Saturday, May 10, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புலிகள் தேசியத்திற்காகப் போராடினார்களா? : கோசலன்

இனியொரு... by இனியொரு...
08/05/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
99
Home பிரதான பதிவுகள் | Principle posts

வன்னியின் அழிவுகள் விட்டுச்சென்ற வடுக்களின் வேதனை ஆயிரம் வினாக்களை விட்டுச் சென்றிருக்கிறது. தேசியப் போராட்டம் இன்னும் தேவைதானா? தனி நாட்டிற்கான போராட்டம் அவசியமானதா? சாத்தியமானதா? என்ற வினாக்கள் ஒடுகப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்த ஒவ்வோர் மனிதனையும் ஆழச் சென்று விசாரிக்கும் கேள்விகளாகும். தேசிய இனங்கள் ஒடுக்கப்படுகின்றன. அதுவும் பெருந்தேசியத்தின் பெயரால் ஒடுக்கப்படுகின்றன.

ஆக, தேசிய இனம் தனது பிரிந்து போகின்ற உரிமை உள்ளிட்ட உரிமைக்காகப் போராடுதலும் விடுதலைபெறுதலும் நியாயமானது மட்டுமல்ல தவிர்க்க முடியாததும் கூட. இராணுவ வலிமைகொண்டு ஒரு தேசிய இனம் ஒடுக்கப்படும் போது மௌனமாய் மரணித்துப் போதலைத் தீர்வாக முன்வைத்தலை யார் அனுமதிக்க முடியும்?

தேசிய இனம் என்பது சமூக இயக்கத்தின் தவிர்க்க முடியாத கட்டத்திற்குரிய மக்கள் கூட்டம். அந்தத் தவிர்க்கவியலாத காலக்கூறையே கடந்துசெல்லத் தடைப்படுத்தப்பட்டிருக்கும் மக்கள் கூட்டம் தடைக்கு எதிராகப் போர்கொடி உயர்த்துதல் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

இலங்கையில் பேரினவாதம் அறுபது ஆண்டுகள் தமிழ்த் தேசிய இனத்தின் ஒவ்வொரு அடையாளத்தையும் சிறுகச் சிறுக அழித்து வன்னிவரை நகர்த்திவந்து மனிதர்களைக் கூட்ட்டமாகக் கொன்றுபோட்டுவிட்டு மனிதாபிமானம் பற்றிப் பேசிக்கொள்கிறது.
எண்பதுகளின் ஆரம்பப் பகுதியில்ருந்து நேரடியான இராணுவ ஒடுக்குமுறையாக கோரமடைந்த இலங்கை அரச பேரினவாதத்தை எதிர்கொள்ள ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் ஆயுதங்களோடு களமிறங்கினார்கள்.

எங்காவது கிராமத்தில் தலைமறைவு அரசியல் உரையாடல்களையும், அடர்ந்த காடுகளின் நடுவே பயிற்சிகளையும் பண்ணைகளையும் நடத்திக்கொண்டிருந்த விடுதலை இயக்கங்களை வீங்கிப் பெருக்கவைத்தது இந்திய அரசின் இராணுவப் பயிற்சி என்ற கபட நாடகம்.

மக்களிலிருந்து முற்றாக அன்னியப்படுத்தப்பட்ட விடுதலை இயக்கங்கள் தமக்குள் மோதிக்கொண்டன. இந்த மோதலின் உச்சபட்ச வடிவம் தான் ஏனைய விடுதலை இயக்கங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் துரோகிகள் முத்திரையிட்டு தெருத்தெருவாக கொன்றொழித்த நிகழ்வு.

உணர்ச்சி வேகத்தில் தாய், தந்ததை, கற்கை, சுற்றம் அனைத்தையும் துறந்து இலங்கை இராணுவத்தை ஆயுத முனையில் எதிர்கொள்ளத் துணிந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தெருவோரத்தில் மக்களின் கண்முன்னால் கோரமாகக் கொலைசெய்யப்பட்டனர்.

எண்பத்தாறாமாண்டு இரண்டு ரெலோ இயக்கப் போராளிகள் திருனெல்வேலியில் மக்கள் முன்னால் புலிகளால் உயிருடன் தீயிட்டுக் எரிக்கப்பட்டனர். பதின்நான்கு வயது மட்டுமே நிரம்பியிருந்த கிழக்கு மாகணத்திலிருந்து போராடுவதற்காகவே புறப்பட்டவர்கள் ஏன் கொலைசெய்யப்படுகிறோம் என்று தெரியாமலே தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர்.

ரெலோ இயக்கம் முற்றாக அழித்தொழிக்கப்பட்ட சில காலங்களின் பின்னர் புளட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களும் புலிகளின் ஆயுதங்களின் பசிக்கு இரையாகின.
கைது செய்யப்பட்ட போராளிகள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்டனர். அப்போதெல்லாம் சாரி சாரியாகச் செத்துப் போனவர்கள், முள்ளிவாய்க்காலை முன்னமே அனுபவித்தவர்கள்.

இலங்கை அரசபடைகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் அஞ்சி தலைமறைவு போராட்டத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த பலர் புலிகள் இயக்கத்தின் துப்பாக்கிகளுக்கு இரையாகிச் செத்துப் போயிருக்கிறார்கள். புலிகளால் ஈ.பி.ஆர்.எல்.எப் அழிக்கப்பட்ட காலத்தில் ஜெயராஜ் என்ற போராளி தனது மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தான். புலிகளுக்கு எதிராகத் துப்பாக்கி ஏந்த முடியாது. அவர்கள் இலங்கை அரசிற்கு எதிரானவர்கள். அவர்களோடு நான் உடன்படவில்லை. அவர்களது போராட்டம் அழிவையே ஏற்படுத்தும், நான் தலைமறைவாகி இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்தை என்றாவது முன்னெடுப்பேன்… இப்படிப் பேசிக்கொண்டிருந்த வேளையில் இன்னமும் சூடாறியிராத புலிகளின் துப்பாக்கி ஜெயராஜின் உயிரைக் காவுகொண்டதை அவரது மனைவி இன்னமும் நினைவு கூர்கிறார்.

தேசிய விடுதலைக்காகப் போராடுகின்ற இயக்கம் ஏனைய ஒத்த நோக்கம் கொண்ட போராளிகளை நட்புசக்திகளாகக் கருதிக்கொள்ளும். அவர்களுடனான முரண்பாடுகளைப் பேணிக்கொண்டே உடன்பாட்டின் அடிப்படையில் பொது வேலைத்திட்டத்தை உருவாக்க முனையும். தேசியத்தின் இன்னொரு முகம் ஜனநாயகம். ஜனநாயகம் கருத்துப் பரிமாறலுக்கானதாக மட்டுமன்றி சுதந்திரமான நகர்வையும், தேசிய சக்திகளுடனான இணைவையும் வலிமை கொள்ளச்செய்யும்.

தேசியத்திற்கான போராட்டத்திலிருந்து ஜனநாயகத்தை அழித்ததனூடாக புலிகள் தேசிய விடுதலை இயக்கம் என்ற தன்மையை ஆரம்பத்திலிருந்தே இழந்திருந்தனர். தவிர, ஏனைய அமைப்புக்களையும், புலிகளுக்கு வெளியேயிருந்த தேசிய சக்திகளையும் எதிரியாகக் கருதி அழித்தொழித்த பண்பு தேசிய இயக்கத்திற்கானதல்ல. தேசியத்தின் ஒரு பகுதியைத் திட்டமிட்டு சிதைப்பதற்கான நடைமுறையாகும். இந்த வகையில் தமிழீழ விடுதலை இயக்கம் தேசிய விடுதலை இயக்கத்திற்கான அடிப்படைப் பண்புகளைக் கொண்டிருக்கவில்லை.

புலிகள் தேசியப் பண்பற்ற தேசிய விடுதலைக்கு எதிரான இயக்கமாக தன்னை நிறுவிக்கொண்டது.

தொண்ணூறாம் ஆண்டு வட பகுதியில்ருந்து முஸ்லீம் மக்கள் இரவொடிரவாக வெளியேற்றப்பட்டனர். நூற்றாண்டுகளாக மதவழிபாடு தவிர்ந்த ஏனைய அனத்து சுக துக்கங்களிலும் தமிழ்ப் பேசும் ஏனைய பிரிவினரோடு இரண்டறக் கலந்திருந்த அவர்கள் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறுமாறு ஆயுத முனையில் கட்டளையிடப்பட்டனர். முதியோர், நிறைமாதப் பெண்கள், இயலாதோர், குழந்தைகள் என்று எல்லோரும் ஒரு காலைப் பொழுதில் துப்பாக்கி ஏந்திய இளைஞர்களால் எதிர்கள் போல துரத்தப்பட்டனர், எங்கே போகிறோம் என்பது கூடத் தெரியாமல் மரண பயம் பின் தொடர் அவர்கள் தமது சொந்த மண்ணிடம் விடைபெற்ற சோக நிகழ்வு வன்னி முகாம்களில் மக்க்கள் அனுபவித்த துயருக்கு நிகரானது.

ஒடுக்கப்பட்ட தேசிய இனமொன்றின் விடுதலைக்கான அமைப்பு ஏனைய ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களைக் குறைந்தபட்சம் நட்பு சக்திகளாகவே கருதிக்கொள்ளும். அவர்களின் விடுதலைக்கான போராட்டத்தை ஊக்குவித்தலும் அரசைப் பலவீனப்படுத்தலும் தேசிய இயக்கம் ஒன்றின் அடிப்ப்படைப் பண்புகளாகும். முஸ்லீம் மக்களிடமோ, மலையக மக்களிடமோ புலிகளின் அணுகுமுறை அவர்களை அன்னியமாக்கியது மட்டுமல்ல அவர்களை ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் எதிரிகளாக மாற்றியமைத்தது.

புலிகள் தேசிய விடுதலைக்கான போராட்டத்தின் நட்புசக்திகளை எதிரிகளாக மாற்றியது மட்டுமன்றி நியாயம்மிக்க ஒரு போராட்டத்தைப் பல நீண்ட ஆண்டுகள் பின்னடைய வழிவகுத்தனர்.

இவ்வகையில் புலிகள் தேசியப் பண்பற்ற தேசிய விடுதலைக்கு எதிரான இயக்கமாக மறுபடி தன்னை நிறுவிக்கொண்டது.

1985 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த சிங்களச் அப்பவிகளை, துறவிகளை, பெண்களை, குழந்தைகளை எந்த வேறுபாடுமின்றி கொலைசெய்த புலிகளின் ஆயுதங்கள் உவப்பானவையல்ல.

பேரினவாதம் ஏற்படுத்திய அழிவுகள், நெருக்கடிகள் சிங்கள மக்களைக் கூட இலங்கை அரசிற்கு எதிரானவர்களாகச் சிறுகச் சிறுக மாற்றியமைத்துக் கொண்டிருந்தது. சிங்கள மக்களை அதிகமாகக் கொண்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கம் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்திருந்தது. ஜே.வி.பியுடன் முரண்பட்ட பல குழுக்கள் தமிழ் மக்களின் போராட்டத்தை அங்கீகரித்து அரசிற்கி எதிரான ஆயுதப் போராட்டத்தை தயார்செய்ய ஆரம்பித்திருந்தன. தேசிய விடுதலைக்கு தமிழ் மக்கள் வழங்கிய அங்கீகாரம் அவர்களுக்குப் புதிய நம்பிக்கைகளைத் தோற்றுவித்திருந்தது.

அனுராதபுரப் படுகொலைகள், மொத்த சிங்களை மக்களையும் இலங்கை அரசிற்கு ஏகோபித்த ஆதரவை வழங்கும் நிலைக்கு நகர்த்திச்சென்றது. தவிர, தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான உணர்வைத் உரமிட்டு வளர்த்தது.

ஒடுக்கும் தேசிய இனத்திலுள்ள ஒடுக்கபடும் மக்கள் பிரிவினரைத் தமக்கு ஆதரவாக இணைத்துக் கொள்வது தேசிய விடுதலை இயக்கமொன்றின் அடிப்படைப் பண்பாகும். புலிகளின் சிங்கள அப்பாவி மக்களுக்கு எதிரான போக்கு விடுதலைப் போராட்டத்தின் பிரதான நட்பு சக்திகளான ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களைத் தேசிய விடுதலைக்கு எதிரானவர்களாக முற்றுமாக மாற்றியமைத்து போராட்டத்தைப் பல நீண்ட ஆண்டுகள் பிந்தளியது.

இவ்வகையில் புலிகள் தேசியப் பண்பற்ற தேசிய விடுதலைக்கு எதிரான இயக்கமாக மறுபடி தன்னை நிறுவிக்கொண்டது.

இந்திய எல்லைக்குள் கஷ்மீர், நாகாலந்து போன்ற மாநிலஙகளில் மக்கள் தமது தேசிய சுயனிர்ணய உரிமைக்காகப் போராடுகிறார்கள். மத்திய இந்தியாவில் பழன்ங்குடி மக்கள் வீரம் செறிந்த போராட்டம் நடத்துகிறார்கள். குர்திஸ்தான், போல்கன் நாடுகள், ஆபிரிக்க நாடுகள், லத்தீன் அமரிக்க நாடுகள் என்று உலகத்தின் ஒவ்வொரு பிரதான சந்திகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களும் தேசிய இனங்களும் போராட்டங்களை நடத்துகின்றன. ஐரோப்பாவில் ஜநாயகவாதிகள் உலகமக்களின் உரிமைக்காகக் குரலெழுப்புகிறார்கள்.

இவர்களில் எவரையுமே புலிகள் நண்பர்களகக் கருதியதில்லை. இந்தியாவில் சந்தர்ப்பவாத, மக்கள் விரோத அரசியல்வாதிகளோடும், உலக மாபியக் குழுக்களோடும், அதிகாரவர்க்கத்தோடும் தம்மை அடையாளப்படுத்திய புலிகள் ஈழப் போராட்டம் ஒடுக்கப்பட்ட ம்க்களின் போராட்டம் என்பதை உலக மக்கள் நம்ப மறுக்கும் அளவில் தேசியப் போராட்டத்தைச் சிதைத்துச் சீரழித்துள்ளார்கள். இவையெல்லாம் தேசிய விடுதலையின் அடிப்படைப் பண்புகளுக்கு மாறானவை.

இவ்வகையில் புலிகள் தேசியப் பண்பற்ற தேசிய விடுதலைக்கு எதிரான இயக்கமாக மறுபடி தன்னை நிறுவிக்கொண்டது.
விடுதலை புலிகள் சார்ந்த அளவில் போராட்டம் என்பது இரண்டு இராணுவக் குழுக்களுக்கு இடையேயான மோதல் மட்டுமே. இந்தவகையில் வெற்று ஆயுதக் குழுவான புலிகள் உலக நாடுகளின் அதிகாரவர்க்கத்தின் பயன்பாட்டிற்கு துணைசென்றார்கள். இறுத்தியில் புலிகள் இல்லாமலேயே இலங்கை அரசைக் கையாளலாம் என்ற நிலை ஏற்பட்ட வேளையில் அதே அதிகாரவர்க்கத்தால் அழிக்கப்பட்டார்கள்.

இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கை அரச பாசிசத்தின் நேரடியான ஆயுத அடக்குமுறையை எதிர்கொள்ளவேண்டிய நிலையிலுள்ளனர். மக்கள் எழுச்சியோடிணைந்த ஆயுதப்போராட்டம் ஒன்று மட்டுமே தேசிய இனங்களின் விடுதலையை உறுதிப்படுத்தும். ஆனால் புலிகள் போன்ற எதிர்ப்பு ஆயுதக் குழுச் சிந்தனைக்கு அப்பால், தேசிய விடுதலை இயக்கம் ஒன்று மட்டுமே அதற்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அடிமைகளாக வாழ விடுங்கள் : கே.பி

Comments 99

  1. appu says:
    14 years ago

    இன்னும் எத்தனைக்காலம்தான் இதே பல்லவியைப் பாடிக்கொண்டிருப்பது?புலிகளைத்தவிர மற்ற அனைத்துக் குழுக்களினரும்  இலங்கை ,இந்திய அரசுகளின் கைக்கூலிகளாகத்தானே காலந்தோறும் இருந்துவருகின்றனர்.அவற்றையும் விவாதிக்கலாமே?புலிகள் மட்டுமல்ல வேறு எந்த குழு தலையெடுத்திருந்தாலும் இந்தியா அழித்திருக்கும்.தமிழிசுலாமியர் வெளியேற்றம் ,குழுக்களிடையேயான மோதல்கள் அனைத்திலும் இந்திய உளவுத்துறை இருக்கிறது.இறுதிக்கட்டப் போரில் மக்கள் திரண்டுபோராடவில்லையா?சரி மக்கள்தான் புலிப்படையை ஆதரிக்கவில்லையே பின் ஒன்றரை இலட்சம் மக்களை இறுதிப்போரில் ஏன் கொல்ல வேண்டும்.இருக்கிறார்களா இல்லையா எனத்தெரியாத இயக்கம் குறித்து எதற்கு பேச்சு?அதை வைகோ,பழநெமற்றும் பலர் பேசுவர்.புலி விமர்சனத்தைவிட்டு ஏகாதிபத்திய விமர்சனத்தை முன்னெடுங்கள்.இல்லைப்பொழுதைய தேவை அதுதான்.

