காந்தியம் அமைப்பின் செயற்பாட்டாளரும், புளொட் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினருமான குமரன் என்று அழைக்கப்படும் விஸ்வலிங்கம் பொன்னுத்துரை அவர்கள் இன்று மதியம் பிரான்சில் காலமானார்.
கடந்த ஓராண்டு காலமாக சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை எடுத்துவந்த இவர் யூலை 13, 2013 இல் பிரான்ஸ் சென் லூயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இடதுசாரி செயற்பாட்டாளரும், காந்தியம் அமைப்பின் செயற்பாட்டாளராகவும் அரசியல் பயணத்தை ஆரம்பித்த இவர் காந்தியம் அமைப்பின் யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – (PLOTE) அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினருமான இவர் குமரன் என கழகத் தோழர்களால் அறியப்பட்டு இருந்தார்.
தமிழீமிழ மக்கள் விடுதலைக் கழகம் ஆயிரம் ஆயிரமாக உறுப்பினர்களை உள்வாங்கிய அக்காலப் பகுதியில் தளநிர்வாகப் பொறுப்பும் குமரனிடம் வழங்கப்பட்டு இருந்தது. யாழ் மாதகல் பகுதியைச் சேர்ந்த இவர் தளத்தில் இருந்து பின் தளமான இந்தியாவுக்கு உறுப்பினர்களை அனுப்புவதற்கும் பொறுப்பாக இருந்தவர். அதனால் ஓட்டி குமரன் என்றும் அறியப்பட்டவர்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டு உறுப்பினர்கள் வெளியேறிய போது குமரன் தமிழீழ விடுதலை இயக்கதில் கொலைகளுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான உட்கட்சிப் போராட்டத்தில் குமரன் வெளியேறினார். மக்கள் சார்ந்த கட்சியோ செயல்பாட்டுத்தளமோ அற்றுப் போயிருந்த நிலையில் குமரன் உதிரியான அரசியல் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டார். குமரனுக்கு இனியொரு… வின் அஞ்சலிகள்.








அவருக்கு எங்கள் வீர அஞ்சலிகள்.அவரின் ஆத்ம சாந்திக்கு பிராத்திக்கழன்றோம்.
இலங்கையில் ‘வீரமக்கள் தின’த்ததை விமரிசையாகக் கொண்டாடிய PLOTஎன்கிற அமைப்பின் இணையத்தளம்(http://plote.co.uk/),இந்த ‘இருமல்காரன்’ இறந்தமை பற்றி மூச்சுக் கூட விடவில்லை.
உறவினரின் மரண அறிவித்தலில்(http://notice.lankasri.com/ta/obituary-20130718206584.html) PLOT பற்றிய செய்தியும் இல்லை.
Yeah we also salute him. PLOTE – nice name. Acronyms are not entirely American. I think Uma Maheswaran also must be from the Vellalar community like Panagoda Mahesawaran.
Dr. Sriskanda!சிறி என்கிற பேர் செங்குந்தர் ஆனால்,மகேஸ்வரன் என்ற பேர் வெள்ளாளர் ஆகும் போலிருக்கு.பேரை வைச்சு சாதி கண்டு பிடிக்கும் வல்லமைக்கு,உங்களுக்கு Dr. பட்டம் கொடுத்தாங்களோ?
I got my Ph.D. from a Dr. Donald Gabriel Dusanic – December 15, 1934 to November 28, 2011 – a Chicago Catholic that never went to church in Indiana, USA. He was a paarsitologist and a microbioloist.
For the new Northern provincial, we need elected people like late Ponnuthurai Annai. In coming election the nothern people have to select didicated people, not the politicians.
Who is this Ponnuthurai annan anyway?
Better you can ask late Dr. Rajasuntharam or “Ghandiyam’ David (now in India)
S0, without know who is this Ponnuthurai you are writing comments under this. Good for you Dr. Keep busy…
Alex Ravi, I have heard about that Dr. Rajasunderam. I never had anything to do with any of the Sri Lankan Tamil Associations ever.
கனகுலசிங்கம் தேநீர் கடையில் இருந்து அறிமுகமானவர் அமரர் பொன்னுத்துரை.
