ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து… (முதல் பாகம்)

thevan_diaryதமிழ் ஈழம் என்ற முழக்கத்தின் கீழ் தலைமறைவு இராணுவ இயக்கங்களை ஆரம்பித்தவர்களுள் ஒபரோய் தேவனும் ஒருவர். எண்பதுகளில் ஒபரோய் தேவனைத் தெரியாதவர்களைக் கண்டிருக்க முடியாது. தமிழ் ஈழ விடுதலை இராணுவம் (Tamil Eelam Liberation Army(TELA ) என்ற இயக்கத்தை ஆரம்பித்து வழி நடத்தியவர் தேவன். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைப் போன்றே இராணுவ அமைப்பு ஒன்றைத் தோற்றுவித்து அதனைச் சுற்றி ஆதரவாளர்களையும், நடவடிக்கைகளுக்குப் பொருள் கூறுபவர்களையும் உருவாக்கிவிட்டால் விடுதலை கிடைத்துவிடும் என்று நம்பியவர்களில் ஒபரோய் தேவனும் ஒருவர்.

கொழும்பில் ஒபரோய் ஹோட்டலில் நிர்வாகியாக வேலை பார்த்ததால் ‘தேவன்’ ஒபரோய் தேவனானர். ஒபரோய் தேவனது இயற்பெயர் குலசேகரம் தேவசெகரம். ஆரம்பத்தில் தங்கத்துரை, குட்டிமணி, பிரபாகரன் போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தார். புலிகளை வளர்த்த அன்டன் பாலசிங்கம் ஒபரோய் தேவனை வளர்ப்பதற்காக முயற்சித்த காலமும் 80 களைக் கடந்து சென்றிருக்கிறது.

தனது வேலையைத் துறந்து முழு நேர அரசியல் போராளியான ஒபரோய் தேவன் பறுவா என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார். திருனெல்வேலியில் மத்தியதர வர்க்கத்தின் உயர் அணியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த ஒபரோய் தேவன் தனது குடும்பம் முழுவதையும் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். ஆரம்ப காலத்திலிருந்தே இவரது வீடு போராளிகளின் மறைவிடமாகப் பயன்பட்டிருக்கின்றது.

ஒபரோய் தேவன் தனக்குத் தெரிந்தவற்றை எழுதி வைக்கும் பழக்கம் கொண்டவர். நேர்மையான போராளியாக அறியப்பட்ட தேவன் இலங்கை அரசின் பொருளாதார நிலைகளைத் தகர்க்க வேண்டும் என்று கூறி அதற்கான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.
14ம் திகதி ஓகஸ்ட் மாதம் 1983 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஒபரோய் தேவனின் நாட்குறிப்பை கொலையின் பின்னர் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வெளியிட்டனர். ஒபரோய் தேவனால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலை இராணுவம் (TELA) தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒபரோய் தேவன் படுகொலை செய்யப்பட்டதன் பின் காஸ்ரோவாலும் அதன் பின் முரளிமாஸ்டரினாலும் தலைமை தாங்கப்பட்டு வந்தது.

அச்சு வடிவில் சிறிய நூலாக வெளிவந்த ஓபரோய் தேவனின் நாட்குறிப்பு பல்வேறு தவறுகள் நிறுவனமயமாகி வளர்ச்சி பெற்றதை தகவல்களாகத் தருகின்றது. ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து… என்ற நூல் இனியொருவில் தொடர்ச்சியாக வெளிவருகிறது.

ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து… (முதல் பாகம்)

22.07.1982:

மாத்தளையில் எட்டம் வகுப்புப் படிக்கும் போதே(1968 இல்) தமிழ்ப் பாடம் கற்பிக்கும் வாத்தியார், இஸாமிய ஆசிரியர்களோடு தமிழரசுக் கட்சியை ஆதரித்து வாக்குவதப்படுவேன், 1974 ஆம் ஆண்டு தை 1ம் திகதி யாழ்ப்பாணத்தில் குடியேறினேன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளுக்குச் சென்று அவர்களது பேச்சால் கவரப்பட்டேன். 1974 ஆம் ஆண்டு தை 10 இரவு யாழ் நகரில் நடந்த சிறீலங்கா அரசின் வெறியாட்டத்தில் நானும் அகப்பட்டேன்.
தமிழ்ப் பெண்கள் துப்பாக்கி ஏந்திய படையினரால் காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்டதை நேரில் கண்டேன். அதனைத் தொடர்ந்து 74 ஆனி எட்டம் நாள் சிவகுமாரனின் வீர மரணத்தால் உணர்ச்சியேற்றப்பட்டேன்.