    • thurai says:
      14 years ago

      வாழ்க்கை ஓர் போராட்டம்..இதே போல் இலங்கைத்தமிழர்களின் வாழ்வும்
      ஓர் போராட்டமே. இதில் வெல்பவர் யார்? தமிழினம் முழுவதுமே என்னும் கருத்து
      முன்வைக்க்கப்பட வேண்டும். .தமிழினத்தின் ஓர் குறிப்பிட்ட அமைப்போ அல்ல்து
      ஓர் சமூகமோ, அல்ல்து குறிப்பிட்ட பிராந்திய மக்களோ முன்ன்னுருமை வேண்டி
      நிற்பதும், சுயநலம் கருதுவதும் பயங்கரவாதமாக் மாறும். அது மட்டுமல்ல் தன் இனத்தையே அழிக்கும்.

      தமிழர்கள் உண்மைகளை அறியாது ஆவேசப்படுவதும் தவ்றாக் வழிகாட்டப் படுவதும் முதலில் நிறுத்தப்பட வேண்டும்.-துரை

    • Sorrylankan says:
      14 years ago

      Hello Appu

      //புலிகளைத்தவிர மற்ற அனைத்துக் குழுக்களினரும் இலங்கை ,இந்திய அரசுகளின் கைக்கூலிகளாகத்தானே காலந்தோறும் இருந்துவருகின்றனர்.அவற்றையும் விவாதிக்கலாமே?//

      Here you are making the mistake? You have not asked why they are with them? Because LTTE never allowed them to stay in Elam. Who gave authority to LTTE to remove other movements? Did they have any proper legal system before they convict people? I am a supporter of Elam cause including LTTE sympathysor. But LTTE made a strtegic blunder and author is right. First get rid of the name இந்திய அரசுகளின் கைக்கூலிகள and traitors (thuroki)

      • மலையக நண்பன் says:
        14 years ago

        Sorrylankan இந்த பிரச்சனைக்கு முலகரணமே பழ நெடுமாறன் அவர்கள் தான் பழ நெடுமாறன் தான் 

        இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1982 ஆம் ஆண்டு பழ. நெடுமாறன் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டு வந்தார்இலங்கை விடயத்தை பற்றி பிரதமர் இந்திராகாந்திக்கு ஒரு கடிதம்அனுப்பினர்“திருகோணமலையில் நான் சென்று பார்த்தபோது பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். எதற்காக என்பதற்கு எனக்குத் தெரியவில்லை. ஆனால் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஓய்வெடுப்பதற்காக கட்டடங்கள் கட்டப்படுவதாக அந்த மக்கள் சொல்லுகிறார்கள்- அமெரிக்கா மெதுவாக அங்கே நுழைய முயற்சிக்கிறது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று அதிலே கூறினேன்.அது வரை இந்தியவிற்கு தெரியாமல் இருந்த விடயத்தை பழ. நெடுமாறன் தெரிந்து கொண்ட இந்திரா காந்தி அவர்கள் நேரிடியாக மோதினால் உலக நடுகல் விழித்து கொள்ளும் அதலால் இந்திய ராஜதந்திர தை பயன்படுத்தி உளவு துறைமுலம் இலங்கைல் நாடாகும் விடயங்களை அறிந்து கொண்ட இந்திய உலவுதுரைமுலம் சிறு சிறு குழுக்களாய் இருந்த இருதவர்களுக்கு ஆயுத பயற்சி அளித்து அதன் முலம் தனது காரியம் நிறைவேற்றியது அது தான் திருகோணமலை துறைமுக ஒபந்தம் பிறகு இந்தியாவிற்கு அதரவாக உள்ள இயக்கத்தவர் ஒருவரை தமிழ் மாகாணத்தின் முதவர் ஆகியதுஅன்று பழ. நெடுமாறன் இலங்கை விஜயம் செய்யாமல் இருந்து துறுதல் அமெரிக்க தமிழர் மாகாணங்கள்உல் கடமைபில் இந்தியாவை பினுக்கு தளி இருக்கும்எங்கே இலங்கை தமிழர்கள் பொருளாதரத்தில் வளர்ச்சி அடைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில்இந்திய தமிழன் இலங்கை தமிழனின் பொருளாதரத்தை சிதைத்து விட்டார்கள்

      • மலையக நண்பன் says:
        14 years ago

         இந்திய பிற குழுக்களுக்கு பயற்சி கொடுத்த இந்திய விடுதலை  புலிகளுக்கு என் முதலில் பயற்சி கொடுக்க மறுத்து விட்டது  ஏன்

  2. sriharan says:
    14 years ago

    அப்பு உண்மையில் இந்தப் பல்லவியை முன்னமே பாடியிருக்க வேண்டும். பாடியிருந்தால் புலியை வைத்து அரசியல் செய்யும் நாடுகடந்த தமிழீழ வியாபாரிகளையும் கே.பி போன்றவர்களையும் தடுத்திருக்கலாம்.

  3. a voter says:
    14 years ago

    புலிகள் தேசியத்திற்காகப் போராடினார்களா என்பது ஒரு பக்க வினா. தேசியத்திற்கான போராட்டத்தை யார் எப்படி நடத்தினார்கள் என்று கேட்டிருக்க வேண்டும்.
    உங்கள் வாதப்படி பார்த்தால் ஏறத்தாள சகல அமைப்புகளுமே மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருந்தன. சக அமைப்புகளுடன் முரண்பட்டு ஆயுத முனையில் அதனைத் தீர்த்துக் கொள்ள முயன்றன. தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்களில் கூட்டணியின் நடத்தை அவர்களையும் புலிகளுடனே சமமாக நிறுத்துகிறது. ஆக யாருமே தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தவில்லை.
    இப்போது சொல்லுங்கள் இங்கே ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் நடைபெற்றதா?
    இதனை நான் சொல்லுவது இங்கு நடைபெற்றது தேசிய விடுதலைப் போராட்டம் அல்ல என்று மறுதலிப்பதற்காக அல்ல. சரியான தலைமை இல்லையேல் நியாயமான எந்தப் போராட்டமும் தோல்வியடையும். நீங்கள் கூறிய அனைத்தும் எவ்வாறு ஒரு நியாயமான போராட்டம் தவறான தலைமையின் கீழ் தோல்வியடைந்தது என்பதைத் தான். மாறாக புலிகள் போராடியது எதற்காக என்பதையல்ல.

    தவறான தலைமை என்று நான் குறிப்பிடுவது தனிமனிதர்களையல்ல என்பது புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

  4. sasi says:
    14 years ago

    முள்ளிவாய்க்காலைச் சந்தித்து ஓராண்டு முடிவடைந்து அடுத்த ஆண்டுக்குள் காலடி வைத்து விட்டோம். எனவே இலங்கைப் பிரச்சனை தொடர்பாக நிகழ்ந்த தவறுகளை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.எம்மிடம் சில கேள்விகள் எழுப்பப்படாமல் இருக்கின்றன,

    புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்ஸீம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது இலங்கை அரசாங்கம் இந்த மக்களைப் பாதுகாக்க போதிய நடவடிக்கைகளை எடுத்ததா,
    இலங்கை அரசு இவ்வாறான ஒரு நிலைமை சிங்கள மக்களுக்கு ஏற்பட்டிருந்தால் எவ்வாறு நடந்து கொண்டிருக்கும், தமது சொந்த இடங்களை விட்டு விரட்டியடிக்கப்படும் போது எந்த வித காத்திரமான நடவடிக்கைகளையும் அப்போது எடுக்காது இருந்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இன்னமும் முஸ்ஸீம் மக்கள் கேள்விக்குட் படுத்தாதது ஏன், புலிகள் முஸ்ஸீம் மக்களை வெளியேற்றியது(அது தவறு) என்று தமிழ் மக்கள் மீது தமது அதிருப்தியை வெளிக்காட்டும் ( நியாயமானதும் கூட) முஸ்ஸீம் மக்கள் பெரும்பான்மைஇன மக்கள் எமக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்றோ , இலங்கை அரசு முஸ்ஸீம் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை என்றோ கேள்விகளை எழுப்ப வில்லையே இது ஏன்

    • Vivek says:
      14 years ago

      1915ல் இலங்கையில் நடைபெற்ற முதலாவது இனக் கலவரம் இஸ்லாமியர்க
      ளுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலேயே நிகழ்ந்தது. இவ்விடயத்தில் தமிழ்த் தலைமைகள்(?) சிங்களவர்கள் பக்கமே நின்றனர். அது ஒரு பெரிய கதை. அது கிடக்கட்டும் இவ்விடயம் எத்தனை இஸ்லாமியருக்கு நினைவிருக்கும்?

    • மலையக நண்பன் says:
      14 years ago

       sasi       தமிழ் இனமே தமிழனை இரண்டாத்ரா குடிமகனாக நடதுகிறனர்

      இதற்கு என்ன சொல்வது பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வவுனியாவிற்கு இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் அங்கும் இரண்டாந்தர பிரஜைகளாகவே நடத்தப்படுகின்றனர். இது தான் தமிழ் தேசியமா
       http://www.thinakkural.com/news/all-news/jaffna/5799-vavniya.html

    • மலையக நண்பன் says:
      14 years ago

      தங்கள் அரசியல் லாபத்திற்காக மலையக தமிழர்களுக்கு பூர்விக தமிழர் செய்த துரோகம்
      1946 ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த சனத் தொகையில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 10.9 வீதமாகவே இருந்தது அதேவேளை பெரும்பான்மை தமிழர் என்ற நிலையில் மலையக தமிழர்களே காணப்பட்டனர்1946 ஆம் ஆண்டு மலையக தமிழர்களின் எண்ணிக்கை (இந்திய வம்சாவளியினர்) 11.7 விழுக்காடாக காணப்பட்டபோது . சுதேசிய பூர்வீக தமிழர்களாக கருதப்பட்ட இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 10.9 விழுக்காடாக இருந்தது. அதேவேளை முஸ்லிம்களின் எண்ணிக்கை 6.2 விழுக்காடாக இருந்தது. இந்த மலையக மக்களின் அரசியல் பலம் சிங்கள தேசியவாதிகளுக்கு மட்டுமல்ல யாழ் மேட்டுக்குடி மையவாத தமிழர்களுக்கும் தமது அரசியல் ஆளுமைக்கும், பிரதிநித்துவத்துக்கும் சவால் விடுவதாக அமைந்ததால் தான் ஜி.ஜி பொன்னம்பலம் அவர்கள் அன்றைய அரசுடன் சேர்ந்து இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டத்துக்கு ஆதரவளித்தார்
      இதை மாறாக முடிவுமா ஓர ரத்த உறவான மலையக தமிழர்களை உங்கள் அரசியல் லாபத்திற்காக மலையக தமிழர்களை பலிவாங்கி விட்டு 

       1947, 1962, 1971 களில் மில்லியன் கணக்கான மலையகத் தமிழர்களை சிங்கள அரசு வெளியேற்றப் படும் போது ஈழத்தமிழ் மக்கள் ஒரு போராட்டத்தையும் நடத்தவில்லை. ஆனால் ஈழத்தமிழர்களுக்காக தமிழ் நாட்டில்  எத்தனைப் போராட்டங்கள் நடந்துள்ளன ..

  5. tamilnilam says:
    14 years ago

    இதுவரை புலிகளுக்கு எதிராக வந்த எழுத்துகள் புலிகளைத் தாக்கி அவதூறு பரப்பின . இந்தக் கட்டுரையில் எதிர்காலத்தை நோக்கிய அக்கறை தெரிகிறது. புலிகளை விமர்சிப்பத்க்கான காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.

  6. S.G.Raghavan says:
    14 years ago

    ஆம் தமிழ்மாறன் தர்க்க நியாயங்கள் பேசப்பட்டிருக்கிறது, இவை அலசப் படுவது எதிர்கால தவறற்ற அசைவியக்கத்துக்கு மிகவும் அவசியமான கருத்து பகிர்வாகும்.

  7. appu says:
    14 years ago

    ஐநா அமைதிப்படையில் பணியாற்ற பேரினவாத இலங்கைபடையினருக்கு என்ன தகுதி உள்ளது?எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களப்படையினர் கைதி மற்றும் பல நாடுகளில் பணியாற்றுவதாகத் தெரிகிறது.பிணங்களைப் புணர்ந்த சிங்களப்படையை அவை உள்ள நாட்டுமக்களின் நலம் கருதி திரும்ப அழைக்க உலகெங்கும் உள்ள தமிழர்கள் போராடவேண்டும்.தற்பொழுது இந்தியா,சீனா போன்ற நாடுகளைவிட மேலதிக எண்ணிக்கையில்படையை அனுப்பி பணம் பார்க்க இலங்கை முயற்சி செய்கிறது.இதையெல்லாம் பேசலாமே!

  8. நெருஞ்சி says:
    14 years ago

    இணையமும்,எழுதுதிறனும் இருந்தால்,மொட்டைத்தனமான விமர்சனம் செய்யலாம்,என்பதே கோசலனின் வெளியீடு.முதல் முப்பதாண்டு இனப்படுகொலைக்கெதிராக,தமிழ்த் தேசிய அபிலாஷைகளை சரிவரப் புரிந்து கொண்டு,ஆயுதம் தாங்கி,அடர்ந்த காடுகளின் நடுவே,சொந்தப் பயிற்சிகளை நடாத்தி,அரசியல் பாதைகளை,நடைமுறையோடே வரிந்து,இயல்பான பரிணாம வளர்ச்சியைக் கண்ட ஒரேயொரு இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாதது.மற்றைய இயக்கங்கள் அனைத்தினது வளர்ச்சியும்,பெருக்கமும் இன்னொன்றில் தங்கியதுதான் என வரலாற்றின் உயிரோடைகளுக்குத் தெரியும்.நடைமுறை பிறழ்வுகளை வைத்துக் கொண்டு,அனைத்தும் தவறு என்பது வெறும் வல்லடி வாதமே.எழுத முன் வரலாற்றை சற்றே பின்நோக்கிப் பார்க்க பழகுங்கள்.

    • Kumar says:
      14 years ago

      அப்ப யுபி ல் புலிகள் பயிற்சி எடுக்கவில்லை என்கின்றீரா??

      • நெருஞ்சி says:
        14 years ago

        புலிகள் என்கிற இயக்கம் காலத்தின் தேவை கருதி,இயல்பாக உருவாகி,அரசயந்திரத்தை உபயோகித்து,பண ஆயுத சேகரிப்பு செய்து,தாமாகவே பயிற்சி நெறிமுறைகளை வகுத்து,அரசியல் தனித்துவம் கொண்டு மக்களிடம் போனவர்கள்.

        மாறாக இறக்குமதி செய்யப்பட்ட EROS,EPRLF,புலிகளின் உதிரிகளான PLOT,கடத்தல் புகழ் TELO வும் கையேந்தி பவனால் மட்டும் கரையேறிப் போனவர்கள்.

        இந்த இயக்கங்கள் அனைத்தும்,புலிகளின் வளர்ச்சியில் வாழ்ந்த ஒட்டுண்ணிகள்.அதனால்தான் புலிகளின் அழிவிலும்,இவர்களால் வாழ முடிகிறது.எழுதிக் குவிக்கும் திராணி இருக்கிறது.

        இனியாவது புரிகிறதா,நீண்டகாலம் தாங்கிப்பிடித்தவர்களின் வரலாறு.

        • thurai says:
          14 years ago

          கான்சூரம் கட்டை விற்குக்கும் உதவாது.
          பருத்து,,நெடுத்து வழர்ந்த மரங்களெல்லாம் மனிதர்களிற்கு உதவுவதில்லை. அதே போல்தான் புலிகள் அமைப்பினால் தமிழர்களிர்கு ஆக்கமில்லாவிடினும் பரவாயில்லை
          அழிவினைக்காட்டி விட்டு தாமும் அழிந்து போய்விட்டது. துரை

        • Kumar says:
          14 years ago

          உத்தரப்பிரதேச முகாம்களில் பயிற்சி எடுத்தவா்களில் புலிகளும் அடங்குவா், ஆரம்பகாலங்களில் புலித்தலைவரும் இணைந்தே வங்கிக்கொள்ளைகளில் ஈடுபட்டார், அவா்களுடய ஒரே குறிக்கோளாக இருந்தது எதிலும் எங்கும் தாம் மட்டுமே என்பதாகும்.

          ரெலோ சாவகச்சேரி காவல் நிலையத்தையும் மாங்குளத்தில் புகையிரதத்தையும் தரை மட்டமாக்கியபோது புலிகள் தாங்க முடியாமல் மற்றவா்களை அளிக்கவேண்டும் என்ற முடிவிற்கு வந்ததும் இந்தியாவை பகைக்கமுடிவெடுத்ததும் ஆனால் மத்திய உளவுப்படையின் ஆசீா்வாதத்தோடு எம்.ஐி.ஆா் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டிருந்தார்கள் பின்பு புலம்பெயா்ந்தவா்களிடம் கப்பம் பெற்றதால்
          காலத்தை ஓட்ட முடிந்தது.  

          • chandran.raja says:
            14 years ago

            புலிகள் மற்றவர்களை குறிப்பாக போராளிகளை அழிக்க வேண்டுமென்று ஒருநாளும் கருதியதில்லை. அவர்களை அழித்தால் மட்டுமே! தம்மை பாதுகாக்க முடியும்.கோல்ஓச்ச முடியும் என தீர்க்கமான முடிவுக்கு வந்தார்கள். இதுவொரு “கிறிமினல்” புத்தியள்ளவர்களுக்கே சாத்தியமாகக் கூடியதுதொன்று.இந்த பருப்பு புலம்பெயர் இடத்தில் தான் வெகுவாக வேகவைகப் பட்டு காசாக்கப் பட்டது.

  9. அரிச்சந்திரன் says:
    14 years ago

    தமிழீழ விடுதலைப்புலிகள் மீது சாட்டப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் நியாயமான பதிலுண்டு. அது என்னவென்பது மக்களுக்கு நன்கு தெரியும். அதே நேரம் தங்கள் பக்க நியாயமான தவறுகள் என்னவென்பதும் புலிகளுக்கு தெரியும். நன்நோக்கம் கொண்ட விமர்சனங்கள் வரவேற்கப்படவேண்டியவைதான். ஆனால்,வஞ்சக வியாக்கியானங்கள் தலைகீழாக நின்றாலும் வஞ்சகரன்றி எவராலும் ஏற்றுக்கொள்ளப்படாது.

    இனியும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை வழி நாடாத்தும் தகுதி கொண்ட ஒரே அமைப்பு விடுதலைப்புலிகள் மட்டுமே என்பதை தூய்மையான எண்ணமுடையோர் மட்டும் ஏற்பர். உண்மையில் விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது எவருடைய சொத்துமல்ல. அது மக்களின் சொத்து. மக்களில் இருந்தே அது வளர்கிறது. மீண்டும் அது அழுக்குகள் அகற்றப்பட்டு மிளிரும்.

    மண்ணிலும் மக்களிலும் உண்மையான பற்றும் பிடிப்புமிருந்தால் எவரும் அதில் இணைந்து போராடலாம். அப்போது அங்கிருந்து கொண்டு எவரும் சரியான பாதையில் பயணத்தை கொண்டுசெல்லலாம். அவ்வுரிமை எவருக்குமுண்டு. மாறாக, உடைந்த ரெக்கோட் மாதிரி திரும்பத் திரும்ப அலுத்துப்போன விசயங்களை சொல்வது அவரவர் ஆழ்மனதிலுள்ள வக்கிரகங்களை தணிக்க மட்டுமே பயன்படும் வேரொன்றுக்குமில்லை.

    • Abiram says:
      14 years ago

      Hi, What you said is absolutely right. This is the fact we are seeing for the last 25 years. These people never change and they are very little in our community. Please do not waste your time in argueing with these mentaly disabled people. Now they have a little chance to show their illness and they are showing.

  10. appu says:
    14 years ago

    நெருஞ்சி,அரிச்சந்திரன் உங்கள் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.

  11. spraba says:
    14 years ago

    புலிகள் தேசியத்திற்காக போராடவில்லை என்றால் பிரபாகரன் எப்படி தேசிய தலைவராக முடியும் ?

    • mani says:
      14 years ago

      பிராபாகரனை யார் தேசியதலைவராக ஏருக்கொன்டது.

      • புரவி says:
        14 years ago

        யார் ஏற்று கொள்ளவில்லை?

        • Kathir says:
          14 years ago

          தமிழ் மக்கள் எற்றுக்கொள்ளவில்லை , புலிகளின் அருவருடிகள் ஏற்றுக்கொண்டு இருக்கலாம்.

          • புரவி says:
            14 years ago

            பல வருடமாக புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராடியவர்கள் தமிழ் மக்கள் இல்லாமல் சிங்கள மக்களா ?

        • thurai says:
          14 years ago

          உலகமே ஏற்றுக்கொள்ளாம்ல் பயங்கரவாதியாக்கி
          பியாணை பிடிப்பித்திருந்த்து. இதுவுமா தெரியாது.?
          ஜிரிவி நேயர் போல்தெரிகின்றது. துரை

          • புரவி says:
            14 years ago

            உலகம் ஏற்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை,
            தமிழ் மக்கள் ஏற்று கொண்டால் போதும். அங்கு வாழ்வது தமிழ் மக்கள் தானே தவிர உலகம் இல்லை .

          • THAMILMARAN says:
            14 years ago

            நீ யாரய்யா கதைப்பது எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மனப்பாங்கு மாற வேண்டும்.

          • a voter says:
            14 years ago

            தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் கட்டாய ஆட்சேர்ப்பு ஏன் நடந்தது?

          • புரவி says:
            14 years ago

            @a voter,
            திலீபன் உட்பட புலிகள் இயக்கத்தில் தாமாக சேர்ந்தவர்கள் தான் உண்டு.
            பெண்களும் அவ்வாறுதான் இயக்கத்தில் தாமாக சேர்ந்தனர். கோழைகளை வலுக்கட்டாயமாக சேர்த்து வைத்து கொண்டு பல்லாங்குழி தான் விளையாட முடியும்.
            சிங்கள பேரினவாதத்தை எதிர்க்க முடியாது.

  12. Kathir says:
    14 years ago

    யார் துரொகி புலிகள் தான் இன்ரைய துரொகி

  13. Keethan says:
    14 years ago

    புலிகள் மக்களிற்காகப் போராடினார்கள் என்பது உண்மை. மடிந்தார்க்ள என்பதும் உண்மை. ஆனால் அவர்களிற்கென வாங்கப்பட்ட சொத்துக்கள் எல்லாமே இன்று புலம்பெயர்ந்த தேசங்களிலுள்ள தனிப்பட்டவர்களினால் ஆழப்படுவதற்கும் புலிகளின் பலவீனமே காரணம். ஒரு தனிமனிதைச் சார்ந்து கற்பனையுலகத்தில் திளைத்திருந்ததால் ஒரு கட்டமைப்பபை உருவாக்கமால் எல்லாம் அண்ணை பார்த்துக் கொள்ளுவார் என்று கூறியிருந்தவர்களிற்கு அண்ணையின் மறைவின் பின்னும் சொத்தால் வாழ்க்கை. ஆனால் பாழாய் போன தமிழினம் 1970ல் இருந்த நிலையில் இன்றும் இருக்கிறது. பிரபாகரன் தோற்கவில்லை. அவரை நம்பிய தமிழினம் தான் தோற்றது.

  14. அரிச்சந்திரன் says:
    14 years ago

    மானத் தமிழர்கள் தலைவர் பிரபாகரனை தேசியத்தலைவராக ஏற்றுக்கொள்ளுகின்றார்கள். துரோகிகள் துரோகிப்பட்டம் கொடுக்க அருகதையற்றவர்கள். பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டார் என்று இலங்கை அரசு, இந்திய றோ, ஒட்டுக்குழுக்கள், சுயநலவாதிகள், சந்தர்ப்பவாதிகள், அதிகாரத்துக்காக அலைபவர்கள் மட்டுமே கூறுகின்றார்கள். அற்ப மானிடர்களே, காலம் உங்களுக்கு முழி பிதுங்கும் பதில் தரும் அது வரை மகிழ்ச்சியாயிருங்கள்

  15. THAMILMARAN says:
    14 years ago

    டாக்டராக நினைத்த திலிபனும், டாக்டராக வரவேண்டிய துர்க்காவும் இன்னும் பலர் புலிகளீன் கனவுகளாய் சுதந்திர உணர்வு இல்லாதிருந்தால் அவர்கள் போராட வந்திருக்க மாட்டார்கள் உண்மையில் அவர்கள் இருந்தபோது நான் மிகவும் கடுமையாக அவர்கள விமர்சித்துள்ளேன் ஆனால் அவர்கள் இல்லாமல் போனபோது என் இனம் அழிக்கப்பட்டதே எனக் கலங்கிப் போனேன்.நாமெல்லாம் செத்த பாம்பை அடித்துக் கொண்டிருக்கிறோம், உயிரோடு வர முடியாதவர்க்கு நெருப்பு வளர்க்கிறோம் என்னதான் ?

    • thurai says:
      14 years ago

      வீதியில் ஒருவனை யாராவது தாக்கும்போது தடுக்க முடியாதவ்ர்கள், ஏன் என்று கேட்படக்ற்கு துணிவில்லாதவ்ர்கள் போல் தான் புலியினரின் ச்ர்வாதிகாரப்போக்கை ஆதரித்தவ்ர்கள். இவர்களெல்லாம் சுதந்திரம், உருமை
      என்பது பற்ரி பேசவே தகுதியற்ரவ்ர்கள். துரை

  16. Mahendra says:
    14 years ago

    ரெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களைவிட்டு வெளியேறிய அதன் முக்கிய உறுப்பினர்கள் வெளியிட்டிருந்த அறிக்கைகள் அவ் இயக்கங்களின் உண்மைத் தன்மைகளை தமிழ்மக்கள் அறிந்துகொள்ள உதவியது.

    மதவழிபாட்டுக்குரிய புனிதமான யாழ்ப்பாணப் பள்ளிவாசலுக்குள் ஆயுதங்களும், வெடிமருந்துகளும் அன்று அரச ஆதரவுடன் வந்து பதுங்கின.

    1956 ஆம் ஆண்டிலிருந்து மிருகவெறிக்கும் அப்பால் சென்று மிகக்கொடூரமாக ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட பாலகர், சீரழித்துக் கொல்லப்பட்ட பெண்கள் முதற்கொண்டு தள்ளாடி நடக்கவே முடியாத வயோதிபர்கள் அனைவரும் தமிழர்களாக பிறந்ததினால் பயங்கரவாதிகள். அனுராதபுரத்தில் கொல்லப்பட்ட சில சிங்களவர்கள், அதுவும் அனுராதபுரத்தில் இருந்த தமிழர்களை அடித்து விரட்டிய காடையர்களும், பெளத்த துறவிகள் மட்டும் சிங்களவர்களாக இருப்பதால் அப்பாவிகள்.

    இன்று பலர் சிறீலங்காவுக்கு பயமும் பாதிப்புமின்றிச் சென்றுவருவதற்காக தாங்களை சிங்கள அரசின் விசுவாசிகளாக காட்டிக்கொள்ள முண்டியடித்துப் போட்டி போடுகிறார்கள். அவர்களுள் சிறந்த போட்டியாளர்களுள் ஒருவராக திரு. கோசலன் அவர்களை முன்மொழிகிறேன்.

    • Kumar says:
      14 years ago

      நாம் எதிரியின் இன அளிப்பிற்கு எதிராக போராடப்புறப்பட்டு அதிலும் மோசமாக நம்மையே நாம் அளித்த கொடுமையை நாம் உணரமறுக்கலாமா??அப்படி மறுத்தால் நாம் ஒரு முற்போக்கான சமூகமாக மலர இடம் உண்டா? சுய விமா்சனம் என்ற உயா்ந்த செயற்பாட்டை துரோகிகள் என்ற சொல்லால் சாடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது தமிழ் இனமும் அதன் போராட்டமும் புலிகள் என்ற இயக்கத்திற்கு மட்டுமே சொந்தம் என்று யாரும் தாரைவார்க்கவில்லை. மற்றய இயக்கங்களில் நடந்தவைகளை அதில் இருந்து வந்தவா்கள் வெளியிடுகின்றார்கள் காரணம் உண்மையை யாவரும் அறிய வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காவே இயக்கங்கள் யாவும் மக்கள் சொத்து தனிப்பட்டவா் எவருக்குமே அது உருத்தல்ல ஆகவே மக்கள் தவறுகளை அறிய உரிமையுடயவா்கள் இதில் வேறுபாடு எதுவும் கிடையாது.  

  17. appu says:
    14 years ago

    காட்டிக்கொடுத்தவர்களையும் இனிகாட்டிக்கொடுப்போரையும்  அழித்தால்தான் ஈழம் என புலிகள் எடுத்த முடிவு சரி என்பதற்கு கருணாவின் பிரிவும் அதற்குப் பிந்தைய இறுதிக்கட்ட நிகழ்வுகளும் சான்று.கருணா பிரியவில்லையென்றால் புலிகளை வீழ்த்த முடியாது என்று கூறிக்கொண்டே புலிகளை குற்றம் சுமத்தினால் என்ன நியாம்?கொலைவெறியன் இராசபக்சேவுடன்இணைந்துகொண்டு தமிழ்இனத்தைக் காட்டிக்கொடுக்கும் டக்சு,கருணா போன்றோர் குறித்து எழுதங்கள் .

