கருணையும் கண்ணீரும் கூட அதிகாரம் அனுமதிக்கிவறைதான். கண்ணீருக்கும், கருணைக்கும், நீதிக்கும் தன் எல்லை எதுவரை என்பது தெரியும். எங்கே பாய வேண்டும் எங்கே பதுங்க வேண்டும் என்பதும் தெரியும். அது தெரியாமல் போனால் நீங்கள் ஆரியவதிக்காக மட்டுமல்ல வன்னி செல்வீச்சில் கருவோடு சேர்த்து கொல்லப்பட்டாளே ஒரு தாய் அவளுக்காகவும் போராட வேண்டும். இந்த கருணையும் நீதி கோரலும் நெருப்பு போன்ற ஒளியை அந்த மக்களுக்காக ஏற்றும் என்றால் அது மட்டுமே அறம். ஆரியவதிக்காகக் கோரும் நீதியின் மூலம் நாம் நிறுவ நினைக்கும் ஜனநாயகம் எல்லோருக்குமானதாக மாற வேண்டும். அந்த ஏழையின் உடம்பில் ஏற்றப்பட்ட ஆணிகளைப் போல பல நூறு துப்பாக்கிக் குண்டுகளை உடலில் சுமந்தபடி வன்னிப் பெண்கள், குழந்தைகள் அலைகிறார்கள். அவைகளை எப்போது நாம் அப்புறப்படுத்தப் போகிறோம். ஆரியவதி மீது ஏற்றப்பட்ட வர்க்கத் திமிர் ஆணிகளை அகற்றக் கோரும் நமது குரல்கள் வன்னியின் மீது ஏற்றப்பட்ட ஆணிகளை அகற்றக் கோரினால் அதை எங்கள் உள்ளூர் எஜமானர்கள் அனுமதிப்பார்களா?
தென்னிலங்கையின் உடதெனிய எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆரியவதி வயது 49. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஆரியவதி சவுதியில் வீட்டு வேலைக்காகச் செல்கிறார். கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி சவுதி புறப்பட்டுச் சென்ற ஆரியவதி இம்மாதம் 21-ஆம் தியதி கொழும்பு திரும்பியிருக்கிறார் உடலில் 23 ஆணிகளுடன். சவுதியில் ரியாத் நகரத்தில் இருந்த எஜமானரின் வீட்டில் 5 பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்து வீட்டை சுத்தமாக பராமரித்து,உடுதுணி துவைத்து, கார் கழுவி, கக்கூஸ் கழுவி, தரையை துடைத்துப் பளபளப்பாக்கி, என எல்லா வேலைக்காரிகளும் நகர்ப்புற ஆண்டை வீட்டில் என்ன செய்வார்களே அதுவே ஆரியவதிக்கும் நடந்தது. மூன்றாம் உலக நாடுகளில் உள்ள பெண்களின் வறுமையப் பயன்படுத்திக் கொள்ளும் வளைகுடா எஜமானர்கள் வீட்டுவேலைக்கு, லாய வேலைக்கு, மருத்துவமனை சுத்தப்படுத்தும் வேலைக்கு என்று எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பலான மூன்றாம உலக நாட்டுப் பெண்களின் பாலியல் உரிமைகள் அங்கே பறிக்கப்படுகின்றன. பல நேரங்களில் சில முதிய ஷேக்குகள் இளம் இந்தியச் சிறுமிகளை திருமணம் செய்து கடத்திச் செல்வதையொத்த சித்திரவதைகளும் உண்டு. வறுமை, அந்நிய தேசம், முற்றிலும் புதிய கலாசாரம், பிள்ளைகளை, கணவனை பிரிந்த ஏக்கம் என இதை எல்லாம் விட சென்ற உடனேயே பாஸ்போட்டை பிடுங்கி வைத்துக் கொள்ளுதல் என எந்த வகையில் நோக்கினாலும் இந்த கொடூர சுரண்டல் வடிவத்திற்கு அதிகம் பலியாவது மூன்றாம் உலகப் பெண்கள்தான். ஆனால் இம்மாதிரியான சித்திரவதைகள் நடப்பது பிழைக்கப் போன அந்நிய தேசத்தில் என்பதால் நமக்கு பதட்டமும் கோபமும் தொற்றிக் கொள்கிறது.
சென்னை, கொழும்பு, மும்பை, பெங்களூர் போன்ற நகர்புறங்களில் எங்கள் கிராமத்துக் குழந்தைகளைக் கொண்டு வந்து எஜமானிகளின் மேனி அழகைப் பேண ஏவல் நாய்களாக வைத்திருக்க வில்லையா? உங்களின் குழந்தை கான்வென்ட் செல்ல எங்கள் குழந்தை புத்தக மூட்டையைச் சுமக்கவில்லையா? இது வேலைக்காரி, இது வேலைக்காரியின் மகள் என்று வெளியில் சென்றால் வித்தியாசம் தெரியும் படி எங்கள் குழந்தைகளின் தலைகள் பரட்டையாக இருக்கும் படி நீங்கள் பார்த்துக் கொள்ளவில்லையா? ஆமாம் ஆணியேற்றப்பட்ட ஆரியவதிகளை விட ஆணியேற்றப்பட்டு தப்பிவிட முடியாத படி கொலைக்களத்தில் தொங்கவிடப்பட்டுள்ள ஆரியவதிகள் மீது சாத்தப்பட்டுள்ள ஆணிகள் பிடுங்கப்பட வேண்டுமா இல்லையா? ஆமாம் எல்லா ஆணிகளும் பிடுங்கப்பட வேண்டும். அது ஆரியவதியாக இருந்தாலும் வன்னிப் பெண்களாக இருந்தாலும், திருப்பூரில் சுமங்கலித் திட்டத்தில் அடிக்கப்பட்டிருக்கும் பெண்களாக இருந்தாலும் ஆணிகள் எல்லாம் ஒன்றுதான். சில ஆணிகள் ஸ்கேன் செய்தால் தெரிந்து விடுகிறது பல ஆணிகள் ஸ்கேன் செய்தாலும் தெரிவதில்லை. அல்லது சில ஆணிகள் குறித்து நாம் பேசுவதில்லை. ஆணிகளை பேரினவாத அதிகாரம் மறைத்திருக்கிறது.
