இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மகிந்த ராஜபக்சவை இன்று சந்தித்துப் பேசினார்

இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இன்று மாலை 4.25 மணியளவில் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு பயணித்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சிவ்சங்கர் மேனன், இந்திய – இலங்கை உறவுகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இலங்கையின் கிழக்கில் சம்பூரில் இந்திய உதவியுடன் அமைக்க திட்டமிட்டுள்ள அனல் மின் நிலையம் பற்றி குறிப்பாகக் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.