Sunday, May 11, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தமது சமூகக் கடமையை உறுதிசெய்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

இனியொரு... by இனியொரு...
09/08/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
6
Home பிரதான பதிவுகள் | Principle posts

இலங்கை பாசிச அரச மனித விரோதிகளால் தமிழ்ப் பேசும் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் சமூகவிரோதத் தாக்குதலான மர்ம மனிதர்களின் தாக்குதல் நேற்றும் ஆங்காங்கே நடைபெற்றது. இதே வேளை யாழ் பல்கலைக் கழக் மாணவர்கள் இதற்கான எதிர்ப்பைத் தெரிவித்து தமது சமூகக் கடமையை உறிதிசெய்துள்ளனர். திறந்த வெளிச் சிறைச்சாலையான தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து மகிந்த பாசிசத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் என்ற வகையில் நேற்று -07.09.2010- நடைபெற்ற போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மாணவர்கள் இதன் போது வெளியிட்ட அறிக்கை:

மர்ம மனிதன் என்ற போர்வையில் தமிழ் பேசும் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை உடன் நிறுத்து

கொடிய போர் தமிழ் மக்கள் மீது திணிக்ப்பட்டு அதன் சுமைகளை தாங்கமுடியாமல் தாங்கி உடமைகளை இழந்து உறவுகளை இழந்து சுயத்தை தொலைத்து அதனில் இருந்து மெல்ல மெல்ல எம் இனம் மீள முடியாமல் மீண்டு வரும் இந்த வேளையில் தமிழ் பேசும் மக்கள் மீது இன்னுமொரு அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.

உலக நாடுகளின் போட்டிகளிற்கும் அவற்றின் தன்நலன் சார்ந்த செயற்பாடுகளிற்கும் மத்தியில் தமிழ் பேசும் மக்களாகிய எங்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அவர்களின் கைகளில் விளையாட்டுப்பொருளாக இருக்கின்ற வேளை இந்த மர்ம மனிதர்கள் எங்கள் மக்களின் மேல் ஏறி விளையாடுகின்றார்கள்.

உலகப் பார்வையே எம்மீது படும் இந்தவேளையில் நாங்கள் அடுத்தது என்ன செய்வது என்று சிந்திப்பதற்குள் இன்னுமொரு அடக்குமுறையை நாம் எவ்வாறு எதிர்கொள்வது? தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் பிறப்பில் இருந்து பல்வேறு வகையான அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றோம்.

அவற்றில் காலத்திற்கு காலம் வடிவங்களில் மாத்திரமே மாற்றம் காண்கிறோம். எனினும் அவற்றை எல்லாம் துணிவோடு எதிர்கொண்டோம். ஆனால் இன்று போர் முடிவுற்றதாக கூறப்படும் நிலையிலும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளிற்கு தீர்வு காணப்பட வேண்டிய நிலையில் தமிழ் பேசும் மக்களால் என்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இன்னும்மொரு அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நாங்கள் ஒருபோதும் வன்முறையை விரும்புவர்கள் அல்ல வன்முறையோடு பிறப்பெடுத்தவர்களும் அல்ல ஆனால் தொடர்ந்தும் எங்கள் மீது வன்முறைகள் திணிக்கப்பட்டால் நாம் மனிதராய் வாழ்வதில் அர்த்தமென்ன?

இன்று இனங்களிற்கிடையே புரிந்துணர்வு காணப்பட வேண்டிய நிலையில் தமிழ் பேசும் மக்களிற்கும் சிங்கள மக்களிற்கும் இடையேயான இடைவெளியை குறைக்க வேண்டிய நிலையிலும் வெறுமனே தமிழ் பேசும் மக்கள் வாழும் இடங்களில் மட்டும் இன்று கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை எமக்கு பெரும் அதிருப்தியையும், மன வேதனையையும் தருகிறது.

