கடந்த பல மாதங்களாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை (தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார்) இன்று காலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் காலமானார்.
கடந்த பத்து வருடங்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் மலேசியாவில் சிகிச்சை பெற்றுவந்தார். தனது மேல் சிகிச்சைக்காக இந்தியா வந்த அவர் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு கருணாநிதி அரசு மறுத்தது தெரிந்ததே.
மக்களின் அன்றாட மனிதாபிமான செயற்பாடுகள் கூட அதிகாரவர்க்க அரசியலின் மரணித்துப் போனதற்கு பிரபாகரனின் தாயார் ஒரு குறியீடு!
பிரபாகரனின் தாயார் ஏங்கி , ஏங்கி வாழ்ந்த எத்தனையோ தாய்மார்களீன் அடையாளம்.தன் கடைசி மகன் பேரப் பிள்ளகள் என வாழ்ந்த அவரது வாழ்க்கை வட்டம் உடைந்து தனித்துப் போன பறவையின் கடைசிப் பயணம்.ஏங்கி ஏங்கியே அவரது கடைசி மூச்சும் நின்றூ விட்டது.
கடைசிப் பயணம் இங்கு மனிதம் என்றால் என்ன என உணராத மகிந்த
பிரபாகரனின் துப்பாக்கிக்கு தமது பிள்ளைகளைப் பறி கொடுத்த எத்தனையோ தாய்மார் பிரபாகரனின் துப்பாக்கிக்கு பயந்து தமது பிள்ளைகளை தொலைதேசம் அனுப்பி விட்டு கடைசி வரை கண்ணில் காணமுடியாமல் மரணித்த தாய்மார் அவர்களும் ஏங்கி ஏங்கித்தான் செத்தார்கள். இந்த தாய் அந்த தாய்மாரின் வரிசையில் சேர மாட்டார். இந்த தாய்க்ககு கிடைக்கும் இறுதி இரங்கல் உரைகள் அனுதாபங்கள் அந்த தாய்மாருக்கு ஏன் கிட்டவில்லை?தாய் என்றால் ஒரே உணர்வுதானே?
மனித மிருகங்களை இனம்காட்டிய ஒரு மகனைப் பெற்றெடுத்த தாய். அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
துயரம் என்பது எல்லோருக்கும் ஒன்றே.பாசிஸ்ட் ஆகா இருந்தாலும் கம்யூனிஸ்டாக இருந்தாலும் வேதனை ஒன்று தான்.
நீங்கள் இதில் எந்தப் பிரிவு?
அவர் எந்தப்பிரிவு என்று தெரியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும். நீங்கள் பாசிஸ்ட்டுகளின் பிரிவு.
அதுசரி இராசா, தாங்கள் எதிரணிக்குத் தாவி சிலநாட்கள் தானே. அதனால் என்னை இன்னமும் மறக்கவில்லை! வெட்டிவேலை இன்றி எம்மோடு காலம் தள்ளமுடியாது எதிரணி போயும் வேறு வேலை கிடைக்கவில்லைபோலும்.
இங்கு பாசிஸ்ட்டுகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் உரிய கேள்வி தானே இருக்கிறது. நீங்கள் என்ன பதில் சொல்லுகிறீர்கள்?. தனிமனிதருடைய தாக்குதல்களை நிறுத்திவிட்டு விவாதற்கு வாருங்கள் சூரியா! முடிந்தால்.
”மாற்று அரசியலுக்குள் மரணித்துப்போன மனிதம்”. சில பின்னூட்டங்களைப் பார்த்தால் இப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது.
”மாற்று அரசியலுக்குள் மரணித்துப்போன மனிதம்”.
