Monday, May 12, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கே.பி இன் இந்தியச் சார்பு நிலையும் இந்தியாவின் இஸ்ரேலும் : சபா நாவலன்

இனியொரு... by இனியொரு...
07/07/2009
in அரசியல்
0 0
14
Home அரசியல்

 

slumஆதிக்க நாடுகளின் அதிகாரத்துவ மையம் இன்று

அமரிக்க ஐரோப்பிய நாடுகளின் எல்லையை மீறி இந்திய, சீன பொருளாதார வல்லரசுகளோடு பங்குபோடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அமரிக்காவிலும் ஐரோப்பவிலும் சிதைந்து செல்லும் பொருளாதார அமைப்பின் தற்காலிகமான உச்சபட்ச மாற்று வடிவம் புதிய ஒழுங்கமைப்பாக அதிகாரத்தைப் பங்கீடு செய்துகொள்ளும் இந்திய சீன வல்லரசுகளை உருவமைத்துக் கொண்டிருக்கிறது. ஐரோப்பவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட “ஜனநாயக”ச் சொல்லாடலுக்கு இந்திய அரசு இன்று புதிய அர்த்தங்களை வழங்கிக்கொண்டிருக்கிறது. சீன “ஜனநாயகத்தின்” முன் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு தெற்காசியாவில் இந்தியா கட்டமைத்த ஜனநாயகத்தின் முதல் பெரும் படுகொலைதான் வன்னியில் தனது ராஜபக்ஷ பொம்மை அரசின் ஊடாக இந்தியா நிகழ்த்திய முதல் மனிதப் படுகொலைகள்.

மனிதாபிமானிகளும், அரசியலாளர்களும், அனைத்து மக்கள் சார் சமூக சக்திகளும் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருக்க இன்றும் முகாம்களில் தொடரும் மக்களின் ஓலக்குரல்கள் தெற்காசியா எங்கும் ஒலிக்கப் போகிறதா என்ற அச்சம் அனைத்து மனிதாபிமானிகள் மத்தியிலும் நிலவுகிறது.

நாடு முழுவதிலும் மக்கள் இயக்கங்களுக்கு எதிராக இந்திய அரசு மேற்கொள்ளும் பரிசோதனை முயற்சியே லால்காரில் இன்று நடந்துகொண்டிருக்கும் படுகொலைகள் எனவும் லால்கார் என்பது இந்திய அரசின் பரிசோதனைக்கூடம் எனவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்(CP(ML)) பொதுச் செயலாளர் தீபங்கார் பத்தாச்சார்யா ரீடிவ் இணையத்திற்கு வழங்கிய செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

 

முன்னைய பதிவுகள்
இலங்கை ஒரு பரிசோதனைக்கூடம்? : சபா நாவலன்

இந்தப் பரிசோதனைக் கூடம் லால்காரில் ஆரம்பிக்கப்பட்டதல்ல. வன்னியிலிருந்தே ஆரம்பித்துவிட்டது. வன்னியில் மனிதப்படுகொலைகள் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது இனியொருவிலி ஏப்பிரல் 2009 இல் வெளியான கட்டுரையில் இது குறித்துக் காட்டப்பட்டுள்ளது.

காந்தி தேசத்தின் அகிம்சை அதன் உள்வீட்டுக்குள் நிறைவேற்றிக்கொண்டிருக்கும் லால்கார் கொலைகள் மறுபடி ஒருமுறை மனித குலத்தை அதிர்ந்து போகச் செய்திருக்கிறது. ஊடகங்கள் மறுக்கப்பட்டு வெளியுலகிலிருந்து இருட்டடிப்புச் செய்யப்பட்டு அப்பாவி மக்களை லால்காரில் கொன்று போடும் அரச பயங்கரவாதம், தான் வன்னி சோதனைக் கூடத்தில் 50 ஆயிரம் மக்களின் மரண ஓலத்தில் கற்றுக்கொண்ட பாடத்தை மறுபடி ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறது.
முன்னெழுந்து கொண்டிருக்கும் இந்திய வல்லரசானது வன்னிச் சோதனைக் கூடத்தில் நிகழ்த்திய மனிதப்படுகொலையில் கற்றுக்கொண்வை போருக்கான தயாரிப்புக் காலம், போர் நிகழும் காலம், பின் போர்க் காலப்பகுதி என மூன்று பிரதான அரசியல் நிகழ்வுகளின் கால அட்டவணை களை அடிப்டையாகக் கொண்டவையாகும்.

முன் போர்க் காலம்
முன் போர்க் காலத்தில் இந்திய மேலாண்மைக்கு எதிரான எல்லா அரசியல் சமூக சக்திகளும் திட்டமிட்டுப் பலவீனப்படுத்தப்பட்டன.
பாசிசத் தன்மை வாய்ந்த சிங்கள தேசியவாத அரசியலை அடிப்படையாகக் கொண்ட ஜனதா விமுக்தி பெரமுன(மக்கள் ஐக்கிய முன்னணி)() என்ற கட்சியானது இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் அடுத்தபடியாக பலம் வாய்ந்ததாகவும் உறுதியான உள்ளகக் கட்டமைப்புக்களைக் கொண்டதாகவும் அமைந்திருந்தது. அதன் உருவாக்கக்க் காலப்பகுதியிலிருந்தே இந்திய எதிர்ப்பு வாதத்தை பிரதான கோஷமாகக் கொண்டிருந்த இக்கட்சியானது திட்டமிட்டுப் பிளவுபடுத்தப்பட்டது. இதன் ஒருபகுதி அரச ஆதரவு அணியாக மற்றய அணி பலவீனமடைந்து போக சிங்கள மக்கள் மத்தியிலான இந்திய எதிர்ப்பு வாதமும் பலமிழந்து போனது.

புலிகளின் இருப்பானது தெற்காசியாவின் அமைத்துக்கு மட்டுமல்ல உலக சமாதானத்திற்கே அச்சுறுத்தலானது என்று பரந்துபட்டளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 2006 நடுப்பகுதியில் புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைசெய்யப்பட்டது.

