எஸ்.வி.ராஜதுரையும் – அறம்சார் சில கேள்விகளும்! : அசோக் யோகன்

progovஇலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஜெர்மனியை தளமாகக் கொண்ட இயங்கும் ஐ.என்.எஸ்.டி எனும் தன்னார்வ அரசு சாரா நிறுவனத்தின் அனுசரணையில் திருவனந்தபுரத்தில் நடந்த மாநாட்டில் தாங்கள் சிறப்புரை ஆற்றினீர்கள் (எதுவரை – செப்டம்பர்-அக்டோபர் – 2009) என்பதைக் கேட்டு நான் அதிர்ந்து போனேன்.
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை எனச் சொல்கிற சுசீந்திரனின் முன்முயற்சியில் நடைபெற்ற நிகழ்வுதான் திருவனந்தபுரம் கூட்டம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என நான் நம்புகிறேன்.
இந்து பத்திரிக்கையின் என்.ராமினாலும், சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பியினாலும் தகவமைக்கப்பட்ட இலங்கை குறித்த அரசியல் பார்வை கொண்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர்களான ச.தமிழ்ச் செல்வன், ஆதவன் தீட்சண்யா போன்றவர்களோடு திருவனந்தபுரம் கூட்டத் தளத்தை நீங்கள் பயன்படுத்தியிருந்தீர்கள் என அறிந்தபோது மேலும் அதிர்ந்து போனேன்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலங்கை சார்ந்த நிலைபாட்டுக்கு ஆதரவாக, சுசீந்திரன் போன்றவர்களை முன்வைத்து, இவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதையும் நீங்கள் அறியாதவரல்ல என நினைக்கிறேன்.

 இலங்கை அரசின்பாலான ஒரு மென்மையான நிலைபாட்டுடன் விடுதலைப் புலிகளை மட்டுமே நடந்து முடிந்த கொலைகளுக்குக் காரணமாக நிறுத்துகின்ற அரசியலை சுசீந்திரன் போன்றவர்கள் முன்வைத்து வருகிறார்கள். இந்த அரசியலைத் தமிழகத்தில் முன்னெடுத்து வருகிறவர் அ.மார்க்ஸ் என்பதையும் தாங்கள் அறியாதிருக்க வாய்ப்பில்லை.

இலங்கை பற்றிய, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலுக்குகந்த வகையிலான சுசீந்திரன் போன்றவர்களின் நேர்முகங்களையும், இவர்களுக்கு ஆதரவாக அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினது ஆதவன் தீட்சண்யா அங்கம் வகிக்கிற புதுவிசையில் அவர்தம் கட்சியினது அரசியல் பிரச்சாரத்தின் பகுதியாக வெளியிட்டார்கள் என்பதனையும் தாங்கள் அறிந்தே இருப்பீர்கள்.
சுசீந்திரன் தனது தன்னார்வ நிறுவன அரசியலுக்கும், தனது இலங்கை அரசின்சார்பு அரசியலுக்கும் ஒரே தளத்தில் தங்களையும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இணைத்திருக்கிறார் என்பதுதான் இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, இனப்படுகொலை நடக்கவில்லை என்று சொல்கிற சுசீந்திரன் கூட்டிய திருவனந்தபுரம் மாநாட்டில் தாங்கள் ஏன் கலந்து கொண்டீர்கள் எனச் சொல்வீர்களா?
அன்று முதல் இன்று வரை இலங்கை அரசு சார்பான இந்து என்.ராமினதும், சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பியினதும் அரசியலையுமே முன்னெடுக்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினது எழுத்தாளர்களுக்கும் தங்களுக்குமான, அக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான, பொதுக் காரணிகள் என்ன எனச் சொல்வீர்களா?
தன்னார்வ மற்றும் அரசு சாரா அமைப்புகளின் அரசியல் பற்றித் தாங்கள் அறியாதிருப்பீர்கள் என நான் நம்பவில்லை. உலகெங்கிலும் புரட்சிகர அரசியல் முன்னெடுக்கப்படாது முடக்குவதும், அமெரிக்க ஐரோப்பிய பாணியிலான ஜனநாயகத்தையும் சிவில் சமூகத்தையும் அமைப்பதுமே அவர்களது அரசியல் என்பதையும் தாங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.

