June 15th, 2012

நாடு கடந்த தமிழீழக் குழுவின் உள்வீட்டில் புகை : உறுப்பினர் பகிரங்க மடல்

நாடு கடந்த தமிழீழக் குழுவின் உள்வீட்டில் புகை : உறுப்பினர் பகிரங்க மடல்

நாடுகடந்த தமிழீழக் குழுவினரின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான ஜெய்சங்கர் முருகையா அதன் உள்வீட்டுச் சிக்கல்களை பகிரங்க மடலாக எழுதியுள்ளார். அதனை மாற்றங்கள் இன்றிப் பிரசுரிக்கிறோம்.   ஜீ.ரி.வி என்ற தொலைக்காட்சி சேவையின் அறிவிப்பாளரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான தினேஷ் வெளியேற்றப்பட்ட நிலையில் முரண்பாடுகள் எரிய ஆரம்பித்துள்ளன. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் அரசியல் துறை மாண்புமிகு அமைச்சர், திரு. தயாபரன் தணிகாசலம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்…..     முதற்கண், எனது அன்பு கலந்த வணக்கங்கள்.

பணவீக்கம் அதிகரித்தது

புது தில்லி: மே மாதத்துக்கான பணவீக்கம் 7.55 சதவீதமாக அதிகரித்துள்ளது.பண்டங்களின் மொத்த விலைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் பணவீக்கம் முந்தைய ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் கூடியிருக்கிறது. ஏப்ரல் மாதம் பணவீக்கத்தின் அளவு 7.23 சதவீதமாக இருந்தது. உருளைக்கிழங்கு, பருப்பு, கோதுமை ஆகிய உணவுப் பொருள்களின் விலையேற்றமே பணவீக்கம் உயரக் காரணம் என்று கூறப்பட்டது. உணவுப் பண்டங்களின் பணவீக்கம் 10.74 சதவீதத்தை தொட்டது. மொத்த விலைப் பட்டியலில் உணவுப் பண்டங்களின் பங்கு 14.3 சதவீதமாக இருக்கின்றது. வருடாந்திர

வேளியேற்றப்பட்டவர்களை மீள்குடியேற்ற இன்ன்னும் காலம் தேவை : கருணா

வேளியேற்றப்பட்டவர்களை மீள்குடியேற்ற இன்ன்னும் காலம் தேவை : கருணா

இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னர் கூறப்பட்ட ஜூன் 30 ம் திகதி என்ற கால எல்லைக்குள் பூர்த்தியாக முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மீள்குடியேற்ற துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார். மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்ற போதிலும் அவற்றை பூர்த்தி செய்ய மேலும் சிறிது காலம் தேவைப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நிலக்கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படாத காரணத்தினாலும், இராணுவ முகாம்களுக்காக இடங்கள் எடுக்கப்படும் பட்சத்தில் அதற்குப்

பாலச்சந்திரன் கொலையின் சூத்திரதாரி யார்?

பாலச்சந்திரன் கொலையின் சூத்திரதாரி யார்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் 14 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவே சுட்டுக் கொன்றுள்ளதாக Lanka News Web இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் நேரடி ஆலோசனைக்கமைய 53ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக அன்று கடமையாற்றிய பிரிகேடியர் கமல் குணரத்னவின் பட்டாலியனே இந்தச் சிறுவனை சுட்டுக்கொன்றுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி அதிகாலை 7.30 அளவில் பாலச்சந்திரன்

முள்ளிவாய்க்கால் தடையங்களை அழிக்க திரவங்கள் வாங்கப்பட்டன ?

இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மனித எலும்புகளை உக்க வைப்பதற்கு சீனாவிலிருந்து திரவங்களை இலங்கை அரசு இறக்குமதி செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனந்தபுரம், சாலை, புதுமாத்தளன், மாத்தளன், இரட்டை முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் எச்சங்கள் எதையும் விட்டு வைக்காது அழிப்பதற்காக இவை இறக்குமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. போர் முடிவுற்று மூன்றாண்டுகள் கடந்த நிலையில் மேற்படி பகுதிகளில் இன்னமும் தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை. இந்த நிலையிலேயே அங்கு எஞ்சியிருக்கக் கூடிய