பெண்களை எம் தேசத்தின் கண்களாக காண்பவர்கள் நாம். இவர்கள் தமிழ் பேசும் மக்களின் இழக்க முடியாத அளப்பெரிய சொத்து. இத்தாய்மை இனத்தின் மீது எத்தனையோ வகையான வன்முறைகளை கடந்த காலங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டு வந்தமையை தாங்கள் அறிவீர்கள்.

அவர்களின் வாழ்க்கை சிதைக்கப்பட்டு வேரோடு அழிக்கப்ட்டன. இன்று கொடியபோர் தந்த பரிசால் எங்கள் தாய்மை இனம் வேலியில்லாத காணிக்குள்ளும், கதவுகளில்லா வீட்டிற்குள்ளும் கணவனை இழந்து கண்ணீரோடும் வாழும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு அல்லலுற்று சொல்லெணா துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் இவ் வருத்தம் தோய்ந்த வேளையில் மர்ம மனிதன் என்ற போர்வையில்; மீண்டும்மொரு வன்முறை தாண்டவமாட தம் ஒருவேளை சோற்றுக்காக தினமும் அல்லலுறும் எம் தாய்மையினமும் ஆதரவில்லா குழந்தைகளும் வீட்டு மூலைக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

யார் இந்த மர்ம மனிதர்கள்? இவர்கள் தமிழ் மக்களிடம் இதற்கு மேலும் எதை எதிர்பார்க்கின்றார்கள்? எம்மை அடிமைகளாக்க எண்ணும் காரணம் என்ன? நாம்; உண்ர்ச்சி மிக்கவர்கள் தான் ஆனால் உணர்வுபூர்வமானவர்கள். உலகின் எந்த இனத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. அப்படியிருக்கையில் ஏன் எம்மீது இத்தனை அடக்குமுறைகள்? ஒர் நாட்டில் பல்வேறு மொழிகளை பேசும் இனங்கள் வாழலாம் ஆனால் அந்நாட்டில் உள்ள சட்டங்கள் சகல மொழி பேசும் மக்களிற்கும் பொதுவானதே.

ஆனால் இங்கு மட்டும் சட்டங்கள் சந்தர்ப்பங்களிற்கேற்றவாறு இயற்றப்பட்டு அது இங்கு வாழும் மக்கள் மீது வௌ;வேறாக பிரயோகிக்கப்படுவதை சர்வதேச சமூகத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். உலக நாடுகளே ஒருகனம் நின்று சிந்தியுங்கள்.

மர்ம மனிதன் விவகாரம் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசமான மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கிழக்கிற்கு நகர்ந்து இன்று வடக்கில் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நாம் சர்வதேசத்திடம் பின்வருவனவற்றை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

Ø இந்த மர்ம மனிதன் விவகாரம் சிங்கள மக்கள் வாழும் எந்த ஒரு பிரதேசத்திலும் நடைபெறவில்லை.

Ø கிழக்கிலும் வடக்கிலும் தமிழ் மற்றும் சகோதர இனமான முஸ்லீம் மக்கள்; ஒற்றுமையாக வாழும் பிரதேசங்களின் ஒற்றுமையை குலைக்கும் ஒரே நோக்கமாக நடைபெற்றமையை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

Ø மர்ம மனிதன் யாராக இருக்கலாம் அவர்கள் எங்கள் வாழ்கையின் இயல்புநிலையை சீர்குலைக்க முயன்றால் அதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

Ø வாய் பேச முடியாத விலங்கினம் கூட தம்மை துன்புறுத்தம் போது தம்மை பாதுகாக்க திருப்பித்தாக்கும். ஆனால் இச் சுதந்திரம் கூட இல்லாத மனிதர்கள் நம் தேசத்தில்.

Ø வேலியால் மேயப்படுகின்ற பயிர்கள் நாம். மக்களை பாதுகாக்கவேண்டியவர்கள் மக்களை தாக்கினால் நாங்கள் எங்கே சென்று முறையிடுவது?

