கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் அறிந்து தெரிவிக்கும் ஸ்கேன் மையங்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1000 சன்மானம் அளிப்பதாக சுகாதாரத் துறை துணை இயக்குநர் அய்யனார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் சில ஸ்கேன் மையங்கள் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்து விடுவதால் பெண் சிசுக்கொலைகள் தெரியாமலேயே நடந்து வருகிறது.
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை மறைமுகமாகவோ, நேரிடையாகவோ தெரிவித்தால் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் என்ற சட்டம் அமலில் இருந்தும் சில ஸ்கேன் மையங்கள் குழந்தையின் பாலினத்தை தெரிவித்து வருகின்றன.
இது போன்ற ஸ்கேன் மையம் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தால் ரூ.1,000 சன்மானம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.