ஞானம்(எம்.ஆர்.ஸ்டாலின்)-பிள்ளையான் |
வன்னியில் மனிதக் கொலைகளின் அகோரம் தந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் முற்றாக விடுபட்டிராத ஜுலை 2009 இல் வெளியான கட்டுரை. காலத்தின் அழுத்தத்தால் மீள் பதிவிடுகிறோம்.
Published on: Jul 5, 2009 @ 17:00
சில நாட்களுக்கு முன் என் நண்பர் ஒருவர், மிகவும் என்னோடு குறைபட்டுக் கொண்டார். இம் முறை நடந்த இலக்கிய சந்திப்புக்கு நான் வரவில்லையென்றும் , எதிர்பார்த்த எவருமே சமூகம் தரவில்லையெனவும் கவலைப்பட்டார். நண்பருக்கு அவரின் கவலை நியாயமாக இருக்கலாம். எமக்கு? என்ன செய்வது ?
நண்பரிடம் கேட்டேன்; நான் மற்றும் நீங்கள் எதிர் பார்த்தவர்கள் இலக்கிய சந்திப்பை நிராகரித்ததிற்கு என்ன காரணமாக இருக்கும்? யோசித்துப்பார்த்தீர்களா என்றேன். இனியாவது வீட்டிற்கு சென்று ‘நிதானமாக’ இருக்கும் நிலையில் யோசியுங்கள் எனக் கூறினேன்.
90 களில், புகலிட இலக்கிய அரசியல் களம், ஒரு தேடலை நோக்கிய ஆரோக்கியமான ,அனைத்து வகைப்பட்ட சிந்தனைப்போக்குகளிலும், ஆர்வமும் விமர்சன ரீதியான கருத்தாடல்களும் கொண்ட சூழலை தோற்றுவித்திருந்தது. தமிழ்தேசிய விடுதலை இயக்கங்களில் ஏற்பட்ட பல்வகைப்பட்ட முரண்பாடுகள் , தோல்விகள் , விழ்ச்சிகள் , புலம்பெயர்ந்த நண்பர்களை இவற்றிற்கான காரணங்களை நோக்கிய தேடலாக , விமர்சன ஆய்வுகளாக ,தங்களுடைய சுயவிமர்சனங்களாக வெளிக்காட்ட இக் களங்களை இவ் வெளிகளை பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் அமையப்பெற்றிருந்தது
இக்காலம் பல்வேறு சிறு சஞ்சிகைகளை , சந்திப்புக்களை , விவாத கருத்தாடல்களை உருவாக்கின. குறிப்பாக சுவீஸ் நண்பர்களின் மனிதம் குழு , கனடா நண்பர்களின் தேடகம் முதலானவற்றின் செயல்பாடுகள் அர்த்தம் கொண்டதாக அமைந்திருந்தது. வன்முறைகளுக்கு எதிரான அவர்களின் மனோபாவம் , ஜனநாயக அக்கறை , மனித விழுமியங்கள் மீதான நேசிப்பு , இவற்றை நண்பர்கள் வாழ்விலும் செயலிலும் நேர்மையாக உண்மையாக தொடரவேண்டும் என்ற போராட்ட முனைப்பு , நண்பர்கள் மத்தியில் ஊக்கம் மிக்கதாக அமைந்திருந்தது.
தாயகத்தில் அனைத்து தரப்பினராலும் மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரங்களை மீட்க்கும் அவா எழுத்துக்களிலும் ,பேச்சுகளிலும் வெளிப்பட்டன. இயல்பாகவே நண்பர்கள் ஒடுக்கப்ட்ட மக்களின் அரசியல் , பொருளாதார , சமூக விடுதலை நோக்கிய பார்வை கொண்டவர்களாக இருந்தார்கள்.
இக் காலங்களில் தோழர் பரா போன்ற சமூக அக்கறையாளர்களினால் முன் முயற்சினால் தொடரப்பட்டுக்கொண்டிருந்த இலக்கிய சந்திப்புக்களில் இவ்வகைப்பட்ட நண்பர்களின் தோழர்களின் பிரசன்னம் இயல்பாய் அமைந்திருந்தது. ஆரோக்கிமான கருத்தாடல்கள் நடந்தன.
இக்காலங்களில் புகலிடச் சூழலில் குறிப்பாக ஐரோப்பாவில் குறைந்தது 25 சிறு சஞ்சிகைகளாவது வந்திருக்குமென நினைக்கிறேன். இலக்கிய சந்திப்பு மக்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் எதிர்த்தியங்கும் மாற்று தளமாக செயல்பட்டது. எனினும் இவ் இலக்கிய சந்திப்புக்குள் திரைமறைவில் கண்ணுத்தெரியாமல் ஒரு அதிகார போட்டியும் , ஆளுமையை யார் செலுத்துவதென்ற பனிப்போரும் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. இவற்றின் சூத்திர தாரிகளாக ‘வெறும் இலக்கியவாதிகளாக’ புகலிடத்தில் அந்நேரத்தில் ‘அனைத்து செளபாக்கியங்களுடனும்’ வாழ்வை வளம்படுத்திக்கொண்டிருந்த ஒரு சிலர் இருந்தனர். இவர்கள் சமூக அக்கறை அற்று தங்கள் பிழைப்புவாத வாழ்வுக்காக எந்த சரணாகதியையும் யாருடனும் செய்யத்தயாரானவர்களாக இருந்தார்கள். இயல்பாக இடதுசாரி எதிர்ப்பாளர்களாகவும் இவர்கள் இருந்தனர்.
காலம் செல்லச் செல்ல இவர்களின் ஆளுமை அதிகரிக்க
EPDP அமைப்பாளர் ராமமூர்த்தி, ராகவன் |
ஆரோக்கியமான கருத்தாடல்கள், விவாதங்கள் குன்றிப்போய் தனிநபர் விவாதங்களாக குறுகத் தொடங்கியது. வெறுப்புற்ற பல நண்பர்களும் , தோழர்களும் இலக்கிய சந்திப்பைவிட்டு ஒதுங்கத் தொடங்கினர். எனினும் சமுக அக்கறை கொண்ட தோழர்கள் பரா ,கலைச்செல்வன் ,புஸ்பராஐh போன்றவர்கள் இந்த பிழைப்புவாத நபர்களோடு மல்லுக்கட்டி , மல்லுக்கட்டி இலக்கிய சந்திப்பை தொடர்ந்த வண்ணம் இருந்தனர். மாற்றுக்கருத்துக்கான உரையாடல்களுக்கான தளமாக தக்கவைத்துக் கொள்வதில் மிகுந்த போராட்டத்தை எதிர்கொண்டனர்.
இவ் மூன்று தோழர்களின் அடுத்தடுத்த மரணங்கள் இவை தந்த வெற்றிடம் சுயநல சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. அதன் பின்னான இலக்கிய சந்திப்பு தனக்கான அடையாளங்களை முழுமையாக இழக்கத் தொடங்கியது. இதன் முடிவு வன்முறையாளர்களின், அரச ஆதரவாளர்களின் ,வன்முறை குழுக்களின் ஆராதிப்பாளர்களின் உறைவிடமாக தொங்கி நிற்கிறது.
இன்று, இலக்கிய சந்திப்பு பரிதாபகரமான தன் இறுதி நிலையை ஈபிடிபியின் பிள்ளையானின் அரச எடுபிடிகளின் சந்திப்பாய் மாற்றி தன் விழ்ச்சியை பறைசாற்றிக் கொண்டது.
மக்களின் மீதான அனைத்து வன்முறைகளையும் எதிர்க்கின்ற , ஜனநாயக விழுமியங்களை நேசிக்கின்ற ,மானிட உரிமைகளை கோருகின்ற நாங்கள் எங்கஙம் ஒடுக்குமுறையாளர்களோடும் , அவர்கள் பிரதி நிதிகளோடும் ஒன்றாய் அமர்ந்து மனிதநேயம் பற்றிப் பேசமுடியும். ?
கருணாவின் முன்னாள் கூட்டாளி இன்னாள் பிள்ளையானின் ஆலோசகன் பிள்ளையானின் ரி.எம்.வி.பி யின் ஐரோப்பிய அமைப்பாளன் சின்னமாஸ்ரர் என்ற ஸ்ராலினின் அருகமர்ந்து மனித விழுமியங்கள் பற்றி மனித உரிமைகள் பற்றி ஜனநாயகம் பற்றி எவ்வாறு பேசுதல் முடியும். ?
திருகோணமலையிலும் ,மட்டக்களப்பிலும் சின்னஞ்சிறு பாலகிகள் வர்ஸா , தினுஸா இருவரினதும் மீதும் செலுத்தப்பட்ட வன்முறைகளினதும், கொலைகளினதும் துயரம் தந்த ஈரம் மாறு முன்
பிள்ளையானின் ஆலோசகனோடு அருகிருந்து மனித நேயம் பற்றி பேசும் கொடுமையை நாம் என்னவென்பது?
எவ்வாறு சித்திரவதைக்குள்ளானவர்களும், சித்திரவதையாளர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து
சமாதானம்பற்றியும் ஜனநாயகம் பற்றியும் பேச முடியும்? ஒடுக்குமுறையால் பிதீயூட்டப்பட்ட இலங்கையில், வெளிப்படையாக பேசுவது பற்றிய பயம் இன்றளவும் எங்கெங்கும் நிறைந்திருக்கும் தருணத்தில், ஒடுக்குமுறையாளர்களின் ஏகபிரதிநிதிகளோடு எவ்வாறு உண்மைகளை, மனித உரிமைகளை பேணமுடியும்?
இலக்கிய சந்திப்பில் ஏன் நான் கலந்கொள்ளவில்லை, ஏனைய நண்பர்கள் ,தோழர்களின் வருகையும் வெறுமையாகிவிட்டதே என்ற அந்த நண்பரின் ஆதங்கத்துக்கு இவை சமர்ப்பணங்கள்!
துடைப்பானுக்கு மூன்றாவது மனிதன் எம். பெளசர் ஈபிடிபி ஆள் என்றது அதிர்ச்சியாக இருக்கலாம். எங்களுக்கு அப்படியில்லையுங்கோ. துடைப்பானின் இழிச்சவாயை பயன்படுத்தி நாட்டில் எம். பெளசர் மூன்றாவது மனிதன் சஞ்சிகையை கொண்டுவந்த நேரத்திலும் பெளசர் ஈபிடிபிதான். துடைப்பான் ஏமாந்த இழிச்சவாயனாக இருந்திற்கு இப்ப அழுது என்ன கிடைக்கப்போகுது. இனியாவது கவனமாக இருக்கப்பாருங்கோ. பெளசருக்கு அரசியல் ஒரு பிழைப்புங்கோ. சின்னமாஸ்ரர் சரவணன் ராகவன் நிர்மலா நித்தியானந்தம் இந்தக் கூட்டு கொள்கைகூடடு இல்லைலேங்கோ. இது கொள்ளையடிக்க தமிழ் மக்களை சுரண்ட அரச கூலிகளாக இங்க தொழில் பண்ண நடக்கும் சந்திப்புங்கோ. முட்டாள்தனமாக துடைப்பான் இலக்கிய சந்திப்பை ஏதோ எல்லாம் எண்ணி கற்பனை பண்ணுது. இதால எந்தவித பிரயோசனமும் இல்லேங்கோ. அரச எடுபிடிகளான இவர்கள் காட்டில் நல்லாய் மழை பணமாய் கொட்டுது.
இலக்கியச் சந்திப்புக்குளளும்> இன்னொரு புலியாகியுள்ள மகிநதாவின் மைநதர்களும்> மகிந்த சிந்தனையாளர்களும் மதிஉரைஞர்களும் உட்புகுந்து விட்டனரோ? இனிமேல் இது கிழக்கின் விடிவெள்ளிக்கான சந்திப்பாகத்தான் இருக்கும்!