ஐ.என்.எஸ்.டி எனும் அமைப்பு ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட ஒரு தன்னார்வ அரசு சாரா அமைப்பு. இந்த அமைப்பு இலங்கை அரசியலும் இனப்பிரச்சினையும் தொடர்பான கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. கருத்தரங்குகள் ஜெர்மனியின் பேட் போல் நகரில் அமைந்துள்ள பிராதஸ்தாந்து கிறித்தவ அமைப்பான எவாஞ்ஜலிக் அகாதமி துணையுடன் நடத்தப்பட்டு வருகிறது.
ஐ.என்.எஸ்.டி அமைப்புக்காக சலுகையில் இக்கருத்தரங்குகளை இந்த அமைப்பு நடத்துகிறது. இக்கருத்தரங்கு தொடர்பு முகவரியாகவும் இந்த அமைப்பினது முகவரியே இக்கருத்தரங்க அழைப்பிதழில் உள்ளது.
உலக தேவாலயக் கூட்டமைப்பிலும் எவாஞ்ஜலிக்கா அகாதமி அங்கம் வகிக்கிறது. ஜெர்மானிய அரசு, இலங்கை அரசு, அரசு சாரா அமைப்புக்கள், பிற ஈடுபாடுள்ள குழுக்கள் போன்றவற்றுக்கு இடையில் புரிந்துணர்வுக்காகவும் ஒத்துழைப்புக்காகவும் இக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. ஜெர்மனியிருந்தும், இலங்கையிலிருந்தும், உலகெங்கிலுமிருந்தும் ஐரோப்பியர்களும் ஆசியர்களும் இக்கருத்தரங்ககளில் பங்கு பெறுகிறார்கள்.
மேலும் ஜெர்மனியிலும் உலகெங்கிலும் பிராதஸ்தாந்து அறத்தைப் பரப்புவதன் ஒரு பகுதியாகவே இந்தக் கருத்தரங்குகளை இவ்வமைப்பு நடத்தி வருகிறது.
மார்க்ஸியர்களும் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவர்களும் தன்னார்வ அமைப்புக்களின் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் போது எழுப்பப்படும் கேள்விகளையே தங்கள் முன்பாகவும், தங்களோடு அக்கூட்டத்தில் பங்கு பற்றிய, தன்னார்வ நிறுவனங்கள் குறித்து புரட்சிகரமான அறம் பேசுகிற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர்களான ச.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆதவன் தீட்சண்யா முன்பாகவும் முன் வைக்கிறேன்.
தன்னார்வ நிறுவனங்கள் என்கிறபோது அதனது நிதியாதாரம் பற்றிய கேள்விகளை இடதுசாரிகளும் மார்க்சியர்களும் எழுப்புவது தவிர்க்க இயலாதது. பெருமளவிலான நிதிச்செலவுகளோடுவும் பயணச் செலவுகளோடும் உலகெங்கிலும் கருத்தரங்குகளை நடத்தும் ஐ.என்.எஸ்.டியின் நிதியாதாரம் குறித்த ஒரு ஆர்வலரின் கேள்விக்கு ஐ.என்.எஸ்.டி தளத்தில் பதில் சொல்லப் பட்டிருக்கிறது. இலங்கை அரசின் நிதியாதாரத்தில் ஐ.என்.எஸ்.டி இயங்குகிறது என்பது குற்றச்சாட்டு.

இலங்கை அரசின் பணத்திலோ அல்லது விடுதலைப் புலிகள் பணத்திலோ ஐ.என்.எஸ்.டி இயங்கவில்லை எனப் பதில் தரப்பட்டிருக்கிறது. திட்டவட்டமாக இதில் ஐ.என்.எஸ்.டியின் நிதியாதாரம் குறித்த பதில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