இது தவிர சிங்கள மக்கள் பெரும் பான்மையாக வாழும் பகுதிகளில் அப்பாவிப் பொதுமக்கள் நடமாடும் பொது இடங்களில் புலிகள் நடாத்திய குண்டுத்தாக்குதல் சிங்கள மக்களின் வாழ்வின் தவிர்க்கமுடியாத ஒரு பகுதியாக மாறிவிட, புலிகளின் அழிவு மட்டுமே தமது அன்றாட வாழ்வை உறுதிப்படுத்தும் என்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது. இச்சிந்தனைப் போக்கானது சிங்கள மக்கள் மத்தியிலிருந்த அரச எதிர்ப்புச் சக்திகளை மௌனிக்கச் செய்திருந்தது மட்டுமன்றி புலியழிப்பிற்கு எந்த விலையையும் எத்தனை உயிரிகளையும் இவர்கள் வழங்கத் தயாராகவிருந்தனர். இவ்வாறான வெறுப்புணர்வை மேலும் வளர்த்தெடுக்கவும் சிங்கள மக்களின் ஆதரவை மேலும் வளர்த்தெடுக்கவும், எதிர்ப்புச் சக்திகளை நிர்மூலமாக்கவும் இலங்கை அரசே பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வெடிகுண்டுப் புரளியைக் முடுக்கிவிட்டிருந்தது.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்த புத்திஜீவிகளிலிருந்து இடதுசாரிகள் வரை மகிந்த அரசிற்கு ஆதரவளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இனப்படுகொலை நிகழ்த்தப் படும் போது அதன் பிரதான எதிர்ப்பு சக்திகளாக அமைய வல்ல புலம்பெயர் இலங்கைத் தமிழர்களையும், தமிழ் நாட்டுத் தமிழர்களையும் கையாளும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன, இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர் நாடுகளின் அரசியல் நடவடிக்கைகளுக்கென இலங்கை அரசு தனது வரவுசெலவு நிதி ஒதுக்கீட்டின் போது பெருந்தொகையான பணம் ஒதுக்கப்பட்டிருந்ததை ஒத்துக்கொண்டிருந்தது.

போர் ஆரம்பிக்கப்படுவதற்குச் சில வருடங்களின் முன்னதாகவே புலம் பெயர் ஐரோப்பிய நாடுகளில் புலியெதிர்ப்பாளர்களில் ஒரு பெரும் பகுதியினர் அரச ஆதரவாளர்களாக மாறிவிட்டிருந்தனர். அரசின் துணை இராணுவக் குழுக்கள் தமது நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருந்ததன. புலி ஆதரவாளர்களில் பலர் விலைகொடுத்து வாங்கப்பட்டனர். சென்னையிலிருந்த இலங்கையின் இந்தியாவிற்கான துணைத்தூதர் இனப்படுகொலைகளின் போது இந்திய அரசியலைச் சிறப்பாகக் கையாண்டமைக்காக பிரித்தானியத் தூதுவராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பது இங்கு குறித்துக் காட்டத்தக்கது.

இந்த அரசியல் நகர்வுகள் அனைத்திற்கும் சர்வதேச அரசில் சூழலின் மாற்றமும் அதனூடான இந்தியா, சீனா போன்ற புதிய ஏகபோக அதிகார மையங்களின் உருவாக்கமும், அடிப்படையான காரணமாக அமைந்திருந்தது மட்டுமல்ல இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு அரசியல், பொருளாதார, இராணுவ வலிமையை வழங்கியதும் இந்தப் புதிய ஏகபோக அதிகார அமைப்புக்களே.

இந்த முன்னேற்பாடுகள் தான் போர் நிகழும் காலப்பகுதியில் இலங்கை அரசு விரும்பியவாறு மனிதப்படுகொலைகளை மேற்கொள்வதற்கு ஆதாரமாக இருந்தவை எனலாம்.

மாஓ சேதுங் யார் மக்கள் என்ற தனது கட்டுரையில் மக்கள் பகுதிகளின் வர்க்க சார்பு நிலைகள் தொடர்பாகவும் பெரும்பான்மை மக்களின் ஜனநாயகம் தொடர்பாகவும் கூறுவது போல், உலக முதலாளிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் அதிகார வர்க்கமும் யார் மக்கள் என்று தெளிவாகத் தெரிந்துவைத்திருக்கிறது. தமது சர்வதேச வியாபாரத்திற்கு எதிரான சக்திகளாக உருவாகக் கூடிய எல்லா மக்கள் பிரிவுகளையுமே அவர்கள் மக்களாகக் கருதுவதில்லை. இந்தியாவில் விவசாயத்தை சர்வதேச வியாபாரத்திற்கு உட்படுத்திய போது தற்கொலைசெய்து மாண்டு போன இரண்டு லட்சம் விவசாயிகளை இவர்கள் மக்களாகக் கருதியதில்லை. லால் காரிலும் சிறப்புப் பொருளாதார வலையத்தை நிறுவ அரசு முயற்சிகள் மேற்கொண்ட போது விரடியடிக்கப்பட்ட மக்கள் முன்னெடுத்த எதிர்ப்புப் போராட்டத்தின் விலை தான் இன்று இந்திய அரசாங்காம் மேற்கு வங்க மாநில அரசோடு இணைந்து மேற்கொள்ளும் மனிதப்படுகொலைகள்.

சிங்கூரில் காணி சுவீகரிப்பிற்கெதிராக கிளர்ந்தெழுந்த மக்களின் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்டிரும்க்கும் வன்முறை நூற்றுக்கணக்கான அப்பாவிகளைப் பலி கொண்டிருக்கிறது.
பிரித்தானியாவில் முதலாளித்துவம் உருவான காலப்பகுதியில் கோதுமைச் செய்கை நிலங்களிலிருந்து விவசாயிகள் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் கம்பளி உற்பத்திக்காக ஆடுகள் வளர்க்கப்பட்ட போது பெரும்பகுதி விவசாயிகள் ஆலைகளில் வேலைசெய்யும் கூலிகளாக மாற இன்னொருபகுதியினர் உணவின்றியும் உயிர்வாழ வழியின்றியும் இறந்து போயினர்.
இந்தக் கூலி விவசாயிகளின் எதிர்ப்பைக் கட்டுப்பாட்டிற்குட்படுத்தவும் அவர்களின் தற்காலிக உயிர் வாழ்தலை உறுதி செய்யவும் தற்காலிக மாற்று வழிமுறைகளை பிரித்தானிய அரசு கையாண்டிருந்தது.
அனுபவ முதிர்ச்சியடைந்த, உலக முதலாளித்துவத்தின் ஒரு பகுதியான இந்திய முதலாளித்துவமும் ஆளும் வர்க்கமும் இவ்வாறான எதிர்ப்புக்களைக் கையாள்வதற்கு மனிதப்படுகொலைகளையே தீர்வாக முன்வைக்கின்றன.