    • thurai says:
      14 years ago

      ஈழத்தமிழர்,சிங்களவ்ர் இரு இனங்களின் இரத்தத்திலும் கன்னியாகுமரி முதல்
      இமயம் வரையும், உலகட்ங்கிலும் வர்த்தகர்களாக விளங்கும் ஈழததமிழர்களிற்கு
      என்ன பெயர் வைப்பது?-துரை

    • கதிரவன் says:
      14 years ago

      கருணா, 1983 ஜூலை கலவரத்தின் பின் தமிழ் ஈழ புலிகள் இயக்கத்தில் இணைந்து புலிகளின் இந்திய மூன்றாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று அதன் பின் புலனாய்வுத்துறை சம்பந்தமாக விசேட பெற்று பின் புலிகளின் தலைவர் பிரபாகரன் நேரடி கண்காணிப்பின் கீழ் தனது புலனாய்வு செய்யத் தொடங்கினர் 1984 , 1985 இரண்டு ஆண்டுகள் சென்னையில் இவர் செய்த புலனாய்வு வேலைகள் புலிகளின் தலைவருக்கு கருணா மீது அளப்பெரிய நம்பிக்கை ஏற்ப்பட்டது. 1986 ஆம் ஆண்டு மட்டக்களப்பு /அம்பாறை மாவட்டத்துக்கு புலனாய்வுத்துறை பொறுப்பாளாராக தனது வேலையை தொடங்கினார் இதே ஆண்டு டெலோ, புலிகள் மோதல் ஏற்பட்டது, டெலோ மீது தாக்குதல் நடத்துவதக்கு மட்டக்களப்பு , அம்பாறை சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் விரும்பவில்லை , இந்தகலாப்பகுதியில் மட்டக்களப்பு ,அம்பாறை தளபதியாக
      குமரப்பா இருந்தார் , குமரப்பாவின் சொந்த இடம் வல்வெட்டித்துறை தலைவரின் கட்டளையை நிறைவேற்றுவது பெரும் சிரமமாக இருந்தது. என்னென்றால், சில சிரேஸ்ட உறுப்பினர்கள் இயக்கத்தை விட்டு வெளி ஏறினார்கள் , தலைவரின் கட்டளையை நிறையேற்றுவதற்கு குமாரப்பவுக்கு உறுதுணையாக நின்று டெலோ இயக்கத்தை இந்த மாவட்டங்களில் முற்றாக தடை செய்வதற்கு உதவினர் சில உறுப்பினர்கள்
      இவரை படிக்காதவன் என்றும் மாடு மேப்பவன் என்றும் கேலி செய்தனர் எதையும் பொறுப்படுத்தாமல்,தலைவனின் ஆணை ஏதோ அதை செயல் படுத்துவதில் குறியை இருந்தார் . இதே போல் E .P .R .L .F தடை
      வந்தபோது தலைவரின் ஆணையை நிறையேற்றுவதக்கு குமாரப்பவுக்கு உறுதுணையாக இருந்தார் . அன்று கருணாவின் செயல் அறிந்த தலைவர் தனது ஆணை நிறை எற்றுவதக்கு இம் மாவட்டங்களுக்கு சரியான ஆள் கருணாதான் என முடிவு எடுத்தார் 1987 . 04 கருணா மட்டக்களப்பு அம்பாறை தளபதி ஆனார்

      • மீனவள் says:
        14 years ago

        கதிரவன் , கருணா செய்தவை பல 1990 பின் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாடாக வைத்திருக்க போராளிகள் குறைவாக இருக்கிறது . தலைவர் பிரபாகரன் அங்கே இருக்கும் போராளிகளை அனுப்பி வைக்கும் படி கட்டளை இட்டார் , கருணாவும் அனுப்பி வைத்தார் 500 போராளிகளையும் அதனுடன் சேர்த்து 500 ஆயுதங்கள் மற்றும் 6 கோடி ரூபாய் பணம் ,யாரும் யோசிக்க வேண்டாம் இவ்வளவு தொகை பணமும் ,ஆயுதமும் எப்படி. அனுப்பி இருப்பார் என்று . 1990 யில் மட்டக்களப்பு .அம்பாறை மாவட்டங்களில் இருந்த 10 போலீஸ் நிலையங்களில் கைப்பெற்றா பட்டவைதான் இந்த ஆயுதங்கள்
        . மட்டக்களப்பு . கல்முனை வங்கிகளில் இருந்து பறித்தேடுத்தவை தான் இந்தப்பணம் .

  18. கோசலன் says:
    14 years ago

    மகேந்திரா, அரிச்சந்திரன், அப்பு;
    இன்று இலங்கை அரசிற்கு அடிப்படையில் ஆபத்தானவர்கள் யார் தேரியுமா?
    1. போராட்டத்தின் தவறைப் விளங்கிக்கொண்டு வெற்றிகரமான வழிகளில் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள்.
    2. கடந்த கால போராட்டத்தில் ஏற்பட்ட தவறுகளை வெளிப்படையாக விமர்சிப்பவர்களும் அதனூடாக எதிர்காலத்தைத் திட்டமிடுபவர்கள்/
    இலங்கை அரசிற்கு வேண்டுயவர்கள் யார் தெரிவுமா?
    1. புலிகளை விமர்சிப்பதன் ஊடாக தேசியப் போராட்டமே தவறு என்ற நிலைப்பாடை முன்வைத்து இலங்கை அரசின் கைக்கூலிகளாக மாறிவிடுபவர்கள்.
    2. வியாபார நோக்கங்களுக்காக இலங்கை அரசின் கைக்கூலிகளாக மாறுபவர்கள்.
    3. புலிகளின் தவறுகளை விமர்சிக்காமல் தோல்வியடைந்த அதே வழிமுறையைப் பின்பற்றி இலங்கை அரசின் இருப்பைப் பலப்படுத்துபவர்கள்.
    4. தேசியத் தலைவர் என்ற பெயரை உச்சரித்துக்கொண்டும், புலிக் கொடியைப் பிடித்துக்கொண்டும் அப்பாவிகளை ஏமாற்றி அவர்கலை இலங்கை அரசின் பக்கம் இழுத்துச் செல்லும் நாடுகடந்த தமிழீழம் போன்றவர்கள்.
    இதை எல்லம் விடுத்து இன்னுமொரு வழியும் உண்டு,
    1. தவறுகளைப் புரிந்து விமர்சியுங்கள்.
    2. அதிலிருந்து இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதமேந்திய மக்கள் போராட்டத்தைத் திட்டமிடுங்கள்/
    இதில் நீங்கள் யார்பக்கம் மகேந்திரா, அரிச்சந்திரன், அப்பு?
    பழைய பெருமைகளைப் பேசிப்பேசியே எத்தனை காலம் கடத்தப் போகிறீர்கள். செயலாற்றுவதற்கு எமக்கு முன்னால் நிறையவே உண்டு. விமர்சித்தலும், சுய விமர்சித்தலும், அறிதலும், வினாவெழுப்புதலும் திரும்பத்திரும்ப நடக்க வேண்டும். போராட்டங்கள் வெற்றியடையும்…

  19. S.G.Raghavan says:
    14 years ago

    விடுதலை புலிகளை கண்மூடித்தனமாக எதிர்பவர்களும் ஆதரிப்பவர்களும் குமாரின் இந்த கருத்தினை தயவு செய்து விளங்கி கொள்ளவும். “சுய விமா்சனம் என்ற உயா்ந்த செயற்பாட்டை துரோகிகள் என்ற சொல்லால் சாடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. தமிழ் இனமும் அதன் போராட்டமும் புலிகள் என்ற இயக்கத்திற்கு மட்டுமே சொந்தம் என்று யாரும் தாரைவார்க்கவில்லை. மற்றய இயக்கங்களில் நடந்தவைகளை அதில் இருந்து வந்தவா்கள் வெளியிடுகின்றார்கள் காரணம் உண்மையை யாவரும் அறிய வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காவே. இயக்கங்கள் யாவும் மக்கள் சொத்து தனிப்பட்டவா் எவருக்குமே அது உருத்தல்ல ஆகவே மக்கள் தவறுகளை அறிய உரிமையுடயவா்கள் இதில் வேறுபாடு எதுவும் கிடையாது.”

    மகேந்திரா, அரிச்சந்திரன், அப்பு மூவருக்கும் ஒரு தகவல் வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து பல புலிகள் நீங்கள் குறிப்பிடும் துரோகிகளின் துணையுடனே தப்பிச் சென்றனர். துரோகிகள் எல்லோரும் அழிக்கப் படவேண்டும் என அப்பு கூறுகிறார் அப்படியானால் முதலில் புலிகளின் உறுப்பினர்கள் பலரை அல்லவா
    அழிக்கவேண்டும். பிரபாகரன் உயிருடன் இருந்தால் நான் சந்தோசப் படுவேன் ஆனால் அரிச்சந்திரன் அவர்களே மக்களை மடையர்களாக நினைக்க வேண்டாம். பிரபாகரன் புதுக்குடியிருப்பை விட்டு விலக மறுத்ததும் போராளிகள் வலுக்கட்டாயமாக இழுத்து வந்ததும் அவர் முள்ளிவாய்க்கால் வரை வந்தததும் உயிரோடு இருக்கும் பல போராளிகளுக்கு தெரிந்த விடயம் முள்ளி வாய்க்காலில் அவர் கடைசி நேரம் தப்பிச் சென்றிருப்பின் உண்மையில் அவர் ஒரு பீனிக்ஸ் பறவைதான். ஒரு பெரும் விடுதலை அமைப்பின் தலைவர் இறந்து போனதை தூர நோக்கற்று யாரும் மறைப்பின் அதுவும் மிகத் துரோகமே. வரலாறு எதற்கும் பதில் சொல்லட்டும்.

  20. S.G.Raghavan says:
    14 years ago

    வெகுஜனங்கள் மத்தியில் இறங்கி வேலை seithal எனபது உண்மையான மக்கள் போராட்டத்தின் பண்புகளில் ஓன்று ஆனால் விடுதலை புலிகள் அவ்வாறான மக்கள் போராட்டம் ஒன்றில் அக்கறை செலுத்தவில்லை . புலிகளின் arasiyal படைத்துறை pallikalil பேசப் படும் ஒப்புவிக்கப் பட்ட பாடநெறிகளை கொண்ட அரசியலை நெருஞ்சி பேசுகிறார் அது அவருக்கே உரிய விளக்கம் அல்லது புலிகளுக்கே உரிய விளக்கம் athanai மற்றவர்கள் vilangkuvathu satru கடினம். நெருஞ்சி MGR பற்றி அந்த மலையாளி பற்றி நீங்கள் அல்லது புலிகள் எதனையும் அறிந்தது வைத்திருக்கவில்லை. MGR அரசில் இருந்த பல MGR உடன் நெருங்கி இருந்த பல அரச உயர் அதிகாரிகள் போலீஸ் உயர் அதிகாரிகள் இந்திய இலங்கை புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புகளை பேணியவர்கள் என்பது பரகசியமானது இரகசியமானது அல்ல இந்த லட்சணத்தில் தான் புலிகள் MGR இடம் இருந்து அனைத்தும் பெற்றார்கள்

  21. நெருஞ்சி says:
    14 years ago

    எழுந்தமான ‘திரு’கு கதை விடுவதில் ராகவன் நீங்கள் கில்லாடி என்பது இங்கே அனைவருக்கும் தெரியும்.

    புலிகள் துரோகிகள் என்கிறார்கள் எனபதற்காக புலிகளைத் துரோகிகள் என்று அதே வழியில் நடைபயில முனைகிறீர்கள்.

    சிந்தனைகளையே பிரதி பண்ணுகிறவர்கள் ஒட்டுண்ணி வாழ்வையே களிக்கிறார்கள்.

    முதலின் நான் எழுதிய செய்திகளைப் மீண்டும் படியுங்கள்.இயல்பான வளர்ச்சியில் ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்து,அதனுடே மக்களிடம் சங்கமித்த ஒரெ ஒரு இயக்கம் புலிகள்தான்.மற்றயவர்கள் “கீரைக்கடைக்கு எதிர்கடை வேண்டுமென்று” வந்து முள்ளிவாய்க்காலின் பாதிப் பங்கைப் பகிர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.

    ஒன்றுமில்லாதவர்கள் சுயவிமர்சனம் என்று பேசுவது,மலட்டுத்தனக்காரர் மகப்பேற்று மாண்பியம் பேசுவதாகும்.

    நீங்கள் எந்த இயக்கத்தில் இருந்திர்களோ,அந்த இயக்கம் பற்றி சுயவிமர்சனம் செய்யுங்கள்.அதுவே புலிகளின் சுயவிமர்சனத்திற்கு ஒப்பானது.

    உங்களைப் போன்றோர் புலிகள் மீதுவைக்கிற குற்றச்சாட்டுகள்,அரச மரத்தை சுற்றி சொல்கிற மந்திரங்கள்.எந்த மக்கள் விடுதலையை வேண்டி நின்றர்களோ அந்த மக்களின் .உருவாக்கமே இயக்கங்கள்.நின்று நிமிர்ந்து நீண்டகாலம் நடந்தவர்கள் மக்களின் விருப்பத்திற்குரியவர்களே.

    • S.G.Raghavan says:
      14 years ago

      துரோகி என்ற அரசியலை கைவிட்டுவிடுங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள். ஏனைய அமைப்புகளை புலிகள் குற்றம் சாட்டும் போது இந்திய அடிவருடிகள், இலங்கை அடிவருடிகள் எனக் குறிப்பிடுவர். MGR சுத்தமாகவே காங்கிரஸ் கைபாவையாகவே இருந்தார். அவரது காலத்தில் அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக அரசாங்கத்தில் இருந்த பல அதிகாரிகள் இலங்கை அரசுடன் தொடர்புகளை கொண்டிருந்தனர் அவ்வாறான MGR உடன் புலிகள் ஏன் கூட்டு வைத்திருந்தனர்.? புலிகளின் உள்வீட்டு விடயங்கள், புலிகள் டெலோ மோதல் (அதாவது டெலோ இந்திய உளவுத் துறையின் ஆலோசனைப்படி புலிகள் மீது தாக்கப் போகின்றனர் என்ற செய்தி MGR ஊடாகவே புலிகளுக்கு சொல்லப் பட்டது என்ற செய்தி உண்டு. இது இயக்கங்களை தமக்குள்ள மோத விடும் தந்திரோபாயம்), வடமராச்சி லிபரேஷன் ஆபரேஷன் காலத்தில் புலிகளிடம் ஆயுதம் இல்லை என்ற செய்தி கூட தமிழ் நாட்டு போலிஷ் அதிகாரியான தேவாரமே இலங்கைக்கு கொடுத்தார் என்பது சாதாரணமாக அனைவரும் தெரிந்த செய்தி. இவ்வாறு புலிகள் மத்தியிலும் தவறுகள் இருக்கின்ற போது ஏனையவர்களை வாய்க்கு வாய் புலிகள் துரோகி எனக் கூறும் அரசியலை தான் நான் கண்டிகிறேனே ஒழிய புலிகள் துரோகிகள் என நான் கூற வரவில்லை.

  22. THAMILMARAN says:
    14 years ago

    குருட்டித்தனமான வாதங்கள முன் வைத்து இருட்டில் நிற்பது நெருஞ்சியின் விருப்பம் போல,வெளீநாட்டில் எடுக்கப்படும் டொக்குமென்ரிகளீல் வெள்ள பதில் சொல்ல முடியாமல் முழித்து அவர்களூக்கு முட்டாள் பட்டம் கட்டி தன்னை அறீவாளீயாக்குவது மாதிரி.புலிகள் மக்கள என்றக்கு மதித்து இருக்கிறார்கள்?தாம் வைத்திருந்த மக்கள் முன்னணீயையும் கலைத்தவர்களாயிற்றே அவர்கள்.

  23. APPUU says:
    14 years ago

    தோழர் கோசலன் உங்கள் விமர்சனங்கள் வரவேற்கத்தக்கவை.ஆனால் இலங்கை அரசு பன்னாட்டு நிறுவனங்களுடனும் இந்தியாவுடனும்  இணைந்துகொண்டு புலிகளை தோற்கடித்து.இப்பொழுதும் சில தமிழ்குழுக்கள் புலிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரால் தமிழர்களை ஒடுக்க பேரினவாத இலங்கை அரசின் பின்னால் இருந்துகொண்டு செயல்படுகின்றன.புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன்பேயே பல இலட்சம் தமிழர்கள் சிங்கள இனவெறிக்கு பலியாகியுள்ளனர்.இந்த எண்ணிக்கை இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டவர்களைவிட அதிகமாகத்தான் இருக்கிறது.புலிகளை வறட்டுத்தனமாக நிராகரிப்பது அப்பட்டமான சிங்கள இனவெறி ஆதரவுப் போக்கு .சிங்களவெறியருக்கு சிம்மசொப்பனமாய் இருந்தவர்கள் புலிகள்.மறுக்க இயலாது.அவர்கள் என்ன தவறு செய்தார்கள்.புலிகளை சுயவிமர்சனங்கள் செய்யுங்கள்.அதேநேரத்தில் டக்ளசு.கருணா மற்றும் பலர் அயலகத்தில் உள்ள தமிழர்களையும் அழிக்க துடிக்கின்றனர்.அவர்களால்தான் இன்றைய துயர் விளைந்த்து.

  24. அரிச்சந்திரன் says:
    14 years ago

    தவறுகளைப் புரிந்துகொண்டு நகரவேண்டுமென்பதில் என் போன்றவர்களுக்கு எந்த மாற்றுகருத்துமில்லை அன்பர்களே. விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையிலும் அவர்களும் இதனை நன்குணர்ந்து கடைப்பிடித்தே வந்துள்ளனர் என நான் உறுதியாக நம்புகின்றேன். உதாரணத்துக்கு அனுராதபுரம் சம்பவமும் அது போன்றவைகளும் பின்னரான அவர்களின் நடவடிக்கைகளில் சாதாரண சிங்கள மக்களுக்கு அழிவுகள் ஏற்படுவதை கண்டிப்பாக தவிர்த்துக்கொண்டே வந்திருந்தனர் (முள்ளிவாய்க்காலின் பெரும் அவலத்துக்குள் வரையும்) எனினும், அந்நிகழ்வுகள் அக்காலத்தின் சூழ்நிலையின் தேவை அவர்களை அதற்குள் தள்ளியது என்பதே உண்மை. மக்களின் நலன் கருதி தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை காலத்தின் தேவைக்கேற்ப நகர்த்திப் போராடவேண்டிய தேவை போராடிய அவர்களுக்கிருந்தது என்பதை விமர்சனக் குருடர்கள் கண்டு கொள்ளவேண்டும்.