எவாஞ்ஜலிகல் அகாதமியாவின் உறவு, நிதி தொடர்பாக எழுந்திருக்கும் கேள்விகள், தமிழர்கள் மீதான இனப்படுகொலை எனச் சிக்கலானதொரு சூழ்நிலையில் தன்னார்வ மற்றும் அரசு சாரா நிறுவனமான ஐ.என்.எஸ்.டி நடத்திய கருத்தரங்கில், மார்க்சியராகத் தம்மை முன்னிறுத்தும் தாங்கள் கலந்து கொண்டதற்கான நிதி ஆதாரம் குறித்த தெளிவுறுத்தலையும், நியாயப்பாட்டையும் அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, தாங்கள் முன்வைக்க வேண்டும்.
உலகெங்கிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் தமது உரிமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இவ்வாறான மக்கள் இயக்கங்களை வழிநடத்துகிறவர்கள், நிறைய அரசியல் தவறுகளும் செய்கிறார்கள்.
மதவழி நின்று இதனை அணுகுகிறவர்கள் இருக்கிறார்கள். வஹாபிசத்தையும் பிராதஸ்தாந்து அணுகுமுறையையும் இந்துத்துவ அணுகுமுறையையும் தீர்வாக முன்வைக்கிற அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். மார்க்சியர்கள் எனத் தம்மைக் கருதிக் கொள்கிறவர்கள் இவ்வழிகளில் பிரச்சினைக்கான தீர்வுகளை முயல்வதில்லை .
அப்படி எனில், அன்புள்ள எஸ்.வி. ஆர். அவர்களே, தன்னார்வ மற்றும் அரசு சாரா நிறுவனமான ஐ.என்.எஸ்.டி நடத்திய இலங்கைத் தமிழர் தொடர்பான திருவனந்தபுரக் கூட்டப் பங்கேற்பை மார்க்சியர்களாகத் தம்மைக் கருதிக்கொள்ளும் தாங்களோ, தங்களோடு கூட்டத்தில் கலந்துகொண்ட ச.தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் எவ்வகையில் நியாயப்படுத்த முடியும் எனக் கருதுகிறீர்கள்?
தமிழ்செல்வனுக்கும், ஆதவன் தீட்சண்யாவுக்கும் ஒரு கேள்வியை இங்கே முன்வைக்கிறேன். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உலக தன்னார்வ அரசு சாரா நிறுவனங்களின் எதிர்ப்புரட்சி அரசியல் பற்றி ஒரு நூலையே எழுதியிருக்கிறார்.
ரட்சியாளர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் ச.தமிழ்ச்செல்வனும் ஆதவன் தீட்சண்யாவும், இலங்கை அரசு சார்பான, தன்னார்வ அரசு சாரா நிறுவனக் கருத்தரங்கில் கலந்து கொண்ட தங்கள் நடத்தைக்கு என்ன காரணத்தை முன்வைக்கிறீர்கள்?
அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, இறுதியாக ஒரு முக்கியமான கேள்வி. தாங்கள் இலங்கை அரசைக் கடுமையாக எதிர்த்து வருகிறீர்கள். ஐ.என்.எஸ்.டி நடத்தி வரும் இலங்கை தொடர்பான கருத்தரங்குகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வரும் பத்திரிக்கையாளர் பௌஸர் என்பவர் யார் எனத் தங்களுக்குத் தெரியுமா?
அவர் இலங்கை அரசுடன் செயல்பட்டு வரும் ஈ.பி.டி.பி செயலர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஐரோப்பியப் பிரதிநிதிகளில் ஒருவர் என்பது தங்களுக்குத் தெரியுமா?
பௌஸர் ஆசிரியராக இருந்து நடத்தும் “எதுவரை” இதழில்தான் உங்கள் திருவனந்தபுரச் சிறப்புரை பற்றிய செய்தி வந்ததும், வேறு எந்த இலங்கைத்தமிழ் பத்திரிக்கைகளிலும், ஐ.என்.எஸ்.டி தளம் உள்பட படத்துடன் அந்தச் செய்தி வரவில்லை என்பதும் தங்களுக்குத் தெரியுமா?
பௌஸர் பெயரிலோ, சுசீந்திரன் பெயரிலோ அக்கட்டுரை வராமல் தாஸ் எனும் அநாமதேயத்தின் பெயரில் அக்கட்டுரை வெளியாகி இருக்கிறது என்பதனையும் தாங்கள் அறிவீர்களா?
தோழர் எஸ்.வி.ஆர். அவர்களே, இலங்கை அரசு சார்பான கொள்கையுடைய தன்னார்வ அரசு சாரா நிறுவனமொன்று இலங்கை அரசியல் தொடர்பாக நடத்தியிருக்கிற திருவனந்தபுரம் கருத்தரங்கில் நீங்கள் கலந்து கொண்டிருப்பதானது தாங்கள் இதுவரை பேசி வந்திருக்கிற புரட்சிகர மார்க்சியத்துக்கு ஒரு களங்கம் என்றே நான் நினைக்கிறேன்.
இது பற்றி எங்களுக்குச் சொல்ல நீங்கள் என்ன பதிலை வைத்திருக்கிறீர்கள்?
மற்றபடி என்றும் போல அன்புடன்,
அசோக் யோகன்.

16 thoughts on “எஸ்.வி.ராஜதுரையும் – அறம்சார் சில கேள்விகளும்! : அசோக் யோகன்

 1. இதில் என்ன கேள்வியையும் பதிலையும் எதிர்பார்க்கின்றீர்கள் என்று எனக்குப்புரியவில்லை.ஆதவனோ,ச.தமிழ்ச்செல்வனோ அல்லது கொள்கையளவிலோ,கோட்பாட்டளவிலோ எதுவுமற்று வெறும் வயிற்றுப்பிழைப்பிற்காக ஊரெரிந்த குருதியை கொண்டாடிக்கொண்டிருக்கின்ற சுசிந்திரனோ,,பௌஸரோ மானிட வாழ்வில் அக்கறைகொண்ட மகாத்மாக்கள் இல்லை. அவர்களிடம் எந்தமகத்துவமும் இருந்ததில்லை. அவர்கள் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட திருட்டுக்களை இங்கு பட்டியலிட முடியும். ஆனால் அதுவல்ல இப்போ முக்கியம்.1988ல் வெளியான (இந்துமாகாசமுத்திரமும் இலங்கைப்பிரச்சனையும்) இரண்டாவது பதிப்பிற்கான
  முன்னுரை எழுதியவர் இராஜதுரை.தேசபக்தி என்பது இந்தியக்கம்யூனீஸ்டுகள் 1940 தவறவிட்ட பஸ் என்ற அவர் இன்று இந்தியப்பெரு முதலாளிவர்க்கம் ஓட்டுகின்ற பஸ்சில் தானும் ஏறிச்செல்லத் துடிப்பது. வியப்பானதல்ல. அதற்குத்தான் அறிவற்ற அடியாட்கள் சுசிந்திரன் போன்றவர்கள் அவருக்குத் தேவைப்படுகின்றார்கள் போலும்…..

