ஒரு புலமைத்துவ ஆளுமையாக மட்டுமல்ல இயக்க சக்தியாகவும் விளங்கியவர் பேராசிரியர் க. கைலாசபதி : ந. இரவீந்திரன்
குமரன் புத்தக இல்லம் 2011 செப்ரெம்பர் மாத முடிவில் லெனின் மதிவானம் எழுதியிருந்த “ பேராசிரியர் க. கைலாசபதி: சமூகமாற்றத்திற்கான இயங்காற்றல்” என்ற நூலினை வெளியிட்டது. மிகுந்த கருத்தியல் சிதைவுகளுக்குள் அல்லாடும் இன்றைய இலங்கை மற்றும் தமிழியல் சூழலில் காத்திரமிக்க சமூகப் பங்களிப்பிற்குரிய ஆளுமையான கைலாசபதியின் கருத்தியல் தெளிவைத் தரிசிக்க வாய்ப்பு ஏற்படுத்தியமைக்காக க. குமரனுக்கும் லெனின் மதிவானத்துக்கும் முதற்கண் நன்றியை தெரிவிக்க வேண்டும்.
சென்ற நூற்றாண்டின் நடுக் கூற்றிலிருந்து ஏறத்தாழ மூன்று தசாப்தங்கள்( 1955-1982) மிகுந்த முனைப்புடன் சமூகமாற்றத்திற்காக எழுத்தாற்றலைப் பிரயோகித்தவர் க. கைலாசபதி(5.4.1933-6.12.1982). மக்கள் போராட்ட களங்களோடு ஊடாடி, மக்கள் சக்தி விடுதலைத் திசைமார்க்கத்தில் வீறுட் எழுச்சிக் கொள்ள வழிப்படுத்தும் கொமிய10னிஸ்ட் கட்சியுடன் உறவுப10ண்டு, தன் அறிவை நடைமுறை அனுபவங்கள் வாயிலாக பட்டைத் தீட்டி செழுமைப்படுத்தி முன்னேறியவர் கைலாசபதி. அத்தகைய அவரது வளர்ச்சியில் அந்தக் காலக்கட்டத்தில் இலங்கைச் சமூகமும் இலங்கை தமிழ் மக்களும் தீர்க்கமான வரலாறு படைக்கும் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தமையை அவதானத்திற்குட்படுத்துதல் அவசியம்.
லெனின் மதிவானத்தின் மேற்படி நூல் வீறுமிக்க அந்நக் காலத்தையும் அதன் வெளிப்பாடான ஆளுமையாக கைலாசபதி விளங்கியவாறினையும் துலக்கமாக காட்டி நிற்கிறது. கைலாசபதியின் வாழ்வும் வகிபாகமும் நூல் முழுமையும் தெளிவுப்படுத்தப்படடதோடு அமையாது, பின்னிணைப்பில் அவரது முக்கியத்துவ