//இவற்றின் சூத்திர தாரிகளாக ‘வெறும் இலக்கியவாதிகளாக’ புகலிடத்தில் அந்நேரத்தில் ‘அனைத்து செளபாக்கியங்களுடனும்’ வாழ்வை வளம்படுத்திக்கொண்டிருந்த ஒரு சிலர் இருந்தனர். இவர்கள் சமூக அக்கறை அற்று தங்கள் பிழைப்புவாத வாழ்வுக்காக எந்த சரணாகதியையும் யாருடனும் செய்யத்தயாரானவர்களாக இருந்தார்கள். இயல்பாக இடதுசாரி எதிர்ப்பாளர்களாகவும் இவர்கள் இருந்தனர்// துடைப்பான்.
இந்த வியாக்கினம்தான் எனக்கு துடைப்பான் மீது சினத்தை தருகிறது. விசயத்தை போட்டு உடைக்கவேண்டியதுதானே. துடைப்பான் மேலே எழுதியுள்ள பிழைப்புவாத கும்பலின் பிதாமகன் பேர்லின் சுசீந்திரன் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம். இந்த பிழைப்புவாதியின் பெயரைச் சொல்வதற்கு துடைப்பான் ஏன் பயப்பிட வேணும். இராயாகரனின் தமிழரங்கத்தில் இன்றுபோய் பாருங்கள் சுசீந்திரனின் பொட்டுப்புடுங்கள்களை . துடைப்பானுக்கு ஒரு வேண்டுகோள் இந்த பிழைப்புவாதிகளின் ஒட்டுண்ணிகளின் பெயர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து அம்பலப்படுத்துங்கள். முடியாவிட்டால் பொத்திக்கொண்டு இருங்கள்.
நன்றி.
சின்னா மாஸ்டரின் சிங்கார எழுத்துகளும் முட்டாள் முதலமைச்சரின்……..
http://www.kilakku.com/?p=3449
கிழக்கு மாகாணத்தின் இப்போதும் பாலியல்பலாத்காரங்களும் கொலைகள் கொள்ளைகள் கப்பம் ஆட்கடத்தல் நடக்கிறது. பிள்ளையானின் ஆட்கள் இதனோடு சம்பந்தப்பட்டிருப்பது வெளிப்படையானது. தினுசா / வர்சா என்ற சிறுமிகளின் படுகொலைக்கு காரணமானவர்கள் பிள்ளையானின் மிக நெருக்கமான ஆட்கள். விடயம் வெளியில் வரும் என்பதற்காக அவர்கள் எல்லோரும் பொலிசாரினால் கொலை செய்யப்பட்டனர். இந்த அட்டூழியங்கள் நடந்துகொண்டிருந்த காலத்தில் இந்த சின்ன மாஸ்ரர் ஸ்ராலின் அங்கு பிள்ளையானோடு ஒட்டிக்கொண்டு இருந்தார். இவர் இந்த இலக்கிய சந்திப்பில் பங்கு கொண்டபோது இவரிடம் இந்த படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல் கப்பம் கொள்ளை பற்றி யாராவது கேள்வி எழுப்பினார்களா. ? அறிய விரும்புகிறேன்.
புலி ராஜாவும் மகிந்த நிம்மியும் தளபதி ராகவனும் ஈபிடிபி சுமதியும் கருணா ஸ்ராலினும் அருகருகே அமாந்து தமிழா;களையும் தமிழ்த் தேசியத்தையும் கொலை செய்வது எப்படி என்றும் கொள்ளையடிப்பது எவ்வாறு எனவும் ஆய்வு செய்துள்ளார்கள். சீரிய ஆய்வுகளையும் ஜனநாயக மீறல்களையும் வெளிக் கொணா;ந்த இலக்கிய சந்திப்பு ஒன்றுதில்லாதவா;களின் கூடாரமாகிவிட்டது.
துடைப்பானுக்கு சந்திப்பு எப்படி ஆரம்பித்தது என்று தெரியுமா………….. புலம்பெயர்நாடுகளில் குறிப்பாக யேர்மணியில் சஞ்சிகைகள் வந்து கொண்டிருந்த காலம். தூண்டில் குழுவும் அறுவை ஆசிரியரும் வாரம் தோறும் சந்தித்து கலந்துரையாடுவார்கள். இந்த உரயாடல்களில் எழுப்பப்ட்ட கேள்விகள்தான்நாளடைவில் இலக்கிய சந்திப்பு உருவாக ஏதுவாக அமைந்தது. ஆசிரியர்கள், வாசகர்கள், ஆக்கதாரர்களை ஒன்றினைத்து ஆரம்ப சந்திப்பு – வெகுஜனம், தூண்டில், அறுவை. சிந்தனை.இன்னாள் தேனி, இதன்பிறகுதான் சுசீந்திரனை அறிமுகப்படுத்தியது அறுவை ஆசிரியர். பேர்லின் சந்திப்புத்தான் தள்மாக அமைந்தது சுசீந்திரனுக்கு, அக்கலகட்டத்தில் புலியின் பலமான எதிர்ப்பையும் முறியடித்து காத்திரமான சந்திப்பாகநடந்துகொண்டிருந்தது. நீங்கள் கூறியவர்கள் பிறகு இணைந்து கொண்டவர்கள். காலப்போக்கில் இச்சந்திப்பை தங்கள் சுய லாபங்களுக்காக பயன்படுத்தத் தொடங்கினார்கள். இதில் பராவிற்கும் பங்குன்டு. இதன்பிறகு ஆரம்பித்தவர்கள்.அக்கறையுள்ளவர்கள் வெளியே வ ந்தார்கள்
வணக்கம்
துடைப்பான்
உங்களுக்கு புலம்பும் வேலையை மட்டும் வரலாறு தரவில்லை. இலக்கியச் சந்திப்பில் முதன்மைப்பணியாற்றிய கலைச்செல்வன் பரா என்று பட்டியல் போடிருக்கிறீர்கள்.
அதில் ஓரளவு சில உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதை நீங்கள் தெரியாதவரல்ல.
அவர்களின் துணையுடன் சுசீந்திரன் போன்றவர்கள் இலக்கியச் சந்திப்பை பயன்படுத்த தங்கள் விருப்பத்துக்கு அடுத்தடுத்து நடத்த முன்வந்தததை நிங்கள் ஏன் மறந்து விட்டடீர்கள்.
சரி உங்கள் கடமையாக இலக்கியச் சந்திப்பை இந்த முறைகெட்டவர்களின் மக்கள்விரோத நிலையில் இருந்து மீட்கும் கடமையாக நீங்கள் நினைக்கவில்லையா?
துடைய்ப்பான் என்றாலும் மனச்சாட்சி ஒன்று உண்டே?
thanks for the article. sorry for writing in English. there is a distorted story about Illaikiya santhippun going on around us. Actually this idea about santhippu first proposed by Peter jajaratnam (Herne) Thoondil and mainly partheepan found this idea very good and initiated the first meetin at Herne (GERMANY). Many attended this meeting. Among them : sinthanai , thoondil, puthumai, Penkal kural, aruvai, these are consided progressive groups. there were also some Conservative groups, later these people retreated. At the beginning Peter+Para+ Parathy+ parthipan, mallika, uma, ranjini, nirupa aruvai played main role in shaping the santhippu. Others like Nadarajan , berlin Susenthiran , nithiyanthan master , kalaichelvan, sugan jluxmi, ashok joined later. NOW Santhippu degenerated and is run by some regime loyalist, some among them use “dalitism for their personal gains. that is very pity
thanks for the article. sorry for writing in English. there is a distorted story about Illaikiya santhippun going on around us. my research about santhippu based only on oral conversation among some founding members. it may have some error. Actually this idea about santhippu first proposed by Peter jajaratnam (Herne) Thoondil and mainly partheepan found this idea very good and initiated the first meeting with the help of peter at Herne (GERMANY). Many attended this meeting. Among them : sinthanai , thoondil, puthumai, Penkal kural, aruvai, these are coincided progressive groups. there were also some Conservative groups, later these people retreated. At the beginning Peter+Para+ Parathy+ parthipan, mallika, uma, ranjini, nirupa aruvai, ragavan played main role in shaping the santhippu. Others like Nadarajan , berlin Susenthiran , nithiyanthan master , kalaichelvan, sugan jluxmi, ashok, murali joined later. NOW Santhippu degenerated and is now run by some regime loyalist. some among them use “dalitism” for their personal gains. that is very pity. You people must find a way to save the santhippu or Do you think it is too late?
