( இக் கட்டுரை தென்னாசியப் பிராந்தியத்தில் இந்திய நடத்தையை ஆராய்கிறது.)
இந்தியா அமெரிக்கா ஏவல் நாயாகச் செயற்படுகிறது என்பதற்கு பல உதாரணங்கள் காட்டப்படுகின்றன. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் சேர்ந்து வாக்களித்தமை, இலங்கை அரசின் யுத்தத்திற்கு ஆயுதம் வழங்குவதுடன் 256 இந்தியத் தொழில்நுட்ப ஊழியர்களை இலங்கையில் நிலை கொண்டுள்ளமை, சார்க் மாநாட்டின் போது முப்படைகளும் இலங்கையைத் தனது பிடிக்குள் வைத்திருந்தமை என்பன இந்தியா இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க நலனுக்கு இசைவாக செயற்படுவதை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.
இந்தியா ஆப்கானிஸ்தானில் எவ்வாறு செயற்படுகிற என்பதைக் கவனித்தால் இந்தியா இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க நலனுக்கு ஏற்றால் போல செயற்படுவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதைக் காணலாம்.
சில மாதங்களுக்கு முன் ஆப்கான் தலைநகரான காபூலில் இந்திய தூதரகம் தாக்குதலுக்கு உள்ளானது. 2001ம் ஆண்டு தலிபான்கள் வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் படிப்படியாக இந்தியா காலூன்றியது. 1979ம் ஆண்டு மூடப்பட்ட இரண்டு கொன்சுலர் காரியாலங்களை கேரத்திலும் மசார் ஈ-சரிப்பிலும் மீண்டும் ஆரம்பித்தது. அது மட்டுமல்ல. பாக்கிஸ்தானில் எல்லையோரமாக கந்தஹார், ஜலாலபாத் ஆகிய இடங்களில் மேலும் இரண்டு கொன்சுலர் காரியாலங்களை திறந்தது.அதுமட்டுமல்ல. சின்னாபின்னமாகவுள்ள ஆப்கானின் உட்கட்டமைப்பை மீளக் கட்டுவதற்கென 75 கோடி டொலர்களை கொடுப்பதற்கு உடன்பட்டுள்ளது.
வடபகுதியில் மின்கம்பங்களை நாட்டி மின் கம்பிகளை பொருத்துகின்றனர். 200 கி.மீ. சாலைகளை ஏற்படுத்துவதுடன், ஆறு மாகாணங்களில் குழாய்க் கிணறுகள் தோன்டுகிறார்கள். 100 கிராமங்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கவும், இவற்றையெல்லாம் விட ஆப்கானிஸ்தானின் பாராளுமன்ற கட்டடத்தையும் கட்டுகிறார்கள். பெரும் சிக்கலில் உள்ள ஆப்கானிஸ்தானின் விமான சேவைக்காக குறைந்தது 3 ஏயார் பஸ் விமானங்களை கொடுத்துள்ளது இந்தியா. இது மட்டுமல்ல ஆப்கானிஸ்தானின் கட்டுமானப் பணிக்கென ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அந்த நாட்டில் நிலை கொண்டுள்ளனர்.
இந்தப் பிராந்தியம் தொடர்பாக விரிவாக எழுதிவரும் ஆய்வாளர் அகமெட் ராசித் கூறுகிறார்:-
“ஆப்கான் சமூகத்தின் ஒவ்வொரு துறையையும் வெற்றி கொள்ளும் நோக்கிலேயே இந்தியாவின் மீள் கட்டுமானப்பணி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆப்கான் மக்களிடையே இந்தியா பற்றிய ஒரு பெரிய மதிப்பை ஏற்படுத்தும் நோக்குடன் பாக்கிஸ்தானின் செல்வாக்கை மட்டந்தட்டி ஆகக்கூடிய அரசியல் இலாபம் பெறும் நோக்குடையது”.
இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் பெரும் அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. 2006, 2007 ஆண்டில் இருபத்திரண்டரை கோடி டொலர்களை எட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானுடன் நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபட முடியாத நிலையில் பாக்கிஸ்தானிய நிலப்பரப்பு ஊடாக ஈரானிய துறைமுகமான சாபகார் சென்றடைய ஒரு புதிய சாலையைக் கட்டுவதற்கு இரகசியமாக நிதி உதவியுள்ளது. இந்தப் புதிய பாதை ஈரானிய துறைமுகங்களுக்கான தூரத்தைக் குறைத்துவிடும்.