பிழையான புரிந்து கொள்ளுதலே எம்மை முள்ளிவாய்கால் வரை துரத்தி விட்டது. எத்தனையோ தாய்மாரை புலிப்பாசிசம் மனதளவில் சிதைத்துள்ளது. இரத்தம் சொட்ட கொன்று போட்டுள்ளது. குழந்தைக்கு சோறு பிசைந்து கொண்டிருந்த சுதந்திராதேவியை புலித் துப்பாக்கி குருதியில் சரித்தது. அப்போதெல்லாம் பார்வதிக்காக இரங்கும் இவர்கள் எல்லாம் எங்கு போனார்கள்? பார்வதியம்மா இவ்வளவு ஆரவாரப்படும் அளவிற்கு தமிழ் இனத்திற்கு என்னதான் செய்தார்? ஒரு வயோதிப மாது இயற்கை மரணம் அடைந்துள்ளார். இது அவரின் குடும்பம் உறவுகள் சம்பந்தப்பட்ட துயரம். தமிழினத்தின் துயரமா?
பிழையாகப் புரிந்துகொண்ட நாங்கள் எல்லாரும் முள்ளிவாய்க்கால் வரை வந்துவிட்டோம். சரியாகப் புரிந்துகொண்டு ,அரசோடு ஒட்டி உறவாடும்நீங்கள் எல்லாரும், தயவு செய்துநிக்கும் அந்த மானமுள்ள, கவுரவமான , கம்பீரமான இடம் எது என்று தயவுசெய்து எமக்கு அறியத்தரமுடியுமா நண்பரே…?அரசோடு சேர்ந்தால் வடக்கு கிழக்கில் தேனாறும் , பாலாறும் ஓடும் என்று டக்கிள்ஸ் அன் கோ எல்லாரும் 25 ஆண்டுகளிற்கு மேலாய் ஒரு கோப்பையில் உண்டு, ஒரு பாயில் படுத்து உங்கள் இனத்தின் விடுதலையையே காட்டிக்கொடுத்தீர்கள்: கடசியில் வெள்ள நிவாரணத்துக்கே வெளி நாடு வாழ் தமிழரிடம் கை ஏந்து கிறீர்கள். சொந்தக்கட்சி வைத்து இருந்தும் தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிடமுடியாமல் பயந்து அழுகுறீர்கள்: இன்ட்க லட்சணத்தில் நீங்களெமக்கு வழிகாட்டப் போகுறீர்களாம். தான் போக மாட்டாத மூஞ்சூறு , விளக்குமாத்தையும் கொண்டு போக ஆசப்பட்டுதாம் .
தயவு செய்து, உங்களுக்கு துயரம் இல்லை எனில் நீங்கள் அழவேண்டாம் ஒட்டுமொத்த தமிழரின் துயரமா எண்டு கேட்பதற்க்கு நீங்கள் என்ன தமிழரின் ஒட்டுமொத்த கொந்தராத்துக்காறரா….. ? முதலாளித்துவ ஏகபோகம் இந்திய பாசிசம் சிங்கள பாசிசம் புலிப் பாசிசம்….. இவை அனைத்தும் எம்மை மனதளவில் மட்டும் இல்லை உடலளவிலும் வதைத்தன வதைக்கின்றன. மாண்டாரை மதிப்பது பண்பு.
பார்வதி அம்மாளின் மரணம் துயரத்திற்குரியதே! அவரது குடும்பத்தினரிற்கு எனது அனுதாபங்கள். எனினும் அவரை தேசத்தின் அன்னை என வர்ணிப்பது தான் கொஞ்சம் ஓவர்.
இது அவரின் குடும்பம் உறவுகள் சம்பந்தப்பட்ட துயரம். இதற்குள் அரசியல் கலந்து அரசியலில் சம்பத்தப்படாத அவரை அவமானப்படுத்தாதீர்கள்.
அந்த அம்மாவோ அவரது குடும்பமோ அப்படியொரு பேரை கேட்டுவாங்கவில்லை(இடையில் இருபவர்கள் பற்றி அளுது வடியத்தேவையில்லை )… பிரபா மீது இருக்கும் கோபத்துக்காக அந்த ஆத்மாவை அசிங்கப் படுத்தாதீர்கள்.. “ஒவ்வோர் ஈழத்தாயின் அவல வாழ்வின் குறியீடு அவர்” ஆம் பிரபாவும் ஓர் ஈழத்தாயின் குழந்தை. சிங்கள பேர் இனவாதம் யாரைத்தான் விட்டுவைத்தது?
எனது பின்னூட்டத்தில் அவரை எங்கு அசிங்கப்படுத்தியுள்ளேன்? உங்கள் வார்த்தையின் படியே ஒவ்வொரு ஈழத்தாயின் வாழ்வும் மரணமும் இதே அவலமாய் இருக்க இவருக்காக மட்டும் ஏன் இந்த அழுகை?
தமிழீழ விடுதலைப்போராட்டம் ஆயுதமேந்தி நடாத்தப்பட்டபோது பல கொடூரங்களும் நடந்தேறியுள்ளதை மறுப்பதற்கில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தின் போது அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரங்களையும் ஏற்றுக்கொள்கிறோம். விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் சேர்ந்திருந்து கொடூரங்களை செய்தவர்களும், அதற்கு வழிகாட்டியாக இருந்தவர்களும் இன்று டக்ளஸ்சாக, கருணாவாக சிங்கள அரசுடன் ஒன்றிவிட்டதை, நீங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைக்கு சோறு பிசைந்து கொண்டிருந்தபோது மட்டுமல்ல, குழந்தைக்கு பாலூட்டும்போது புலிகள் காமப்பசியை தீர்த்துக்கொண்டதாகக்கூட உங்களால் எழுதமுடியும். இறந்த பிணத்தைப் புணரும் சிங்களவனின் குணம் அவனோடு இசைந்த தமிழனுக்கு இல்லாமலா போய்விடும்.
அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைவனே பொறுப்பேற்கவேண்டியது நியதி. “வென்றால் அரசன், தோற்றால் தேசத்துரோகி” இது வரலாறு.
வன்னியன் அவர்களே பிழையான இடத்தில் பிழையான கேள்வியை கேடகிறீர்கள்.
மானமுள்ளஇ கவுரவமான இ கம்பீரமான இடம் எது என்று தயவுசெய்து எமக்கு அறியத்தரமுடியுமா நண்பரே…
காலம் கடந்த கேள்வி. மக்களை மதித்து நடந்திருக்க வேண்டும் விடுதலை யாருக்கு என புரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு கொலை செய்யும் போதும் இது எங்கு போய் முடியும் என யோசித்திருக்க வேண்டும். அதையெல்லாம் விட்டு விட்டு பார்வதியம்மா இல்லையென்றால் உலகமே நின்று விடும் என பிலிம் காட்டி தள்ளாத வயதில் உலகத்தை விட்டு நீங்கியவரை வைத்து அரசியல் செய்பவர்கள் மோசடியானவர்கள்.
எத்தனைப் பேரப்பா இப்படி கிளம்பியிருக்கிறீர்கள்? காலக் கொடுமையடா சாமி.