கடந்த 21-ஆம் தேதி நாடு திரும்பிய ஆரியவதி குறித்த உலுக்கும் கதைகளை எல்லா சிங்கள ஊடகங்களும் முக்கியமாக வெளியிட்டன. பௌத்த பிக்குமார்கள் ஆரியவதிக்கு நடந்ததை நாட்டின் கௌரவப் பிரச்சனையாக்கினார்கள். கொழும்பில் சிங்களர்கள் வீட்டில் மலையாளப் பணிப்பெண்களை வீட்டு வேலைக்கு வைக்கக் கூடாது என்று மலையாளிகளுக்கு எதிராக இயக்கம் எடுத்தவர்களின் வாரிசுகள் ஒரு ஏழை பணிப்பெண்ணுக்காக தெருவுக்கு வந்தார்கள். கண்ணிமையில் எத்தனை ஆணிகள், கையில் எத்தனை ஆணிகள், காலில் எத்தனை ஆணிகள் என்று எண்ணிக்கையை சரியாகவேச் சொல்கிறார்கள். இனி ஆரியவதியின் உடலில் இருந்து எடுக்க முடியாத ஆணிகள் பற்றி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதும் அதன் ஒரு பாகம். சவூதி அரேபியத் தூதரகம் முன்னால் போராட்டம். பெண்கள் வீர முழக்கங்களை இட்டார்கள். அவர்களோடு பிக்குமாரும் பெண்ணின் கௌவரத்திற்காக வந்து போராடினார்கள். தூதகரம் மூலமாக எடுத்த முயர்ச்சியில் அந்த எஜமானர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊர்ஜிதமாகாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அது உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டு நிச்சயம் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டியவர்கள்தான் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஆரியவதியின் உடலில் ஆணியேற்றியவர் மீதான கைது நடவடிக்கை எங்கே பிறக்கிறது என்றால் ஆரியவதிக்காக உரிமைக்குரல்கள் எழுப்பியதால்தான். இந்த உரிமைக்குரல்கள் எழுப்பப்படாமல் போயிருந்தால் அவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் என்பதோடு இந்தியாவிலிருந்தோ, பாகிஸ்தானில் இருந்தோ பங்களாதேஷில் இருந்தோ சில பத்து ஆரியவதிகளை இறக்கி ஆணியடிப்பது அந்த வர்க்கத்திற்கு ஒன்றும் முடியாத காரியமல்ல. ஆக ஆணிக்கு எதிராக எழுந்த குரல்களை வரவேற்கிற அதே நேரம் வன்னிப் பெண்கள் மீது ஏற்றப்பட்டுள்ள ஆணிகளுக்காக ஏன் எழுவதில்லை. அல்லது அழுவதில்லை என்பதே எனது கேள்வி.
போர் முடிவுக்கு வந்த காலத்தில் இரு யானைக்குட்டிகளுக்காக சிங்கள ஊடகங்கள் அழுததை போர் முடிவுக்கு வந்த காலத்தில் கண்டேன் .தலதாமாளிகையின் பௌத்த மத வைபவங்களில் பயன்படுத்துவதற்கு கொம்பன்யானைகள் போதாமல் இருப்பதால் சிறு பிராயத்தில் இருந்தே பயிற்சியளித்து வளர்ப்பதற்காக இரு குட்டி யானைகளை பின்னவல யானைகள் சரணாலயத்தில் இருந்து தாயிடம் இருந்து பிரித்தெடுத்துக் கொண்டு வந்து விட்டதாக சிங்கள ஊடகங்கள் தலையங்கம் எழுதின.மூன்று வயதைக் கூட கடக்காத பால்குடி மறவாத அந்தக் குட்டிகளுக்காக மிருக ஆர்வலர்கள் கண்ணீர் விட்டார்கள். மனித உரிமை ஆர்வலர்கள் குட்டி யானைகளின் உரிமை குறித்துக் கசிந்தார்கள்.தாயின் அரவணைப்பு இல்லாமல் ஏங்கிய அந்த இரண்டு குழந்தைகளும் தாயிடம் சேர்க்கப்பட்டன. போராட்டங்களால் அது சாத்தியமானது பேரினவாதிகளின் மனதை அது கரைத்தது. இந்த யானைக்குட்டிகளிடம் காட்டிய இரக்கம் ஏன் கொழும்பு மனித உரிமை ஆர்வலர்களுக்கு மக்களிடம் இல்லாமல் போனது.