 2. Shri Yogan Ashokan’s questions starred to the marksist S.VRajadurai is remarkable and most of the taml loving l people. Further the writters of Marksist Commmunist party (CPM) are attending such meetings spporting the Srilankan domain’s action against LTTE and Celon born tamilpeople who are suffering very much..However the justice has to be delivered to themwith the help of world countries immediately. The rerply has to be given bythe CPM writters and MR.S.V.R without any hesitation to Mr,Y.A so that the tamilloving people will satisfied.

 3. அன்பு நண்பர் அசோக் யோகனுக்கு ,
  தங்களிடம் தொலைபேசியில் பேசியபோது தங்களிடம் தென்பட்ட தொனிக்கும் இப்பதிவில் தெறிக்கும் தொனிக்கும் தலைகீழ் வேறுபாடாக இருப்பது சற்றே வருத்தமளிக்கிறது.நான் ஒரு நாள் மட்டும் த்ருவனந்தபுரத்திற்கு சென்றதை தங்களிடம் கூறினேன்.நீங்கள் நடத்தியிருந்தாலும் வந்திருப்போம்.குழப்பமான சூழல் நிலவும் இந்நேரம் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் சென்றதை ஒரு பழியாக மாற்றுவது சரியா? தொடர்ந்து பின்பற்றியிராத ஒருவருக்கு எவருடைய பின்புலமும் தெரிய வாய்ப்பில்லை உங்களுடையது உட்பட.மார்க்சிஸ்ட் கட்சி என்றால் என்ன வேணாலும் பேசலாம் எஙிற எங்கள் உள்ளூர் இனமானத்தோழர்களின் தொனியில்தான் நீங்களும் பேசுகிறீர்கள்.என்.ராம் முகாம் நல்லா இருக்கு என்று எழுதினார்.ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி முகாம்களில் நிலைமை படு மோசமாக இருக்கிறது.உடனடியாக மக்கள் குடியிருப்புகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ் நாட்டில் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது.அதெல்லாம் தெரிந்தும் தெரியாதது போல உள்ளூர்வாசிகள் இருப்பது போலத்தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்பது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது.முன் முடிவுகளோடு இருக்க வேண்டாம் என்று மட்டும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.இலங்கையிலிருந்து யார் வந்தாலும் ஓடிச்சென்று பேசுகிற மனநிலையோடு இருக்கும் எங்களை கேவலமாகச் சித்த்ரிப்பது இங்கு பலருக்கும் பிடிக்கும்.செய்யுங்கள்.நன்றி.நாங்கள் நடத்துகிற கூட்டங்களில் என்ன பேசுகிறோமோ அதற்கு சம்பந்தமில்லாத சித்திரத்தைத்தான் நீங்கள் எம்மைப்பற்றித் தீட்டுகிறீர்கள்.எமது கட்சி நிலைப்பாட்டை எமது கட்சிப்பத்திரிகைகள் வாயிலாக மட்டும் தெரிந்துகொள்ள முயற்சியுங்கள்.வணக்கம்.
  ச.தமிழ்ச்செல்வன்.

