1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. உதாரணத்திற்கு தமிழ் மக்களின் விடுதலையை உத்தரவாதப் படுத்தப்போகும் ஒரு இயக்கத்தினுள் சுதந்திரம் இருக்கிறதா என்று செல்வி கேள்வி எழுப்பினார்.
புலிகள் செல்வியை ஒழித்துக்கட்டுவதற்கு முடிவெடுத்து இருந்ததாகவே செய்திகள் தெரிவித்திருந்தன. ஆனால் மற்றுமொரு மனித உரிமைவாதியான ரஐனி திராணகமவைப் போன்ற அதே தன்மையான ஒரு சூழ்நிலைக்கு செல்வியின் நிலமையும் இட்டுச் செல்லாதவாறு இருக்கும்படியாக புலிகள் வேறு முடிவை எடுத்தனர். அதுவே கைது செய்தலாக முடீவுற்றது. செல்வியின் இருப்பிடத்திலிருந்து செல்வியின் கையெழுத்துப் பிரதிகள் குறிப்புக்கள் கடிதங்கள் புத்தகங்கள் அனைத்துமே அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.
செல்வி வவுனியாவில் உள்ள சேமமடு என்னும் கிராமத்தில் பிறந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தில் நாடகம் அரங்கியலும் என்ற பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவி. அத்தோடு இவர் நாடக நெறியாளரும் நடிகையுமாவார். ‘தோழி’ இதழின் ஆசிரியரும் கூட. செல்வி தன் நாடகங்களினாலும் கவிதைகளினாலும் குறுகிய காலத்திலேயே மதிப்பிடக்கூடிய படைப்பாளியாக விளங்கினார். புலிகளுக்கு ஆதரவாக இருப்பதை விடுத்து சுயெற்சையாக சுதந்திரமாக இயங்குவதற்கு பல்கலைக்கழக சக மாணவர்களை செல்வி ஊக்குவித்தார் . அவர் பிரபல கவிஞராகவும், நாடகாசிரியராகவும் பணியாற்றியவர். பாலஸ்தீன கைதிகள் பற்றிய நாடகமொன்றையும் அவர் இக்காலத்தில் செய்திருந்தார். விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில இயக்கங்களின் மனித உரிமை மீறலை விமர்சிக்கின்ற நாட¬க¬மொன்றை அரங்கேற்றத் தயராகிக்¬கொண்டிருக்கையிலேயே அவர் கடத்தப்¬பட்டதாக நம்பப்படுகிறது. தமது படைப்புகளுக்கூடாக பெண் விடுதலை கருத்துக்களை பரப்பியவர். சிறந்த பெண்ணியவாதியான செல்வி யாழ் பெண்கள் ஆய்வு வட்டம், யாழ் பல்கலைக்கழக மாணவ அவை மற்றும் இலக்கியவட்டத்தின் உறுப்பினராகவும் இருந்தார். பல்கலைக்-கழத்தில் பெண்கள் இயக்கத்தில் தீவரமாக செயற்பட்டிருந்தார். வடக்கில் நடந்த யுத்தத்தின் போது பாதிப்புக்கும், குண்டுத் தாக்குதலுக்கும் உள்ளானவர்களுக்கு நிவராண உதவிகளை செய்வதில் ஈடுபட்டிருந்தார்.. யாழ்ப்பாணத்தில் அல்லல்படும் தாய்மார்களுடன் முன்னின்று செயல்பட்டதினால் அவர் சமூகத்திற்கு நன்கு அறியப்பட்டவராக இருந்தார். பூரணி பெண்கள் இல்லத்தின் செயல்பாட்டாளர்களில் ஒருவராகவும் முக்கிய பங்கை வகித்தார்.
ஈழத்து பெண் கவிஞர்களின் கவிக்குரலாக வெளியிடப்பட்ட “சொல்லாத சேதிகள்” என்ற தொகுப்பில் செல்வியின் கவிதைகள் வெளிவந்துள்ளன. அத்தோடு செல்வியின் கவிதைகளும் சிவரமணியின் கவிதைகளும் சேர்ந்த தொகுப்பொன்றை தாமரைச் செல்வி பதிப்பகம் தமிழகத்தில் வெளியிட்டிமிருந்தது. செல்வியின் கவிதைகள் தமிழகத்திலுள்ள சிறு பத்திரிகைகளான மனஓசை, மண் அரங்கேற்றம் இவை தவிர ஓசை, நான்காவது பரிமாணம், சரிநிகர், திசை போன்ற இதழ்களிலும் வெளிவந்துள்ளது. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்புக்களிலும் இடம்பெற்றுள்ளன.
செல்வியின் விடுதலையைக்கோரி சர்வதேச மனித உரிமை அமைப்பான Amnesty International பலவாறு முயன்றது. தனது இதழான Focus செல்வியைப் பற்றி 1994ம் ஆண்டு மார்ச் இதழில் விடுதலையைக் கோரி எழுதியது. புலிகள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. இந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது செல்விக்கு வழங்கப்பட்டது. International PEN என்று அழைக்கப்படும் சர்வதேச கவிஞர்கள் எழுத்தாளர்கள் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பான (Poets Essayists and Novelists) PEN அமைப்பு கார்ல்ஸ் வொர்த்தியால் தொடங்கப்பட்டதாகும். இவ் விருதானது தங்களுடைய நம்பிக்கைகளுக்காகவும் இலட்சியத்திற்காகவும் எழுத்துத்தளத்திலும் கலைத் தளத்திலும் படைப்புக்களை உருவாக்கியவர்களுக்கு வழங்கப்படுவதாகும். செல்வி ஈழத்தின் நெருக்கடியான போராட்ட சூழ்நிலையில் இத்துறைகளில் சேவை புரிந்தமைக்காக இவ் விருது வழங்கப்பட்டது.
கருத்துச் சுதந்திரத்திற்கு ஆப்பு வைக்கின்ற எதிரிகளுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லையென்பதை நிரூபித்த அம்சங்களில் செல்வி கடத்தப்பட்டதும் ஒன்று. செல்வி உயிருடன் இருப்பதாக நம்பி வந்த அவருடன் நெருங்கிய அனைவருமே மனந் தளர்ந்து போயிருந்தனர் . அவரது தாயார் உட்பட எந்த உறவினரும் அவரை சென்று பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவர் தேகாரோக்கியம் குன்றிய நிலையில் இருப்பதாக அஞ்சுகிறோம் என்று றொட்டர்டாம் போயற்றி இன்டர்நெஷனல் 1994இல் அறிக்கை வெளியிட்டது.
1992இல் “”எழுதுவதற்கான சுதந்திரம்”” எனும் விருது “PEN” எனும் சர்வதேச அமைப்பின் விருது செல்விக்கு கிடைத்தது. இவ்விருதினை அதற்கு முன்னரே வழங்கத் தீர்மானித்திருந்தபோதும் இவ்விருதின் மூலம் சிறைவைக்கப்பட்டிருக்கும் அவருக்கு ஏதும் ஊறு நேரக்கூடும் என்றும் விருதினை அறிவிக்க வேணடாம் என்று செல்வியின் நண்பர்கள் பலர் அறிவித்திருந்ததாக “ PEN” அமைப்பின் தலைவர் எட்மண்ட் கீலி அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார். ஆனாலும் அவரது நிலை அல்லது அவரது இருப்பிடம் பற்றிய எதுவித தகவலையும் காணவில்லையென்பதால் விருதினை பகிரங்கப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டதாக 1992இல் “PEN “அமைப்பின் தலைவர் அறிவித்திருந்தார்.
