ராஜபக்ச பாசிஸ்டுக்கள் வன்னியில் தமது சொந்த நாட்டு மக்களையே அழித்து இனப்படுகொலை செய்ததை விழாவாகக் கொண்டாடினர். இந்த விழாவில் பல்வேறு இராணுவ அணிவகுப்புக்கள் நடைபெற்றன. காலி முகத்திடலில் ஆரம்பித்த இந்த அணி வகுப்பு லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தை அண்டியே முடிவடைந்தது. இன அழிப்பில் ஈடுபட்ட ஐந்தாயிரம் இராணுவத்தினர் மன நோயாளர்களாகவும் இலங்கை அரசின் ஆணைப்படி ஒருலட்சம் மக்களைக் கொன்று குவித்த இராணுவம் என்ற அவப்பெயரையும் சுமந்த இந்தப் பேரணியில் மகிந்த ராஜபக்ச உடப்ட பல அரச
வழமை போல லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். காமன்வெல்த் மாநாட்டில் பிரித்தானியப் பிரதமரை இரைஞ்சும் சுலோகங்கள் தாங்கிச் செல்லப்பட்டன. அழித்தவர்களையே மீண்டும் மீண்டும் அடிபணிந்து வணங்குவது போன்ற நிகழ்வுகள் நான்குவருடங்களின் பின்னும் தொடர்வதை இது நினைவுபடுத்தியது. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இருந்தபோதும் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உட்பட அந்தக் கட்சியின் சில உறுப்பினர்கள் மன்னார் காவற்துறையினரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மன்னாரில் அந்தக் கட்சியின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வு ஒன்றை நடத்தியபோதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கஜேந்திரனுடன், அவர்களது கட்சியின் தேசிய அமைப்பாளரான மணிவண்ணன் என்னும் சட்டத்தரணியும் வேறு சுமார் 10 பேரும் கைது செய்யப்பட்டதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்
கடலூரில் இன்று நடைபெறவிருந்த நாம்தமிழர் கட்சியின் கூட்டத்திற்கு ஜெயலலித அரசு தடைவிதித்துள்ளது. கூட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தும் ஜெயலலிதா அரச காவல்துறை தடைவிதித்துள்ளது. நடிகரும் இயக்குனரும் ஜெயலலித ஆதரவாளருமான சீமானின் கட்சியான நாம் தமிழர் கட்சி புலம் பெயர் தமிழர்களை மையப்படுத்தி இயங்கிவரும் கட்சியாகும். நாம் தமிழர் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை கண்டித்து கடலூரில் இன்று பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக நடத்தப்படும் பொதுக்கூட்டத்துக்கு
யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவஞ்சலி நிகழ்த்தப்பட்டுள்ளதனை அறிந்த ராஜபக்ச பாசிசப் படைகள் பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கொன்றுபோடப்பட்டவர்களின் நினைவு நாளைக்கூட மீட்ட உரிமை வழங்க மறுக்கும் உலகின் கிரிமினல் அரசுகளில் ஒன்றான ராஜபக்ச பேரினவாத அரசு தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களைப் போராடத் தூண்டுகிறது. அமைதிவழியான அஞ்சலி நிகழ்வு கூட ஆயுத முனையில் அடக்கப்பட்டு மக்களின் உணர்வுகளில் ஆயுதங்களைத் திணிக்கிறது ராஜபக்ச அரசு. மறுபுறத்தில் மனிதர்களைக் கொன்று போட்டதை வெற்றியெனக் கொண்டாவதற்கு
அமரிக்க அரசு பயங்கரவாதிகள் என்ற பெயரிட்டு உலகத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளிலிருந்தும் தனிமைப்படுத்தி மனித குலத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிராக விசாரணைகள் கூட மறுக்கப்பட்டு நடமாடக் கூட முடியாமல் மனிதர்களை அடைத்துவத்திருக்கும் அவமானத்தின் சின்னம் குவன்டனமோ சிறை. தமக்கு எதிரானவர்களை மிரட்டுவதற்காகவும், இஸ்லாமியர்கள் என்றால் சித்திரவதைக்கு உட்படுத்தலாம் என்ற உலக அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்காகவும் சங்கிலிகளால் நாள் முழுவதும் பிணைக்கப்பட்டு சித்திரவதை செய்வதற்கான குவான்டனமோ கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து இன்றோடு 100வது நாள். மனிதகுலத்தின் அங்கங்களான மரணத்துள் போராடும்
முன்னிலை சோசலிசக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் காணி காவல்துறை அதிகாரங்களைக் கோருவது இனவாதம் எனத் தெரிவித்துள்ளார். வடமாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அது இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான பொறிமுறை அல்ல எனவும் தெரிவித்த அவர் இனவாதிகள் காணி காவல்துறை அதிகாரங்களைக் கோருவதாகவும் இனவாதிகள் அதனை மறுத்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பேரினவாதம் சிறுபான்மைத் தேசிய இனங்களை சூறையாடும் ஒரு நாட்டில் தன்னுரிமைக்கான அடிப்படைகளைக் கோருவதக் கூட இனவாதம் என நிராகரிக்கும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற இனவாதிகளின் இருப்பு இலங்கை இடதுசாரியத்தின்
தென்னிந்திய சினிமாக் குப்பைகளை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் திணிக்கும் தமிழ் நாட்டின் தொலைக்காட்சி சேவைகள் அமரிக்க ஐரோப்பிய நாடுகளின் ‘புலம் பெயர் கலாச்சாரத்தை’ ஆக்கிரமித்து வருகின்றன. புலம்பெயர் நாடுகளில் தேசியம் பேசும் வியாபாரிகளின் ஒரு பகுதியினர், விஜய், ஜெயா, சண், ராஜ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அங்கு ஒலிபரப்பும் வியாபார முகவர்களாகத் தொழிற்படுகின்றனர். தமிழ் நாட்டின் சினிமா சார்ந்த மிகப்படுத்தப்பட்ட கலாசார அழிப்பை மேற்கொள்ளும் இத்தகைய தொலைக்காட்சிகளின் குப்பைகளையே தமிழ்க் கலாச்சரம்
பொதுபல சேனா என்ற இலங்கை பௌத்த பயங்கரவாத அமைப்பானது நோர்வே அரசின் நிதியில் இயங்குகிறது என்றும் நோர்வேயில் புலிகளை சந்தித்துப் பேச்சு நடத்தினர் என்றும் இலங்கை அரசின் அமைச்சரான விமல் வீரவன்ச கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அமரிக்காவில் தமிழர்களைச் சந்திதுப் பேச்சு நடத்தியது போன்றே நோர்வேயில் புலிகளின் முகவர்களையும் சந்திதுப் பேச்சு நடத்தினோம் எனக் கூறியுள்ளார். இலங்கையில் தமிழ்ப் பேசும் முஸ்லிம் தேசிய இனத்தை அழிக்கும்
யாழ்ப்பாண குடாநாடு மற்றும் வன்னியில் இராணுவத்தினரின் பிரசன்னமானது மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படையினர் நிலைநிறுத்தப்படும் நடவடிக்கையானது இன்றியமையாதது எனவும் சில தரப்பினர் இதனை தங்கள் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த கால அரசாங்கங்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறியதனால் பாரிய பின்விளைவுகள் ஏற்பட்டதாகவும் அதே தவறை தாமும் செய்ய விரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருக்கக் கூடிய சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட