Sunday, May 11, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

காஞ்சீவரம் -கசப்பான அனுபவம்:சுப்ரபாரதிமணியன்

இனியொரு... by இனியொரு...
09/13/2009
in பிரதான பதிவுகள் | Principle posts, இலக்கியம்/சினிமா
0 0
20
Home பிரதான பதிவுகள் | Principle posts

 kanchivaramகாஞ்சீவரம் தமிழ்த் திரைப்படம் தேசிய விருது பெற்றுள்ளது. சென்றாண்டு  கேரளா திரைப்படவிழாவில் அதை முதலில் பார்த்தேன். அதிர்ச்சியடைந்தேன்.
அன்று தங்கபச்சானின் அழகி திரைப்படம் வெளியாகியிருந்த நாள்.

ஒளிப்பதிவாளர் ஒருவர் தொடர்ந்து என்னை சென்னைக்கு எனது சாயத்திரை நாவலை திரைப்படம் ஆக்கும் திட்டத்திற்கான ஆலோசனைக்காக கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்..அன்று தான் வாய்த்தது. ஆலோசனையின் போது நாவலின் இறுக்கம் காரணமாகவும் திரைக்கதை ஆக்குவதில் இருந்த சிக்கல்கள் காரணமாகவும் அந்த ஒளிப்பதிவாளர் வேறோரு கதையை அது நெசவாளர் வாழ்க்கை பற்றி இருந்ததால் ( நான் நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதால்) அதை திரைக்கதை ஆக்குவது பற்றி ஆலோசித்தோம்.

கதையின் மையம் முடிவானது.3 நாட்களுக்குப் பின் திருப்பூர் திரும்பிய நான் ஒரு வாரத்துள் 30  சம்பவங்கள் கொண்ட திரைக்கதையை எழுதி முடித்து அனுப்பி விட்டேன். ஒளிப்பதிவாளர் வெகு சீக்கிரம் என்பதால் வெகுவாக மகிழ்ந்தார். திரைக்கதைக்கு தற்காலிகமாக பட்டு என்று பெயர் இட்டோம். ஒளிப்பதிவாளர் அதை குறைந்த பட்ஜெட் படமாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். காஞ்சிபுரம் சென்று இடங்கள் கூட பார்த்து வந்தார்.தேவைப்படும் போது கூப்பிடுவதாகச் சொன்னார்.

பலரிடம் அந்த திரைக்கதை பார்வைக்கு அனுப்பியதையும் அவர் பின்னர் பகிர்ந்து கொண்டார். தயாரிப்பில் நிச்சயம் ஈடுப்டுவேன் என்றார்.

வேறு செய்திகள் இல்லாமல் நாட்கள் கழிந்தன. சில ஆண்டுகளுக்குப் பின்.. கோவையில் ஒரு விழாவிற்கு வந்த நடிகை ரேவதியிடம் அந்த ஒளிப்பதிவாளர் என்னை அறிமுகப்படுத்திய போது பட்டு திரைக்கதையை எழுதியவன் என்றார் .ரேவதியும் அதை எடுக்கலாமே. எனக்கு தாருங்கள் என்றார். ஒளிப்பதிவாளர் அதை தான் தொடரப்போவதாக சொன்னார்.

பிறகு காஞ்சீவரம் திரைப்படம் பற்றி ஆனந்த விகடனில் வந்த ஒரு செய்தியை படித்து விட்டு அவரிடம் தொடர்பு கொண்ட போது தனக்கு பார்க்க கிடைக்கவில்லை செய்தி தெரியவில்லை என்றார்.

கேரளா சர்வதேச திரைப்படவிழாவிற்கு தொடர்ச்சியாகச் செல்பவன் நான்.சென்ற டிசம்பரில் திருவனந்தபுரத்திற்கு சென்ற போது காஞ்சீவரம் திரையிடல் இருப்பது திகில் அனுபவமாக இருந்தது .திரையிடப்பட்ட அன்று பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது.

எனது திரைக்கதையில் ஒரு நெசவாளர் வீட்டு முதிர்கன்னிப் பெண் தனக்கான கல்யாண பட்டுப் புடவையை தானே நெய்து கொள்வாள். குடிகார தகப்பன். திருமணக்கனவு நிறைவேறாதபோது தற்கொலை செய்து கொள்வாள். அவளது பிணத்திற்கு தந்தை அவள் நெய்த பட்டு சேலையை போர்த்துவார்.