சர்வதேச கவிதை அமைப்பு 1994க்கான International betry Sbciety award எனும் விருது வழங்கப்பட்டது. இது மானுட சுதந்திரத்திற்காகவும், அடிப்படை உரிமைக¬ளுக்காகவும் குரல் கொடுத்த ”சுதந்திரம் மறுக்கப்பட்ட” கவிஞர்களுக்காக வழங்கப்படுகின்ற விருதாகும். இவ்விருது வழங்கப்பட்டபின் விடுதலை செய்யப்பட்ட சர்வதேச கவிஞர்களைப் போலவே செல்¬வியும் விடுதலை செய்யப்படவேண்டுமென இவ்வமைப்பு கேட்டுக்கொண்டது. இவ்விருது பற்றிய அறிவித்தலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
“மரணத்தையோ அல்லது சிறைவாசத்தையோ கவிஞர்கள் எதிர்கொண்ட போதும் அவர்கள் மனிதனது மொழியை பேசுகிறார்கள். கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு உருக்கொடுக்கிறார்கள். மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் அதற்கு போராடுவதற்கும் உலகம் தழுவிய முயற்சிகள் இருந்த போதிலும், மனிதனுடைய கௌரவத்தை நேர்மையாக பகிரங்கப்படுத்தும் குரல்களுக்கான அவமதிப்பும், கவிதைக்கான அவமதிப்பும் என்பது மனித வாழ்வுக்கேயான அவமதிப்பாக அநேகமாக வெளிப்படுகின்றது “.
இந்த பிரசுரத்தின் இறுதிவரிகள் இவ்வாறு நிறைவுபெறுகின்றன. « மனித உயிருக்கும் உடலுக்கும் மரியாதை குன்றிப்போதல் மேலோங்கிவரும் இவ் உலகில் பலியாகிப்போன இன்னல்களுக்குள்ளான சகல கவிஞர்களையும் இன்னும் நூற்றுக்கணக்கான அறியப்படாத தனிநபர்களையும் அங்கீகரிக்கும் அதே நேரத்தில் இந்த வருடத்திற்கான விருதினை தமிழ் கவிஞையான செல்விக்கு வழங்குவதற்கு இவ் அமைப்பின் தலைமைப்பீடம் தீர்மானித்துள்ளது. »
இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு முதன்முறையாக வழங்கப்பட்ட விருதான இதனை பெற்றுக் கொள்ள செல்வி அழைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் விடுதலைப் புலிகளினால் சிறைவைக்கப்¬பட்¬ட¬படியே அப்போதும் இருந்தார். 1993 டிசம்பர் வெளியான சரிநிகர் பத்திரிகையில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் பேட்டியில் (இப்பேட்டியில் மூலமானது Counterpoint எனும் ஆங்கில சஞ்சி¬கையாகும்) செல்வி தமது தடுப்புக் கைதியாகவே இருப்பதாக ஒப்புக் கொண்டிருந்தார். செல்வியின் விடுதலைக்¬காக பல சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வந்தன.
மேலும் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல மனித உரிமை நிறுவனங்களும் அவரது விடுதலையைக் கோரியிருந்தன.
தேசத்தை நேசித்தது தான் செல்வி செய்த குற்றம். மனிதத்தைக் கோரிய அவரது அர்ப்பணிப்பு தான் அவர் செய்த குற்றம். அவரது கவிதைகள் யுத்தத்தினால் நலிவுற்ற பெண்கள் பற்றியதும் யுத்தம் பற்றியதுமான சித்திரங்களையே வெளிப்படுத்தியது. இன்று அவர் எம்முடன் இல்லை.
விடுதலையின் பேரால் கருத்துச் சுதந்திரத்தின் குரல் நசுக்கப்படுகின்ற அனைத்து சந்தர்ப்பங்க¬ளிலும் நாங்கள் மீள எழுவோம். நாங்கள் மீளவும் உயிர்ப்போம். மானுட விடுதலைக்காக.
._._._._._.
செல்வியின் சில கடிதங்களும். சில கவிதைகளும்.
செல்வியின் கடிதங்கள்
அன்பான அரசு,
அன்பு வந்தனங்கள்.
20-02-88 திகதியிட்ட உங்கள் கடிதம் 26-02-88 இல் எனக்குக் கிடைத்தது. நண்பர் ரஞ்சித் யாழில் நிற்பதால் நான் இன்னும் அவரைச் சந்திக்கவில்லை. mayயில் நான் சந்திக்கும்போது புத்தகங்கைளப் பெற்றுக் கொள்வேன். ரஞ்சித் இங்கே – வவுனியாவுக்கு வர சூழ்நிலைகள் சாதகமாக இல்லை…..
Drama and Theatre சம்பந்தமாக நீங்கள் தந்துள்ளவை பலவற்றை நான் வாசிக்கவில்லை. Brecht , Stanislawosky போன்றவர்களை பாடக்குறிப்புக்களாக விழுங்கியதை தவிரவும் Brecht பற்றி அண்மைய காலத்தில் தளிர்| , மல்லிகை| போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்த சிறு குறிப்புக்களும் நாடக கலை| என்கின்ற இராமசாமியின் தமிழ்மொழி பெயர்ப்பும் வாசிக்கக் கிடைத்தன. இவை நாடக உலகின் சிறு மண்துளிக்கையளவு தானுமில்லை. நமது சூழலில் சிங்கள நாடகத்துறை வளர்ச்சியுடன் தமிழினது வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் மண் – மடு வித்தியாசந்தான். ஒரு புறம் இயல்பாய் இங்குள்ள புறக்கணிப்பும் மறுபுறம் நமது சூழ்நிலைப் பாதிப்புக்களும் எங்களது கலை வடிவங்களை சிதைக்கின்றன. 83 களுக்கு முன்னர் தரமான நாடகங்கள் பலவற்றை தாசீயஸ், பாலேந்திரா, நா. சுந்தரலிங்கம் போன்றோர் நெறிப்படுத்தினர். கலவரம் இவர்களை அந்நிய தேசங்களில் சரணடைய வைத்துவிட்டது. எனினும் 84 களிலும் பின்னரும் குறிப்பிடக்கூடியதாக வீதி நாடகங்கள், கவிதா நிகழ்வுகள் , மண் சுமந்த மேனியர்- 1, 2 ஆகியவை இடம்பெற்றன. இன்னும் சொல்லப்போனால் கொழும்புத் தமிழ்ச் சூழலில் கோமாளிகள், ஏமாளிக(ள்)ளாக அல்லோலகல்லோலப்பட அடக்குமுறைக்குள்ளான யாழ் சூழலில் நல்ல தரமான படைப்புக்கள் வெளிவந்தன. அமைதி ஒப்பந்தம் – மீண்டும் வடகிழக்கில் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எது செய்ய முயன்றாலும்….. அனுமதி தேவைப்படுகின்றது.
நமது பெரிய யாழ்.நூலகம் எரிக்கப்பட்ட பின்னர் ஓரளவுக்கு University Liberary பெரியதாக இருந்தது. வந்தவர்களும் மீண்டும் நம்மை அழிக்க (60,000 புத்தகங்கள் வரை எரிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் கூறுகிறது) முயன்றுள்ளனர். இதற்குள்ளும்,
…. ‘நாம் வாழவே பிறந்தோம் – சாவை உதைத்து’ என்ற ஜெயபாலனின் கவிதை வரிகள் எங்கள் தேடலையும் வாழ்தலையும் உங்களுக்குப் புரிய வைக்கும்.
…..
‘பயணம்’ இதழுக்காக இரு கவிதைகள் அனுப்பி வைக்கின்றேன். ‘தேடல்’ கவிதை எனது நண்பர் ஒருவருடையது… தமதூரில் நடைபெற்ற சம்பவத்தை விளக்குவது. நீங்கள் எதிர்பார்க்கின்ற கவித்துவம் இருக்கின்றதோ இல்லையோ இந்த நிகழ்வுகளின் மீதான கோபம், தாக்கங்கள் தான் இவை. மற்றது எனக்குள்ளே….. இது பற்றிய நேரடியான விமரிசனத்தை எனக்கு நீங்கள் எழுதுங்கள்.
