தலவாக்கலை பிரதேசத்தில் கடந்த வாரங்களில் மக்களை ஆட்டிப் படைத்த வாந்திப் பேதி வயிற்றுளைவு நோய்களுக்கு இன்னும் தீர்க்கமான முடிவுகள் எதுவும் வழங்கப்படாத நிலைமையில் பலரும் பல கதையாடல்களை நடத்துகின்றனர். மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் பிரதேசமான மத்திய மலை நாட்டின் நுவரெலியா பிரதேசத்தின் லிந்துல்லை அரச மருத்துவமனைக்கு ஆயிரம ஆயிரமாய் மக்கள் வரத் துவங்கியதும் அதில் ஆறு மாத குழந்தை வாந்திப் பேதி நோயினால் பாதிக்கப் பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு கடந்த 31.03.2012
மாவோயிஸ்டுகளால் கடத்திச்செல்லப்பட்டிருந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனன் இன்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டிருக்கிறார்.தமிழ்நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன் ஏப்ரல் மாதம் 21ந் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். 12 நாட்களுக்கு பிறகு அவர் இன்று விடுவிக்கப்பட்டிருக்கிறார்.அவரது விடுதலையை சுக்மா மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் உறுதிசெய்திருப்பதாக இந்திய ஊடக செய்திகள் கூறுகின்றன. மாவோயிஸ்டுகளால் விடுவிக்கப்பட்ட அலெக்ஸ் பால் மேனன் தற்போது ஹெலிகாப்டர் மூலம் சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூர் அழைத்து வரப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தற்பொழுது நடைபெற்று வரும் சாதிவாரி கணக்கெடுப்பில் ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த சாதி தொடர்பான விவரம் மட்டுமின்றி, அவர்களின் பொருளாதார வாழ்க்கை நிலையை உறுதி செய்யக்கூடிய சொத்து, வாகன இருப்பு, கணினி, குளிரூட்டிகள், அலைபேசி, தொலைபேசி போன்ற விவரங்களும் பெறப்படுகிறது. இதன் மூலம் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் பொருளாதார ரீதியாக முன்னேறிய குடும்பங்களை அடையாளம் காணும் பணி இணைந்தே செய்யப்படுவது தெரிகிறது. சாதிய, பொருளாதார
அண்மையில் தம்புள்ளையில் முஸ்லீம்களது பள்ளிவாசல் மீது பௌத்த சிங்கள இனவாதிகளால் நடாத்தப்பட்ட தாக்குதலை அரசும் அவர்களது படைகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தமையைக் கண்டித்து திருமாவளவன் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று காலை முதல் துணைத் தூதரகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் குவியத் தொடங்கினர். முற்பகல் 11.30 மணியளவில் தூதரகம் முன்பாக வந்து சேர்ந்த தொல். திருமாவளவன் தமது தொண்டர்களுடன் தூதரகத்தை நோக்கி முற்றுகையிடச் சென்றார். முற்றுகைப் பேரணியின் போது சிங்கள இனவெறியர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஆனால்
(கி,மு. 100 ஆம் ஆண்டளவில்) தமிழர்கள் வாழ்ந்த இம் மஹ்யங்கானவே, மகாவம்சத்தில் முதல் புத்தர் வருகையின் போது (கி,மு 500 ஆம் ஆண்டளவில்) பெருமளவு இயக்கர்கள் ஒன்று கூடும் இடமாக மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளது.