.இ.கவின் புதிய ஜனநாயகத்தில் அண்மையில் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சிவசேகரமும் இரயாகரனின் வசைபாடலுக்குத் தப்பியிருக்கவில்லை என்பது ஒரு சிறு குறிப்பு.
4.விஜிதரன் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்ட போது அதற்கெதிராக முன்னின்று போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் விமலேஸ்வரன், நாவலன், பிரசாத், ஒளவை, சுந்தரமூர்த்தி, சோதிலிங்கம், தவராஜா என்று பலர். இவர்களில் முன்னின்று செயற்பட்ட விமலேஸ்வரன் புலிகளால் படுகொலை செய்யப்பட்டான். நாவலன், பிரசாத் ஆகியோர் லண்டனில் உள்ளனர். ஓளவை, சோதிலிங்கம், தவராஜா ஆகியோர் இன்னமும் இலங்கையில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவர்கள் யாவரும் பல்வேறு அமைப்பக்களைச் சேர்ந்தவர்கள். உதாரணமாக சோதிலிங்கம் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐச் சேர்ந்தவர். விமலேஸ்வரன், பிரசாத் போன்றவர்கள் புளொட் ஐச் சேர்ந்தவர்கள். நூவலன் ரெலோவைச் சேர்ந்தவர். இப்படிப் பல்வேறு அமைப்பினரும் இணைந்து மேற்கொண்ட போராட்டத்தில் தானும் குந்தியிருந்துவிட்டு எப்படி தானே தான் மட்டுமே போராடியதான விம்பத்தை வளர்க்கிறார் இரயாகரன் என்பது.
5.விசுவானந்ததேவன் தந்த ஹற்றன் நஷனல் வங்கியில் கொள்ளையிடப்பட்ட
பணத்திற்கும் நகைக்கும் என்ன நடந்தது என்பது.
கேள்விகள் மிகத் தெளிவாக இருக்கின்றன. ஆனால் இரயாகரன் இவற்றுக்கு ஒரு போதும் பதிலளிக்கப் போவதில்லை. சுயவிமர்சனமும் செய்து கொள்ளப் போவதில்லை.
அசோக்கினுடைய கட்டுரையைப் பார்த்தவுடன் நான் என் நண்பருக்குச் சொன்னது இது தான். இரயாகரன் இதற்குப் பதிலளிக்கப் போவதில்லை.
மாறாக பதில் என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதும் இரயாகரன். அதற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இராது. இரயாகரன் அதனை எழுதி முடிக்கும் போது வாசகர்கள் இரயாகரன் மேல் எழுப்பப்பட்ட கேள்விகளை மறந்து விடுவார்கள். அவ்வளவு தான்.
உண்மையில் இரயாகரனிற்கு காழ்ப்பு அசோக்கின் பேரிலல்ல. அசோக் நடாத்தும் ‘இனியொரு’வின் பேரிலானது. அண்மைக்காலமாக இனியொரு தாங்கி வரும் விடயங்கள் பயனுடையதாகவும் பல்வகை வாசிப்பிற்குகந்ததாகவும் இருந்து வருகின்றது. மாறாக தமிழரங்கம் அதன் வாசகர்களை இழந்து வருகின்றது.
இரயாகரன் பல்வேறு வலைப் பதிவுகளிலிருந்து எவ்வளவு தான் பிரதியெடுத்துப் போட்டாலும் அது கீழிறங்குவதைத் தடுக்க முடியவில்லை. இந்தக் கடுப்பில் இருந்த இரயாகரனுக்கு ம.க.இ.க தோழரை இனியொருவைச் சேர்ந்த நாவலன் நேர்கண்டது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதாகி விட்டது.
ஏற்கெனவே தமிழ்நாட்டு இடதுசாரிகள் தன்னை அங்கீகரித்திருப்பதாய் பீற்றிக் கொண்டிருந்த இரயாகரனுக்கு அண்மையில் நடந்த இரண்டு மூன்று சம்பவங்கள் அடி மேல் அடியாக விழுந்திருக்கின்றன.