தொடரும்…

19 thoughts on “ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து… (முதல் பாகம்)”

 1. ஒபராய் தேவனை புலிகள் கொன்றனர்? உண்மையா? எப்படி நம்புவது. புலிகள் என்றால் கிட்டுவா மாத்தையாவா? சபாரத்தினத்தை> பத்மநாபாவை கொன்றது புலிகள் என்பது பலருக்கும் தெரியும். தேவனை புலிகளா கொன்றனர்? அப்படியானால் விஸ்வானந்த   தேவனை  கொன்றது யார்? அதுவும் புலிகள்தானா? அப்படியானால் புலிகளால் கொல்லப்படாவர்கள் யார்? அதனை இனியொரு சொல்லிவிட்டால் மறறையவை இலகுவாக வாசகர்கள் அறிந்துகொள்ள முடியுமல்லவா? 

  1. ஒபரோய்தேவனைப் புலிகள் கொன்றார்கள் என்பதை நேரடியாகவே அவர்கள் கூறினார்கள். ஒபரோய் தேவனை மட்டுமல்ல, சிறீசபாரத்தினம், பத்மனாபா, ரெலி ஜெகன் போன்ற தலைவர்களிலிருந்து கவிஞர் செல்வி போன்ற சமூகப்போராளிகள் வரை புலிகள்தான் கொன்றார்கள். நீங்கள் இவற்றை எல்லாம் மறைப்பதால் எதிரிகள் அதனைப் பயன்படுத்தி போராட்டமே தவறானது என்பார்கள். நெஞ்சை நிமிர்த்தி நாம் செய்தவை தவறு என்று சுய விமர்சனம் செய்துகொண்டு இனிமேல் இவ்வாறான தவறுகள் நடக்காது என்பதற்கான அரசியலை முன்வைத்து மட்டுமே போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.

  2. திலீபா! நீ எனும் சாகவில்லையா? உன்னையும் கொன்றதே புலிகள் தான் என்று எப்போ தான் உனக்கு புரியப்போகிறது. பாவம் நீ !!

 2. ஈழத்திறஇகு எதிராக சிங்கள தேசம் உருவாகி மகாவம்சத்தை உருவாக்கி தமிழரை போராட வைத்து   முள்ளிவாய்காலில் வரலாற்றை துpர்மானித்திருக்கும் போது  அதில் உலகத்தமிழர்களாக மாறுவதற்காக உயிர்களை அர்பணித்த விடுதலைப்புலிகள் அமைப்பு வரலாற்றை முதன்மைபடுத்தி உள்ளார்கள் என்பதற்கு யாருடைய போராட்டமும் நிகராக முடியாது 

  சந்தற்பங்கள் பலரை பலவிதமாக போராட வைத்துள்ளது அதில் நாம் கூட விதிக்கல்ல    காலம் வரலாற்றின் வழியில் யாரை தீர்மானித்தாலும் அவர்கள் அதற்கமைவாக செயல்பட வேண்டியது வரலாற்றுக்கடமை.  . அதனை முதன்மைப்படுத்தி செயல்படவே விடுதலைப்புலகள் அமைப்பு சந்தற்பத்தை தந்துள்ளார்கள்  . அதனால் யார் வேண்டுமானாலும் தமிழர்களுக்கான விடிவை நோக்கி நகரமுன்பு  தர்மம் என்றால் என்ன சத்தியம் என்றால் யாது என்பதனை   புரிந்து கொண்டு தமது தவறுகளை உணர்ந்து அதற்கமைவாக வரலாற்றை கையாளும்  தகமை யாருக்காவது உண்டோ என்பதனை பயிர்ச்சித்து பார்கப்பட வேண்டும். 