இன்று மறைந்த பொன்னுத்துரை போன்றோரை எமது மக்களிடையே நாம் காண்பது கடினம். கடந்த 30 ஆண்டுகளில் எம்மிடையே இருந்து வந்த அரசியல்… இராணுவ… தலையீடுகளினால் தொடர்… மனித… பொருளாதார… அழிவுகளை சந்தித்து, 2009 மே 19 உடன் இதற்கு ஓர் முடிவு வந்த நிலையில்… குண்டுச் சத்தங்கள்… எவரும் எங்கும் சுதந்திரமாக செல்ல உள்ள நிலையில்… 4 வருடங்களின் பின் இன்று வடமாகாணத்திர்க்கு ஓர் மாகாண அரசிற்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில்…
வடக்கு வாழ் மக்கள் இந்நேரம் சிந்தித்து தமது வாக்குகள் மூலம் சரியான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். சுயநலமிக்க மேடைப்பேச்சுக்களினால் மக்களைக் கவரும் அரசியல் வாதிகளை…. ஆயுத அமைப்புக்களில் இருந்து வரும் சுயநலமிக்க சந்தர்ப்பவாத போக்கிரிகளை… ஓரம் கட்டி, காந்தியத்தில் இணைந்து… வவுனியாவில் நிலை கொண்டு 77 கலவரத்தில் இடம் பெயர்ந்த மலையக மக்களின் வாழ்வாதார… குடியேற்றங்கள்… சிரமதானப் பணிகள்… என்று மக்களுடன் மக்களாக அவர்களின் சகல இன்ப-துன்பங்களில் இணைத்து செயல்பட்ட ‘செயல்வீரர்’ குமரன் என்று தோழர்களினால் அழைக்கப்பட்ட பொன்னுத்துரை போன்றோரை தமது வாக்குரிமை மூலம் தேர்ந்தெடுக்க வேண்ண்டும்!
போராட்ட அமைப்புகளின் திசை மாறிய உயிர் எடுப்பு… மனித விரோதப்போக்குகளினால்… தப்பியவர்கள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் அடைக்கலம் தேடிய நிலையில்… தனது மக்களுடன் ஒன்றாக இருந்து சேவை செய்ய வேண்டிய ‘செயல்வீரர்’ பொன்னுத்துரையும் புலம் பெயர்ந்து உதிரியாக பல விரக்திகளுக்கு மத்தியில் தன்னாலான அரசியல் செயற்ப்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.
‘செயல் வீரர்’ ‘மக்கள் தோழன்’ பொன்னுத்துரையின் ஆத்மா சாந்தியடைய தோழமையுடனான வீர அஞ்சலிகள்!
பிற்குறிப்பு:
‘செயல்வீரர்’ ‘மக்கள் தோழன்’ தாயகத்தில் இருந்திருந்தால் ஈழத் தமிழ் மக்களிற்கு என்று போராட வெளிக்கிட்ட ஏதாவது ஒரு அமைப்பினால் துரோகியாக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு இருப்பார்.
வெள்ளாளர்களில் இருந்து யாரும் போராட வரக் கூடாதா?
I think Uma Maheswaran also must be from the Vellalar community like Panagoda Mahesawaran.
Sakivara please do not take ones I say very seriously. The caste thing is a real private matter. Thank you. I think that Maheswaran should come out and enter democratic politics. Thank you.
தோழர்’ குமரனுக்கு அஞ்சலிகள். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை நேசித்ததுமட்டுமல்லாமல் அதற்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவும் செய்தவர். விடுதலைப் போராட்டம் திசை மாறியபோது வருத்தத்துடன் தானும் விலகிச் சென்றார். இருப்பினும் தான் நேசித்த> தன்னை நேசித்த தோழர்களுடன் தொடர்ந்தும் நட்பை பேணினார். எல்லா வகையிலும் குமரனின் இழப்பு சமூகத்திற்கானது. விடை தருகிறோம் ஆறாத் துயருடன்.
Mr. Rahavan, now it is your people and our people all over the world for all the Sri Lankan Tamils.
‘now it is your people” ” and our people” Dr, who are these people?
So, your people & Mr. Rahavan’s people are ‘only’ for ‘Sri Lankan Tamils’ NOT FOR SRI LANKAN ‘PEOPLE’?
Alex, I think the Singhalese will take on the Sri Lankan Tamils all over the world. I hear the British Secretary William Haig had told Honourable Ranil Wickremasinghe that what ever that you want to do you have to do it at your won expenses. They have lived her for 2,500 years with some 250 kings and queens.
Sri Lanka’s opposition leader says no war crimes charges can be brought against Sri Lanka as the country is not a party to Rome Protocol on crimes against humanity.
South Sudan and TGTE
“South Sudan did have connections with Transnational Government of Tamil Ealam (TGTE) so I pointed out that South Sudan should not officially recognise the TGTE,” Mr Wickramasinghe told the BBC.
At a time even the people in the north and east of Sri Lanka have voted for a political solution under a united country, he said, it is not suitable to consider solutions against that wish.
“Anybody can have any dealings with anybody but my point was that South Sudan should not officially recognise TGTE as a government,” he said.
“The TGTE was convened in the United States. Although the US did not ban the TGTE, US recognise Sri Lanka’s sovereignty,” added the opposition leader.
29 July, 2011
http://www.bbc.co.uk/sinhala/news/story/2011/07/110729_ranil_cpa_sudan.shtml
சிங்கள பௌத்த பேரினவாத அரச அணைப்பில் வளர்ந்து வரும் plote அமைப்பின், மத்திய குழு,தளநிர்வாகப் பொறுப்பு உறுப்பினர் மறைவிற்கு,இனி யாராவது கூட்டம் போட்டு கும்மாளம் அடிக்கலாந்தானே.ஏனிந்த சாவு,பலரைக் கவரவில்லை,http://plote.co.uk/ உட்பட?