அதில் முதலாவது ம.க.இ.கவின் ஆதரவு இணையத்தளமான வினவுஇல் இலங்கை வாசகி ஒருவர் எழுதிய கட்டுரை குறித்து இரயாகரனின் வசவுகளை வினவு மறுத்துரைத்திருக்கிறது. வரட்டுத் தனமான மார்க்சிய விமர்சனம் என அது சொல்லி விட்டிருந்தது.
இரண்டாவது காலச்சுவடு இதழில் வெளியான வன்னியில் இறுதிநேரத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக வெளிவந்த கட்டுரையை எந்த ஆதாரமுமில்லாமல் வெறும் ஊகங்களின் அடிப்படையில் காலச்சுவடே அதனை எழுதி வெளியிட்டுள்ளது. அதில் புதிதாக எதுவுமில்லை என்று எழுதிய விமர்சனமும் எந்த மார்க்சிய அடிப்படையிலானதும் அல்ல என்பதும் தன்னைத் தவிர அவற்றைப் பேச யாருக்கும் பாத்தியதை இல்லை என்ற தோரணையிலான இரயாவின் எழுத்தும் அம்பலப்பட்டுப் போனது.
இப்போது இறுதியாக நாவலன் வானொலியில் மகஇக தோழரை எடுத்த நேர்காணல்.
இந்த நிகழ்வுகள் யாவும் இரயாகரனை அங்கீகரித்ததாகச் சொல்லப்பட்ட மகஇகவினர் இரயாகரனிலிருந்து விலகி வருவதை கோடி காட்டி நிற்கின்றன. அவர்கள் தான் இரயாகரன் ‘மார்க்சியத்தைச்’ பேசுகிறார் என்பதற்காக எவ்வளவு காலத்திற்குச் சகித்துக் கொள்ள முடியும். அவர்களே சுட்டிக்காட்டியது போல பல தடவைகள் இரயாகரனுக்கு இரயாகரனின் வரட்டுத்தனம் பற்றி எடுத்துக்கூறியும் இரயா சுயவிமர்சனம் செய்து தன்னைத் திருத்தித் தகவமைத்துக்கொள்ளாவிடின் அவர்களால் தான் ஏது செய்ய முடியும் விலகிப் போவதைத் தவிர.
இந்த நிகழ்வுகள் தான் இரயாகரனின் காழ்ப்புக்களுக்குக் காரணம். இல்லாவிடின் அசோக் கலையரசன் தொடர்பாக இனியொருவில் எழுதியதற்கு கலையரசன் தனது இணையத்தில் பதிலளித்து விட்டார். அதற்குப் பிறகும் அதனைத் தூக்கி வைத்துக் கொண்டு அதனைச் சாட்டாக்கி இனியொரு மற்றும் அசோக்கின் மேல் பாய்ந்திருப்பாரா?
ஆக, அசோக் மேல் அவர் கொட்டியிருப்பது மார்க்சிச விமர்சனமல்ல. வேண்டுமானால் அதனை காழ்ப்பிசம் என்று அழைக்கலாம்.
ரயாகரன் என்ற நபர் இதுவரை ஹட்டன் நசனல் வங்கிக் கொள்ளைப் பணத்தைச் சூறையாடியிருப்பார் என நான் நம்பவில்லை. இப்போது விஜிதரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இப்பணத்தை வழங்கியதாகக் கூறும் பச்சைப் பொய்யை அவிழ்த்து விடுகிறார். நான் நாவலனோடு விஜிதரன் பிரச்சனையில் ஈடுபட்டவன் தான். அப்படி அங்கு நடைபெறவில்லை. இதை நாவலன் அம்பலப்படுத்தினால் நானும் அதற்கான ஆதாரங்களைத் தரத் தயார். ஏன் நாவலன் இப்போதும் மெளனமாய் இருக்க வேண்டும்.? எனக்கு என் எல் எப் ரி உடனும் தொடர்பு இருப்பதால் பல்கலைக் கழகம் தவிர சில விபரங்களும் எனக்கு தெரியும்.
ரயாகரன் அரசியல் கதைப்பது மில்லியன் கணக்கான மக்க்ளீண் பணத்தை சுருட்டியதால் என்று எமது ஒரு தோழர் சொன்னது எனக்கு இப்போது தான் சரி போல தெரிகிறது.
அசோக் தோழர் நம்ம ரயா விளையாட்டை பார்த்தீர்களா? விசுத் தோழரும் என் எல்எப்ரி யைச் சேர்ந்த பல தோழர்கள் உயிரோடு இல்லை என்ற துணிவில் ரயா அவிழ.த்துவிடும் பொய் மூட்டைகளின் பாரம் தாங்கேலாது. என்எல்எப்ரி இயக்கம் செய்த போராட்டங்களை எப்படி தனக்கு சாதகமாக்கி திரிக்கிறார் பாருங்கோ. விஜிதரன் போராட்டத்தில் பங்குகொண்ட மாணவாகள் உயிரோடு இருக்கும்போதே எத்தனை பொய் பித்தலாட்டம். அப்படியிருக்க விசுத் தோழர் இல்லாமல்போய்விட்டது ரயாக்கு நல்லவசதியாகபோச்சு. தன்னிடம்இருந்த ஹட்டன் நசனல் வங்கிப்பணத்தை விஜிதரன் போராட்டத்திற்கு செலவளித்தாராம் !!. லட்சக்கணக்கான பணமும் நகையையும் விஜிதரன் போராட்டத்திற்கு செலவளித்த ரயாவைப்போய் நீங்கள் பிழைபிடிப்பது சரியில்லை. இனிமேலாவது ரயாவை பாராட்டி அவர் சேவையை புகழ்ந்து கட்டுரை எழுதுங்கோ.இது என் கட்டளை.
ரயா அண்ணே என்ன இருந்தாலும் உங்கள் ரீல் விடுவை ஓவர் அண்ணே.
WAR BETWEEN DIFFERENT PERSONALITIES BRING US A INFORMATION WHAT WAS HAPPEND IN THE PAST AND THE PRESENT.IS IT PRINCIPLES WAR OR PERSONALITIY CRASHES.WHAT I LOOKED AT IT ITS GETTING NASTIER AND HAVE NO TAST OF SWEET.IF YOU GUYS TAIK ABOUT THEORY OR SOMETHING RELATED TO MIND AND BRAIN IT IS WORTH IT,BUT YOU GUYS POINTING A FINGER TO EACH OTHER WHICH IS ANNOYING. I DONT KNOW WHAT YOU GUYS GET OUT OF IT. NO ONE IS PERFECT IN THE END. WE ALL HAVE STRENTH AND WEAKNESS THAN WHAT YOU GUYS ARE FIGHTING FOR? I DIDNT SEE ANY COMMENT FROM EROS RAVI AND HIS POINT OF VIEW HE ALSO PART OF HISTORY I SHOULD THINK SO.HE IS GOOD PERSON AS WELL.ANY WAY RUNNING A SHOW WILL BRING MANY VIEWERS THAN GOOD LUCK.
Please study the issues with care before shooting off your hip.
The article here are in response to slanderous accusations by one who claims to be holier than holy.
The response is carefully written and limited to matters of political and public interest.
Do not call it private mud slinging.
It has been Rayakaran who had done that for long and got away with it because many of his victims do not speak the same kind of language.
That kind of abuse should stop in the Tamil political e-space (I mean the serious websites and not the trivial ones).
I think that the issues are more or less settled and it is up to Rayakaran to answer the charges, concerning his political stand and falsification of information, rather than continue to indulge in further abusive writing.
It will be best for all of us if we treat the public domain with a greater sense of responsibility.
I very much appreciate the restraint shown by Ashok Yogan, and think that the best way of dealing with further abuse is to ignore it.
அசோக் யோகன் எழுதிய கட்டுரை என்பது ரயாகரன் மீதான தாக்குதல் அல்ல. சமூக அக்கறையோடு எழுதப்பட்ட நேர்மையான விமர்சனம்.