ஆக இரக்கம், கருணை, கோபம், போராட்டம், எல்லாமே இன்றைய இலங்கையில் அதிகாரத்திற்குட்பட்டதுதான். அது தன் எல்லையைத் தாண்ட மறுக்கிறது. வடக்கிலும் கிழக்கிலுமாக 89,000 விதவைகள் இருக்கிறார்கள் என்கிறது அரசு. இது ஒரு உத்தேச மதிப்பீடுதான். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விதவைகள் தமிழ் பகுதியில் இருக்கக் கூடும். அவர்களின் பிள்ளைகளை, கணவனை காலம் முழுக்க அவர்கள் தேடிக் கொண்டிருக்க வேண்டும், வாழ்வின் ஒட்டு மொத்த சேமிப்புகளையும் இழந்து விட்டார்கள், அவர்களிடம் எதுவுமே இல்லை. கொலையுண்ட மக்களுக்காகப் பேசுவதா? கொலைகாரர்களை தண்டிக்கக் கோருவதா? அல்லது பாதியில் விட்ட ஈழத்த்திற்காகப் பேசுவதா? என ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் இந்த விஷயங்கள் குறித்து பேசுவதையே இன்று கூச்சலாகப் பிரகடனப்படுத்துகிறார்கள். ஏதோ வன்னி மக்களை நாமே கொலை செய்து கொன்று புதைத்தது போலவும். அவர்களை நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தி நாடற்றவர்களாக்கியது நாம்தான் என்பது போலவும் பேசுகிறார்கள் கே.பியில் தொடங்கி தமிழகத்தின் பல முற்போக்கு அறிவு ஜீவிகளும் இதையே வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிலரின் அறிவும் அதன் மேதமையும் எவ்வளவு வன்முறையானது, ஆபசாமானது, வக்கிரமானது … என்பதை நான் ஈழ விஷயத்தில்தான் கண்டேன். கருணை, இரக்கம், நெகிழ்சித்தன்மை, இவைகளை தந்திரமான வடிவங்களைக் கொண்டு பின்னி விட முடியும். எச்சரிக்கையாக இல்லாது போனால் நாம் அடைய விரும்பும் கருணை ஒளிவட்டம் நம்மை குருதியில் கை நனைக்கச் செய்து விடும் ஆபத்துக் கொண்டது. பௌத்த மேலாதிக்க சிங்கள பாசிஸ்டுகளுக்கு எதிராக ஒரு துரும்பையேனும் கிள்ளிப் போடாத இவர்கள் போராடும் சக்திகளை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்குகிறார்கள். போராடும் சக்திகளாக தங்களை காட்டிக் கொள்கிற தேசியவாதிகளோ தங்களை சுயபரிசோதனைக்குள்ளாக்கத் தயாரில்லை வெட்டி வீரமரபும், சேர, சோழ, பாண்டிய அபத்தங்களுமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. இது அறிவு மேனையைப் போன்ற ஆபத்து நிறைந்தது இல்லை என்றாலும் இந்த அபத்தத்தை வைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் செய்ய முடியாது. என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை. திராவிட இயக்க மரபு உருவாக்கி வைத்த இந்த எதுகை, மோனை வாய்ச்சவடால்கள் மக்களுக்கு எவ்வகையிலாவது பயன்படுமா? மக்கள் சேர,சோழ, பாண்டியர்கள் இல்லையப்பா……..அவர்கள் பஞ்சைப் பாரரிகள்………..அரை வயிற்றுக்கும் கால் வயிற்றுக்கும் அலைகிறவர்கள். இந்த மேன்மைகள் எதுவும் அவர்களின் பசியை ஆற்றாது. வன்னி மக்களின் பசியையும்தான்.
காணிகள் எல்லாவற்றையும் பேரினவாதிகள் பிடுங்கிக் கொண்டார்கள், கிராம சிறுதெய்வக் கோவில்களும், இந்துக் கோவில்களும், மசூதிகளும் பௌத்த விஹாரைகளாக மாற்றம் பெறுகின்றன. இந்தியாவில் பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் வேர் விட்ட இந்துப் பாசிசம் சிறுபான்மை மக்களை அடையாள அழிப்புச் செய்து இந்து, இந்திய மயமாக்குகிறதோ அதுவேதான் இலங்கையிலும் அங்கே தமிழர்கள்.,அ ல்லது இந்துக்கள். அந்தப் பிரச்சனை இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்குமானதல்ல தமிழர்களுக்கும் சிங்களர்களுக்குமானதுதான். ஆனால் அந்த இன முரண் வடிவத்தை இன்று மடைமாற்றம் செய்து மத வடிவம் கொடுக்கிறார்கள் பௌத்த பிக்குகள். எப்படி இந்தியா காஷ்மீரிகளின் விடுதலை உணர்வை முஸ்லீம் திவீரவாதிகளின் கோரிக்கையான மாற்றி காஷ்மீரில் உள்ள பாண்டிட்களை தூண்டி விட்டு இந்து முஸ்லீம் பிரச்சனையாக மாற்றுகிறதோ அப்படி, இந்தியாவில் இந்துப் பாசிசம் செய்யும் அடையாள அழிப்பை இலங்கையில் பௌத்தம் செய்கிறது. சிலாபம் முன்னேஸ்வரி ஆலைய காளி வழிபாட்டில் பலிகொடுப்பதற்கு எதிராக கொதிக்கும் பௌத்த பிக்குகளின் மிருகங்கள் மீதான கருணையை ஒத்ததுதான் எல்லாம். அவர்கள் மிருகங்களிடம் கருணை காட்டுவார்கள். ஆனால் மனித மாமிசம் கேட்பார்கள். அதுவும் தமிழ் ரத்தமாக இருந்தால் விரும்பு உண்பார்கள். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவரான குணதாஸ அமரசேகர ” தற்போது இலங்கையில் இடம்பெறுவது சிங்கள இராஜ்ஜியம் . எனவே அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வரும் எந்தவொரு சிறுபான்மை அரசியல் கட்சியும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக வாயை திறக்கக் கூடாது ” என்று எச்சரிக்கை விடுதுள்ளார். இந்த எச்சரிக்கை இந்துக்களுக்கானது என்று முஸ்லீம்கள் ஒதுங்கலாம். முஸ்லீம்களுக்கானது என்று இந்துக்கள் ஒதுங்கலாம். இரண்டும் இல்லை மலையக மக்களுக்கானது என்று நினைக்கலாம். அதுவல்ல தீவில் சிறுபான்மை இனங்கள் என்று எதுவெல்லாம் உண்டோ அது அத்தனைக்கும் எதிரானதுதான் இன்றைய பெரும்பான்மை சிங்களப் பேரினவாதம். இன்று வடக்கில் தமிழ் மக்களுக்கு நடப்பது நாளை கிழக்கில் சிறுபான்மை முஸ்லீமகளுக்கு நடக்கும். இதற்கு நாம் அதிக நாள் காத்திருக்க வேண்டியதில்லை. கடந்த காலக் கசப்புகளுக்காக வன்னி மக்களுக்காக நாம் பேசாது போனால் நாளை கிழக்கு முஸ்லீம்களுக்காக பேச எவரும் இல்லாமல் போகக் கூடும். அல்லது எதிர்ப்பை உடைக்கிற தந்திரம் அங்கும் கையாளப்படும். பேசுவதும் போராடுவதும், குரல் கொடுப்பதும்தான் நாம் வன்னி மக்களுக்குச் செய்கிற நன்மை .நிவாரணம் செய்கிற அதே நேரம் படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், இதை முன்னுதாரணமாகக் கொண்டு இந்தப் பிராந்தியத்தில் இந்தியா விரிவு படுத்தும் மத்திய இந்திய பழங்குடிகள் கொலை பற்றி பேசுகிற நாம் வன்னிப் படுகொலைகளுக்காகப் பேச வேண்டும். நீங்கள் கொடுக்கிற நிவாரணங்கள் முக்கியமல்ல அந்த மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை அவர்களிடம் ஒப்படைக்கவும், அந்த நிலத்தில் சகல சிவில் உரிமைகளைப் பேணும் சுதந்திரமும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆரியவதிகளுக்காவும், குட்டியானைகளுக்காகவும் பேசுகிறவர்கள் இதற்காகவும் பேச வேண்டும். ஏனென்றால் நிலங்களை மக்களிடம் இருந்து பிடுங்கி விட்டு மனித உரிமை பேசுவதும், நிவாரணம் பற்றிப் பேசுவதும் பிணத்தின் வாயில் தடவுகிற நெய் போன்றதுதான்.
மன்னார் பிடிபட்டபோதே மக்கள் புலிகளோடு போகாமல் தம் வாழ்விடங்களீல் இருந்திருந்தால் சிங்களத்தின் கோபங்கள் இத்தனை மக்களயும் கொல்கிற வெறீயை ஏற்படுத்தி இருக்காது ஆனால் மக்கள் புலிகளோடு போனது இத்தனை கொடுமைகள செய்யத் துணீந்தது.அடகி,அடக்கி வைக்கப்பட்ட கோபம் வெடித்துக் கிளம்பி யுத்த முடிவில் அழிவாயிற்றூ.
ஐயா தமிழ்மாறர் ,கட்டுரையை திரும்பவும் ஒருமுறை வாசித்துவிட்டு உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்,, (*பொருத்தமில்லாத பின்னூட்டமகத்தெரிகிறது,)
//சிங்களத்தின் கோபங்கள் இத்தனை மக்களயும் கொல்கிற வெறீயை ஏற்படுத்தி இருக்காது // சிங்கள்வனுக்குத்தான் கோபம் வருமா ,,?, தமிழனுக்கு ? சிங்களவன் காலாகாலத்துக்கும் செய்துகொண்டுவருவது சரி என்று வாதாட வருகிறீர்களா,, ஐயா மைனஸ்ஸாகவே சிந்தித்துப்பழகிவிட்டீர்கள், எந்த பின்னூட்டத்திற்கும் முதலாளாக நிற்கும் தமிழ் மாறர், தமிழரை இழிவுபடுத்தியே சந்தோசப்படுவதில் குறியாயும் இருக்கிறீர்கள் , பதில் எழுதாமல் புறக்கணிக்கத்தான் மனம் விரும்பியது இருந்தும் முடியவில்லை, தமிழர் போராட்டம் துரதிஸ்டவசமாக தோல்வியில் முடிந்துவிட்டது,உண்மைதான், இதுதான் முடிந்த முடிவு என்று எவரும் முடிவுசெய்ய முடியாது, இங்கு நான் தலைவர் பிரபாகரனையோ, ராஜபக்சவவையோ நான் தூக்கிப்பிடிக்க வரவில்லை,தமிழனாக இருப்பவன் உங்களைப்போல் எப்படி எழுத முடிகின்றதென்று கவலைப்படுகின்றேன்,
கவலைப்படுகிற நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்.ஆங்கிலத்தில் கடிதம் எழுதி கார்டியனுக்கு அனுப்பப் போகிறீர்களா?அவர்கள் பேசுகிற சித்தாத்தங்களூக்குள் நாம் fபிக்ஸ் ஆவோமோ தெரியாது.முடிந்த முடிவு என கீதை பேசுகிறீர்கள்.சிங்களவன் என்றூ இனியும் நாம் இனவாதம் பேசி பிரிந்து நிற்க முடியாது ஏனெனில் சிங்கள் மக்களே தமிழ் மக்களீற்கான வாழ்க்கையை தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள்,
ஆங்கிலத்தில் எழுதினால் மட்டும் ஏறுமா என்ன ,k.p ,டககிளஸ்.கருணா, பிள்ளையான், ஆக்களோடு தமிழ்மாறனும்,தமிழ் மக்களீற்கான வாழ்க்கையை தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள், இனவாதம் பேசவேண்டாமென்றும் தமிழ்மாரன் எச்சரிக்கிறார், தமிழ்மாறன் சொன்னால் சரியாய்த்தானிருக்கும்,
எந்த உலகத்தில மக்கள் படையெடுத்துவரும் இராணுவத்தை வாங்கோ வங்கோ என்று வரவேற்று விழா கொண்டாடியிருப்பார்கள்? மக்களுக்கு புலிகளுடன் போவதைவிட வேறு வழி இருக்கவில்லை. இது விளங்க பேராசிரியராக இருக்கவேனண்டியதில்லை.
சிங்களத்திற்கு கோபம் வந்தால் தமிழனை கொல்ல வேண்டுமா?
மன்னர் எங்கே பிடிபட்டார். மக்களை அவனல்லோ பிடித்தான். மக்கள் கொல்லப்படக் காரணம் அவர்கள் சரணடைந்ததுதா? சரணடையா விட்டால் அப்படியே விட்டிருப்பான? என்ன? ஆரியவதி………..
சரியான கேள்விகளுடன் எழுதப்பட்டக் கட்டுரை. சிங்களர்கள் எப்போதுமே தமிழ் மக்களின் பிரச்சனைகளைப் பேசத் தயாரில்லை. அவர்களின் முற்போக்கு என்பதே சிங்களர்களுக்கானதுதான். என்பதை எடுத்துரைக்கிறது இக்கட்டுரை.
