Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பொதுவுடைமை என்றால் என்ன (பாகம் 2) : இராமியா

இனியொரு... by இனியொரு...
10/05/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
2
Home பிரதான பதிவுகள் | Principle posts

உலகத்தில் நடக்கும் அனைத்துப் போராட்டங்களும் புரட்சிகளும் வர்க்கங்களுக்கு இடையேயான நேரடி அல்லது மறைமுக முரண்பாட்டின் விளைவாகவே ஏற்படுகின்றது. அவ்வாறான போராட்டங்களின் முன்னேறிய வளர்ச்சிக் கட்டமே பொது உடமை என்று அழைக்கப்படுகின்றது. மக்களால் ஆளப்படும் முன்னேறிய அரசமைப்பு முறையில் ஆரம்பிக்கும் சோசலிச சமூகத்தை வன்முறை என அவதுறுப் பிரச்சாரங்களை அதிகாரவர்க்கங்கள் மேற்கொண்டுவந்தன. இன்று அந்த நிலை மாறி வருகிறது. சிறு தொகையினர் மக்கள் மீது செலுத்தும் அதிகாரம் பாராளுமன்ற ஜனநாயகம் என அழைக்கப்படுகிறது என மக்கள் உணர்ந்துவருகின்றனர். பெரும்பான்மை மக்களின் ஜனநாயகமான சோசலிசம் குறித்த கற்கை மனித சமூகத்தின் அவசிய தேவை.

இவ்வேளையில் சமூகத்தின் முன்னணி சக்திகளுக்கு பொது உடமையை அறிமுகம் செய்துவைக்கிறது இராமியா அவர்களின் தொடர் கட்டுரை.

கட்டுரையின் முதலாவது பகுதி மனிதகுலத்தின் ஆரம்பத்தை ஆராய்கிறது.

பொதுவுடைமை என்றால் என்ன (பாகம் 1) : இராமியா

2. அடிமைச் சமூகம்.

இது வரைக்கும் மக்கள் அனைவரும் ஒரே வர்க்கமாக வாழ்ந்த, பொதுவுடைமைச் சமூகமாக இருந்த மனித சமூகம், உழைக்கும் வர்க்கம், சுரண்டும் வர்க்கம் எனப் பிரிந்து, வர்க்க சமூகமாக மாறியது. இச்சமூகத்தில் மனித குலத்திற்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் அடிமைகளே விளைவித்தனர். ஆனால் அனைத்தின் மீதும் ஆண்டைகள் உரிமை கொண்டனர். அடிமைகளுக்கு, அவர்கள் உயிர் வாழ்வதற்கும், உற்பத்திப் பணிகள் தடங்கல் இல்லாமல் தொடர வாரிசுளைப் பெற்று, வளர்த்துத் தருவற்கும், தங்களை அனைத்து விதங்களிலும் மகிழ்விப்பதற்கும், எவ்வளவு பொருட்கள் தேவைப்படுமோ அவ்வளவே தந்தனர்.

தங்களுடைய பொழுது போக்கிற்காக, சேவல் சண்டையைப் போல, அடிமைகளை மோத விட்டு, அதை ரசித்தனர். அவ்வாறு சண்டையில் ஈடுபடுத்தப்படும் அடிமைகளுக்கு, பலி ஆட்டைக் கொழுக்க வைப்பது போல, நல்ல உணவை அளித்து திடகாத்திரமாக வளர்த்தனர். அவ்வாறு நல்ல உணவு உழைக்கும் மக்களுக்குக் கிடைக்காததைச் சுட்டிக் காட்டி அவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று கூறினர்; உழைக்கும் மக்களிடம் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வேலைகளை மட்டும் தருவதைச் சுட்டிக் காட்டி உழைக்கும் அடிமைகளே அதிர்ஷ்டசாலிகள் என்று அவர்களிடம் கூறினர்.

அடிமைச் சமூகம் ஏற்பட்டு, சில தலைமுறைகள் சென்ற பின், முன்னால் சுதந்திரமாக வாழ்ந்ததைப் பற்றி அறியாத மக்களிடையே, வாழ்க்கை என்றால் இப்படித் தான் இருக்கும் என்ற கருத்து படர்ந்து விட்டது. இக்கட்டுப்பாட்டை மீற முனையும் அடிமைகளை ஒடுக்குவதற்கு அரசு எனும் ஓர் அமைப்பு இச்சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டது. இது சமூக ஒழுங்கைக் கட்டிக் காப்பதற்குத் தேவை என்ற கருத்தும் பரப்பப்பட்டது.

அடிமைகளிடையே உள்ள கணவன், மனைவி, குழந்தைகளில் ஒருவரை அல்லது சிலரை, ஒரு ஆண்டை இன்னொரு ஆண்டைக்கு விற்று விடலாம். ஆண்டைக்கு அதற்கு முழு உரிமை உண்டு. அது மட்டும் அல்ல; ஆண்டை நினைத்தால் அடிமைகளைக் கொல்லவும் செய்யலாம். அடிமைகள் இதற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது. இப்படிப்பட்ட சமூகத்தில் அடிமைகள் நிம்மதியாக இருக்க முடிந்தது இல்லை.

ஸ்பாடகஸ் இன் மரணம் தொடர்பாக Hermann Vogel என்ற ஓவியர்...
ஸ்பாடகஸ் இன் மரணம் தொடர்பாக Hermann Vogel என்ற ஓவியர்…

அதற்கு எதிராகப் போராட்டம் வெடிக்கவே செய்தது. அதற்குத் தலைமை தாங்கியவர் ஸ்பாரர்டகஸ் என்பவர் ஆவார். அவர் தான் இவ்வுலகம் தெரிந்து கொண்ட முதல் சுதந்திரப் போராளி. ஒழுங்கமைந்த பயிற்சி பெற்ற இராணுவத்தின் முன்னால் பயிற்சியே இல்லாத ஸ்பார்டகஸும் அவருடைய தோழர்களும் தோல்வி அடைய நேர்ந்தது. அனைவரும் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் அடிமைகளின் இந்த எழுச்சி ஆண்டைகளை கதிகலங்க வைக்கவே செய்தது.

சில ஆண்டைகள் அச்சத்தில் அடிமைகளுக்குக் கொடுமைகள் இழைப்பதைக் குறைத்துக் கொண்டனர். காலப் போக்கில் இவர்களுடைய அடிமைகள். உச்ச பட்சக் கொடுமைகளை இழைக்கும் ஆண்டைகளின் அடிமைகளை விட அதிக பொருட்களை உற்பத்தி செய்ய முடிவது தெரிந்தது. இதனால் இவர்களின் கை ஓங்கியது. இதுவும் அடிமைகளின் ஓயாத போராட்டமும் அடிமைச் சமூகம் தொடர்ந்து இயங்க முடியாத நிலைக்குக் கொண்டு சென்றது.

அடிமைகளை இனி முழு உடைமையாக வைத்துக் கொள்ள முடியாது என்று ஆண்டைகள் உணர்ந்தார்கள். இனி ஆண்டைகளுக்கு வேண்டிய பொருட்களை உற்பத்தி செய்து தந்து விட்டு, மிகுந்த நேரத்தில் அடிமைகள் தங்களுக்கத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து கொள்ளலாம் என்ற ஏற்பாடு செய்து கொள்ளப்பட்டது. இதன்படி இனி ஆண்டைகள் சட்டப்படி அடிமைகளைக் கொல்ல முடியாது. ஆனால் உழைப்பை இலவசமாகப் பெற முடியும். இப்படித் தோன்றிய சமூகம் தான் நிலப் பிரபுத்துவச் சமூகம்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ISIS was created by the CIA and Mossad

ISIS was created by the CIA and Mossad

Comments 2

  1. Gundu Balu says:
    10 years ago

    “இது வரைக்கும் மக்கள் அனைவரும் ஒரே வர்க்கமாக வாழ்ந்த, பொதுவுடைமைச் சமூகமாக இருந்த மனித சமூகம், உழைக்கும் வர்க்கம், சுரண்டும் வர்க்கம் எனப் பிரிந்து, வர்க்க சமூகமாக மாறியது. “, when did this happen in India my friend ? Do you have the dates or you are just speculating.

    • இராமியா says:
      10 years ago

      அக்பர் ஒரு நாள் பீர்பாலிடம் “டெல்லியில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?” என்று கேட்டாராம். அதற்கு “15379 காக்கைகள் இருக்கின்றன.” என்று பீர்பால் விடை அளித்தாராம். “எப்படி இவ்வளவு துல்லியமாகக் கூறுகிறாய்?” என்று அக்பர் கேட்டதற்கு, சந்தேகமாய் இருந்தால் எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று பீர்பால் மறுமொழி கூறினாராம். உங்கள் வினாவும்அந்த வகையைச் சேர்ந்ததாக இருக்கிறது. ஆகவே அதே வகையில் உங்களுக்கு விடை அளிக்கிறேன். பொதுடைமைச் சமூகமாக இருந்த மனித குலம் இந்தியாவில் கி.மு.14008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் நாள், பிலவங்க ஆண்டு ஆடி மாதம் 18ஆம் நாள், அதிகாலை 5மணி 25 நிமிடம் 37 வினாடி நேரத்தில் வர்க்க சமூகமாக மாறியது. டும் டும் டும் டும் டும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...