எந்த எதிர்ப்புமின்றி புதிய, “ஜனநாயகத் தாராளவாததின்” கோரக்கரங்களுக்குப் பலியாகும் இந்த அப்பவி மக்கள், ஆசிய ஜனநாயகத்திற்குப் பலியெடுக்கப்படுகிறார்கள்.

வன்னி என்ற குறிகிய நிலப்பரப்பினுள் சாட்சியும், தடயங்களுமின்றி 4 லட்சம் ஆயிரம் மக்களின் மீது இலங்கை அரசின் துணையோடு நடாத்திய பரிசோதனை இன்று மேற்கு வங்கத்தில் பிரயோகிக்கப்படுகிறது. இது நிறுத்தப்படப் போவதில்லை. தமது சர்வதேச வர்த்தகத்திற்கு எதிரான எல்லா சக்திகளையும் இந்த அதிகாரங்கள் கொன்றுபோடும்!

போர்க்காலம்

போர்க் காலத்தின் போதான அரசியல் மிகவும் அவதானமாகக் கையாளப்பட்டது.இலங்கைப் பாதுகப்புச் செயலர் கோதாபாய ராஜபக்ஷ, கனரக ஆயுதங்களைக் கட்டுப்படுத்த முடியாது என அறிக்கை வழங்க, தமிழக முதலமைச்சர் கருணாநிதி இலங்கை அரசு கனரக ஆயுதங்களைப் பாவனையை நிறுத்தியுள்ளதாக செவ்வி வழங்கினார். இனப்படுகொலையின் பின்புலமாகவமைந்த ஆளும் கட்சியோடு இவர் தேர்தல் கூட்டமைக்க, கருணாநிதியோடு திருமாவளவன் கூட்டமைத்துக் கொண்டார். பொருளாதார நெருக்கடியில் திண்டாடிக்கொண்டிருத மேற்கு, இந்தியவினதும் சீனாவினதும் பங்களிப்பின்றி பொருளாதாரத்தை மீளமைக்க வேறு வழிக்ளில்லை எனத்தெரிந்து வைத்திருக்கிறது. ஏற்கனவே மனிதப்படுகொலைகளின் மீதும் போரின் மீதும் தனது சரியும் சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்திருக்கும் மேற்குலகத்தின் பொருளாதார ஆதிக்கத்தை ஆசிய நாடுகளில் கட்டுபடுத்தும் இன்னொரு நோக்கமும் இந்தியா நடாத்திய இப்போரின் பரிசோதனைப் பொருட்களில் ஒன்றென மேற்கு அறிந்து வைத்திருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளும் தமது தலையீட்டை நிகழ்த்த மறுபடி மறுபடி பரிசோதனை நிகழ்வுகளை மேற்கொண்டது. இலங்கை அரசு பிரித்தானிய தூதுக்குழுவை நிராகரித்தது. சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கையில் அனுமது வழங்க மறுத்துவிட்டது.

ஐ.எம்.எப் வித்தத் நிபந்தனைகளை உதாசீனம் செய்த இலங்கை அரசு இந்தியா தமக்கு உதவிசெய்யத் தயாராகவிருப்பதாக வெளிப்படையாகவே அறிவித்தது. போர் அழிவுகள் தொடர்பாகவும் மனிதப் படுகொலைகள் குறித்தும் வெளிப்ப்டையாகப் பேசியவர்களில் பிரித்தானி வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபாண்டும் ஒருவர். பிரித்தானியாவும் பிரான்சும் தலைமை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் தலையிட முற்பட்ட போதெல்லாம் இந்தியா இலங்கைக்கு ஆதரவவு வழங்கியது மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியில் மேற்கிற்கு எதிரான தேசிய உணர்வு மேலோங்கவும் வழிசெய்தது. ஈராக்கிலும் ஆப்கானிலும் மனிதப்படுகொலை மேற்கின் அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தல் இங்கு நோக்கமல்ல. சீன-இந்திய நாடுகளின் தலைமியிலான ஆசிய அதிகார மையம் மேற்கின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் பரிசோதனைக் கூடமாக வன்னியைப் பயன்படுத்துக் கொண்டது என்ப்தை நிறுவுதலே கட்டுரையின் நோக்கம்..

இவற்றிலெல்லாம் ஆசியப் பொருளாதார ஆதிக்கம் வெற்றிவாகை சூடிக்கொண்டு கொழும்புத் தெருக்களில் கொலைக் கொண்டாட்டங்களை நடாத்தியது ஒருபுறமிருக்க மறுபுறத்தில் புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் தென்னிந்தியத் தமிழர்கள் மத்தியிலும் இலங்கை – இந்திய அரசுகள் முழுமையாகத் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை.

பின் போர்க்காலம்

பின் போர்க் காலத்தில் இலங்கை அரசு தனது இனப்படுகொலையை எந்தத் தடையுமின்றி புதிய ஆசிய வல்லரசுகளின் ஆதிக்கம் அதிகரித்துச் செல்லும் ஐக்கிய நாடுகள் சபையின் நிபந்தனையற்ற ஆதரவுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்திய அரசு இலங்கையச் சர்வதேசக் குற்றவியல் சட்டங்களின் பிடியிலிருந்து விடுவித்த அதேவேளை மேற்கின் தலையீட்டிற்கெதிராகவும் தம்மை நிலை நிறுத்திக்கொண்டன. இலங்கையை முன்வைத்து மேற்கு நாடுகளின் தலையீட்டிற்கெதிராக நடத்தப்பட்ட பரிசோதனையில் ஆசிய அதிகார மையங்கள் சர்வதேச இராஜதந்திர வெற்றியீட்டியுள்ளன. இலங்கையில் தலையீடு மேற்கொள்வதற்கான மேற்குலகின் அனைத்து அரசியற் தந்திரங்களையும் இந்தியா தலைமைதாங்கிய அரசியல் நகர்வுகளால் முறியடித்துள்ளது.