    மாற்று அமைப்பு உறுப்பினர்களை புலிகள் அழித்தார்கள் எரித்தார்கள் என்று ஒட்டுமொத்தமாக அவர்களின்மேல் மட்டும் இலகுவாக பழியைப்போடுபவர்கள் நரியர்கள். மற்றப் பகுதியிரும் உத்தமர்களில்லை என்பதையும் யாவரும் மனதில் கொள்க. நாங்கள் என்ன ஆபிரிக்காவில் அல்லது அண்டாட்டிக்காவில் இருந்தா வந்தவர்கள் இல்லையே எம்மூரில் என்ன நடந்ததென்று எம் எல்லோருக்கும் தெரியும். விடுதலைக்காகப் புறப்பட்ட போராளிகளுக்குள் இடம்பெற்ற அந்நிகழ்வுகள் தமிழின விடுதலைப்பாதையில் ஒரு சாபக்கேடு என்பது மறுப்பதுக்கில்லை. இதற்கான பொறுப்பு அனைவருக்கும் சமமாக இருப்பினும் இதனை ஊக்குவித்த மூளைகளுக்கு அதிகமுள்ளது என்பதை எவரும் தட்டிக்கழிக்க முடியாது. அந்த மூளைகள் யார் என்பது மூளையுள்ளவர்களுக்கு நன்கு தெரியும். கண்களை மூடி விட்டால் இருண்டதாக அர்த்தமில்லை. விமர்சித்தல், அறிதல், வினாவெழுப்புதல் அதன் மூலம் நகர்தல் என்ற பல்லவியை எழுத்தில் மட்டுமே படம் காட்டி வருகின்றீர்கள் (கையெழுத்து பிரதி தொடங்கி கணனி வரை) ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது. அதிலும், முழு உண்மை, நன்நோக்கம் இருக்கின்றதா? யாராவது நேர்மையிருந்தால் நடுநிலை நின்று பதிவிடுங்கள் வரவேற்கின்றோம் ஏற்கின்றோம்..

    விடுதலைப்புலிகள் மாவீரர் பட்டியலில் தமிழீழ எதிரிகளுக்கு எதிராக மாற்று அமைப்பில் இருந்து களமாடி மாவீரராகிய போராளிகளின் பெயர்களும் அடங்கும். உண்மையாக மண்ணையும் மக்களையும் நேசித்த எத்தனையோ மாற்று அமைப்பு போராளிகள் புலிகளுடன் கைகோர்த்து போராடினார்கள். இதற்கு, மாமனிதர் தாராகி சிவராம் அவர்கள் களத்துக்கு அப்பால் அனைவருக்கும் தெரிந்த ஒரு உதாரணம். புலிகளால் தண்டனை பெற்ற எத்தனையோ மாற்று அமைப்பினருடைய பிள்ளைகள், சகோதர சகோதரிகள், உறவுகள் உண்மையை உணர்ந்து சத்தியத்துக்காகவும் தர்மத்துக்காகவும் புலிகளுடன் இணைந்து களமாடினார்கள் இனியும் களமாடுவார்கள். தாய்நாட்டையும் மக்களையும் உளமாற நேசிப்பவனுக்கு தனிக்குடித்தனம் தேவையில்லை. ஒன்றாக நில் எதிரியை வெல் நெஞ்சில் நேர்மையிருந்தால்.

    விடுதலைப்புலிகளின் அரசியலைப்பற்றியோ அல்லது இராணுவ பொறிமுறை பற்றியோ அல்லது ஏனைய கட்டுமானங்கள் பற்றியோ விமர்சனம் செய்ய நான் உட்பட இங்கு வரும் எவனுக்கும் தகுதியில்லை. அவர்களின் இன்றைய பின்னடைவு அவைகளால் மட்டும் ஏற்பட்டதுமன்று. அவைகள் பற்றி இவ்விடத்தில் தர்க்கிப்பதால் ஆகப்போவதும் ஒன்றுமில்லை. விடுதலைப்புலிகள் கடந்த காலங்களில் தங்களின் பின்னடைவுகளுக்கும் தோல்விகளுக்கும் வெற்றிகளுக்குமுரிய காரணங்கள் குறித்து நன்கு ஆராய்ந்தும் சுயவிசாரணை செய்துமே வந்துள்ளார்கள் அதனடிப்படையிலேயே அவர்கள் செயற்பட்டும் வளர்ந்தும் வந்தவர்கள் அதன் பிரகாரம் மீண்டும் வருவார்கள் என்பது சத்தியம் சாத்தியம். அதற்காகவே முள்ளிவாய்க்காலின் பின்னரான மௌனிப்பு. நாடு கடந்தவைகளும் பேரவைகளும் சபைகளும் மையங்களும் சங்கங்களும் புலிகளில்லை.

    திரு.கோசலன் அவர்களே, பழைய ஊத்தைகளை ஊனக்கண்ணுடன் நீங்கள் தோண்டுகையில் பழைய பெருமைகளை நாங்கள் பெரிதாக சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது. மேலும், ஒருவர் எந்தப்பக்கம் என்பதை விட எப்படியான பக்குவம் ஒருவருக்கு உள்ளது என்றே பார்க்கப்படல் வேண்டும்.

    MR. S.G.R அவர்களே, M.G.R பற்றியும் அவரின் அதிகாரிகளின் இலங்கை இந்திய புலனாய்வாளர்களின் தொடர்புகள் பற்றியும் கூறினீர்கள் நன்றி. இப்போதுதான் விளங்குகின்றது ஏன் அன்று புலிகள் முந்திக்கொண்டார்களென்று. மேலும், தற்போது தங்களின் தோழர்களின் அவர்களூடான தொடர்புகள் எப்படியிருக்கின்றது?

  25. a voter says:
    14 years ago

    இங்குள்ள பின்னூட்டங்கள் பலபுலிகளைச் சாடுவதில் அல்லது துதிபாடுவதில் போய் முடிகிறது. அடிப்படையில் புலிகளும் தவறு செயதிருக்கிறார்கள் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தவறுகளின் நிமித்தம் தேசியத்திற்காகப் போராடவில்லை என்று சொல்வது தவறு. (அப்படியானால் அவர்கள் எதற்காகப்போராடினார்கள்?)
    உலகமெங்கும் தேசிய விடுதலைக்காகப் போராடிய இயக்கங்கள் தம்மிடையே மோதிக்கொண்டுள்ளன. பாலஸ்தீன விடுதலை இயக்கம் மிகச்சிறந்த உதாரணம். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கூட ஆரம்பத்தில் வெள்ளையரிற்கெதிராகவே போராடியது.

    புலிகளின் தவறுகளில் ஒன்று அரசியல் ரீதியான பின்னடைவாகும். அதுவே சுத்த இராணுவக்கண்ணோட்டத்திற்கு வழிவகுத்தது.
    இவை புலிகளின் தவறாகவே புரிந்து கொள்ளப்படவேண்டும்.

    எந்தவொரு விடுதலைப் போராட்டமும் மக்களிடமிருந்து அந்நியப்படுமாயின் அது பாசிசம் சார்ந்தே நிலை நிற்க முடியும். ஆக நடைபெற்றுள்ள சம்பவங்கள் காட்டுவது மக்களைச் சார்ந்து நிற்பதன் அவசியத்தைத் தான்.

  26. நெருஞ்சி says:
    14 years ago

    மலடாகிப் போன மார்க்சிஸ சிந்தனைகளில் மல்லுக் கட்டியபடி,”மக்கள்” மந்திரம் ஓதியபடி,பாஸிசம் போன்ற மனனம் பண்ணிய வார்த்தைகளால் கதைப்பது அல்ல போராட்டம்.

    விமர்சனம்,சுயவிமர்சனம் செய்வது ஒரு கட்டமைப்பின்,முன்னோக்கிய நிலைப்பாட்டின் வெளிப்பாடே;அதை விடுத்து மண்டை சிறுத்த,வயிறு புடைத்தவர்களின் நையாண்டி மேளங்களாளல்ல.

  27. Mahendra says:
    14 years ago

    தமிழினம் விடுதலை பெறவேண்டுமானால் ஆரியவழி அறிவூட்டல் அடியோடு மாறவேண்டும், மாற்றப்படவேண்டும்.

    தமிழ்வழி அறிவூட்டலை இன்று தொடங்கினாலும் அதன் பலனைப் பெறுவதற்கு சில தலைமுறைகள் காத்திருக்க வேண்டும்.

    மற்றும்படி தமிழினத்திற்கு எத்தகய விடுதலைப் போராளிகள் தோன்றி செயற்பட்டாலும் சீ…சீ… அந்தப்பழம் புளிக்கும்.

    ஒட்டுண்ணித் தமிழ் அமைச்சர்கள், ஒட்டுக்குழுக்கள், புலிகளோடு சேர்ந்தியங்கி அவர்கள் கழுத்தறுத்தவர்கள், புலிகளின் பெயராலும், அவர்களை எதிர்ப்பதாலும் கொழுத்து வாழ்பவர்கள், முள்ளிவாய்க்காலின் பின்பு தன்னிச்சையாக முளைத்து வயிறுவளர்க்கும் புதிய தலைவர்கள் இவர்கள்தான் தொடர்ந்தும் தித்திப்பார்கள்.

  28. கணேஷ் says:
    14 years ago

    புலிகள் மட்டுமல்ல எந்த கோமாளி இயக்கங்களையும் தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள்.ஏனென்றால் இந்த இய்க்கங்கள் எல்லாம் இந்திய உளவு படையின் கைக்கூலிகளாக இருந்து வளர்த்துவிடப்பட்டவர்கள்.முன்னை நாள் “இயக்க ” போராளிகளாக இருந்து விட்டு மாக்சிய முக மூடி போடும் கயவர்களையும் மக்கள் நம்பக் கூடாது.
    தலைமறைவு இயக்கங்களை இனியும் நாம் நம்ப முடியாது. வெளிப்படையான அரசியலே இப்போ நமது மக்களுக்கு தேவை.உளவு படைகளின் கைக்ககூலிகள் அல்ல.

    • THAMILMARAN says:
      14 years ago

      ஒழுங்காய் கையாலே சாப்பிடவே தெரியாதவர் கரண்டியை வைத்து அவதிப்படுவது போலத்தான் இயக்கங்களயும் கோமாளீகள் என்பது கணேஸ்.கோட்டும் சூட்டும் போடுவதற்காக ஒழுங்காய் வெலைக்குப் போகாமல் வெட்டிப் பேச்சு பேசித் திரிவோரைப் போல கனேஸ் நீங்களே பேசலாமா?இது வென்ன கூல் பாரில் அமர்ந்து மட்டன் ரோலும் சர்பத்தும் குடித்து பொழுதைக் கழிப்பதா? சம்பவம்.

  29. Vijey says:
    14 years ago

    தேசியப் பண்பற்ற தேசிய விடுதலைக்கு என்னும் சொல் குறித்து முரண்பட வேண்டியிருக்கிறது. புலிகளை அரசியலை இச்சொல்லினால் சரியாக விளக்கிவிட முடியாது. பலர் முன்வைத்த விமர்சனங்களை சரியான வகையில் புரிய வைத்திருக்கிறீர்கள். பலதடவை நான் குறிப்பிட்டு வரும் விடயம்- புலிகள் தலைமையிலான கடந்த காலம் மிக இலகுவில் கடக்கப்பட முடியாததாய் நிற்கிறது.
    கொல்லப்பட்ட சிங்கள-முஸ்லிம் மக்களிற்காகவும் கொல்லப்பட்ட மாற்று அரசியல் போராளிகளுக்காகவும் – நிகழத்தப்பட்ட பயங்கராவதச் செயல்களுக்கு எதிராகவும் எமது முழுமையான எதிர்ப்பை முன்வைக்கும் ஒரு போரட்டத்தை நாம் நடத்த வேண்டியிருக்கிறது. அதனூடாகவே நாம் மக்கள் போராட்டத்தினை சரியான திசைவழியில் முன்னெடுத்துச் செல்ல முடியும். ஓர் பரந்து பட்ட மக்கள் இயக்கத்தினை உருவாக்க முடியும்.

  30. Vijey says:
    14 years ago

    கட்டுரையில் இயக்கம் பரந்து பட்ட மக்களிடம் இருந்து – தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போனது என்பதுவும் அதனால் இலகுவாக அழிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டது என்பதுவும் சரியான முறையில் புரிய வைக்கப்பட்டுள்ளது. ஓர் சிறிய முன்னேற்றத்தை எதிர்பார்த்து நிற்கிறோம்.
    மக்கள் படுகொலைகளை நினைவு கூர்ந்து அறிக்கைவிடுங்கள். தற்போது நடக்கும் மக்கள் விரோத செயற்பாடுகளை அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளை எதிர்த்து அறிக்கையிடுங்கள். பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒன்றிணைந்து நிற்கிறோம் என்ற செய்தியை முன்வையுங்கள்.

  31. chandran.raja says:
    14 years ago

    தமிழ்மாறனின் பலவாதங்கள் தலையை சுத்தி கீழே விழுத்திவிடும் தன்மை உடையவை. இவர் எப்படிபட்ட குறுகிய மனப்பான்மையுடன் தனது கருத்தை முன் வைக்கிறார் ?. கரண்டியை வைத்து சாப்பிடுகிறவர்கள் தான் ஒழுங்காக சாப்பிடுகிறார்களா? வெள்ளையர்கள் கையால் சோற்றை வாய்குள் வைக்க அவதிப் படுவதை நாமே எத்தனைதரம் நேரில் கண்டிருக்கிறோம். அப்படியென்றால் இதற்கு என்ன பெயர்..? கையால் சாப்பிடுகிறவர்கள் ஒழுங்கில்லாதவர் என்று அர்த்தப்படுமா?. இந்தியா அரேபியா ஆபிரிக்காவில் உள்ள பெரும்பான்மையாவர்கள்
    ஒழுங்கில்லாதவர்களா?
    இயக்கங்கள் கோமாளிகளை விட மோசமானவர்கள். கொலைசெய்வதில் இன்பம் கண்டவர்கள்.மற்றவர்களுடைய உயிருக்கு மதிப்பு கொடுக்காதவர்கள். உலகநாகரீகத்தின் அரசியல்வரலாற்று போக்கை கிஞ்சித்தும் அறியமுற்படாதவர்கள்.
    அன்று அதுதான் என்றால் இன்றும் இதே நிலைதான். தமிழ்மக்கள் ஒட்டிவாழப் புறப்பட்டு பலபத்தாண்டுகள் கடந்தேடி விட்டது.உலகத்தின்
    பலபாகங்களுக்கும் சிதறியோடி பலவித வேறுபட்ட இனங்களுடன் வாழப்பழகிவிட்டான். பழகிவிட்டதும் இல்லாமல் பலநுhறு ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்களமக்களுடன் வாழமுடியாது என அறிக்கைகளையும் விட்டுகொண்டிருக்கிறான். இவர்கள் ஏதோ ஒருவிதத்தில் கோமாளிகளை விட மோசமானவர்களாகவே கணிப்பிட வேண்டியுள்ளது.

    • THAMILMARAN says:
      14 years ago

      தலையைச் சொறீந்து கொண்டு மகிந்தாவுக்கு முன்னால் நின்றால் தலையைச் சுற்றத்தான் செய்யும்.ஆக சொணங்கிக் கொண்டீக்காம ரெண்டு பனடோல் போடுங்க.

      • chandran.raja says:
        14 years ago

        மகிந்தாவிடவும் சிங்களசமூகத்திடமும் கற்றுக்கொள்வதற்கு தமிழ்மக்களுக்கு நிறையவே இருக்கிறது.லண்டனில் இருந்து தலை சொறிந்து வாலையாட்டிக் கொண்டு ஈழத்தமிழருக்கு வயிற்றில் அடிக்காமல் அவர்கள் வாழ்வை அவர்களுடனேயே விட்டு விடுங்கள். நக்குவதற்கும் தலைசொறிவதற்கும் தானே உங்களுக்கு பலன் கிடைக்கிறது. இனியென்ன..? அரசாங்கமும் அமைத்தாயிற்று.மந்திரிகளும் தெரிவாயிற்று. அடையாள அட்டைகளும் வினியோகித்தாயிற்று ஆளுவதற்கு ஒரு நாட்டைத்தான் தேடிப் பிடிக்கவேணும்.முயற்ச்சியை கைவிடாதீர்கள். ஜீரியுடன் ஒன்றிணைந்திருங்கள்.கனவுகளும் ஒருநாள்…..!.

        • THAMILMARAN says:
          14 years ago

          காலம் என்பது மாறூம் வலி கண்ட காயங்கள் ஆறூம்.மேற்கு சூரியன் மீண்டும் கிழக்கில் தோன்றீத்தான் தீரும்.

      • thurai says:
        14 years ago

        உலகமுழுவதும் ஆங்கிலேயர் கட்டிவிட்ட தலைப்பாகையை
        களட்டமனமில்லாம்ல், அவதிப்படும் தமிழ்தேசிய வாதிகள்
        படும் பாடு இன்னமும் விளங்கவில்லயா?-துரை

  32. கணேஷ் says:
    14 years ago

    chandran.raja , THAMILMARAN தலை தலை சுற்றத்தான் செய்யும்.

  33. singam says:
    14 years ago

    1.புலிகள் உட்பட அனைவரும் தமிழர்கள்.தமிழனின் அடிப்படை குணத்ததை மாற்றமுடியாது.
    2.பதவிகளுக்கு வந்த அணைவரும் தங்களுக்கு அடுத்த தலைவர்களை அதாவது உபதலைவர்களை வளர்ப்பதில்லை.தங்கள் பிள்ளைகளே அடுத்த தலைவர்கள் ஆ க்கின்றார்கள்
    3.பொருளாதாரீதியான அபிவிருத்தியில் புலம்பெயர் சமூகம் அக்கறை செலுத்தவில்லை.சண்டை நடந்த காலங்களில் புலிகளுக்கு வழங்கியது போல இப்போது மக்களுக்கு வழங்காது கனடா குடியூரிமையுடன் யாழ்பாணத்தில் காணி விலை அதிகாப்பிற்கு காரணமாகின்றீர்கள்.

  34. பவான் says:
    14 years ago

    தொண்ணூறாம் ஆண்டு வட பகுதியில்ருந்து முஸ்லீம் மக்கள் இரவொடிரவாக வெளியேற்றப்பட்டனர். நூற்றாண்டுகளாக மதவழிபாடு தவிர்ந்த ஏனைய அனத்து சுக துக்கங்களிலும் தமிழ்ப் பேசும் ஏனைய பிரிவினரோடு இரண்டறக் கலந்திருந்த அவர்கள் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறுமாறு ஆயுத முனையில் கட்டளையிடப்பட்டனர். முதியோர், நிறைமாதப் பெண்கள், இயலாதோர், குழந்தைகள் என்று எல்லோரும் ஒரு காலைப் பொழுதில் துப்பாக்கி ஏந்திய இளைஞர்களால் எதிர்கள் போல துரத்தப்பட்டனர், எங்கே போகிறோம் என்பது கூடத் தெரியாமல் மரண பயம் பின் தொடர் அவர்கள் தமது சொந்த மண்ணிடம் விடைபெற்ற சோக நிகழ்வு வன்னி முகாம்களில் மக்க்கள் அனுபவித்த துயருக்கு நிகரானது.

    என்று எழுதப்பட்டுள்ளது.

    1985 ஆண்டு இலங்கையில் இஸ்ரைல் நலன் கார்க்கும் பிரிவு அமைக்கைப்பட்டபின் , முஸ்லீம் மக்களையும், தமிழ் மக்களையும் ஒன்றோடு ஒன்று மோதவிட்டு தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்குவதக்கு இலங்கை அரசு செயல்படக் தொடங்கியது. இதே காலப்பகுதியில் கிழக்கு பகுதியில் முஸ்லிம் தமிழ் கலவரம் ஆரம்பமாகியது. இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து முஸ்லிம் இளஞர்கள். தமிழ் முஸ்லிம் எல்லை
    கிராமங்களுக்கு புகுந்து செய்த அடாவடித்தனங்கள் .சொத்து இழப்புக்கள் சொல்லில் அடங்காதவை. இந்த மக்கள் அனுபவித்த துயரம் எதற்கு நிகரானது .

    1990 ஆண்டு கிழக்கு பகுதியில் , அம்பாறை நிந்தவூர் பகுதியில் 40 தமிழ் குடும்பங்கள் ,கொலை செய்யப்பட்டது, பாண்டிருப்பில் 50 மேற்பட்ட தமிழர் கொலை செய்யப்பட்டது .பொத்துவில் 100 மேற்பட்ட தமிழர்
    இவற்றை முஸ்லிம் ஊர் காவல் படையினர் செய்தார்கள் இந்த துயரம் எதற்கு நிகரானது

    • Mahendra says:
      14 years ago

      தமிழன் எது செய்தாலும் அது பயங்கரம்
      வேறு எவன் எதைச்செய்தாலும் அது புனிதப்போர்
      இதுதான் ஈனத்தமிழனின் நிலைப்பாடு
      இது தமிழன் தன்னோடு வளர்த்தெடுத்த விதி
      இந்த விதியை மாற்றுமட்டும் வேறு கதியில்லை

  35. நிர்மலன் says:
    14 years ago

    ஈழத்தமிழனின் இருப்பிற்கு சிறிலங்கா அரசபயங்கரவாதப்படை, திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மட்டுமல்ல சிறிலங்கா முஸ்லிம்களும் பேராபத்தானவை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது!

    1)மீள்குடியேற்றமெனும் பெயரில் நாவந்துறைபகுதியில் குடியேற்றப்பட்ட சிறிலங்கா புலனாய்வுத்துறையில் கடமையாற்றும் போதைபொருள் விற்பனையாளரான ஒரு சிறிலங்கா முஸ்லிம் காடையனால் நாவந்துறை பொதுமகனின் வீடு சேதமாக்கப்பட்டுள்ளது. -யாழ் முஸ்லிம் இணையத்தில் கருத்துதிரிப்புக்களான செய்தியின் அடிப்படையிலானாது.
    http://yarlmuslim.blogspot.com/2011/08/blog-post_1714.html
    2)வவுனியா நகரசபை தலைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சிறிலங்கா முஸ்லிம் ஜிகாத்குழுவால் கொலை அச்சுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.-தமிழ்மிரர் தகவல் அடிப்படையிலானாது.
    http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/25922-2011-08-06-12-45-19.html
    கிழக்கு மாகாணத்தை திட்டமிட்ட சிங்கள சிறிலங்கா முஸ்லிம் குடியேற்றங்களிடம் பறிகொடுத்தாச்சு. வடமாகாணத்தை புத்தளத்தை பூர்வீகமாக கொண்ட சிறிலங்கா முஸ்லிம் பறிகொடுக்க ஆரம்பித்துவிட்டோம். ஆனால் இனியொருவில் தமிழீழ எதிர்ப்பும் சிங்கள சிறிலங்கா முஸ்லிம் சகோதர பாசமும் அன்பும் பாய்ந்தோடுகிறது. ஆனால் “இனியொரு” ஒரு தமிழ்தேசீய உணர்வுமிக்கவர்களாம். இதையும் நம்புங்கள் பாவபட்ட தமிழினமே! நல்லூரும் செல்வச்சந்நிதியையும் மடுமாதாவும் மசூதிகளாக மாறும் காலமதிகமில்லை!

    • மலையக நண்பன் says:
      14 years ago

      புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால் மறக்கப்படவேண்டிய வரலாறும்” என்ற கட்டுரையின் முதல் பகுதி முஸ்லிம் இளைஞ்ர்கள் புலியின் கொள்கைகளால் கவரப்பட்டோ அல்லது சமூக ஆதிக்க சக்திகளாக மாறும் போது ஆயுதம் தாங்குவதால் அனுபவிக்கும் அதிகாரம் சமூக  மேலாதிக்க நிலவுடமை சமூகத்தின் மீதான உள்ளார்ந்த வெறுப்பு என்பனவும் அவர்கள் புலிகளில் இணைந்ததற்கான  காரணங்களாகவும் இருக்கலாம் சென்ற கட்டுரையில் நான் அக்கரைப்பற்று புலி உறுப்பினரின் (கப்டன் பாரூக்) இயக்க ஈடுபாடும் இறப்பும் குறித்து புலிகளின் வரலாறு எழுதிய அதகான பணியில் ஈடுபட்ட புலி வரலாற்றாளரின் மூலப்பதிவிலிருந்தே மறுபதிப்பு செய்தேன். இம்முறை காத்தான்குடி கான்கேயநூடை சேர்ந்த இன்னுமொரு முஸ்லிம் புலி பற்றிய வரலாறு உங்களின் வாசிப்புக்கு:-    ….

      http://lankamuslim.org/2009/09/27/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3/

    • மலையக நண்பன் says:
      14 years ago

      காத்தாண்குடி கொலை பட்டியல்தமிழீழ விடுதலைப்புலிகளால் LTTE கடந்த 23வருடங்களாக காத்தான்குடி முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட உயிர் மற்றும் பொருளாதார இழப்புக்களின் விபரம்.

      http://lankamuslim.org/kattankudy-muslims/

      • நிர்மலன் says:
        14 years ago

        காத்தான்குடியில் கொல்லப்பட்டவர்கள் தமிழின அழிப்புக்கு தயாராகிக்கொண்டிருந்த முஸ்லிம் பயங்கரவாதிகளே தவிர பொதுமக்கள் அல்ல
        வீரமுனை கிராம தமிழர்களில் ஒருவரையும் தப்பவிடாது கொன்றுபுதைத்ததை சொல்லவா வந்தாறுமூலை பல்கலைகழகத்தில் தங்கியிருந்த அகதிகளை படுகொலை செய்த முஸ்லிம் காங்கிரசினதும் காத்தான்குடி பள்ளிவாசலாலும் திட்டமிட்ட தமிழின அழிப்பை சொல்லவா!

        • chandran.raja says:
          14 years ago

          இதுதான் துரோகிப்பட்டம் கொடுத்து துரோகியாகிய
          வரலாறு!.

      • நிர்மலன் says:
        14 years ago

        ***இதை நான் சொல்லவில்லை. யாழ்முஸ்லிம் இணையத்தில் அப்துல்லாக் எனும் அடையாளத்தில் ஒரு சிறிலங்கா அரசபயங்கரவாத கைக்கூலி சொல்லியுள்ளான் மட்டக்களப்பில் 1990ல் என்ன நடந்ததென.

        “இராணுவம் புலிகளை தாக்க முன்னேறி வந்த சமயம் அவர்களில் சிலர் படையினருடன் சேர்ந்து புலிகளை தாக்கினர். இதனால் புலிகள் எதிர்பாராத திருப்பம் கிழக்கில் ஏற்பட்டது.கிழக்கு ஏற்கனவே முஸ்லிம் இளைஞர்களுக்கு பரீட்சயமான இடமாக இருந்ததால் இராணுவத்தில் சேர்ந்திருந்த முஸ்லிம்களால் குறுக்கு வழிகள் கண்டறியப்பட்டு புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் புலிகள் கிழக்கின் சன நடமாட்டமுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறி காட்டுப்பகுதிகளுக்கு சென்றனர்.
        கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட இந்த எதிர்பாராத திருப்பம் புலிகளின் தமிழீழக் கனவை சிதைத்திருந்தது.”

        • chandran.raja says:
          14 years ago

          இதுதானாக தீரவேண்டிய நோய்யல்ல. சங்கிலியில் கட்டிவைத்து புளிஎண்ணை வைத்து தீர்க்க வேண்டிய நோய். இவர்களே ஒருகாலத்தில் கிட்டு வாகவும் மறுகாலத்தில் கருணாவாகவும் இறுதியில் ரமேஸ்யாகவும் செயல் பட்டவர்கள்.

  36. நிர்மலன் says:
    14 years ago

    வவுனியா நகரசபைத் தலைவருக்கு போராளி குழுவால் கொலை அச்சுறுத்தல்!
    Saturday, August 6, 2011, 17:55சிறீலங்கா
    வவுனியா நகரசபைத் தலைவர் ஐ.கனகையா உடனடியாக தனது தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவ்வாறு செய்யா விட்டால் முதலில் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரையும், பின்னர் அவரையும் கொலை செய்ய நேரிடும் என ‘ஜிகாத் போராளிகள்’ என்ற பெயரில்அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

    நகரசபைத் தலைவர் ஐ.கனகையாவுக்கு ஏ.எம்.எஸ்.முஸ்தப்பா என்பவரால் வவுனியா பட்டகாடு என்ற இடத்தில் இருந்து அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த கொலை அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக நகரசபைத் தலைவர் ஐ.கனகையா தெரிவித்தார்.

    அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அச்சுறுத்தல் கடிதத்தின் முழு விபரம் வருமாறு:

    வவுனியா

    04.08.2011

    ஐ.கனகையா அவர்கள்

    நகரபிதா,

    நகரசபை வவுனியா

    48 மணித்தியாலத்தில் உடன் பதவி விலக வேண்டும்

    தாங்களும் சிறுபான்மை இனம். நாங்களும் சிறுபான்மை இனம். தாங்கள் விடுதலையாகவும், சுதந்திரமாகவும் இருப்பதற்காக, கடந்த பல ஆண்டுகளாக எமது இனத்தின் மீது தொடர்ந்தும் சேறு பூச எண்ணுகின்றீர்கள்.

    நாம் எமது உரிமையான இடத்தில் முஸ்லிம் இனத்திற்குத் தொடர்ந்தும் சொந்தமான காணியில் கடை கட்டுவதற்கு எண்ணியுள்ள வேளை, உங்கள் இனத்துவேசத்தைக் காட்டி அதை நிறுத்த முயற்சிக்கிறீர்கள்.

    நாங்கள் நினைத்தால் உங்களையும், உங்கள் குடும்பம் சார்ந்தவர்களையும் ‘கொலை’ செய்ய எங்களால் முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு தாங்களும் தங்கள் குடும்பமும் இதுவரைகாலமும் எந்தவித ‘உயிர்’ இழப்பும் இன்றி வாழ்ந்து வருகின்றீர்கள்.

    இக்கடிதம் கிடைத்து ’48 மணித்தியாலத்தில்’ தாங்கள் தங்களது நகரம் காக்கும் ‘நகரபிதா பதவியை’ உடனடியாக இராயனாமா செய்ய வேண்டும். செய்யத் தவறினால், முதலில் உங்கள் குடும்ப அங்கத்தவர் ஒருவரை இழக்க நேரிடும். அதன் பின் தங்களையும், கொல்ல வேண்டி நேரிடும். அதனைத் தொடர்ந்து வீட்டினையும் குண்டு வைத்து தகர்க்க நேரிடும். இது ‘மிரட்டல்’ கடிதம் அல்ல. அனைத்து வவுனியா வாழ் முஸ்லிம் சமுதாயம் எடுத்த முடிவாகும்.

    எமது முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் வவுனியா வாழ் தமிழருடன் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழ வேண்டுமானால் தாங்கள் பதவி விலகுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. நாம் சொல்வதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம்.

    ‘ஒன்றுபட்ட முஸ்லிம் சமூகம்’

    இப்படிக்கு

    யஹத் போராளிகள்

    ‘முஸ்லிம் அமைப்பு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.
    http://www.tamilthai.com/?p=23516

    • mamani says:
      14 years ago

      நிர்மலன் நீர் ஒரு குறுந்தேசிய இன வெறியன். உமக்கும் கோத்தபாயவிற்கும் வித்தியாசமில்லை. கொள்ளையடிபதிலும்.