  காலம் வரலாற்றை தீர்மானிக்கும் போது அதற்கமைவான யதார்தங்களையும் கொண்டிருக்கும் என்பது கடவுள் நம்பிக்கை.   அதனால்தான் தீலீபன் அவர்கள் ஒரு பொது இடத்தை தனது உண்ணா விரத காலத்தில் தீர்மானிக்காமல் கோயிலை அடையாளப்படுத்தி எதிரிக்கு மட்டுமல்ல மக்களுக்கும் பல கோரிக்கைைகளை முன்வைத்து   தனது உயிரை தீயாகம் செய்து விடுதலைப்புலகள் அமைப்பிற்கு வலுச்சேர்த்து தமது பயணத்தின் காலம் 27 ஆண்டுகள்   கடந்த போதும் எந்தக்கோரிக்கைகள் இன்றுவரை எழுச்சி பெற்று வருகின்றன.  .

  அதனால்  காலத்தை எதிர்பவர்களாக விமர்சனங்களை கொண்டு  சரிப்படுத்துவதனைவிட   விமர்சனங்களுக்கான எதிர்கருத்தையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.  அதனால் எத்தனையோ உயிர்தியாகங்களில் யார்யாரோ  ஈழவிடுதலைக்காக பயன்பட்டிருப்பதனை விடுதலைப்புலகள் அமைப்பொ மக்களோமறுக்கவில்லை.   ஆனால் இன்ற யதார்தத்தை பயன்படுத்த என்ன தேவை என்பதனை புலம் பெயர் ஊடகங்கள் கொண்டு இருக்கின்றனவா என்பதே எமது  தேடலாகும். 

 3. புலிகள் இயக்கம் ஒரு இயங்கு சக்தியாக வெளிப்படடபோது தமது இலக்குக்கு  தடையாக இருந்தவர்களை கொன்றார்கள் அண்ணளவாக இருபத்தி எழு வருடங்கள் ஆயுதப்போராட்டத்தை நடாத்தியவர்கள் ஆனால் இயங்கத்தொடங்கியவுடன் தமது சொந்த இருப்பை காப்பாற்ற பல இயக்கங்கள் உட்கொளைகளை செய்தார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது 

  1. பல இயக்கங்கள் உட்கொளைகளை செய்தார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது // சின்னத்தம்பி யார் இங்கு மறுத்தது?.
   .

   சினத்தம்பி சினத்தம்பி!! சின்ன பிரச்னையை பெரிசாக்காதே!! பெரிய 27 வருடங்களில் நடந்ததை சின்ன 3 அல்லது 4 வருடங்களில் நடந்த சின்ன பிரச்னையுடன் ஒப்பிடாதே!!

   1. ## பெரிய 27 வருடங்களில் நடந்ததை சின்ன 3 அல்லது 4 வருடங்களில் நடந்த சின்ன பிரச்னையுடன் ஒப்பிடாதே!!##

    குமார் 2 , எல்லாவற்றிலும் இரண்டு இரண்டாக நிற்காதே !

    3, 4 வருடங்களில் சின்ன சின்ன உதொலைகளை செய்தவர்கள்தான் பின்னர் 27  வருடங்களக , தப்பு தப்பு  , இப்போதும் கூட இலங்கை புலான்ய்வு துறையினருடன் சேர்ந்து கொண்டு போராளிகளையும் , அவர்களது குடும்பங்களையும் , தேசியத்திற்கு ஆதரவளித்தவர்களையும் , உதவியவர்களையும் காட்டிகொடுத்தும் ,  புலனாய்வுதுறையினரின் ஏவல்நாய்ளாக கொன்று ப்குவித்ததும்  வெறும் 3 , 4 வருட வரலாறு அல்ல . அது 30  வருடங்களுக்கு மேற்பட்ட இன்றும் தொடரும் வரலாறு ..