இந்திய அதிகார வர்க்கத்தின் வியாபாரப் பசிக்குப் பலியான இரண்டு லட்சம் விவசாயிகளைப் போல, நந்திகிராமில் டாடா நிறுவனத்தின் தொழிற்சாலை நிறுவுதற்காக இரவோடிரவாகக் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவிகளைப் போல, சிறப்புப் பொருளாதார வலையத்தை நிறுவுதற்காக லால்காரிலும் சிங்கூரிலும் கொன்றொழிக்கப்படும் பொதுமக்களைப் போல, இலங்கையின் தடுப்பு முகாம்களில் வதைக்கப்படும் அப்பாவித் தமிழர்கள் அதிகார வர்க்கத்தால் மனிதர்களாகக் கருதப்படுவதில்லை. மனித் உயிர்கள் மீது இந்தக் இவர்களெல்லாம் நடாத்தி முடித்த பரிசோதனைகளின் தொடர்ச்சி தெற்காசியத் தெருக்களில் இன்னுமின்னும் மனிதர்கள் கொசுக்கள் போலக் கொல்லப்படுவார்கள் என்பதௌ உணர்த்தி நிற்கின்றன.

இலங்கை முகாம்களுக்குப் புறத்தே வடகிழக்கில் தமிழர்கள் வாழும் பகுதிகள் எங்கும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தமிழ் துணை இராணுவக் குழுக்களின் துணையோடு மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவின் இஸ்ரேலாக உருவாக்கப் பட்டுக்கொண்டிருக்கும் கொண்டிருக்கும் இலங்கை தமிழ்ப்பேசும் மக்கள் மீதான இனப்படுகொலையை இந்திய அதிகார வர்க்கத்தின் ஆதரவுடன் தொடரும் என்பதற்கான எதிர்வுகூறல்களுக்கு இன்னும் ஆயிரம் சாட்சிகள் முன்வைக்கப்படலாம். இந்தியாவின் இஸ்ரேலை உருவாகுதற்காக சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் சிங்கள மக்கள் மத்தியில் ஆழ விதைக்கப்படுகிறது. யூதர்களைப் போலவே சிங்கள பௌத்தர்களுக்கான ஒரே நாடு என்று மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசர்களில் ஒருவரான சசங்க குணதிலக குறிப்பிடுவதும் இதே உணர்வு சிங்கள மக்கள் மத்தியில் மேலோங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பின் போர்க்காலத்தில் இந்திய இலங்கைக் கூட்டு நடவடிக்கைகள் இரண்டு பிரதான விடயங்களில் எதிர்பார்த்த வெற்றியை எட்டமுடியவில்லை.

1. மேற்கு நாடுகளில் புலம் பெயர் இலங்கைத் தமிழர்களின் போராட்டங்களை ஒடுக்குதல்.
2. தமிழக மக்களின் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவைச் சீர் குலைத்தல்.

இலங்கை அரசு ஒத்துக்கொண்டிருப்பது போலவே புலம்பெயர் நாடுகளில் அதற்காக வேலைகளுக்காகப் பெருந்தொகைப் பணம் ஒதுக்கப்பட்டிருந்தது. இலங்கைத் தமிழ்ப் புலி எதிர்ப்பாளர்களில் பெரும் பகுதியினர் அரசின் இனப்படுகொலைகளை வெளிப்படையாகவே நியாயம் கற்பிக்குமளவிற்கு தரம் தாழ்ந்துபோனட்தானது இலங்கை அரசின் புலம்பெயர் நாடுகளிலான உத்வேகத்தை சுட்டி நிற்கின்றது.

மேற்கு நாடுகளில் இவர்களிற்கிருக்கும் குறித்த எல்லைகுட்பட்ட சுதந்திரமும், இங்கு வாழ்கின்ற இரண்டாவது தலைமுறையின் புதிய எழுச்சியும் தமிழ் அரச ஆதரவாளர்களின் அரச ஆதரவுப் பிரச்சாரங்களுக்குப் போதியளவு வெற்றியைத் தேடித்தரவில்லை.

இந்த நிலையில் இவர்களில் பலர் தென்னிந்தியாவில் தமது அரச ஆதரவுப் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த சூழ்னிலையில் கே.பி என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மனாதனின் அரசியற் பிரவேசமும் புலிகளின் சர்வதேச அரசியற் பிரிவின் புதிய உருவாக்கமும் முக்கியத்துவம் பெறுகின்றன.

பிரித்தானிய இன்ரபோல் உளவு அமைப்பினால் தீவிரமாகத் தேடப்படுகின்ற இவர், தகவற் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த இன்றைய சூழலில், தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற, சர்வதேசச் சட்டங்களால் தடைசெய்யப்பட்ட அமைப்பின் பிரதிநிதியாக வெளிப்படையாக இயங்குவது எப்படிச் சாத்தியமானது என்ற வினாக்களெல்லாம் தொக்கி நிற்க, மேலும் பல சந்தேகங்களும் விடைகாணப் படாதவையாகவே அமைந்துவிடுகின்றன.

இன்று வரைக்கும் இலங்கையில் நிகழ்த்தப்படும் அப்பாவிமக்கள் மீதான பிரகடனப்படுத்தப்பட்ட யுத்ததிற்கு இந்தியாவே பின்புலமாக அமைந்துள்ள அரசியற் சூழலில் கே.பி தனது செவ்வியில் இலங்கையில் நடைபெற்ற யுத்ததிற்கு சீனாவும் ரஷ்யாவுமே காரணம் என்று குறிபிட்டு இந்தியாவைத் தவிர்த்திருந்தமை பல சந்தேகங்களை பலரின் மத்தியில் விதைத்திருக்கிறது.

இலங்கையில் தடுப்பு முகாம்களில் வதைக்கப்படும் அகதிகளிற்கு உதவும் நோக்கோடு இந்தியாவை அணுகும் நோக்கமே இவ்வாறான அரசியல் நகர்வுகளுக்குக் காரணம் என்ற தொனிப்பட கே.பீ கூற முனைந்துள்ளது அவரின் ஹெட்லைன்ஸ் டுடே வானொலிக்கு வழங்கிய செவ்வியில் வெளிப்படுகிறது.

