சர்வதேச தொழில் தாபனம் உலகில் தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதில் முக்கிய கடப்பாட்டினைக் கொண்டுள்ளது. தனது 190 சமவாயங்களை நிறைவேற்றியுள்ளதுடன். அவை தனிநபர் உரிமைகள், பாதுகாப்பான தொழில், ஊதிய தராதரம், வேலை நேரம், சமூக பாதுகாப்பு, சிறுவர்தொழில், பலாத்காரமான நிர்ப்பந்தத்திற்குற்பட்ட தொழில் போன்றன முக்கியமாக முதலாம் நிலை உரிமைகளாகவும், கூட்டுத்தொழில் உரிமை (கூட்டு உடன்படிக்கை உரிமை) ஒன்று சேர்ந்து தொழில் புரிதல், தொழிற் சங்கமைத்தல், வேலை நிறுத்தம் செய்யும் உரிமை, தொழில் நிறுவன முகாமைத்துவத்தில் பங்குபற்றும் உரிமை என்பன இரண்டாவது வகையான உரிமைகளாகவும், சமத்துவமான நடாத்துகை, வெளிநாட்டில் வேலை செய்வோர், பழங்குடியினர் உரிமைகள் என்பன முன்றாம் நிலையான உரிமைகளாகவும் நான்காம் வகையில் தொழில் பாதுகாப்பு, வேலைநீக்க தராதரம், தொழில் தருனர் வங்குரோத்து நிலையின் போதான பாதுகாப்பு, தொழில் முகவர்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உறுப்பு நாடுகளில் தொழில் வழங்கல் தொழில் தராதரமும் வேலையில்லா பிரச்சினையை இல்லாதொழித்தல் போன்ற உரிமைகளும் ஐந்தாம் நிலையில் மேற்பார்வை, கூட்டு வேலை, பயிற்சி, ஆலோசனை வழங்கல் மூலம் தொழில் தராதரத்தினை மேம்படுத்தல் தொடர்பான 6 சமவாயங்களும் கடல்சார் தொழில் உரிமைகள் பற்றி 12 சமவாயங்களும் குறிப்பாக தொழில் தன்மை, மீன் பிடித்தல் தொடர்பாகவும், பெருந்தோட்ட தொழிலாளர் Hotel, தாதியர், வீட்டுவேலையாள், மிகவும் பாதிக்கப்பட்ட (பாதுகாப்பு முக்கியமான) மக்கள் தொடர்பான சமவாயங்கள் 6 என முக்கியமான 71 சமவாங்கள் நடைமுறையிலுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக உறுப்பு நாடுகளின் உடன்பாட்டின் தன்மையை கவனத்தில் கொள்ளாது நடைமுறைப்படுத்தப்படும் 8 மிக முக்கிய சமவாங்கள் நடைமுறையிலுள்ளன.
இவ்வாறு தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சமவாங்கள் காணப்படினும் உலகில் முதலாளித்துவம் மக்களை சுரண்டி தொழிலாளர்களை உறிஞ்சி, பிழிந்து இலாபம் தேடிக்கொள்வதோடு சுற்றாடலையும், உயிரின பல்லினத்தன்மையையும் மனித இனத்தினையும் கொன்று குவிக்கின்றது. என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை இதுதான தினந்தோறும் நடைபெறும் விளையாட்டாகவுள்ளது.
உலகில் வளர்ச்சியடைந்த, வல்லரசு நாடுகள் ஏன் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் பல தொழிலாளர்கள் பற்றி எவ்விதமான கரிசனையும் கொள்வதாக தெரியவில்லை எல்லா மட்டங்களாலும் குறிப்பாக வீட்டு வேலையாட்கள், தொழில் நிமித்தம் இடம்பெயர்ந்து வேலைசெய்வோர், ஆபத்தான தொழில் நிலைகளில் வேலை செய்வோர் என எல்லா தொழிலாளர்களும் சுரண்டப்படுவதினூடாக நாடு வளர்ச்சியாகின்றது என பொருளாதரா சுட்டெண்னை உயர்த்திக் காட்டுகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச தொழில் உரிமை சமவாயங்கள், ஏனைய தொடர்புடைய சமவாங்கள் பற்றியும் அவை ஏற்றுக்கொண்ட நாடுகள் நடைமுறைப்படுத்தும் விதம் பற்றி விசேடமாக இலங்கையில் தொழிலாளர் உரிமை பற்றி இக்கட்டுரையில் அவதானம் செலுத்துகிறேன்.
ஜப்பான், தாய்வான், தாய்லாந்து, வடகொரியா, தென்கொரியா, சீனா போன்ற நாடுகள் மிக மோசமான முறையில் தொழிலாளர் உரிமைகளை மீறுவதுடன் அவர்களை சுரண்டிப் பிழிந்து பணம் சம்பாதிக்கும் முறைமையினையே பின்பற்றுகின்றன. குறிப்பாக வெளிநாட்டு வேலைக்காக இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களே அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
ஜப்பான் மிக குறைவான ஊதியத்தில் தொழிலாளர் உழைப்பை சுரண்டுவதில் முன்னிலையான நாடு ஜப்பானில் தொழில் செய்யும் வெளிநாட்டவர் ஏன் உள்நாட்டவர்களுக்கு சம்பளக் கொடுப்பனவு பல மாத காலமாக செலுத்தப்படாமல் வேலை வாங்குதல,; தொழில் பெறுவதற்காக தொகை பணம் வைப்பிலிடச்சொல்லுதல், மகப்பேற்று விடுமுறை ஓய்வு நேரம் வழங்காமை, கையடக்கத்தொலைN;பசிகளைக் கூட தமது கட்டுப்பாட்டில் வாங்கி வைத்துக் கொள்ளல், இரட்டை வேலை நேரம், பெண்கள் சிறுநீர் கழிப்பதனால் PAD அணிந்து கொள்ளச் சொல்வது, மலம் கழிக்க செல்வதனால் தனது வேலையை செய்ய இன்னொருவரை பதிலீடு செய்துவிட்டு போகச் சொல்வது என மிக கொடுரமான தொழிலாளர் உரிமை மீறல், மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. ஜப்பானின் உற்பத்தி பொருள்களிடம் கேட்டால் உண்மையான உழைப்பை பற்றியும் கொடுமைகள் பற்றியும் சொல்லும்.
சீனா உலகில் தலைமையான வல்லரசாகவேண்டும் என்பதற்காக ஓய்வில்லாத வேலை, விடுமுறை இல்லாத தொழில், தாக்குதல்கள,; பலாத்கரமாக வேலை வாங்குதல் என மிக மோசமான தொழிலாளர் உரிமை மீறல்களை மேற்கொள்கிறது. Foxconn தொழிற்சாலைகள் என்றால் Apple, I pads, I phones களுக்கு பெயர் போன நிறுவனம். இங்கு ஒரு மாதத்திற்கு 98 மணித்தியாலங்கள் மேலதிகமாக வேலை (Over Time) செய்வதோடு தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை மாத்திரமே ஒரு சில நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. வேலை நேரத்தில் கதைப்பது தடை, ஒரு நாளைக்கு 12 மணித்தியாலங்கள் வேலை செய்ய பணிப்பது என மிக மோசமான மனிதாபிமானமற்ற விதத்தில் தொழில் சுரண்டல் N;மற்கொள்வதோடு ஆபத்தான பொருட்களில் வேலை செய்யும் போதான பாதுகாப்பு ஏதும் இல்லாமல் வேலைக்கமர்த்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுத்துவது வழமையானதாக கொண்டுள்ள தொழிற்சாலைகள் பலவற்றை குழஒஉழnn தொழிற்சாலை கொண்டுள்ளது.
சீனாவில் இக்கம்பனிகளில் வேலை செய்த பலர் சம்பளக் கொடுப்பனவுகள் செலுத்துப்படாமையாலும் வேலைச் சுமை மன அழுத்தத்தினாலும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன. சீனாவின் சுரங்கத் தொழில்களில் அரசாங்க கம்பனிகள் ஈடுபடுவதோடு மிக மோசமான சுகாதார, பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தொழிலாளர்கள் கட்டாய வேலைக்கமர்த்துகின்றன. இந்த சுரங்கங்களில் 12-18 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக வேலைக்கமர்;த்தப்படுகின்றனர் தொழிற்ச்சங்க உரிமைகளை மறுதளிக்கும் இக்கம்பனிகள்; ஆபத்தானது என தெறிந்தும் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தும் மிருகத்தனமான பண வெறியைக் கொண்டன. சீனா வெளிநாடுகளில் குத்தகைக்கு எடுத்துள்ள கனியவள சுரங்கங்களிலும் எந்த விதமான சட்டத்தையும் மதிக்காது சர்வதேச சட்டங்களையும் மீறி மிக மோசமான சுரண்டலை செய்து வருகின்றது என்பது Zambia சுரங்க தொழிற்சாலைகளைக் கொண்டு அறியலாம். சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க, தண்ணீர் குடிக்க கூட ஒரு நிமிட ஓய்வு வழங்காமல் சீனக் கம்பனிகள் செயற்படுவதற்கு சீன அரசு உடந்தையாக உள்ளது என்றுதான் கூறவேண்டியுள்ளது.
தாய்லாந்து பொருளாதாரத்தில் மிக முக்கியமான பங்குதாரர்களாக வெளிநாட்டு பணியாளர்கள் உள்ளனர். என்றாலும் இவர்களை சித்திரவதை செய்தல் தேவை ஏற்படின் கொல்லுதல் தடுத்து வைத்தல் அச்சுறுத்ததல் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்குதல் தொழிலுக்காக ஆள் கடத்தல் விற்றல் என தனியான வர்த்தகமே செய்கின்றனர் தாய்லாந்து தொழில தருனர்கள்.
வடகொரியா சர்வதேச தொழிலாளர் சமவாயத்தில் அங்கம் வகிக்கவில்லை என்பதோடு அரசாங்க தொழிற்சங்கத்தை தவிர ஏனைய தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை இல்லை. வலுக்கட்டாயமான வேலை, ஒரு நாளைக்கு 20 மணித்தியாலங்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். போதுமான உணவு வழங்காமை கொடுரமான நடாத்துகை எதேட்சதிகரமான தடுத்து வைத்தல் என தொழிலாளர்களை வஜ்சித்து முன்னேற நினைக்கின்றனர் வடகொரிய தொழிலதி;பர்களும் அரசாங்கங்களும்.
.
தொழிற்துறையில் மிக வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் தென்கொரியாவும் முக்கிய இடம் வகிக்கின்றது. சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு தென்கொரியாவை மிக மோசமாக தொழிலாளர் உரிமை மீறும் நாடுகளின் பட்டியலில் முதன்மை 10 இடங்களுக்குள் இடமொதுக்கியுள்ளது. நியாயமற்ற வேலை நீக்கம் அச்சுறுத்தல் வற்புறுத்தலான வேலை ஓய்வற்ற வேலை என மிக மோசமான தொழிலாளர் உரிமை மீறல் இடம்பெறுகின்றன. இதற்கு அரசு கம்பனிக்கிடையிலான நட்புறவு கொள்கையே காரணமாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
இது போலவே தாய்வான் மலேசியா நாடுகளும் தொழில் உரிமைகளை மதித்து நடப்பதோ மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதோயில்லை. தொழிலாளர் உரிமைகள் மனித உரிமைகள் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட மிகவும் முன்னேற்றகரமான நாகரீகமான நாடுகள் என வர்ணிக்கப்படுபவை ஸ்கன்டினேவிய நாடுகளே. இங்கு தொழிலாளர் உரிமைகள் பேணப்படும் அதே வேளை அபிவிருத்தியும் வேகப்படுத்தப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்க அனைதுலக மனித உரிமைகள் சாசனத்தின் உறுப்புரை 23 இவ்வாறு கூறுகிறது.
1. ‘ஒவ்வொருவரும் வேலை செய்யும் உரிமை, சுதந்திரமாக வேலை தெரிந்தெடுக்கும் உரிமை, வேலையின்மையிலிருந்தான பாதுகாப்பு நியாயமான, சாதகமான தன்மையிலிந்தான வேலை உரிமை கொண்டுள்ளார்’
2. பாரபட்சமற்ற கொடுப்பனவு உரிமை கொண்டுள்ளார்
3. ஓவ்வொருவரும் பாதுகாப்பான, மனித கௌரவத்துடன் வாழக்கூடியதான சாதகமான சம்பளத்தினை பெற்றுக் கொள்ளும் உரிமை கொண்டுள்ளார் எனக்கூறுகின்றது.
