16.11.2008.
கிளிநொச்சி, பூநகரிப் பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பரந்தன் மற்றும் ஆனையிறவு பகுதிகளை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதண நாணாயக்கார தெரிவித்தார்.
பூநகரி பிரதேசத்தைக் கைப்பற்றி அங்கு நிலைகொண்டுள்ள படையினர் தற்போது பரந்தன் மற்றும் ஆனையிறவு பிரதேசங்களை நோக்கியே முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் அப்பிரதேசங்களில் மறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படும் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது தற்போது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.