      • நிர்மலன் says:
        14 years ago

        அப்படியா! நீங்கள் என்மீது குற்றம்சாட்டுகிறீர்கள் என்பது விளங்குகிறது. ஆனால் குற்றச்சாட்டுதான் என்னவென புரியுதில்லை! குறும்தேசீயமென்றால் என்னவென்று சொல்வீர்களானால் மேற்கொண்டு பதில் தரமுடியும்.
        வவுனியா சம்பவம்பற்றி இன்றைய(07.08.2011) வீரகேசரியின் முதல்பக்கத்தில் செய்தியிருக்கு! இப்போதைக்கு என்னால் விளங்கிகொள்ளக்கூடியது என்னவெனில் சிறிலங்காமுஸ்லிம்கள் சிறிலங்கா அரசபயங்கரவாதபடையின் ஆதரவுடன் தமிழர்களிற்கு செய்யும் அநியாயங்கள் அக்கிரமங்களை சுட்டிக்காட்டுவது தமிழ்குறும்தேசீயவாதம். சிறிலங்காமுஸ்லிம்களின் தமிழருக்கெதிரான அநியாயங்கள் அக்கிரமங்களிற்கு பரிந்து /நியாயப்படுத்தி பேசுவது தமிழருக்குள்ள கட்டாய புனித கடமையென. இதுதான் தமிழ்குறும்தேசீயவாத வரவிலக்கணமெனில் நான் ஒரு குறும்தேசீயவாதி என்பதை சந்தோசமாக ஏற்கிறேன்:

        • mamani says:
          14 years ago

          நீங்கள் வீரகேசரியில் வந்த செய்தியை உபயோகித்து பின்னூட்டம் விட்ட கீழ் வரும் உங்கள் செய்திதான்

          கிழக்கு மாகாணத்தை திட்டமிட்ட சிங்கள சிறிலங்கா முஸ்லிம் குடியேற்றங்களிடம் பறிகொடுத்தாச்சு. வடமாகாணத்தை புத்தளத்தை பூர்வீகமாக கொண்ட சிறிலங்கா முஸ்லிம் பறிகொடுக்க ஆரம்பித்துவிட்டோம். ஆனால் இனியொருவில் தமிழீழ எதிர்ப்பும் சிங்கள சிறிலங்கா முஸ்லிம் சகோதர பாசமும் அன்பும் பாய்ந்தோடுகிறது. ஆனால் “இனியொரு” ஒரு தமிழ்தேசீய உணர்வுமிக்கவர்களாம். இதையும் நம்புங்கள் பாவபட்ட தமிழினமே! நல்லூரும் செல்வச்சந்நிதியையும் மடுமாதாவும் மசூதிகளாக மாறும் காலமதிகமில்லை!

        • chandran.raja says:
          14 years ago

          குண்டுசட்டி குதிரைவீரரே! குண்டுசட்டிக்குள் குதிரையோட்டி விழுபவர்களுக்கு மாவீரர் பட்டம் கொடுப்பதைத் தான் குறும்தேசியம் என்பது.
          தமிழன் பனைமுனையில் இருந்து தெய்வேந்திரமுனைவரை வாழ்வதும் அல்லாமல் மத்தியிலும் வாழ்கிறான். ஆகவே இலங்கையையே
          அவனது தேசியமாக இருக்கவேண்டும். தேசியம் என்று சொல்லும் போது இலங்கையில் உள்ள பெரும்பான்மையான உழைப்பாளிமக்களைத்தாம் குறிப்பிடுகிறோம் என்பதை மறந்து விடாதீர்கள். அங்குள்ள முதாலித்துவ அரசியல்காவடிகளை என்பதை மறந்துவிடாதீர்கள்.
          இப்படியிருக்கும்போது யாழ்பாணமேட்டுகுடி சிந்தனையை இலங்கைமுழுக்க பரவிவாழும் தமிழ்மக்கள்மீது திணிக்க முற்படுகிறது குறும்தேசியம். இந்த குறும்தேசியபோக்கு கடந்த
          முப்பதுஆண்டுகள் தமிழர் சனத்தொகையை 3/2 ஆக குறைத்துவிட்டது. இனியும் என்னதேவை வேண்டும் குறும்தேசியத்திற்கு? ஓடுகாலிகளுக்கு பணப்பெட்டியை நிரப்புவதற்காகவா? சீறின வாணம்
          மறுமுறையும் சீறாது. அது புஷ்வாணம். தமிழ்மக்கள் புத்திதெளிந்துவிட்டார்கள். வேறும் சந்தேகம் இருந்தால் எடுத்துவிடவும். முடிந்தால் தீர்க்கமுயல்வோம்.

  37. பிடுங்கி says:
    14 years ago

    பல நாட்களின் முன் கோசலன் அவர்கள் எழுதிய புலிகள் தேசியத்திற்காகப் போராடினார்களா?? என்கின்ற தேசியப் பாச விடுதலை உணர்விற்கு யகாத் குழு அண்மையில் முஸ்லிம்முகம்தரித்து அவரின் ஓரங்க நாடகத்திற்கு ஓரம் கட்டியுள்ளது. எது தேசியம் என்பதும் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு எப்போ தலைநீட்டும் என்பதும் கேள்விக்குறியாகிக்கிடக்கிறது.எல்லாப்பாம்புகளுக்கும் ஓரே உணர்வுதான் அது மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிப்பது. புலிகளும்,கோசலன் வக்காலத்துவாங்கிய மாற்றுக்குழுக்களும்,முஸ்லிம் என முகம் போடும் குழுக்களும்,இராணுவகுழுக்களும் என எல்லாமே அங்கீகாரம் பெற்றுக்கொள்ளையிடவென வைத்திருக்கிற தந்திரங்களில் ஒன்றுதான் நீங்கள் பேசுகிற தேசியம் என்பது.இதில் நல்லது கெட்டது என்று எதுவுமேயில்லை. அப்படிஒரு மாயையை உருவாக்கிப் பேசுவோர் எல்லாம் மக்களைப் பங்கு வியாபாரம் செய்கின்ர இடைத்தரகர்கள்

  38. நிர்மலன் says:
    14 years ago

    மாமணி! முதலில் உண்மையை பேசப்பழகுங்கள்! இன்று வந்த வீரகேசரியை ஆதாரம்காட்டி நேற்று எப்படி கருத்துப்பதிவு செய்ய முடியும்? நான் தெளிவாக மூல ஆதாரங்களின் இணைப்பை கருத்துப்பதிவுடன் நேற்றே இணைத்துவிட்டேன். நான் இன்று மேலதிகமாகவே சொன்னேன் “வவுனியா சம்பவம்பற்றி இன்றைய(07.08.2011) வீரகேசரியின் முதல்பக்கத்தில் செய்தியிருக்கு!” என.
    சிறிலங்கா முஸ்லிம்கள் தமது ஊடகங்கள் ஊடக நல்லூரை தமது பூர்வீக பிரதேசமென உரிமை கோரத்தொடங்கிட்டனர். மன்னார் சிறிலங்கா பயங்கரவாத அரச முஸ்லிம் அமைச்சர் சட்டம் ஒழுங்குவிதிகளைமீறி சிறிலங்கா முஸ்லிம்களிற்கு உதவவேணுமென யாழ் பிரதேசசபை செயலர் வவுனியா நகரசபை தலைவரை மிரட்டுகிறார். மீள்குடியேற்றமெனும் பெயரில் புத்தளத்தை பூர்வீகமாக கொண்ட சிறிலங்கா முஸ்லிம் காடையர்கள் வடக்கில் வேகமாக குடியேற்றப்படுகிறார்கள். இது அப்பட்டமான அன்றாடநிகழ்வு. இந்நிலையில் “நல்லூரும் செல்வச்சந்நிதியையும் மடுமாதாவும் மசூதிகளாக மாறும் காலமதிகமில்லை!” எனும் கூற்று மிகச்சாத்தியமே. ஆனால் இனியொருவில் “தமிழீழ எதிர்ப்பும் சிங்கள சிறிலங்காமுஸ்லிம் சகோதர பாசமும் அன்பும் பாய்ந்தோடுகிறது” என்பது உண்மையே.
    மறுதலையாக என்னை “குறித்த கோவிலின் உண்டியல் பங்குதாரார்” “கோத்தபாய மாதிரி கொள்ளைக்காரன்” என எந்த ஆதாரமுமின்றி அவதூறை அள்ளிவீசுகிறீர்கள்.
    எனவே ஆதாரமுடைய எனது குற்றச்சாட்டு தங்களிற்கு கசக்கிறது. அதை நேர்மையாக எதிர்கொள்ளும் திராணியில்லாது பேடித்தனமாக அவதூறை பொய்யை அள்ளிவீசும் தாங்கள் மிகப்பரிதாபத்திற்குரியவர்!

  39. நிர்மலன் 2 says:
    14 years ago

    லண்டனில் தமிழர் கோயில் கட்டி சம்பாதிக்ரார்களா இல்லையா ? நல்லூரிலும் அது நடக்கிறது.

    நிர்மலன் 2

  40. மலையக நண்பன் says:
    14 years ago

     யாழ் இஸ்லாமியர்களை பற்றி பேசுபவர்கள் இதை படிவுங்கள் தமிழ் இனமே தமிழனை இரண்டாத்ரா குடிமகனாக நடதுகிறனர்  இதற்கு என்ன சொல்வது பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வவுனியாவிற்கு இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் அங்கும் இரண்டாந்தர பிரஜைகளாகவே நடத்தப்படுகின்றனர். 
    http://www.thinakkural.com/news/all-news/jaffna/5799-vavniya.html ஈழா தேசத்தில் வடபகுதியில் குடியேறிய மலையகத் தமிழ் மக்களை வெளியேற்றுவதை தடுக்கவும்: இராதாகிருஷ்ணன் 
    வடபகுதியில் 25 வருடங்களுக்கு முன்பு புலியங்குளம் பகுதியில் குடியேறிய மலையகத்தமிழ் குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவற்றை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படியும் அரசுக்கு தாம் அழுத்தம் கொடுக்கவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல் தலைவர் வி.இராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
    கண்டி ரோயல் மோல்ட் ஹோட்டலில் நடைடிபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது-
    புலியங்குளம் பகுதியில் 58 குடும்பங்கள் வெளியேற்றப் படும் நிலைக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர்கள் எங்கு செல்வதென்று தெரியாது திண்டாடுவதாகவும் அவர் கூறினார்.
    ராஜீவ்காந்தி ஜே.ஆர். ஒப்பந்தம் காரணமாக உருவான மாகாண சபை முறை காரணமாக அதிகாரப் பகிர்வு உற்பட பல்வேறு விடயங்கள் எதிர்பார்க்கப் பட்ட போதும் அது இன்னும் நடைமுறைச் சாத்தியமடையவில்லை. 
    புளியங்குளம் வவுனியாவில் இருந்து வடக்காக யாழ்வீதியில் (A9) ஏழத்தாழ 24 கி.மீ தூரத்திலுள்ள இடமாகும்.http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32442

  41. மலையக நண்பன் says:
    14 years ago

     யாழ் இஸ்லாமியர்களை பற்றி பேசுபவர்கள் இதை படிவுங்கள் தமிழ் இனமே தமிழனை இரண்டாத்ரா குடிமகனாக நடதுகிறனர்  இதற்கு என்ன சொல்வது பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வவுனியாவிற்கு இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் அங்கும் இரண்டாந்தர பிரஜைகளாகவே நடத்தப்படுகின்றனர். http://www.thinakkural.com/news/all-news/jaffna/5799-vavniya.html

    ஈழா தேசத்தில் வடபகுதியில் குடியேறிய மலையகத் தமிழ் மக்களை வெளியேற்றுவதை தடுக்கவும்: இராதாகிருஷ்ணன் வடபகுதியில் 25 வருடங்களுக்கு முன்பு புலியங்குளம் பகுதியில் குடியேறிய மலையகத்தமிழ் குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவற்றை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படியும் அரசுக்கு தாம் அழுத்தம் கொடுக்கவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல் தலைவர் வி.இராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.  .http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32442

    • நிர்மலன் says:
      14 years ago

      மலையகநண்பன்(???) தாங்கள் இணைத்த வீரகேசரியின் மிகுதி செய்தியும் இதோ!
      வடகிழக்கு மட்டுமல்ல ஏனைய மாகாணங்களில் சிங்கள மொழிக்கு இணையாக தமிழ் மொழியும் இடம்பெற வேண்டுமென அவ்வப் பகுதிகளில் வாழும் தமிழ் மொழிபேசும் மக்கள் எதிர்பார்த்த போதும் அது வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

      நான் அமைச்சு பதவி ஒன்றை எதிர்பார்த்து அரசுக்கு ஆதரவு வழங்க வில்லை. இன்றைய நிலையில் வெளிநாடுகள் பல்வேறு அழுத்தங்களை எம்மீது திணிக்கும் இத்தருவாயில் நாம் ஜனாதிபதிக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். அதற்காகவே எமது ஆதரை வழங்கு கிறோம். இருப்பினும் அமைச்சு பதவி ஒன்று எம்மைத் தேடிவந்தால் அதனை உதரித்ததள்ளவும் முடியாது என்றார்.

      தாங்கள் மலையக நண்பனல்ல சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் கைக்கூலி முஸ்லிம் என்பது தெளிவு. வடகிழக்குத்தமிழருக்கும் மலையகத்தமிழருக்கும் சிண்டுமுடிவதுதான் தங்களின் கடும் எத்தனம். மலையகத்தமிழரை சிங்களஅரசபயங்கரவாத்தின் துணையுடன் சிங்கள+ சிறிலங்கா முஸ்லிம் காடையாரால் இனச்சுத்திகரிப்பு செய்தபோது அவர்களை வன்னியில் குடியேற்றியது வடகிழக்குத் தமிழர்கள்தான். இப்ப வன்னியில் சிறிலங்கா முஸ்லிம் காடையார்களை குடியேற்ற வன்னிவாழ் மலையகத்தமிழர்கள் சிங்கள அரசபயங்கரவாத்தின் துணையுடன் சிறிலங்கா முஸ்லிம் காடையார்கள் துன்புறுத்துகிறார்கள்.
      மலையகத்தமிழர்களின் குடியுரிமையை பறிக்க ஒரு பொன்னம்பலம் துணைபோனபோது செல்வநாயகம் தலைமையில் 4 தமிழ் எம்பிக்கள் எதிர்த்தனர். ஆனால் சிறிலங்கா முஸ்லிம்கள் சிங்களவரின் விருப்பிற்கு ஆதராவாக வாக்களித்தனர். மலையகத்தமிழருக்கு மாத்திரமல்ல வடகிழக்கு தமிழருக்கும் கூடியிருந்து குழிபறிப்பத்ததே சிறிலங்கா முஸ்லிம்களின் தொடரும் ஈனத்தனம்.

      • மலையக நண்பன் says:
        14 years ago

        செல்வநாயகம் தலைமையில் 4 தமிழ் எம்பிக்கள் எதிர்த்தனர்.

        எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அவரது மறுபக்கமும் தொடர்கிறது….எனும்  இடுகையிலே எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன். அங்கே சொல்லப்பட்ட விடயங்கள் பொய் என்று சொல்பவர்களுக்கு இன்னும் சில விளக்கங்களை தருகின்றேன்.

        மலையக தமிழர் பதிவு 
        http://shanthru.blogspot.com/2010/06/blog-post_1299.html

        • நிர்மலன் says:
          14 years ago

          அமரர் செல்வநாயகத்தின் மலையகத்தமிழர் மீதான அக்கறையை பூரணமனதிருப்தியுடன் மலையகத்தமிழர்களின் அரசியல் தலைமையாகவிருந்த அமரர் தொண்டமான் ஏற்றுள்ளார். அதுவே உண்மையை சொல்லும். மலையகநண்பனெனும் பெயரிலுள்ள சிறிலங்கா முஸ்லிமும் சிங்களக் கைக்கூலியும் சொல்வது சிறிலங்கா பயங்கரவாத அரசின் திட்டமிட்ட ஈழத்தமிழ் எதிர்ப்பு போலிப்பிரச்சாரமே!

      • மலையக நண்பன் says:
        14 years ago

         என் இஸ்லாமியர்கள் மிது இவளவு காழ்புணர்ச்சி அவர்களும் இலங்கையர் தானே 

        • நிர்மலன் says:
          14 years ago

          தமிழர் அழிவில் சிங்களத்திடம் பெரும் சலுகைபெறும் நயவஞ்சககூட்டம். சிங்கள அரசபயங்கரவாதத்தைவிட மிக மோசமானது சிறிலங்கா முஸ்லிம் பயங்கரவாதம்.

