நடேசன், புலித் தேவன் உட்பட அனைவரையும் கொலைசெய்ய உத்தரவு பிறப்பித்தது கோதாபாய ராஜபக்க்ஷவே!

kodaஇராணுவத்தினரிடம் சரணடையவதற்கு வந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட குழுவினரை மே மாதம் 18ம் திகதி பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரிலேயே சுட்டுக்கொன்றதாக இராணுவத்தின் உட்தரப்புத் தகவல்ககளின் அடிப்படையில் லங்காநியூஸ்வெப் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தகவல்களுக்கமைய, மே 18ம் திகதி அதிகாலை 58வது படைப்பிரிவின் அந்நாள் கட்டளைத் தளபதியாக இருந்த பிரிகேடியர் ஷவிந்திர சில்வாவை தொலைபேசியில் தொடர்கொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, போர்க் கைதிகளை வைத்துக்கொள்வது அரசாங்கத்திற்கு தேவையற்றவிடயமெனவும் வெள்ளைக் கொடியுடன் அல்லது சரணடைய வரும் எந்தவொரு தரப்பினரையும் தராதரம் பாராது சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில் 18ம் திகதி பிற்பகல் பரந்தன் – முல்லைத்தீவு வழியாக இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஸ் உள்ளிட்ட குழுவினர் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டுக்கொன்றுள்ளனர்.

மேலும் சர்வதேச அமைப்பொன்றும், வெளிநாட்டு தூதரகமொன்றும் இணைப்புப் பணிகளை மேற்கொண்டு பாதுகாப்புச் செயலாளர், வெளிநாட்டமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சிரேஷ;ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அறிவித்த பின்னரே புலித்தேவன், நடேசன் உள்ளிட்ட குழுவினர் இராணுவத்தினரிடம் சரணடையச் சென்றுள்ளனர்.

இதே வேளை சரணடைவிற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்ட சந்திரநேரு எம்.பீ உடனான இனியொருவின் கலந்துரையாடலின் போது, அவர் மட்டுப்படுத்தப்பட்ட தகவல்களையே எமக்கு வழங்கியிருந்தார். இலங்கை அரச தரப்பு அச்சுறுத்தலை மீறி முழுமையான தகவல்களை வெளியிட்டால் தான் தொடர்ச்சியான அரசியலில் ஈடுபட தடையாயிருக்கும் என மேலும் தெரிவித்தார்.

8 thoughts on “நடேசன், புலித் தேவன் உட்பட அனைவரையும் கொலைசெய்ய உத்தரவு பிறப்பித்தது கோதாபாய ராஜபக்க்ஷவே!”

 1. So Chandra Nerhu knows more news but he cannot release that in the interest of his future political carreer. In other words, he admits that his future political carrerr is more important for him than any human rights violations. That is NOT totally wrong becos Pulidevan and Nadesan expected other younger generation to take cayanide and kill themselves instead of surrending to the SLA. Having advised others they opted to surrender and have a life thereafter. Basically all these fellows are selfish who try to fix others and to survive on their own. Tamils know what is LTTE politics now.

 2. பிரபாகரன் நிலை என்ன? அவரும் சரனடையச் சென்றாரா? 

 3. என்ன கொடுமை இது. எப்பொழுது தான் முடியுமோ இந்த அவலம்..
  படைப்பிற்கு நன்றி

 4. புலிகள் அமெரிக்காவை நம்பினார்கள்.நோர்வேயை நம்பினார்கள்.இந்தியாவை நம்பினார்கள்.கனிமொழியை நம்பினார்கள்.கஸ்பாரை நம்பினார்கள்.இறுதியில் சந்திரன்நேருவையும் நம்பினார்கள்.ஆனால் அவர்கள் மக்களை ஒருபோதும் நம்பவில்லை.கூட இருந்த மக்களை நம்பி அவர்கள் முன்னிலையில் சரணடைந்திருந்தால் ஆகக்குறைந்தது அவர்களின் உயிராவது காப்பாற்றப்பட்டிருக்கும்.மக்களுக்கு தெரியாமல் இரகசியமாக கதைப்பதை புலிகள் இராஜதந்திரம் என்று நினைத்தார்கள்.இறுதியில் இந்த இராஜதந்திரமே அவர்களை முள்ளிவாயக்காலில் பரிதாபகரமான முறையில் பலிவாங்கியது.26 வருடம் அமெரிக்காவுடன் போராடி வெற்றி பெற்ற வியட்நாமின் தந்தை கோசிமின் அவர்களிடம் தங்களின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டபோது அவர் கூறியதாவது “எந்தவொரு கசப்பான உண்மைகளையும் நான் மக்களுக்கு மறைத்ததில்லை.மக்களுக்கு வெளிப்படையாக நடந்துகொண்டேன்.எனவே மக்கள் என்னை நம்பினார்கள்.அவர்கள் எனக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்கள்” என்றார்.இந்த அடிப்படையில் மக்களுக்கு வெளிப்படையாக நடந்து மக்களின் நம்பிக்கையை பெற்று நடந்திருந்தால் இவர்கள் நிச்சயம் மக்களால் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.