தடுப்பு முகாம் அகதிகளுக்கு உதவவென ஆயிரக்கணக்கான மனித உரிமை அமைப்புக்களும் தயாரவுள்ள போதிலும் இந்திய அரசின் ஆதரவோடு மகிந்த அரசு அனைத்து உதவிகளையும் தடை செய்துவருக்கின்றது மட்டுமல்ல அந்த மக்களை அரச பாசிசத்தின் நவீன அடிமைகளாக மாற்றி வருகின்றது. இங்கு உதவிகள் அவர்களைச் சென்றடைய வேண்டுமானால், மூன்று லட்சம் மக்களும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டுமால் இலங்கை அரசின் மீதும் அதற்கு ஆதரவாக அமையும் இந்திய அரசின் மீதும் சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகளின் பல மில்லியன்கள் பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் தொடர்பாக கேள்வியெழுப்பப்படும் சூழலில், இலங்கை அரசின் மீதான அழுத்தத்தின் முதற்படியாக இலங்கை அரசிற்கெதிரான போர்க்குற்ற வழக்குகள் சர்வதேச நீதி மன்றத்திலும் ஐக்கிய நாடுகள் நீதி மன்றத்திலும் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இவைபோன்ற ஆழமான பாதிப்புக்களை ஏற்படுத்தவல்ல அழுத்தங்களையெல்லாம் நிராகரித்து விட்டு இந்தியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தப் போகிறேன் என்பதும், தமிழ் நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்த முனைகிறேன் என்பதும் பல சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது.

குறிப்பாக இனப்படுகொலையைத் தொடர்ச்சியாக மேற்கொண்டிவரும் இலங்கை அரசிற்கெதிரான புலம் பெயர் நாடுகளில் உருவாகக் கூடிய எதிர்ப்பியக்கங்களை நிர்மூலமாக்க கே.பீ ஊடாக இந்தியா மேற்கொள்ளும் சதி முயற்சியா இவையெல்லாம்  என எண்னத்தோன்றுகிறது.

இலங்கையிலும், இந்தியாவிலும், புலம்பெயர் சமூகத்திலும், உலகெங்கிலும் உள்ள மக்கள் பற்றும் மனிதாபிமானமுமுள்ள சக்திகள் அதிகார வர்க்கத்தின் மனிதப் படுகொலைகளுகெதிராக இணைந்து கொள்வதே இன்று அனைவரினதும் முன்னாலுள்ள சமூகக்கடமையாகும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

வடக்கில் ஆயுதக் குழுக்கள் எதுவுமில்லை!!!:அரசாங்கம் தெரிவிப்பு.

Comments 14

  1. PARTHASARATHI says:
    16 years ago

    INDIA IS OUR FATHERS COUNTRY AND WE CANT HAVE ANY SOLUTION WITHOUT INDIA AND SINGALA MAJORITY.WE SHOULD HAVE TO ACCEPT THAT SINGALESE HAVE NO COUNTRY OTHERTHAN SRILANKA SO WE SHOULDNT MAKE THEM FEAR.
    KP NOW MAKING A GOOD MOVE AND INDIA AND SRILANKA WILL BRING SOLUTION TO TAMILS IN SRILANKA.
    WORLD HAS BEEN CHANGED ,THERE IS NO WEAPONS WAR ANYMORE ONLY ECONOMIC WAR.

  2. Sarvachitthan says:
    16 years ago

    இந்தியாதான் இலங்கையில் தமிழினப்படுகொலைகலைந்டத்தியதில் முக்கிய பங்காளி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்தியா நினைத்தால் நிச்சயம் ஈழத்தமிழருக்கு தமிழ் மாநிலம் ஒன்றினைப் பெற்றுத்தர முடியும். பிரபாகரன் இப்போது இல்லை என்னும் நினைவில் இலங்கையில் சிறுபான்மை இனம் என்று ஒன்று இல்லை என்றும் சமஷ்டி ஆட்சிமுறை இலங்கைக்கு ஏற்றதல்ல என்றும் “பிதற்ற” ஆரம்பித்திருக்கும் சிங்களத் தலைமைக்கு இந்தியா மட்டுமே நியாயமான வழியில் ஆலோசனை வழங்கமுடியும். அது இந்தியா ஈழத்தமிழருக்கு இழைத்த துரோகத்துக்குப் பிராயச்சித்தமாகவும் அமையலாம். அவ்வாறு இந்தியா செய்ய வேண்டுமாயின் கே.பி இந்தியாவை அணுகாது சாத்தியப்படாது. அவ்வாறு அணுகாதிருப்பின் முன்பு விடுதலைப் புலிகளைப் பழிவாங்குவதற்காக சிங்களத்துக்கு ஆதரவு அளித்து தமிழர்களைக் கொன்றது போல், ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி தமிழர்களை அது மீண்டும் கைவிட்டுவிடும். அந்த நிலை உருவாகாது தடுப்பதாயின் கே.பி இந்தியாவைத்தான் அணுகவேண்டும். அதை விட்டுவிட்டு சீனாவையா அணுகுவது. துரோகிகளாயினும் மனமாற்றத்துக்கு இடம் வழங்க வேண்டும். இல்லையேல் உலகம் மனித அவலங்களால் நிறைந்து அழிவே மிகும்..

  3. Thamilmahan says:
    16 years ago

    Like wise I agree with Mr.Parthasarathi.KP’s move is a good one.We have to have India on our side to move forward. We can go on and on about what India
    did but that is not going to help us in our struggle. Let’s find a solution
    to bring India to our side and win our freedom.

  4. mathimalar says:
    16 years ago

    புலிகளிடம் எந்த அரசியலும் இருந்ததில்லை. இந்தியா குறித்த சர்வதேச நிலைமைகளையும் இவர்கள் புரிந்து கொள்ளப் போவதில்லை . இறுதியில் இலங்கைக்கும் இந்திய அரசுக்கும் சோரம் போய் விடுவார்கள். முற்போக்கு வாதிகளை தமிழ் தேசியத்திற்கு எதிராகாக் காட்டிக்கொடுப்பது புலிகளாகவே இருப்பார்கள்.

  5. Thamilayini says:
    16 years ago

    Sure Indian stands towardsSriLankan Tamil Issue is temporary,once India burn his finger already and current in experience Sonia made to revenge on LTTE made to suffer Ceylon tamils?Wait Sonia too make changes like Her mother in law Killed by Sikh extremist after that what stants Indian ruling political took?Wait?time will answer all?