படைப்பு – படைப்பாளி தொடர்பான சர்ச்சைகள் இங்கும் உள்ளன. என் கைக்கெட்டிய இந்திய தமிழ்க் கவிதைகளை விட சேரன், ஜெயபாலனின் கவிதைகள் மிக மிகத் தரமானவை. இவர்கள் இருவருக்குள்ளும் ஜெயபாலனின் மண் – மக்கள் தொடர்பான அனுபவம் ஆய்வுகள் இன்றுவரை மக்கள் கவிஞனாக அவனைக் காட்டுகின்றது. சேரனை நீங்கள் நுணுகி ஆராய்ந்தால் மண்ணில் கால் பதிக்காது வானத்திலிருந்து இறங்கி வருவதை நீங்கள் காணலாம். இரண்டாவது சூரிய உதயத்திலுள்ள உண்மையான இயல்பு,’ யமனின்’| இல்லை. ‘யமனை’ முதலில் நான் வாசித்தபோது ஏற்பட்ட பிரமிப்பு – இப்போது இல்லை.
‘புழுதி படாது,
பொன்னிதழ் விரித்த சூரிய காந்தியாய்
நீர் தொடச் சூரிய இதழ்கள் விரியும்’
இப்படி ஒரு கவிதையில் வருகின்றது. யமனில் இதனுள் சில சொற்கள் பிழையோ தெரியவில்லை. என்னிடம் கைவசம் புத்தகம் இல்லை (யாழில் நான் இருந்த வீட்டினை….. ஆக்கிரமித்ததில் எனது சிறு நூலகத்தையும் இழந்து விட்டேன்) எனினும் ‘புழுதிபடாது, பொன்னிதழ் விரித்த’ அடிகள் ஞாபகத்திலுள்ளன. புழுதிபடாமலும் கூட பிரமிக்க வைக்க சேரனால் முடியும்.எனினும், படைப்பு – படைப்பாளிகள் தொடர்பாக என்ன முடிவுக்கு வருவதென்பது என் வரையில் கேள்விக்குறி தான்.
நாடகம் தொடர்பான ஆங்கில புத்தகங்களும் உவ்விடம் வாங்கக் கூடியவற்றை அசோக்கிடம் லிஸ்ற் கொடுக்கவும். அவற்றை எனக்கு இங்கு அனுப்ப முடியும் போது அனுப்புவார்.
நான் பதிலைத் தாமதித்ததால் உங்களை விரைவில் பதிலெழுதச் சொல்ல முடியாது. எனவே பதிலெழுதுங்கள்.
தங்கள்
அன்புடன்,
செல்வி
08-04-88
இரவு 11-53
._._._._._.
அன்பான அரசு,
உங்கள் இரண்டு கடிதங்களும் கிடைத்தது. நன்றி.
அனுசுயா இங்கு வந்துவிட்டார். அவரிடம் நண்பர் ஒருவர் மூலமாக விசாரித்ததில் நீங்கள் ‘பயணம்’ இதழ்களை அனுப்பவில்லையெனத் தெரிந்தது.
என்னுடைய கவிதைகள் பற்றி எழுதியிருந்தீர்கள். நீங்கள் நினைக்கிற அளவுக்கு புத்தகமாக வெளிவரும் தகுதி அவற்றுக்கில்லை. நீங்கள் விரும்பினாலும் கூட தொகுப்பாக்குகிற அவசரம் அவசியம் இப்போதைக்குக் கிடையாது. மன்னிக்கவும். ஆனால் இதற்குப் பதிலாக நான் உங்களிடம் வேறோர் உதவி கேட்கிறேன். நீங்கள் நாடகப் பிரதிகளை (Seript) நூலுருக் கொடுக்க முன்வருவீர்களெனில், தரமான ஈழத்து நாடகப் பிரதிகளை அனுப்பி வைப்போம். இன்றைய சூழலில் இங்கேயும் கவிதை, கதைகளைப் போட பலர் முன் வருகின்றனர். ஆனால், அந்தளவு கணிப்பை நாடகத்துக்கு கொடுக்கிறார்களில்லை.
அண்மையில் ந. முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்’ தொகுதியை வாசித்தேன். ஆனால், அதைவிடவும் மேடைபற்றிய பூரண பிரக்ஞையுடன் எழுதப்பட்ட தரமான நாடகப் பிரதிகள் இங்குள்ளன. அப்படி ஒரு எண்ணம் உங்கள் நண்பர்களுக்கு இருக்குமாயின் எழுதுங்கள். இது ஒரு நல்ல முயற்சியாக இருக்கும். தொகுப்புக்கு வேண்டிய முன்னுரை, Cover Desige சகலமும் அனுப்புவோம். வெளியீடு உங்களுடையதாக இருக்கும். ஆலோசியுங்கள். புத்தகங்களின் பெயர்களைத் தயவு செய்து எழுதாதீர்கள். இவற்றை உங்களுக்கு வசதி கிடைத்து. அனுப்ப முடிந்ததால் அனுப்புங்கள். இவற்றை வாசிக்க முடியவில்லையென்ற ஆதங்கமும், பொறாமையுந்தான் வருகிறது. இங்கு சில புத்தகங்கள் உவ்விடமிருந்து வந்துள்ளன. ஆனால் அவற்றின் விலையைக் கேட்டால் தலை சுற்றும். எனக்கு இவற்றை வாங்குகிற வசதி இன்னும் 4 வருடங்களுக்கு இருக்காது. அப்படி இருந்தது உமா வரதராஜனின் ‘உள் மன யாத்திரை’ டானியலின் ‘தண்ணீர்’ வாங்கினேன்.
‘Journal of South Asian Literature’ என்ற ஒரு தொகுப்பு சிங்களவர் ஒருவரால் தொகுக்கப்பட்டுள்ளது.
இதில் யேசுராசா, நுஃமான், ஜெயபாலன், சேரன் போன்றோரின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வந்துள்ளது. நான் இன்னும் பார்க்கவில்லை. University Libraryலுள்ளதாக நண்பரொருவர் கூறினார். ஆனால் அதனை வாங்கி அனுப்ப எனக் முடியுமென நான் உறுதி கூறமாட்டேன். கொழும்பில் நண்பர்கள் உங்களுக்கு யாரேனுமிருப்பின் அவர்களுக்கு எழுதுங்கள்.மற்றும் சிறு சஞ்சிகைகளை யாராவது நம்பிக்கையான நண்பர்கள் வருவாரெனின் அவ்வப்போது அனுப்புவேன். English Poems ஐயும் Copy பண்ணி அனுப்ப முடிந்ததை அனுப்புகின்றேன்.
வேறென்ன, எழுதுங்கள்
அன்புடன்
செல்வி
18-09-88
._._._._._.
அன்பான அரசு,
நீங்கள் எழுதியதான எனது முன்னைய முகவரிக்கு அனுப்பிய கடிதம் இதுவரை கிடைக்கவில்லை. அதனால் அதிலே நீங்கள் என்ன எழுதியிருக்கின்றீர்களென எனக்குத் தெரியாது. இங்கு நாட்டு நிலைமைகள் ரொம்ப மோசம் அதுவும் இந்த திருநெல்வேலி பல்கலைக்கழக வட்டாரம் தினந்தோறும் வெடிச்சத்தங்களால் அதிர்ந்து கொண்டிருக்கின்றது. நாடகப்பிரதிகளை திரும்பவும் அவரிடம் எழுதும்படி கொடுத்துள்ளோம். பேராசிரியர் சிவத்தம்பியவர்கள் நாடு திரும்பிய பின் அவரிடம் ஒரு முன்னுரை கேட்டு அனுப்பலாமென்பது எண்ணம். அண்மையில் சித்ரலேகா அக்கா வீட்டுக்குப் போனபோது திரு.நுஃமான் சென்னை வந்துள்ளதாகக் கூறினார். அவர் தங்கியுள்ள முகவரி தெரியாத போதும் அவர் எஸ்.வி.ராஜதுரையை, பொதிய வெற்பனைச் சந்திப்பாரென்பதால் அவரை நீங்கள் சந்திக்க முடியுமாயின், அவருக்கும் முடிந்தால் வைத்திருக்கும் புத்தகங்களைக் கொடுத்துவிடவும். அசோக்கிடம் இதனைச் சொல்லவும்.