சிங்களவர் கையில் இலங்கை இராச்சியம் முள்ளிவாய்க்காலின் பின் முழுமை பெற்றுவிட்டது. இனி இலங்கையில் மனிதர்களை காணலாம். மனிதத்தை காணமுடியாது. எப்படியும் வாழ்ந்துவிடலாம். இப்படித்தானென்று அங்கு வாழமுடியாது.
தமிழர்கள் இனி சிங்களனுக்கு அடிமையாய் வாழத்தான் முடியும் என்கிறீர்கள்.
தலைவர் இருக்கும் போது மட்டும் சுதந்திரமாவே இருந்தனாங்கள்..
தலைவர் சொல்லுறதுக்கெல்லாம் தலையாட்டிகொண்டுதானே இருந்தனாங்கள்… இனிமே சிங்களவனுக்கு ஆட்டுவோம்…
பலகனவுகளான எண்ணங்களை சுமந்து தனது உடல் உழைப்பை விற்பதற்கு விமானம்
ஏறி சவுதிஅரேபியாவில் இறங்கி சிலமாத ஊதியமாக இருப்பதினாங்கு ஆணிகள் ஏற்றப்பட்டு கட்டுநாயக்கா விமானத்தளத்தில் வந்திறங்கிய எல். ஆரியவதி இந்த நுற்றாண்
டின் மறக்க முடியாத சித்திரமாக பதிந்திருக்கும்.
திரைகடல்ஓடியும் திரவியம் தேடு! எட்டு திசை சென்றே பொருள் கொண்டு வந்திடுவீர்!! என்பதை கற்றுணர்ந்த தமிழன் வன்னிகுறுகிய நிலப்பரப்புக்குள் தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாப்பதற்காக மூன்றுலட்சம் தமிழ்மக்களை கைதிகளாக பிடித்து
வைத்திருந்தை எந்தவகையிலும் ஒப்புக்கொள்ள முடியாது.
வன்னிக்குள் புகுந்த வல்வெட்டிதுறை ஆயுததாரிகள் ஆயுதமுனையில் “தமிழீழம்” என்ற
தகட்டை காட்டி வாழ்வாதரமாக வயலை பறித்தார்கள் வாகனத்தைப் பறித்தார்கள். மீன்
பிடிப்படகைப் பறித்தார்கள்.கடலுக்கு தடைபோட்டார்கள். கடைசியில் பிடித்த மீனையும்
பறித்தார்கள்.
ஆகவே ஆரியவதிக்கும் வன்னியில் நடந்த சம்பவத்திற்கும் முடிச்சுப் போடுவது எழிலனின் அறியாமையே காட்டுகிறது.
நல்லவிதி காரணமாக மேமாதம் 19-ம் திகதியுடன் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் தாங்கள்
மட்டும் தான் என அடம்பிடித்த ஆயுததாரிகள் முடிவுக்கு வந்தது.இல்லையேல் இன்று
ஆகக் குறைந்தது “தமிழீழத்தூரரகம்” என்று நியூயோக்கிலும் பரீசிலும் பேலின்னிலும்
தோன்றியிருக்கும்.
ஆரியவதியின் சித்திரைவதைக்கு எதிராக இலங்கையில் உள்ள சவுதிஅரேபியா முன்பாக கூடிய தொழிலாளர்களைவிட பத்துமடங்கு தொழிலாளர்கள் இதன் முன்னே
கண்டிருக்கமுடியும். அவர்கள் சுலோகங்களும் வேறுவிதமாக இருந்திருக்கும். அது சில
வேளை இப்படியிருந்திருக்கலாம்.
தென்னை வைத்திருப்பனிடம் தேங்காய் வாங்காதே!
கோழி வைத்திருப்பனிடம் முட்டை கேட்காதே!!
வலை வைத்திருப்பவினிடம் மீனைக் கேட்காதே!!!
பிள்ளைகளை பெத்தவனிடம் பிள்ளைகளை பிடிக்காதே!!!
வங்காலை மாட்டின் குடும்பத்திற்கு பதில் சொல்லு!!!!
மூதூர் தொண்டு ஊழியர் பதினெழு பேர்களின் கொலையாளிகளை இனம் காட்டு!!!!.
இப்படியான போராட்டங்கள் தொடராமைலும் தமிழ்மக்கள் தனிஇனம் அவர்களும்
இலங்கையரே நாம் எல்லோரும் கூடிவாழ்வதால் மட்டுமே இன்னும் அதிக நன்மையை
பெறமுடியும் என்று மகிந்தராஜயபக்சாவை நன்றியுடன் நினைவு கூர்ந்து கொண்டு
ஆரியவதிக்கேற்பட்ட நிலை இன்னொரு ஆரியவதிக்கு ஏற்படக்கூடாது என உறுதி எடுப்போம்.
போராடாதீர்கள் சிங்களர்களோடு இணைந்து அமைதியாக வாழுங்கள் என்று சந்திரன் ராஜா சொல்கிறார். இன்று புலிகளை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் சிங்களனுடன் சேர்ந்து மக்கள் கொலையை நியாயய்ப்படுத்திய அல்லது மூடிமறைத்தவர்கள் இந்தக் குரலில்தான் பேசுகிறார்கள். ஒரு ஆரியவதியில் உடலில் ஏற்றப்பட்ட ஆணிக்காக அழுகிறவர்கள். ஏன் வன்னிப் பெண்களுக்காக அழுவதில்லை. அப்படி அழுவதை பேரினவாதம் அனுமதிக்குமா? என்பதே கட்டுரையாளர் முன் வைக்கும் கேள்வி. அந்தக் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் புரியாமல் எழுதியிருக்கிறார் என்பதெல்லாம்….அவளவு பெரிய முட்டாள்தனம் சந்திரன் ராஜா./
அசுரன் புலம்பெயர்பணப் பலத்திலும் பிரச்சாரப் பலத்திலும் “புலியியக்கம்” தான்தோற்றித்தனத்தாலும் தன்அடாவடித்தனத்தாலும்
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் “பயங்கரவாதிகள்” என்ற பெயரைப்
பெற்றது.இறுதியில் கண்களை மறைத்த வெள்ளாட்டு செவியாக வளர்ந்து விட்டபோது இதை தமிழ்மக்களே வெட்டி எறிந்திருக்கவேண்டும்.இது தமிழர்களினால் முடியாதபோது பலஆயிரம்
சிங்களஇராணுவவீரர்களைப் பலி கொடுத்து மதிப்புக்குரிய ராஜயபக்சா
அரசே அதை வெற்றிகண்டது.இன்று நாட்டில் அமைதி வாழ்க்கை திரும்பியதற்கும் ஏராளமான புலம்பெயர் தமிழர்கள் தமது தாய்நாடு
போய் திரும்பிவருவதுமே சாட்சி.