ப.வி.ஸ்ரீரங்கன்//மகிந்த அரசினது அரசியல் நிகழ்ச்சி நிரலை புலம் பெயர் மக்களுக்குள் திணிப்பதிலும், அதனை உடைக்க முனையுஞ் சக்திகளைப் பிளப்பதற்கும் நித்தியானந்தன்-ராகவன்,நிர்மலாக் கூட்டத்தோடு நோர்வே சரவணன், பேர்ளின் ந.சுசீந்திரன் குடும்பமும் முழுமூச்சாகவே முனைவது அவர்களது இன்றை எஜமானர்களது தெரிவுக்கு அடிபணிவதாகவே இருக்கிறது……//
http://srisagajan.blogspot.com/
இலக்கிய சந்திப்பு இருந்த கொஞ்ச நஞ்ச ஐனநாயக களம்
என்ற இடத்தையும் அரசாங்க கைக் கூலிகளிடம்
பறிகொடுத்துவிட்டது. இதற்கு முழு சூத்திரதாரிகள்
சரவணன் /சுசீந்திரன்/ சுட்காட் சிவராசன்.
அரசாங்க அடிவருடிகாளா பிழைப்பு நடத்துவதற்கு
இலக்கிய சந்திப்பை அடகுவைத்துவிட்டார்கள். இங்கு(நோர்வே)
நடந்த சந்திப்பு இங்குள்ள இலக்கியவாதிகள் ஐனநாயக சக்கதிகள்
எவரும் போகவில்லை. இளவாலை விஐயந்திரன்/ பேராசிரியர்
சண்முகரெத்தினம்(சமூத்திரன்) / தமயந்தி / பானுபாரதி /கவிதா / தயாநிதி /
நோர்வே நக்கீரன் போன்ற எவரும் அரசாங்க கைக்கூலிகளின் இந்த சந்திப்பை
நிராகரித்துவிட்டார்கள். வெளியிலிருந்து ராகவன் கொம்பனி /
சுசீந்திரன் கொம்பனி/ பிள்ளையான் ரசிகர் மன்றமாக மாறிவிட்ட
தலித் முண்னனி என்ற பிரான்சு கூலிக்குழுக்காறர்கள் மாத்திரமே
வந்து சோந்தார்கள். மொத்தத்தில் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை
விசுவாசமாக நிறைவேற்றுகிறார்கள்.
இவ்வளவு கூத்துக்களும் அரங்கேறியுள்ளதை உண்மையில் உங்களது இக்கட்டுரையைப்படிக்கும்வரை அறிந்திருக்கவில்லை.
இருபது இல.சந்திப்பூக்கள்வரையில் கலந்துகொண்ட எனக்கு இம்முறை
அழைப்பே அனுப்பப்படவில்லையே?
எல்லாம் மர்மமாகவே உள்ளது தோழா.