மறுபுறத்தில் தனிமனித தாக்குதல் என்பது ரயாகரனின் தொழில். சமூகம் குறித்தோ, அதன் வளர்ச்சி, வர்க்க நிலைகள், சர்வதேச உறவுகள் என்று எம்முன்னால் நீண்டு கிடக்கும் அத்தனை பிரச்சனைகளையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு, யார் யார் சமூகத்தைப்பற்றிப் பேசுகிறார்களோ அத்தனை பேரையும் சேறடிப்பது ரயாகரனின் தொழில்.
இத்தனை வருடங்களின் ஏதாவது தத்துவார்த்தப் பிரச்சனை குறித்து அவர் விவாதங்களை முவைத்திருக்கிறாரா? இல்லை. எல்லாமே தனிமனிதத் தாக்குதல்கள் தான். யார் எப்போது எந்தப்பக்கம் என்பது மட்டும்தான் இவரின் ஆதங்கம்.
சமூக அக்கறையும் மக்கள் பற்றும் கொண்ட தோழர் சிவசேகரம், தோழர் அசோக் யோகன் போன்ற பலரை இவர் தான் நினைப்பது சரி என்று எண்ணியவாறே சல்லடை போட்டிருக்கிறார்.
குறிப்பாக புளட் அமைப்பின் கொலைகளுக்கு எதிராகப் போராடிய மூன்று குழுக்களில் அசோக் சார்ந்த தளக் குழு மிகப்பிரதானமானது. அது ரயாகரனின் இணைபுக்களே தெளிவாக்குகின்றன. இதற்கெல்லாம் பதில் எழுதினால் அவர் இன்னொரு பொய்யைக் கட்டவிழ்த்துவிடுவார்.
இது தவிர ரயாகரன் தன்னை நியாயப்படுத்த வரலாற்றைப் புரட்டி நிகழ்த்தும் நாடகங்கள், குறிப்பாக விஜிதரன் போராட்டம் போன்றவை அதன் அரசியல் பின்னணியிலிருந்து அதில் ஈடுபட்ட மாணவர் தலைவர்களே ஆராய ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
எத்தனை இணையத்தளங்கள் எத்தனை தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன? இவற்றுள் தாக்குதலை நிரந்தரத் தொழிலாக வரித்துக்கொண்டவர் தான் ரயா.
ஆக சமூக அக்க்றையுடனான அசோக்கின் கட்டுரைக்கு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ரயாகரன் போன்ற ஒருவரின் பதில் எவ்வாறு அமையும் என்பதை இனியொரு வாசகர்கள் புரிந்து கொண்டு, தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து, தோழர் சிவசேகரம் கூறுவது போல் இனியொருவை சமூகம குறித்த தத்துவார்த்த விசாரணைக்குரிய தளமாக வளர்த்தெடுப்போம்.
முகில் வண்ணன். சிவசேகரம போன்றவர்கள் தமிழில் எழுதுவது நல்லது. குறைந’தபட்சம் ஆசிரியராவது அவற்றை தமிழில் மொழி பெயர்த்துத் தருவது விவாதத்தை எம்மைப் போன்றவர்கள் செம்மையாகப்
புரிந்து கொள்ள உதவும் என்பது எனது தாழ்மையான கருத்து.
மதன் மன்னிக்கவும்.
ஆங்கிலத்தில் எழுதியவருக்கு ஆங்கிலத்திலேயே விடை எழுத வேண்டி நேர்நதுள்ளது.
மற்றப்படி தமிழிலேயே எழுதுவேன்.
i dont realy know about the other issues you are talking about. my concern is about what rajakaran says about the money given to vijitharan affaires. i know that is totally false. i strongly partcipated in this problem and attacked by LTTE hospitalised. rajakaran and navalan know me. rajakaran had very little participation in this and we stragguled to collect the money. oh noo what the hell he is talking about. ba***. ***** . **
ரயாகரனின் வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!
