இலங்கை அரசின் நல்லாட்சி ஜனாதிபதி இராணுவ உளவுத்துறையின் தலைவராக கோத்தாபய ராஜபக்சவின் அடியாளாகச் செயற்பட்ட சுரேஷ் சாலி என்பவர் நியமிக்கப்பட்டதும், அவரே கோத்தாபயவினதும் ஆதரவாளர்களதும் கைதைத் தடுத்துவருவதாகவும் பொதுவான கருத்தாக ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தின் இறுதிப் பகுதிவரைக்கும் அமைச்சரவை அமைசர் பதவி வகித்த மைத்திரிபால இனவழிப்புக் காலத்தில் பாதுகாப்புச் அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். சுரேஷ் சாலி தொடர்பான எந்த அறிவுமற்ற குழந்தை அல்ல மைத்திரிபால.
தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக வாழ் நாள் முழுவதும் சமரசங்களை மேற்கொண்ட மைத்திரிபால ராஜபக்ச குடும்பத்தைப் பாதுகாப்பதாக மகிந்த சமரவீர ஊடாக வாக்குறுதி வழங்கியதாக பேராசிரியர் சரத் விஜயசூரிய என்பவர் தெரிவித்துள்ளார். ஆட்சியைக் கைப்பற்றிய நாளிலிருந்து இன்று வரை மைத்திரிபால தனது வாக்குறிதியை மீறியதாகத் தெரியவில்லை.
மைத்திரிபாலவை ஆட்சியிலமர்த்தும் போது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி நேரடியகவே தலையிட்டு காய் நகர்த்தல்களில் ஈடுபட்டிருந்தார்.
மகிந்த ராஜபக்சவைத் தவிர போரை நடத்திய மூன்று பிரதான நபர்களான சரத் பொன்சேகா, பசில் ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகியோர் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான கிரீன் கார்டைப் பெற்றுக்கொண்டவர்கள். இவர்கள் மூவருக்கும் ஒரே ஆண்டில் குலுக்குச் சீட்டுப் பரிசு முறை ஊடாகவே அமெரிக்க வதிவிட அனுமதி வழங்கப்பட்டது என்பது தற்செயலானதல்ல.
ஆக, அமெரிக்க அரசினால் போரை நடத்துவதற்குத் தயார்படுத்தப்பட்ட இந்த மூவரும் இன்றளவில் பாதுகாப்பாக உள்ளனர்.
கோத்தாபயவின் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட அவன்கார்ட் மரிரைம் என்ற தனியார் இராணுவ நிறுவனத்திற்கு பிரித்தானிய அரசே ஆயுதங்கள் வழங்க விற்பனையாளர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கியிருந்தது. இலகு ரக ஆயுதங்கள், கைக்குண்டுகள் மற்றும் தொலைத் தொடர்பு உபகரணங்கள் போன்ற ஆயுதங்களை இலங்கை அரசிற்கு வழங்க அனுமதியளித்த பிரித்தானிய அரசு கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவே ஆயுதங்களை வழங்கியதாகத் தெரிவித்திருந்தது.
2011 ஆம் ஆண்டு சோமாலியக் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் நிறுவனமாக கோத்தாபயவின் அவன்கார்ட் மரிரைம் நிறுவனமே செயற்பட்டுவந்தது.
ஆக, போரின்போது மட்டுமன்றி அதன் பின்னரும் கோத்தாபய அமெரிக்க நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்பட்டார் என்பதற்கான மேலும் ஆதாரங்கள் உள்ளன.
இவற்றின் அடிப்படையில் சுரேஷ் சாலியிலும் அதிகமாக அமெரிக்க அரசே மைத்திரிக்கு ஆலோசனை வழங்கும் பாத்திரத்தை வகிக்கிறது என்பதே இங்கு தொக்கு நிற்கும் உண்மை.
Very nasty underground OPERATION by US IS PROVED.WAR CRIMINALS ARE PROTECTED BY THE BEST POLICING DEMOCRACY IN THE WORLD.