Ø தங்களை பாதுகாக்கும் உரிமை தமக்கில்லாத போது எமது மாணவர்களிற்கு ஏன் தலைமத்துவ பயிற்சி?

Ø மர்ம மனிதன் விவகாரம் தொடர்பில் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் சட்டங்களும் அரச தரப்பால் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக மர்ம மனிதனிடமிருந்து தம்மை பாதுகாக்கும் மக்கள் மீது பயங்கரவாதச்சட்டம் எதற்கு?

இது போன்ற பிரச்சினைகளை எமது மக்கள் இன்று எதிர்கொள்கின்றனர். தமிழ் பேசும் மக்களின் அழிக்கப்பட முடியாத சொத்து கல்வி ஒன்றே ஆனால் எங்கள் மாணவர்கள் மர்ம மனிதன் விவகாரத்தால் கல்வி கற்பதை விட்டு காவல் கடமை செய்கின்றனர். எங்கள் வீடுகளில் உள்ள சகோதரிகளை பாதுகாக்க நாங்கள் காவல் கடமை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இதேவேளை நாவாந்துறையில் கைதாகி தாக்குதலுக்கு உள்ளானவர்களில் உயர்தரப்பரீட்சை எழுதும் மாணவர்களும் உண்டு. எமது பல்கலைக்கழக்தின் பல்வேறு பீடங்களில் இன்று பரீட்சைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மர்ம மனிதனால் உள ரீதியாக பாதிப்புக்குள்ளான நாங்கள் எவ்வாறான மனநிலையில் பரீட்சைகளை எதிர்கொள்வது?

எனவே நாங்கள் எங்கள் கல்வி நடவடிக்கைகளை கைவிட்டு எமது மக்களை பாதுகாக்க காவல் கடமை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே இந்த மர்ம மனிதன் விவகாரம் தமிழ் பேசும் மக்களின் மீது அடக்குமுறையை பிரயோகிக்கும் வேளை அது தமிழ் பேசும் மக்களின் கல்வி தரத்தினை சீரழிக்கும் ஒர் செயற்பாடாகவே நாங்கள் கருதுகின்றோம். பல்கலையில் பட்டப்படிப்பை தொடரும் நாம் வீட்டுப்படலையில் உறக்கம் தொலைக்கிறோம்.

இந்நிலை தொடருமானால் தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கைத்தரம் கேள்விக்குறியே. எனவே எங்கள் மக்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைகளை உடன் நிறுத்தி இயல்பு நிலையை ஏற்படுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வேண்டிநிற்கின்றோம்.

நன்றி

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள் : இந்திக ஹேவாவிதாரண

Comments 6

  1. Yoga.S says:
    14 years ago

    என்றைக்குமே பல்கலைச் சமூகம் தங்கள் சமூகக் கடமையை மறந்ததில்லையே?இப்போது,மறந்திருந்து,வாழாவிருந்திருந்தால் தான் ஆச்சரியப்படல் வேண்டும்!

  2. மலையக நண்பன் says:
    14 years ago

    யாழ் இளஞ்சர்கள் இப்படி என்றல் மட்டகளப்பு இலஞ்சர்களை பாருங்கள்  

    மட்டகளப்பு ajith fans Mankatha Celebrations video
    http://www.youtube.com/watch?v=9c9yWPZQcdI
     சமீபத்தில் உலகெங்கும் வெளியாகி பட்டைகிளப்பி கொண்டிருக்கும் மங்காத்தா படத்திற்கு மட்டக்களப்பிலும் மவுசு குறையவில்லை,  அஜித் படத்திற்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள் 