ஆயிரம் அயிரம் வரயாற்றைத் திரித்துவிட்டதாக மகாவம்சத்தில் குற்றம் சொல்ல முனையும் அறிவியல் தமிழர்களே! இலக்கியச் சந்திப்பை முதல் சந்திப்பின் இலக்கு நோக்கிக் கொண்டு செல்ல காரணமான சிலர் உயிரோடிருக்கும் போதே சாpத்திரம் திரிவு படுத்தப்பட்டிருக்கிறது என்றால் இது அரை வேக்காட்டுத்தனமல்ல கட்டுரை ஆரையோ குற்றம் சாட்ட புறப்பட்ட போது ஆரம்ப உண்மைகளையும் அரசியல் இலகியத்திலிருந்து பிரித்தப் பார்க்கக் கூடாது என்று வாதிட்டவர்களும் மிருகங்களின் நுளைவை இனங்கண்டு தடுத்தவர்களும் யார் யார் என இனங்காட்ட துடைப்பான் தவறிய உண்மை உண்மை தான். முதன் முதலில் இலக்கியச் சந்திப்பை சந்தித்த எண்ணிக்கைக்கு தக என்.ஜி.ஓ க்களிடம் பணம் பண்ணும் (அதுவும் ஆயிரம் ஆயிரம் மார்க்குகளாக) இந்த யுக்தி பேர்லினில் உள்ள இன்றைய உலகப் பிரபல்யம் ஒன்றின் புத்திசாலித் தனந்தான். வர்த்தக உலகத்தில் இதுவும் விற்கப்பட்ட நிலையில் நாம் வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை.. மன்னிக்கவும் நானும் ஒரு ஆரம்பம்.
புலிகளின் நடவடிக்கைகளால் நேரடியாகப்பாதிக்கப் பட்டவர்கள், அவர்களின்
அரசியல் நகர்வுகள், அதீத தன்னம்பிக்கை , மாற்றுக்கருத்துகளுக்கு இடமின்மையாகிய காரணிகளால் புலிகளை எதிர்விமர்சனம் செய்தவர்களை புரிந்துகொள்ளமுடிகிறது. அவர்களிடம்கூட புலிகளின் அழிவையிட்டான பச்சாதாபம், அரசுடன் பேரம்பேசும் வலுவுடன் தமிழர்களுக்கென்று இருந்த ஒரு ஸ்திரமான ஆயுதப்படை தகர்ந்துபோய்விட்டதே என்னும் ஆற்றாமை இன்னும் இருப்பதைப் புரியமுடிகிறது.
புலிகளின் எதிர்ப்பாளர்கள் அரசின் ஆதரவாளர்களாகவேண்டிய விசித்திர அரசியலையும்
மகிந்தசிந்தனையின் பூசாரிகளுக்கு ஆரத்தி சூடும் இந்த ப்றூட்டஸ்களையும்
என்னால் புரியமுடியவில்லை தோழா!
ராகவன், நிர்மலா, சோபாசக்தி, சுகன், சுசீந்திரன் உள்ளிட்ட இக்கூட்டம் எப்போதுமே இடதுசாரியத்திற்கு எதிரான வலது நிலைப்பாட்டையே முன்வைத்தவர்கள். இவர்கள் எப்போதுமே ஏதாயினும் ஒரு அதிகாரத்தின் சார்பு நிலை கொண்டே இயங்குபவர்கள். இவர்களிடம் வலதுசாரிய நிறுவன அமைப்புத் திறன் உண்டு. அதனால் அவர்கள் அரசு சார்பு நிலையை முன்வைத்து இயங்கும் போது வெற்றி காண்கிறார்கள். மறு புறத்தில் இடது கருத்துக்களோடு இயங்கும் அசோக், கருணாகரமூர்த்தி போன்றோர் இடதுசாரி வேலைத்திட்டம் ஒன்றை முன்வைது இயங்குவதற்கான அரசியல் சூழல் இல்லாதிருந்ததால் வலது சாரிகளின் கைகளில் இலக்கியச் சந்திப்பு பிழையாக வழி நடத்தப்பட்டுள்ளது. புலிகள் உள்பட அனைத்து வலது சாரிகளும் இவ்வாறு தான் தலைமையைக் கைப்பற்றினார்கள்.