வன்னியில்நடந்த அவலங்களும் இறப்புகளுக்கும் முள்ளிவாய்கால்
வரை “பங்கர்”வெட்டிச் சென்றதிற்கும் புலிகளும் கண்மூடித்தனமாக
ஆதரவுகொடுத்த புலம்பெயர் தமிழர்களுமே! பொறுப்பேற்றுக் கொள்ள
வேண்டும். இதற்கு ஈழத்தமிழர்களோஅல்லது இலங்கையரசோ பெறுப்பேற்க முடியாது.இதைவிட்டு கண்ணீர்..உரிமை என்று சரடு
விடாதீர்கள்.
புலிகள் செய்த தவறுகளை மட்டும் பேசுகிற நீங்கள் இலங்கை அரசை மதிப்பிற்குரிய என்னும் போதே உங்கள் யோக்கியதை தெரிந்து விடுகிறது. ஈழப் பிரச்சனை என்பது புலிகளினதோ, பிரபாகரனதோ இல்லை அது நூறு வருட வரலாற்றைக் கொண்டது. புலிகளை விட உங்களை மாதிரி ஆட்களே ஆட்காட்டிகளே மிகவும் ஆபத்தானவர்கள்.
உங்கள் நுறுவருடக் கணக்கு தவறானது. வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்கால்
வரை வந்த தமிழ் அரசியல் தலைவர்களே போதுமானவர்கள் அயோகியத்தனத்திற்கு.
இதே அயோக்கினத்தை சிங்கள அரசியல் தலைவர்களும் பின் பற்றினார்கள் என்பதில்
சந்தேகமில்லை.
கண்னாடிவீட்டில் இருந்து எதிரே இருக்கும் கண்னாடிவீட்டிற்கு கல்யெறிய கூடாது. அவன்
திருப்பி எறிந்தால் என்ன? நடக்கும் என்பதை உணரவேண்டும்.
அரசியல் என்பது வாதம்-எதிர்வாதத் திறமையாலும் உள்ளடக்கி எழுவதே போராட்டம்.
அரசியல் போராட்டம். நான் சொன்ன காலங்களின் தலைவர்கள் அதாவது இருதரப்பிலும்
தமது சுயநலத்தின் பேரில் அல்லது பழைமைவாதப் போக்காலும் மக்களை பலி கடா ஆக்கி
யிருக்கிறார்கள். இதைதான் நம் வருங்காலச் சந்ததியினர் உணரவேண்டும்.
மதிப்பிற்குரிய மகிந்தா ராஜயபக்சா யோக்கியமானவரே!. போர் என்றால் போர் சமாதானம்
என்றால் சமாதனம் என சவால் விடவில்லை. தமிழ்மக்களுக்கென்று ஒரு எல்லையை
பிரித்துக் கொடுக்கவில்லை.சிங்களமக்களுக்கு என்று ஒரு எல்லையை வரை அறுக்கவும்வில்லை. இது இலங்கையரின் தேசம். பனைமுனையில் தெய்வேந்திர முனை வரை எவரும் வாழலாம்.
தமிழர்தான் படிக்கவேண்டிய பாடம் இன்னும் நிறையவே இருக்கிறது.எந்த தமிழ்அரசியல் தலைவராவது இலங்கையை தமது தாய்நாடு என்று சொன்னது கிடையாது.இதுவே தமிழ்இனத்தின் பிற்போக்கு தன்மை.
தமிழ்-சிங்கள தலைவர்களால் மூட்டிவிட்ட இனக்கலவரங்களையும் அதற்கு துணை புரிந்தசிங்கள காடையர்களையும் தவிர்த்துவிட்டு பார்த்தீர்களேயானால் சிங்களஇனம்
எவ்வளவு மகத்தான இனம் என்பதை புரிந்து கொள்வீர்கள்.எவ்வளவு சுயநலமற்ற தியாகமனத்தை படைத்தவர்கள் என்பதையும் அறிந்து கொள்வீர்கள்.
ஒரு சிறு உதாரணமே! போதுமானவை.
உலகமெல்லாம் பரவிவாழ்ந்த தமிழ்மக்கள் 2009 முற்பகுதியில் பிரபாகரனையும் அவன்
குடும்பத்தையும் காப்பதற்காக போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அவுஸ்ரேலியாவில்
இருந்த சிங்களமக்களோ அதுவும் இளம் யுவதிகளே வீதிக்கிறங்கி புலிக்கொடியையும்
புடுங்கி எறிந்து பிரபாகரனே! பிடித்து வைத்திருக்கிற மக்களை விடு!! என்ற சுலோகத்துடன் முன்நின்றார்கள்.
தமிழ்மக்களின் கேடுகெட்ட குணத்திற்கு மற்றுமொரு உதாரணம்….
இத்தாலி பிரான்ஸ் லண்டன் கனடா அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து கொண்டு
அந்த நாடுகளின் குடியுரிமையும் பெற்றுக் கொண்டு சிங்களவருடன் வாழமுடியாது
என்று அறிகைகளும் கட்ரைகளும் வெளியிடுகிறார்களே! அது ஏன்? மீதியாய் போன
தமிழ் முஸ்லீம்களையும் அழிப்பற்காகவா? மிகுதி உங்கள் சுகந்திர சிந்தனைக்குட்பட்டது.