 5. கனிமொழி மற்றும் கஸ்பார் ஊடாக இந்திய அமைச்சர் பிரனாப்முகர்ஜியுடன் தொடர்புகொண்ட புலிகள் அந்த அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கையில் உள்ள இந்திய தூதுவராலயத்திற்கு பக்ஸ் அனுப்பிவிட்டு அவர்கள் கூறியது போல் வெள்ளைக் கொடியுடன் சென்று சரணடைந்தார்கள்.இந்த சரணடைவை ஒழுங்கு செய்ததில் நோர்வே மற்றும் இன்னும் சிலருக்கும் பங்கு உண்டு.இப்படி பல்வேறு வெளிநாட்டு சக்திகளுடன் இந்தியாவின் ஏற்பாட்டில் சரணடைந்தவர்கள் கோத்தபாயராஜபக்ச என்ற ஒரு தனிநபரின் உத்தரவின் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று கூறுவது நம்பமுடியாதது மட்டுமல்ல சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை தப்பவைக்க செய்யும் சூழ்ச்சியாகும்.இதற்கு நாம் இடம்கொடுக்கக்கூடாது.இந்த படுகொலைகளுக்கு இந்தியாவே பொறுப்பு.இந்தியா நிச்சயம் இதற்கு பதில் சொல்லியேயாகவேண்டும்.மாறாக இந்தியாவைக் காப்பாற்ற வெளியாகும் இது போன்ற செய்திகளுக்கு இடங்கொடாது உண்மையை மேலும் மேலும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று இந்தியாவை அம்பலப்படுத்தவேண்டும்.

 6. மன்னில் விழந்தவன் எழம் வரை விடியாது இந்த போர் !
  மன்னை ஆல்பவன் விழந்தப்பின் முடீஉம் அவன் போர்.

 7. இலங்கை மக்கள் போர்த்துக்கேயருக்கு எதிராக போராடினார்கள்.ஒல்லாந்தருக்கு எதிராக போராடினார்கள்.ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்கள்.அதன்பின் இலங்கை அரசுக்கு எதிராக பல முறை போராடியுள்ளனர்.எனவே வீரம் செறிந்த போராட்டத்தின் வரலாற்றை கொண்டவர்கள் இலங்கை மக்கள்.ஆனால் தலைமைகளின் துரோகங்களினால் இன்னும் அவர்களால் வெற்றி பெறவில்லை.1987ல் 60ஆயிரம் சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர்.அப்போது ஜே.வி.பி யின் தலைமை முற்றாக கொன்று அழிக்ப்பட்டது.இனி ஜே.வி.பி திரும்பி வரமுடியாது என்று கூறினர்.ஆனால் அவர்கள் திரும்பி வந்ததுடன் மட்டுமன்றி முன்னைவிட பலமாக எழுச்சி பெற்றுள்ளனர்.அதுபோல் இன்று பல்லாயிரம் தமிழ்மக்களை கொன்று லட்சக்கணக்கானவர்களை அடைத்துவைத்துக்கொண்டு இனி தமிழ்மக்கள் போராட எண்ணாதவாறு நசுக்கிவிட்டதாக கனவு காண்கின்றர்.அவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவது என்னவெனில் “பல்லாயிரம் பேரை முள்ளிவாயக்காலில் கொன்று புதைத்தாலும் அவர்கள் மீண்டும் முளைத்து வருவார்கள்.ஏனெனில்அவர்கள்புதைக்கப்படுவதில்லை.விதைக்கப்படுகிறார்கள்.முல்லைக்கடலில் வெட்டி வீசி எறிந்தாலும் பொங்கும் கடல் அலைபோல் மீண்டும் மீண்டும் எழுந்து வருவார்கள்.இறுதி வெற்றி வரை உறுதியுடன் போராடுவோம்.” நாம் அதிகம் இழந்து விட்டது உண்மைதான்.ஆனால் இழப்பின்றி புரட்சி இல்லை என்பதை நாம் அறிவோம்.நடந்து முடிந்த போராட்டம் எமக்கு சிறந்த பாடங்களை கற்றுத்தந்துள்ளது.இந்தவேளையில் சோனியா காந்திக்கு மட்டுமல்ல கலைஞர் கருனாநிதி அவர்களுக்கும் நன்றி சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்.இந்தியஅரசு எமக்கு நம்பிக்கை நட்சத்திரமல்ல.அதுவும் எமக்கு எதிரிதான் என்பதை இனம்காண உதவியமைக்காக.

Comments are closed.