புலம்பெயர் நாடுகளிலுள்ள இடது சாரிகள் பொதுவான வேலைத் திட்டம் ஒன்றின் அடிப்படையில் இணைவதன் ஊடாகவே இந்த வலது சந்தர்ப்ப வாதிகளை எதிர்கொள்ள முடியும். – தங்கராஜ்
) Para Master ( better in his latter part) also played a major roll in pushing santhippu into the Regime loyalist camp.This is because many true santhippu-activists have started to leave the santhippu in 90s on wards.
நோர்வேயில் இடம்பெற்ற இலக்கியச் சந்திப்பு ஒரு இலக்கியம் நோக்கிய பயணமாக இருக்கவில்லை. தனிப்பட்ட தன் காழ்புணர்வுகளையும் தன்னைப் பிரசன்னப்படுத்தும் ஒரு கூட்டமாகவே இருந்தது. நானும் கலந்து கொண்டிருந்தேன். நோர்வே நண்டபர்களுடன் பின் தொடர்பு கொண்டபோது தான் தெரிந்தது. இது யேவிபி ன் கைக்கூலியான சரவணனின் திருவிளையாடல்கள் என்று. அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் புலியாம் அவதான் புலிகள் இலக்கியச் சந்திப்பினுள் நுளைவதற்குக் காரணமாம். இலக்கியச் சந்திப்பைச் சாட்டி இப்புலி நண்பரும் சரவணனும் பணம் பண்ணிநார்களாம். புலிநண்பரின் பெயர் சித்தி என்றும் சொன்னார்கள். இலக்கியச் சந்திப்பானது இனிவரும் காலங்களிலாவது வழிபாறிப்போகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
சித்தி போன்ர சருகுப்புலிகல் நித்தியானந்தன், ராகவன்,நிர்மலாக் கூட்டத்தோடு அரசின் ஆதரவாளர்களாக மாரவேண்டிய சந்தர்ப்பவாதம்.புலிகள் பிலைத்துக் கொல்வார்கல்.
தமிழ் தாதாக்களின் ஒரு பகுதி இந்தியாவில் அட்டகாசம் பண்ண மற்றப் பகுதி நோர்வேயில் அடித்த லூட்டி தான் இது.
அதுவும் ……..நிர்மலா தலைமையில் ………. இதை எல்லாம் போய் இலக்கியச் சந்திப்பு என்டு நீங்கள் வேற……..
தாதாக்களின் ஒன்று கூடல் என்று நாகரீகமாவது சொல்லியிருக்கலாமே?
ஏன் இலக்கியச் சந்திப்பைக் கலைத்துவிடுவதைப் பற்றி யோசிக்க்கூடாது?
அல்லது இலக்கியச் சந்திப்பை தொடங்கிய முன்னணியினரின் கருத்து நிலைக்கும் இன்றையை அதன் நிலைக்குமுள்ள வேறபாட்டைக் கருதி அதை வேறு வடிவத்துக்கு மாற்றக்கூடாது?
உதாரணமாக மகிந்த சகோதரர்களின் ஐரோப்பியக் கட்சிக் கிளையாக மாற்றலாம். அதனால் பலருக்கு நேரடியாக வரும்படி வரும் வாயப்பிருக்கிறது.
எதற்கு இலக்கியத்தையும் சீரழித்து அரசியலையும் சின்னாபின்னப்படுத்தி மக்களையும் அறிவுசார் செயற்பாடுகளில் சலிப்படைய வைக்கவேண்டும்?
துடைப்பான் போன்ற முன்னோடிகள் அடுத் நடவடிக்கையை யோசிக்க வேண்டும்.
துடைப்பான் போன்ற முன்னோடிகள் அடுத் நடவடிக்கையை யோசிக்க வேண்டும்.
நன்று நன்று.
யோசித்தல் நன்று
பின் யாசித்தல் நன்று
சும்மா இருந்து வம்பளத்தல் எவ்வளவு நன்றென்று சுயஇன்பம் காண்போருக்கு புரிவதில்லை..
ஆகா என்ன சுகம் என்ன சுகம் (நன்றி றஜீன்குமார்)