“தலிபான் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின் ஆப்கானிஸ்தானில் இந்தியச் செல்வாக்கு கூடி வருவதை பாக்கிஸ்தான் அவதானித்த வண்ணம் உள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் அக்கறை மிகத் தெளிவானது. பாக்கிஸ்தானை சங்கடத்துக்குள்ளாவது தான் அதன் நோக்கம். ஜலாலபாட், கண்டகார் ஆகிய இடங்களில் இந்தியாவின் கொன்சுலர் பிரிவுகள் என்ன தேவைக்காக திறக்கப்பட்டன. இது பாக்கிஸ்தானை அச்சுறுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டன” என முன்னாள் ஜனாதிபதி முசாரப் தெரிவித்திருந்தார்.
இந்த இரண்டு கொன்சுலர் பிரிவுகள் மூலம் பாக்கிஸ்தானின் பலூச்சில்தான் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களையும் பணத்தையும் அனுப்பி வருகின்றது.ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் அதிகரிக்கும் செயற்பாடுகளின் விளைவே காபூலில் இந்திய தூதரகம் தாக்கப்பட்டதற்கான காரணம். இலங்கையில் எந்தவொரு சம்பவம் நிகழ்ந்தாலும் தமிழர்கள் கைது செய்யப்படுவதைப் போல இந்தியாவில் எந்தவொரு சம்பவம் நிகழ்ந்தாலும் அது பாக்கிஸ்தானிய உளவாளிகளின் வேலை என்று கூறி முஸ்லிம்களைக் கைது செய்வது வழக்கம்.
முன்பெல்லாம் தலிபான்கள் இந்தியப் பிரஜைகளைத் தாக்கியும் கடத்தியும் வந்தனர். இந்திய பிரஜைகளுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. ஹேரத், ஜலாலபாத் ஆகிய கொன்சுலர் பிரிவுகள் மீது வெடிச் சம்பவங்களும், கிரனைட் தாக்குதல்களும் இடம்பெற்று இருக்கின்றன. எவ்வாறாயினும் காபூல் தாக்குதலே மிகப்பெரிய தாக்குதல் ஆகும்.
இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தான் சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்ற அக்கறை கிடையாது. 1979இல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை தாக்கிய போது அதனை இந்தியா ஆதரித்தது. இது ஆப்கான் மக்களிடையே இந்தியா மீது வெறுப்பை ஏற்படுத்தியது. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோது ஆப்கானிஸ்தானில் இந்தியச் செல்வாக்கு இல்லாது போனது. தற்போது மீண்டும் இந்தியா ஆப்கானிஸ்தானில் தனது கைங்கரியங்களில் படிப்படியாக ஈடுபட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானில் முழு அளவில் மூக்கை நுழைத்துள்ள இந்தியா அங்கு வேலை செய்யும் இந்தியர்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் ஆயுதப் படையினரையும் அமர்த்தியுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தைப் படிப்படியாக தனது கைக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கும் இந்தியா ஆப்கானிஸ்தானைப் போல இலங்கையிலும் அதன் கைவரிசையை மென்மேலும் காட்டத்தான் போகிறது.
நீங்கள் முன் வைத்திருக்கும் பிரச்சனை சரி ஐயா!.இதில் நிபுணத்துவம் அடைய விரும்பும் நான்,இத்தகைய கூற்றை பாக்கிஸ்தானில் உள்ள நியாயமான சிலரின் ஆதங்கமாகவே பார்க்கிறேன்!.ஒரு இந்தியனான நான்,இதில் பண்முகத் தன்மை இருப்பதை உணருகிறேன்!.மிக அதிகமான இந்திய தூதுவராலயங்கள் ஆப்கானிஸ்தானில் இருப்பது உண்மை.இது “ஐஸ் பெர்கின்” வெளியில் தெரியும் ஒரு முனைதான்!.இந்தியாவென் அமெரிக்க சார்பை “பாசிட்டிவாகவே” தற்காலிகமாக காண்கிறோம்.இதை விட பல கொடுமையான ஆபத்துகள் வெளியில் தெரியாமல் உள்ளன.அவைகள்தான் முக்கியமானவை.அவைகளை வருங்காலத்தில் பார்ப்போம்….