அரசியல்பிராணியாகிப் போன மனிதன்-மனிதனுக்கு நாளை எது நடக்கும் என்று தெரியாது.அரசியல் என்பது மானிட தேவைகளை ஒட்டி வரை அறுக்கப் படவேண்டும்.
மதிப்புக்குரிய மகிந்தாராஜபக்சா நடந்து வந்த பாதைகளும் எடுத்து வைத்த காலடிகளும்
சரியானவையாகவே இருக்கிறது இதுவரை. இலங்கைவாழ்மக்களுக்கு மகிந்தா ஆட்சியில் ஒரு இன்னல் வருமாக இருந்தால் அதை எதிர்ப்பதில் முன் அணியில் என்னையே யாரும் காணமுடியும்.
ஓம் ஒம், ஒரு துளி இரத்தம் சிந்தாத போரை நடத்திய மகிந்த ஐயா (அண்ணா என்றுதானே சொல்ல வருகிறீர்கள்) ஆட்சியில் ஒரு இன்னலும் சிங்களவருக்கு ஒருபோதும் வராது. ஆனால் உஙளை எதிரணியில் மகிந்த ஆண்டாலென்ன மண்ணாங்கட்டி ஆண்டாலென்னென ஒருபோதும் பார்க்கமுடியாது. நீங்கள் எப்போதும் ஆளும் கட்சியின் பக்கத்தில்தான் இருப்பீர்ககள் டக்கி போல.
கொஞ்சம் கூட மனித நேயமோ ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியலோ இல்லாமல் பேசுகிறார். சந்திரன் ராஜா
தமிழனை தமிழன் ஒடுக்கியதால் தான் இந்த பேச்சு.
முதலில் தமிழனை தனது மேட்டுகுடி சிந்தனையால்
அடிக்கியொடுக்க பட்ட தமிழன் முதலில் விடுதலை
காணவேண்டும். பிறகே வாள் அம்பு சேனை கொண்டு
எதிரியாய் இருப்பனை எதிர்க்க புறப் படவேண்டும்
இல்லையேல் பங்கர் முள்ளிவாய்கால் அமெரிக்க-
கப்பல் எதிர்பார்புக்கள் தான்.இதை மீறியானால்…….
கோடாலிக்கொத்து. இது எமக்கு கிடைத்த நல்ல அனுபவம். கிடைத்த அனுபவத்தை எதிர்காலத்திற்கு
துணையாகக் கொள்வோம்.
நக்குவதில் கூட நல்ல அனுபவம் கிடைக்கும் கருணாவுக்கும், டக்ளசுக்கும் கிடைத்தது மாதிரி…… சந்திரன் சார் போராட்டத்தை போஸ்ட் மார்டம் செய்வது, மறு ஆய்வு செய்வது எல்லாம் சரிதான். அது போராடித் தோற்றவனும், போராட்டத்திற்கு துணை நிற்கிறவர்களும் செய்ய வேண்டிய வேலை, அல்லது போராட்டத்தை முன்னெடுக்க நினைக்கிற சக்திகள் செய்ய வேண்டிய வேலை…..அதை ஏன் சந்திரன் ராஜா செய்ய வேண்டும். மகிந்தர் நமக்கு மதிப்பிற்குரியவராக இருக்கும் போது என்ன யோக்கியதையில் போஸ்ட் மார்டம் செய்வது? சரி என்றாவது நீங்கள் ஈழ மக்களின் போராட்டத்தை ஆதரித்திருக்கிறீரா? நக்கிப் பிழப்பதை விட சுகமான தொழிலாய் வேறு எது இருந்தது உமக்கு?
வடகிழக்கும் தெற்கும் பிளவுபட்டே கிடக்கிறது. தம்மை வேடிக்கை பார்க்கவே சிங்கள மக்கள் வருகிறார்கள் என தமிழர்கள் குமுறுவதை நேரில் கேட்க முடிந்தது. ஏன் இராணுவம் இப்படி எம்மை சுற்றி வளைத்து காவல் இருக்கிறது? அடுத்து என்ன? விடைதெரியா வெளியில் மக்கள் அநாதரவாக. தம்மை அர்ப்பணிக்கத் தயாரானவர்கள் ஆற்றல் உள்ளவர்கள் உடனே நாடு திரும்புங்கள். மக்களிடம் அரசியல் பேசுங்கள்.
குண்டுவீசும் விமானம் காணாமல் போய் விட்டது.துப்பாக்கி மனிதர்கள் தொலைந்து
போனார்கள். பிள்ளை பிடிகாரன் இல்லாதால் மாணவ மாணவிகள் பாடசாலை செல்கிறார்கள்.போக்கு வரத்து சுமூகமானதால் வடக்கிலிருந்து தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் நடுஇரவில் கூடா தனியொருவனால் பிரயாணம் செய்யக் கூடியதாக இருக்கிறது. தொலைந்து வாழ்வு மீண்டுவந்ததில் அவர்கள் பெருமகிழ்சி அடைகிறார்கள்.இன்று அவர்களுக்கு தேவையானது அரசியல் அல்ல. பயம் இல்லாத வாழ்வே!.
பேரினவாத்த்துக்கு நியாயம் காண்பிக்கிற இடுகைகள் பற்றி நான் பேசவே இல்லை. புலிகளைச் சொல்லிச் சொல்லியே அரசின் எல்லாக் கொடுமைகளை நியாயப்படுத்த அவர்களுக்கு இயலும். அவர்களுக்கு மனச் சாட்சி என்று ஒன்று இருந்தால் கேள்விகளை அதனிடமே விட்டு விடுகிறேன்.