அசோக் தவநாதனிடம் கொடுத்துவிட்ட கடிதம் கிடைத்தது. ஆனால் புத்தகங்களைத் தவநாதன் இன்னமும் கொண்டு வந்து தரவில்லை. அதன் பின்னர் இது வரை நான் தவநாதனைச் சந்திக்காததால் வேறு எந்த விபரமும் தெரியாது. அசோக்கின் திருச்சி முகவரி எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்தால் அனுப்புங்கள்.
அண்மைக்கால நிகழ்வுகளில் பெண்கள் மீதான வன்முறைகளை வைத்து ஒரு நாடகமொன்றை April 29th மேடையேற்றவுள்ளோம். இது ஒரு பரீட்சார்த்த முயற்சி தான். இதற்கு எவ்வாறு அரசு தரப்பிலான ஒடுக்குமுறை இருக்குமோ தெரியாது. முயன்று பார்க்கின்றோம். வெற்றியளித்தல் பின்னர் எழுதுகின்றேன். இத்துடன் வீர. சந்தானம் அவர்களுக்கு ஒரு கடிதம் வைத்துள்ளேன். அவரிடம் கொடுத்துவிடுங்கள். அவரை எனக்கு கடிதம் அனுப்பச் சொல்லுங்கள். நுஃமான் Sir இடம் ‘இனி’ Magazene தொகுப்பும் ‘நாடகக்கலை|’ மு.இராமசாமி அவர்களின் மொழிபெயர்ப்பு நூலையும் மனதில் பதிஞ்ச காலடிச்சுவடுகள் – சாமிநாதன் எழுதிய Drama Work shop பற்றிய புத்தகத்தையும் அனுப்ப மறக்கவேண்டாம். முன்னர், அசோக்கிடம் தஞ்சாவூர் University Drama Theatre arts Syllabusஐ எடுத்து அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தேன். உங்களால் முடியுமாயின் அனுப்பி வைக்கவும்.
‘Crying Asia’ எனும் நிகழ்ச்சியொன்று வரும் Octoberஇல் மணிலா பிலிப்பீன்ஸில் நடைபெற இருப்பதாக அறிந்தேன். உங்கள் குழுவினரில் யாராவது போகிறீர்களா?
நுஃமான் Sir ‘வியூகம்’, ‘திசை|’ கொண்டு வந்தாரா? அவர் உவ்விடம் வருவது தெரிந்தருந்தால் இவற்றைக் கொடுத்துவிட்டிருக்கலாம். தவநாதன் திரும்பவும் இந்தியா வரவிருப்பதாகச் சொன்னான். வந்தால் – என்னைச் சந்தித்தால் கொடுத்து விடுகிறேன்.
உங்களது சூழ்நிலைகள் முயற்சிகளை எழுதுங்கள். எனக்கு பரீஷ ‘ஞாநி’, வீதி நாடக இயக்கம், கூத்துப் பட்டறையினருடன் பரிச்சயம் ஏற்படுத்தித் தருவீர்களா? அவர்களது வெளியீடுகள், முயற்சிகள், அனுபவங்கள் எங்களுக்கு உதவலாம் தானே.
பி.கு. நீங்கள், அசோக், பொதியவெற்பனுடன் சேர்ந்த Photo அனுப்பி வைக்கிறீர்களா?
அன்புடன்
செல்வி
20-04-89
._._._._._.
செல்வியின் கவிதைககள்
மீளாத பொழுதுகள்
அமைதியான காலைப் பொழுது
காலைச் செம்மை கண்களைக் கவரும்
காகம் கரைதலும் இனிமையாய் ஒலிக்கும்
நீண்டு பரந்த தோட்ட வெளிகளில்
தென்றல் தவழ்ந்து மேனியைத் தழுவும்
எங்கும் அமைதி! எதிலும் இனிமை!
நேற்று வரையும்
அமைதியான காலைப்பொழுது
பொழுது புலராக் கருமை வேளையில்
தட தடத்துறுமின வண்டிகள்
அவலக் குரல்கள்: ஐயோ!அம்மா!|
தோட்ட வெளிகள் அதிர்ந்து நடுங்கின
அங்கு மிங்கும் காக்கி உடைகளாய்…
ஆட்கள் வெருண்டனர்
அள்ளி ஏற்றிய இளைஞர்கள்
மூச்சுத் திணறினர்.
தாய்மையின் அழுகையும்
தங்கையின் விம்மலும்
பொழுது புலர்தலின்
அவலமாய்க் கேட்டன.
காகம் கரைவதும் நெருடலாய் ஒலித்தது
மெல்லிய ஒலிக்கும் பயத்தையே தூண்டின –
எங்கும் அச்சம்: எதிலும் அமைதி,
தென்றல் சிலிர்ப்பில் உணர்வே இல்லை
காலைச் செம்மையை ரசிப்பதை மறந்தோம்…
நேற்று வரையும்
அமைதியான காலைப்பொழுது!
._._._._._.
கோடை
அந்திவானம்
செம்மையை விழுங்கும்
அலைகள் பெரிதாய்
கரையைத் தழுவும்
குளத்தோரத்துப் புற்களின்
கருகிய நுனி
நடக்கையில்… காலை நெருடும்
மேற்கே விரிந்த
வயல்கள் வெறுமையாய்
வானத்தைப் பார்த்து
மௌனித்திருக்கும்
வெம்மை கலந்த
மென் காற்று
மேனியை வருடும்.
புதிதாய் பரவிய
சாலையில் செம்மண்
கண்களை உறுத்தும்
காய் நிறைந்த மாவில்
குயிலொன்று
இடையிடை குரலெழுப்பும்.
வீதியில் கிடந்த கல்லை
கால் தட்டிச் செல்ல
அதன் கூரிய நுனி
குருதியின் சுவையறியும்.
ஒதுங்கிப் போனகல்
ஏளனமாய் இனிக்கும்.
இதயத்தின் நினைவுகள் விரிந்து
சர்ரென்று வலியெடுக்கும்
வாடைக்காற்றின் சிலிர்ப்பும்
வரப்போரத்தில் நெடி துயர்ந்த
கூழாமரத்தின் பசுமையும்
நிறைந்த குளத்தின் மதகினூடு
திமிறிப்பாயும் நீரினழகுமாய்
ஒதுங்கிப்போன இனிய பொழுதுகள்
ஊமையாய் மனதுள் அழுத்தும்.
._._._._._.
விடை பெற்ற நண்பனுக்கு
மின் குமிழ்கள் ஒளியுமிழ
நிலவில்லா வெப்பம் நிறைந்த முன்னிராப் பொழுதில்
விரைவில் வருவதாய்
உனது நண்பனுடன் விடைபெற்றாய்
உன்னிடம் பகிர
எனக்குள்ளே நிறைய விடயங்கள் உள்ளன.
முகவரி இல்லாது தவிக்கின்றேன் நண்ப.
செழித்து வளர்ந்த தேமாவிலிருந்து
வசந்தம் பாடிய குயில்களும்
நீயும் நானும் பார்த்து இரசித்த
கொண்டை கட்டிய குரக்கன்கள் தமது
தலையை அசைத்தும்
எனது செய்தியை உனக்குச் சொல்லும்.
பருந்தும், வல்லூறும், வானவெளியை மறைப்பதாக
இறக்கையை வலிந்து விரித்தன நண்பா
கோழிக்குஞ்சுகள் குதறப்பட்டன:
கூடவே சில கோழிகளும்..
இந்தப் பருந்தின் இறக்கையைக் கிழிக்க
எஞ்சி நின்ற குஞ்சுகள் வளர்ந்தன.
நடந்து நடந்து வலித்துப் போகும்
கால்களின் மீது படியும் என்
மண்ணின் புழுதியை
முகர்ந்து
வீதியிலன்றி வீட்டினுள்ளும்
முளைத்துக் கிடக்கும் முட்களைப் பிடுங்கி
குப்பையைக் கிளறும் குஞ்சுகளோடு…..
இறையைத் தேட,
இறக்கையைக் கிழிக்க……
வாழ்வதை இங்கு நிச்சயப்படுத்த
கொடுமைகட் கெதிராய் கோபம் மிகுந்து
குமுறும் உனது குரலுடன்
குழந்தைச் சிரிப்புடன் விரைந்து வா
நண்பா!
._._._._._.
சிலிர்க்கும் மழைச்சாரல் தெறிக்க
தவளைகள் பின்னணி இசைக்கும் இரவு
குளிர் மிகுந்து கொடுகு மென்னுடல்
உனது இனிய அணைப்புக் கேங்கும்
பிரிதலின்றி கழிந்த பொழுதுகள்
கனவாய் மட்டுமே உணர்த்தும் கொடுமையை
எப்படி உன்னிடம் சொல்வேன்?
நெரிசல் நிறைந்த சென்னை நகரில்
எனது உணர்வை எனது கிளர்வை
எனது நேசத்தை எனது காதலை
எனது விரல்களின் மெல்லிய வருடலை
எங்ஙனம் உனக்கு உணர்த்த முடியும்?
புறாவும் அன்னமும் தூது செல்லும்
காலமா இது….
தென்றல கூட இளமையிழந்து
மௌனமாய்……
மானுட நேயம் நோக்கிய வாழ்வை
படைத்திட முயல்கையில் எத்தனை தடைகள்
கொடூரம் மிகுந்த விழிகள் தொடர
வாழ்தலின் கசப்பு நெஞ்சை நெருடும்.
மனிதம் மறந்து சவமாய் கிடந்து
வாழ்தலில் எனக்கு பிரியமே யில்லை!
._._._._._.
அர்த்தமற்ற நாள்களில்
வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்
அவலத்திலும் அச்சத்திலும்
உறைந்து போன நாள்கள்…..
காலைப் பொழுதுகளில்
பனியில் குளிக்கும் ரோஜாக்களை விட
பக்கத்தில் இளமொட்டு முகையவிழ்க்கும்
தொட்டாற் சிறுணுங்கி|யில்
கண்கள் மொய்க்கின்றன
இன்னுமெப்படி களையெடுப்பவன்
இதனைக் காணாது போனான்?
கேள்வியில் கனக்கும் மனது
விரிவுரைக்காய் வகுப்பறைக்குப் போனால்
அவிழ்க்கப்படும் பொய்கள்
விசிறிகளில் தொங்கிச் சுழல்கின்றன
அவை என் மீது விழுந்து விடும் பயத்தில்
அடிக்கடி மேலே பார்த்துக் கொள்கின்றேன்
மின்சாரம் அடிக்கடி நின்று போவதும்
நன்மைக்குத் தான்
செவிப்பறைமென் சவ்வுகள்
கொஞ்சம் ஓய்வெடுக்கின்றன.
திட்டங்களில் புதைந்து போன மூளைகள்
திட்டமிட்டுத் திட்டமிட்டே
களைத்த மூளைகள்
முகில்களில் ஏறியிருந்து சவாரி செய்கின்றன…
மூச்சுத் திணறும் இரத்தவாடை பற்றிய
சிந்தனையில்லாதது
நான் களைத்துப் போனேன்
புகை படிந்த முகத்துடன்
வாழும் நாள்கள் இது.
._._._._._.
பனியில் கலந்து கரைந்து போன இரவு…
பக்கத்து வீட்டுப் பெண்ணின் மூச்சிழுப்புப் போல
இந்த வாழ்க்கையும்…
நாய்களின் ஊளையும்
மனிதர்களின் அவலக் கீச்சிடல்களும்
செத்துப் போய்க் கொண்டிருக்கும்
வாழ்வின் இருப்பை உறுதிப்படுத்துகின்றன.
எனக்குள்,
பனிக்காக அணிந்த உடைகளின் கதகதப்பை மீறி
இரவின் தனிமையில்
என்னைத் தூங்கவிடாது துரத்துகின்ற நினைவுகள்…
குழந்தையொன்று வீறிட்டழுகின்றது
போர்வை விலகிப்போய் குளிர் உறுத்துகிறதோ…..
அறையிலே,
தூங்கும் எனது தோழியின் கனவிலே
சூரியத் தேரேறி கந்தர்வன் ஒருவன் வரக்கூடும்.
இப்போது,
தூரத்தே கேட்கும் துவக்குச் சன்னங்கள் பட்டு
பரிச்சைக்காய்
புத்தகங்களை முத்தமிட்டபடி
முதிரா இளைஞனொருவன் இறக்கவும் கூடும்.
நிகழ்தகவுகளே இங்கு நிகழ்வுகளானதில்
அதிகாலைப் பனிதடவும் செம்மையும் கூட
தன் அர்த்தத்தை இன்று இழந்துபோனது.
._._._._._.
இராமனே இராவணனாய்
நான் மிகவும் பலவீனப்பட்டுப் போயுள்ளேன்.
என்னை யாரும் கேள்வி கேட்டுத்
தொந்தரவு செய்யாதீர்கள்
றூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கின்றது எனது இதயம்.
எந்த நேரமும்
விழுந்து வெடித்து விடக்கூடும்.
அசோகவனங்கள் அழிந்து போய்விடவில்லை.
இந்த வீடே
எனக்கான அசோகவனமாயுள்ளது.
ஆனால்
சிறைப்பிடித்தது இராவணனல்ல, இராமனே தான்.
இராமனே இராவணனாய்
தனது அரசிருக்கையின் முதுகுப்புறமாய்
முக மூடிகளை மாற்றிக் கொண்டதை
பார்க்க நேர்ந்த கணங்கள்..
இதயம் ஒருமுறை அதிர்ந்து நின்றது.
இந்தச் சீதையைச் சிறை மீள வருவது யார்?
அசோக வனங்கள்
இன்னும்
எத்தனை காலத்திற்கு?
உதாரணத்திற்கு தமிழ் மக்களின் விடுதலையை உத்தரவாதப் படுத்தப்போகும் ஒரு இயக்கத்தினுள் சுதந்திரம் இருக்கிறதா என்று செல்வி கேள்வி எழுப்பினார்.
செல்வி முடிவில்லாத துயரம். விஜய்
அப்படியல்ல விஜேய் செல்வி விஜிதரன் ரஜணிதிரணகமாவின் கொலைகளையுடன் தான் ஆரம்பிக்கிறது தமிழ்ஈழவிடுதலைப் போராட்டம்.
இதைவிட பாணந்துறையில் தமிழ்பெண்னின் மார்பை அறுத்த சிங்கள காடை எவ்வளவோ தேவலை. புலிகள் தமது வாரிசுகளுமே இந்தயுலகத்தில் இருந்து துடைத்தெறியப் பட்டுவிட்டது. இந்த அக்கிரமக்காரர்கர்கள் தமிழ்யினத்தில் திரும்பியும் வரப் போவதில்லை.
ஆனால் எப்பாடுபட்டாவது. செல்வி விஜிதரனை எங்கே புதைத்தீர்கள்? எந்த ஓடைநீரில் சம்பலை கரைத்தீர்கள் என்பதை அறியும் வரை ஒரு நல்லதமிழ்மனிதனின் மனம்சாந்தியடையுமா? என்பதே எம்முள் பூதமாக உருவெடுத்துள்ள கேள்விகள்.