  42. thurai says:
    14 years ago

    தமிழர் மானம் வீரம் தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் யாவரும் தன்முதுகு தனக்குத்தெரியாத அப்பாவிகள்தான். பிற இனத்தவரைக் குற்ரம் சாட்டுமுன்
    தன்னினத்தையே அடக்கி அழித்து உருமைகளைப் பறித்து வாழ்ந்தவ்ர்கள் தான்
    தமிழர்.இதற்கான் தீய சக்திகள் தமிழரிடமே அன்று இன்றும் கூட இருந்து
    தமிழனிற்கு குழிபறிக்கின்றன. முஸ்லிம்கள் சிங்களவ்ர் என்று அங்குமிங்கும்
    த்மிழரிற்கு பூச்சாண்டிகாட்டிவிட்டு முஸ்லிம்களோடும் சிங்களவரோடும்
    கொஞ்சி விளையாடும் தமிழர் எத்தனை பேர்கள்.ஏன் அனியாயமாக உங்கள் பணப்பையை
    நிரப்பவும் அரசியல் அதிகாரத்திற்கும் ஏழைகளின் வாழ்வோடு விளையாடுகின்றீகள்.?
    குடிண்ணீர் கிணற்ரில் நாயை அடித்துகொன்று போட்டு
    தமிழனை தண்ணீர் குடிக்கவிடாமல் தடுத்த தமிழர்கழுமுண்டு.
    அதனை அப்போஒரு தமிழ்பத்திரிகையும் வெளிக்கொண்டுவரவில்லை.இப்போ எரித்த பிணத்தின் சாம்பல் மீது செத்த நாயை போட்டதற்கு உலகமெங்கும் சிங்களவ்ரிற்கு எதிராக போர்முழக்கம். இது தமிழனிற்காகவா? அல்லது
    தமிழரின் பெயரால் அவ்ர்களின் அழிவால் வாழும் தமிழர்களிற்காகவா?-துரை

  43. நிர்மலன் says:
    14 years ago

    அதிதீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ள சிறிலங்கா முஸ்லிம் காடையர்களின் திட்டமிட்ட வடபகுதி குடியேற்றமும். அதற்கு தலைமைதாங்கும் சிறிலங்கா அரசபயங்கரவாத முஸ்லிம் அமைச்செனேனும் காடையனும்.’மீளக்குடியேற செல்லும் முஸ்லிம்களை வடக்கிலுள்ள அரச அதிபர் துரத்துகிறார்’

    தமிழீழ விடுதலை புலிகளினால் வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியேறாமால் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை காண முடியாது என வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் இன்று செவ்வாயக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

    இந்த முஸ்லிம்கள் தற்போது கூடாரங்களில் வாழ்வதாகவும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசர கால சட்ட விவாதத்தில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார்.

    சில முஸ்லிம்களை வடக்கிலுள்ள அரசாங்க அதிபர் துரத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

    புத்தளத்தில் வசிக்கும் இந்த மக்கள் மீளக்குடியேற்ற செல்லும் போது மேற்படி அரசாங்க அதிபர் ஏன் இங்கு வருகிறீர்கள் என கேள்வி எழுப்புவதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

    அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் எனவும் அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    வவுனியா நகர சபையில் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வட மாகாண முஸ்லிம்களின் நலனுக்கான சில முன்மொழிவை நிரகரித்ததாகவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சித்தார்.

    வடக்கில் ஆதிக்கம் செலுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்க கூடாது. ஆனால் முஸ்லிம்களை பற்றியும் சிந்திக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

    http://www.tamilmirr…9-17-13-11.html

  44. நிர்மலன் says:
    14 years ago

    தமிழர்களிற்கும் சிங்களவருக்கும் இடையில் ஆயுதமோதல் நடக்கும் போது சிறிலங்கா முஸ்லிம்களிற்கு போதிய சலுகைகள் வேலைவாய்ப்புக்கள் கிடைத்ததாம் இன்று அந்நிலை இல்லையென்று வருந்துகிறான் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காடையன் சேவூர்தாவூத் எனும் எம்பி. தமிழர் அழிவில் தாங்கள் அபரிமித சலுகையுடன் வாழ்ந்த பொற்காலம் காலம் மீண்டும் திரும்பதோ என ஏங்கிதவிக்கிறது சிறிலங்கா முஸ்லிம்களெனும் “சவப்பெட்டி” வியாபாரியை ஒத்த மனநிலையையுடைய சைக்கோகூட்டம்.- ஆதாரம் இன்றைய வீரகேசரி நாளிதழ்.பக்கம்-4
    அமெரிக்கா இந்தியா தலையிட்டாலும் தமிழருக்கு காணி காவல்துறை அதிகாரத்துடன் கூடிய தீர்வொன்று கிடைக்க தான் அனுமதிக்க மாட்டேன் என்கிறான் சிறிலங்கா அரசபயங்கரவாத அமைச்சனெனும் காடையன் ரிச்சார்ட் பதியூதீன்.- ஆதாரம் இன்றைய வீரகேசரி நாளிதழ்.பக்கம்-6
    ஆனால் இனியொருவில் சிறிலங்கா முஸ்லிம் காடையர்கள் மீது அன்பும் பாசமும் பெருகிவழிந்தோடுது!

    • chandran.raja says:
      14 years ago

      இலங்கையில் பலாத்காரமாக புலிகளும் பேச்சுவார்த்தைகளில் அகிம்சை தனத்தை கடைப்பிடுப்பவர்களாகவும் காட்டிக்கொள்ளும் தமிழ்கூட்டமைப்பினரும் தமிழ்யினத்தின் அழிவுச் சின்னங்கள். இப்படியான பேய்களுடன்தான் நிர்மலன் தொடர்ந்தும் சகவாசம் வைத்துள்ளார். இந்த பேய்களை ஆணியடித்து மரத்தில் கட்டாமல் இலங்கை மக்களுக்கு விமோசம்
      என்பதில்லை. திரு.நிர்மலன் அவர்களே! கசடுத்தனம் எல்லாவிடமும் தான் பரவியிருக்கிறது. தமிழ்
      மக்களின் கசடுயென்று சொன்னால் வைகோ நெடுமாறன் ராமதாஸ் ஜெயலலிதா கருனாநிதி என்று அடுக்கிக் கொண்டு போகலாம். இந்த கசடுகளின் வழிவந்ததே “நாம்தமிழர்” “தமிழ்தாய்” போன்றவைகள். இவர்கள் தின்று கழிச்சுவிட்டவைகளையே நீங்கள் ஜீரணித்து அதன் செமிபாடுகளில் மற்றவர்களும் ஏவறைவிட்டு கருத்து சொல்லுகிறீர்கள். உங்கள் அடிமுடிச்சில் ஏதாவது சொந்தக் கருத்திருந்திருந்தால் அவிழுத்துவிடுங்கள். உண்டா இல்லையா என்பதைப் பார்த்து விடுவோம்.

  45. மலையக நண்பன் says:
    14 years ago

    நிர்மலன்

     போர்க்குற்றவிசாரணை வேண்டாம் – புலம்பெயர் மக்களுக்குபுலிகளின் அதரவு கச்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுமந்திரன் புத்திமதி
    !http://www.youtube.com/watch?v=LBaEK_j8ET4&feature=player_embedded#at=415

    இதற்கு உங்கள் பதில் 

    • chandran.raja says:
      14 years ago

      காதும் கேட்காது.கண்ணும் குருடு. இப்படிப் பட்டவரிடம் வந்து பதில் கேட்டால் அவர் பதில் எப்படிப் பட்டதாக இருக்கும்?. நீர் விவஸ்தையே இல்லாதவர். மாடு குடைக்கண்டாலோ சிகப்பைக் கண்டாலோ கொம்பாலை முட்டிவிடுமென்று தெரியாதா?

  46. நிர்மலன் says:
    14 years ago

    //போர்க்குற்றவிசாரணை வேண்டாம் – புலம்பெயர் மக்களுக்குபுலிகளின் அதரவு கச்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுமந்திரன் புத்திமதி// மலையக நண்பன்

    ஈழத்தமிழர் சிறிலங்கா அரசபயங்கரவாதாத்தல் 2009ல் அழிக்கப்படும் போது அவர்களை காப்பாற்றும்படி சர்வதேசத்தை மாதக்கணக்காக கேட்டுப் போராடினார்கள். சர்வதேசம் மறுதலையாக சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின் இனவழிப்பிற்கு ஊக்கமும் ஒத்தாசையும் புரிந்தது. இப்போ தாம் எதிர்பார்த்த நலன் சிறிலங்கா அரசபயங்கரவாதத்திடமிருந்து கிடைக்காத கோபத்தில் யுத்தநிறுத்த மீறல் மனிதவுரிமைமீறல் குற்றச்சாட்டை முன் வைக்குது. எனவே சுமந்திரனின் தனிப்பட்ட விருப்பிற்கு மேற்குலகு தமது நலனை கைவிடப்போவதில்லை. அதைவிட சுமத்திரனின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தே தவிர ததேகூட்டமைப்பின் கருத்து இல்லையென மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரியநேந்திரன் எம்பி கூறிவிட்டார். எனி சுமத்திரன் கருத்துப்பற்றி பேச என்னவிருக்கு!
    தாங்கள் அங்கம் வகிக்கும் சிறிலங்கா அரசபயங்கரவாதத்திடம் தமது உரிமை பற்றி பேசாது தமிழர்உரிமைபற்றிய பேச்சுவார்த்தையை குழப்ப முயற்சிக்கும் ரவூப் கக்கீம் ரிசார்ட் பதியூதினீன் செயல்கள் பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன??

    //தமிழன் பனைமுனையில் இருந்து தெய்வேந்திரமுனைவரை வாழ்வதும் அல்லாமல் மத்தியிலும் வாழ்கிறான். ஆகவே இலங்கையையே
    அவனது தேசியமாக இருக்கவேண்டும்//chandran.raja

    1) ஈழத்தமிழர் தம்மை எந்த தேசீயமூடாக அடையாளப்படுத்தனும் என்பது அவர்களின் உரிமையே தவிர மகிந்தா அடிமை சந்திரன்ராசாவின் முடிவல்ல.
    2) அமெரிக்கண்டம் தொடங்கி அவுஸ்திரேலியாகண்டம்வரை ஈழத்தமிழர் வாழ்கிறார்கள். அவர்களும் பிணத்தை புணரும் சிங்கள சிறிலங்காதேசீயமா???

    //தேசியம் என்று சொல்லும் போது இலங்கையில் உள்ள பெரும்பான்மையான உழைப்பாளிமக்களைத்தாம் குறிப்பிடுகிறோம் என்பதை மறந்து விடாதீர்கள். //
    எது கொலை கொள்ளை கடத்தல் கப்பம் இலஞ்சம் ஊழல் மணற்கொள்ளை இதுவே தங்களின் உழைப்பு. அப்பசிறிலங்கா தேசீய அடையாளங்கள் இவைதானா!
    //கடந்தமுப்பதுஆண்டுகள் தமிழர் சனத்தொகையை 3/2 ஆக குறைத்துவிட்டது.//
    3/2 என்பது குறைப்பா இல்லை 1 1/2 மடங்கு அதிகரிப்பா?
    //வேறும் சந்தேகம் இருந்தால் எடுத்துவிடவும். முடிந்தால் தீர்க்கமுயல்வோம்//
    ஒரு முட்டாள் அடுத்தவனின் சந்தேகத்தை தீர்ப்பதா??? மில்லியனுக்கும் பில்லியனுக்கும் வித்தியாசம் என்ன! 3/2 என்பது குறைப்பா ! ஈபிடிபி செய்வது உழைப்பா! இந்த சந்தேகங்களை முதலில் தீர்த்துக் கொள்ளுங்கள் பிறகு சிறிலங்கா தேசீயம் புரட்சி என புலுடாவிடலாம்.
    //சங்கிலியில் கட்டிவைத்து புளிஎண்ணை வைத்து தீர்க்க வேண்டிய நோய்.//
    இவ்வளவு வைத்தியத்தையும் தெரிந்து வைத்திருந்தும் ஏனாம் தங்கள் வியாதி குணமடையவில்லை! என்ன தங்களின் பரம்பரைவியாதியா!
    //இதுதான் துரோகிப்பட்டம் கொடுத்து துரோகியாகியவரலாறு!.//
    துரையப்பா தொடங்கி ஈபிடிபிவரை தாங்கள் அடங்கலாக இந்த அகெளரவ பட்டத்திற்கு வாழ்நாள் உரித்தாளர்கள்.
    //இலங்கையில் பலாத்காரமாக புலிகளும் பேச்சுவார்த்தைகளில் அகிம்சை தனத்தை கடைப்பிடுப்பவர்களாகவும் காட்டிக்கொள்ளும் தமிழ்கூட்டமைப்பினரும் தமிழ்யினத்தின் அழிவுச் சின்னங்கள்.//
    என சிங்கள கைக்கூலிகள் ஊழையிடுகிறார்கள். ஆனால் ஈழத்தமிழரில் மிகப்பெரும்பான்மையினர் புலிகளையும் ததேகூட்டமைப்பையும் தமது பிதிநிதியாகத்தான் தெரிவு செய்கிறார்கள். தேர்தல் மோசடி கள்ளவாக்கு இராணுவஆக்கிரமிப்பு அச்சுறுத்தல் என சிறிலங்கா அரசபயங்கரவாதம் பேயாட்டம் போட்டும் ஈழத்தமிழர் தமதுயிரை பணயம் வைத்து தாங்கள் ஈழதேசீய ஆதரவாளர்களே என்று நிரூபித்தது மறந்து போச்சா!
    // உங்கள் அடிமுடிச்சில் ஏதாவது சொந்தக் கருத்திருந்திருந்தால் அவிழுத்துவிடுங்கள். உண்டா இல்லையா என்பதைப் பார்த்து விடுவோம்.// எனது கருத்துக்கள் என்னுடையவையே. அதுபற்றி யார் கேள்வியெழுப்பினாலும் நேரடியாக பதில் சொல்கிறேன்.
    மறுதலையாக தங்களிடம் கேள்வி கேட்டால் சம்பந்தமில்லாது உளறுவது. கொள்ளையின் மொத்த குத்தகைக்காரர்களான ஈபிடிபியில் இருந்து கொண்டு உழைப்பாளி புரட்சி என புலுடாவிடுவது போதையிலுள்ளவன் போல் பினாத்துவதுதான் தங்கள் செயற்பாடு.

  47. மலையக நண்பன் says:
    14 years ago

    நிர்மலன் /தேசியம் என்று சொல்லும் போது 

    தமிழ்  தேசியம் என்று சொல்லாதிர்கள் வடகிழக்கு தமிழர் தேசியம் என்று சொல்லுங்கள் உலக தமிழர்களை ஒரிகினைந்த சொல்லுங்கு தமிழ் தேசியம் என்ற அர்த்தம் இதை சாதகமாக வைத்து வடகிழக்கு தமிழர்கள் அல்லாதோர் தமிழ் நாட்டை செர்தோர்  இங்கு குடி வந்து விடுவார்கள் அடுத்த  நாடுகடந்த ஈழா அரசகதில் வைகோ அவர்களை அதிபராகக தமிழ் தேசியவாதிகள் முயற்சிக்கலாம் 

  48. Mahendra says:
    14 years ago

    தமிழர்களிடையே புகுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வு வேற்றுமைகளை களைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுபற்றி சிந்திப்பவர்களோ, ஊக்கப்படுத்துபவர்களோ அரிதாகவே உள்ளனர். கலப்புத் திருமணம், குடும்பவழித் தொழில்மாற்றம், திறந்தகோவில் வழிபாடு இப்படிப்பல… ஆனால் முந்தைய தலைமுறைத் தவறுகளை விடாது நினைவூட்டும் முயற்சிகளே அதிகம் மேற்கொள்ளப்படுவதை இனியொருமூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இதுபோன்றதே புலிகள் தேசியத்திற்காகப் போராடினார்களா? என்பது போன்ற கேள்விகள், புலிகளின் தவறுகளையே மக்கள் மனதில் மறக்காது நிலைநிறுத்துவதற்கான முயற்சியாகும். குறுகிய காலத்தில் அதிகமக்கள் கொல்லப்பட்டமைக்கு புலிகள் ஒரு காரணமாக நோக்கப்படுகிறார்களோ, அப்படியே சிங்களத்தை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதற்கு உலகம் முனைவதால் தமிழர்களுக்கு ஒரு விடிவு ஏற்படலாம் என்ற நம்பிக்கைக்கும் புலிகளை ஒரு காரணமாக நோக்கவேண்டும்.

    தமிழர்கள் கொல்லப்பட்டவேண்டும் என்பது மகாவம்சத்திலே புகுத்தி எழுதப்பட்டுள்ளதாக செய்தியுமுண்டு.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...