இதயம், என் கேள்வி சரி,நீர் நிக்கும் இடம்தான் பிழை.தலைவர் தான் செய்ய நினைக்கும் அல்லது செய்யப் போகும் ஒவ்வொரு காரியத்தையும், அல்லது செயலையும் ஒவ்வொரு ஈழத்தமிழனிடமும் அபிப்பிராயம் கேட்டு, அவெர்கள் சொல்ல்வதை மதித்து போராட்டம் நடத்தி- ( முக்கியமாக உம்மைக் கேட் கவில்லை என்ற கோவமோ)இருக்க வேணும் என்றுநினைத்துவிட்டீர் போல.ஒரு வேளை படிச்சவையக் கேட்டு இருக்கலாம்தானெ என்று சொல்கிறீரோ. படிச்சவையாலதானெ என்றைக்கோ கிடைக்கவேண்டிய தேசம் எமக்கு இல்லாமல் போனது. இலங்கைக்கு சுதந்திரம் வழங்கும் போது, இலண்டனுக்கு போய் , எமக்கு தமிழருக்கு ஒரு தேசம் தேவை இல்லை,நாங்கள் சிங்களவருடன் சேர்ந்து வாழ்வோம் , எமக்கு பிரச்சனை இல்லை என்று சொன்னது யார் தேசியத் தலைவரா நண்பரே . தலைவர் தான் செய்த அத்தனையையும் தமிழ் ஈழம் என்ற ஒன்றுக்கு ஆகவே செய்தார். அதனால்தான் தமிழ்மக்கள்நாம் உமாமகேஸ்வரனுக்கோ, பத்மனாபாவுக்கோ இல்லை சிறிசபாரெத்தினத்துக்கோ பின்னால் போகாமல், தேசியத் தலைவர் பிரபாகரன் பின்னால் போனோம்.மக்கள் ஆதரவு இல்லாமால் இந்த அளவுக்கு தேசியத் தலைவரால் போராட்டத்தை ஒரு போதும்நடத்தி இருக்க முடியாது . அப்படிநடத்த முடியும் என்றால் அதை நீரும்நடத்தலாம் ,நானும்நடத்தலாம்நண்பரே.தேசியத் தலைவரை, எகிப்த்திய முன்னைநாள் அதிபர்முபாரக் அலி யப் போல்,சொந்த மக்கள் ஒன்றும் அவெரைத் தூக்கி எறியவில்லை என்பதை நீர் நினைவில் வைத்திரும்நண்பரே.புலிகள் அல்லது தமிழ்ர் போராட்டம் தோற்றதிற்கு சகோதரப்படுகொலையோ அல்லது யாழில் இருந்
து
முஸ்லீம்களை வெள்யேற்றியதோ , தலைவர்களைக் கொன்றதோ, பஸ்சுக்கு குண்டு வைத்ததோ முக்கிய காரணமே அல்ல. இதையேதான் சிங்களவரும் தமிழருக்கு செய்தார்கள்( சுதந்திரக் கட்சியும், ஜ்க்கியதேசியக் கட்சியும் ஜேவிப் யை அழிக்கிறேன் என்று பல ஆயிரக் கணக்கில் தனது சொந்த இனத்து இளையர்களையே அழித்து இருக்கிறார்கள்- அப்படி இருந்தும் ஆட்சியில் அவை ரெண்டுமே மாறி மாறி வருகின்றன)இன்னும் எத்தனை காலம் இதேபல்லவியைப் பாடப் போறியள் .ஏதோ புலிகள் தான் மாற்று இயக்கத்தவையைக் கொலை செய்தவை, அவையள் சும்மா கைகட்டி , வாய் பொத்தி பாத்துக்கொண்டுதானேநின்றனர்.புலிகள் இல்லாத இந்த 2 வருடத்தில் எத்தனை கடத்தல், கொலைகள் வடக்கு கிழக்கில். கேட்டால் முன்னைநாள் புலிகள்; பின்னை நாள் புலிகள் எண்டு சொல்லுறியள்.நண்பரே , பாலஸ்த்தீனப் போராட்டமும் ,காஸ்மீர் போராட்டமும், ஏன் வெற்றி பெறவில்லை என்பதற்குப் பின்னால் உள்ள காரணம் என்னவொ அதே காரணம் தான் எமது போராட்டம் வெற்றி பெற முடியாமல் போனதுக்கும் உள்ள காரணம். கிழக்குத் தீமோரும்,கிழக்குச் சூடானும் பிரியக் காரணமாய் இருந்த என்ன அந்தக் ” காரணம் ” எம்மிடம் இல்லையோ , அதே காரணம் தான் எமது போராட்டமும் தோல்வி அடைந்து போகக் காரணம். இனியாவது தெளிந்து அறிந்து பேசவும். குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வேண்டாம்
வடக்கே தலை வைத்து படுக்கவே கூடாது என் கிறபோது வடக்கைப் பகைத்தோம் வலியைப் பெற்றோம்.