 4. தமிழ்ச்செல்வனின் பதில் மிகவும் ரசிக்கும்படியான பொதுவுடமைக்காரனின் பொறுப்புணர்வாக இருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்துக்களை கட்சியின் வெளியீடுகளைப் படித்துத் தெரிவது சரியே. இதே வேளை உடன்படாத கருத்துக்களை புதுவிசை தோழரும் வசந்தம் வெளியீட்டகமும் வெளியிடுமா? இது போகட்டும். குழப்பமான நிலையில் அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய முதலாளித்துவ தலைமையிலானதாக இருந்தாலும் தேசிய விடுதலை அரசியலைப் பேசும் யாரும் அங்கிருந்து வரவில்லையா? ////////////////////வரலாற்று வழியில் தேசிய இனமாக வளர்ந்து தேசங்களாக ஐரோப்பியம் முழுக்க முகிழ்த்த காலச்சுவடை மார்க்சிய பேராசாஙள் கண்ணுற்றுப் போகவில்லையா? ஜெர்மானியப் பெருமிதம் கொள்வது தவறில்லை என்றாரே காரல் மார்க்ஸ். மார்க்சின் பெயரால் ஆட்சி நடத்தும் சிபிஎம் கட்சியின் தமிழ்ச்செல்வனுக்கு இது பற்றி என்னகருத்து?//////இன்னொன்று தமிழீழ விடுதலைப்புலிகள் எனும் முதலாளிய தேசிய விடுதலை இயக்கம், நடைமுறையில் சில இசுலாமியர்கள்(மட்டும்) காட்டிக்கொடுத்த வரலாற்றுப் பதிவை காரணமாகச் சொல்லி, ஒட்டுமொத்த யாழ். இசுலாமியர்களையும் மண்ணைவிட்டு விரட்டியடித்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதுதான். மக்களைக் காக்கவேண்டிய மார்க்சிஸ்ட் கட்சிக்கு மொத்தப் பிரச்னைக்கும் இதுதான் காரணம் என்று கட்சி அணிகள் மத்தியில் கருத்துக்களை உலவவிடுவது ஏன்?///////////சாதி, வட்டார வேறுபாடுகளைக் கடந்து மக்களை மொழிவழி தேசியத்தின் கீழ் ஒன்றிணைப்பது முற்போக்கு என்று சொன்னவர்கள் மார்க்சிய ஆசாஙள். அவர்களின் பெயரைச் சொல்லி ஆண்டுகொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியோ, இலங்கையில் (காரணத்தைத் தூக்கி குப்பையில் போடுங்கள்) இசுலாமிய மதவாதத்தை முன்வைத்து தமிழர் தாயகத்தில் உள்ள மக்களைக் கூறுபோடவைக்கும் ஜனநாயக முகமூடிகளான அந்தோணிசாமி மார்க்ஸ், சிராஜ், பவுசர் வகையறாக்களை முன்னிலைபடுத்துவது எப்படி? //////////// ஒரு காலத்தில் xxxxxx நக்சல்பாரி அமைப்புடன் இயங்கிய அ. மார்க்சை ஒதுக்கிவைத்த நீங்கள் இன்று அவரிடம் இலங்கையைப் பற்றி சிறப்புப் பேட்டி வெளியிடுவது எப்படி? என்ன கொள்கை இதில் இருக்கிறது? ஒரே புள்ளிதான் உங்களை இணைக்கும் புள்ளி, விடுதலைப்புலிகள் பாசிஸ்ட்டுகள். இதுதான் இந்தப் பேரழிவுக்கும் காரணம். இது உங்களுக்கு வேத கோஷமோ தேவ கோஷமோ நீங்கள்தான் பதில் சொல்லவேண்டும். தயவுசெய்து புதிய புத்தகம் பேசுது இதழுக்கும் எங்கள் கட்சிக்கும் தொடர்பு இல்லை என்று மட்டும் கூறிவிடவேண்டாம், தோழரே. /////////////கொசுறு: கோயிலில் குருக்களை வெட்டிக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்ட்க கும்மோணம் சுப்ரமணி அதாங்க ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை ஆந்திர எல்லைக்கே சென்று அழைத்துவந்ட்க இந்திய சமுக விஞ்ஞானக் கழகத்தின் உறுப்பினர் என். ராமுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை, நம்பச் சொல்லுங்கள்!

 5. அன்புள்ள தமிழ்செல்வன் அவர்களூக்கு யார்நடத்தினாலும் பொயிருப்போம் என கூறுகிறீஈகள்.நல்லதுதான். புதிய கருத்துக்கள் எங்கிருந்து புறப்பட்டு வ்ந்தாலும் பெறுவது வளர்ச்சியே. நடக்கும் தகவல் எஙகிருந்து பெற்றிர்கள்? எஙகளளூக்கெல்லாம் அப்ப்டியொரு கருத்தரங்கம் நடை பெறுவதே தெரியாதே. பதினைந்து நாட் கள் கழித்துத் தான் தெரியும். ஒருவேளை நமக்கு அனைவானவர்கள் என்று எற்பாட்டாளர்களுக்குத் தெரியுமேஈ? எஙகிருந்து எவ்ரால் கிடைக்கப்பெற்றது எனச் சொல்வீர்களா?