சந்திரன் ராசா , அப்படியே தாங்கள் , ஜே ஆர் ஜெயவத்தனா , சிறிமாவோ பண்டாரனாயக்கா, ரஜ்சன் விஜெயரெத்தினா, பிறேமதாச,ஜானக பெரேரா போன்றவர்களையும் ஒட்டுக்குழு தலைவன் றாசிக், புளட் மோகன் இவர்கள் எல்லாரதும் பிணங்களையும் தோண்டி எடுத்து மண்டி இட்டு தயவு செய்து கேட்க முடியுமா , வடக்கு கிழக்கில் காணாமல் போனா சுமார் நாற்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இளையர் , யுவதி , கணவர் , மனைவிமார் எல்லாம் எங்கே என்று. ராசா சீக்கிரம் கேளுங்க ராசா , அது வரையும் எம் தமிழ் மக்கள் மனங்கள் சாந்தி அடையவே அடையாது.
உவருக்கு மார்பை அறுத்தது க்ற்பழித்தது பற்றியெல்லாம் இழுக்காட்டி தூக்கமேவராது. உவர் யார் என்ன செய்து பிடிபட்டவர் என்று தெரிஞசாநான் என்ன சொல்றேன் எண்டு தெரியும் உங்க்ளுக்கு.
LTTE Leader Prabhakaran, wife Mathivathani Prabakaran, son Charles Anthony and daughter Duwaraha and their luxury lifehttp://www.youtube.com/watch?v=P2zba2dy6fU
நீங்கள் என்ன கதைக்கிறீர்கள் நெருஞ்சி? இங்கு கள்ளக்காதலை பற்றியா?
கதைத்துக் கொண்டிருக்கிறோம். ஒருமனிதநேயம் படைத்த பெண்கவிஞர் பல்களைக்கழக மாணவி அறிவுக்கு உயிர்யூட்ட ஒருமனிதஜீவன் விடுதலையை வென்றுறெடுக்கிறோம் என்று சொன்ன ஆயுதாரிகளால் காணாமல் ஆக்கப்பட்டதைத் தானே கதைத்துக் கொண்டிருக்கிறோம்.
கொலைதீர்வல்ல தீரப்பமே என்று சொன்னால்…. திருப்பதிற்காக கொலை செய்யலாமா? நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
எங்கு பின்னுாட்டம் இடுவதானாலும் ஒன்றுக்கு நுாறு தடவை சிந்திக்க வேண்டியிருக்கிறது. அப்படியொரு சூழல். வன்மத்தை சுமந்தலையும் எழுத்துலகு.
செல்வி, உன்னைப் பற்றி முழுதாக அறிந்திலோம். அறிந்தபோது. காலங்கடந்து பெருகும் துக்கம். உன் தொடர்பான யாவற்றையும் அறிந்துகொள்ளும் ஆவல் பெருகுகிறது. நன்றி யசோதா.
இந்த கவிதை செல்வியின் ஒரு சொல்லாடலுக்கு உரை சொல்ல தகுதி
இருக்கிறதா? நெருஞ்சி. என்னமா? அமர்க்களம் பண்ணுகிறீர்கள் நீங்கள்.
கிருசாந்தி மீதும் , சாரதாம்பாள் மீதும் , கோணேஸ்வரி மீதும் , இசைப்பிரியா மீதும் இன்னுமின்னும் இது போன்ற கொடுரமாக , கூட்டாக பாலியில் கொடுமை செய்து கொல்லப்ட்ட எம் தமிழ் குலப் பெண்கள் மீது வராத ..கண்ணீர் , துக்கம் , பரிவு , பாசம் தனியே ரயனிதிரணகமா மீதும் ,செல்வி மீதும் வருவது , எம்மைப் போன்ற சாதரண தமிழ் மக்களை ஒரு போதும் அழவும் வைக்காது, ஆச்சரியப்படவும் செய்யாது. நீங்கள் எங்கும் எப்போதும் புலிகளை எதிர்ப்பதே என்ற குறிக்கோழுடன் எழுதுகிறீர்கள் , அலைகிறீர்கள், அழுகிறீர்கள்:
நன்றி. நீங்கள் உண்மையில் முள்ளுத்தான். கொலைக்களத்தை நோக்கி நடை பயிலுங்கள். வாழ்த்துக்கள்.
தமிழில் ஒரு பழமொழியிருக்கிறது. தென்னையில் எறி கையை விட போகிறேன் என்று சொல்பவனை எம்மால் எட்டுவரை தான் பிடிக்க முடியும். அப்புறம்…..?
உங்களுக்கு ஒரு சிறுவிளக்கம் மாக்ஸியம் எங்கேயும் மறந்தும் தற்கொலைக்கு தூண்டவில்லை. இந்த தவறான புரிதலை திருத்திக் கொள்ளுங்கள்.
தமிழ்நதி…
உங்கள் பிரச்சினை புரிகிறது. ஆயிரம்தடவை சிந்தித்துத்தான் ள் பின்னூட்டமிடவேன்டும். இடத்துக்கேற்ற கதை கதைக்க வேன்டுமல்லவா? யாரும் வன்மம் சுமந்தலையவில்லை தமிழ்நதி. சீரான கொள்கையிலாதவர்தாம் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் செல்வியைப்பற்றி உங்களுக்கு இன்னும் தெரிந்திருக்க வேன்டுமே. கொன்றவர்கள் யாரென்று தெரியாதா உங்களுக்கு?
விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று தவறு எது சரி என்பது பற்றிய பகுப்பாய்வு இன்மை. சரி தவறுகள் மனித வாழ்வில் இடம் பெறுபவை தான் ஆனால் வெகுஜன அல்லது மக்கள் மன்றத்தில் விடப் படும் தவறுகள் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. குறைந்த பட்சம், விடப் படும் தவறுகளை இனங்கண்டு திருத்தும் பண்பாவது இருந்திருக்க வேண்டும். நாங்கள் அனைத்திலும் புனிதம் கொண்டவர்கள் என நியாயமற்ற முறையில் புனிதங்களையே புதை குழியில் தள்ளிக் கொண்டு கொக்கரிப்பதிலும் எக்காளமிடுவதிலும் கண்ட பயன் என்ன? எங்களுக்கான அல்லது அதனுடன் கூடிய எங்களுக்கு என வலிந்து கட்டிய பிம்பங்களையும் முள்ளி வாய்க்காலில் தொலைத்து விட்டதுதான் மிச்சம். கொலை தீர்வல்ல! ஆனால் திருப்பமே?! என்று செல்வியின் விடயத்தில் சொல்வதில் இருக்கின்ற தர்க்க நியாயங்கள் என்ன ? செல்வி போன்றவர்களின் மரணத்தின் மூலம் ஏற்பட்ட திருப்பம் என்பது என்ன? முள்ளி வாய்க்காலா? என்பதை எனது மனம் ஒப்பாமலே கேட்க வேண்டியவனாகிறேன். ஏனெனில் திருப்பங்கள் எவையும் அடக்கப் பட்ட தமிழ் மக்களுக்கு விருப்பம் தரும் திருப்பு முனையாக இருக்கவில்லை.
கொலை தீர்வல்ல! ஆனால் திருப்பமே?! என்ற வில்லங்கமான கருத்தியல் குறைந்த பட்சம் பொருத்தமாக தெரிந்தது வெறும் பேனாவை தனது கருத்தியல் வெளிப்பாட்டுக்கு பயன் படுத்திய செல்வியிடம் என நெருஞ்சி குறிப்பிடும் போது புலிகளின் பார்வையை வலியச் சுமக்கும் மிகவும் அருவருக்கத்தக்க மானுட விழுமியங்களை கொண்ட சமூக நோயாளிகள் பற்றிய தோற்றம் தான் வெளித் தெரிகிறது இது ஆரோக்கியமானது அல்ல.
