01.12.2008.
லண்டன்: உலகின் 20 அபாயகர நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்துள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த தி டெலிகிராப் இதழ் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து உலகின் 20 அபாயகர நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியா தவிர பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், பாலஸ்தீனம், மெக்சிகோ, தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன.
இவை தவிர செச்னியா, ஜமைக்கா, சூடான், கொலம்பியா, ஹைதி, எரித்ரியா, காங்கோ, லைபீரியா, புருண்டி, நைஜீரியா, ஜிம்பாப்வே, லெபனான் ஆகியவையும் இதில் உள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை மும்பை மட்டுமே தற்போதைக்கு அபாயகரமானதாக உள்ளது. இந்தியாவின் இதர பகுதிகள் மிகவும் பாதுகாப்பானவைதான். அதேசமயம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளும் பாதுகாப்பற்றதாக உள்ளது.
இந்தியா முழுவதும் தீவிரவாதத்தின் அச்சுறுத்தல் பரவலாக உள்ளது.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை அந்த நாடு முழுவதுமே பாதுகாப்பற்றதாக உள்ளது. தீவிரவாதத்தின் அச்சுறுத்தல் மிக பயங்கரமாக உள்ளது.
அங்கு அடிக்கடி நடக்கும் தற்கொலைப் படைத் தாக்குதல்கள், மோதல்கள் உள்ளிட்டவற்றால் வெளிநாட்டினருக்கு அச்சுறுத்தலான நாடாக பாகிஸ்தான் மாறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியொன்றால் முதலாவதாக நீயூயோக்கும் இரண்டாவதாக லண்டனும் அதன்
பிறகே மிகுதிநாடுகளை கணக்கிடவேண்டும்.