  சூரியதீபன்

 6. *****தோழர் எஸ்.வி.ஆர். அவர்களே, இலங்கை அரசு சார்பான கொள்கையுடைய தன்னார்வ அரசு சாரா நிறுவனமொன்று இலங்கை அரசியல் தொடர்பாக நடத்தியிருக்கிற திருவனந்தபுரம் கருத்தரங்கில் நீங்கள் கலந்து கொண்டிருப்பதானது தாங்கள் இதுவரை பேசி வந்திருக்கிற புரட்சிகர மார்க்சியத்துக்கு ஒரு களங்கம் என்றே நான் நினைக்கிறேன்.
  இது பற்றி எங்களுக்குச் சொல்ல நீங்கள் என்ன பதிலை வைத்திருக்கிறீர்கள்?****

  இந்து, இந்தி, இந்தியா மற்றும் பெரியார் தொடர்பாக நீங்கள் எழுதிய நூல்களைப் படித்து உங்களைப் பற்றிய நல்லதொரு மதிப்பீட்டைக் கொண்டவர்கள், நீங்கள் திருவனந்தபுரம் மாநாட்டில் கலந்து கொண்ட காரணம் அறிய விரும்புகிறோம்.

  விடை சொல்வீர்கள் விளக்குவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

 7. SVR should clarify his views on the Sri Lankan issue.Some one can speak to him and publish the clarification. CPI(M) in Tamil Nadu is making some noises now. Why Puthu Visai suddenly publishes an article by A.Marx. The interview with
  சுசிந்திரனோ has also been published in Puthu Visai. Let Tamil Selvan explain whether he agrees with these views of A.Marx and சுசிந்திரனோ. Is Puthu Visai a liberal magazine for all liberal views. If they (Tamil Selvan etc)differe from views of N.Ram why dont they publish a single article criticising Ram’s views in Puthu Visai
  or Semmalar or Theekkathir. SVR might have been misled. So is Tamil Selvan. Hence it is necessary that they put their views in public, particulary telling us whether they agree with the views of the organisers of the conference. Tamil Selvan has a blog. Let him write in that.

 8. In fairness to SVR, the question should be addressed to him personally; the views expressed by him at the meeting should be clarified. (A copy of the article should be sent to him electronically for a response).

  As for the rest:
  People do not attend such events out of sheer curiosity. There are expectations and hopes for consensus, unless the intention is to put the record right.
  Views articulated there, from what I gather, are most insensitive to the plight of the Sri Lankan Tamil people.
  If any participant failed to criticise them, preferably there itself or soon after the event, then he/she can be held answerable for the resolutions, decisions and dominant views emerging from the meeting.

  Ram’s double standards on a number of issues including Nandigram, Lalgarh, Kashmir, Nepal etc. are well known. His close ties with the slain UNP leader Gamini Dissanayake were no secret.
  The CPI(M) hosted the chauvinist JVP at their annual sessions not long ago even when it was thoroughly exposed as a chauvinist outfit.
  Varatharajan, during his visit some years ago spent his whole time with the revisionist CP hosts, who are part of the ruling establishment.
  Views expressed by Prakash Karat in Sri Lanka four years ago made it clear that he was not with the oppressed Tamil nationality.
  These are among matters on which people have commented with hurt. But what matters is what the CPI(M) stands for within India.
  The tragedy of the CPI(Marxist?) is that it cannot do without some kind of DMK to survive elections and the blessings of Lord Ram for its political suvival on the media front, among other things.

  The CPI(M) likes to have it both ways in many situations.
  This game cannot go on.
  It is time that the CPI(M) cadres woke up to the reality that their party has been transformed by the bosses into an Indian hegemonic establishment party.
  Prolonged coexistence with a politically degenate leadership will destroy all what is good among the cadres.

 9. ச.தமிழ்ச்செல்வனுடைய பதிலை படிக்கும் யாருக்கும் அய்யோ பாவம் ரொம்ப அப்பாவி போலிருக்கு என்று தான் தோன்றும்.அப்படி எழுதியிருக்கிறார். ஆனால் அது உண்மையா ? இல்லை. குழப்பமான சூழல் நிலவும் நேரத்தில் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் சென்றதை ஒரு பழியாக மாற்றுவது சரியா என்று கேட்கிறார்.என்ன குழப்பம் நிலவுகிறது தமிழ‌கத்தில் ? இங்கு எல்லாம் ‘தெளிவாக’த்தான் இருக்கிறது. நீங்களும் (இந்திய அரசின் நிலையிலிருந்து புலியை எதிர்க்கும் நீங்களும்) தெளிவாக இருக்கிறீர்கள், புலி ஆட்களும் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்.அனைத்திலும் தான சொல்கிறேன்.

  உங்களுக்கு யாருடைய பின்புலமும் தெரியாதா ? சுசீந்திரன் நடராசாவின் பின்புலம் தெரியாமல் தான் அவர் பின்னால் போனீர்கள்,அதை நாங்கள் எல்லாம் நம்ப வேண்டும் என்கிறீர்கள். ஏன் அவரைப் பற்றி உங்கள் கட்சியின் பின்நவீனத்துவ சூப்பர் ஸ்டார் ஆதவன் தீட்சன்யாவிடம் கேட்டிருக்க வேண்டியது தானே, நன்றாகவே அவரின் பின் புலத்தை உங்களுக்கு புரிய வைத்திருப்பார்.

  மார்க்சிஸ்ட் கட்சி என்றால் என்ன வேணாலும் பேசலாம் என்று இங்கே யார் உங்களைப் பற்றி பேசுகிறார்கள். உங்களுடைய அரசியலைப் பற்றித்தானே விமர்சிக்கிறோம்.அதை விடுத்து ஆதவன் தீட்சன்யா தன்னியடித்துவிட்டு சுற்றுகிறார். சென்னைக்கலைக்குழு பிரளயன் எப்போதும் புல் மப்பில் தான் இருக்கிறார், அப்புறம் உங்கள் கட்சியின் கள்ளக்காதல் தொடர்புகள் பற்றியெல்லாமா நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்.?

  ஈழத்துக்காக நீங்கள் என்ன லட்சனத்தில் போராட்டங்கள் நடத்துகிறீர்கள் என்பது தான் தெரியுமே ?

  நீங்கள் புலியை என்ன நிலையிலிருந்து விமர்சிக்கிறீர்கள். இந்திய அரசு,சுப்பிரமணிய சாமி,இந்து ராம் நிலைப்பாட்டிற்கும் உங்கள் மார்சிஸ்ட் கட்சி நிலைப்பாட்டிற்கும் ஒரு நாலு வேறுபாடு மட்டுமாவது சொல்லுங்களேன் பார்ப்போம்.

  http://www.vinavu.com/2009/08/20/tmaks/

 10. முதலில் சூரியதீபன் சாருக்கு..சுசீந்திரனும் இன்பாவும் கடந்த சில ஆண்டுகளாகப் பழகிவிட்ட எனது நண்பர்கள்.திருவனந்தபுரத்தில் இலங்கைப்பிரச்னை தொடர்பாக ஒரு கருத்தரங்கு நடக்கிரது அதில் சிங்களவரும்பங்கேற்கிறார்கள் என சுசி அழைத்ததன் பேரில் ஒருநாள் சென்றேன்.அன்றே அங்கு இந்திய உளவுத்துறை வந்து அக்கருத்தரங்கை தடை செய்துவிட்டது.இலங்கையில் உள்ள ஐடிபி முகாமிலிருந்து நேரடியாக அங்கு வந்து புலி ஆதரவாளரான நண்பர் (பெயர் வேண்டுமெனில் தனியாகச் சொல்கிறேன்) ஒருவரைச் சந்தித்து முகாம் பற்றி நேரடித்தகவல் கேட் கவேண்டும் என் கிற ஆர்வமே என்னை அங்கு இழுத்துச்சென்றது.தவிர அங்கு பங்கேற்ற கவிஞர் நித்தியானந்தன் சொன்னது போல சிங்களவன் என்ன சொல்றான் என்று நேரடியாக பேசிப்பார்க்கும் ஆர்வமும் எனக்கு இருந்தது.இதற்கு மேல் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை.வழக்கம்போல நீங்கள் நம்பாவிட்டாலும் பிரச்னை இல்லை.சிபிஎம் இப்போது நடத்தி வரும் இலங்கைத் தமிழ் மக்களுக்கான போராட்டந்க்களை ஏதோ அவர்கள் கொஞ்சம் சவுண்டு கொடுப்பதாக ஒரு நண்பர் எழுதியுள்ளார்.இப்படி மனநிலைகளோடு உள்ளவர்களோடெல்லாம் பேசுவது இருவருக்கும் பயனற்றது.அந்தப்பக்கம் போகாதிங்கண்ணே சும்மா நடந்து போனாலே கல்லாலே அடிக்கிறாங்க என்று பலர் சொன்னதைக் கேளாமல் இப்பக்கம் வந்து விட்டேன்.ச மன்னிக்கவும்.இனி வரமாட்டேன்.நன்றி. வணக்கம்.என் வலைப்பக்கத்தில் எழுதுவேன் தொடர்ந்து.

 11. தண்ணியடிப்பது, கள்ளக்காதல் பற்றியெல்லாம் கதறிக்கொண்டிருக்கும் சர்வதேசியவாதிகளே! இவையெல்லாம் பேசப்படும் கருப்பொருளுக்கு தேவையற்றது என்றே கருதுகிறேன். மேலும் தாங்கள்தான் ஊற்றிக் கொடுத்தது போன்றும், காதலுக்கு தூதுபோனது போன்றும் புலம்புவது சரியா? ஆடையை அவிழ்த்துவிட்டால் பார்க்க அத்தனையும் அசிங்கம்தான் ஆதலால் அந்தரங்கம் பற்றி அதிகம் பேசவேண்டாமே! ஆரோக்கியமான அரசியல் விவாதமும், அதனூடான போராட்ட முன்னெடுப்புகளுமே எம்மை தர உயர்த்துமென நம்புவோம்

 12. தமிழ்ச்செல்வன்

  சிங்களவன் என்ன நினைக்கிறான் என்பதை தங்கள் இந்து ராமிடம் கேட்டிருந்தாலே கூவி.. அடச்சே கூறியிருப்பாரே? கம்யூனிசம் என்பது ஈழத்தமிழனைக் கொல்லுவதிலே பொதுவிலே கூடியிருக்கும் உடமையா?