  6. Raj says:
    16 years ago

    Tamils gave number of chances to Praba which he missed, let us give him a chance (after all no loss on life)

  7. mathimalar says:
    16 years ago

    //பீரங்கிக் குண்டுகள் நாலாபுறங்களிலும் இருந்து வந்து எங்கள்மீது வீழ்ந்து வெடிக்கின்றன. கனரக மற்றும் சிறுரக துப்பாக்கிச் சன்னங்கள் எல்லாப் பக்கத்தில் இருந்தும் சீறி வருகின்றன. தாக்குதல் நிகழும் இந்தப் பகுதிக்குள் இன்னமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். காயப்பட்டு வீழ்ந்து தூக்கி எடுக்க யாருமற்றுக் கிடப்போரின், மக்களின் மரண ஓலங்களே எங்கும் கேட்கின்றன. விடுதலைப் புலிகளின் பக்கத்தில் இருந்து குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதிர்த்தாக்குதல்கள் ஏதுமற்ற நிலையிலும், சிறீலங்கா படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நான்கு பக்கங்களிலும், சகலவிதமான நாசகார ஆயுதங்களைப் பாவித்தும் மேற்கொண்டவாறு மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள்; கொல்லப்பட்டு வீழ்ந்த மக்கள் எல்லோரினது உடல்களும் நாலாபுறமும் சிதறிக் கிடக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் பிணக்குவியல்களாகவே இருக்கின்றன. கொல்லப்பட்டோரது உடல்கள் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக அகற்றப்படாத காரணத்தினால், அந்தப் பகுதி எங்கும் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது. இன்றைய இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுடன் இங்குள்ள மக்கள் அனைவருமே சிறீலங்கா படையினருக்கு இரையாகிவிடுவர். படுகாயமடைந்தவர்கள் இந்தப் பகுதியெங்கும் விழுந்து கிடந்து அலறுகின்றனர். படுமோசமான காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சையளிக்க எந்த வழியுமற்ற நிலையில் கதறும் பொதுமக்கள், அங்கே இருக்கும் போராளிகளிடம் தம்மை சுட்டுக் கொன்றுவிடுமாறு மன்றாடுகின்றனர். அதேபோல காயமடைந்து சிகிச்சைக்கு வழியற்றுக் கிடக்கும் போராளிகள், தமது “சயனைட்’ வில்லைகளைத் தந்துவிடுமாறு கதறுகின்றனர். பதுங்குக் குழிகளுக்குள் இருந்தபோதே கொல்லப்பட்டுவிட்ட மக்களின் உடல்களுக்கு மேலேயே, உயிரோடு எஞ்சியிருக்கும் மக்கள் பாதுகாப்புக்காய் பதுங்க வேண்டிய அவலம் நிலவுகின்றது//-புதினம் செய்தியாளர்

    இவ்வளவும் நடந்த பின்னும் இந்திய அரசின் காலில் விழுந்து கிடக்கும் பத்மனாதன் மற்றும் புலி ஆதரவு குழுக்களை என்னென்பது. இந்தியாவை வென்றெடுக்கப் போகிறார்களாம். இந்தியா என்ன பால்குடிப் பாப்பாவா வென்றெடுக்க?
    இவர்களேல்லாம் தமிழ் மக்கள் குறித்து எப்போதும் அக்கறை கொண்டவர்களாக எனக்குத் தெரியவில்லை. இனியொரு போராட்டம் தேவை. அங்கு மக்கள் தான் நண்பர்கள். எல்லா அதிகார வர்க்கமும் எதிரிகள். அமரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் அரச பயங்ரவாதிகள் மட்டுமல்ல! அதன் அடிவருகளும் தான். இனி யார் மக்கள் யார் எதிரிகள் என வரையறுக்கும் காலம் வந்துவிட்டது. இந்தியாவில் மக்கள் இருக்கிறார்கள். இலங்கையில், ஐரோப்பாவில், ஆபிரிகாவில் ……….. இவர்களை இனம் கண்டு இணைத்துக் கொள்வோம். புதிய தற்காப்பு யுத்தத்தை இந்த அரச பயங்கரவாதிகளிடம் இருந்தும் அதன் அடிவருடிகளிடம் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கொடு முன்னெடுப்போம்.

  8. sunthar says:
    16 years ago

    yes sri lanka is the laboratory to practice india’s domination. what does the k.p do against the genocide? he is one of the richest person in the world!
    if he is not pro indian and he hasnt helped india to win the war in sri lanka,
    he has to do the followings.
    -bring the sri lanka to the criminal court.
    -fight to liberate the IDPs.
    -collect the witness against sri lanka and do the propaganda against sri lanka and india.
    – these will give the presure against the sri lankan government to do something for tamils and liberate the IDPs.
    -these will stop the continuation of the genocide commited by india and sri lanka.
    will k.p do these????????????????????
    no!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    y???????????????????
    he is an indian spy!!!!!!!!!!!!

  9. புதுவை யுகபாரதி says:
    16 years ago

    தெளிவான கட்டுரை. இந்தியாவையும் சீனாவையும் ஆசிய வல்லரசுகள் என்று அடையாளப்படுத்தியிருப்பது இலங்கைத் தமிரழர்களுக்கு அவர்களே தான் தங்கள் விடுதலைப் போராட்டத்தை முன்டனெடுத்துச் செல்லவேண்டும் என்ற அறிவுறுத்தலாகவே தெரிகிறது. புலம்பெயர் தமிழர்கள் இந்தியாவை இனியும் நம்பாது தங்களை நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனையை இக்கட்டுரை முன்வைப்பதாக உள்ளது. மேலும் உலக வல்லரசுகள் தங்கள் வல்லாண்மையைத் திணிக்க மக்களைக் கொலைசெய்யத் தயங்காது என்ற அதிர்ச்சிகரமான உண்மை இக்கட்டுரையின் பெறப்படுகிறது.
    – புதுவை யுகபாரதி

  10. A V SAMIKKANNU says:
    16 years ago

    ட்சிங்களப் பேரின வாதத்தை எதிர்ப்பது என்பதன் பேரால் அவர்களிடையே இருக்கும் இன நல்லிணக்கவாதிகளையும் புறந்தள்ளுகிற முட்டாள்தனத்தால் எவ்வளவு பேரழிவை இக்கட்டுரையாளரைப்போன்ற ‘புரட்சிப் புயல்கள்’ இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படுத்திவிட்டார்கள்!போகிறபோக்கில் அன்று முதல் இன்றுவரை இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மிகச்சரியான தீர்வை முன்வைத்துள்ள மார்க்சிஸ்டுகளை இந்தியாவின் ‘இனப்படுகொலையாளிகள்’ என இங்குள்ள அமெரிக்க-இந்திய ஏகபோக முதலாளிகளின் கூட்டாளிகளான ‘மாவோயிஸ்டுகளைப் போலவே இவரும் சித்தரிக்கிறார்!
    பனிப்போர்க் காலத்தில் சோவியத்து ஒன்றியத்தைச் சமூக ஏகாதிபத்திய நாடு எனப் பழித்த அதே கூட்டம் இன்று இந்திய மார்க்சிஸ்டுகளைச் ‘சமூக பாசிஸ்டுகள்’ எனப் ‘புதுத் தத்துவம்’ பேசி தனது கொலை அரசியலுக்கு நியாயம் கற்பிக்கிறது! இவர்களும்,தமிழகத்தின் ‘இனப்போராளி’களாம் ஐயாக்களும், இலங்கைத் தமிழர்களின் ‘இன்னல் களைந்திட அவ்வப்போது தங்களின் அரசியல் சூழலுக்கேற்ப புதுப்புது அவதாரமெடுக்கும் அம்மாக்களும், முத்தமிழ் வித்தகர்களுந்தான் இலங்கைத் தமிழர்களின் இன்றைய அவலத்திற்கு முழுப் பொறுப்பேற்கவேண்டும்.
    ஐயா கட்டுரையாளரே! சிங்கூர் கார் நந்கிகிராம் போனது எப்போது?

  11. கண் says:
    16 years ago

    ஐயா சாமிக்க்கண்ணு,
    மாவோயிஸ்டுக்களைப் பார்த்து அம்பானியின் வீட்டு முற்றத்திலிருந்து அமரிக்க ஏகாதிபத்திய அடிவருடிகள் எனக் கூச்சலிடும் உங்களைப் போன்ற மார்க்சிஸ்டுக்களுக்கு ஈழப்படுகொலை எல்லாம் ரொம்ப “ஹெவி” . எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவீடு அம்பானியின் கோடிப்புறத்திற்குப் போய்ப் பாருங்கள் அங்கே மேற்கு வங்கம் தெரியும். இந்திய அதிகார வர்க்கம் செய்யும் இனப்படுகொலை தெரியும்.
    இன் நல்லிணக்கத்தை கொலை செய்யும் சிங்கள பெளத்த மேலாதிக்கத்துடனும் கொலைசெய்யப்படும் அப்பாவித் தமிழர்களுக்கும் இடையில் அல்லவா கோருகிறீர்கள். உங்கள் ராஜபக்சேவுக்கு இனப்படுகொலையை நிறுத்தச் சொல்லி ஒரு மின் அஞ்சலாவது போடுங்கள்.
    டாடா நானோ கார் ஒன்று வாங்கி ராஜபக்சே குடும்பத்துக்கு அனுப்பிவைக்கலாமே. எதற்கும் மேற்கு வங்க பாசிட் அரசிடம் போட்டு வைக்கவும்.