http://www.vinavu.com/2009/08/27/raya2/
தமிழக இடதுசாரி இயக்க தோழர்களின் வினவு தளத்தில் வந்த ரயாகரனின் வரட்டுத்தனத்திற்கு எதிரான போராட்டம் என்ற கட்டுரையை படிக்க உதவிய ரமாவுக்கு நன்றி. மிக காத்திரமாக தத்துவார்த்த கண்ணோட்டத்தோடு பல தோழர்கள் ரயாகரனின் அரசியலை வறட்டுத்தனத்தை மற்றவர்கள் மீது ஆதரமற்று கட்டவிழ்க்கும் தாக்குதலை மிக சரியாக இனம்கண்டு அம்பலப்படுத்தியுள்ளனர். இதனைப்படித்தே திருந்தாத ரயாகரனை நீங்கள் எக்காலத்திலும் திருத்தவே முடியாது. ஒரு தோழர் சொல்வதுபோல் ரயாகரனிடம் மிஞ்சி இருப்பது தனிப்பட்ட மனித காழ்ப்புணர்ச்சிதான்.
(தொடர்ச்சி) தோழர் அசோக் ரயாகரன் மீது நீங்கள் வைத்த பல விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் ரயாகரன் பதிலளிக்காமல் விவாதத்தின் திசையை மாற்றிவிட்டார் பார்த்தீர்களா? இது தான் ரயாகரனின் புலி அரசியல் பாணி. அதுசரி அசோக் தோழர் புளொட் இயக்கம் ஒரு கொலைகார இயக்கம் என்றது எப்போ உலகறிந்த விசயம். அதை யார் தான் இல்லையெண்டது. நீங்கள் இல்லையென்று சொன்னீர்களோ. உங்கள் தளக் கொம்மிற்றிதானே உட்கட்சி போராட்டத்தை மிக தீவிரமாக நடத்தியது. இந்த வரலாறு புரியாத ரயாகரனை விட்டுத்தள்ளுங்கள்.
தோழர்கள் கவனத்திற்கு நான் தமிழகத்தை சேர்ந்தவன் எனக்கு ஈழத்தின் உள்ளே என்ன நடக்கிறது என்பதெல்லாம் தெரியாது. நான் ஒரு புஜ வாசகன் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு பதிவு செய்கிறேன், தவறுகள் இருந்தால் பொறுத்தருளவும் .அசோக் அவர்கள் எழுதிய இந்த கட்டுரையில் கண்ணியமான வார்த்தைகள் கையாளபட்டுள்ளன அசோக் அவர்களுக்கு பாராட்டுக்கள்.தோழர் இரயாகரன் மீதான உங்கள் விமர்சனம் சில இடங்களில் தனிப்பட்ட பாதிப்பை உணர்த்துவது போல் இருக்கிறது ஏற்றுக்கொள்ளக்கூடிய விமர்சனங்களும் உள்ளன அதனை தோழர் இரயாகரன் பரிசீலிப்பார் என நம்புகிறேன். தோழர் இரயாகரனைதான் எங்களுக்கு முதலில் புதிய ஜனநாயகம் தோழர்களால் தெரியும் அவருடைய நூல்கள் நல்ல தெளிவினை எனக்கு கொடுத்துள்ளன. அவர்தான் எனக்கு தெரிந்து புரட்சிகர அரசியலை இணையதளத்தில் கொண்டு வந்தவர்இஎனவே எனக்கு தெரிந்தவரையில் தோழரை பற்றிய விமர்சனத்தில் சில கருத்துக்களை கூற விரும்புகிறேன் இனியொருவை சமீபமாகதான வாசிக்க நேரிட்டுள்ளதுஇ இங்கு வந்துள் சில பின்னூட்டங்கள் தோழர் ரயாகரன் தனிப்பட்ட குரோத மனப்பான்மையோடு தாக்குவது போல்தான் எனக்கு தெரிகிறது ரஜாகரன் ஒரு ………. அவரின்.. தங்களின் விமர்சனத்திற்கு பதிலளிப்பது போல் தோழர் இரயாகரன் தளத்தில் விமர்சன்ம் வெளிவந்துள்ளது அதற்கும் தாங்கள் பதிலளிக்க வேண்டுகிறேன். bஉங்களுடைய நண்பர் தோழர்கள் நட்புவட்டத்தை எண்ணிப்பாருங்கள் வெறும் பூச்சியமே. தோழர் இரயாகரன் தனியாகவே செயல்படுவது போல எழுதியுள்ளீர்கள் அப்படி