  3. tharmu says:
    14 years ago

    இதை விட எல்லாரும் செத்துப்போயிருக்கலாம்.வெட்கம் கெட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.இப்பதான் வெறிமுறிஞ்சிருக்கம் போல.இவ்வள நாளும் நல்லா தண்ணிய போட்டிற்று கசூரினா பீச்சில பொய் படுத்துக்கிடந்திருப்பாங்ககளோ?நமக்காக மரணதண்டனைக்காக மூன்று தமிழக உயிர்கள் காத்திருந்த வேளையில்…..முகமே தெரியாதவள் நமக்காக தீக்குளிக்கையில் ஒரு அறிக்கை கூட விட வக்கில்லாத வெட்டிப்பயலுகளுக்கு தங்ககட “சரக்குகளுக்கு” கல்லெறிஞ்சவுடன் கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது.ஆமிக்காரனிட்ட அடி வாங்கினதும் ‘சீனியர்’ அண்ணாக்களுக்கு சிகரெட் வாங்கப்போன பெடியனுக்குத்தர்ன்.சிங்களப்பேரினவாதப் பேய்கள் சங்கியன் சிலையை இடிக்கும் போதும் உள்ளுராட்சி தேர்தலில் வாக்களிக்க முடியாமல் செய்த போதும் தமிழ் இடப்பெயர்களை சிங்களத்துக்கு மாற்றும் போதும் வராத உணர்வு இப்ப மட்டும் எங்கிருந்து வந்தது.இந்த அறிக்கை விட்ட ஒன்றியத்த கூட நிர்வாகப்படுத்தியது டக்ளஸ் ஐயா தான் .போன கிழமை ககைலாசபதி கலையரங்கத்தில இந்த ஒன்றியக் காரர் அவரை அழைத்து என்ன கதைத்தனர் என்றும் தெரியும்.அடுத்தவருடம் வேலையெடுக்கிறதுக்கு இப்பவே அந்த எளியவனுக்கு பின்னால நிக்குதுகள்.இந்தஎச்சில் கோப்பைகளுக்கெல்லாம் ஏன் சமூக உணர்வு/

    • மலையக நண்பன் says:
      14 years ago

       விடுகள் நமக்க கண்ணிர் விட இவர்கள் என்ன இந்திய குடிமகன இல்லை தமிழர்கள் என்றலும் இவர்கள் இலங்கை குடிமகன்கள் இதை விட மட்டகளப்பு தமிழர்களை கொஞ்சம் பாருங்கள் இந்த வீடியோ வை மட்டகளப்பு ajith fans Mankatha Celebrations videohttp://www.youtube.com/watch?v=9c9yWPZQcdI சமீபத்தில் உலகெங்கும் வெளியாகி பட்டைகிளப்பி கொண்டிருக்கும் மங்காத்தா படத்திற்கு மட்டக்களப்பிலும் மவுசு குறையவில்லை,  அஜித் படத்திற்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள் 

    • பார்த்திபராசன் says:
      14 years ago

      மட்டக்களப்புப் பெண்களை வன்னிப்புலிகள் திறந்த வெளியில் வைத்துக் கற்பழிக்கவும், நிராயுத பாணிகளான இளைஞ்ஞர்களைச் சுட்டுத்தள்ளவும், மாற்றைய அமைப்பு இளைஞ்ஞர்களை உயிருடன் தீயிட்டுக் கொழுத்தவும் வேடிக்கையாய்ச் சிரித்துக் கும்மாளமிட்ட நீங்கள் யாரிடமிருந்தும் ஆதரவை எதிர் பார்க்க லாயக்கற்றவர்கள். புலிப் பாணியிலான எந்த முயற்சிகளுக்கும் பாசிசப் புலி வால்களைத்தவிர இந்த உலகில் யாருமே கரம் கொடுக்க மாட்டார்கள். 

      • நிர்மலன் says:
        14 years ago

        நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது லங்காபுவத்தின் செய்திகள் மேலதிக பொய் புனைவு இட்டுக்கட்டல் கலந்து தந்து கொண்டிருப்பவர் பார்த்திபராசன்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...