ஜேம்ஸ் அவர்களே
தயவு செய்து தெரிந்த தகவல்களை வழங்குங்கள்.
நன்றியுடையவாராயிருப்போம்.
அதென்ன எல்லோரும் இந்தியாவை குற்றம் சாட்டுகினம்.சின்னப்பிள்லைக்ள் அடிச்சி எண்டா அப்பாட்ட சொல்லுவன் எண்ட விலையாட்டாகவே எல்லாம் இருக்குது.இவற்ற மண்டையை ஆரோ கழுவிப் போட்டினம் போல கிடக்கு உண்மையே.
ஆப்கானிஸ்தானின் “நார்தன் அலையன்ஸ்” என்று கூறப்படுபவர்களின் தளமான,”குண்டூஸ் மாகாணத்தில்”,பல “அபிவிருத்தி பணிகள்” நடப்பதானது,அப்பகுதி,பாகிஸ்தனின் “நார்த் வெஸ்ட் ஃப்ராண்டியர் பொராவின்ஸ்” எனப்படும் பல க்லாச்சாரங்கள் இந்திய துணைக்கண்டத்தில் நுழைந்த ஒரே வழியான,”கைபர் கணவாய்” மற்றும் இந்திய அரசியல்,அதிகார,பொருளாதார வட்டங்களில் பெரும் செல்வாக்கு செலுத்தி வரும்(இந்தி திரப்பட ராஜ்கப்பூர் குடும்பம்,முகமட் ரஃபி…..) பல முக்கியஸ்தர்களின் பூர்வீகமான “பெஷாவர் நகரத்திற்கு” அருகில் இருப்பதால்.இதற்கு அருகில்தான் ஜம்மு கேஷ்மீரும் இருக்கிறது.ஜவகர்லால் நேரு குடும்பத்தின் பூர்வீகமும் இதுதான்.இவர்கலுக்கு எதிராகத்தான் பழைய பிரிட்டிஷ் “பிரித்தாளும் சூழ்ச்சி” கயிற்றை விழுங்கிய,கலைஞர் கருணாநிதி குடும்பம் போன்றவர்கள்,”ஆரியர்!,ஆரியர்!” என்று கூக்குரலிடுகின்றனர்!.திராவிட அட்டைக்கத்தி சுழற்றுகின்றனர்.இது மிரட்டுவது போல ஐம்பது ஆண்டுகளாக எடுக்கப்படும் கெளரவப் பிச்சை!.இதனால் இப்போது உள்ள ஆபத்து,சிறிது நிதர்சனமானது!.பிரித்தாளும் சூழ்ச்சியின் குழந்தையே “இந்தியா பாகிஸ்தான்”.அட!,இதில் நம்முடைய தலைவலி என்ன?.யாருடைய அரசியல் நலனுக்கோ உருவான “கோஷங்களின்” பின்னால் நாம் போவதுதான்!.தற்போது “முள்ளியவாய்க்காலினால்” ஏற்ப்பட்டுள்ள “அதீத துன்பியல் உணர்ச்சி போல” 1947ல் இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது பஞசாப்,காஷ்மீர் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்,பலர் தங்கள் சொந்தங்களை வன்முறையில் இழந்தார்கள்!….அந்த “ஆகோனியின்”,குழந்தைதான் “லக்ஷர் இ தாய்பா”!.இது அப்போது அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்த “சவுதி அரேபிய ஷேக்கின்” கைகளில் எப்படி வளர்ச்சியடைந்தது?…..இனியும் வரும்….
Whats wrong if India is maintaing good relationship with US, and wats wrong if India helps to buld infrastructure in Ceylon,
Thanks very much James. Please continue with more data.
Estate boy:
India is trying to be a regional super power under US patronage.
India’s intentions about its neighbours has never been good.
It seeks to dominate and destroy.
Gobbing up of Sikkhim is now nearly forgotten.
Bhutan is a virtal colony
Meddling in Sri Lanka led to a great tragedy. Now it seeks to dominate the economy where it has made major inroads.
The worst victim had been Nepal, which cannot run its affairs without India’s approval; the Maoists stood up for Nepal and India is out to destroy them.
Many still do not know the scale of the slaughter of Bangladeshi patriots by Indian troops in collaboration with Mujibur’s thugs in 1971-72.