செயல்பட நினைப்பவர் எதற்காக அவருடைய தமிழரங்கம் தளத்தில் இணைப்புக்கள் என்ற ஒன்றை ஏன் வைத்திருக்க வேண்டும் அதன் மூலம்தான் இலங்கை புதிய ஜனநாயக் கட்சியே என்னை போன்றவர்களுக்கு தெரியும். அடுத்தாக இரயாகரனின் வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!. இதில்மாற்று கருத்துள்ள தோழர்களும் விவாதித்தார்கள் என்பதை மறந்துவிடாதிர்கள்இணையதள அளவில்தான் தோழர் இரயாகரனுக்கும் பிரச்சனை போன்று தோற்றம் தெரிகிறது. இணையத்தை தாண்டிஅப்படி ஒரு பிரச்சனையே இல்லை இங்கு தோழர் இரயாகரனை எதிரியாக யாரும் பார்க்கவில்லை அதற்கான வாய்ப்பே இல்லை. எனக்கு தெரிந்தவரை எங்களை போன்றவருக்கும் தோழர் இரயாகரனுக்கும் ஒரு பிரச்சனையுமில்லை எனபதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அடுத்தாக தோழர் சிவசேகரம் இப்போதுதான் அறிமுகமாகி உள்ளார் அவர் புஜ வுக்கு கொடுத்த பேட்டி மிகசிறப்பாக இருந்தது. வினவு தளத்தில் அவர் புதிய இலக்கிய தொடர் ஒன்றை சிறப்பான முறையில் தொடங்கியுள்ளார் அது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .
தோழர் சிவசேகரம் அவர்களே இலங்கை புதிய ஜனநாயக் கட்சி தேர்தலில் நிற்பது ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்வதாகாதா?
நல்ல கட்டுரை. மனதை தொடுகிரது. எனக்கு தெரிந்த வற்றை நான் சொல்ல வேண்டும் . காலம் வரும். நீங்கல் சடத்தின் முன்னால் குற்ற வாளிக்ளை நிறுத்த வேண்டும். அதற்கு வழி உண்டு.
ஒரு புஜ வாசகன்: “புதிய ஜனநாயக் கட்சி தேர்தலில் நிற்பது ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்வதாகாதா?”
நன்றி.
தேர்தலில் நிற்பது தன்னளவில் ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்வதாக நான் கருதவில்லை.
அரசின் செயற்பாட்டிற் பங்காளியாவது (அதாவது வரன்முறையான ஆளுங்கட்சி எதிர்க் கட்சிக் கயிறிழுப்பில் ஈடுபடுவது) இன்னொரு விடயம்.
தேர்தலில் நிற்பதும் தேவையானால் பாராளுமன்றம் செல்வதும் எந்த நோக்கத்திற்காக என்பது அடிப்படையானது.
அவை பற்றிய முடிவுகள் அந்தந்தச் சூழ்நிலைகளில் எது அவசியம் எது பொருந்தும் என்பதை வைத்தே எடுக்கப்பட முடியும்.
தேர்தல் அரசியலில் இறங்கியதற்காக நேபாள மாஓவாதிகளை நாம் திரிபுவாதிகட்குச் சமன்படுத்த முடியுமா?
அதையே சாட்டாக்கி யாரும் பாராளுமன்ற அரசியலுக்குள் முழுகுவதை நியாயப்படுத்த முடியுமா?
ஒவ்வொன்றையும் அதனதன் சூழலில் வைத்து மதிப்பிடுவது நல்லது.
மலையகத்தில் அரசியல் பேசுவதானால் தொழிற்சங்கத்தின் முலம் அல்லது தேர்தல் பிரசாரம் என்ற பேரிலே தான் தோட்டங்கட்குட் செல்ல முடியும்.
தொடர்புகளை ஏற்படுத்துவது எப்படி?
வடக்கு-கிழக்கில் உள்ள ஜனநாயகமற்ற அடக்குமுறைச் சூழலில் எத் தேர்தலில் எந்த அடிப்படையில் பங்குபற்றுவது என்பது சிக்கலான விடயம்.
பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடுகிற அரசியற் சூழல்களில் எல்லாவிடத்துக்குமான ஒரு பொது முடிவு இயலாமற் போகலாம்.
எந்த நிலையிலும் பாராளுமன்ற அரசியல் மூலம் எவ்வித அரசியல் தீர்வையும் பெற முடியும் என்ற நப்பாசையைக்கூடப் புதிய ஜனநாயக் கட்சி மக்களுக்குக் கொடுத்ததில்லை.
நானறிய அதன் அரசியல் வேலைகள் தேர்தல்களை மையமாகக் கொண்டவையுமல்ல.
தேர்தல் அரசியலில் இறங்கியதற்காக நேபாள மாஓவாதிகளை நாம் திரிபுவாதிகட்குச் சமன்படுத்த முடியுமா?
நோபளத்தில் நடந்து பாராளுமன்ற தேர்தல் அல்ல அது அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் இது பற்றி தோழர் கஜூரோல் சென்னையில் நடைபெற்ற நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கில் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்
இலங்கையில் மூன்றாவது அணி என்பது ஒருவகையான செயல் தந்திரமாக இருந்தால் நல்லது தான், மூன்றாவது அணிக்கு பின் நடத்தப்படும் தொடர்ச்சியான அரசியல் போக்கை வைத்துதான் விமர்சனம் செய்யப்பட வேண்டும்,
பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடுகிற அரசியற் சூழல்களில் எல்லாவிடத்துக்குமான ஒரு பொது முடிவு இயலாமற் போகலாம்.இது கவனிக்கதக்க ஒன்று
தோழர் xxx தங்கள் விளக்கத்துக்கு நன்றி !
ஒரு புஜ வாசகன்: நன்றி. பெரிதும் உடன்படுகிறேன்.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது அணி என்பது ஒருவகையான செயல் தந்திரத்திற்கு அப்பால் வேறெதுவுமாக இருக்க வாய்ப்பில்லை. அதன் நோக்கத்தைத் தோழர் தம்பையா விளக்கியிருந்தார்.
அதன் தெடர்ச்சியாக ஒரு பரந்துபட்ட வெகுஜன அரசியல் அணியைக் கட்டியெழுப்பலாம் என்பதே எதிர்பார்ப்பு.
மூன்று இடதுசாரிக் கட்சிகள் அவசரப்பட்டுத் தமது போட்டியிடும் முடிவைத் தெரிவித்துள்ளமை நல்ல அறிகுறியல்ல.
ஆனாலும் அது ஜனாதிபதித் தேர்தலின் பின்னணியில் ஒரு பரந்துபட்ட வெகுஜன அரசியல் அணியைக் கட்டியெழுப்பத் தடையாகக் கூடாது.
ரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்
நாம் தகவல் யுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். 20ம் நூற்றாண்டில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்த துறை தகவல் தொழில்நுட்பம். இந்த 21ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சியின் பலாபலன்களை நாங்கள் அனுபவித்துக் கொண்டு உள்ளோம். மித மிஞ்சிய தகவல்களால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் பற்றி உலகம் இன்று விவாதிக்கின்றது. ஆனால் தமிழ் சமூகம் இந்தத் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியின் அடிப்படைகளைக் கூட அனுபவிக்க முடியாத யுத்த சூழல் இலங்கையில் இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன் வரை தமிழீழ விடுதலைப் புலிகளும் இன்றும் இலங்கை அரசும் தகவல்கள் மீதான தங்கள் அதீத கட்டுப்பாடுகளை கொண்டிருந்தனர். கொண்டிருக்கின்றனர்.
http://thesamnet.co.uk/?p=18243
தளபதிகள் தவறு செய்வதில்லை!
அவர்கள் தவறுகளே செய்வதில்லை, அது
அவர்கள் எதையுமே செய்யாதலாலில்லை.
அவர்கள் செய்கிற எதிலும்
சரியான அனைத்தும் அவர்களுடையதாகவும்
தவறான அனைத்தும் மற்றவர்களுடையதாகவும்
உரிமைப் படுத்தப் படுகின்றன.