 13. வணக்கம் அசோக்
  தீர்க்கதரிசனங்கள் பற்றித்தான் எனக்குக் கவலையாயிருக்கிறது.
  இப்போதாவது சிலரைப்பற்றியாவது நீங்கள் அடையாளம் கண்டிருக்கிறீர்கள்.
  இன்னும் இருக்கின்றன பட்டியலில் பெயர்கள்!
  உங்களுடைய நேரம் வரும்போது மட்டும்தான் நீங்கள் அவர்களையும் சேர்ப்பீர்கள்.
  அதுவரைக்கும் நட்புக்காக என்று பொறுத்தருளுவதே எமது வரலாறு.
  என்ன செய்வது?

 14. நாம் ஊற்றிக்கொடுக்கவில்லை திருவாளர் தமிழவன், ஆனால் ஊற்றிக்கொடுத்ததையும், ஊற்றிக்கொண்டதால் ஆட்டம் போட்டதையும் நேரில் கண்கூடாக கண்டிருக்கிறோம்.

  காதலுக்கும் நாம் தூது போனதில்லை, காதலுக்கு கூட தூது போகலாம் இதுவோ கள்ளக்காதல். அந்த அசிங்கங்களை பற்றியெல்லாம் நான் விளக்கிக்கொண்டிருக்கப் போவதில்லை. சி.பி.எம் மின் விபச்சாரித்தனத்தை (நேர் பொருளில் தான் சொல்கிறேன்) நீங்களே நேரில் வாருங்கள் அறிமுகம் செய்கிறேன். நான் இது குறித்து சொன்னதை ச.த கண்டுகொள்ளவே இல்லை என்ன ஒரு தந்திரம்!!

  இவை எல்லாம் சி.பி.எம் மின் மிக உயர்ந்த ‘பாட்டாளி வர்க்க பன்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் நடவடிக்கை’யாயினும் நாம் இதைப்பற்றி எல்லாம் பேச ஒன்றும்
  விரும்பவில்லை.
  உங்கள் கட்சியிலுள்ள‌ இதையெல்லாமா பேசிக்கொண்டிருக்கிறோம் என்று தான் கேட்டோம்.

  @ Met

  போலிக் கம்யூனிஸ்டுகளின் ஆளும் வர்க்க நடைமுறையை வைத்துக் கொண்டு பொதுவில் கம்யூனிசத்தை சாட வேண்டாம். அவர்களைப் பொருத்தவரை பன்றித்தொழுவமான‌ பாராளுமன்றத்தின் மூலம் புரட்சி செய்வார்கள்.அவர்களுக்கு சீனா கம்யூனிஸ்ட் நாடு, கியூபாவும் கம்யூனிஸ்ட் நாடு. எனவே போலி கம்யூனிஸ்டுகளின் பேச்சையெல்லாம் கம்யூனிசத்திற்கான ஆதாரமக கொள்ளதீர்கள்.

 15. தமிழ்செல்வன் அவர்களே, மறுபடியும் நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிவிடும் சூட்சுத்தில் இறங்கியிருக்கிறீர்களா? இன்பாவும் சுசியும் என் இனிய நண்பர்கள் அவர்கள் அழைத்ததால் போனேன் என்கின்றீர்கள். சிங்களவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்கப் போனேன் என்கின்றீர்கள்.விடுதலைப்புலி உறுப்பினரைத்தான் பார்க்கப் போனேன் என்கின்றீர்கள். எத்தனை முரண்பாடுகள் உங்கள் ஒற்றைப்பதிலில். இந்தத் தடுமாற்றம் ஏன்?? தயக்கம் ஏன்? தடம் மாற்றம் ஏன்? நீங்கள் நியாயமானவாராகவிருந்தால்.

  //சர்வதேச வாதிகள் ஊற்றிக்கொடுக்க வேண்டிய தேவையில்லைத் தமிழவன் ஏனென்றால் பணமுடிச்சுக்களோடும்,வெளிநாட்டுச் சரக்குகளோடும் (இதில் சரக்குகள் என்பது வெளிநாட்டு மது வகைகளை குறிப்பிடுகிறது)நீங்கள் எந்த அர்த்தத்திலும் எடுத்துக்கொள்ளலாம்,பனிதூவூம் பாவையரோடும் இலங்கையரசின் கைக்கூலிகள் திருவனந்தபுரத்தைச் சூழ்ந்துகொண்ட பொழுது அது.

  ரமோனா

Comments are closed.