“மக்களின் அன்றாட மனிதாபிமான செயற்பாடுகள் கூட அதிகாரவர்க்க அரசியலில் மரணித்துப் போனதற்கு பிரபாகரனின் தாயார் ஒரு குறியீடு!” பிரபாகரனின் நன்மை தீமைகள் அவர் பற்றிய ஆதரவு எதிர்ப்பு அல்லது அவர் பற்றிய மதிப்பீட்டில் இருந்து அவரின் தாயாரின் மரணத்தை பார்க்கமுடியாது, மாறாக இனிஒரு குறிப்பிட்டது போல ஒவ்வோர் ஈழத்தாயின் அவல வாழ்வின் குறியீடு அவர். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் மற்ற ஈழத்தாய்மாரிற்கு இல்லாத அழுகை இவருக்கு மட்டும் ஏன்? பிரபாகரனின் தாயார் என்பதாலா?
உமது மண்டைப் பிழைக்கு மருந்து பெற்றால் மட்டுமே பார்வதி அம்மா எனும் மூதாட்டிக்காக ஏன் அழுகை என்பது தெரிய வரும்.
அஞ்சலி செலுத்த அனுமதி எதிர்பார்த்து காத்திருக்கும் கூட்டமைப்பு,நாடு கடந்தவை.
விதியே! விதியே! தமிழ் சாதியை என் செய நினத்தாய்….!
வன்னியன் அவர்களே படித்த படிப்பிற்கும் மக்களை நேசித்து அவர்கள் மேன்மைக்காகப் போராடுவதற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. உங்கள் தலைவரின் பின்னால் எத்தனை படித்தவர்கள் நின்றார்கள். (இராஐ மனோகரன் உருத்திரகுமாரன்) என்ன கிழித்து விட்டார்கள்? அடிப்படை நேர்மை அறிவு அற்ற போரட்டத்தால் விளைந்த விளைவுகளை கண்முன்னே காண்கிறீர்கள். தொடர்ந்து மக்களை ஏமாற்றவே இந்த பார்வதி அம்மாவின் மரணத்தை புலி வியாபாரிகள் பயன்படுத்துகிறார்களே ஒழிய அவருக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம். புலி 30 வருடங்கள் தாக்குப் பிடித்தமைக்கு காரணம் இலங்கை அரசின் தொடர்ச்சியான கொடூரங்களும் திமிருமேயாகும். எப்படி கண்களை மூடிக்கொண்டு என்னை டக்ளஸின் ஆள் என கருதி கருத்தெழுத்துக்கிறீர்களோ அதே போலத்தான் புலியையும் நிங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அரசியல் தெளிவைப் பார்த்தால் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் மட்டுமல்ல கொள்ளுப் பேரர்களும் சுதந்திமாய் வாழ முடியாது.
வடக்கு கிழக்கில் கடந்த இரண்டு வருடங்களாகவா கடத்தல் கொலை கொள்ளை எல்லாம் நடக்கிறது? ஒரு போராட்டம் தோல்வியடைந்து சீரழியும் போது சமூகத்தில் அதன் விளைச்சல் இதுதான். உங்கள் தலைவர் சரியான இடத்தில் சரியான தருணத்தில் போராட்டத்தை நிறுத்தியிருந்தால் கூட தமிழினம் தப்பி பிழதை;திருக்கும் பார்வதியம்மாவும் ஏக்கமில்லாமல் இயற்கையெய்தியிருப்பார். தலைக்குப் பின்னால் நின்ற படித்த வெளிநாட்டவர் எல்லாம் அமெரிக்கனின் கப்பல் வரும் என சொல்லி கொடுத்து மாட்டிவிட்டார்கள் என்பதே உண்மை. நீங்கள் டக்ளஸையும் கருணாவையும் பார்த்து பல்லைக் கடித்துக் கொண்டிருங்கள்.