அதைவிடவும், மற்றவர்கள் செய்கிறவற்றிலும்
சரியானவற்றின் வழிகாட்டலுக்கான உரிமையும்
அவர்களையே சாருகிறது.
தவறானவற்றைப் பகிர பலருங் காத்திருக்கின்றனர்.
எனவே, அவர்கட்கு
எல்லோரையுந் திருத்திக் கொண்டிருக்க முடிகிறது.
என்ற போதும்,
அதே தவறுகள், நாள் தவறாமல்
திரும்ப திரும்ப நிகழ்கின்றன.
ஒவ்வொரு தடவையும், ஒவ்வொரு தவறும்
அவர்கட்கன்றி மற்றவர்கட்கே உரித்தாகுகின்றன.
அவர்கள் தவறுகளே செய்வதில்லை, ஏனெனில்
அவர்கள் தளபதிகள்.
தளபதிகள் தவறுகள் செய்ய அனுமதிக்கப் படுவதில்லை.
ஒரு தளபதி ஒரு தவறு மட்டுமே செய்ததாகத்
தெரியவரும்போது
எல்லாத் தவறுகளும் அதே தளபதிக்கு உரித்தாகும்
என்பதால், எவருமறியத்
தளபதிகள் தவறு செய்வதில்லை. தவறுகளை ஏற்பதுமில்லை.
நம் தமிழ் இணையத்- தள-பதிகளுந்தான்.
– சி.சிவசேகரம்.
http://www.vinavu.com/2009/12/28/inaya-thala-pathigal/
பொருத்தமான இடத்தில் மிகப்பொருத்தமான கவிதை.
எ
னக்கு அவரின்
பிறிதொருகவிதையான – அவர்களிடம் பிரம்பு இருந்தது அதனால் அடித்தார்கள்- என்கிற கவிதையையும் நினைவூட்டியது
இவ்விடம். எளிமையான என் நன்றிகள் தோழா !
சி. சிவசேகரம் அவர்களின் “ஏகலைவன் பூமி” என்ற கவிதைத் தொகுப்பில் வரும் பின்வரும் கவிதையை படித்துப்பாருங்கள் கருணாகரமூர்த்தி. கருத்தாழமிக்க சுவாரசியமான கவிதை இது. நமது இணைய தளபதி(கள்) பாசிச சட்டம்பியாராகவே இருந்துவருகிறார்போலும்!
எல்லாந் தெரிந்தவன்
அவனை
ஒரு கலந்துரையாடலின் போது சந்தித்தேன்.
பெண் விடுதலை பற்றியும்
பெண்களின் சமத்துவம் பற்றியும்
நீளமாய் நிறையவே பேசினான்.
ஆணாதிக்கம், வர்க்கச்சுரண்டல், ஒடுக்குமுறை,
போராட்டம், புரட்சி, சோஷலிஸம்,
பொதுவுடமைப் புதுவுலகம்
பற்றியும் பேசினான்.
பெண்களின் பிரச்சனைகள்
கருத்தடை, கருக்கலைப்பு,
ஆண்களின் அடியுதை, நிந்தனைகள்,
பாலியல் வன்முறை, பலாத்காரப் பாலுறவு
தொடர்பாகப் பேசப்
பெண்கள் வாய்திறந்த போது
அவர்கட்கு எதுவுமே தெரியாது என்றான்.
புரட்சி வந்தவுடன்
எல்லாமே சரியாகி விடுமென்று
மேசையிலே
ஓங்கி அடித்து உரக்கக் கூவினான்.
பெண்களின் பிரச்சனைகள் பற்றி
எந்தப் பெண்ணையும் விட
அவனே
நன்றாக அறிவான்.
அவன் சொல்லும் புரட்சி வந்தபின்
எல்லாமே சரியாகி விடும்.
மாத விடாயும்
பிரசவ வலியுங் கூட
இல்லாது போய்விடும்.
ஏனென்றால், அவன்-
(ஏகலைவ பூமி – சி சிவசேகரம்)