ஆரியவதி விடயத்தி காட்டப்படுகிற அக்கறை ஏன் ஏகப் பட்ட தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப் பட்ட தமிழ்ப் பெண்கள் பற்றி இல்லை என்ற கேள்வியில் ஒரு அநீதியைப் பற்றி ய வருத்தம் மிகக் குறைவாகவும் இன்னொன்றைப் பற்றிய அக்கறையின்மை பற்றிய கோபமே கூடத் தெரிவதும் நம் அணுகுமுறையில் மனிதாபிமானம் போதாமையயே குறிக்கிறதா?
பாதிக்கப் ,பட்ட தமிழர் பற்றி வாய் திறப்பதே தேசத் துரோகம் என்ற ஒரு சூழல் ஊடகங்கள் வரை விரிந்துள்ளது.
இணையத்தளங்களில் பாதிக்கப் ,பட்ட தமிழ்ப் பெண்கள் பற்றிப் பேசப் படும் அளவுக்குநமது பிரதான தமிழ் எடுகளில் ஏதாவது வருகிறதா?
அரச அடக்குமுறைப் பின்புலத்தை மறந்து சிங்கள மனிதாபிமானிகளைப் பற்றி அவசர முடிவுகட்கு வருவது நல்லதல்ல.
பயங்கரவாத எதிர்ப்புப் போர் என்ற பேரில் தான் அனைத்துக் கொடுமைகளும் நிகழ்ந்து பல மறுக்கப்பட்டும் சில நியாயப் படுத்தப்பட்டும் உள்ளன.
முதலில் இவற்றைப்பற்றிப் பேச வேண்டிய பிரதினிதிகள் பேசுவார்களா? இல்லை எனில் ஏன்?
சிங்கள மக்களுக்கு உண்மைகளைக் கொண்டு செல்வது பேரினவாத/அரச அடக்குமுறைச் சுவரைத் தாண்ட வேண்டும். ஆனால் போதிய முயற்சிகள் எடுக்கப் படுய்ள்ளனவா?
அரசாங்கம் புலிகளை ஒழித்ததை மெச்சுவோர் பாலியற் குற்றங்கள், சித்திரவதைகள், பொதுமக்ளை முடமாக்கியமை, குண்டு வீசிக் கொன்றமை என்பன பற்றி ஏன் தமதுநம்பிக்கைகுரிய அரசாங்கங்களிடம் பேச மாட்டர்கள்? இக் கேள்விகள் முடிவின்றிட்ய் தொடரக் கூடியவை. எனினும் நிராகரிக்க இயலாதவை.
ஓரு வேன்டுகோள்.
தமிழர்கள் முழு உலகினதும் அனுதாபத்துக்கு உரித்தானவர்கள். ஆனால் உலகில் நடக்கும் எந்தக் கொடுமையும் தமக்கில்லை என்றால் எதுவுமே பேச மாட்டார்கள் என்ற நிலையிலிருந்துநாம் ஒவ்வொருவரும் தனி மனிதராகவும் சமூகமாகவும் விடுபட்டு ஒன்றைக் கண்டிப்பதற்கு விமர்சனம் எழுப்பாமல் சேர்ந்து குரல் கொடுத்து அதன் பின்பு நம்முடைய குறைகளைக் கூறினால் காது கொடுக்க யாராவது இருப்பர்.
தமிழர்களாகய நாம் பரிதாபத்துக்கு உரியவர்கள் ஆனால் யாரும் எம்மீது பரிதாபப்படுகிறார்களீல்லை.ஏன் என்ற கேள்விக்குத்தாண் விடைகளீல்லை.
விடையில் பகுதி மேலே உள்ளது கடைசிப் பந்தியைக் கவனியுங்கள்.
குண்டுவீசும் விமானம் காணாமல் போய் விட்டது.துப்பாக்கி மனிதர்கள் தொலைந்து
போனார்கள்.”
ஆனால் மீண்டும் துப்பாக்கி மனிதர்களின் வரவை நோக்கி சிங்கள இராணுவம் மக்களை சுற்றி வளைத்து கண்ணுக்குள் எண்ணை விட்டு காத்திருக்கிறது”
.வாழ்வு மீண்டுவந்ததில் அவர்கள் பெருமகிழ்சி அடைகிறார்கள்.இன்று அவர்களுக்கு தேவையானது அரசியல் அல்ல. பயம் இல்லாத வாழ்வே”
சந்திரன் ராஐh ஏன் நாடு திரும்ப மாட்டீர்கள்?
ஜிரிவி தமிழர்தேசியக்கூட்டமைப்பு நாடுகடந்ததமிழீழயரசு ஆடிஓடிஅடங்கி இன்னும்
அடங்கமாட்டோம் என்று இருக்கிறசில இணையத்தளங்களில் இருந்து கற்றுக் கொண்டால்
இப்படியான கேள்விகள் தான் உங்களை கேட்கச் சொல்லும் இதயம் இல்லாத இதயத்தவரே! முயற்சி செய்து கிணற்றுவட்டைதை விட்டு தாண்டிப்பாரும் சிலவேளைகளில் இந்த உலகம் எவ்வளவு? பெரிய வட்டம் என்பது புரியும்.எத்தனை
அதியங்கள் நடந்துகொண்டிருப்பதும் தெரியவரும்.
முப்பது வருடப்போராட்டம் ஈழத்தில் வாழும் தமிழ்மக்களை மனநோயர்களாக ஆக்கியதை
தவிர வேறு ஒன்றையும் சாதிக்கவில்லை.இது அறிவாளிகளையும் அரசியல்வாதிகளையும் போட்டுத்தள்ளியதின் விளைவே! இனியும் நீங்கள் திருந்த மறுத்தால் ஈழமக்களைக் பலிக்கடா ஆக்கமுனைந்தால்…..???.
ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள், அவர்களைப் பற்றி எல்லாம் தெரிந்த தோரணையில் “இரக்கப்பட்டு” எழுதுகிறவர்களை விடப் புத்தி சுவாதீனத்துடன் தான் உள்ளனர்.
அவர்கள் ராஜபக்ச வேண்டுமாறும் ஆடவில்லை. புலிகள் முதலான எவரையும் நம்பவுமில்லை.