நான் எழுதிய திரைக்கதை பலரிடம் பரிசீலனைக்காக சென்றதை ஒளிப்பதிவாளர் சொன்னது ஞாபகம் வந்தது. திரைப்பட விழாவிற்காக வந்த தமிழ் நாட்டு  நண்பர்களுடன் அதைப் பகிர்ந்து கொண்டேன். குறிப்பாக அறை நண்பர் விசுவாமித்திரனுடனும். பிறகு தமிழ் பத்திரிக்கை நண்பர்களிடமும் இதைச் சொன்னேன். தளவாய் சுந்தரம் போன்றவர்களிடமும்.

முதல் மரியாதை பட அனுபவம் 25 ஆண்டுகளுகு முன் ஏற்பட்டது இது போலத்தான்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

திசநாயகத்திற்கு சிறைத் தண்டனை - சென்னையில் கண்டனக் கூட்டம்.

Comments 20

  1. raja says:
    16 years ago

    ஆதாரம் இருந்தால் வழக்கு தொடரலாமே ??!!……..

  2. Kanthasamy says:
    16 years ago

    முதலில் சினிமாகாரர்களின் கதை திருட்டு பத்தி ஒரு சினிமா எடுக்கனும

  3. Maran says:
    16 years ago

    பிரியதாஸன் மசாலா மன்னன். இவருக்கு எப்படி இக் கதை தோன்றியது என்பது ஆச்சரியமாகவே இருந்தது. மார்க்ஸியவாதிகளைப் பற்றி கொச்சைத்தனமாகவே காட்டப்பட்டுள்ளது. “நிழல்” இல் விரிவான விமாசனம் உள்ளது. பிரகாஸ்ராஜ் கூட இப் பாத்திரத்துக்கு ஏற்றவரல்ல. அதீத நடிப்புக்கான விருதே இவ் விருது. அடடூர் எடுத்த படங்களில் சிறப்பற்ற படம் நாலு பெண்கள். அவருக்கு நெறியாள்கைககான விருது கொடுக்கப்பட வேணடிய படங்களுக்கு கொடுக்காமல் இப் படத்துக்கு கொடுத்தமை இவ் வருட விருதுகளிலும் அரசியல் புகுந்து விளையாடுவதாகவே தெரிகிறது. சுப்ரபாரதிமணியன் உங்கள் கதை என்பதை மேலும் பகிரங்கப்படுத்துங்கள்.

  4. dass says:
    16 years ago

    இடதுசாரி சிந்தனை எதிர்ப்புவாதி இது போல் தான் படம் எடுப்பான் … இது கன்டிக்கதக்கது

  5. buruhani says:
    16 years ago

    சதிகாரர்கள் வாழும் பூமியடா சாமி

  6. Govind says:
    16 years ago

    what is that mudhal mariyathai experience. I can address that issue , bcaz i was there with Bharathirajaa during the finalization of that script. yes it is true he used some scenes from Kopalla Kiramam . but the main theme is his feeling.

  7. Malarmannan says:
    16 years ago

    If you prefer damge suit against a person OR institution, you have to claim an amount for compensation and pay court few accordong to the amount claimed. And the case will also drag on for many years and the petitoiner has to shell out expenses every hearing. That is why it is NOT so easy for evryone to file a damage suit.
    MALARMANNAN
    ..

  8. s rajan says:
    16 years ago

    if it is urs then donot leave it .write to the committee which gave reward to this film and the PM and president also.also send a copy of this letter to the HC and the SC also and ask them to take suo moto notice of this. fight it out.
    we are here for solidarity.

    s rajan

  9. peyar says:
    16 years ago

    ஐயா,
    .நீங்கள் எழுதிக் கொடுத்த 30 காட்சிகளுக்கும், இந்தப் படத்திற்கும் என்ன தொடர்பு என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை. எனவே உங்கள் தரப்பினை தெளிவாக, விரிவான தகவல்களுடன் எழுதுங்கள்.நீங்கள் எழுதிக் கொடுத்த/சொன்ன கதையின் அடிப்படையில் திரைக்கதை எழுதப்பட்டு படமாக்கப்பட்டது என்பதை உங்களால்
    உறுதியாக சொல்ல முடியுமா அல்லது படத்துடன் ஒப்பிட்டு எழுத முடியுமா.
    நீங்கள் ஏமாற்றப்படவைல்லையா இல்லையா என்பதை வேறு எப்படிநாங்கள் அறிவது. உங்களுடைய அனுபவம் கசப்பானது. உங்கள் கதைக் கருவை இன்னொருவர் திருடுவது தவறு. ஆனால் உங்கள் கட்டுரையில் உள்ளவைகளைக் கொண்டு காஞ்சைவரத்தின் மூலக்கதை உங்களுடையது என்ற முடிவிற்கு வர முடியவில்லை. கதையின் காலகட்டம குறித்துநீங்கள் எதுவும் எழுதவில்லை

  10. peyar says:
    16 years ago

    Malarmannan, if this is a copyright violation or unauthorised use of a story the issue is different. The author can use copyright act and can even demand an injuctive relief.