கொலை தீர்வல்ல! ஆனால் திருப்பமே?!என்பது நேற்று இன்று நாளையும் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கும் அரசியல் பற்றி நான் எதைச் சொல்ல? இது எத்தகைய புரட்ச்சிகர கோட்பாடு? இவ்வகை கொள்கையும் கோட்பாடும் தத்துவங்களும் சமுகத்தின் இயங்கியலில் சமமாக பயணிக்க முடியாது என்பதை காலம் இன்று உணர்த்தி அல்லவா நிற்கிறது. காலம் பதில் சொன்ன பின்பும் யானம் பிறக்கவில்லை, சிந்தனைகளை குருடாக வைத்திருத்தல் காலத்தின் தவறல்ல கால ஓட்டத்தில் சமுக பார்வையின் மந்தமே தவறுகளின் தோற்றுவாய். செல்வி பற்றியகவிதை ஒன்றை இங்கு நெருஞ்சி பதிவு செய்துள்ளார் இக்கவிதை செல்வியை விமர்சிக்க புலிகளின் பத்திரிகையில் வந்த கவிதை என நினைக்கிறேன் 1990 களின் ஆரம்ப கூற்றில் இவ்விமர்சனம் வந்திருந்ததாக நியாபகம். எனவே நெருஞ்சி என்பவர் செல்வி பற்றி நிறையவே அறிந்துள்ள ஒருவர் போலவே தென்படுகிறார். ஏனெனில் செல்வியை
இக்கவிதையை வைத்தே புலிகள் செல்வி ஒரு மன நோயாளி என்றும் விமர்சித்திருந்தனர். ஆக ஒரு மனநோயாளியின் விமர்சனத்தை கூட ஏற்ட்கமுடியாமல் அவருக்கு தண்டனை வழங்கி அதனை தமிழர் போராட்டத்தின் திருப்பு முனை யாக்கினார்கள் போலும்.
.
பெறுமதிமிக்க பதிவு ராகவன். நன்றி!.
ஞானிகள்,தீா்க்கதரிசிகள் போன்றோர் இந்த பூமியில் தோன்றி நியாயத்தையும், தா்மத்தையும், உண்மையையும் எடுத்துக்கூறியபோதிலெல்லாம் அவா்கள் யாவரையும் அவா்கள் வாழ்ந்த காலங்களில் குற்றவாளிகளாகவும் பயித்தியக்காரா்களாகவும் பார்த்ததையும், பின்பு வருகின்ற சந்ததிகளால் மட்டுமே அதன் பெருமையை உணரமுடிந்ததையே சரித்திரம் முழுவதும் நாம் காண்கிறோம் அதே நிலையிலேயே 30 வருடங்களாக நாம் இருந்துள்ளோம் நம்மால் புரியமுடியாமல் போனதை நமது சந்ததி உணரும் என்ற நம்பிக்கை ஒன்றே இப்போது மிச்சம்.
நன்றி ராகவன்.
ஜெனிவா பிரேரணை! இலங்கை ஜனாதிபதி கடும் அதிர்ச்சி! அனைத்து பொது நிகழ்வுகளும் ரத்து
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன்கிழமை ஜெனிவாவில் இந்த தீர்மான வரைவு சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அனைத்து பொது நிகழச்சிகளையும் கடந்த வியாழக்கிழமை ரத்துச் செய்திருந்தார்.
பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை ஆரம்பமான அனைத்துலக துறைமுக கழக்கத்தின், ஆசிய- ஓசியானியா பிராந்திய 12வது மாநாட்டை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்றுமுன்தினம் காலை 10 மணியளவில் தொடக்கி வைத்து உரையாற்றவிருந்தார்.
ஆனால் அவர் அந்த நிகழ்வுக்குச் செல்லவில்லை.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உடல் நலக்குறைவினால் இந்த மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை என்று இலங்கை அமைச்சர் ஒருவர், நிகழ்வில் பங்கேற்ற அனைத்துலகப் பிரதிநிதிகளுக்கு அறிவித்தார்.
ஆனால் இலங்கை ஜனாதிபதி உடல்நலக்குறைவினால் பாதிக்கப்படவில்லை என்றும் ஜெனிவா தீர்மானம் குறித்து அறிந்ததும் குழப்பமடைந்த அவர் கண்டியில் உள்ள அதிபர் மாளிகைக்கு ஓய்வெடுக்கச் சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்டியில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று முன்தினம் அவர் அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டினிஸை சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நேற்றும் இலங்கை ஜனாதிபதி வழக்கமான நிகழ்வுகள் எதிலும் பங்கேற்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி நெருஞ்சி, கோணேஸ்,
இதைத்தான் உள்ளுணர்வு எச்சரித்தது. இருந்தபோதிலும், ஏதோவொரு நம்பிக்கையில் எழுதினேன். இனியொருபோதிலும் இப்படியெல்லாம் பொல்லைக் கொடுத்து அடிவாங்கப் போவதில்லை. பொதுவெளி ஆரோக்கியமற்றதாக மாறிவருகிறது என்பதை உணர்ந்துகொண்டவளாக “இனியொரு“வில் இனியொருபோதிலும் பின்னுாட்டம் இடமாட்டேன் என்று சொல்லி விலகிக்கொள்கிறேன். நன்றி.
/பொதுவெளி ஆரோக்கியமற்றதாக மாறிவருகிறது என்பதை உணர்ந்துகொண்டவளாக “இனியொரு“வில் இனியொருபோதிலும் பின்னுாட்டம் இடமாட்டேன் என்று சொல்லி விலகிக்கொள்கிறேன். /என் கின்ற தோழிக்கு பொதுவெளிஆரோக்கியமற்றதாக இருப்பின் ஒதுங்கிக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடுமா????? சரி பொதுவெளி என்று ஒன்று உண்டா????இங்கு செல்வி பற்றிச் சொல்லவந்தவர்கள் செல்வியின்மூலமாக தங்களைப் பற்ரிச் சொல்லவந்தவர்களாவார்கள். 2 தசாப்தங்களாக மறைக்கப்பட்டிருந்த உண்மையையா இவர்கள் இங்கு கண்டுபிடித்திருக்கின்றார்கள்.
தமிழ்நதிக்கு..
பயமில்லாமல் கருத்துச் சொல்லும் காலம் எங்களுக்கெல்லாம் இப்ப வந்திருக்கு. ஏனென்டால் புலி இல்லை.
“இனியொரு“ இணையத்தள நிர்வாகிக்கு, இதுவொரு நல்ல கட்டுரை என்று தோன்றியபடியால் பின்னுாட்டம் இட்டேன். இது நஞ்சு கக்கும் இடம் என்று தெரியாமல் இங்கு வந்து பின்னுாட்டம் இட்ட என்னைச் செருப்பால் அடித்துக்கொள்கிறேன். தனிப்பட்ட தாக்குதலை எல்லாம் அனுமதிக்கிறீர்கள்… உங்கள் தளத்திற்கு என்று ஒரு மட்டுறுத்தலும் கிடையாதா? பட்டுத்தானே தெளியவேண்டும்? தெளிந்தது. கோணேஸ் என்பவருக்கு, உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தாருங்கள். உங்கள் காழ்ப்புணர்வு மிக்க தனிப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலளிக்கிறேன்.
