இலங்கை முழுவது கிளைகளைக் கொண்ட ஹட்டன் நஷனல் வங்கியின் ஊழியர்கள் சிலர் முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களை நினைவுகூர்ந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட்டுள்ளார்கள். இச் செய்தி அவ்வளவு எளிதானதல்ல. இதன் பின்னணியில் நடைபெற்ற சம்பவங்களும் அந்த வங்கியின் தலைமையகத்தின் முடிவுகளுமே இங்கு மேலும் அருவருப்பை ஏற்படுத்தக் கூடியவை.
வங்கியின் கிளிநொச்சி கனகபுரம் கிளையின் ஊழியர்கள் சிலர் முள்ளிவய்க்கால் நினைவு தினத்தின் போது விளக்கேற்றியிருக்கிறார்கள். முகநூலில் அவர்களே அதனை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார்கள். அதனை முகநூலில் கண்ட அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சிங்கள பௌத்த இனவாதி ஒருவர் அதே முகநூலிலேயே அதனைச் சட்டவிரோதமானது எனப் தெரிவித்துள்ளார். அவரின் கருத்தைக் கண்ட ஹட்டன் நஷனல் வங்கியின் தலைமையகம் , எந்தவகயான விசாரணையுமின்றி நினைவஞ்சலி நிகழ்த்தியவர்களை பதவி நீக்கம் செய்வதாகக் பதிலளித்தது. அப் பதிலின் மறுதினமே வங்கின் உதவி முகாமையாளரும், அங்கு பயிற்சியாளராகப் பணியாற்றிய ஒருவரும் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர.
ஒரு பேரினவாதியின் முக நூல் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஹட்டன் நஷனல் எந்தவகயான முன்னறிவிப்புமின்றி இரண்டு ஊழியர்களைப் பதவி நீக்கம் செய்துள்ளது.,
பல்வேறு களியாட்டங்களையும், வெசாக்,நத்தார் தினம், தீபாவளி போன்றவற்றையும் கொண்டாடும் ஹட்டன் நஷனல் வங்கி ஊழியர்கள் நினைவு கூரலை நடத்திய போது அவர்களை மேலதிக விசாரணையுமின்றிப் பதவி நீக்கம் செய்திருக்கிறது.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு பேரினவாதியின் நான்கு வரிப் பதிவிற்காக ஹட்டன் நாஷனல் வங்கி இலங்கையில் வாழும் ஒரு தேசிய இனத்தையே அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொண்டிருக்கிறது. பேரினவாதத்தின் முகவர்களாகவே அந்த வங்கி செய்ற்படும் என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.
வங்கியின் கணக்கைத் தமிழர்கள் பலர் மூடி தமது எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர். ஹட்டன் நஷனல் வங்கியில் கணக்கு வைத்திருப்பது அவமானம் என பல எண்ண ஆரம்பித்துள்ளனர்.