  11. santhi says:
    16 years ago

    //நீங்கள் எழுதிக் கொடுத்த 30 காட்சிகளுக்கும், இந்தப் படத்திற்கும் என்ன தொடர்பு என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை//

    இதற்கு மேல் என்ன தெளிவு வேண்டிக்கிடக்கிறது உங்களுக்கு? அவரின் கதையில் ஒருசில கதா பாத்திரங்களை அங்கும் இங்குமாகப் புரட்டிப்போட்டு காஞ்சீவரத்தை முடித்திருக்கிறார்கள் பாதகர்கள். இதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனை வேண்டுமானால் சொல்லுங்கள்.

  12. பாண்டியன் says:
    16 years ago

    பொதுவாக வெற்றியடைந்த திரைப்படங்களுக்கு மட்டுமே இதுபோல உரிமை கொண்டாடுபவர்கள் வருகின்றனர். தோல்வியடையும் படங்கள் மட்டும் இயக்குநரின் திறமையால் மட்டு‌மே உருவாகின்றது போலும்? உங்கள் கதையாகவே இருக்கலாம். அப்படியென்றால் ஆதாரங்களைக் கூறி நீதிமன்றம் செல்லலாமே!
    தமிழ் திரைப்படம் மட்டுமல்ல எந்த மொழிப்படமாக இருந்தாலும் அது ஒரு கலவையாக மட்டுமே இருக்க முடியுமேயன்றி தனி ஒருவரின் சிந்தனையில் உதித்ததாக இருப்பதில்லை. உங்களது ஆற்றாமை புரிகின்றது.

  13. venkadesh says:
    16 years ago

    You can send full details to vikatan,kumudam like magazines.So that it will come to know all.

  14. noyyalnathi says:
    16 years ago

    தன்னைவிட வலு குறைந்தவனை ஏமாற்றும் சிலர் வலு கூடியவனிடம் ஏமாறுவது இயல்பு… காஞ்சீபுரம் எழுத்தாளருக்கு கசப்பான அனுபவத்தை கொடுக்கிறது எனில்..

  15. noyyalnathi says:
    16 years ago

    என் முழுமையான கருத்தை வெளியிடாமை என்பது வருத்தத்திற்குறியது… சுப்ரபாரதிமணியனை சாடக்கூடாது என்று நினைத்தால் அவரின் கட்டுரையை என்னைப் படிக்கநீங்கள் சொல்லக்கூடாது.. என் கருத்தை முழுமையாக வெளியிடுங்கள் எதிர்ப்பு வந்தால் அது என்னையே சாரட்டும். நொய்யல்நதி

  16. யதார்த்தன் says:
    16 years ago

    நாட்டுக்கு ரொம்ப அவசியம். போய் வேலையைப் பாருங்கய்யா.

  17. ANKAYATPIRIYAN says:
    16 years ago

    ஒருவர் போல் பலர் சிந்திக்கலாம்.ஒரு பட்டுப்புடவையைப் பார்ப்பவன் மனதில் கூட எண்ணக் கருக்கள் உருவாகக்கூடிய சந்தர்ப்பங்கள் பல இருக்கின்றன.சுப்பிரபாரதிமணியன் மட்டுந்தான் சிந்தனையாளன் அல்ல.பிரியதர்சனும் சிந்திக்கக்கூடியவர்தான்.

  18. எம்.கே.முருகானந்தன் says:
    16 years ago

    ஒரு நல்ல படத்தை பார்த்த அனுபவம் காஞ்சீவரம் சினிமாவில் கிடைத்தது. அது பற்றி ஒரு விமர்சனம் எனது ‘மறந்து போகாத சில’ இணைய புளக்கில் எழுதியிருந்தேன். உங்கள் கட்டுரையைப் படித்த பின்னர் அதற்கு ஒரு மறு பக்கமும் உண்டு என்பது தெரிகிறது. உங்கள் ஆதங்கத்தைப் புரிந்து கொள்கிறேன்.

  19. Pingback: pligg.com
  20. sudesu says:
    16 years ago

    manusanai manusan saapiduraanda thambi payale… ithu maaruvatheppo…? theeruvatheppo namma kavalai..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...