  2. தமிழ் தேசியம் என்று போராட வெளிக்கிட்ட (புலிகள் தவிர்ந்த ) அனைவரும் தவறு விட்டவர்கள் தான் ,அதே நேரம் எதிரானவர்களும் தவறு தான். இது மட்டுமே போதாது புலிகள் தவறு விடவில்லை என்று கூறுவதற்கு. இதிலிருந்து நாம் வெளியே வராவிட்டால் நமக்கு இன்னும் இன்னும் அழிவுகள் தான் காத்துக்கிடக்குது. தயவு கூர்ந்து வாங்கோ இந்த புலித்தேசியதிட்கு வெளியே. போதும் முடியலை!!

   1.   தாங்களும் புலி காழ்ப்புணர்வு கோஷத்திலிருந்து வெளியே வாங்கோ . உங்க வெத்து புலி எதிர்ப்பு  கோஷங்களினால் ஆகப்போவது ஒன்றுமில்லை.

    1. புலி காழ்ப்புணர்வு கோஷத்திலிருந்து வெளியே வாங்கோ//
     வெத்து புலி எதிர்ப்பு கோஷங்களினால் ஆகப்போவது நிச்சயமாக ஒன்றுமில்லை.
     .
     .அதே போல் வெத்து புலி ஆதரவு கோஷங்களினாலும் ஆகப்போவது நிச்சயமாக ஒன்றுமில்லை..
     .
     தமிழ் தேசியம் என்று போராட வெளிக்கிட்ட (புலிகள் தவிர்ந்த ) அனைவரும் தவறு விட்டவர்கள் தான் ,அதே நேரம் எதிரானவர்களும் தவறு தான்.இன்றும் தொடரும் வரலாறு தான்.இவர்களின் தவறுகள் மட்டுமே போதாது புலிகள் தவறு விடவில்லை என்று கூறுவதற்கு. இதிலிருந்து நாம் வெளியே வராவிட்டால் நமக்கு இன்னும் இன்னும் அழிவுகள் தான் காத்துக்கிடக்குது. தயவு கூர்ந்து வாங்கோ இந்த புலித்தேசியதிட்கு வெளியே. போதும் முடியலை!!

 4. நண்பர்களே,
  புலிகள் ஒபரோய் தேவனைக் கொலைசெய்தார்கள். இந்தியாவில் இருந்த ரெலா இயக்கத்தில் முக்கியமான கூச் போன்றவர்களை புளொட் இயக்கம் மிரட்டி இணைத்துக்கொண்டது. தாங்கள் தனியாகத் தான் செய்ற்படுவோம் என்று யாழ்ப்பாணத்தில் இருந்த உறுப்பினர்கள் உறுதியாக இருந்தார்கள். புளொட் கும்பல் அவர்களைத் தேடித்தேடி அழித்தது. குப்பிளானைச் சேர்ந்த ரெலா இயக்க தலைவர்களில் ஒருவரான சேகர் என்ற போராளியின் குரல்வளையை அறுத்துக் கொலைசெய்த புளட் மிருகங்கள் அவரை அவரது கிராமத்தின் தெருக்களில் வீசிவிட்டுச் சென்றது. புலிகள் அழிந்து போனார்கள். இன்னும் வெட்கமில்லாமல் புளட் என்ற பேரை வைத்துக்கொண்டு சித்தார்த்தன் கும்பல் மக்களிடம் வாக்குக் கேட்கிறது. இவர்களை என்ன செய்வது? to be con..

  1. உஷ் ! இங்கு விடுதலை போராட்டத்திற்கு எதிரானவர்களை அழித்த புலிகளின் கொலை களை பற்றி  மட்டுமே பேசவேண்டுமென தெரியாதா ?

   1. லாலா, 
     -நான் எழுதியது  இனியொருவிற்கு எதிராக  அல்ல!  இனியொரு மட்டும்தான்  இன்று  நடுனிலையான  ஊடகம். இங்கு தான்  ரெலோ, புளட் அரசாங்கம் என்று எல்லாவற்றையும்  னேர்மையாக விமர்சிக்கிறார்கள்.  உங்களைப் போன்று  சிலர் பொறுக்கித் தனமாக  பின்னூட்டம்  விடுவதை  னிறுத்தினால்  இனியொரு  முழுமையடையும்.