  12. raja says:
    16 years ago

    Some thoughts on post-war options:
    The LTTE was trusted to deliver the solution to the Tamil question. Whatever its
    shortcomings and faults, the LTTE effectively internationalized the Tamil struggle. But
    today, the entire Tamil people are orphaned and have been reduced to the status of slaves
    of Colombo because of the fall of the Tigers.
    At the risk of stating the already known, the LTTE led the Tamil resistance by the barrel
    of its gun. Scoring some spectacular victories on the battlefield, the Tigers in course of
    time seemed to slip into a state of complacency and took the enemy for granted. They
    failed to acknowledge their own weaknesses and did not properly assess the enemy’s
    strengths.
    One can list out many factors that led to the destruction of the LTTE, which in effect now
    meant the destruction of the Tamil resistance because the Tigers had converted the
    struggle into a conventional war–through heavy artillery, Sea Tigers and air power–
    supplemented by guerilla strikes and suicide attacks, rather than pursuing a political
    campaign supported by militancy.
    In any case, this is no time for postmortems and to debate wastefully on the mistakes of
    the Tigers that led to this orphaning of the Tamil people.
    There is now an urgent need to provide an umbrella of shelter, a hand of support and a
    shoulder for consolation for the thousands of Tamil people displaced by the war and
    spending miserable time in the IDP camps of Vavuniya. Also, we have thousands of
    Tamil people in the Diaspora spread across the world, who must be feeling not only
    voiceless but also confused about the future course of the Tamil question.
    We must address these two critical areas crying for attention. This is the call of the
    hour—kaalaththu kattaayam. The only solution is to bury all the differences and come
    under a coalition to work towards a political solution guaranteeing safety, equal rights
    and dignified living for the Tamils in Sri Lanka.
    There may be differences between individuals and organizations arising from past deeds,
    some of them even violent. We must wipe all that unpleasant past away.
    The future coalition cannot afford to carry the burden of the bitter past.
    There are groups and individuals who have been with the government; there are groups
    and individuals who have been fighting the government; and, there have been groups and
    individuals who were neither here nor there. All these three segments functioned in a
    state of uncertainty and often fear.
    And there is the fourth group—the powerful Diaspora, who had supported the struggle
    with all its passionate involvement and commitment.
    Now the war is over. There is not a moment to lose. We must combine all our energies
    and resources to work for the future of the Tamil people. These enormous energies and
    resources that we have must not be wasted in continuing with mutual suspicion, acrimony
    and blame-game.
    We must first evolve a mechanism to carry out the future challenges. This could be a new
    TAMIL COALITION of all those organizations and individuals who are truly interested
    in setting aside their individual agendas and are willing to come under the TAMIL
    AGENDA.
    This Tamil agenda can be broadly divided into four segments. The first segment is caring
    for the IDPs in the camps. Fractured families must be united; medical facilities must be
    improved by getting medicines and the doctors/paramedics from within Sri Lanka, from
    India and from the Diaspora. No IDP must suffer/die for want of timely and
    comprehensive medical attention. Also, we must ensure proper infrastructure within these
    camps, including safe water (this is the biggest problem at the moment), toilets, schools
    and dry food that could be cooked in individual dwelling units.
    The second segment addresses the issues of resettlement and rehabilitation of the wardisplaced
    families. Here, we must make a BOLD statement, declaring that we will
    cooperate with the government and expect that the government will reciprocate
    positively.
    The third segment looks at livelihood issues, plus providing infrastructure, education,
    jobs, hospitals, etc.
    The fourth segment focuses on the political solution, devolution of authority. And
    demilitarization of the north and the east. We must point out to the government that
    devolving police powers to the Tamil provinces would enable us to have Tamil officers
    and men in our police stations, who will ensure that the law and order is properly
    maintained and at the same time, address the vital need for healing of the wounds of these
    past three decades for individuals, organizations and the Tamil society at large.
    The Tamil families, traumatized by the gruesome war, will certainly feel more
    comfortable and secure having police stations manned by their kith and kin in their
    vicinity rather than military camps. This demilitarization could be part of the political
    devolution being worked out with the government.
    All these four segments must be addressed simultaneously and not taken up one after
    another.
    The Tamil Coalition must provide a sober Tamil voice that takes into account the ground
    realities and work from thereon to achieve the Tamil rights.
    In its work for rehabilitation and resettlement of the Tamil people displaced by war, the
    Tamil Coalition will hope to get active and wholesome support from the Diaspora and
    also the International Community.
    The IC is now faced with a dilemma. While it can deal with the government in Colombo,
    the IC does not know with whom it should deal on the Tamil side. The Tamil Coalition
    will provide the answer.
    The Tamil Coalition may be administered by a Governing Council, having two nominees
    from each constituent organization. There could be a Chairman for a two-year term and
    this post may be given to all the organizations by rotation. Elections may be avoided as
    they may lead to creation of hostile lobbies and undermine the unity in the Coalition. The
    first Chairman may be Mr R. Sampanthan since he is an elder brother to all Tamils and
    has vast experience in the Parliament and outside. The Coalition may choose future
    Chairmen by drawing lots as that would avoid hostile contests.
    The Diaspora may have six seats on the Governing Council of the Tamil Coalition—two
    from the eastern hemisphere comprising Singapore, Malaysia, Thailand, Australia, etc;
    and four seats for the western hemisphere comprising EU, Africa, UK, USA and Canada.
    The refugee community in India may be given one seat.
    It is absolutely necessary for the Tamil Coalition to listen to the Diaspora and give it
    prominent play in the evolution of the Tamil solution. The Diaspora was not consulted
    enough until now and had only been milked for funds. The Diaspora has a huge reservoir
    of fantastic human resources. These should be tapped for working on the Tamil
    solution—again, in a spirit of accommodation, setting aside all the past differences.
    There is not a moment to waste and the many Tamil leaders I have spoken in recent days
    endorse this. Any delay in creating this Tamil Coalition may cause irreparable damage to
    the Tamil cause at a time when the decimation of the LTTE has caused a scary void.
    Current Scenario on the ground
    Currently the Sri Lankan government is in planning stage to colonize the entire Vanni
    region by establishing huge military bases in Killinochi and Mullitheevu and
    subsequently move military families in adjacent regions to marginalize Tamil population
    in the traditional Tamil homeland.
    Tamil Diaspore must get together quickly to act through diplomatic channels to prevent
    such colonization and avoid Tamils become slave of Sinhala politicians.
    What is next?
    To make our voice strong and gain some level of political support from Capitals of the
    world, the 800,000 + Tamil Diasporas from New Zealand to California must UNITE
    together. The goal should everyone be in a single umbrella to demonstrate to the
    international community that we are ready to work with them to end long running crices
    of South Asia.
    What should the reader do next?
    Share this article with everyone you know of and discuss/debate the ideas presented here.
    Form yourself small groups in the region where you live. Someone will come and unite
    all these groups to form one single umbrella of Tamil coalition as mentioned about. The
    800,000 Plus voice is much stronger than many thousand small voices.
    Also be aware and cautious of malicious elements of the Sri Lankan government and
    certain organizations of other governments which are motivated to divide Diasporas and
    keep international pressure away on the atrocities inflicted on our people. We hope this
    article will ignite the thought process of Tamils for better future of our people.
    Thank you.

  13. kajendren says:
    16 years ago

    தங்கள் கருத்துக்கள் உண்மைகளை மக்களுக்கு உணாத்துவதாக உள்ளது. நன்றி கஐன்

  14. ஏகலைவன் says:
    16 years ago

    யார் என்ன கூறினாலும் ஈழதமிழர் படுகொலைக்கு காரணம் தெலுங்கனான கருனாநிதிதான் மத்திய
    அரசுக்கான ஆதரவை விலக்கி இருந்தால் இனப்படுகொலை நடந்திருக்காது தமிழ்நாடு சட்டசபைக்கான
    ஆதரவை காங்கிரஸ் விலக்கி இருந்தால் புதிய தேர்தல் வந்தால் கூடி தி மு கா 40 இடத்திலும் வென்று
    சாதனை படைத்திருக்கும் ஆனால் தெலுங்கனான கருனாநிதிக்கு ஏன் தமிழர் மீது அக்கறை இது கர்நாடகியான ஜெயலலிதாக்கும் பொருந்தும் 3 கோடி மக்களை வைத்திருக்கும் அ இ அ தி மு க தமிழ்நா
    ட்டையே இஸ்தம்பிதனிலைக்கு கொண்டுவந்திருந்தால் இனப்படுகொலை நடந்திருக்காது இவளவத்திற்கும் காரணம் தமிழ் நாட்டை தமிழன் ஆட்சி செய்யாத்து தான் தமிழ்நாட்டை எப்போது
    தன்மான தமிழன் ஒருவன் ஆட்சி செய்கிறானே அப்போது தமிழனுக்கு மூன்று நாடு கிடைக்கும்
    பாண்டிச்சேரி தமிழ்நாடு தமிழீழம் தமிழ் நாட்டில் பலர் இனம் வேறாக இருந்து தமிழன் என்று நடிக்கிறார்
    கள் இவர்கள் எப்போது தமிழன் இல்லை என்று தமிழருக்கு தெரிகிறதே அப்போழுது தான் தமிழனுக்கு
    விடிவு

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...