நட்புடன் தமிழ் நதிக்கு,
இனியொரு இணையம் கடந்த வாரம் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. அதன் பின்னனதாக சில கணகக்குகளில் இருந்து பதியப்படும் பதிவுகள் மட்டறுப்பின்றி வெளிவர ஆரம்பித்தமையை கோணேஸ் என்பவரின் பின்னூட்டங்களின் பின்னரேயே அறியக் கூடியதாக இருந்தது. அவை கவனத்திற்கு வந்ததும் நீக்கபட்டுள்ளன. தவறுக்கு மன்னிப்புக் கேட்கிறோம். -sj
இணையத்தில் திருடியிருந்தால் என்ன விடயம் சரியாகவும் நியாயமாகவும் இருந்தால் போதுமானது. நெருஞ்சி நான் விடுதலை புலிகளை அவர்களது ஆயுத போராட்டத்தை தீவிரமாக ஆதரித்தவன், ஏனெனில் சிங்கள பேரினவாத அடக்கு முறையில் இருந்து முதலில் விடுபடவேண்டும் அதன் பின்பு தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை களைந்து முழுமையான விடுதலையை பெற முடியும் என்பதால். அவைபோக …………… புலிகளின் அரசியல்!, தோல்வியை மாத்திரமே தரக் கூடியதாகவும் விடாப் பிடியாக அதே அரசியலை முன் கொண்டு சென்றதுமே தோல்விக்கு காரணம் என பலர் நினைக்கின்றனர். நெருஞ்சி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
யாரென்று தெரியாத (நான் அறிந்த வரை மூன்று மூட்டை பூச்சிகள் இருப்பதாக நினைக்கிறேன் ஒன்று KP , உருத்திரகுமாரன் , ஐரோப்பிய புலிகள்) பல ஏஜெண்டுகளின் அடிவருடிகளாக செயல்பட்டு தமிழ் மக்களின் அரசியலை அலைகழிக்கும் இவர்களில் எந்த புலிகளை தமிழ் மக்களை அணுகச் சொல்லுகிறீர்கள்?. வெறும் புலிக்கொடிக்கு பின்னால் மகிந்த வந்தாலும் ஆதரிக்க வேண்டிய அவல அரசியலில் தமிழ் மக்கள் தள்ளப் பட்டு உள்ளமை தான் இன்றைய நிலைமை. இருப்பினும் எமது மக்கள் அடக்கு முறைகளுக்கு எதிராக போராடும் வலிமையை பெற்று விட்டார்கள் என்பது களநிலைமை தெரிவிக்கின்றது. எனது பிரார்த்தனைகள் எல்லாம் பினாமிகள் ஏஜெண்டுகள் போராடும் மக்களுக்கு தலைமையாக இடையில் வந்து குந்தி கொள்ளக் கூடாது என்பது தான்.
நெருஞ்சியின் அரசியல் தமிழ் மக்களுக்கு புலிகள் தவிர்ந்த வேறு அரசியல் இல்லை என்றாகிறதா? ஆமாம் மகிந்த அரசுக்கும் சிங்கள பேரினவாத அரசுக்கும் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு வலிந்து கட்டி உதவும் ஏனைய நாடுகளுக்கும் குறிப்பாக இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்கு புலிகள் தவிர்ந்த வேறு அரசியல் ஒன்று இருக்கக் கூடாது என்பதில் உறுதியாகவே இருக்கின்றனர், இருப்பர். காரணம் புலிகள் ஆயுத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அழிக்கப் பட்டு விட்டார்கள் என்பதுவும் எஞ்சி இருக்கும் புலிகளுக்கு அரசியல் எதுவும் இருக்கப் போவதில்லை என்பது இன்றைய யதார்த்தமாக உள்ளதுமாகும். ஆகவே பழைய புலி அரசியலை அதன் பெருமையை மட்டுமே பேசுவதன் மூலம் மக்களின் புரட்ச்சி சிந்தனை புலத்தை புலி அரசியலுக்குள் மாத்திரம் சுத்தி அலைய விடுவதே இன்று பலருக்கு நன்மையாக தெரிகிறதோ?
ஆக நெருஞ்சி உங்களது அல்லது உங்களை போன்றவர்களின் அரசியல் தெரிந்தோ ! தெரியாமலோ இலங்கை அரசின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு பயன் படுத்த மட்டுமே உதவ முடியும். எனவே தொடர்ச்சியாக ஒரு குருட்டுத்தனமான நிலைமைக்குள் அரசியலுக்குள் நாம் உழலுவதை விட புதியதாக சிந்திக்க தொடங்குவோம்.
நன்றி….
கனடா,ஈழம்,தமிழ்நாடென்று விரிந்தவெளிகளில் இலக்கியத்தேடலுக்காய் திரிந்தலைகிற தமிழ்நதியா விரல்சூப்பும் பிள்ளையாட்டம் கண்ணைக்கசக்கி இனியொரு மேலாளருக்கு மட்டறுங்கள் என்று மனு அனுப்பியிருக்கிறது.பொதுவெளிஎன்றால் மட்டறுத்தல் எதற்கு???மட்டறுத்தல் யாருக்கு???நஞ்சு கக்கும் இடம் என்றால் செருப்பால் அடித்துக்கொள்வதுதான் தீர்வென்றால் எத்தனை செருப்புகள் தேவை. நஞ்சே கக்காத இணையவலை எது என்று எனக்குத்தெரியப் படுத்துங்கள்.உங்களுக்கானகருத்துக்கு இயைபானவை நல்ல இணையமென்றும், உங்களை விமர்சிப்பவை நச்சுத்தோப்புக்கள் என்றும் எப்படி உங்களால் சொல்லத்தோன்றுகின்றது. பொதுவெளியில் வெளியான கருத்திற்கு நீங்களும் பொதுவாகவே கருத்தாடுவதைவிடுத்து மின்னஞ்சல் கேட்டு மிரட்டத்துணிவது கூட உங்களின் மட்டறுத்தலுக்குள் அடங்காதோ?????
இக் கட்டுரை மீள் பதிவல்ல. கட்டுரையாளரால் இனியொருவிற்கு அனுப்பிவைக்கப்பட ஆக்கம். ஏனை இணையத்தளங்கள் குறித்து அவர்களிடமே நீங்கள் கேட்டறிந்து கொள்ளலாம்.
நெருஞ்சி அவர்களுக்கு, புலிகளின் தோல்விக்கு உங்களைப்போன்ற “வன்முறை மனோபாவ வியாதியாளர்களின்” மன நிலைதான் காரணம் என்பதை தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறீர்கள். செல்வி தொடர்பான கட்டுரை செல்வியின் பத்தாம் ஆண்டின் நினைவாக எழுதப்பட்டு பிரசுரமானது. அதனை சுருக்கி சில இணையத் தளங்கள் வேறு பெயாகளில் பிரசுரித்தன. பின் செல்வியின் 17ம் ஆண்டின் நினைவாக சில மாற்றங்களோடு மீண்டும் பிரசுரமானது. . இன்று, 20ம் ஆண்டின் நினைவாக கட்டுரை முன்னைய விடயங்களோடு, சில மாற்றங்களை தாங்கி இனியொருவுக்கு அனுப்பி வைக்கப்ட்டது. நீங்கள் செல்வி மீது “புலித்தன காழ்ப்புணாச்சியினால்” கொதி நிலை கொண்டு உளறுவதால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை. இந்த நேரத்தை ஆரோக்கியமான எழுத்துக்களுக்கு பயன்படுத்த முயலுங்கள். யசோதா .
அசோகவனத்திலிருந்து சீதை சிறைமீட்கப் பட்டுவிட்டாள். அந்த நாள் 19.05. 2009.
எழுத்துக்கள் கையால் எழுதுவதாக இருந்தாலும் அதுஅடிமனத்தில் இருந்தே உருவாகிறது. உங்கள் மனத்திலோ அழுக்கு நீர் ஓடிக்கொண்டிருக்கிறது நெருஞ்சி. இது குடிப்பதற்கு மட்டுமல்ல சுவாசத்திற்கே உதவாதவை.
னெருஞ்சி.
உங்கள் மனதில் இருப்பது கீழ்தரமான வக்கிரம். வெறுப்பு. மேலும், ரயாகரன் போன்றவர்களிலும் கேவலமானது. ஒரு கட்டுரை, அதை யாரும் – நிங்கள் குறித்த இணையங்கள் உள்ளிட – எதிர்க்கவில்லை, கட்டுரை என்ன சொல்லுகினறது சரியா பிழையா எனபதை நிங்கள் சொல்லாமல் வா.. போ…என்று… இனியொரு இதையும் பின்னூட்டாமாக போடுவது வெறுப்பேத்துகிறது…….
She against LTTE because of her few family members were in other fighting group at the time
செல்வி என்ற பெயரில் இன்னொரு அழகிய பெண்மனி மனித உரிமை காப்பகராக ? புலிகலால்நியமிக்க பட்டாரே, அவர் என்ன வானார்,