 5. டெலோ இயக்கத்தின் இரானுவப்ப்ரிவின் பெய்ர்தான் டெலா அதை தேவன் குட்டிமணீ தங்கத்துரை கைதின் பின் பாவித்தார்

 6. புளொட்டினால் கொல்லப்பட்ட ரெலா ஊறுப்பினர்கள் பலர். பெரும்பாலும் அவர்கள் கூரிய ஆயுதங்களால் கொல்லப்பட்டார்கள்.அண்ணளவாக 30 இயக்கங்கள் வெவ்வேறு அளவில் வடக்குக் கிழக்கில் இருந்தன. பெரும்பாலான இயக்கங்கள் புலிகளால் அழிக்கப்பட்டன. சில இயக்கங்களின் தலைவர்களைப் புலிகளும் இலங்கை இராணுவத்தினரும் கொன்றனர். 24 வயதில் உண்ணாவிரதம் இருத்திக் கொலை செய்யப்பட்ட திலீபனுக்கு உண்மையில் இக் கொலைகளில் உடன்பாடு இருந்திருக்கவில்லை. பல தடவைகள் அவர் இது பற்றிக் கதைத்திருக்கிறார். குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட திலீபன் உண்ணாவிரதம் இருந்த போது சாகும் வரைக்கும் இருத்துவார்கள் என அவர் நினைத்திருக்கவில்லை. அப்படித்தான் திலீபனிடமும் சொல்லப்பட்டது. திலீபனோடு உண்ணாவிரதத்தில் கடைசிவரை இருந்தவர். சாந்தி அக்கா. இவர் சயனைட் அடித்து மரணித்த ரவி சேகரின் சகோதரி. திலீபன் கடைசிக் கட்டத்தில் தான்னைச் சாகவிடவேண்டாம் எனக் கெஞ்சியது அவருக்குத் தெரியும். அண்ணையின் விசுவாசியான இவர் கடைசியில் திலீபனைத் தண்ணி கூடக் குடுக்காமல் கொன்றதத் தொடர்ந்து தலைவரைத் திட்டத் தொடங்கினார். இதனால் அச்சுறுத்தப்பட்டு வடக்கு கிழக்கில் இருந்து வெளியேறி தலை மறைவானார். இன்று நடப்பது என்ன… இப்படித்தான் உண்மைகள் புதைக்கப்படுகின்றன.

  1. ##  24 வயதில் உண்ணாவிரதம் இருத்திக் கொலை செய்யப்பட்ட திலீபனுக்கு உண்மையில் இக் கொலைகளில் உடன்பாடு இருந்திருக்கவில்லை ##
   அப்படிப்போடுங்க ! அன்னை பூபதியை விட்டிடீங்களே அண்ணா .
   அன்னையையும் அப்படித்தான்  விருப்பமேயில்லாமல் உட் கார்த்தி விட்டார்கள் . பாவம் தன்னை எப்படியும் காப்பாற்றி விட சொல்லி பக்கத்திலிருந்த  தனது பிள்ளைகளிடம் கெஞ்ஞினார் . இதனை பிள்ளைகளே என்னிடம் நேரடியாக கூறினார்கள் . அந்தநேரத்தில் இதெல்லாம் எப்படி சாத்தியம் ? அப்போது மட்டக்களப்பு இந்தியப்படையினரின் இரும்பு பிடிக்குள் அல்லவா இருந்தது  ? என்றேல்லாம் கேட் ககூடாது .
   இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டதல்லாவா ? மக்கள் மறந்திருப்பார்கள் .
   Your comment is awaiting moderation.

  2. சாந்தி அக்கா இல்லை குகசாந்தினி அக்கா ஆசிரியராக உள்ளார்.வரலாறை சாpயாக பதிவு செய்யுங்கள்.

Comments are closed.