உறுப்புரை 25 (1) ‘ ஒவ்வொருவரும் சுகாதாரமும், நல்வாழ்வுக்கான உணவு, உடை, வீடு, மருந்துவ பாதுகாப்பு, சமூக சேவைகள் வேலையின்மையிலிருந்து பாதுகாப்பு, சுகவீனம், இயலாமை விதவைமை, முதிர்ச்சி, தனது கட்டுப்பாட்டுக்கு அப்பாலான வாழ்வாதரா பிரச்சினையிருந்தான பாதுகாப்பு, போதுமான வாழ்க்கை தராதரத்துடன் வாழ்வதற்கான உipமை கொண்டுள்ளார்.’ எனவும்,
உறுப்புரை 25 (2) தாய், குழந்தை விசேடமான பாதுகாப்பு உதவியையும், தொழில் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ள உரிமையுடையோர் எனக் அங்கிகரித்துள்ளது.
சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தின் உறுப்புரை 22- சங்கமைக்கும் உரிமையை அங்கீகரிப்பதுடன் ஒன்று கூடும் உரிமையை உறுதிப்படுத்தியுள்ளது இதற்கான மட்டுப்பாடுகளையும் சனநாயக சமூகத்திற்கு தேவையான தேசிய பாதுகாப்பு, பொதுப்பாதுகாப்பு, சுகாதாரம் தவிர ஏனைய விதத்தில் மட்டுப்படுத்தவியலாது எனக் காணுக்கின்றது. ICCPR உரிமைகளை நடைமுறைப்படுத்த அரசு கடப்பாடு கொண்டுள்ளதுடன் இதனை கண்காணிக்க மனித உரிமைகளை குழு தாபிக்கப்பட்டு அதற்கு (Human Rights Committee) பொறிமுறையும் காணப்படுகின்றது.
பொருளாதார சமூக கலாசார உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் ‘ஒவ்வொரு அரசு தரப்பும் தானாகவும் சர்வதேச உதவி, ஒத்துழைப்புடன் தன்னிடம் காணப்படும் வளங்களைக் கொண்டு பொருளாதார, சமூக கலாசார உரிமைகளுக்கு உயிர்கொடுக்கும் நோக்கத்துடன் செயற்பட வேண்டும்’ எனும் கடப்பாட்டினையும் வழங்கியுள்ளது. இவ்வுரிமைகளை இனம், நிறம் பால், மொழி பிராந்திரம், அரசியல், தேசியம் சமூகம் பூர்வீகம், சொத்து பிறப்பு வேறு காரணங்களால் பாரபட்சமின்றி உறுதிப்படுத்த அரசுகள் கடப்பாடுடையன எனக்கூறுகின்றது.
ICESCR உறுப்புரை 6 ‘ஒவ்வொரு அரசுத்தரப்பும்’ தான் வாழ்வதற்கான, சுயமாக செய்யக்கூடிய வேலையை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது உன ஏற்றுக்கொள்வதோடு பாதுகாக்கும் கடப்பாட்டினையும் கொண்டுள்ளது.
உறுப்பினர் 07 ‘நியாயமான சம்பளத்துடனான ஆகக்குறைந்த சம்பளம், கௌரவமான வாழ்க்கைத்தராதரம,; பாதுகாப்பான, சுகாதாரமான வேலைச் சூழல் தொழில் மேற்பாட்டு சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல் மட்டுப்படுத்தப்படும் வேலை நேரம், ஓய்வு, கொடுப்பனவுடனான விடுமுறை என்பவற்றை ஒவ்வொரு வரும் அனுபவிக்க உறுதிசெய்தல் வேண்டும்’ என கூறுகிறது.
உறுப்புரை 8 தொழிற்சங்க உரிமைபற்றியும், உறுப்புரை 9 சமூகப்பாதுகாப்பு, சமூக காப்புறுதி என்பவற்றை அரசு ஏற்று அங்கீகரிப்பதாகக் கூறுகின்றது. உறுப்புரை 10 – குடும்பப் பாதுகாப்பு தாய், சேய், பாதுகாப்பு பற்றியும,; உறுப்புரை 13 கல்வி உரிமை பற்றியும் கூறுகின்றது இவ்வுரிமைகளை அங்கீகரித்து நடைமுறைப்படுத்த அரசு கடப்பாடு கொண்டுள்ளது.
தொடரும்………….