In Asia, India is the biggest oppressor of nationalities within its borders and without.
Today an evil triangle of US, Israel and India is emeging.
Firstly, it is for the people of India to resist Indian reactionaries.
It is also up to us.
If not for that evil triangle, another evil triangle comprising China, Pakistan and Iran will dominate south asia, I am fully comfortable with India, US, Israel evil triangle, so as many in South asia, except tigers and their sympathisers.
Let us not go by speculation.
The US India and Israel have maintained military presence in other countries.
Neither China nor Iran has had any even after major political changes. Even Pakistan has been far less meddlesome than India.
Let us go by experience. Today the US is sending 20000 troops to earth quake hit Haiti. Poor Cuba has sent a tousand doctors.
US medddling is a threat to democracy and peace everywhere. So are India’s and Israel’s.
Give one instance of China or Iran or even Pakistan ordering countries about.
What do you think about Tibet, and Chinas hanging of Muslilm protesters in Xinxiang province, do you think Tibet is a country which willingly be part of the China, let us go by experience, China maintains very good relationship with Sudan despite Sudan carries act of genocide against Non arabs in Sudan, why Sudan has Oil, So my leftist friend I am and many others are fully comfortable with US and India than Chinese and Pakis
Tibet is part of China and Xinjiang too is. They have been part of China for longer than Kashmir, Nagaland, Manipur, Hyderabad, Goa, Pondicheri etc were part of India or Hawaii, Alaska, Texas, New Mexico and California were part of the US.
The points that I made are that (i) China has no troops on foreign territory;
and (ii) the claim of a China-Iran-Pakistan axis is a figment of imagination.
India is the enemy of the peoples of South Asia, and no amount iof pointing fingers at others is going to alter that reality.
Thankfully the Tamils have learnt it now and most Sinhalese are cautious of India despite India’s backing MR.
As Xinxiang Nort and east is is part of Sri lanka.
Iran will execute nine dissidents “soon”, an official said on Tuesday, as President Mahmoud Ahmadinejad stepped up a campaign to crush the country’s opposition movement.
Iran’s Green Movement, the reformist campaign led by Mr Ahmadinejad’s election challengers, Mirhossein Mousavi and Mehdi Karroubi, is planning a rally next Thursday, on the anniversary of the 1979 Islamic revolution that toppled the Shah.
Last Thursday the regime hanged two men accused of participating in protests following last year’s disputed presidential election.
And on Tuesday Ebrahim Raisi, a senior member of Iran’s judiciary, said nine other government critics would be hanged soon for what he said was their bid to topple the Islamic regime.
But Mr Mousavi was not deterred, condemning the hangings and urging supporters to take to the streets next week.
He wrote on his website on Tuesday that the repression showed the 1979 Islamic revolution that overthrew the US-backed Shah had failed as the “roots of tyranny and dictatorship” still exist.
“Filling the prisons and brutally killing protesters show that the root of … dictatorship remain from the monarchist era,” the former premier said on his Kaleme website.
(C) The Telegraph Group London 2010
China is not a socialist country and there is much to criticise about China. But the national question of China was mischievously stirred up in Xinjiang by the US with help from Saudi Arabia. The US with Indian connivance has been stirring trouble in Tibet from day one. Many do not know that Dalai Lama was an oppressor in old Tibet and was with slave owning landlords whose CIA backed ‘rebellion’ failed in 1959.
Yet none of that justifies China’s mishandling of some of the issues. The problems need to be seen in the context of continued foreign meddling.
Incidentally, Daily Telegraph is the voice of the racist rightist elite in the UK and gives exactly what one expects of it.
But all of this is besides the question as to whether China or Iran or even Pakistan poses a threat to other countries in the way the US and its allies do.
Estate boy iran is down mai.its finished mai.i dont they cant challenge india and america mai.thats how srianka and srilankan better chance in south east asia.we the best mai.lankans.lankave.ask anyone we better than india mai.
Thomas I dont understand what u write MAI
அய்யா பாகிஸ்தானியர்களீன் பழக்கமே முதுகில் குத்துதல்(கார்கில்) உள்ளோன்றூ வைத்து புறமொன்றூ பேசுதல் தலிபான்/அல்கைரா/முகாஇன்/ அதனால் பாக்கியை நம்ப்நட நம்பிநடவாதே நொந்து போவாய்.அமெரிக்காவுக்கே சவாலா ?
ஐயா சாமி thamilmaran
வாயில் வந்ததையெல்லம் கொட்டாதீர்கள்.
ஆதாரங்களுடன் பேசப் பழகுங்கள்
பாகிஸ்தானில்தான் உலகப் ப்யங்கரவாதத்தின் வேர் இருப்பதாக அறீவுஜீவிகள் பேசுகிறார்கள் ஏக்ஸ்.இதில் ஆதாரம் எது வேண்டும் எக்ஸ்.எனக்குப் புரியவில்லை.
புலிகளுக்கும் பாக்கிஸ்தானில் தானா வேர்கள்?
தயவு செய்து உங்கள் “அறிவு ஜீவிகளின்” ஆதாரத்தைத் தாருங்கள்.
“உள்ளோன்றூ வைத்து புறமொன்றூ பேசுதல் தலிபான்/அல்கைரா/முகாஇன்/ அதனால் பாக்கியை நம்ப்நட நம்பிநடவாதே நொந்து போவாய்.” இதற்கான ஆதாரமென்ன?
நமக்கு உள்ளோன்று வைத்துப் புறமொன்று பேசி வஞ்சித்தவர்கள் யார்?
அதை அறிய அறிவு ஜீவிகள் தேவையில்லை!
எக்ஸ் சிந்தனையின் ஊடே சிந்தித்தால் இந்தியா சரியான் திசையில்தானே பயணீக்கிறது.பாகிஸ்தான் பயங்கரவாதிகலை கட்டுப்படுத்தாது போனால் பாக்கிஸ்தானை தாக்குவதே உலகை பயங்கரவாதத்தில் இருந்து மீட்பதற்கான வழியாக அமையும்.அமெரிக்காவும் பிரிட்டனும் உலகை காப்பாற்ற போராடும் போது இந்தியாவை அமெரிக்காவின் ஏவல்நாய் என்பது எக்ஸ் அவர்கள் கருத்தில் இருந்தே தவறூ என்பது உண்மையாகிறது.ஆகவே அன்பார்ந்தவர்களே,
முதலில், கேட்டதற்குப் பதில் கூறுங்கள்
தயவு செய்து உங்கள் “அறிவு ஜீவிகளின்” ஆதாரத்தைத் தாருங்கள்.
“உள்ளோன்றூ வைத்து புறமொன்றூ பேசுதல் தலிபான்/அல்கைரா/முகாஇன்/ அதனால் பாக்கியை நம்ப்நட நம்பிநடவாதே நொந்து போவாய்.” இதற்கான ஆதாரமென்ன?
நமக்கு உள்ளோன்று வைத்துப் புறமொன்று பேசி வஞ்சித்தவர்கள் யார்?
உண்மைக்கு முகங்கொடுக்க முடியாதென்று எதையாவது உளறிக் கதையை மாற்றுவதால் பயனில்லை
எக்ஸ் எங்கள் தலையில்நாங்களே மண் அள்ளீப்போட்டு விட்டு வருவோர் போவோர் மீதெல்லாம் பழிபோடநான் தயாரில்லை.தலைவர் கொன்சமும் யோசிக்காமல் ஆமியோடு கொழுவினது பிழை.அவன் தனகிரான் என்றால் பார்த்துப் போகாமல் தண்ணீயை மறீத்து சண்டையை தொடக்கினது பெரிய தவறூ. அடுத்தது அறீவுஜீவி திரு பிரவுண் இங்கிலாந்து பிரதமர் சன் பேப்பர் கேவின் மக் கென்சி.பிபிசி தான்நான் விடயங்கலை தெரிந்து கொள்ளூம் ஊடகம். பெரும் பத்திரிகையாளர் திரு பொன் பாலா அவர்களே தனியே அவருடன் றேமி மார்டின் அடிக்கும் போது குறீப்பிட்டார் அதை வைத்து திருமதி ராஜபக்சவை பேகர் என்றூ குறீப்பிட்டேன்.தவறூ இருப்பின் மன்னிக்கவும்.
தயவு செய்து வதந்திகளின் அடிப்படையில் அரசியலை விவாதிக்காதீர்கள்.
யோசித்து விசாரித்து எழுதுவீர்களானல் எல்லாருக்கும் நல்லது.